நான் உங்களை பிடிக்க தேவை இல்லை,உங்களுக்கே சொந்தம்...


10
2012........................
Jan


கைலாஷ் என்றால் சந்தோசம், கொண்டாட்டம்   மட்டுமே, அதைத்தவிர வேறெதுவும் இல்லை. அதேபோல, நாராயணன் வாழ்கிற இடம் வைகுந், அங்கு இல்லாமை என்பதே இல்லை.அங்கு எல்லாமே  மிகுதியாக  உள்ளதுடன் செழிப்பாகவும் சந்தோசமாகவும் உள்ளது.அதுதான் வைகுந்த். கைலாஷ் மற்றும் வைகுந்தம் வேறேங்காதவது உள்ளதா? அவைகள் எங்கே? அவைகள்  எல்லாமே இங்கே தான்.

நீங்கள் விசாலாக்ஷி என்று ஒரு பாடல் பாடுகிறீர்களே அதன் அர்த்தம் என்ன? விசாலாக்ஷி என்றால் பெரிய கண்கள் மற்றும்  பரந்த பார்வையுடையவர்.

கே: பாசத்திற்குரிய குருஜி, சிவ சூத்திரத்தில் உள்ள "ஞானம் பந்தா"  என்பதின்படி எப்படி ஞானத்துடன் பந்தத்தை உருவாக்கி கொள்வது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்:நீங்கள் அதை படியுங்கள்.அதில் நான் விளக்கமாக கூறியிருக்கிறேன். முழு சிவ சூத்திரமும் படிக்கவும்
.
கே: வாழ்கையில் எளிமை மற்றும் அகங்காரத்தின் விகிதம் என்ன? இவற்றினிடையே நான் எப்படி சமநிலையில் இருப்பது? ஏனென்றால் சில நேரங்களில் எளிமையாக இருப்பதால் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: விவேகம்.பாகுபடுத்தி பார்க்கும் உணர்வு.எங்கே என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியும்.அப்பொழுது என்ன தோன்றுகிறதோஅவ்வாறே செய்யுங்கள்.

கே: அன்பான குருஜி, நாங்கள் காஷ்மீரில் இருந்து வருகிறோம், பயங்கரவாதம் காரணமாக வேறு இடம் பெயர நேர்ந்தது. காஷ்மீர் மிகுந்த ஆன்மிகம் மற்றும் சமய அறிவை பெற்றிருந்து மற்றும் பல துறவிகள் மற்றும் சுபிகளை உருவாக்கி இருந்த போதும், அங்கு ஏன் இவ்வளவு வன்முறைகள் நிகழ்கிறது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நல்ல நேரம் ஆரம்பித்துவிட்டது. மதவெறி நுழைந்திருந்தது,ஆனால்  இப்பொழுது அடுத்த தலை முறை மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள். ஆகையால், பிடிமானமாக இருங்கள். மீண்டும் காஷ்மீருக்கே செல்லுங்கள்.  இன்னும் அங்கு சில மக்கள் இருக்கிறார்கள். பண்டிதர்களை இழந்து விட்டோம்  என்று இப்பொழுது மக்கள் உணர்ந்து விட்டார்கள். இதற்க்கு முன்னர் ஒரு நல்ல  சூழ்நிலை நிலவியது, அது இப்பொழுது இல்லை.

அதனால் அவர்கள் வரவேற்கிறார்கள், நீங்கள் மீண்டும் காஷ்மீருக்கு திரும்ப சென்று நிலம் வாங்கி வசித்து வாருங்கள் அல்லது குறைந்த பட்சம் அங்கு சென்று வாருங்கள். காஷ்மீரிலிருந்து வந்தவர்கள் அங்கு திரும்பிப் போக விருப்பப்படவில்லை, அதுதான் பிரச்சனை. இப்பொழுது அங்கு சூழ்நிலை மாறி இருப்பதால் நீங்கள் அங்கு சென்று உங்கள் உரிமைகளை மீட்டுகொள்ளுங்கள்.

கே: குருஜி, என்னுடைய வேலையிலும் மற்றும் வாழும் கலையிலும் 100  சதவிகிதம் இருக்க வேண்டும். நான் ஒன்றில் 100  சதவிகிதம் இருந்தால் மற்றொன்றுக்கு விட்டு கொடுக்க வேண்டி இருக்கிறது. நான் என்ன செய்வது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: தேவையில்லை, நம்முடைய  வாழும் கலையில் உயர் பொறுப்பில் இருப்பவர்களும், மேல் மட்ட குழுவில் உள்ளவர்களும் ,மற்ற சொந்த வேலையையும் செய்கிறார்கள்.. அவர்களும் வணிகம் மற்றும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள் இருப்பினும் சுறுசுறுபாயிருக்கிறார்கள்.அவர்களுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆசிரியர்கள் வலுவூட்டும் பயிற்சி நடத்தியபோது நாடு முழுவதும் இருந்து ஆசிரியர்கள் வந்திருந்தார்கள். ஒரு TRM  இல் மட்டும் 315  தொழிலதிபர்கள் இருந்தார்கள், அவர்கள் பயிற்சிகளையும் நடத்தி வருகிறார்கள்.குருஜி இதற்குமுன்னர் எங்களுடைய வணிகம் மந்தமாக இருந்தது மற்றும் நாங்கள் எதுவும் செய்யவில்லை. இப்பொழுது நாங்கள் வாழும் கலை பயிற்சி நடத்தி வருகிறோம்,நாங்கள்  வணிகத்தில் அதிக கவனம் செலுத்தாத போதும் எங்களுடைய வணிகம் நன்றாக நடக்கிறது" என்று அவர்கள் கூறினார்கள். அவர்களில் ஒரு சிலருக்கு  நான்கு முதல் ஐந்து மடங்கு வணிகம் அதிகமாக நடக்கிறது. அவர்கள் எல்லோரும் தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

அதனால் அவர்கள் மாறுபட்டவர்கள் என்று நினைக்க வேண்டாம். மாறுதலாகவும் நினைக்க வேண்டாம். இந்த நாட்டிற்காகவும் உலகதிற்காகவும் மிகப்பெரிய பொறுப்பை எடுக்க நீங்கள் தயாரானலொழிய இதை பார்க்க முடியாது. உங்களது தேவை மிகவும் சிறியது அல்லது எதுவும் இல்லை என்றால் நீங்கள் முழு நேரம் ஈடுபடலாம். நாங்கள் உங்களை உலகம் முழுவதும் அனுப்புகிறோம். ஆனால் உங்களுக்கு என்று சில பொறுப்புகள் அல்லது தேவைகள் இருக்கும் பொழுது நீங்கள் இரண்டையும் செய்ய வேண்டும். 
 
கே:
 குருஜி நான் இன்று சில காரணங்களால் வருத்தமாக இருக்கிறேன், ஆனால் உங்களை பார்த்த பிறகும் இணைய தளத்தில் கவனித்த பொழுதும் நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன். மின்வலை தளத்தை வார்பதாக உள்ளது உங்களது மந்திரம். என்னுடைய எண்ணங்களை அறிந்து  கொண்டீர்களா?  
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நான் அறிந்து கொள்ள முடியும். உன்னுடைய எண்ணங்களின் மேல் பிடிமானம் கொள்ள வேண்டாம். எண்ணங்கள் வரும் போகும். அதனை சொந்தமாக்கி கொள்ள வேண்டாம். நான் உங்களை அறிந்து கொள்ள வேண்டியதில்லை ஏனெனில் நீங்கள் எல்லோரும் எனக்கு சொந்தமானவர்கள். நீங்கள் என்னில் இருந்து வேறானவர்களாக இருந்தால் மட்டுமே, நான் உங்களை அறிய வேண்டி இருக்கும். நீங்கள் என்னுள் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள்.

கே:
 குருஜி, நீங்கள் எல்லோரிடமும் அன்பாக இருக்க சொன்னீர்கள். எல்லோரும் என் மீது அன்பு செலுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இப்பொழுது ஒரு வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. நான் என்ன செய்வது?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நல்லது, அந்த சவாலை உன்னிடம் விட்டு விடுகிறேன். நீ என்ன செய்ய போகிறாய் என்பதையும், உன்னை யார் தேர்ந்தெடுக்க போகிறார்கள் என்பதையும் நான் பார்க்க போகிறேன். நீ தேர்ந்தெடுக்க போகிறாயா அல்லது உன்னை தேர்ந்தெடுக்க போகிறார்களோ  என்று பார்ப்போம். ஆனால் மிகத் தாமதப்படுத்த வேண்டாம்.
ஒரு 62  வயதுள்ள மனிதர் என்னிடம் வந்து சொன்னார்,"குருஜி, நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன், அதற்கு ஒரு பொருத்தமானவரை   இந்த 60  வருடங்களாக தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. நான் சொன்னேன் "இன்னும் ஒரு 15 வருடங்கள் தேடுங்கள், உங்களுக்கு பொருத்தமானவரை நீங்கள் சொர்க்கத்திலோ அல்லது நரகத்திலோ  சந்திக்க வாய்ப்பு கிடைக்கலாம். இந்த கிரகத்தில் 62  வருடங்களாக ஒரு நல்ல பொருத்தமானவரை  கண்டுபிடிக்க முடிய வில்லையெனில், இன்னும் சில வருடங்களில் கண்டுபிடிப்பதற்கு என்ன உத்திரவாதம்.?
கே: குருஜி, நான் ஆஷ்ரமத்தில் இருக்கும்பொழுது மிகுந்த உற்சாகத்துடனும் ஆற்றலுடனும் இருக்கிறேன். ஆனால், நான் வீட்டிற்க்கு செல்லும்பொழுது அவை  குறைந்து விடுகிறது. வீட்டில் இருக்கும்போது அதில் பாதியளவாவது இருப்பதற்கு எனக்கு உதவி செய்யுங்கள். 
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: வீட்டில் உள்ளோர் எல்லோரும் பயிற்சி செய்துள்ளனரா? இல்லையென்றால் செய்ய சொல்லுங்கள். ஞான அறிவுரைகளை கேளுங்கள். பாடுங்கள். என்ன வந்தாலும், அதை சமாளிப்பேன், என்னுடைய உற்சாகத்தை ஒரு பொழுதும் இழக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருங்கள்.
ஏன் அது குறைகிறது என்று உங்களுக்கு தெரியுமா? ஏனென்றால், நீங்கள் வாதம் செய்ய ஆரம்பித்து விடுகிறீர்கள் அல்லது அவர்களும் உங்களை போல இருக்க ஆசைப் படுகிறீர்கள் மற்றும் நீங்கள் இங்கே பெற்ற அனுபவத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அது போல நடக்க முடியாது."எல்லா மனிதர்களையும் மற்றும் சூழ்நிலைகளையும் அப்படியே ஏற்று கொள்ளவேண்டும்" என்ற வாழும் கலையின் முதல் கொள்கையை  செயல் படுத்துங்கள்."இந்த சூழ்நிலையின் அனுபவத்தின் மூலமாக எனக்கு  வேடிக்கையும் சந்தோசமும் கிடைக்கும்" என்று எல்லா சூழ்நிலைகளிலும் எண்ண வேண்டாம். வேடிக்கை அல்லது சந்தோசம் வேண்டி பின் சென்றால் துயரமே அனுபவிப்பீர்கள். வேடிக்கையும் சந்தோசமுமே வாழ்க்கையின் குறிக்கோள்கள் அல்ல. எல்லா மனிதர்களையும் மற்றும் அப்படியே ஏற்று கொண்டு ஞானத்தில் ஆழமாக செல்லுங்கள்.அது நிச்சய மாற்றத்தை ஏற்படுத்தும்..
கே: அன்பான குருஜி, இன்றைய பொறியியல் கல்வி நிறுவனங்களில், எங்களுடைய பட்டபடிப்பை முடிப்பதற்கு கிட்டத்தட்ட 54 பாடங்களை படிக்க வேண்டி உள்ளது. பண்டைய காலத்தில் நாலந்தா  போன்ற பல்கலை கழகங்களில் இவ்வளவு பாடங்கள் இருந்தனவா? இதற்காக எதாவது செய்யுங்கள்.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆமாம், மக்கள் மிகவும் கெட்டிக்காரர்களாக இருந்தார்கள். மாணவர்களுக்கு எந்த பொழுதுபோக்கிற்கும் நேரம் கிடையாது. "நீங்கள் மாணவராக இருந்தால் சந்தோசமோ ஆனந்தமோ கிடையாது, நீங்கள் சந்தோசமாக இருந்தால் நீங்கள் மாணவனாக இருக்க முடியாது" என்று ஒரு பழமொழி உண்டு. நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். அந்த காலத்தில் கடினமாக உழைத்தார்கள். இப்பொழுது கணினி மற்றும் கணிப்பான்கள் உள்ளன. முந்தைய தலைமுறையில் கணினி மற்றும் கணிப்பான்கள் இல்லை. 
நாம் எல்லா பெருக்கல் வாய்ப்பாடுகளை மனப்பாடம் செய்ய வேண்டி இருந்தது. நாம் நிறைய மனப்பாடம் செய்ய வேண்டி  இருந்தது. உண்மையில், அந்த காலத்தில் மூளையை நிறைய உபயோக படுத்தினார்கள், இன்று நாம் அந்தளவுக்கு உபயோக படுத்துவதில்லை. உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா, கைப்பேசி (செல்போன்) இல்லாத காலத்தில், நாம் நிறைய தொலைபேசி எண்களை நினைவில் கொள்ள வேண்டி இருந்தது? தொலைபேசி இருந்த போது, நாம் மக்களின் அனைத்து தொலை பேசி எண்களையும் நினைவில் கொள்ள வேண்டி இருந்தது. இன்று, கைப்பேசியின் உபயோகத்தால்  யாரும் எண்களை நினைவில் கொள்வதில்லை. ஒரு தடவை பதிவு செய்துவிட்டால் போதும். யாராவது பெயரை அழுத்தினால் போதும் எண்கள் வந்துவிடும். பல நேரங்களில், உங்களுடைய எண்ணையே மறந்து விடுகிறீர்கள். ஆகையால் நாம் குறைவாக  நினைவாற்றலையும் அதிகமாக தொழில்நுட்பத்தையும் உபயோகபடுத்துகிறோம். ஞாபகப்படுத்தும் திறனை இழந்து விடுவோமோ என நினைத்தால் சில நேரங்களில் பயமாக உள்ளது. 
வாரத்தில் 2  திரைப்படம் பார்க்கும் ஏதேனும் ஒரு இளைஞனை, மூன்று மாதங்கள்  கழித்து, ஒரு திரை படத்தின் கதையை கேட்டால் கண்ணை சிமிட்டுவார்கள்.ஒரு திரைப்படத்தின் கதையையும் இன்னொரு திரைபடத்தின் கதையையும் ஒன்றாக கலக்கி விடுவார்கள். ஒரு முழுக்கதையும் அவர்களால் சொல்ல இயலாது.இதனால் தான் "கவனக் குறைபாடு நோய் அறிகுறி" பொதுவானதாக ஆகிவிட்டது.
கே: குருஜி, பெற்றோர் மற்றும் குழந்தைகளிடையேயான தலைமுறை இடை வெளியிலிருந்து வெளிவருவது எப்படி? 
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அதனால்தான் அவர்களை எஸ் + மற்றும் ஆர்ட் எக்செல் பயிற்சிகளில் சேர்த்து விடுங்கள், எவ்வளவு வேகமாக மாற்றத்தை கொடுக்கிறதென்று பிறகு பாருங்கள்.
 
கே:
 தேவி மற்றும் தேவதா மக்கள் மூலமாக வெளிப்படுவதாக உத்தர்கந்த்தில் ஒரு பாரம்பரியம் உள்ளது. இது உண்மையா?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆம்.அது உண்மையே. ஆனால்  பல நேரங்களில்,அவர்களின்  மனம் அதில் சிக்குண்டு விடுகிறது. அதனால்தான்  அந்த நபர் சாதக் ஆக, தனக்குள் மிக ஆழமாக சென்றிருந்தால் ஒழிய, அவர் தேவதா வின் குரலுக்கு ஒரு ஊடகமாக இருக்கிறார் என்று கூற முடியாது.  தேவதா வின் குரல் இருக்கும் மற்றும் அந்த நபருடைய குரலும் சில பகுதி  இருக்கும்; அது இரண்டின் கலவையாக இருக்கும். ஆகையால் பெரும்பகுதி அவர் சொல்வது சரியாக இருக்கும், ஒரு சில விசயங்கள் உண்மையற்று இருக்கலாம். இது சூரியனை ஒரு தூசி படிந்த கண்ணாடியின் வழியாக பார்ப்பது போன்றதாகும், அதனால் அதன் வழியாக வரும் கதிர்கள் தூய்மையாக இருக்காது. அவைகளில்  சிறிதளவு தூசியின் தாக்கம் இருக்கும். அல்லது,நீல நிறக்கண்ணாடி வழியாக பார்த்தால் அதன் வழியாக வரும் ஒளியும் நீலநிறமாக தெரியுமே அது போன்றது. அதனால் தான்,தேவி அல்லது தேவதாவின் ஊடகமாக இருக்கும் நபர், தூய்மையானவராகவும்,எதார்த்தமானவராகவும் இல்லாத பட்சத்தில்அவர் சொல்வது முழுவதும் உண்மையாக இருக்காது.
 
கே:
எது தவறு, எது சரி, முடிவு செய்வது எப்படி? ஒரு சுலபமான வித்தை  சொல்லுங்கள்.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அதற்கு ஒரு சுலபமான வரையறை உள்ளது. உனக்கு மற்றவர்கள் எதை செய்யக்கூடாது என நினைக்கிறாயோ அது தீயது. உனக்கு மற்றவர்கள் எதைச் செய்யவேண்டும் என நினைக்கிறாயோ அது நல்லது.எது குறுகிய கால சந்தோச த்தையும் நீண்டகால துயரத்தையும் கொடுக்கிறதோ அது தீயது. எது நீண்டகால சந்தோசத்தையும் குறுகியகால சிரமத்தையும்  கொடுக்கிறதோ அது நல்லது.
 
கே:சிறுவயதிலிருந்து
 பெற்றோர் மீது பயம், பிறகு ஆசிரியர் மீது பயம், இப்பொழுது கடவுள் மீது பயம். நாம் ஏன் வாழ்க்கையில் பயத்திற்கு இடம் கொடுக்கிறோம்? பயம் அத்தியாவசியமானதா?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: எப்பொழுதும் தேவையில்லை. ஏன் பயம்? அன்பை தலைகீழாக நிறுத்தினால்,அது பயமாக மாறுகிறது,நேராக நிறுத்தினால் அன்பு. அன்பின் எதிர்மறை  பயம். எங்கு அன்பு இல்லையோ அங்கு பயம் இல்லை.துளசிதாஸ் சொல்கிறார்,பயமும் அன்பும் ஒரே உணர்ச்சியின் இரண்டு வெவ்வேறு பரிமாணங்கள். அன்பு இருந்தால் பயம் இல்லை.பயம் இருந்தால் அன்பு இல்லை. 
கே:  பெரும்பாலும் நான் தெரிந்தே தவறு செய்கிறேன். சரியான நேரத்தில் விழிப்புணர்வோடு இருப்பதற்கு ஏதுனும் வழி இருந்தால் கூறுங்கள், தெரிந்தே மீண்டும் தவறு செய்யாமல் இருப்பேன்.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: கடந்த காலத்தில் செய்த தவறை மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும் என்கிற எண்ணமே போதுமானது. இந்த உணர்வே சரியான பாதைக்கு அழைத்து செல்லும். சரி, முன்னோக்கி செல்லுங்கள், எவ்வளவு தவறு செய்ய வேண்டுமோ அவ்வளவு தவறு செய்யுங்கள். கண்டிப்பாக நீங்கள் களைப்படைவீர்கள். 
நான் காத்திருக்கிறேன். நீங்கள் களைப்படைந்து கீழே விழும்வரை தவறுகளை செய்யுங்கள்.இதற்க்கு மேல் வேண்டாம், எல்லாம் செய்தாயிற்று. இதை உங்கள் வாழ்க்கை முடியும் முன் உணர்ந்து விடுங்கள், வாழ்க்கையின் கடைசிவரை நீட்டிக்க வேண்டாம். நீங்கள் இந்த பாதையில் இருக்கும் போது அது போல் இருக்க முடியாது. நீங்கள் விரைவில் விழிப்புணர்வு பெற்று இருப்பீர்கள். பயம் உங்களை தொட முடியாது.
கே:  ராகு  காலத்தில் புதிய வேலை எதையும் ஆரம்பிக்க கூடாது என்று ஒரு பாரம்பரியம் இருந்தது. இதற்க்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இது சரியானதா? இதற்க்கு பின்னால் அறிவு பூர்வமான ஆதாரம் உள்ளதா?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ராகு காலத்தில் பிரார்தனை செய்வது சரியானதாக இருக்கும். ஆன்மீக செயல்பாட்டிற்கு ஏற்ற காலம். ஆகையால், ராகு காலத்தில் புதியதாக உருவாக்கும் திட்டங்களை ஆரம்பிப்பது அவ்வளவு உகந்ததல்ல ஏனெனில் அந்த நேரத்தில் நமது உடம்பில் நாடி மாற்றம் நிகழும். இருந்த போதிலும், இதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க கூடாது. கண்டிப்பாக இந்த நேரத்தில் தான் ஆரம்பிக்க வேண்டுமெனில் ஓம் நாம சிவாய என்று உச்சரித்துவிட்டு முன்னோக்கி செல்லுங்கள்.