சுற்றுச்சூழலை பாதுகாக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

திங்கள் கிழமை, 6 ஜூன், 2016,

பெங்களூரு , இந்தியா


 நேற்று உலக சுற்றுச் சூழல் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டது.  உள்ளத்திற்குள்ளே  மாசு இன்றி இருப்பவர்களே சுற்றுச் சூழலையும் கவனித்துக்கொள்ள முடியும். ஒருவரது மனம், கோபம், வெறுப்பு, துவேஷம், அல்லது பேராசை இவற்றால் மாசுபட்டிருந்தால் அந்த நபர் எவ்வாறு சுற்றுச் சூழலைச் சுத்தப்படுத்த முடியும்? பேராசை கொண்டவர் சுற்றுச் சூழலின் நலனைப் பற்றிக் கவலைப்பட மாட்டார். தன்னுடைய வேலையை மட்டுமே செயது கொண்டிருப்பார்.

இன்று சுற்றுச் சூழலில் தூயமைக் கேடு பேராசையாலேயே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. ஒருவர் எப்போதும் கோபத்துடன் இருந்தால் அவரது பார்வை மங்கி, வெளியுலகில் எதையும் சரியாக எடுத்துக் கொள்ளமாட்டார். அவரது பார்வை சிதைந்திருக்கும்போது, ஏற்றுக் செய்யும் பணியும் அது போன்றே இருக்கும்.கோபம் நிறைந்த ஒருவரின் செயல்களை விசனமே தொடரும். இது நிச்சயம். உங்களுடைய வாழ்க்கையையே எடுத்துக் கொண்டு பாருங்கள். எந்த ஒரு செயலை கோபத்துடன் செய்த்தீர்களோ அதைப் பற்றி பின்னர் வருந்தியிருக்கிறீர்கள் அல்லவா? அவ்வாறு தான் நிகழும். ஏனெனில், கோபம் என்பது சரியான மன நிலை அல்ல.கோபமே ஏற்படக் கூடாது என்று நான் கூறவில்லை. ஆனால் எப்போதெல்லாம் கோபம் வருகிறதோ ஒரு நிமிஷத்திற்கு மேற்பட்டு அது மனதில் தங்கக் கூடாது.அப்போது அது தூய்மைக்கு கேடு அல்ல. ஆனால் கோபம் நீண்ட காலத்திற்கு மனதில் நிலைத்திருக்கும்போது அது மாசு ஏற்படக் காரணமாகிறது.

ஓர் வாழைப்பழத்தை சாப்பிடுகின்றீர்கள்.அதன் தோலை உரித்து அதை மேஜையின் மீதே வைத்து விட்டால் அது மாசினை ஏற்படுத்துவதில்லை.ஆனால் அந்த உரிக்கப்பட்ட பழத்த தோல், இரண்டு மூன்று நாட்களுக்கு அதே மேஜையில் இருந்தால் அது மாசினை ஏற்படுத்துகிறது.ஒரு சாக்கலேட்டை சாப்பிடும்போது அதன் மேலுறை ஒரே இடத்தில் நான்கைந்து நாட்களுக்கு இருந்தால் அது மாசினை உருவாக்கும்.குப்பைகள் சேரும்போது அவை  மாசு ஆகும்.

சில சமயங்களில் வாழ்வில் கோபம் அவசியமாகும்.பணிகளை நிறைவேற்ற வைக்க அது அவசியம். ஆனால் நமக்குள் அது ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டால்  அது தூய்மையின்மையை உருவாக்கும்.நமது பார்வையை மாசுள்ளதாக்கும். நமது பணிகள் பாதிக்கப்பட்டு, வருத்தம் நிறைந்தவர்களாகி விடுகிறோம்.வெறுப்பு நிறைந்த  ஒரு நபர், சுற்றுச்சூழலை முக்கியமானதாகக் கருத முடியாது.  இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மிகவும் மென்மையானதும்  மற்றும் உணர்திறன் அதிகமுள்ளதுமாகும். அதன்  மென்மையான தன்மையைப் புரிந்து கொள்ளும் பொருட்டு நாம்  உள்ளத்தில்  உணர்திறன் உள்ளவராக வேண்டும். உள்ளத்துள் நீர்மையும், எளிமையும் நிறைந்தவர் சுட்டுக் சூழலைப் பற்றிய உணர்திறனுடன் இருக்க முடியும்.

நமது வாழ்வின் ஐந்து உரைகளில் ( பஞ்சகோஷா ) முதலாவது சுற்றுச் சூழலேயாகும். அடுத்து குருதி மற்றும் எலும்புகளால்  ஆன உடல். இரண்டாவது பிராணமயா கோஷா (சுவாசம்) மூன்றாவது மனோமயா கோஷா (மனம்) பின்னர் விஞ்ஞானமயா கோஷா (அறிவுத்திறன்) ஐந்தாவது ஆனந்தமயா கோஷா ( பேரின்பம்). சுற்றுச் சூழலே நமது உடல் என்று நான் நம்புகிறேன். அது எவ்வாறு? காற்று மாசுபட்டால் உடல் தரிக்காது. காற்று விஷமாகி விட்டால் எப்படி வாழ்வீர்கள்? எனவே அதுதான் முதல் உடல்.

நமது மனங்களிலிருந்து மாசினை முதலில் அகற்ற வேண்டும்.சிலர் வாழும் காலை தூய்மையின்மையை  உருவாக்கிவிட்டதாகக் கூறுகிறார்கள்.அவர்களது பார்வை தான் தூய்மையற்றதாக இருக்கிறது. பார்வையை தெளிவாக்கிக் கொண்டால் நாங்கள் இந்தத் தூய்மையின்மையையும் ஏற்படுத்தவில்லையென்று அறிந்து கொள்வீர்கள்.

வாதம், பித்தம் மற்றும் கபம் என்னும் மூன்று தோஷங்களில் எந்த விதமான ப்ரக்ருதி தியானம் செய்வதற்குச் சிறந்தது?

தியானம் செய்வதன் மூலம் நீங்கள் இந்த வாதம், பித்தம் மற்றும் கபம் என்னும்மூன்று தோஷங்களையும் கடந்து செல்ல முடியும்.இந்த மூன்று தோஷங்களையும் அழிப்பது தியானம். முதலில் தியானம் செயது விட்டு நாடி பரிசோதனை செயது பார்த்தால் அது மாறியிருப்பதை அறிவீர்கள்.மூன்று தோஷங்களும் சமநிலையில் (சம தோஷா) இருந்தால் தியானம் செய்ய மிகச் சிறந்த நிலை யாகும்.ஆரோக்கியமாக இருந்தால் தியானம் ஆழமாக இருக்கும். தியானம் செய்வதன் மூலம் ஆரோக்கியம் மேம்படும்.

கவலைகளை எழுதி கவலைக்குறிய கூடையில் போட்டுவிட்ட பின்னர் அவை எவ்வாறு தீருகின்றன?

கவலைகள் தீருகின்றன அல்லவா? எவ்வாறு என்பதை என்னிடம் விட்டு விடுங்கள். உங்களை நச்சரிக்கும் கவலைகள் தீருவதை எத்தனை பேர் உணர்ந்திருக்கின்றீர்கள்? (அவையிலும் அனைவரும் கையுயர்த்துகின்றனர்) உங்கள் கவலைகளை எழுதி, அதற்குரிய கூடையில் போட்டு விட்ட பின்னர் அவை கவனித்துக் கொள்ளப்படுகின்றன.ஆகவே அதைத் தொடர்ந்து செய்யுங்கள் அதன் ரகசியத்தை உங்களுக்குத் பின்னர் கூறுகிறேன்.


அனைவருமே உங்களுக்குத் சொந்தமானவர்கள்  தனக்கென்று எதுவும் வேண்டாம் என்ற நிலையில் அனைவரின் பண்டிகையும் செய்யும் திறன் பெற்றவர்களாவீர்கள். ( குருதேவ் "இதுதான் ரகசியம் "என்று மெதுவான குரலில் கூறுகிறார்)

நம்பிக்கை தான் வாழ்க்கை

வியாழக்கிழமை 26-மே-2016

பெங்களூர், இந்தியா


கேள்வி – பதில்கள்

யோகாவின் உண்மையான பரிமாணம் எது ?

யோகா என்றால் உண்மையுடன் இணைவது என்று அர்த்தம். யோகா என்றால் மனதின் தடைகளை தாண்டிச்செல்வது. உண்மை எதுவோ அதனுடன் இணைவது. எதனுடன் இணைகிறதோ, அதுவே (என்றும் மாறாத, நிலையான) உண்மை.

“ஷம்ஸயமாத்மா வினஷ்யதி “ என்று பகவான் கிருஷ்ணர் சொல்வதில் எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. ஷம்ஸயம் என்பது, சந்தேகமா, மன உறுதியின்மையா ?

இரண்டுமே. சந்தேகம் மற்றும் உறுதியின்மை. உனக்குள் சந்தேகம் வேர் விடுமானால் எல்லா நேரத்திலும், எல்லாவற்றையும் சந்தேகப்படுவாய். அப்படியிருக்கும் போது, உன்னால் வாழ்க்கையில் முன்னேற முடியாது. ஏனென்றால் நம்பிக்கையிலேயே வாழ்க்கை நடக்கிறது.

நீங்கள் ஒரு முறை, ‘நுட்பமான அகம்பாவத்துக்கு சிகிச்சை கிடையாது “ என்று சொன்னீர்கள். நான் இப்போது பதட்டமாக இருக்கிறேன். எனக்கு அந்த நிலை இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். இதிலிருந்து குணமடைய முடியுமா ? முடியாதா ?

குணமடையலாம். கவலைப் படாதே. “ நான் ஒரு சந்தேகப் பேர்வழி, நான் கெட்டவன், நான் திருந்துவேன் என்ற நம்பிக்கையில்லை “ என்றெல்லாம் லேபிள் ஒட்டிக் கொள்ள வேண்டாம். இப்படி லேபிள்கள் நம் வளர்ச்சியைத் தடுத்து, சீரழிவைக் கொண்டு வரும். முதலில் உன்னைப்  பற்றி உனக்குத் தெரியாது என்பதை ஒப்புக் கொள். அதுவே உன்னை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும்.

தற்காலத்தில், உணவுப் பொருட்களில் அதிக அளவில் கலப்படம் செய்வதைப்  பார்க்கிறோம். உணவு தானியங்களில் கலப்படம் செய்து விற்பவர்களையும், போலி மருந்து தயார் செய்து விற்பவர்களையும் எப்படித் தடுக்கலாம்.

வாழும் கலையில் ஆர்கானிக் உணவு வகைகளின் சிறப்பு, மற்றும் ஆயுர்வேத மருந்துகளின் பயன்களை  பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்கிறோம். வாழும் கலையில் மருந்து உற்பத்திப்  பிரிவு துவங்க திட்டம் இல்லை. போலி மருந்துகள் விற்பனை செய்யப் படுவதை அறிந்த போது தான், நாமும் ஏன் ஆயுர்வேத மருந்து உற்பத்தியைத் துவங்கக் கூடாது என்ற எண்ணம் வந்தது. மிகக் குறைந்த விலையில், தரமான மருந்துகளை  மக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் மருந்து உற்பத்திப் பிரிவைத்  துவங்கினோம். எனவே இதை வியாபார நோக்கத்தோடு செய்யாமல், மிக மெதுவாகச் செய்கிறோம். நீண்ட நாட்களாக மருந்துகளின் தரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

ஆன்மீகத்தை விஞ்ஞான பூர்வமாகப்  பயில முடியுமா ? நான் அப்படிச் செய்ய விரும்புகிறேன்.

ஆம் ! எப்படிப்  பார்த்தாலும் ஆன்மீகம் விஞ்ஞான பூர்வமானது தான். விஞ்ஞானம் என்றால் என்ன ? நமக்குத் தெரிந்த விஷயத்தை தாண்டி தெரிந்து கொள்ள, ஒரு முறையான, தர்க்கரீதியான வழிமுறை தான் விஞ்ஞானம். விஞ்ஞானம் நாம் இது வரை  அறியாத ஒன்றை, நாம் அறியும் ஒன்றை வைத்து அறிந்து கொள்ள உதவுகிறது. ஆன்மீகமும் அதையே உணர்த்துகிறது. எனவே ஆன்மீகம், எல்லா மதத்தையும் ஒருங்கிணைத்து, மக்களுக்கு பொதுவான பார்வையை ஏற்படுத்துகிறது.

புத்தர் ஒருவர் தான் இருந்தார். இன்று புத்த மதத்தில் 32 பிரிவுகள் உள்ளன. ஏசு கிறிஸ்து ஒருவர் தான் இருந்தார். இன்று கிறிஸ்தவ மதத்தில் 72 பிரிவுகள் உள்ளன. முகமது நபி ஒருவர் தான் இருந்தார். இன்று முகமதியர்களிடையே பல பிரிவுகள் உள்ளன. இந்து மதத்தின் பிரிவுகள் எண்ணிலடங்காது. பல பிரிவுகள் வழக்கத்தில் உள்ளன.

உலகில் பல்வேறு இன மக்கள் வாழ்கிறார்கள். எல்லா இன மக்களையும் மரியாதையோடு நடத்த வேண்டும். என் மதம் தான் சிறந்தது, உன் மதத்தை விடச் சிறந்தது “ என்று சொல்பவர்கள் விஞ்ஞான பூர்வமாகச் சிந்திப்பதில்லை. அடிப்படையில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. அதனால் தான் இன்று உலகில் 50 % மக்கள் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கி வாடுகிறார்கள். தங்கள் மதமே மற்ற மதங்களை விடச் சிறந்தது, எல்லா மக்களும் இதையே பின்பற்ற வேண்டுமென விரும்புகிறார்கள். 

இது ஒரு பிரச்சினையாக உள்ளது. இதற்கான தீர்வு என்ன? வேற்றுமையை ஏற்றுக்கொண்டு கொண்டாட வேண்டும். பல்வேறு மதங்களின் பொதுவான சிறந்த கருத்துக்களை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அது தான் ஆன்மீகம். தியானம். ஆன்மீக வாதிக்கு எந்த மதத்துடனும் மோதல் கிடையாது. ஆன்மீகம் மக்களை ஒன்றிணைக்கும் ஒரு சக்தியாகும். ஆன்மீகம் மிக எளிது. பல ஆண்டுகளாக வாழும் கலை மூலமாக, பல்வேறு கலாசாரங்களை ஒன்றிணைக்கும் சேவையைச் செய்து வருகிறோம்.

சமீபத்தில் சக்தி கிரியா துவங்கியிருக்கிறீர்கள். அதன் காரணம் என்ன ? நம் வாழ்வில் சக்தி கிரியா  மற்றும் சுதர்சன கிரியாவின் பங்கு என்ன ?

இரண்டு கிரியாவின் பங்கும் வெவ்வேறானது. சுதர்சன கிரியா மூச்சு சம்பந்தமானது. சக்தி கிரியா நம் உடலின் சக்தியைப்  பொறுத்தது. இரண்டும் சேர்ந்து ஒரு முழுமையைக் கொடுக்கும். சில சமயம் ஒரு கிரியாவின் தாக்கம் மற்றதை விட அதிகமாக இருக்கக் கூடும்.

அஷ்டாவக்ர கீதையில் , ஜனகர் தான் ஞானமடைந்ததை உணர்த்திய பின்பும், அஷ்டாவக்ரர் ஏன் தொடர்ந்து போதித்தார் ?

 உன் நன்மைக்காக.

அன்பில் இருப்பதை அறிந்த பின்பும், நாம் ஏன் அன்பைத் தேடிக் கொண்டிருக்கிறோம் ?

இதே கேள்வியை நான் உன்னிடம் கேட்கிறேன். நீ அறிவு பூர்வமாக இதை அறிந்திருக்கிறாய்.ஆனாலும் இருப்பின் நிலையில் நீ அன்பை அறியாமலிருக்கலாம். தலையால் தெரிந்து கொள்கிறோம். இதயத்தால் தெரிந்து கொள்வதில்லை. அன்பை வாழ்வின் ஒரு பகுதியாக உணராததால், நாம் இதை செயல் முறையில் கொண்டு வர முடிய வில்லை.நித்தியாப்யாசம் என்று ஒன்று உள்ளது. நீ சிந்திப்பது, நீ புரிந்து கொண்டது, நீ தியானிப்பது உன் வாழ்வின் ஒரு பகுதியாகி விடும். அதன் பின் திரும்பிப் பார்க்க அவசியமில்லை.

அனைவருடனும் ஒன்றி உணர்ந்து கொண்டாடுங்கள்

வெள்ளிக்கிழமை, 13 மே 2016,

பெங்களூரு, இந்தியா


மேன் தேரா (13 மே) என்னும் ஹிந்தி வார்த்தையில் விளையாடிப் பார்த்தால் அச்சொல்லுக்கு  "நான் உனக்குச் சொந்தமானவன்" என்பது பொருளாகும். நேற்று  நான் உங்களுக்கு சொந்தமானவனாக   இருந்தேன், இன்று உங்களுக்கு சொந்தமானவனாக  இருக்கிறேன், நாளையும் உங்களுக்குச் சொந்தமானவனாக  இருப்பேன்.‘இது என்னுடையது’  ‘அது உன்னுடையது’ என்பதெல்லாம் அறியாமையுடனிருப்பவரின்  வரையறுக்கப்பட்ட தோற்றங்கள். அறியாமையுடன் இருப்பவர் எல்லாவற்றிலும் குறை கண்டுபிடிப்பர். ஆனால் அன்புள்ளவர் அல்லது  பக்தர் அனைத்திலும் ஒருமையைக் கண்டு, “நான் உனக்குச் சொந்தமானவன் உன்னைச் சேர்ந்தவன்” என்றே கூறுவர். ஞானம் உள்ளவர்,  இரண்டு என்பதே கிடையாது, அனைத்தும் ஒன்றே என்று அறிவர்.

சிறிய  “நான்” என்பதை  பெரிய  “நான்” ஆக   விரிவு படுத்திக் காணுங்கள். மனித இனம் முழுவதையும் ஒன்றாகக் கண்டறிந்து சமுதாயத்திற்கு உழைப்பதே வாழும் கலையின் அடித்தளமாகும். உங்களில் பலர் அற்புதமாக  உண்மையாக உழைத்து, வாழ்க்கையை ஓர் கொண்டாட்டமாக ஆக்கி வருவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

நமது பொன்மொழி : வாழ்க்கையை கொண்டாட்டமாக்குதல். உங்களுக்குள் இருக்கும் தெய்வீகத்தை உணர்ந்தறிந்து முழு மனித ஒருமையை உணரும்போதே இது நிகழும். உங்களுக்குள் இருக்கும் தெய்வீகத்தை உணரவில்லையெனில் உலக மனித ஒருமையை உணர  முடியாது. கொண்டாடுவதற்கான ஓர் சிறிய சந்தர்ப்பத்தைக் கூட நழுவ விடாதீர்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு க்ஷணமும் கொண்டாட்டமே ஆகும். இந்த ஞானம் ஆன்மீகத்தின் மூலம் ஓர் அனுபவமாக உங்களுக்கு கிடைக்கின்றது. அதனால்தான் நீங்கள் ஆன்மீகத்தை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கள் இல்லையெனில் வாழ்வில் நழுவி விடுவீர்கள்.

நாம் கலை மற்றும் படைப்பாற்றலில் ஆழ்ந்து முக்குளிக்கும்போது  காலமே நின்று விடுகிறது. ஒரு அப்பழுக்கற்ற வாழ்க்கை வாழுங்கள், அனைவருடனும் ஒன்றியுணர்ந்து, வாழ்க்கையை கொண்டாடுங்கள்

இப்பொழுதே உங்கள் பயத்தை வெல்லுங்கள்

செவ்வாய்கிழமை, 10 மே 2016, 

பெங்களூரு ,இந்தியா


(விதி மற்றும் விருப்பத்திற்கிடையே நகருதல் என்னும் இடுகையின் தொடர்ச்சி )

எவ்வாறு எதிர்மறை எண்ணங்கள் மற்றும் பயத்தினை வெல்வது?

உங்கள் பயங்கள் அனைத்தையும் என்னிடம் தந்து விடுங்கள். அவற்றைப் பெற்றுக் கொள்ள நான் இங்கிருக்கும்போது ஏன் நீங்கள் அவற்றைத் தரக் கூடாது? ஏன் என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது? அவ்வாறெனில் நீங்கள் ஏற்கனவே உங்கள் பயத்தையும் எதிர்மறையினையும் என்னிடம் கொடுத்து விட்டிருப்பீர்கள். 

குருதேவ், எவ்வாறு பொருட்கள், மனிதர்கள்  மற்றும் நிலைமைகளில் சிக்காமல் விலகியிருப்பது?

ஒரு முறை கஷ்டப்பட்டுவிட்டால் அந்த எண்ணமே அதில் சிக்காமல் விலகி நின்று பாதிப்பின்றி இருக்க உதவும்.

குருதேவ், 33 கோடி  தேவர்கள் இருப்பதாகக் கூறப் படுகின்றது. யாரைக் கடவுளாக மற்றும் யாரைக் குருவாகக் கருத வேண்டும்?

33 கோடி தேவர்கள் இருக்கட்டுமே ! அதனால் என்ன? அவர்கள் அனைவருமே ஒரே கடவுளைச் சார்ந்தவர்கள். யாரை நம்புவது என்பது உங்களுடைய விருப்பத் தேர்வு. அதை நான் கூறக் கூடாது.  உங்கள் மனதிற்கு எது சரியன்று தோன்றுகிறதோ அதைச் செய்யுங்கள். தேர்வு உங்களுடையது, ஆசி என்னுடையது.

நாராயண உபநிஷதத்தில் " நாராயண பரோ த்யாதா  தியானம் நாராயண பர "என்று கூறப்பட்டிருக்கின்றது . இதன் பொருள் என்ன?


த்யாதா என்பதும் நாராயணனே. தியானிப்பவரும் நாராயணனே. உள்ளே வெளியே எங்கிலும் நாராயணனே. இது அனைத்து மந்திரங்களும் உள்ளது. உதாரணமாக கணபதி மந்திர அர்தார்வஷிர்ஷாவில் - ஸ்ரீ கணபதி  எனக்குப் பின்னால், என் முன்னால், எனக்கருகில், எனக்கு மேலே எனக்குள்ளே மற்றும் எனக்கு வெளியே என்று எங்கிலும் உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. அது போன்று  நாராயணன் முன்னால், பின்னால், எதிரில் என்று  எங்கிலும் உள்ளார். இது தியானம் செய்யும் வழியாக இருந்தது. முற்காலத்தில், ஓர் சிலை அல்லது கலசம் வைத்து வழிபட்டு தங்களுக்குள் அமைதி பெறுவர். 

தியானத்தின்போது, உள்ளே, வெளியே, மேலே, கீழே, முன்னால் என்று எங்கும்  கணபதியின் இருப்பினை உணர்வர். முக்கிய நோக்கம் சமாதியே, மற்றொரு அம்சம் என்னவெனில், வெளியுலகுடன் சடங்குகளில் மூலம் தொடர்பு கொள்ளும்போது அது நமக்குள் நேர்மறை அதிர்வுகளை ஏற்படுத்துகின்றது. சூழலையும் நேர்மறையாக ஆக்குகின்றது. யக்ஞங்கள் பூஜைகள் ஆகியவற்றைச் செய்யும்போதும் இதே விளைவுகள் தோன்றுகின்றன. ஆகவே  முதலாவதாக  தனக்குள் நிலை பெற்று சமாதியடைதல் ; இரண்டாவதாக  அதிர்வலைகளைத் தூய்மைப்படுத்தி நமது நடத்தையிலும், சூழலிலும் நேர்மரையினை எடுத்து வருதல் என்னும் இரு அம்சங்கள் உள்ளன.

படைப்பிலுள்ள அனைத்தையும் கௌரவியுங்கள்

வியாழக்கிழமை 5 மே 2016, 

பெங்களூரு, இந்தியா


உங்கள் மனத்தைக் காத்துக் கொண்டு மூளையைப் பயன்படுத்துங்கள். நாம் நமது மூளையைக் காத்துக் கொண்டு மனதை அதிகமாகப் பயன்படுத்துகிறோம். இங்குதான் பிரச்சினைகளைப் பெறுகின்றோம். நமது மனதை எளிதில் உடையக் கூடிய நிலையில் வைக்கின்றோம், ஆகையால் சிறிய விஷயம் கூட நமது சம நிலையைத் தகர்த்து விடுகிறது. அந்த நிலையிலேயே நாம் வெகுகாலம் இருந்து பரிதாபமான சோர்வுற்ற மகிழ்ச்சியற்ற நிலையினை அடைகிறோம்.

அண்மையில் இந்தியாவிலுள்ள கல்லூரிகளில் மன அழுத்த விகிதம் மிக அதிகமாக இருக்கிறது. மகாராஷ்டிர மாநில  காவல் துறையில் மிக அதிக அளவு சதவீத மன அழுத்தமுள்ளவர்கள் இருக்கின்றனர். இது ஏனெனில் நாம் நமது மனதை உடையும் நிலையிலேயே வைத்திருக்கிறோம். சிறிய விஷயங்கள் கூட  நம் சமநிலையினை ஆட்டம் காண வைத்து விடுகின்றன. தயவு செய்து உங்கள் மனத்தைக் காத்து, மூளையைப் பயன்படுத்துங்கள்.

மிக புத்திசாலியான ஒருவர் கூட  தன்னுடைய வாழ்நாளில் 3 % முதல் 5 % வரையில்தான்  மூளையை பயன்படுத்துகிறார். குறைந்தபட்சம் 5 % முதல் 6% வரையில் மூளையைப் பயன்படுத்த வேண்டும் என்று கருதுகிறேன். பயன்படுத்தாத மூளையை இயற்கையிடம் திருப்பித் தராதீர்கள். உலகிற்கு என்னன்ன நன்மைகள் செய்யலாம்,  சமுதாயத்தை மேம்படுத்த என்ன செய்யலாம்? உலகில் எவ்வாறு காழ்ப்புணர் வினை  குறைக்கலாம் என்பதற்கு எல்லாம் கருத்துக்களை முன்வையுங்கள்.

பெண்கள், முதியோர், ஜாதி,சமயம் இவற்றுக்கெதிராக காழ்ப்புணர்வு உள்ளது. கிராமங்களில்  இத்தகைய உணர்வுகள் அதிகம். நகரத்திலிருந்து ஒருவன் கிராமத்திற்குச் சென்றால், கிராம மக்கள்  அவனைப் பார்த்துப்பயப்படுவர். நகரத்தில் கிராம மக்கள் பயனற்றவராகவே கருதப்படுகின்றனர். நமது நாட்டில் ஜாதி காழ்ப்புணர்வு அதிகம். பெண்கள், ஊடகங்கள் அரசாங்கம், அரசுப் பணித்துறை, குருமார்கள் ஆகியவர்களைப் பற்றியும் காழ்ப்புணர்வு நிலவி வருகின்றது. நாம் இதிலிருந்து வெளி வர வேண்டும். என்ன எண்ணுகிறீர்கள்? நாம் இதற்கு என்ன செய்யலாம்? மக்களுக்கு பரந்த பார்வையை ஏற்படுத்த எவ்வாறு கற்பிக்கலாம். இந்த வழியில் யோசியுங்கள். அதிகப் படைப்பாற்றலுடன் இருங்கள் !

கடவுளின் ஒப்புமையில் மனிதன் படைக்கப்பட்டானா அல்லது மனித உருவில் கடவுள் படைக்கப்பட்டாரா?

இரண்டுமே தான் என்று நான் கருதுகிறேன். கடவுள் தன் உருவில் மனிதனைப் படைத்து  மனிதனும் தனது உருவிலே கடவுளைக் காண்கிறான். அதில் தவறேதும் இல்லை. இணை உருவாக்கம் என்று சொல் உள்ளது. கடவுளை மனிதன் உருவாக்குகிறான். அது குற்றமன்று. பல சமயங்களில் கடவுள் என்றே ஒன்று இல்லை,மனிதனே கடவுளை உருவாக்கி விட்டதாகக் கருதுகிறோம். அவ்வாறு இல்லை. அனைத்துக் கலை வடிவங்கள், சிற்பங்கள், கற்பனைகள், வேதாந்தம், மற்றும் அறிவியல் கூட மனிதனின் மனதிலிருந்து எழுந்தவை தாம்.

கடவுள் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்? கடவுள் என்பது  படைப்பு, மற்றும் உருமாறும்  ஆற்றல் கொண்ட ஓர் நியமம். படைத்து, காத்து அழிப்பதே கடவுள். மனிதன்  இவை மூன்றையும் செய்வ தில்லையா   என்ன? எனில் வித்தியாசம் எங்கே? உங்களிடமிருந்து கடவுள் வேறுபட்டவர்; எங்கோ சுவர்க்கத்தில் அமர்ந்து கொண்டு தனது சுண்டு விரலை நீட்டி நீங்கள் பற்றிக் கொள்ள முயலும் போது ஓடிவிடுவது போன்று கருதிக் கொண்டிருக்கின்றீர்கள். கடவுள்  பற்றிய இத்தகைய கருத்து தான் துன்புறுத்துகின்றது. இந்தக் கோட்பாடே கம்யுனிசம் மற்றும் நாத்திகம் தோன்றவும் வழி வகுத்தது. அல்லது கடவுள் என்பது ஒரே ஓர் வடிவம் என்று எண்ணுகின்றீர்கள். இல்லை! எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் கடவுளை அர்ச்சிக்கலாம். கடவுள் என்பது படைப்பின் உச்சக் குறிக்கோள் நன்மை ஆகும். அனைத்து உயிர்களின் அடிப்படையும் ஆகும். இருப்பின் அஸ்திவாரம், உண்மையில் இருப்பே இறைமை  ஆகும்.

நவக்கிரகங்களின் அதிபதி சிவபெருமான் ஆவாரா? ஒவ்வொரு பூஜையிலும் ஏன் கிரகங்கள் வழிபடப்படுகின்றன?

உங்கள் உடலில் வெவ்வேறு பாகங்கள் உள்ளன அல்லவா? பாதத்திற்கு ஒரு வகையான க்ரீம் முகத்திற்கு ஒரு வகையான க்ரீம் உள்ளன அல்லவா? பாததிற்க்குரியதை முகத்தில் தடவ மாட்டீர்கள். தலைத் தைலம் வேறு உடலுக்குத் தடவும் தைலம் வேறு. பற்பசையினை பல்லுக்குப் பயன்படுத்தாமல் வேறெங்கோ தடவுவேன் என்று கூறமாட்டீர்கள். அது போன்றே இரு வகையான விஷயங்கள் உள்ளன.  ஒன்று ஒரே தெய்வீகம் பின்னர், குறிப்பிட்ட விஷயங்களுக்கான யக்ஞங்கள். இவை தாம் கோட்பாடுகள்.

யக்ஞம் என்பது ஓர் அறிவியல். குறிப்பிட்ட வகையான மூலிகைகள் மற்றும் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு நமது உடலின் வெவ்வேறு பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்துன்றன. நவகிரகங்கள் என்பது கோள்கள் மட்டுமன்று. அவை நமது உடலின் வெவ்வேறு பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் பிரபஞ்சத்திலுள்ள குறிப்பிட்ட அதிர் வலைகள். யக்ஞத்தின்  பின்னால் முழுமையான அறிவியல் உள்ளது. நுண்ணுயிர் மற்றும் அண்டசராசத்திற்கிடையே உள்ள  இணைப்பு ஆகும். உதாரணமாக, செவ்வாய் கல்லீரல் மற்றும் புரதங்கள் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது. இது போன்று, பல்வேறு மூலிகைகளுக்கிடையே, பொருட்களுக்கிடையே  பிரபஞ்சத்துடன் அதிர்வலைகளில் தொடர்பு உள்ளது. 

இப்பிரபஞ்சத்தில் பல்வேறு அதிர்வலைகள் உள்ளன. குறிப்பிட்ட அதிர்வலைகள் பல்வேறு கிரகங்களுடன் அவற்றின் நகர்தலுக்கு தொடர்புள்ளவையாக இருக்கின்றன. இங்கு நீங்கள் செய்யும் எதுவும் சூரியனைப் பாதிக்காது, ஆனால் ஓர் குடையினைப் பிடித்துக் கொள்வது நிச்சயமாக சூரியனிடமிருந்து உங்களைக் காக்கும். அது போன்றே வெவ்வேறு பருவ  காலங்களில் வெவ்வேறு வகையான உணவுகளை உண்கின்றீர்கள். குளிர் காலத்தில் மாம்பழங்கள் கிடைப்பதில்லை. அவை கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும். இயற்கை விளைவிக்கும் அவற்றை அப்பருவ காலங்களில் மட்டும் உண்டால் உங்கள் உடல்நலன் மேம்பட்டு இருக்கும். இயற்கையே இதை வடிவமைத்திருக்கின்றது. காலம், அதிர்வலைகள், உணவு, சூழல் ஏன் விலங்குகள்  கூட ஒன்றோடொன்று தொடர்புடையவை  ஆகும்.

மற்றொரு முக்கியமான விஷயம் என்னவெனில், அனைத்துக் கிரகங்களும் அவற்றின் தேவதைகளும் (அதிர்வலைகள்) ஓர் குறிப்பிட்ட வாகனத்தில் வருகின்றன. வாகனம் என்பது என்ன? அதை ஆய்வது ஓர் சுவாரஸ்யமான விஷயம். ஆடு செவ்வாயின் அதிர்வலைகளை எடுத்து வருகின்றது. அது போன்று ஒவ்வொரு விலங்கும் இயற்கையிலிருந்து குறிப்பிட்ட அதிர்வலைகளை நிலத்திற்கு எடுத்து வருகின்றன. இடைக்காலத்தில் வண்ணத்துப் பூச்சிகள் குறிப்பிட்ட செயல்களைச் செய்யும் என்பதை  மக்கள் புரிந்து கொள்ளவில்லை.

வண்ணத்துப் பூச்சிகளின்றி உணவுப் பயிர்கள் விளையாது. சரியான அறிவற்ற மக்கள் பயிர்களுக்கும் வண்ணத்துப் பூச்சிகளுக்கும் என்ன தொடர்பு என்று வினா எழுப்பிக் கொண்டிருந்தனர். அமெரிக்காவில் பூச்சிக்  கொல்லி மருந்துகள் பரவப்பட்ட போது, வண்ணத்துப் பூச்சிகள் மற்றும் புழுப்பூச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதைக் கருதவேயில்லை. அதனால் என்ன நிகழ்ந்தது? அனைத்து வண்ணத்துப் பூச்சிகளும் மறைந்து விட்டன. இப்போது பயிர்கள் விளையவும் மகரந்த சேர்க்கைக்கும், கொள்கலன்களில் வண்ணத்துப் பூச்சிகளை எடுத்து வந்து  பயிர் நிலங்களில் விடுகின்றனர். மகரந்த சேர்கை ஏற்படாத போது, விளைபொருட்களின் தரம் தாழ்ந்து விடுகின்றன.ஆகவே எறும்பிலிருந்து யானை வரையில் ஒவ்வொன்றுக்கும் பூமியில் ஓர் செயல்பங்கு உள்ளது. அவற்றினைப் போற்றிப் பாராட்ட வேண்டும் என்பதே முக்கியமானது.
.
ஒரே ஓர் மெய்யுணர்வு என்று கூறுவது குவாண்டம் இயற்பியல். பல்வேறு பொருட்கள் உள்ளன என்பது பாரம்பரிய வேதியல். இவை ஒன்றோடொன்று முரண்பட்டவை அல்ல. இரண்டும் ஒன்றாகவே இணைந்துள்ளன. அனைத்து ஒன்பது கிரகங்களையும் வழிபட வேண்டும் என்பதில்லை. "ஓம் நமசிவாய” என்று ஜெபித்தாலே போதும். பிரார்த்தனை ஒன்று மட்டும்தான். அதில் அனைத்துமே அடங்கி யுள்ளன. ஆனால் யஞ்யங்களில் குறிப்பிட்ட விஷயங்கள் செய்யப் படுகின்றன, அவை அனைத்தும் முழுமையின் பகுதிகளாகவே  காண்பீர்கள். தனிப்படுத்தியல்ல.


உங்கள் இல்லங்களில் சமையலறை, சாப்பிடும் அறை, உறங்கும் அறை, என்றெல்லாம் பல அறைகள் உள்ளன. ஒவ்வொன்றையும் அழகு படுத்துகிறீர்கள் அல்லவா? வீட்டின் வெளியில் அலங்கரித்து விட்டீர்கள் ஏன் உள்ளே ஒவ்வொரு அறையையும் அலங்கரிக்க வேண்டும் என்று கேட்க முடியுமா? ஒவ்வொன்றையும் அழகு படுத்த விரும்புகிறீர்கள் ஏனெனில் அவை வீட்டின் ஓர் பகுதியாகிறது. இவ்வாறுதான் இதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். சிவனிடமிருந்து வேறுபட்டு தேவதைகள் உள்ளதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அனைத்தும் சிவனின் அம்சங்கள் , மற்றும் பகுதிகள் ஆகும்.

அழுத்தமான நேரத்திலும் சாந்தமாக இருத்தல்

வியாழக்கிழமை, 5 மே 2016,

பெங்களூரு, இந்தியா


(படைப்பிலுள்ள அனைத்தையும் கௌரவியுங்கள் என்னும் இடுகையின் தொடர்ச்சி)

அனைத்து ஆசிரியர்களும் ஞான ஒளி அடைவார்களா?

ஒவ்வொரு ஆசிரியரும் விரும்புவது இதுதானா என்பதை முதலில் நீங்கள் அவர்களைக் கேட்க வேண்டும். அனைத்து ஆசைகளும் துடைத்தெறியப்பட்டபின்னர் தான் முக்தியை கண்டெடுக்க முடியும். ஆசிரியர்கள் அதிக அளவில் மதிக்கப்படுகின்றனர். மரியாதையைப் பெறும்  ஒருவர் அவ மரியாதையையும் எதிர் கொள்ளவேண்டும். அப்போது என்ன நிகழ்கிறது? அதிர்ச்சியடைகிறீர்கள். மக்கள் உங்கள் மீது ஏச்சுக்களை  வீசிஎறியும் போதும் அவ்வாறு அதிர்ச்சியடையாமல் இருக்கும் போதுதான் உங்களது உண்மையான பண்பு ஒளி வீசுகிறது. மரியாதையைப் பெறும் போது அது ஒளி வீசுவதில்லை. 

மக்களுக்குப் பிடிக்காத ஒன்றினை அவர்களிடம் கூறும்போது, எவ்வளவு ஏசுகிறார்கள் பாருங்கள். அப்போது நீங்கள் சாந்தமாக அமைதியாக இருந்தால் உங்கள் உண்மையான பண்பு வெளிவருகின்றது. அப்போது நீங்கள் மைய்ய நிலையில் இருப்பதாக அறியலாம். நீங்கள் மைய்ய நிலையில் இருக்கிறீர்களா அல்லது இல்லையா என்பதை எவ்வாறு அறிகின்றீர்கள்? அதிகமான புகழ் வரும்போதல்ல, அதிக அளவில் அவமரியாதை யும் ஏச்சுகளும் வரும்போதே அது தெரியும். இவை எதுவுமே என்னை தொடாது, நான் மைய்ய நிலையில் உள்ளேன். நான் சந்தோஷமாக இருக்கிறேன். திருப்தியுடனும் ஈடுபாட்டுடனும் இருக்கிறேன் என்று நீங்கள் எண்ணிக்கொள்ளலாம்.

தடைகள், அல்லது  அவமரியாதை -  உதாரணமாக தன்னார்வத் தொண்டர்களின் பணி மதிப்பின்றிப் போவது போன்ற தருணங்களில் என்ன நிகழ்கின்றது? தொண்டர்கள் அதற்கு மேற்பட்டு எதுவும் செய்ய ஆர்வமின்றி விலகி விடுகிறார்கள். "காலை முதல் இரவு வரையில் பணியாற்றினேன், யாரும் என்னைக் கண்டுகொள்ளவில்லை, நன்றி தெரிவிக்கவில்லை என்னை வெளியே தள்ளிவிட்டார்கள் என்றெல்லாம் புலம்புகின்றனர். நான் நன்கு பணி புரிந்தேன், எனக்கு அதற்கு பரிசு கிடைக்க வேண்டும் என்னும் எதிர்பார்ப்புடன் இருக்கும் தன்னார்வத் தொண்டர்களிடமிருந்து இத்தகைய குற்றசாட்டுகள் எழுகின்றன. இவை மிக சாதரனமானவை. ஆனால் ஆசிரியர்கள் இந்த நிலையினைக் கடந்து மைய நிலையில் இருத்தல் நல்லது. மைய நிலையிலிருந்து பிறழ்வது சாதரணமானது , ஆனால் ஆசிரியர் அவ்வாறு இருந்தால் அது நல்லதல்ல. ஓர் ஆசிரியருக்கு பாதகமான சூழ்நிலையிலும் மைய நிலையிலேயே இருக்க  ஞானம் பெரிதும் உதவுகிறது, அது உங்களது உள் வலிமையை கண்டறியவும் உதவுகிறது.

சமுதாயத்தின் பல்வேறு தரப்பினரிடமும் எவ்வாறு நீங்கள் எளிதாக தொடர்பு கொண்டு ஆன்மீகத்தை அவர்களுக்குப் பொருத்தமானதாக ஆக்குகின்றீர்கள்? ஐ எஸ் ஐ எஸ் ஆன்மீகத்தின் மூலம் சீர்திருத்தப்படக் கூடும் என்று கருதுகிறீர்களா?

எதிலுமே நான் நம்பிக்கை இழப்பதில்லை. ஒவ்வொருவரும் ஆன்மீகத்தின் சுவையினை அறிய வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். மனதின் உள் ஆழத்தில் ஒவ்வொருவரும் மனித உயிர்தான். உங்களது அழகிய ஆத்மாவினை மூடியிருக்கும் கொள்கைகளை மற்றும் அறிவாற்றலை சற்று ஒதுக்கி வைத்தால் இந்த உலகையே வித்தியாசமான கோணத்தில் காண்பீர்கள். யார் மீதும் எனக்கு வன்மம் கிடையாது. யார் மீதும் வெறுப்பும் கிடையாது. என்னிடம் கருணை மட்டுமே உள்ளது. அவர்களும் நம் மக்களேயாவர். வன்முறையில் ஈடுபட்டிருக்கும் மக்கள் மனம் உணர்ச்சிகள் மற்றும் ஆன்மீகரீதியாக நோயுற்றவர்கள். 

ஓர் மருத்துவர் நோயாளிகளை வெறுப்பதில்லை. அவ்வாறு வெறுத்தால், மருத்துவரே அல்ல. வைத்தியர் என்னும் நிலையில், அவர் அனைத்து நோயாளிகளையும் குணப்படுத்த முடியாது ஆனால் யாரையும் வெறுப்பதில்லை. " மன்னியுங்கள், இதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய இயலாது"  என்றே கூறுவார். அத்தகைய "மன்னியுங்கள்" என்னும் எதுவும் செய்ய முடியாத நிலையினை இது வரையில் நான் எட்டவில்லை. இப்போது கூறவும் முடியாது. எங்கோ சற்று நம்பிக்கை உள்ளது. கடந்த காலத்தில் வட கிழக்கு இந்தியாவில், ULFA வுடன், காஷ்மீரில் மற்றும்  கொசோவோவில் சிலருடன், அல்லது நமது  ஆசிரியர்கள் FAARC மக்களுடன் கொலம்பியாவில் சென்றது போன்ற பலவற்றில் நாம் செயல்பட்டிருக்கின்றோம். 

இடைவெளியினை  சரிப்படுத்தி, நம்பிக்கையினை உருவாக்கி மனிதப் பண்புகளை மேம்படுத்தியிருக்கின்றோம். இன்று காலையில் மகாராஷ்டாவிலுள்ள ஓர் பெண் ஆசிரியர் தனது அனுபவத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார். பத்து கொள்ளையர்கள் அவரது வீட்டிற்குள் புகுந்தபோது எவ்வாறு எதிர்வினையாற்றினார் என்று கூறினார். சற்றும் பயம் இன்றி, அவரது வீடு ஓர் ஆஸ்ரமம் என்றும், உணவருந்தி விட்டுச் செல்லலாம் என்றும் கூறியிருக்கிறார். அக்கொள்ளையர்கள் முதலில் ஓர் போர்வையால்  அவரை மூடிக் கவிழ்த்த முயன்றிருக்கின்றனர். ஆனால் அவரது தைரியத்தைக் கண்டு அவருக்குப் பயம் எதுவும் இல்லையா என்று கேட்டிருக்கின்றனர். ஆசிரியரின் ஆன்மீக வழியினைக் கண்டு அவர் அளித்த உணவினை உண்டுவிட்டுச் சென்றிருக்கின்றனர் ! எல்லோரும் இதைப் போல் முயற்சி செய்ய வேண்டும் என்று நான் கூறவில்லை, ஆனால் மனிதப் பண்புகளில் நம்பிக்கை, அன்பில் நம்பிக்கை, மதிப்புக்களில் நம்பிக்கை ஆகியவை இறுதியில் நற்பயன் அளிக்கும்.

ரஷ்யாவில் மிக அதிக குளிராக இருக்கும் நிலையில் தியானம் மேம்பட்டதாக இருக்கிறது. வெப்ப நிலைக்கும் தியானத்திற்கும் தொடர்பு உள்ளதா? பல ரிஷிகள் பனி படர்ந்த ஹிமாலய மலைப்பகுதிகளில் தியானம் செய்வது பற்றிக் கேள்விப் பட்டிருக்கின்றேன்.

ஆம். குளிர் மிகுந்த பகுதிகள் தியானத்திற்கு மேம்பட்டவை ஆகும். ஆகையால் தான் சற்றுக் குளிராக உள்ள மலைக்குகைகளில் தியானம் செய்தனர். ஆனால் வெப்பமான இடங்களில் தியானம் செய்யவும் உத்திகள் உள்ளன. ஷீதலி மற்றும் ஷீத்கரி பிராணாயாமங்கள் பயன் தரும். மேற்கத்திய நாடுகளில் உஷ்ண யோகா என்பது சில காலம் பிரபலமாக இருந்தது. ஆனால் நான் உங்களுக்கு அதனைப் பரிந்துரைக்க மாட்டேன். குளிரூட்டப்பட்ட அறையில் செய்யுங்கள் அது போதும். வெப்பமான கால நிலையில் அது ஒரு தார்க்காலிக நிவாரணம். அவ்வளவுதான். நரம்பு மண்டலத்தில் அதன் பின்விளைவுகள் என்ன என்பதை அறிவியல் ரீதியாகக் கண்டறிய வேண்டும். அதற்கு முன்னர், 40 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் யோக ஆசனங்களையும் பிராணாயாமத்தையும் செய்யுமாறு மக்களுக்கு ஆலோசனை கூற முடியாது. குளுமையான இடங்கள் மிக உகந்தவையாகும். 

வெப்ப மண்டலக் காடுகளிலுள்ள மரங்களை விட ஆர்டிக் பகுதியிலுள்ள காடுகளில் காணப்படும் மரங்கள் சீரான வரிசையில் வளர்வதை பார்த்திருக்கிறீர்களா? மரங்கள், மற்றும் அவற்றின் கிளைகள் ஆகியவற்றின் உருவம் சீராகக் காணப்படும். வெப்பம் குறையும்போது உள் வெப்பமும் குறைகிறது. அதாவது மிகுந்த ஒழுங்கமைப்பு  ஏற்படுகிறது. தாவரங்கள், மனிதர்கள் விலங்குகள் அனைவருக்கும் இது பொருந்தும்.

எனது முதலாளியிடம் நான் பகவத் கீதையை நம்புவதாகவும், எந்தப் பிரதி பலனையும் எதிர்பாராமல் செயல்பட்டு வருவதாகவும் கூறினேன். அதிலிருந்து என் முதலாளி என் சம்பளத்தை நிறுத்தி விட்டார். இப்போது என்ன செய்வது? நான் கூறியது தவறா?

இது  பகவத் கீதையால் ஏற்பட்டது அல்ல என்றே நான் கருதுகிறேன். நீங்கள் சரியாகப் பணி புரிந்திருக்க மாட்டீர்கள்!  பணியிடத்தில் ஜபித்துக் கொண்டு அல்லது சரியாக செயலாற்றாமல் இருந்திருப்பீர்கள். உங்களுக்குப் பதில் கூறுவதற்கு முன்னர், இதன் மறு தரப்பு என்ன என்பதையும் நான் அறிய வேண்டும். ஒரு பக்கம் மட்டுமே அறிந்து தீர்ப்பு அளிக்க முடியாது. ஆனால் பகவத் கீதையை படித்தல், எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்க வில்லை என்று கூறுதல் ஆகியவை உங்கள் சம்பளம் நிறுத்தப்பட்டதற்கு காரணமாக இருக்க முடியாது என்பது உறுதி. 

தேவையான நேரத்தில் மூளையைப் பயன் படுத்தியிருக்க மாட்டீர்கள். பகவத் கீதையை நன்கு கற்றறியாமல் வெறும் வாசித்தலுடன் நிறுத்தியிருப்பீர்கள். திறனுள்ளவராக இருந்திருக்க மாட்டீர்கள். " யோகாஹ் கர்மாசு கௌஷலம் "  (யோகா என்பது பணியில் சிறந்து விளங்குவது) என்று ஏன் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது? நீங்கள் ஒருவர் கீழ் பணியாற்றும் போது மேலதிகாரியிடம் அவரது தவறு என்று சுட்டிக் காட்டினால், உங்கள் கூற்று சரியானதாக இருந்தாலும் அது தவறாகும். எதையும் நுட்பமாக திறனுடன் வெளிப்படுத்த வேண்டும்.


இவ்வாறு நான் கருதுகிறேன், ஆனால் உங்களுக்கு என்னை விட மேலாகத் தெரியும் என்று கூற வேண்டும். "உங்களுக்கு மேலாகத் தெரியும்" என்னும் பகுதியை வித்தியாசமின்றி சரியான தொனியில் கூறினால் அது உங்களுக்கு உதவும். இது முழுவதுமே தொடர்புத் திறன் பற்றியதாகும்.

அனைத்திலும் தெய்வீகத்தைக் காணுங்கள்

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2016,

பெங்களூரு, இந்தியா


 சிலர், "உலகைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். உங்கள் மகிழ்ச்சியையும் அமைதியையும் கண்டெடுங்கள். அதுவே மிக முக்கியமானது " என்று கூறுகின்றனர். ஆம். இதுவே முதல் படி, உங்கள் அமைதியைக் காணுங்கள். ஆயின், அதை கண்டெடுத்த பின்னர் என்ன செய் கிறீர்கள்? உங்கள் அமைதி நிலை உங்களைச் சுற்றியிருக்கும் பலருடன் பின்னிப் பிணைந் திருக்கும் போது நீங்கள் மட்டும் எவ்வாறு ஓர் தீவு போன்று அமைதியுடன் இருக்க முடியும்? முடியுமா என்ன? முடியாது. எனவே, நீங்கள் அமைதியினை உங்களைச் சுற்றிப் பரப்பும்போது, மட்டுமே உங்களுடைய அமைதி நிலைத்திருக்கும். உள் நோக்கிச் செல்வது என்பது, வெளிப் புறமாகச் சென்று நமது சூழலை மாற்றுவது என்பதற்குச்  சமமான முக்கியத்துவம் உடையது.  இரண்டுமே ஒரே நேரத்தில் நடைபெற வேண்டும்.

சிலர், இந்த உலகைப் பற்றி மறந்து விடுங்கள். உலக அமைதிக்காகப் பாடுபடாதீர்கள். உலகைத் திருத்த முயற்சிக்காதீர்கள். உங்களுக்குள்ளேயே சென்று உங்களது அமைதி யினைக் கண்டெடுங்கள்" என்று கூறுகின்றனர். ஆனால் நாம் வாழும் கலையில் நமது அமைதியினை கண்டெடுத்து விட்டோமல்லவா? (அனைவரும் ஒரே குரலில் ஆம் என்கின்றனர்). வாழும்கலையின் ஆனந்தப் பயிற்சியின்  முதல் நாளன்றே நீங்கள் அமைதி யடைந்து விட்டீர்கள். வாழ்க்கையின் கொள்கைகளை ஓரளவு அறிந்து கொண்டீர்கள். நமது அமைதியையும் ஆனந்தத்தையும் கண்டெடுத்த பின்னர், அதை சுற்றிலும் பரப்புவதே நமது கடமையாகும்.அதனால்தான், வாழும் கலை உலகெங்கிலும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள லாத்தூரில், நாட்டின் பதினேழாவது மற்றும் 

மகாராஷ்டிர மாநிலத்தில் பதிமூன்றாவது நதியினை புத்துணர்ச்சி பெற உழைக்கின்றோம். எந்த நதி மறுமலர்ச்சி அல்லது சேவைத் திட்டம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன்னுடைய சுய அமைதியை மட்டுமே கருத்தில் கொண்டால், உண்மையான ஆனந்த அனுபத்தை அடையவில்லை என்றே கூற வேண்டும். ஏனெனில் நீங்கள் தியானம் செய்து உங்களுடைய உள் அமைதியினைக் கண்ட பிறகு, இயல்பாகவே அதனைப் பிறருக்கும் எடுத்து வர வேண்டும் என்றே விரும்புவீர்கள். எனவே தங்களுக்குள்ளேயே அமைதி காண விரும்புபவர்களை விட நாம் ஒரு படி முன்னேறிச் செல்கிறோம்  என்றே தோன்றுகிறது. நாம் ஏற்கனவே அடைந்து விட்டதை மற்றவர்களுக்கும்  பரப்புகின்றோம்.

ஓர் நல்ல திரைப்படத்தைக் கண்டவர், உற்சாகத்துடன் மற்ற அனைவருக்கும்," இந்தத் திரைப்படம் மிக நன்றாக உள்ளது, வாருங்கள், நானும் உங்களுடன் வருகிறேன் பார்க்கலாம்" என்று கூறுகிறார் அல்லவா?அதே உணர்வுடன் தான் வாழும் கலையும் செயல்படுகிறது. உங்களிடம் என்ன உள்ளதோ அதை தான் பிறருக்கும் பரப்ப முடியும். நாம் அமைதியையும் ஆனந்தத்தையும் பரப்புகிறோம் ஏனெனில் அவை நம்மிடம்  உள்ளன. அவை இல்லாதவர்கள் அவற்றைத் தேடிக் கண்டெடுக்கட்டும். நாம் கண்டெடுத்து விட்ட தால் அதைப் பரப்ப விழைகிறோம் ! ஆனந்தத்திற்கு  முடிவே  இல்லை. தனிப்பட்ட சுகத் திற்கும்  முடிவே இல்லை. அதைத் தேடிக்கொண்டே இருக்கலாம். ஆனால் ஆனந்தத்தின் இயல்பு பகிர்ந்து கொள்ளல் ஆகும். அதைத்தான் வாழும் கலை செய்து வருகின்றது. இதன் அடித்தளம் என்னவெனில் ஆன்மீக இணைப்பு, ஆன்மீக உயர்வு, மற்றும் அதனை அடைதல்.

குருதேவ், எவ்வாறு மறப்பது மன்னிப்பது என்பது சாத்தியமாகும்? சில சமயங்களில் என்னால் முடியவில்லை. சாத்தியமற்ற இதனை சாத்தியமாக்க உதவுங்கள். இது என் வேண்டுகோள்.

இதைச் செய்யும் சக்தி உங்களிடம் இருக்கிறது என்பதை அறியுங்கள். உங்கள் மனதைத் திறந்து, பரந்து  விரிந்த இந்தப் பிரபஞ்சத்தைக் காணுங்கள். விழித்தெழுந்து, ‘ இப் பூமியில் ஏழு பில்லியன் மக்கள் இருக்கின்றனர், ஒவ்வொரு நாளும் பலர் இடுகாட்டில் எரிக்கப் படுகின்றனர், பலர் இறக்கின்றனர் ’ என்பதைக் காணுங்கள். ஒருவருடைய செயலில் எதைப் பிடித்துத் தொங்கிக்  கொண்டிருக்கின்றீர்களோ அது உங்கள் கர்மா அதுவே உங்களை அவ்வாறு செய்தது என்பதை அறியுங்கள். இவர் இல்லையெனில் வேறொருவர் உங்களுக்கு அந்த அனுபவத்தை அளித்திருப்பார். இதைத்தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உலகைப் பெரிய கோணத்திலிருந்து காணுங்கள்.ஒவ்வொரு நிகழ்விற்குப் பின்னும் ஓர் ஞானம் இருக்கின்றது. ஒவ்வொரு மனிதருக்குப் பின்னும் அன்பு இருக்கின்றது. ஒவ்வொரு பொருளுக்குப் பின்னும் எல்லையற்ற  தன்மை இருக்கின்றது .இதைப் புரிந்து கொண்டு, கவனித்து தெரிந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான்.

அன்புள்ள குருதேவ், நாம் செயலாக்குபவர் இல்லையென்னும் நிலையிலிருந்த போதிலும், நமது கடந்த கால, நிகழ் கால, மற்றும் வருங்கால கர்மங்களுக்கு  நாம் எவ்வாறு பொறுப்பாவோம் ?

உங்களுக்குள் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று உங்களுக்குள் ஏதோ ஒன்று மாறிக் கொண்டேயிருக்கின்றது. அது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் எண்ணங்கள் உங்கள் உணர்ச்சிகள் உங்கள் உடல் இவை மாறிக் கொண்டேயிருக்கின்றன. அல்லவா? அது போல உங்களுக்குள் ஏதோ ஒன்று மாறுவதேயில்லை. அது தெரியுமா? இல்லையெனில் எவ்வாறு நீங்கள் மாறுவது உங்களுக்குப் புலப்படும்? ஆகவே மாறும் மற்றும் மாறாத நிலை; தொட்டு அறியக்கூடிய  மற்றும் அறியமுடியாத நிலை ; என  இரண்டும்  கலந்த கலவையே நீங்களாவீர்கள்.  உடல் தொட்டு அறியக் கூடியது, எண்ணங்கள் மனம் உணர்ச்சிகள் ஆகியவை அவ்வாறு அறிய முடியாதவை வடிவமுள்ள, வடிவமற்ற என்னும் இரண்டின் கலவையே நீங்கள் ஆவர்கள். வாழ்க்கை என்பது வடிவமுள்ள வடிவமற்ற ஆகிய இரண்டும், வெளிப்படையான மற்றும் அறிகுறியற்ற ஆகிய இரண்டும் அடங்கிய சிக்கலான நூதனக் காட்சி. அது போன்று, செயலாற்றுபவரும் செயலாற்றாதவரும் நீங்கள் ஆவீர்கள். செயலாற்றும் போது நீங்கள் செயலாற்றுபவர். ஓய்வில் இருக்கும் போது அல்லது தியானம் செய்யும் போது செயலாற்றதவர். ஆகவே இரண்டுமே நீங்களாவீர்கள்.

குருதேவ்! பகவத் கீதையில் எதையும் ஆரம்பிக்காத ஒருவனே அறிவாளி என்று கூறப் பட்டிருக்கின்றது. இதை  ஸ்ரீ கிருஷ்ணர் என்ன பொருளில் கூறுகிறார் என்று கூற முடியுமா?

ஸ்ரீ கிருஷ்ணர், "இவ்வுலகில் எதையும் செய்யாமல் இருக்க முடியாது" என்று கூறுகிறார். ஓர் செயல்பாடின்றி சில நிமிஷங்கள் கூட ஒருவரால் இருக்க முடியாது. அதே சமயம் மேற்கண்டவாறும் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியிருக்கின்றார். ஆகவே ஏதேனும் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு புரிந்து கொள்ள முயற்சிப்பது சரியல்ல. படிப்படியாகச் சென்று புரிந்து கொள்ள வேண்டும் இல்லையெனில் நீங்கள் முரண்பாடுகளில் சிக்கிக் கொள்வீர்கள். ஏனெனில் பகவத் கீதை ஒரு படியிலிருந்து அடுத்த படிக்குச் செல்வது போன்றமைக்கப் பட்டது. தனிப்படுத்தி எதையும் புரிந்து கொள்ள முடியாது.

அர்ஜுனன் கூட," ஏன் என்னைக் குழப்புகின்றீர்கள்? எதிர்ப்பதமான பலவற்றையும் கூறுகிறீர்கள். ஒரு சமயத்தில் கர்மா முக்கியமானது என்கிறீர்கள், வேறொரு சமயம் அனைத்துக் கர்மாக்களையும் விட்டு விட்டு சரணடையுமாறு  கூறுகிறீர்கள். எனக்கு மிகவும் குழப்பமாக உள்ளது" என்று கூறுகின்றான். உங்களுக்குள் குழப்பம் எழும்போது, ஒரு விதமான புரிதல் அங்கு முறிந்து விடுகிறது. கருத்து மாற்றம் நிகழ்கின்றது. அது நல்லதே. படிப்படியாகச் செல்லுங்கள்.

குருதேவ்!  உணர்ச்சிகள் அறிவினை ஆளுவது போன்று உணர்கின்றேன். ஞானம் என்பது அறிவு நிலையில் மட்டுமே இருப்பது போன்றும், உணர்ச்சிகள் மேலோங்கும் போது ஞானம் உதவாது என்றும் எண்ணிக் கொள்ளலாமா?

ஞானம் உங்களுக்கு உதவுகின்றது. உணர்ச்சிகளில் மட்டுமே மிதந்து கொண்டிருந்தால், நீங்கள் சிதறுண்டு விடுவீர்கள். அவ்வப்போது  ஞானம் உட்புகுந்து உணர்ச்சி களை ஆட்சி செய்கிறது. அது அனைத்து நேரங்களிலும் நிகழாவிடினும் பெரும்பாலும் நிகழ்கின்றது. கோபம் மேலோங்கும் தருணங்களில் , அறிவு, "சரி போதும். அமைதியாக இரு" என்று கூறுகிறது. அப்போது நீங்கள் அடங்கி விடுகிறீர்கள். அறிவு எப்போதும் ஜெயிக்க முடியாது, ஆனால் பெரும்பாலான சமயங்களில் வெற்றி யடையும். அதனால்தான் நீங்கள் நல்லறிவுடன் இருக்கின்றீர்கள். பைத்தியக்காரர்களுக்கு அறிவு செயல்படாது, உணர்ச்சிகளே அவர்களை ஆட்சி செய்யும்.

அன்புடனும், ஞானத்துடனும் தலைமை ஏற்றுக்கொள்வது

செவ்வாய்க்கிழமை 7 ஏப்ரல், 2016

பாலி, இந்தோனேசியா


(கீழே வரும் உரையாடல், “தைரியமாக முதல் அடியை எடுத்து வை” என்ற பிரசுரத்தின் தொடர்ச்சி)

கேள்வி – பதில்கள்

இந்தோனேசியா போன்ற ஒரு நாட்டில் 51 % மக்கள் ஆண்களாக இருக்கும் போது, பெண்களின் முக்கியத்துவத்தை, குடும்ப வாழ்க்கையில் பெண்களின் பங்கை ஆண்களுக்கு எப்படி உணர்த்த முடியும் ?

நீங்கள் ஏற்கனவே அப்படிச் செய்து விட்டீர்கள். இல்லாவிட்டால், நீங்கள் இந்த நிலையை அடைந்திருக்க மாட்டீர்கள். குடும்ப வாழ்க்கை நடத்திக் கொண்டே அரசியலில் பங்கேற்க முடியுமென்பதற்கு நீங்கள் ஒரு சரியான உதாரணமாகத் திகழ்கிறீர்கள். உண்மையில் இந்தோனேசியாவில் பெண்களின் ஆதிக்கம் நிலவுகிறது. மேதகு திருமதி மேகவதியின் தலைமையை(முந்தைய குடியரசு தலைவர்,  ஒரு பெரிய அரசியல் கட்சியின் தலைவர் ) ஏற்கனவே மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

குடும்பத்தைப் பொறுத்தவரை பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானது. “ஆதிக்கம் செலுத்த ஆக்கிரமிப்பு தேவையில்லை. மக்களின் இதயத்தை வென்றால், மக்களின் மரியாதையை, மக்களின் நம்பிக்கையை வென்றால், குடும்பப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு, அரசியலில் ஆதிக்கம் செலுத்த முடியும். இது சாத்தியம் என்று நான் நினைக்கிறேன்.

முடிவெடுக்கும் நிலையிலிருக்கும் ஒரு பதவிக்கு, ஒருவரை நியமிக்க, நாம் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவரைத் தேர்ந்தெடுக்கிறோம். ஆனால் அந்தப்  பதவிக்குத் தேவையான முன் அனுபவத்தைப்  பார்ப்பதில்லை.

மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும். நாடு(நாடும் நாட்டு மக்களும்), அரசியல் கட்சி மற்றும் உங்கள் அரசியல் அனுபவம். உங்கள் அரசியல் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள, நீங்கள் நாட்டைப் பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் அரசியலின் நோக்கமே நாட்டின் பாதுகாப்பு தான். நாட்டுக்கும் உங்கள் அரசியல் வாழ்வுக்கும் நடுவில் அரசியல் கட்சி வருகிறது. எனவே பொது நன்மைக்காக, நாட்டின் பாதுகாப்பு மீது கவனம் வைப்பது முன்னணியில் இருக்க வேண்டும். அடுத்தது அரசியல் கட்சி. கடைசியில் நீங்கள் (உங்கள் சுயநலம்). இது நடைமுறைக்கு ஒவ்வாதது; கற்பனைக்கேற்றது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நீண்ட கால அடிப்படையில் இதுவே சிறந்த முடிவைக் கொடுக்கும்.

உங்கள் ஆழ்மனதில் தோன்றுவதை உபயோகிக்கலாம். சில சமயம் தர்க்கரீதியாக நீங்கள் செய்வது சரியாகத் தோன்றலாம். ஆனால் உங்கள்  உள்ளுணர்வு வேறு வழியைக் காட்டலாம். அது எப்போதும் தோல்வியடையாது. அந்தத் திறமையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆழ் மனதின் குரலைக் கேட்க வேண்டும். மனம் தெளிவாக இருக்கும் போது, இதயம் தூய்மையாக இருக்கும் போது, செயல் நேர்மையாக இருக்கும் போது உள்ளுணர்வு வழியைச் சொல்லும்.

பெரும்பாலும் பெண்கள் தங்கள் குடும்பத்துக்காக, தங்கள் ஆசைகளையும், கனவுகளையும் தவிர்த்து வாழ்க்கை நடத்துகிறார்கள். குடும்ப பொறுப்புகள் குறைந்த பின், தங்கள் கனவுகளைத் தொடராததை நினைத்து வருந்துகிறார்கள். இந்த சூழ்நிலையை எப்படி சமாளிக்கலாம் ?

குருதேவர் : ஒரு காலத்தில் பெண்கள் சைக்கிள் சவாரி செய்ததில்லை. ஏனென்றால் அவர்கள் புடவை அல்லது குட்டை பாவாடை அணிவது வழக்கமாக இருந்தது. அந்த ஆடையுடன் சைக்கிள் விடுவது சிரமமாக இருந்தது. ஆனால் நாகரீகம் மாறி இன்று பல விதமான வசதியான ஆடைகள் வந்து விட்டதால் பல பெண்கள் சைக்கிள் சவாரி செய்கிறார்கள். நீங்கள் சமநிலையைக் கற்றுக் கொண்டு சைக்கிள் விடத் தெரிந்தவரானால், 

வாழ்க்கையிலும் அந்த சமநிலையைக் கொண்டு வர முடியும். குடும்பப் பொறுப்புடன், அலுவலகம் அல்லது தொழில் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள முடியும். வெளியே செல்வதன் காரணமாக குடும்பப் பொறுப்பை புறக்கணிக்க அவசியமில்லை. உங்கள் கனவுகளையும் கைவிடத் தேவையில்லை.இன்றைய தொழில் வளர்ச்சியடைந்த உலகில், பெண்கள் சுய தொழில் துவங்கி, பெரிய தொழிலதிபராக வர பல வாய்ப்புகள் உள்ளன.

சுரபயாவில் நாங்கள் பல சிவப்பு விளக்குப் பகுதிகளை மூடி விட்டோம். பல குழந்தைகள் போதை மருந்து மற்றும் செக்ஸ் அடிமைகளாகி விட்டார்கள். எங்களுக்கு உதவி தேவை.

கண்டிப்பாக இதற்கு உதவி செய்ய முடியும். போதை மருந்துக்கு அடிமையாவது மன சம்பந்தமான ஒரு நிகழ்வு. மனம் பெரிய மகிழ்ச்சியை விரும்புகிறது. மூச்சுப் பயிற்சி மூலம் மன நிலையை மாற்றி ஒரு ஆனந்த நிலைக்கு எடுத்துச் செல்லும் போது, போதை மருந்து மற்றும் செக்ஸ் இவற்றுக்கு அடிமையாவதைக் குறைக்க முடியும். பல மக்கள் மூச்சுப் பயிற்சிகள் மூலம் இப்பழக்கங்களிலிருந்து விடுபட்டுள்ளார்கள். இளைஞர்களுக்கு இப்பயிற்சியளித்து, அவர்கள் பயனடைவது மட்டுமல்லாமல், மற்றவர்களை இப்பழக்கத்திலிருந்து விடுவிக்க உதவி செய்ய முடியும்.

அகில உலகத்துக்கும் வாழ்க்கையில் நன் மாற்றங்கள் ஏற்படுத்திக் கொள்ள, நீங்கள் பல வகையான பயிற்சிகளைக் கற்றுத் தருகிறீர்கள். பெண்கள் தலைமைப் பொறுப்பேற்க இப் பயிற்சிகள் எப்படி உதவும் ?

தியானம் செய்யும் போது, மூளையின் அமைப்பு மாற்றமடைகிறது. ஒரு அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரையின் படி, இரண்டு வார தியானத்துக்குப் பின் மூளையின் சாம்பல் நிற செல்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அப்படிப்பட்ட ஆராய்ச்சிகளின் படி “தியானத்தின் மூலம் மூளையின் இடது மற்றும் வலது பாகங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, உங்கள் ஆளுமை முழுமையடைகிறது” என்று தெரிய வருகிறது. தியானம் செய்வதால் பல நன்மைகள் கிடைக்கும். உற்சாகமும் சக்தியும் அதிகரிக்கும். மனம் அழுத்தமில்லாமல், குழப்பம் நீங்கி, தங்கு தடையற்ற அறிவாற்றல் பெருகும். நீங்கள் பழகுபவர்களிடையே நல்லிணக்கம் ஏற்படும். வாழ்க்கை ஆனந்தமயமாகும்.

மக்கள் மிகவும் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள். ஆண்களிடம் பெண்களைப் பற்றிய தவறான கருத்தும், பெண்களிடம் ஆண்களைப் பற்றிய தவறான கருத்தும் நிலவுகிறது. அதே போல் இளைஞர்கள் மற்றும் முதியோர்களிடையே பாரபட்சமான கருத்து நிலவுகிறது. நாடுகளிடையே, சமூக அமைப்புகளிடையே பாரபட்சமான கருத்து வழக்கில் உள்ளது. இந்த கருத்து வேறுபாடுகள் நீங்கினால், நாம் ஒரு பாரபட்சமில்லாத சமுதாயத்தை, அதிர்ச்சியற்ற நினைவுகள் கொண்ட வருங்காலத்தை உருவாக்க முடியும்.

ஒருவர் தன் வாழ்க்கையில் அதிர்ச்சியான நிகழ்வுகளை அனுபவித்தால், நீண்ட நாட்களுக்கு அந்த அதிர்ச்சியின் நினைவு அவருடைய மனதில் பதிந்து விடும். அந்த அதிர்ச்சியான நினைவு காரணமாக, அவரால் வாழ்க்கையை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது. “யோகா, தியானம், மூச்சுப் பயிற்சிகள் அதிர்ச்சியான நினைவுகளிலிருந்து விடுவித்து, வருத்தமற்ற ஆத்மாவை உருவாக்க உதவும்.”

இந்தோனேசியா அரசியலுக்கு எப்படிப்பட்ட பெண் தலைவர்கள் பொருத்தமாக இருப்பார்கள்? பெண்கள் அரசியலுக்கு வந்தால் உலகை மாற்றியமைக்க முடியுமென்று நினைக்கிறேன்.

நான் உங்கள் கருத்தை ஏற்கிறேன். பெண்கள் மேலும் மேலும் அரசியலுக்கு வரும்போது, இவ்வுலகம் வாழ்வதற்குச் சிறந்த இடமாகி விடும். இந்தோனேசியப் பெண்கள் உலகின் மற்றப் பகுதிகளில் வாழும் பெண்களை விட வித்தியாசமானவர்கள் என்று நான் நினைக்க வில்லை. ஒரு வேளை அவர்களுக்கு அடிப்படை வாதிகளின் எதிர்ப்பு ஒரு சவாலாக இருக்கலாம். அடிப்படைவாதிகள் பெண்களுக்கு அதிகாரம் கொடுப்பதை விரும்ப மாட்டார்கள். மற்றபடி, இந்தோனேசியாவும், இந்தியாவைப் போல் இளைஞர்கள் அதிகமாக வாழும் ஒரு நாடாகும். மக்களில் பெரும்பாலானவர்கள் 20 முதல் 40 வயது வரை உள்ளவர்கள். அதனால் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சிக்கு மிக அதிக வாய்ப்புள்ளது. 

இன்றைய உலகில் தனித்தொழில் திறமையுள்ளவர்கள் மற்றும் பொதுவான தொழிலாளர்களின் தேவை மிக அதிக அளவில் உள்ளது. எனவே இளைஞர்கள் பல துறைகளில் வேலை செய்ய வாய்ப்புள்ளது. (செவிலியர்கள், வாகனம் ஓட்டுபவர்கள், பல்வேறு தொழில் நுட்பவியலாளர்கள்) பெண்களுக்கு தலைமைப் பொறுப்பு மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியில் பயிற்சியளிக்க வேண்டும். பெண் விமான ஓட்டிகள், பெண் இஞ்சினியர்கள், பெண் கட்டிடக் கலை வல்லுனர்கள் அதிக அளவில் வர வேண்டும். சுற்றுலா துறையில் பெரிய அளவில் வளர்ச்சி காண வாய்ப்பு இருக்கிறது. அதே போல் வியாபாரத் துறையில், ஏற்றுமதி, இறக்குமதிப் பொருட்களைப்  பற்றி நீங்கள் ஏற்கனவே அறிவீர்கள். கலாசார ரீதியில் பெண்கள் ஏற்கனவே மேல் நிலையில் இருக்கிறார்கள்.


இந்தோனேசியாவில், பெண்கள் சுகாதாரத் துறையிலும், போலீஸ் துறையிலும் பெரும் பங்கு வகிப்பதாகக் கேள்விப்பட்டேன். பெண்களுக்கு மதக் கட்டுப்பாடுள்ள சூழ்நிலையில், அவர்கள் உற்சாகத்தோடு பணி செய்ய முன் வருவதை, சமுதாயம் ஏற்றுக் கொள்வதை அறியும்போது புத்துணர்ச்சி ஏற்படுகிறது. அடிப்படை மதவாதிகள், உங்கள் வாழ்வின் வளர்ச்சியைத் தடுக்க அனுமதிக்காதீர்கள். இந்தோனேசியா தன் நாட்டின் கலாசாரத்தைக் கைவிடக் கூடாது. மற்ற நாடுகளின் கலாசாரத்தை இறக்குமதி செய்யத் தேவையில்லை. அது இங்கிருக்கும் சூழ்நிலைக்குப் பொருந்தாது.