இப்பொழுதே உங்கள் பயத்தை வெல்லுங்கள்

செவ்வாய்கிழமை, 10 மே 2016, 

பெங்களூரு ,இந்தியா


(விதி மற்றும் விருப்பத்திற்கிடையே நகருதல் என்னும் இடுகையின் தொடர்ச்சி )

எவ்வாறு எதிர்மறை எண்ணங்கள் மற்றும் பயத்தினை வெல்வது?

உங்கள் பயங்கள் அனைத்தையும் என்னிடம் தந்து விடுங்கள். அவற்றைப் பெற்றுக் கொள்ள நான் இங்கிருக்கும்போது ஏன் நீங்கள் அவற்றைத் தரக் கூடாது? ஏன் என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது? அவ்வாறெனில் நீங்கள் ஏற்கனவே உங்கள் பயத்தையும் எதிர்மறையினையும் என்னிடம் கொடுத்து விட்டிருப்பீர்கள். 

குருதேவ், எவ்வாறு பொருட்கள், மனிதர்கள்  மற்றும் நிலைமைகளில் சிக்காமல் விலகியிருப்பது?

ஒரு முறை கஷ்டப்பட்டுவிட்டால் அந்த எண்ணமே அதில் சிக்காமல் விலகி நின்று பாதிப்பின்றி இருக்க உதவும்.

குருதேவ், 33 கோடி  தேவர்கள் இருப்பதாகக் கூறப் படுகின்றது. யாரைக் கடவுளாக மற்றும் யாரைக் குருவாகக் கருத வேண்டும்?

33 கோடி தேவர்கள் இருக்கட்டுமே ! அதனால் என்ன? அவர்கள் அனைவருமே ஒரே கடவுளைச் சார்ந்தவர்கள். யாரை நம்புவது என்பது உங்களுடைய விருப்பத் தேர்வு. அதை நான் கூறக் கூடாது.  உங்கள் மனதிற்கு எது சரியன்று தோன்றுகிறதோ அதைச் செய்யுங்கள். தேர்வு உங்களுடையது, ஆசி என்னுடையது.

நாராயண உபநிஷதத்தில் " நாராயண பரோ த்யாதா  தியானம் நாராயண பர "என்று கூறப்பட்டிருக்கின்றது . இதன் பொருள் என்ன?


த்யாதா என்பதும் நாராயணனே. தியானிப்பவரும் நாராயணனே. உள்ளே வெளியே எங்கிலும் நாராயணனே. இது அனைத்து மந்திரங்களும் உள்ளது. உதாரணமாக கணபதி மந்திர அர்தார்வஷிர்ஷாவில் - ஸ்ரீ கணபதி  எனக்குப் பின்னால், என் முன்னால், எனக்கருகில், எனக்கு மேலே எனக்குள்ளே மற்றும் எனக்கு வெளியே என்று எங்கிலும் உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. அது போன்று  நாராயணன் முன்னால், பின்னால், எதிரில் என்று  எங்கிலும் உள்ளார். இது தியானம் செய்யும் வழியாக இருந்தது. முற்காலத்தில், ஓர் சிலை அல்லது கலசம் வைத்து வழிபட்டு தங்களுக்குள் அமைதி பெறுவர். 

தியானத்தின்போது, உள்ளே, வெளியே, மேலே, கீழே, முன்னால் என்று எங்கும்  கணபதியின் இருப்பினை உணர்வர். முக்கிய நோக்கம் சமாதியே, மற்றொரு அம்சம் என்னவெனில், வெளியுலகுடன் சடங்குகளில் மூலம் தொடர்பு கொள்ளும்போது அது நமக்குள் நேர்மறை அதிர்வுகளை ஏற்படுத்துகின்றது. சூழலையும் நேர்மறையாக ஆக்குகின்றது. யக்ஞங்கள் பூஜைகள் ஆகியவற்றைச் செய்யும்போதும் இதே விளைவுகள் தோன்றுகின்றன. ஆகவே  முதலாவதாக  தனக்குள் நிலை பெற்று சமாதியடைதல் ; இரண்டாவதாக  அதிர்வலைகளைத் தூய்மைப்படுத்தி நமது நடத்தையிலும், சூழலிலும் நேர்மரையினை எடுத்து வருதல் என்னும் இரு அம்சங்கள் உள்ளன.