உண்மையான மகிழ்ச்சி உங்களுக்குள்ளேயே இருக்கின்றது !

வியாழக்கிழமை, 19 பெப்ரவரி 2015,

பெங்களூரு, இந்தியா


குருதேவ், புலன்கள் வரையறுக்கப்பட்டவை. ஆயினும் அனுபவிக்கும் ஆசை அளவில்லாததாக இருக்கின்றது. தயவு செய்து இதைப் பற்றிப் பேசுங்கள்.

அதுதான் பிரச்சினையே! புலன்களின் அனுபவிக்கும் திறமை அளவுள்ளது ஆனால் மனதின் ஆசைகளோ அளவற்றவை அனுபவிக்கும் ஆசைக்கும் திறமைக்கும் இடையே உள்ள வேறுபாடு தான் அனைத்து நோய்களையும் உருவாக்குகின்றது. புலிமியா என்பது  ஒரு நோய். புலிமியா என்பது உணவுடன் சம்பந்தப்பட்டது, அது போன்று மற்ற புலன்களுக்கும் தொடர்பான நோய்கள் இருக்கக்கூடும். இதை ஒரே வார்த்தையில் நீங்கள் ஆவேசம் அல்லது ஆழ்ந்த பிடிப்பு  என்று கூறலாம். ஏதோ ஒன்றினை பற்றி ஆழ்ந்த பிடிப்பு  உள்ளது, ஆனால் அதை அனுபவிக்கும் திறன் வரையறுக்கப்பட்டிருக்கின்றது.  இங்கு தான் ஐம்புலன்களை கடந்து செல்வது முக்கியமாகின்றது. ஐம்புலன்களை நீங்கள் மீறிச் செல்லும் போது, நீங்கள் உள்ளத்தினுள்ளேயே அமைதியையும் ஆனந்தத்தையும் கண்டெடுக்கின்றீர்கள். அப்போது புலன்களின் அடங்காத ஆசைகள்  இயற்கையாகவே முயற்சியின்றி குறைந்து விடுகின்றன.

அசையாமல் இருக்கும் போது ஏற்படும் ஆனந்தம் எதற்கும் ஈடாகாது. அசையா நிலையில் அடையும் ஆனந்த நிலையில் மற்ற அனைத்துமே தொல்லையாக தோன்றும். அனைத்துமே சிறியதாகவும் அதிக முயற்சி தேவைப்படுபவனவாகவும் தோன்றும். அதற்கும் நீங்கள் பழகிக் கொள்ள வேண்டும். எனவே, நீங்கள் பிரச்சினையைக் கண்டறியும் போது,"  இது போதும்" என்று உறுதியாக நிலைபெற வேண்டும். நாம் அதிக  மகிழ்ச்சி ஆனந்தம் ஆகியவற்றை புலன்களின் மூலம் அடையலாம் என்ற எண்ணமே ஆரம்பம். நாம் ஆனந்தத்தின் மூலத்திற்குச் செல்ல வேண்டும், நமக்குள்ளே இருந்து தான் வரமுடியும்.

குருதேவ், என்னுடைய நோக்கம் தவறில்லை, ஆனால் என்னுடைய செயல்கள் தவறாகி விடுகின்றன. இதன் மூலம் தீய கர்மாக்களை நான் சேர்த்துக் கொண்டு வருகின்றேனா?

உங்கள் நோக்கம் தவறானது இல்லையெனில் அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். செயல்களுக்கு விளைவுகள் உண்டு எனினும் நோக்கம் சரியாக இருந்தால் விளைவுகளின் பலன் அதிகமில்லை.

வாழ்க்கை என்பது தன்னை அறிந்து கொள்வதற்கா  அல்லது தன்னைப் படைத்துக் கொள்வதற்கா ?

எந்த நிலையிலிருந்து நீங்கள் சிந்திக்கின்றீர்கள் என்பதைப் பொறுத்தது. ஒரு நிலையில் நீங்கள் படைக்கின்றீர்கள், வேறொரு நிலையில் கண்டறிகின்றீர்கள், இரண்டுமே இங்கு பொருந்தும்.
உங்களுடைய உண்மையான இயல்பினை பற்றியதானால், அதை படைக்க வேண்டியதில்லை, அது ஏற்கனவே உள்ளது. நீங்கள் யார், நீங்கள் என்ன என்பதனால் நீங்கள் அதைக் கண்டறிய வேண்டும், உங்கள் உண்மையான இயல்பினைக் கண்டறிய வேண்டும். படைப்பித்துக் கொள்ளும்போது, அது திறன்களை வளர்த்து மேலும் உங்களை நுட்பங்களை கற்க வைக்கின்றது .புறஎல்லையில் நீங்கள் உங்களைப் படைப்பித்துக் கொண்டும், மையத்தில் உங்களைக் கண்டறியவும் வேண்டும்.

பிரார்த்தனைகள் எவ்வளவு சக்தி வாய்ந்தவை? அப்பட்டமாக நமது தலைவிதியாக முடியுமா? நமக்கு எது நல்லது என்பது நமக்கு தெரியாததால், பிரார்த்தனை செய்யாமல் இறைமையிடமே விட்டுவிடுவது நல்லதா?

எப்போதுமே தெய்வத்திடம் வேண்டிக் கொள்வது  நல்லது. ஆனால் " இதை விட நல்லதாக தாம் எனக்கு ஏதேனும் விதித்திருந்தால்,அதுவே நடக்கட்டும்" என்றும் வேண்டிக்கொள்வது நல்லது. 
கேட்பது தவறல்ல.கேள், உனக்கு வழங்கப்படும் என்று பைபிளில் கூடக் கூறப்பட்டிருக்கின்றது. சமஸ்கிருதத்தில் உனக்கு என்ன வேண்டுமோ கேள், ஆனால் இந்தப் பிரார்த்தனை என்பது ஆழ்ந்த தேவையுணர்வு என்று கூறப்பட்டிருக்கின்றது. மேலும் எதை உங்கள் திறமையால் அடைவது கடினம் என்று எண்ணுகின்றீர்களோ அதற்குப் பிரார்த்தனை செய்யுங்கள். பாலைவனத்தில் இருந்தாலன்றி, ஓர் குவளை தண்ணீருக்குப் பிரார்த்தனை செய்ய மாட்டீர்கள், உங்களுடைய வரையறுக்கப்பட்ட வளங்கள் திறன்கள், மற்றும் முயற்சிகள் மூலம் அடைய முடியாது என்று நீங்கள் கருதுபவை தாம் பிரார்த்தனையாகின்றன. அப்போது தான் பிரார்த்தனையும் நிகழ்கின்றது. அப்போது, எனக்கு இது தேவை, என்னால் இதைச் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. தயவு செய்து எனக்கு இதைத் தந்தருளுங்கள் " இவ்வாறு கேட்கும் போது," இதை விட மேலானதாக எனக்கு ஏதேனும் நிர்ணயிக்கப்பட்டிருந்தால், அதுவே நடக்கட்டும் " என்றும் சேர்த்துப் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்.

ஒரு நிலையில் இதற்கு மேற்பட்டுத் தெரிய வேண்டியது எதுவுமில்லை என்னும் உணர்வு  ஏற்படுகிறது . வேறொரு நிலையில், எதுவுமே தெரியாதது போன்று உணர்கின்றேன். இதை எவ்வாறு புரிந்து கொள்வது?

அற்புதம்! அது அப்படித்தான்! ஒரு நிலையில் ஆத்மா அனைத்தையும் அறிகிறது. வேறொரு நிலையில் எதுவுமே தெரியவில்லை;தெரிந்தது மிகக் குறைவே புரிந்துணறல்ஏற்படுகிறது. இது உங்கள் மெய்யுணர்வினை லேசாகவும் களங்கமற்றும் வைக்கின்றது. அந்த லேசான களங்கமற்ற மெய்யுணர்வு அல்லது மனம் தான் உள்ளுணர்வுத் திறன், ஆத்மபலம், இறுதியான இறைமையின் மலர்வு ஆகியவற்றின் அடிப்படை. “எனக்குத் தெரியும்" எண்ணம் தோன்றிய க்ஷணத்திலேயே நீங்கள் கடினமாகி விடுகின்றீர்கள். "எனக்குத் தெரியாது" என்று உணரும் போது, தெரிந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பத்தினாலேயே நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்கின்றீர்கள். எனக்குத் தெரியும் என்று எண்ணும் போது அந்தக் கணத்தில்  மனம்  ஞானத்திலிருந்து விலகி விடுகின்றது. உங்களுக்குத் தெரியும் என்று எண்ணும் போது ஒரு விதமான கடின நிலை அல்லது செயலற்ற நிலைக்குச் சென்று விடுகிறீர்கள். இது ஒரு நிலை மட்டும்தான். மெய்யுணர்வில் பல அடுக்குகள் உள்ளன. நீங்கள் பல பரிமாணங்கள் உள்ளவர். அதனால் தான் ஓர் நிலையில் அனைவரும் "நான் இறக்கவே போவதில்லை" என்றும் எப்போதும் வாழபோவது போன்று வாழ்க்கையினை நடத்தி வருகின்றனர். யாருமே "ஒரு நாள் நான் இறந்து விடுவேன்" என்று உணருவதில்லை ஏனெனில் உங்களில் ஓர் அம்சம் இறக்கவே போவதில்லை.

யோக வசிஷ்டா சொந்த  முயற்சி தான் பெரியது என்றும் ஈசாவாஸ்ய உபநிஷதம் சொந்த முயற்சியில் அடையும் அனைத்துமே உன்னை விடச் சிறியது என்றும் கூறுகின்றன. இதைத் தயவு செய்து தெளிவுபடுத்த முடியுமா?

உண்மை பல பரிமாணங்களை உடையது. அதை முற்றிலும் எதிரெதிராக காண்கின்றீர்கள். இதுவே பழமையான ஞானத்தின் அழகு முற்றிலும் வேறுபட்ட கருத்து கோணங்களை தன்னுள் கொண்டுள்ளது. இரண்டுமே உண்மையானவை. ஒரு நிலையில், உங்கள் முயற்சி பெரிது என்பது உண்மை, வேறொரு நிலையில், உங்கள் முயற்சிகளால் அடைவது அனைத்துமே உங்களை விடச் சிறியவை என்பதும் உண்மையே.

குருதேவ், வாழ்க்கையின் கஷ்டமான காலங்களில் ஏன் நம்பிக்கை அசைக்கப்படுகின்றது என்பதன் காரணத்தை கூற முடியுமா?

நம்பிக்கை உங்களுக்குள்ளேயே இருக்கின்றது. நம்பிக்கை மையத்தின் அடிப்படையில் உள்ளது. சந்தேகம் வெளிப்புறத்திலேயே உள்ளது. அவை சில சமயங்களில் மேகக் கூட்டங்கள் போன்று வந்து உங்களை இருளாக்குகின்றன. ஆனால் அவற்றால் நம்பிக்கையை அழிக்கமுடியாது. இது குழப்பமாக இருக்கிறதல்லவா?ஏனெனில், நமது மனம் நேரியலாகவே சிந்திக்கும்படி பழக்குவிக்கப் பட்டிருக்கின்றது. கோள வடிவாகச் சிந்திப்பதில்லை. உங்கள் சிந்திக்கும் முறையினை மற்றும் புரிதலை நேரியலாகவன்றி  முழுமையாக மேலும் அதிகக் கோளவடிவில் மாற்றியமைத்துக் கொள்வது நல்லது.

மாறும் காலம் - மாறாத சாட்சி

டிசம்பர்  31, 2014

அண்டோகஸ்ட்ஜெர்மனி


ஸ்ரீ ஸ்ரீயின் புத்தாண்டு செய்தி

பெரும்பாலான மக்கள் "மற்றுமொரு ஆண்டு கடந்து விட்டதே" என்று உணர்ந்து சற்று  தடுமாறும் நேரம் புத்தாண்டு தினம்நாம் வெகு விரைவாக செல்லும் காலத்தின் ஓட்டத்தினை  எண்ணி சில நிமிடங்கள்  வியக்கின்றோம் பிறகு மீண்டும் வேலையில் ஆழ்ந்து விடுகின்றோம்இதில் வேடிக்கை என்னவென்றால் ஏறக்குறைய  ஒவ்வொரு ஆண்டும் இது தொடர்ந்து நடக்கின்றது.

நாம் ஆச்சரியப்படும் இந்த தருணங்களின் உள்ளே ஆழ்ந்து செல்வோமானால் காலத்தின் நிகழ்வுகள் அனைத்திற்கும் சாட்சியாக நம்மிடையே ஒரு அம்சம் உள்ளது என்பதை உணர்கின்றோம்நம்முள்ளே இருக்கும் இந்த சாட்சி மாறாதது. இங்கிருந்து தான் நாம் காலம் கொண்டு வரும் மாற்றங்கள் அனைத்தையும் உற்று நோக்குகின்றோம்வாழ்வில் கடந்து விட்ட நிகழ்வுகள் அனைத்தும் கனவாக  மாறி விட்டன. நிகழ்காலத்தில் வெளிப்படும் வாழ்க்கையிலும்  இந்த கனவு போன்ற தன்மையினை அறிந்து கொள்வதே ஞானம் ஆகும்இதனை அறிந்து கொள்வது உள்ளிருக்கும்  மாபெரும் சக்தியை  வெளிக்  கொண்டு வருகின்றது. அதன் மூலம் நீங்கள் சம்பவங்களாலும், சூழ்நிலைகளாலும் பாதிக்கப்படாமல் இருக்க  இயலும். அதே சமயம் சம்பவங்களுக்கென நம் வாழ்வில் ஓர் இடம் உள்ளதுநாம் அவற்றிலிருந்து  பாடம் கற்று  பின் மேலே  தொடர்ந்து செல்ல வேண்டும்

இந்த ஆண்டில்  ஏற்பட்ட  பெரும் முன்னேற்றங்களில்,இந்தியாவின் பொதுத்தேர்தல் சமூக  மற்றும்  அரசியல் சூழலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. ஊழல் மற்றும் தவறான ஆட்சி முறைக்கு  எதிராக வாக்களிப்பதில் மக்கள் தீவிரமாக ஒன்றிணைந்தனர். முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டிற்கு ஒரு நிலையான பெரும்பான்மை அரசு கிடைத்துள்ளதுஇந்த மாற்றம்  உலக அரங்கில் இந்தியாவின் நிலையை பலப்படுத்தியுள்ளதுமற்ற நாடுகளுடன் நம் உறவுமுறை முன்பிருந்ததைவிட மேலும் சிறப்படைந்துள்ளதுநம் பிரதமர் நரேந்திர மோடியின் விண்ணப்பத்தை ஏற்று  ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச யோகா தினத்தினை சமீபத்தில் அறிவித்துள்ளதுசில மாதங்களுக்குமுன் வெற்றிகரமாக முடிந்த  செவ்வாய்கிரகப் பணி தொழில்நுட்பத்தில் இந்தியாவின்  சிறப்பினை வெளிப்படுத்தியுள்ளது

உலகெங்கும் பயங்கரவாதக் குழுக்களின் காட்டுமிராண்டித்தனமான கொலைகள் பற்றிய செய்திகளும் வீடியோக்களும் இந்த ஆண்டின் கதி கலங்க வைக்கும் முன்னேற்றமாகும்முன்பு  இஸ்லாமாபாத்தில்  வாழும் கலை மையத்தினை எரித்த டேஹ்ரேக் - - தலிபான் என்னும் அதே கூட்டம் இப்பொழுது பேஷ்வாரில் 130 பள்ளிக் குழந்தைகளைக் கொன்றுள்ளது. இராக்கில் யெசிடி சமூகத்தினரின் இனப்படுகொலையில் உயிர் பிழைத்தவர்கள் சிக்கியுள்ள சின்ஜர் மலை மற்றும் எர்பில் பகுதிகளில்  நம் தன்னார்வத் தொண்டர்கள் நிவாரணப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்னல்களுக்கிடையில் நம் தொண்டர்கள் ஏறக்குறைய 120 டன்  உணவுப்பொருட்களை விமானங்கள் மூலமாக அளித்துள்ளனர். 200 பெண்களை மீட்டுள்ளனர்செய்ய வேண்டியவை நிறைய உள்ளன

நீங்கள் உள்நோக்கி செல்லும் போது உங்களுக்குள் இருக்கும் சாட்சிபாவமான அம்சம் வளர்கின்றதுஅதனால் நீங்கள் சம்பவங்களால் பாதிக்கப்படாமல் இருக்கின்றீர்கள்அவ்வாறில்லாமல் உங்கள் மனம்  வெளிநோக்கிச் செல்லும்போது உங்களுக்குள்ளிருக்கும் செயல்புரிபவர் மிகுந்த திறமையோடு சூழ்நிலைகளுக்கேற்ப செயல்படுகின்றார்.

எத்தகைய சவால்கள் ஏற்பட்டாலும் நாம் சிறந்த உலகத்தை  உருவாக்கும்  முயற்சிகளை  செய்து கொண்டே இருக்க வேண்டும்நாம் நம்முள்ளே நிலையாக இருந்தால்தான் இயலும். உங்களுக்குள் செயல் புரிபவரும் இருக்கின்றார்சாட்சியும் இருக்கின்றார்நீங்கள்  உள்முகமாக செல்லும்போது உங்கள் சாட்சிபாவ அம்சம் வளர்ந்து  நீங்கள் சம்பவங்களால் பாதிக்கப்படாமல் இருக்கின்றீர்கள்நீங்கள் வெளிமுகமாகச் செல்லும்போது உங்களுக்குள்ளிருக்கும் செயல்புரியும் அம்சம்  சூழ்நிலைக்குத் தக்கவாறு செயலாற்றும் திறமையில் வளர்ச்சியடைகின்றது.

முற்றிலும் எதிர்மறையான இரண்டு அம்சங்களுமே தியானம் செய்வதன் மூலம்  ஊக்குவிக்கப் படுகின்றனநீங்கள் உங்களுக்குள்ளே நெருங்கி வரும்போது உங்கள் செயல் இந்த உலகில் சக்தி வாய்ந்ததாகின்றது. அதே  சமயம் இந்த உலகில்அத்தகைய  சரியான செயல் உங்களை உங்கள் ஆன்மாவிற்கு அருகாமையில் கொண்டு செல்கின்றதுபுத்தாண்டு நெருங்கும் இந்த வேளையில்  நாம் அசைக்க முடியாத  ஆன்ம சக்தியை கொண்டிருப்போம் என்ற தீர்மானத்தை மேற்கொண்டு சிறந்த உலகத்தை நோக்கிச் செல்வோம்காலம் மக்களை மாற்றக் கூடியதுஆனால் காலத்தை மாற்றக்கூடிய மக்களும் இருக்கின்றனர்நீங்கள் அவர்களுள் ஒருவராக இருப்பீர்களாகஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.