நம்பிக்கை எனப்படும் மலை!!!

26 மே - 2013பெங்களூரு, இந்தியா


கே: குருதேவ், பல முறைகள் என் பக்தி உணர்வு ஊசலாடுகிறது. சில நேரங்களில் உங்களை கூட நான் சந்தேகிக்கிறேன். பின்னர் அதற்காக மிக மோசமாகவும் அதிர்ச்சியாகவும் உணர்கிறேன். அந்த நேரங்களில் நான் என்ன செய்வது?

குருதேவ்: நம்பிக்கை என்பது ஒரு மலை போன்றது, சந்தேகம் என்பது மேகங்கள் போன்றது. மேகங்களால் எப்போதாவது மலையை அசைக்க முடியுமா? முடியாது. சில நேரங்களில் மலையை மூடும், மலையைப் பார்க்க முடியாது. அவ்வளவு தான். ஆனால் கடந்து செல்லும் மேகங்களால் மலையை ஒரு போதும் வீழ்த்த முடியாது. சிறிது நேரம் மலையை மங்கலாகத் தெரியும்படி செய்யும் அவ்வளவே. கவலை வேண்டாம்!

கே: குருதேவ், முக்தியடைய ஒவ்வொருவரும் இந்தியாவில் ஒரு முறையேனும் பிறக்க வேண்டும் என்று சொல்லபடுகிறது. அது ஏன் அப்படி?

குருதேவ்: இல்லை, அப்படி எதிலும் எழுதியிருக்கவில்லை. இந்த முழு உலகமும் உங்களுடையது, ஆன்மீகத்திற்கு எல்லைகள் இல்லை. ‘ஸ்க்ருன்வந்தோ விச்வம் ஆர்யம்’, இந்த முழு உலகையும் சான்றாண்மை நிரம்பிய கச்சிதமான ஒரு சமுதாயமாக ஆக்குவோம்.

கே: குருதேவ், என்னுடைய பெற்றோர்கள் ஜோதிடத்தை ஆழமாக பின்பற்றுவதோடு என்னையும் அதில் ஆழ்த்துகிறார்கள். அதை நான் பின்பற்ற வேண்டுமா அல்லது சுதர்சனக் க்ரியா செய்து எதிர்மறைகளை கலைந்தால் போதுமா?

குருதேவ்: அது போதும். ஜோதிடம் ஒரு அறிவியல், அது உலகுக்கு அளிக்கப்பட்ட ஒரு வெகுமதி. அதில் அதீத ஈடுபாடு காட்டுவது அறியாமை, அதை முழுவதுமாக மறுப்பதும் அறியாமை. அதைப் பற்றி தெரிந்து கொள்வது நல்லது. ஜோதிடத்தில் சொல்லப்படும் பிரச்சினைகள் அனைத்திற்கும் ‘ஓம் நமசிவாயா’ தான் சிறந்த மருந்து.


கே: YES! (இளைஞர்களுக்கான) பயிற்சி முடிந்த பின், நான் அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டேன். ஆனால் பெற்றோர்களும் மற்றவர்களும் அத சாப்பிடும் படி வற்புறுத்துகிறார்கள், நான் என்ன செய்வது? எனக்கு உண்மையில் அசைவம் சாப்பிடுவதற்கு விருப்பம் இல்லை.

குருதேவ்: எதைச் செய்வதற்கு உங்களுக்கு விருப்பமில்லையோ அதில் உறுதியாய் இருங்கள். இந்த விஷயத்தில் உங்கள் பெற்றோர்கள் பேச்சை கேட்க வேண்டாம். ஆனால் அவர்கள் கூறும் மற்ற விஷயங்களை கேட்க வேண்டும்.

கே: குருதேவ், வேகமாகச் சில கேள்விகள்.

Art Excel? (சிறுவர்களுக்கான வாழும் கலை பயிற்சி) 

மிகச் சிறந்த கலை

மாஸ்டர்? (ஆசான்)?

தவிர்க்க முடியாதது?

சுதர்ஷன்க் க்ரியா?

மனிதகுலத்திற்கான பரிசு ….

ஒரு வாழும்கலை ஆசிரியர்?

நற்பண்பிற்கு உதாரணம்

உடையும் இதயம் ?

இங்கு நடப்பதில்லை!

படிப்பு?

வாழ்நாள் முழுதும் செய்ய வேண்டியது..

நாட்டுப்பற்று?

இப்போது இந்த நிமிடம் மிக மிகத் தேவைபடுவது.

விசாலமான பார்வை?

கல்வி தந்தாக வேண்டிய ஒன்று

புகைப்பது?

உயிரைப் பொசுக்கும் ஒரு தீமை,,,

ஒஜஸ்விட்டா? (வாழும் கலை ஆயுர்வேதக் குழுவினரால் தயாரிக்கப்படும் ஒரு சத்துமிக்க பானம்)

அப்படியே குடியுங்கள் போதும்!

கிரிக்கெட்?

இன்று பெரும் பிரச்சினையில் உள்ளது!

பெற்றோர்கள்?

மரியாதை செய்யுங்கள்

தொண்டு?

உங்கள் வாழ்கையின் ஒரு பகுதியாக்குங்கள்.

புன்னகை?

அதை நீங்கள் வைத்துகொண்டு மற்றவர்களுக்கும் நீங்கள் வரவழைக்க வேண்டியது.

பதின் வயதினர்?

பெற்றோர்களுக்கு சவால். தனக்கும் பிரச்சினை! ஆனால் நீங்கள் அதை சமாளித்து விடுவீர்கள்.

வெற்றி?

உலகம் அதன் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறது, ஆனால் அது நம் பின்னால் ஓடிவந்து கொண்டிருக்கிறது.

கோபம்

நம் செயலை வேகப்படுத்த பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

கண்மூடித்தனமான வேகத்தில் வண்டியை ஓட்டுவது?

துரத்ருஷ்டவசமானது

இலக்கு?

நிர்ணயித்துவிட்டு பின்னர் அதை மாற்றுங்கள். இலக்கை நிர்ணயித்த பின்னர் அதை மாற்ற வேண்டும், ஏனென்றால் அந்த இலக்கு மிகச் சிறியது என்பதை காண்பீர்கள். பின்னர் மிகப் பெரிய இலக்காக நிர்ணயிக்க வேண்டும்.

பக்தி?

அதிர்ஷ்டம் செய்தவர்கள் கொண்டிருப்பது

நண்பர்கள்?

உங்கள் குறைகளைச் சுட்டிக் காண்பிப்பவர்கள்

தேர்வு?

இறுக்கம் தளர்ந்த மனதோடு செய்ய வேண்டியது

குழுவாய் வேலை செய்வது?

வெகு வேகமாக முன்னேற்றம் காணவும் அதிகம் உற்பத்தி செய்வதற்கும்

விளையாட்டு?

ஒருவர் விளையாடி ஆகவேண்டும், விளையாடி சில சமயம் வெற்றி பெறுவது மற்றும் சில சமயம் மற்றவர்களை வெற்றி பெற வைப்பது.

ஸ்ரீ ஸ்ரீ?

எப்போதும் உங்களுடன் இருப்பவர், உங்களுக்காகவே!

கே: குருதேவ், உங்களுக்குப் பிடித்த புத்தகம் என்ன?

குருதேவ்: பொதுவாக நான் புத்தகங்கள் படிப்பதில்லை. மனித மனம் அல்லது இந்தப் பிரபஞ்சம் தான் எனக்குப் பிடித்த புத்தகம்.  

கே: குருதேவ், உங்களுக்குப் பிடித்த ஆசிரியர் யார்?

குருதேவ்: ஒவ்வொரு குழந்தையும்!

கே: குருதேவ், உங்களுக்குப் பிடித்த பாடல் எது?

குருதேவ்: வந்தே மாதரம்

கே: குருதேவ், உங்களுக்குப் பிடித்த பூ எது?

குருதேவ்: மலரும் ஒவ்வொரு மலரும்!

கே: குருதேவ், உங்களுக்குப் பிடித்த நாடு எது?


குருதேவ்: அந்த நேரத்தில் இந்த பூமியின் மீது எந்த நாட்டில் இருக்கிறேனோ அந்த நாடு தான் எனக்குப் பிடித்த நாடு, அதனால் தான் நான் அங்கிருக்கிறேன்.