ஒவ்வொரு முறை நீங்கள் குழப்பம் அடையும் போது, ஒரு படி முன்னேருகிறீர்கள்


02
2012
Jan


கேள்வி:  குருஜி, உணர்வுகள் நம் வயதோடு சம்பந்தப்பட்டவையா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆம். அவை நம் உடலின் ஹார்மோன்களோடு சம்பந்தப்பட்டவை.  நேரம், வயது மற்றும் பல காரணிகளோடும் சம்பந்தப்பட்டவை.  

கேள்வி: குருஜி, எப்போது என் நகரத்திற்கு வருவீர்கள்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்:  ஓ!  நான் எப்போது வருவேன் அன்று என்னைக் கேட்காதீர்கள்.  என்னிடம் நேரத்தைத் தவிர மற்ற எல்லாம் நிறைய இருக்கின்றன.  நான் நிறைய இடங்களுக்குச் செல்ல வேண்டும். ஆனால் நேரம் மிகக்குறைவாக இருக்கிறது.  நான் ஆப்பிரிக்கா போன்ற பல இடங்களுக்கு நீண்ட காலமாகச் செல்லவில்லை. இங்கிலாந்து நாட்டிற்கு 5  ஆண்டுகளாகச் செல்ல  வில்லை.  காசா நாட்டிற்கு செல்லவேண்டும். போர்ச்சுகல்உக்ரைன் போன்ற நாடுகளுக்கு நான் சென்றதே இல்லை. பல இடங்களிலிருந்து எனக்கு அழைப்புகள் வந்துள்ளன. தென்  அமெரிக்காவில் இருந்து என்னை தினமும் அழைக்கிறார்கள். என்ன செய்வது?

கேள்வி:  (பார்வையாளர் ஒருவரின் கேள்வி தெளிவாகக் கேட்கவில்லை)

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: சரி.சில சமயங்களில் பெண்டுலமாவது  நின்று விடும்.அப்படி நிற்பது நல்லதே.  அதனால்தான் நீங்கள் இங்கே இருக்கிறீர்கள் இல்லையா? மனம் என்பது விருப்பு, வெறுப்பு  என்னும் இவை இரண்டிற்கும் இடையில் ஊஞ்சலாடி கொண்டிருக்கிறது. சில சமயங்களில் மனதிற்கு  ஓய்வு தேவைப்படுகிறது. இவைகளை யெல்லாம் செய்வது மனதிற்கு அமைதியைத்  தருகிறது.அறிவின் மூலமாக நாம் மெதுவாக வெறுப்பில் இருந்து விடுபடலாம். பிறகு  விருப்புக்களிலிருந்து விடுபடலாம்.  

கேள்வி: (பார்வையாளரின் கேள்வி தெளிவாக கேட்கவில்லை)

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இல்லை. உணர்வுகள் ஏற்கெனவே நம் உடலில் இருக்கின்றன. ஒவ்வொரு  மகிழ்ச்சி கரமான  நினைவிற்கும் ஒரு உணர்வு உண்டு. மகிழ்ச்சியற்ற நினைவுகளும் ஒரு உணர்வை உண்டாக்குகின்றன. ஆகவே நாம்  உணர்வுகளை உற்று நோக்கும்போது  மகிழ்ச்சி அற்றவை  மறைந்து விடுகின்றன. மகிழ்ச்சியான உணர்வுகள் மேலும் அதிகரிக்கின்றன. அது தான் நடைபெறுகின்றது.

கேள்வி: குருஜி, என்னுடைய எதிர்மறை உணர்வுகளை எப்படிக் கையாளுவது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: சுதர்சன கிரியாதான் நம் எதிர்மறை உணர்வுகளைக் கையாளு வதற்கான சிறந்த வழி.  உஜ்ஜை மூச்சு, பிராணாயாமம், தியானம் எல்லாமே இந்த வேலையைச் செய்கின்றன.  இல்லையா?  

கேள்வி: குருஜி, நான் எப்போதும் சோம்பேறித்தனமாக உணர்வது ஏன்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் எப்போதும் சோம்பேறித்தனமாக இருக்க முடியாது. சிறிதளவு ஈர்ப்பு அல்லது கவர்ச்சி இருந்தாலும் சோம்பேறித்தனம் மறைந்து விடுகிறது.ஒரு கனவு அல்லது லட்சியம் இருந்தாலும் அது மறைந்துவிடுகிறது.அப்படி இல்லையென்றால் உடலில் வைட்டமின் 'டிஅல்லது சர்க்கரை அளவு குறைந்தால்  சோம்பேறித்தனம் உண்டாகும். ஆகவே சோம்பேறித் தனத்திற்கு பல காரணங்கள் உள்ளன.நாம் உண்ணும் உணவு சோம்பேறித் தனத்திற்கு முக்கிய காரணமாகும்.

கேள்வி: குருஜி, ஆன்மாக்கள் எங்கிருந்து வருகின்றன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இந்த கிரகங்கள் எங்கிருந்து வருகின்றன? இந்த மலர்கள், விலங்குகள் எல்லாம் எங்கிருந்து வருகின்றன? நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? இந்த பிரபஞ்சத்தில் பல வகையான மக்கள், பல வகையான மலர்கள், பல வகையான பழங்கள், விலங்குகள், கொசுக்கள். கிருமிகள் இருப்பது எப்படி என்று பெரும் வியப்பாக இருக்கிறது. இது மிகவும் விந்தையான உலகம் இல்லையா?

கேள்வி: குருஜி, நான் நிறைய தன்னம்பிக்கையைப் பெறுவது எப்படி?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள்.  யோகாசனம் , பிராணாயாமம், தியானம் என்னும் எந்த மூன்றையும் தொடர்ந்து செய்து வாருங்கள்; தன்னம்பிக்கை வளரும்.

கேள்வி: அன்பான குருஜி, இறைவன் உலகத்தைப் படைத்தான்.இறைவனைப் படைத்தது யார்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நான் இந்தக் கேள்விக்கு பதில் சொல்கிறேன்.ஆனால் முதலில் எனக்கு டென்னிஸ் பந்தின் ஆரம்பம் எது என்று நீங்கள்  சொல்ல வேண்டும்? நாம் அனைத்தும் ஏதோ ஓரிடத்தில் துவங்கி ஓரிடத்தில் முடியும் என்ற நேரியல் சிந்தனையைக் கொண்டுள்ளோம். ஏதோ ஒன்று துவங்கி ஏதோ ஒன்று முடிகிறது.

இந்தப்படைப்பும் உருவாக்கப்பட்டது. அனைத்தும் ஒரு நாள் முடியப்போகிறது என்பது நேரியல் சிந்தனை. ஆனால் கிழக்குப் பிரதேசங்களில் கோள சிந்தனை கொண்டுள்ளனர். உருவாக்கப்படாமல் அழிவுமில்லாமல். முடிவுமில்லாமல் மூன்று உள்ளன என்று அவர்கள் சொல்கிறார்கள். ஒன்று தெய்வீக ஆற்றல்.அதை நாம் கடவுள் என்று அழைக்கலாம்.அது உருவாக்கப் படுவதில்லை.அது அகண்ட வெளியைப் போன்று முடிவது மில்லை. அகண்ட வெளியின் ஆரம்பம் எது?அது எங்கே முடிகிறது என்று உங்களால் சொல்ல முடியுமா

அதே போல் இந்த பிரபஞ்சம்.  பிரபஞ்சம் அனாதியானது  அதற்கு ஆரம்பம் இல்லை.அது அனந்தமானது  அதற்கு முடிவும் இல்லை

அதே போல் ஆன்மாக்கள். உயிர் முதலும் முடிவும் அற்றது.அது முடிவது போல் தோன்றும். ஆனால் மறுபடியும் துவங்கும்.அது கடல் அலைகளைப் போன்றது. ஒரு அலை வந்து அது முடிவதுபோல் தோன்றும்.ஆனால் அது மீண்டும் திரும்பி வருகிறது.அதே தண்ணீர் சென்று மீண்டும் திரும்பி வருகிறது. ஆகவே ஆன்மாக்களுக்கும் முதலும் முடிவும் இல்லை.  கடவுளுக்கும் முதலும் முடிவும் இல்லை. பிரபஞ்சத்திற்கும் முதலும் முடிவும் இல்லை.  உண்மையில் இந்த மூன்றும் ஒன்றே. 

அதனால் நீங்கள் கடவுளைப் பார்க்க வேண்டுமென்றால் இந்த உலகத்தைப் பார்ப்பதை நிறுத்த வேண்டும்.எப்படித் தெரியுமா? ஒரு குவாண்டம் விஞ்ஞானியைப் போல.ஒரு குவாண்டம் விஞ்ஞானி இந்தப் பூவைப் பார்த்தால் இலை,பூ,தண்டு என்ற வேறுபாடுகள் இல்லை,எல்லாம் ஒரே அணுவால் ஆனவை என்று சொல்வார். ஒரு இடத்திலுள்ள ஒரு புள்ளியில் இருப்பதுதான் அந்தப் பூ முழுவதும் இருக்கிறது. அதே போல் தான்,நம் எச்சிலின் ஒரு துளி அல்லது நம் தசையின் ஒரு சிறு பகுதியைக் கொண்டு நம் உடலின் டி.என்.ஏ (DNA) கண்டு பிடித்துவிடலாம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இது தான் குவாண்டம் அறிவியல். வேறு விதமாகப் பார்த்தால்  அவை வேறுவேறு. ஆகவே நீங்கள் கடவுளைப் பார்க்க வேண்டுமென்றால் இந்த முழு பிரபஞ்சத்தையும் ஒரே சக்தி வடிவமாகப் பார்க்க வேண்டும். அவ்வளவு தான்..  

கேள்வி: ஒருவரை அவரை பிடிக்காவிட்டாலும் நேசிப்பது எப்படி?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: எனக்கு இது பற்றிய அனுபவம் இல்லை.இருந்தாலும் இதற்கு ஒரு பதில் கூற முயற்சிக்கிறேன். அவர்களை நேசிக்க முயலாதிர்கள்.முதலில் அவர்களை வெறுப்பதை நிறுத்துங்கள். அவர்களை ஏன் வெறுக்கிறீர்கள்?சில குணங்களால்.நீங்கள் இப்போது ஊகித்துப் பாருங்கள் .ஏன் அவர்களுக்கு அப்படிப்பட்ட குணாதிசயங்கள் உள்ளன.? படிப்பின்மையால் தான். அவர்களும் உங்களைப் போல் இந்த உலகிற்கு ஒரு குழந்தை போல் சந்தோஷமாக வந்தார்கள். ஆனால் இந்த எதிர்மறை தன்மைகள் அவர்களுக்கு தரமான பூர்வீகம்,படிப்பின்மை,பாதுகாப்பி ன்மையால் தான்.(பயத்தினால்தான்) ஒருவர் அருவருக்க தக்கவராகவும்திமிர் பிடித்தவராகவும் ஏன் இருக்கிறார் என்றால் அவர் வாழ்வில் அன்பை உணர்ந்ததில்லை. ஒருவர் பேராசை பிடித்தவராக ஆக இருக்கிறார் என்றால் அதற்கு அவர் பாதுகாப்பின்மையும் பயமும் தான்.ஏன் அங்கு பயம் இருக்கிறது? அன்பு இல்லாததால். இந்த நெகுதிகளை (தன்மைகள்) ஒருவரிடம் பார்த்தால் அவர்களுக்கு கல்வியும் ஆன்மீக அறிவும் அன்பும் வாழ்க்கையில் இல்லாததால் மனம் மிக குறுகியதாக உள்ளது.அதனால் அவர்களை முதலில் வெறுப்பதை நிறுத்துங்கள்.சரியா?

இது தான் உண்மை.ஒருவர் ஏன்,கொடூரமாக வன்முறையுடன் ஒருவாறாக இருக்கிறார்? ஏனென்றால் அவர் மன அழுத்தத்துடனும் குறிகிய மனதுடனும் இருப்பதால் தான்.மனது பரந்த, விரிந்த நோக்கங்களுடன்  எண்ணமுடியாது ஏன்?படிப்பறிவு ஆன்மீக அறிவுக்குறைவால்.

இந்த வாய்ப்பு அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை.அன்பு சாத்விககுனம், மகிழ்ச்சியை தரக்கூடிய கல்வி அவர்களுக்கு கிடைக்கவில்லை.அதனால் அவர்கள் மனதும், இதயமும் மூடியே உள்ளன.

இதை தெரிந்து கொண்டு அவர்களை வெறுப்பதை நிறுத்துங்கள்.அடுத்தபடியாக உங்களுக்கு "பாவம்" என்று இரக்கம் வரும்.அவர்களுக்கு வாழ்க்கையையும் மற்றவர்களையும் பார்க்க தொலைநோக்கு இல்லை.எப்போதும் தவறான நினைப்போடு மற்றவர்களை கெட்டவர்களாக நினைத்து அவ்வாறே நடந்து ,தங்களையும் காயப்படுத்தி கொள்கிறார்கள். அதனால் இக் காரணங்களினால் தான் அவர்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று புரிந்து கொண்டு அவர்களிடம். இரக்கம் காட்டுங்கள்.அவர்களை அதனால் நேசிக்க வேண்டாம். வெறுப்பதை விடுங்கள்.மூன்றாவது வழி நீங்களாகவே எல்லோரையும் நேசிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.
நீங்கள் வெறுப்பவரை ஒரு போதும் நேசிக்க உங்களை கட்டாயப்படுதிக்க வேண்டியதில்லை 

கேள்வி: பயமும்,கவலையும் தொடர்ந்து மாறிமாறி  வரும் ஒரு வட்டத்தில் நீங்கள் செல்லும் போது அதை கையாள சிறந்த வழி என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உங்களுடைய தனி அனுபவம் தான். இது போல் பல முறை நடந்துள்ளது. இன்னொரு முறைதானே என்று எண்ணினால் அது உங்களை மரத்துப் போகச் செய்யும். திரும்பத் திரும்ப நடக்கும்போது நீங்கள் அதை எதிர்க்க எண்ணமாட்டீர்கள்.

நம்முள் உள்ள பேராசைபிடிப்புவெறித்தன்மைஇவையே காரணம். நீங்கள் மகிழ்ச்சியாக,
போதும் என்ற மனத்தோடுமையத்தில் குறியாக இருந்தால் எல்லாம் உங்களுக்கு தானாகவே கிடைக்கும். நீங்கள் எதையும் அடைய முயற்சிக்க வேண்டியதில்லை.இதனால் தான் உலகம் மாயை என்று அழைக்கப்படுகிறது. மாயை என்றால் என்ன தெரியுமா? நீங்கள் முயன்று அடைய நினைத்தால் உங்களை விட்டு ஓடி விடும்.நீங்கள் நிலையாக உங்களுக்குள் நிறைவாக இருந்தால் எல்லாம் உங்களை தேடி வரும். சந்தோஷத்தை தேடினால் கவலை வரும். ஆன்மீக ஞானத்தை பின் பற்றினால் களிப்பு வரும் 

கேள்வி: :கூட்டு குழுவாக வேலை செய்வதற்கான  அடிப்படைகள்  எவை ?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: மனிதர்களை அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக் கொண்டு, உங்களுடைய கொள்கைகள் /கருத்துகள் ஆகியவற்றில் வேண்டுமானால் சிறிது தளர்த்திக் கொள்ள வேண்டும்.மாற்று கருத்துக்களுக்கு சில சமயம் மதிப்பு அளிக்க வேண்டும். சில முறை புரிந்து கொண்டும், திறந்த மனதுடனும், தாட்சன்யதுடனும், இல்லாவிட்டால் ஒரு குழுவில் வேலை செய்ய முடியாது. 

கேள்வி: உங்கள் செயலின் விளைவுகளுக்கு நீங்கள் பொறுப்பில்லையானால் மக்களை எவ்வாறு விட முடியும்? இது ஒரு புதிர்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆம்.உங்கள் செயலின் விளைவுகளுக்கு நீங்கள் பொறுப்பில்லையானால் அது தாறு மாறான உணர்வை தூண்டும். விவசாயி என்ன செய்கிறான்நிலத்தை உழுது விதை விதைக்கிறான்.அவன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதையையும் எடுத்து முளைத்துவிட்டதா என்று பார்ப்பதில்லை.அப்படி பார்த்தால்,அது முளைக்காது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் உங்கள் செயலின் பலா பலன்களின் மீது அக்கறை எழாது.  அதறகு ஈடுபாடு இல்லை  என்று அர்த்தமில்லை. 

விவசாயி விதையை தூவிவிட்டு வீட்டிற்கு சென்று தூங்கிவிடுகிறான் விதைகள் காணாமல் 
போய்விடும் என்றோ, முளைக்காதென்ரோ கவலைப்படுவதில்லை. தோண்டி முளைத்திருக்கிறதா என்றும் பார்ப்பதில்லை. இட்ட  எல்லா விதைகளும் முளைக்கவேண்டும் என்று எதிர்பார்பதில்லை. முளைக்காதவைகளுக்கு வருத்த படுவதில்லை.முளைத்தவைகளுக்கு சந்தோஷபடுகிறான் .   

கேள்வி:  குருஜி! தர்மம் - கர்மம் இவற்றின் வேறுபாடு என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: தர்மம் என்பது உங்கள் இயல்பான குணம். கர்மம் என்பது அதன் தொடர்பான கடமை. உதாரணமாக உணவு சமைப்பது, கற்றுத்தருவது, பிறர்க்கு உதவுவது, தொழில் செய்வது என்பன உங்கள் இயல்பான குணமானால் அதை தொடர்ந்து நீங்கள் ஆற்றும் செயல்கள் கர்மமாகும்.

கேள்வி: குருஜி! நான் தங்களைப்பற்றி நினைக்கும்போது தங்களைப்பற்றி கனவு காண்கிறேன். நான் தங்களைப்பற்றி கனவு காணும்போது தாங்கள் என்னை பற்றி நினைக்கிறீர்களா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஒ ! இருக்கலாம்,. நாளை அல்லது மறுநாள் நாம் ஐந்து விதமான கனவுகளைப்பற்றி பேசலாம்.

கேள்வி: குருஜி! நான் கண்களை மூடிக்கொள்ளும் பொழுது  அவ்வப்போது தோற்றங்கள் வருகின்றனவே?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: வரட்டும். ஒன்றும் பிரச்சனை இல்லை.

கேள்வி: வாழும்கலை முதல் நிலை பயிற்சி ஒருவருக்கு மிகவும்  நல்லது என்று தெரிந்தாலும் அவர்களை செய்யும்படி எப்படி அழைப்பது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆம் ! அதுதான் எனக்கும் தெரியவில்லை. ஒருவரை மன மேற்று, இப் பயிற்சியை செய்ய பல வழிகளிருந்தாலும் மிக சிறந்தது அதிகம் விவரிக்காமல் இருப்பது தான்! நீங்கள் இரண்டே வரிகளில் கூறலாம், " இது சிறந்தது  நான் செய்தேன், நீங்களும் செய்யுங்கள் விபரம் நான் கூறமாட்டேன்! " ஒருவருக்கு மூச்சின் முக்கியததுவத்தை எடுத்து சொல்வதை விட அதைபற்றி ஆர்வத்தை ஏற்படுத்துவது நல்ல பயன் தரும். நீங்கள் ஆர்வத்தை தூண்டுங்கள். பயிற்சியைப் பற்றிய விபரங்கள்,உங்கள் அனுபவங்கள் எதையும் பேசாதீர்கள். பயிற்சியைப் பற்றிய வியப்பினை மட்டும் தூண்டுங்கள்

கேள்வி: உடல் வலி மனதுடன் சம்பந்தப்பட்டவைகளா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்:  ஆம். நிச்சயமாக உடல் வலி மனமும் தொடர்புடையன. நாம் உறங்கும் போதும்,மயக்கமருந்து தரப்படும்போதும் நாம் உடல் வலியை உணர்வது இல்லை.வலி கூறு  வைத்தியர்கள்,மனம்,மூச்சு,த்யானம் ஆகியவை உடல் நோவு உணர்வின் மேலாண்மையில்  நெருங்கிய தொடர்பு உடையவை என்று கூறுகிறார்கள்.

கேள்வி: நமது மனம் ஞான அறிவை அடைய மறுக்கும்போது ஏற்படும் கவலையையும், நம்பிக்கையின்மையையும் எவ்வாறு கடப்பது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இக்கவலை ஏற்படும்போதே நீங்கள் தடையை கடந்து விட்டீர்கள். காலப் போக்கில் வயதும், அனுபவமும் கூடும்போது த்யானத்தின் மூலம் உங்கள் தேடுதல் நிறைவேறும். பாருங்கள் ! ஐந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த  மன தடை களுடன்  இப்போது உள்ள நிலையை ஒப்பிட்டுபாருங்கள். எவ்வளவு வித்தியாசம் !

கேள்வி: த்யானத்தின் நோக்கம் அதை செய்யும் போது மனம் வேறு எதையும் எண்ணாமல் இருப்பதா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் : ஆம். த்யானப்பயிற்சி போதனைகளை மட்டும் பின்பற்றி வாருங்கள். அழ்ந்த த்யான அனுபவத்தை அடைவீர்கள். வேறு எதிலும் கவனம் செலுத்தவோ,சிந்திக்கவோ வேண்டாம்.

கேள்வி: கருணை என்றால் என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஒ ! உங்களுக்கு இது தெரியவில்லை என்றால் இனி எப்போதும் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை ! உங்களுக்கு தெரியும்,ஆனால்  நீங்கள் சொற்பொருள் விளக்கம் கேட்கிறீர்கள்.கருணை என்பது சொற்பொருள் விளக்கத்துக்கு அப்பாற்பட்டது. என்னால் அதை விளக்கி விவரிக்க முடியாது.

கேள்வி: நீங்கள் ஒரு புத்தகத்தில் ," ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று ஒருவர் எண்ணினால் மிகவும் குழப்பத்தில் இருக்கிறார் என்று அர்த்தம் " என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். இது மிக குழப்பமாக இருக்கிறது. என்ன செய்வது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆம். நீங்கள் முடிவு எடுக்க வேண்டும் என்று விரும்பினால் குழப்பத்தில் இருக்கிறீர்கள்,இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று பொருள். முடிவு எடுத்துவிட்டால் முடிவு எடுக்க வேண்டும் என்று கூற மாட்டீர்கள்.' பசிக்கிறது" என்று கூறினால் உணவு அருந்தவில்லை என்று பொருள். உணவு அருந்திய பின் பசிக்கிறதுஎன்று கூற மாட்டீர்கள் அல்லவா? என்னுடைய பணி எதையும் நம்ப வைப்பது அல்ல; குழப்பதுவே. ஒவ்வொரு தடவை குழம்பும்போதும் நீங்கள் வாழ்வில் ஒரு அடி முன்னேறுகிறீர்கள்.  அது மிக நல்லது.

கேள்வி : நீங்கள் இன்றிரவு பேசிய உரையில் சொன்னீர்கள் என்னிடம் எல்லாம் பெருமளவு இருக்கிறது , நேரத்தை தவிர.. இதை எப்படி சமாளிப்பது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ம்ம்.. எனக்கு தெரியவில்லை.நான் இதை எப்படி சமாளிக்க வேண்டும் என்று எனக்கு நீங்கள் தான் சொல்ல வேண்டும். எனக்கு நேரமில்லை ஆனால் என்னை எல்லா இடத்திற்கும் வாருங்கள் என்று அழைகிறார்கள். ஏற்கனவே என்னுடைய 2012 ஆம்  ஆண்டு நாளிதழ் முடிவடைந்து விட்டது, முழு நாளிதழும் தீர்ந்து விட்டது தேதிகளும் தீர்ந்து விட்டது. எனக்கு மட்டுமல்ல நம்முடைய ஆசிரியர்கள் சிலருக்கு 2013  ஆம் ஆண்டு நாளிதழும் கூட முடிந்து விட்டது.அவர்கள் என்னை விட ஒரு படி முன்னே இருகிறார்கள். ஒரு சில  சுவாமி களுக்கும், முனிவர்களுக்கும்  கூட 2013 ஆம் நாளிதழ் முடிந்து விட்டது. என்ன செய்வது?

கேள்வி: எது உள்ளுணர்வு, எது புத்தி என்பதை எப்படி தெரிந்துகொள்வது? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: எது ஒன்று சரியாக நடக்கின்றதோ அது உள்ளுணர்வு.அதை  காத்திருந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

கேள்வி: மௌனம் என்றல் என்ன? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: (குருஜி, ஓரிரு நிமிடங்கள் மௌனமாக இருந்தார்.... புரிந்ததா?