இந்தியாவின் புனித துறவிகள்

நவம்பர் 30, 2013
குருதேவ்! அசாராம் பாபு நிகழ்விற்குப் பின்னர் (அண்மையில் ஒரு ஆன்மீகத் தலைவர் ஒரு பெண் பக்தருடன்  தவறான உறவு கொண்டதாக ஏற்பட்ட அவதூறு) என்னுடைய நண்பர்கள் நான் வாழும் கலையில் கொண்டுள்ள நம்பிக்கையையை கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட்டனர். வாழும் கலை வேறுபட்டது என்று அவர்களை நம்ப வைக்க நான் என்ன கூற வேண்டும்?

குருதேவ்: என்ன தான் ஒருவர் கூற முடியும்? நம்பிக்கையற்று அச்சப்பட வேண்டாம் என்று கூறுங்கள். சில சமயங்களில் சாலை விபத்துக்கள் ஏற்படும். அதனால் சாலைகளில் நடப்பதை நிறுத்தி விடுகின்றோமா என்ன? அவ்வாறு செய்தால் மனம் சமநிலையில் இல்லாது பீதி நோயுற்றிருப்பதாகும். இங்கும் அதே நிலை தான்.

உதாரணமாக மருத்துவத் துறையில் சில டாக்டர்கள் சிறுநீரகங்களைத் திருடுகின்றார்கள். அது பற்றி பெரிய அவதூறுகள் எழுந்தன. ஏதோ சில டாக்டர்கள் அவ்வாறு செய்ததால் நீங்கள் மருத்துவரிடம் செல்லாமலேயே இருக்க வேண்டும் என்று பொருளல்ல. சரியா? ஏதோ சில நிறுவனங்கள் மக்களுடைய பணத்தை ஏமாற்றி விட்டன. அதனால் நீங்கள் நிறுவனங்களில் பண முதலீடு செய்வதையே நிறுத்தி விட வேண்டும் என்பதல்ல.

முதலாவதாக அந்த மனிதர் தவறிழைத்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஒரு வேளை அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு விட்டால்? காஞ்சி மடத்தின் தலைவர் சங்கரச்சாரியாரின் நிலை (காஞ்சிபுரம் ஆன்மீக மடத்தின் தலைவர் குற்ற வழக்கில் விடுதலை அடைந்ததை குறிப்பிட்டு) என்ன ஆயிற்று பாருங்கள்! ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். இன்று அந்த வழக்கின் அத்தனை குற்றங்களிலும் இருந்து நிரபராதி என்று விடுவிக்கப் பட்டுள்ளார். தவறான குற்றச்சாட்டின் பாரத்தை அவர் ஒன்பது ஆண்டுகள் அனுபவிக்க வேண்டியதாயிற்று. இதற்கு என்ன கூறுகின்றீர்கள்?

சுமார் 17 அல்லது 19 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை கூற விரும்புகின்றேன். 1998: ஒரு சிறந்த விஞ்ஞானி, ஒற்றர் என்று குற்றம் சாட்டப்பட்டார். பல விதமான சித்திரவதைகளுக்கு ஆளானார். ஆட்டோரிக்சா ஓட்டுனர்கள் கூட அவரைக் குற்றம்  சாட்டினர். அவர் ஒரு தலைசிறந்த விஞ்ஞானி. க்ரியோஜெனிக் தொழில் நுட்பத்தில் ஆய்வு செய்து, அமெரிக்க விண்வெளியூர்தியின் மொத்தச் செலவில் மூன்றில் ஒரு பகுதி செலவில் ஒரு விண்வெளியூர்தியினைத் தயாரித்தார். அது குறைந்த செலவில் அதிகத் திறனுள்ள விண்கலமாக இருந்தது.

இந்த செயல் திட்டத்தில் ரஷ்யா ஒரு பங்குதாரராக ஆக விரும்பியது. அமெரிக்க கூட இதில் பங்கு பெற விரும்பியது. அந்த விஞ்ஞானி நாசாவினால் அழைக்கப்பட்டார். அமெரிக்க அதிபர் அவரிடம், "நான் அமெரிக்கக் குடியுரிமையை உங்களுக்கு அளிக்க விரும்புகின்றேன். இங்கேயே தங்கியிருந்து, உங்கள் பணியைத் தொடருங்கள்" என்று கூறினார். அவர் நாசாவில் 10 மாதங்கள் தங்கியிருந்தார். பின்னர் நம் நாட்டு இஸ்ரோ விலுள்ள விக்ரம் சாராபாயை தொடர்பு கொண்டார். விக்ரம் சாராபாய், இந்தியாவிற்குத் திரும்ப வந்து அதே பணியைத் தொடருமாறு கூறினார். எனவே, விஞ்ஞானி இந்தியாவிற்குத் திரும்பி, பின்னொரு காலத்தில் இந்தியக் குடியரசுத் தலைவராக ஆன அப்துல் கலாம் உடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.

அந்த சமயத்தில், இந்தியத் தகவலகத்திலிருந்து ஒருவர், விஞ்ஞானி ஒற்றாடுவதாகப் பொய் வழக்கு ஒன்றை பதிவு செய்தார். விஞ்ஞானி,மோரிஷியஸ் அல்லது மால்டைவஸ் தீவிலுள்ள ஒரு பெண்மணிக்கு நமது நாட்டின் ரகசியங்களை விற்று வருவதாக் குற்றம் சாட்டினார்.

உண்மையில் விஞ்ஞானி தங்கி இருந்த வீட்டுக்கு அடுத்த வீட்டில் மால்டைவஸ் தீவைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மட்டுமே தேறிய இரு பெண்கள் விருந்தினராக வசித்து வந்தனர். இந்த வழக்கு 10 ஆண்டு  காலம் நடந்து இறுதியில் விஞ்ஞானி குற்றமற்றவர் என்று நிரூபிக்கப் பட்டது. அதற்குள் அவரது ஆய்வுப் பனி முடிந்து விட்டது.

அவர் இந்த தொழில்நுட்ப ஆய்வினை வீழ்த்துவதற்காக ஒரு வேளை CIA பணம் கொடுத்துப் பொய் வழக்கை ஜோடிக்கச் செய்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டார். இந்த நிகழ்விற்கு பின்னர் ஒரு ஸ்தம்பித்த நிலை ஏற்பட்டு நம் நாடு விண்வெளி ஆய்வில் புதிதாக எதையும் கண்டு பிடிக்கவில்லை. இந்தக் முழுக் கதையையும் அவர் கூறினார். நீங்களும் அறிந்திருக்கலாம். இது டைம்ஸ் நௌ (Times Now) தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. வழக்குகள் பொய்யாகக் கூட இருக்கலாம். சில சமயங்களில் உண்மையாகவும் இருக்கலாம். கேள்விக்குறிய மனிதர் ஏதேனும் தவறிழைத்திருக்கலாம். அந்த நிலையில், நாம் அவரிடம் கருணை மட்டுமே காட்ட முடியும். அவரை எது அத்தகைய கொடிய குற்றத்தைச் செய்யத் தூண்டியது என்று நமக்குத் தெரியாது. 75 வயதான ஒருவர் இவ்வாறு செய்வது என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

இரண்டாவதாக, இவ்வாறு குற்றம் புரிந்தவர் மீது இரக்கப்படுவதை விட்டு அவரை வெறுக்கத் துவங்கி விடுகின்றோம். மிகக் கொடிய குற்றவாளி, அல்லது குற்றவாளி என்று நிரூபிக்கப் பட்ட ஒருவரை நாம் வெறுக்கக் கூடாது. இரக்கப் பட வேண்டும். அக்குற்றம் உங்கள் மூலம் நடைபெறவில்லையே என்று கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். நாம் அத்தகைய குற்றங்களை செய்யவில்லை என்னும் அதிர்ஷ்ட உணர்வுடன் இருங்கள். யார் என்ன செய்ய முடியும்? ஒவ்வொரு துறையிலும் இத்தகைய நிகழ்வுகள் இருக்கின்றன. ராவணன் துறவி போன்று பொய்த் தோற்றத்துடன் சீதாதேவியை ஏமாற்றினான். இது புதிதல்லவே!

விஜயநகரப் பேரரசு எவ்வாறு அழிந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களில் எத்தனை பேருக்குத் தெரியாது?(பலர் கைஉயர்த்துகின்றார்கள்). சன்யாசிகளைப் போன்று பொய்த்தோற்றம் பூண்ட ஐந்து பேரால்தான் விஜயநகரப் பேரரசு அழிந்தது. விஜயநகரப் பேரரசு மிகுந்த பலமும் சக்தியும் வாய்ந்து யாராலும் அசைக்க முடியாத நிலையில் இருந்தது. இந்தியாவின் பாதிப் பகுதிகளும், ஸ்ரீ லங்காவிலும் கூடப் பேரரசின் ஆளுகைகுட்பட்டிருந்தன. அது உலகிலேயே மிகுந்த வளம் பொருந்தியதாகவும் இருந்தது. சீன யாத்ரிகர்களும் கூட நம்ப முடியாத அளவு செல்வம் மிகுந்த பகுதி என்று விவரித்துள்ளார்கள். தெருக்களில் வணிகர்கள் வைரங்களை "லிட்டர்" அளவுகளில் அளந்தார்கள். முத்துக்கள் கனஅளவுகளில் அளக்கப்பட்டன. பேரரசுக்கு மிகுந்த பலம் பொருந்திய படை இருந்தது.10000 யானைகளும், ஒரு லட்சம் படை வீரர்களும் இருந்தனர். ஆனால் போர் எதுவுமின்றி 10 மணித்துளிகளில் பேரரசு முழுமையும் அழிந்து விட்டது. என்ன நடந்தது தெரியுமா? ஐந்து பாமினி சுல்தான்கள், துறவிகளை போன்று வேடம் அணிந்து  நதியின் மறுகரையில் ஒரு கூடாரம் அமைத்துக் கொண்டு இருந்து வந்தனர். துறவிகள் நதியைக் கடக்க மாட்டார்கள் ஆகையால் அவர்களால் நதியை கடந்து மாளிகைக்கு வர இயலாது.எனவே பேரரசர் கூடாரத்திற்கு வந்து துறவிகளைக் காண வேண்டும் என்று அவர்கள் பேரரசருக்கு ஒரு செய்தி அனுப்பினர்.

ஆகவே, பேரரசர் மிகுந்த மரியாதைகளுடன் அத்துறவிகளை காண வந்தார். பழங்கால முறைப்படி, பேரரசர் துறவிகளிடம் சென்று தலை வணங்கி ஆசிகளைக் கோரினார்.
அவர்கள் படைகளின்றி தனியே பேரரசர் வர வேண்டும் என்று கூறியதால், பேரரசர் எளிமையான உடையணிந்து மலர்கள் பழங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு சென்றார். ஆனால் துறவிகள் உண்மையானவர் அல்லவே! அவர்கள் பாமினி சுல்தானின் படைத் தலைவரும் வீரர்களும் ஆவார்கள். அவர்கள் தலை வணங்கிய பேரரசரின் தலையைக் கொய்து ஹம்பி நகரத்தின் மத்தியிலுள்ள ஒரு கம்பத்தில் அத்தலையை தொங்க விட்டனர். பத்து நிமிடங்களில் அவர்கள் போர் எதுவும் இன்றி பேரரசு முழுமையையும் கைப்பற்றினர்.

பேரரசரே கொலையுண்ட பின்னர் மக்களால் என்ன செய்ய முடியும்? தங்களை தாக்கியவர்களிடம் சரணடைந்தார்கள்.பாமினியர்கள் அதன் பின் பேரரரசைக் கொடூரமாக அழித்தனர்.அவர்களது படைகளும் மாறு வேடத்தில் காத்திருந்தன. அவர்கள் நகரை முழுவதுமாக சூறையாட ஆறு மாதங்கள் ஆகின என்று கூறப்படுகின்றது.

நம் நாடு சுதந்திரமடைந்ததற்குப் பின், பண்டிதர் ஜவஹர்லால் நேரு அவர்கள் நம் இந்திய வரலாற்றின் சில தவறான நிகழ்வுகள் பிறரால் அறியப்படாமலும், முக்கியத்துவும் அளிக்கப்படாமலும் இருக்க வேண்டும் என்பதற்காக அவை மறைக்கப்பட வேண்டுமென்ற அரிய கருத்தினைக் கொண்டிருந்தார். எதிர்காலத்தில் அச்சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கு அவை மக்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை. அவர் எல்லாவற்றையும் மறைத்துவிட்டு, அனைத்தும் நன்றாகவே நிகழ்ந்ததாக தோரணை செய்தார். உண்மைக் கதைகளை கம்பளத்திற்கு அடியில் தள்ளுவது போல் தள்ளி மறைத்துவிட்டு, அப்படியே மகிமை வாய்ந்த நாட்களையும் மிகவும்   சௌகர்யமாக மறந்து விட்டார். 

இவ்வாறாக நம் இந்திய வரலாறு உப்பு சப்பற்று  சாதாரணமாகிப் போனது. (நம் இந்திய வரலாற்றின் புகழையும் பெருமைகளையும் குறிப்பிடுகின்றார்). (நம் வரலாற்றின் இருண்ட சங்கடங்கள் நிறைந்த காலங்களைக் குறிப்பிடுகின்றார்). நம் கடந்த காலம் வெறும் குப்பை   என்றும் அதில் பெருமைப்பட ஏதுமில்லை என்றும் படம் பிடித்துக்காட்ட விரும்பிய  கம்யுனிஸ்டுகள்  இம்முயற்சிகளுக்கு துணை புரிந்தனர். அவர்களது வேதாந்தங்களைப்   படித்தால் கம்யுனிசம் ஒன்றே முன்னே இருக்கும் பாதை என்று அவர்கள் எடுத்துக் காட்டியிருப்பதை அறியலாம். அதற்கு வசதியாக அவர்கள் நம் இந்திய வரலாற்றின் கிருஷ்ண பகவான், ராமபிரான் போன்ற சரித்திர நாயகர்களை எல்லாம் புராண கதாபாத்திரங்கள் என்று சொல்லி ஓரம் கட்டிவிட்டனர். அவர்கள் மகாபாரதம் உண்மையில் நடக்கவில்லை என்றும் அது யாரோ ஒருவரின் கற்பனையில் விளைந்த கட்டுக்கதை என்றும் கூட சொல்லி இருக்கின்றனர். 

இயேசு நாதர் தண்ணீரின் மீது நடந்தார் என்பதாலும், அவர் ரொட்டியையும் திராட்சை ரசத்தையும் பன்மடங்காகப் பெருக்கிக் காட்டினார் என்பதனாலேயும் மட்டுமே அவர்கள் இவையெல்லாம் வெறும் கதைகள் என்றும் உண்மையில் நடந்தவை அல்ல என்றும் சொல்வதை கவனித்துப் பாருங்கள். சில அதிசய நிகழ்வுகளைத் தேர்ந்தெடுத்து அவை தர்க்க ரீதியாக இல்லை என்பதனால் அவை உண்மையில் நிகழ்ந்தவை அல்ல என்று சொல்வதைப் போல் உள்ளது.  இது அர்த்தமற்றதாகத் தெரிகின்றது.

கம்யூனிஸ வரலாற்று ஆசிரியர்கள் இந்திய வரலாற்றில் இது போன்ற இயல்பிற்கு மாறான நிகழ்வுகளை பெரிது படுத்தினர். இந்தியா என்பது நாகரிகமற்ற படிப்பறிவில்லாத மூட நம்பிக்கைகள் கொண்ட மக்கள் நிறைந்த நாடு என்பதே அவர்களது தத்துவம். அவர்களது இந்த வாதத்தினை நிரூபனம் செய்ய அவர்கள் விரும்பினார்கள். இது மிகவும் துரதிருஷ்டவசமானது. 

அவர்களுக்கு சமஸ்கிருதத்தின் அரிச்சுவடி கூடத் தெரியாது. இந்த நாட்டின் அடிப்படை சம்ஸ்கிருத மொழியே. ஒரு கால கட்டத்தில் இந்த நாடு முழுவதையும் ஒன்றாக இணைத்தது அதுவே. இந்நாட்டின் மற்ற மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்திலிருந்து உருவானவையே  ஆகும். உங்களுக்கு சமஸ்கிருதமோ அல்லது பாலி மொழியோ  தெரியாதென்றால் உங்களால்  இந்நாட்டு வரலாற்றினை முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியாது. 

அதேபோல் தென்னிந்திய மொழிகளில் தமிழ் மிக முக்கியமானது. இந்த கம்யூனிச வரலாற்று ஆசிரியர்களில் ஒருவருக்கும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ,சமஸ்கிருதம்  என்று எந்த மொழியுமே தெரியாது. அவர்களுக்கு சிறிதளவு ஆங்கிலமும், இந்தியும் மட்டுமே தெரியும். அப்படி இருந்தும் அவர்கள் இந்திய வரலாறு பற்றி பல தொகுதிகளாகப் புத்தகங்கள் எழுதியுள்ளனர். அவை அனைத்தும் காலாவதி ஆகிவிட்டன. அவற்றை படிப்பதென்பது  நேரத்தை வீணடிப்பதாகும். இருந்தாலும் அவை பல நூல் நிலையங்களில் இன்றும் இடம் பெற்றுள்ளன. 

சாதுக்கள் போன்று மாறுவேடத்திலிருந்த ஒரு சிலரால் விஜயநகரப் பேரரசு முழவதும் போர் எதுவுமின்றி பத்தே நிமிடங்களில் கைப்பற்றப்பட்டது. இது போன்ற நிகழ்சிகள் கடந்த காலத்தில் நடைபெற்றன. ஆனால் அதற்காக இந்த நாட்டில் இனி நல்லவர்கள் எவருமில்லை என்று சொல்ல முடியாது. அல்லது இந்த நாட்டில் முனிவர்கள்  என்று எவரும் கிடையாது என்றும் சொல்ல முடியாது. 

முனிவர் கபீர் தாஸ் மக்களால் குற்றம் சாட்டப் பட்டார். இயேசு நாதர் கூட குற்றம் சாட்டப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். புத்த பகவான் அவருக்கு எதிராக மாறி விட்ட  அவரது உறவினராலேயே துன்புறுத்தப்பட்டார். இது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியாது?  (பார்வையாளர்களில் பலர் தங்கள் கைகளைத் தூக்குகின்றனர்). 

புத்த பிரான் தியானம் கற்பித்துக் கொண்டிருந்தார். அவரது உறவினரும் நெருங்கிய   சீடருமாகிய ஒருவர் அவர்மீது பெரும் பொறாமை கொண்டதனால் அவரது மூளையில் என்ன  கோளாறு நேர்ந்ததோ தெரியவில்லை. புத்தர் அமர்ந்து தியானம் கற்பித்துக் கொண்டிருந்த இடத்திற்குப் பின்புறம் மலை உச்சிக்குச் சென்றார். அவர் தனது ஆதரவாளர்கள் சிலருடன் சேர்ந்து ஒரு பெரிய பாறையினை புத்தர் இருக்கும் திசை நோக்கி தள்ளி விட்டார். அப்பாறை புத்தர் அமர்ந்திருந்த இடத்திற்கு மிக அருகில் சற்றே தள்ளி சென்றது. இவற்றால் எல்லாம் எதுவும் பாதிக்கப்படாமல் புத்தர் அமர்ந்திருந்தார். அங்கே அமர்ந்திருந்த மற்ற சீடர்களும் பக்தர்களும் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். புத்தர் மிகுந்த கருணையோடு புன்னகை புரிந்தார். புத்தர், "பாவம். இச்செயலை செய்தவர் அவருக்குள் மிகுந்த வலியும் வேதனையும் கொண்டுள்ளார்" என்று கூறினார். 

கே: குருஜி! இது ஒன்று தான் உச்ச அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும் வழி வகுக்கும் பாதையா?

குருதேவ்: தாகத்தை தணிப்பதற்கான பதில் தண்ணீர் ஒன்று தான் என்று நீங்கள் கூறினால் நான் என்ன சொல்ல முடியும். நுரையீரலை நிரப்புவதற்கு மூச்சு ஒன்றே வழி என்று கூறினால் நான் என்ன சொல்ல முடியும். எந்த பாதை உங்களை உள்மன அமைதி,சாந்தி, மகிழ்ச்சி மற்றும் அன்பு ஆகியவற்றிற்கு கொண்டு செல்லுகிரதொ அதுவே நற்பாதை. அனைத்து பாதைகளுமே  அடிப்படையில் ஒன்றே. முறைகள் பலவாக இருக்கலாம்.

யாரோ ஒருவர் "இவ்வாறு பிராணயாமம் செய்யுங்கள்" என்று கற்பிக்கலாம். மற்றொருவர் வேறு மாதிரியாக செய்யுமாறு கற்பிக்கலாம். வேறு ஒருவர் அதை போல செய்யவே வேண்டாம் என்று சொல்லலாம். எனவே பலவிதமான முறைகள் இருக்கின்றன.

வாழும் கலையில் கற்றுத் தரப்படும் இந்த உத்திகள் இந்த காலத்திற்கும், நம்முடைய சந்ததியினருக்கும், அனைத்து மக்களுக்கும் உகந்தவை என்று பல ஆண்டுகளாக நாம் பார்த்திருக்கிறோம். இவை காலத்தினால் மற்றும் அனைவரும் இந்த பயிற்சிகளில் சவுகரியமாக உள்ளனர். கடந்த காலத்தில் மக்களுக்கு செய்ய வேண்டியவை அதிகம் இருந்ததில்லை. வயல்களில் விதை விதைத்து விட்டு, அது முளைத்து வளர்வதை பார்க்க வெறுமனே அமர்ந்திருப்பார்கள். பறவைகள் அந்த விதைகள் அல்லது பயிர்களை சேதமாக்காதவாறு பார்த்துக் கொள்ளுவார்கள். எனவே அவர்களுக்கு நேரம் இருந்தது, எட்டு மணி நேரம் அல்லது அதற்கு மேலும் தியானம் செய்ய நேரம் இருந்தது. ஆனால் எட்டு மணி நேரம் தியானம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தினமும் பத்து நிமிடம் சுதர்சன கிரியா செய்வதே போதுமானது, நல்லது.      

சிலர் பத்து நாட்கள் விபாசன தியான பயிற்சியில் கலந்து கொள்ளுகின்றனர். அங்கே அவர்கள் பத்து நாட்கள் மூச்சை கவனிக்கின்றனர். இறுதியில் பத்தாவது நாள் முடிவில் அவர்களுக்கு உடலில் சில உணர்வுகள் ஏற்படும். பத்தே நிமிட சுதர்சன கிரியாவில் உங்களால் அந்த உணர்வுகளை அறிய முடியும். எட்டு அல்லது பத்து நாட்கள் அமர்ந்து தான் உங்கள் உடலில் ஏற்படும் அந்த உணர்வுகளை கண்டுபிடிக்க விரும்புவீர்களா அல்லது நம்முடைய உடல் காலி மற்றும் வெற்றிடமானது என அறிய விரும்புவீர்களா என்று தேர்வு செய்து கொள்ளுங்கள். நான் அவை கெட்டவை என்றோ அந்த மாதிரியானது என்றோ கூறவில்லை. அனைத்திற்குமே ஒரு மதிப்பு உள்ளது.   

முதுநிலை பயிற்சியில் நீங்கள் நான்கு அல்லது ஐந்து நாட்கள் மௌனம் கடைப்பிடிக்கும் போதும், மாறுபட்ட தியானங்கள் செய்யும் போதும், யோகா மற்றும் பிராணயாமா செய்யும் போதும், உங்களுடைய ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. உடலுக்கு சக்தி கிடைக்கிறது. உங்களுக்கு மேலும் பல அனுபவங்கள் கிடைக்கிறது. அதிர்ஷ்டவசமாக  வாழும் கலையில் உங்களுக்கு  ஆழ்ந்து செல்லுவதற்க்கான எல்லா வழிவகைகளும் உள்ளது. நாரத பக்தி சூத்திரம் (நாரதரின் முனிவர் கூறிய அன்பின்  மூதுரை பற்றிய கருத்துக்கள்) வழங்கும் ஆன்மிக அம்சம், அஷ்டவக்ர கீதா அளிக்கும் அறிவார்ந்த விசாரணை மற்றும் ஊக்குவிப்பு ஆகியவை உள்ளன. பதஞ்சலி யோகா சூத்திரம் மூலமாக நமக்கு யோகா ஞானமும் கிடைக்கிறது. நம்முடைய விழிப்புணர்வு மற்றும் உடல் மன நலம் காக்கும் அணைத்து அம்சங்களும் உள்ளன. மேலும் அது அறிவியல் சார்ந்தது.

நாம் அறிவியல் முறையில் மேலே செல்ல வேண்டும் கண்மூடித்தனமான நம்பிக்கையில் அல்ல என்பதை நான் நம்புகிறேன். இது தான் வாழும் கலையின் சிறப்பு தன்மை. மக்கள் உண்ணாவிரதம் பற்றி அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்ளாமலேயே உண்ணாவிரதம் இருக்கின்றனர். அவர்கள் வழக்கமாக நாள் முழுவதும் ஒன்றும் சாப்பிடாமல் இருந்து இரவில் மிக அதிகமாக சாப்பிடுகிறார்கள் அல்லது வறுத்த உணவை சாப்பிடுகிறார்கள். நவராத்திரி   நேரத்தில் பல இந்துக்கள் உண்ணாவிரதம் இருந்துவிட்டு உருளைக்கிழங்கு சிப்ஸ், வேபர், இனிப்பு வகைகள்  ஆகியவற்றை சாப்பிடுகிறார்கள்.

இனிப்பு சாப்பிடுவது சரி. ஆனால் உண்ணாவிரதம் இருக்கும் போது உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் வேபர் ஆகியவற்றை சாப்பிடுவது நல்லதல்ல. தென் இந்தியாவில் உள்ளவர்கள் இட்லி (புளிக்க அரிசி மாவில் செய்யப்படுவது) சாப்பிடுவது சரி என்றும் அரிசி சோறு சாப்பிடுவது சரி ஆல் என்றும் கருதுகிறார்கள். அவள் சாப்பிடுவதும் சரியே ஆனால் அதனுடன் மற்ற ஏதேனும்  சாபிடுவது சரியல்ல. இது தவறான முறையிலான உண்ணாவிரதம் ஆகும். முஸ்லிம்கள் கூட நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருந்து மாலை நேரத்தில் அது முடிவுறும் போது அதிகமாக சாப்பிட்டு விடுகிறார்கள். அது சாப்பாட்டு முறைக்கு முரண்பாடானது. அது மேலும் விஞ்ஞானபூர்வமற்ற உண்ணாவிரத முறை ஆகும். நாம் எப்போதுமே இங்கே விஞ்ஞானத்தை பின்பற்ற வேண்டும். உண்ணாவிரதம் நல்லதே, ஆனால் நாம் அதை அறிவியல் வழியாக செய்வதை பின்பற்ற வேண்டும். உண்ணாவிரத நேரங்களில் பழங்கள் மற்றும் பழச்சாறுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். உண்ணாவிரதத்தில் இருந்து வெளியே வரும் போது மிக மென்மையாக வெளி வர வேண்டும்.(உண்ணாவிரதத்தில் சுத்தப்படுத்தப்பட்ட உடலை அதிகம் வருத்தாமல்). அது தான் உடலுக்கும்  மனதுக்கும்  நல்லது.        

கே: குருதேவ்! நேற்று நீங்கள் இந்திராகாந்தியை பற்றி பேசும் போது அவர் புத்தமத நாடுகள் அனைத்தையும் புத்தர் பிறந்த இந்தியாவுடன் இணைக்க முயன்றார் என்று கூறியுள்ளீர்கள். அது இன்று சாத்தியமாகுமா? யார் அதை செய்ய முடியும். 

குருதேவ்: எல்லா நாடுகளும் ஒன்று சேர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நாம் வாழும் கலையில் அதைத் தான் செய்து கொண்டிருக்கிறோம். நாம் உலக மக்கள் அனைவரையும்  ஒரே குடும்பமாக கொண்டு வந்து கொண்டிருக்கிறோம். அதுவே "வாசுதேவ குடும்பகம்" (அனைவரும் ஒரே குடும்பம்! அனைவருக்கும் ஒரே கடவுள்!) காற்றுக்கு எல்லைகள் தெரியாது. சூரியனுக்கு எல்லைகள் தெரியாது. உண்மையில் இந்த பூமி எல்லைகள் அற்றது.

பல தரப்பட்ட பிரிவுகள் வெவ்வேறு மக்களுக்கிடையே மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டவையே. இந்த முழு உலகமும் தெய்வீக நோக்கத்தில் ஒரே மனித இனமாக ஒன்று சேர வேண்டும் என்று கனவு காண வேண்டும். இந்த கருத்தோடு ஐக்கிய நாடுகள் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக அங்கே தெய்வீக சிந்தனைகள் இல்லாததால் அது வெற்றி பெற வில்லை.  

கே: குருதேவ்! நம்முடைய உடலில் உள்ள உண்மையான வஸ்துவை ஒரு தீப்பெட்டிக்குள் அடக்கி வைக்கலாம் என்றும் மீதி உள்ளது வெற்றிடம் என்றும் சொல்லப்படுகிறதே. இந்த பின்னணியில் யோக ஆற்றல் மூலம் மிதக்க செய்யும் நிகழ்வுகள் குறித்து சிறிது விரிவாக சொல்ல முடியுமா?

குருதேவ்: நீங்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று விரும்பினால் என்ன செய்கிறீர்கள்? சரி, இப்போது எழுந்து கொள் என்று உங்கள் மனம் உடலுக்கு சொல்லும் போது 65ல் இருந்து 70 கிலோ எடை உள்ள திரள் எழுந்து நடக்க ஆரம்பிக்கிறது. கால் விரல் பகுதியின் உதவியுடன் எழுந்து நடக்கிறீர்கள். அவ்வாறு தான் உங்கள் உடல் தூக்கப்படுகிறது. எனவே எப்படி இது நடக்கிறது. இது அனைத்துமே மனதில் ஏற்படும் ஒரு எண்ணத்தினால், உணர்வினால்  ஆரம்பமாகிறது. மனம் ஒரு சீரான நிலையில் உள்ள போது, ஒரே ஒரு எண்ணத்தினால்   உடலை தூக்க முடிகிறது.   

ஆனால், யோக ஆற்றல் மூலம் உடலை காற்றில் மிதக்க செய்யும் நிகழ்வுகள் எதையும் நான் பார்த்ததில்லை என்று நான் உங்களுக்கு சொல்லிக் கொள்ளுகிறேன். உடல் தரையில் இருந்து மேலே தூக்கப்படுகிறது. பலருக்கு இந்த அனுபவம் சிறிதளவு ஏற்பட்டுள்ளது. ஆனால் காற்றில் மிதக்க ஆரம்பித்த எவரையும் நான் பார்த்ததில்லை.

தெய்வம் உங்களை காயப்படுத்தப்படுவது - சாத்தியமற்றது

நவம்பர் 29, 2013 பெங்களுரு, இந்தியா கே: குருதேவ்! தெய்வமே ஒருவரை காயப்படுத்தப்படுவதாக நினைக்கும் போது, எங்கே செல்வார்?

குருதேவ்: எங்கும் செல்ல வேண்டியதில்லை.தெய்வம் உங்களைகாயப்படுத்தப்படுவது சாத்தியமற்றது.நாங்கள் பள்ளியில் பயின்ற போது ஒரு அழகான கன்னட செய்யுளை படித்து வந்தோம். கரும்பை மேலும், மேலும் பிழியும் போது தான் அதிலிருந்து வரும் சாறு அதிக இனிப்பாக இருக்கும் என்று அது கூறுகிறது. வைரமும் அதிகமாக வெட்டப்படும் போது அது அதிகமாக ஜொலிக்கிறது. தங்கம் அதிகமாக உருக்கப்படும் போது ஜொலிக்கிறது. சந்தனம் அதிகம் தேய்க்கப்படும் போது அது அதிக மணம்   பரப்புகிறது.

இயற்கை உங்களை பல வேறுபட்ட வேலைகளிலும் பரீட்சைகளிலும் புகுத்துகிறது. நீங்களும் அவை அனைத்திலும் இருந்து பிரகாசத்துடன் வெளி வருகிறிர்கள். இயற்கை உங்களால் சுமக்க முடியாத ஒரு பளுவை உங்களுக்கு தருவது இல்லை என்பதை நினைவில் வைத்திருக்கவும். இறைவன், விலங்குகள் அதனுடைய வாலை மேலும் கீழும் ஆட்ட வேண்டும் என்பதற்காகவே, முதலில் வாலின் அளவை அளந்து அதன் பின்னரே அதை அந்த விலங்குடன் இனைக்கிறான். ஒரு எலிக்கு யானையின் வால் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அந்த எலியினால் வாலை சிறிதும் உயர்த்த கூட இயலாது. இயற்கை மிகவும் புத்தி சாதுர்யமானது. உங்களால் எந்த பிரச்னையை கையாள முடியுமோ அதை தான் உங்களுக்கு கொடுக்கும்.

கே: குருதேவ்! என்னிடம் வெளியில் சொல்ல முடியாத மனதில் வேரூன்றியிருக்கும் ஒரு ரகசியம் உள்ளது. நான் அதை வெளியே சொன்னால் நான் அனைவரையும் மற்றும் அனைத்தையும் இழந்து விடுவேன். முழுமையாக சரணாகதி அடைய இயலாமலும் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்திலும் நான் ஒரு சடரீதியான உலகில் இருக்கின்றன். நான் என்ன செய்வது?

குருதேவ்: நீங்கள் விளைவுகளை அறிந்திருக்கிறீர்கள்.பிறகு எதற்காக எந்த பலனும் இல்லாத ஒரு செயலை நீங்கள் செய்ய வேண்டும்? வாக்குமூலம் என்று ஒன்று இருக்கிறது. இப்போது நீங்கள் முன் பின் தெரியாத எவரிடமும் வாக்கு மூலம் கொடுக்க முடியாது. யார் நீங்கள் சொல்லுவதை மிகவும் ரகசியமாக வைத்திருப்பாரோ அவரிடம் வாக்கு மூலம் கொடுக்கலாம். கிருத்துவ தேவாலயங்களில் இம்முறை பராமரிக்கப்படுகிறது. நீங்கள் ஒரு தனியான அறைக்குள் சென்று உங்களுடைய ஒப்புதல் வாக்கு மூலத்தை அளிக்கலாம்.  யார் வாக்குமூலம் அளிப்பது என்று அந்த பாதிரியார் கூட அறிய இயலாது. நீங்கள் சென்று வாக்குமூலம் அளித்தபின் பாதிரியார் ஒரு சிறிய சாளரத்தின் வழியாக உங்களுக்கு பரிகாரத்தை கூறுவார். அது உங்களை உயர்த்தி விடும். நீங்களும் வெற்றிடமாகவும் காலியாகவும் மாறவே இங்கு வந்திருக்கிறீர்கள். உங்களுடைய தொல்லைகளை ஒரு காகிதத்தில் எழதி இந்த கூடையில் போட்டுவிட்டு சுதந்திரத்தை உணரலாம். கடந்த காலத்தில் எத்தனையோ விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் நடந்திருக்கலாம். அவை முடுவுற்றவை, கடந்து சென்றவை. நீங்கள் ஏன் அவைகளுடன் ஒட்டிக்கொண்டு உங்களுடைய நிகழ் காலத்தையும் எதிர் காலத்தையும் பரிதாபமாக்கிக் கொள்ளுகிறீர்கள்?. அதனால் எழுதி வைத்து விட்டு அவைகளை மறந்து விடுங்கள்.

நீங்கள் அவைகளை சொல்லுவதனால் நன்மை ஏற்படும் என்றாலோ அல்லது சொல்லாமல் விடுவதனால் மற்ற அப்பாவிகளுக்கு ஊறு விளைவுக்கும் என்றாலோ, இறக்கத்த தன்மையுடன் மற்றவர்கள் அதில் சிக்கிக்கொள்ளாதவாறு சொல்லிவிடுங்கள். ஆனால் அவ்வாறு சொல்லுவது யாருக்கும் உபயோகம் இல்லாதது என்றால்,அதை சொல்லுவதிலோ அதிலேயே மூழ்கி இருப்பதிலேயோ எந்த அர்த்தமும் இல்லை. ஞானமுள்ள ஒரே ஒருவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து விடுங்கள் அல்லது ஒரு சீட்டில் எழுதி இறைவனிடம் சமர்ப்பித்து விடலாம். நிம்மதியாக இருங்கள்.

கே: எதனால் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் ஆகின்றனர். ஏழைகள் ஒரு வேலை முழு சாப்பாட்டிற்காக   போராடிக் கொண்டிருக்கும் போது இறைவன் எவ்வாறு அவர்களை பராமரிக்கின்றார்?.

குருதேவ்!: என்னுடைய பார்வையில் ஏழைகள் அவ்வாறு இருப்பதற்கு காரணம்   இறைவன் அவர்களை ஏழ்மையில் இருக்குமாறு தண்டிப்பது அல்ல, மது பானமே அவர்களை ஏழ்மையில் கிடத்துகிறது. ஒரு கூலித் தொழிலாளி ஏறக்குறைய அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவர் பெரும் சம்பளத்தை பெறுகிறார். ஆனால் அவர் மூன்றில் இரண்டு பங்கு சம்பளத்தை மது பானத்திற்கு செலவு செய்வதனால் ஏழ்மையில் இருக்கின்றார்.

ஏழ்மைக்கு இரண்டாவது காரணம் சோம்பேறித்தனம். இன்றும் ஒரு ஏழை பையனோ பெண்ணோ கடின முயற்சி செய்தால் நிச்சயமாக மேலே வரலாம். அடிமட்டத்தில் இருந்து மேல் நிலைக்கு வந்து பலருடைய உதாரணங்கள் உள்ளன. அதை அடைவதற்கான ஆர்வம், உற்சாகம் மற்றும் விருப்பம் ஆகியவை தேவைப்படுகின்றன. பல சமயங்களில் மக்களிடம் அவை இருப்பதில்லை.

இந்த பெங்களுரு ஆசிரமம், நாங்கள் இந்த இடத்துக்கு முதலில் வந்தபோது யாராலும் விரும்பப்படாத தரிசு நிலமாக இருந்தது. இங்கு எதுவுமே விளையாது, புற்களோ, மரங்களோ கிடையாது. 60 ஏக்கர் நிலத்தில் ஒரே ஒரு மரம் தான் இருந்தது. வேறு எந்த மரமும் இல்லை. வேறு எதுவுமே இல்லை. விளைச்சலும் தண்ணீரும் இல்லாத பாறை நிலமாக இருந்தது.

அந்த நாட்களில், பிலிப், பிரமிளா, கிரண், வினோத் மேனன் மற்றும் பலர் இங்கே இருந்தார்கள். இந்த மரங்கள் அனைத்தையும் நட்டனர். ஆரம்ப நாட்களில் அவர்கள் மரங்களுக்கு வாளி வாளியாக தண்ணீர் விடுவார்கள். ஆசிரமத்தை சுற்றிலும் மக்கள் ஓலை கூரையினால் ஆனா குடிசைகளில் வசித்தார்கள். எனக்கு நினைவில் உள்ளபடி பஞ்சாயத்து தலைவருடைய ஒரே ஒரு வீடு மட்டுமே ஒட்டு கூரையினால் ஆனது. மற்ற எல்லா வீடுகளுமே மழையிலே ஒழுகுகின்ற பலமான கற்று வீசும் போது பிய்த்துக்கொண்டு செல்லுகின்ற ஓலை கூரைகளால் ஆனவையே. இந்த கிராமத்தில் மட்டும் அல்ல, சுற்றியிருக்கும் அனைத்து கிராமங்களும் அவ்வாறானவையே.

மேலும், கனகபுரா சாலையில் காலையில் ஒன்றும் மாலையில் ஒன்றுமாக இரண்டு பேருந்துகளே சென்று கொண்டிருந்தன. கீழே உள்ள ஆற்றில் இருந்து நகரத்துக்கு மணல் கொண்டு செல்லும் லாரிகள் மட்டுமே இருக்கும். சுதர்சன கிரியா நாடாக்களில் நீங்கள் அந்த லாரிகளின் சப்தத்தை கேட்கலாம். அப்போது ஜயநகரில் இருந்து ஆசிரமம் வருவதற்கு நீங்கள் இரண்டு பேருந்துகள் பிடிக்க வேண்டி இருக்கும்.

நாங்கள் இந்த இடத்திற்கு வந்த போது இது முழுவதுமாக ஒரு கிராமமாகவே இருந்தது. சுற்று வட்டாரத்தில் உள்ள இருபது கிராமங்களில் இருந்து குழந்தைகளை கொண்டு வந்து ஒரு பள்ளிக்கூடம் திறந்தோம். சுற்றியிருந்த மக்கள் அனைவரும் ஏழைகள்.  வாழும் கலை அமைப்பிலும் எங்களிடம் குறைந்த பணவளமே இருந்தது. அடிக்கடி நாங்கள் வங்கியில் இருந்து ஆசிரமத்தின் பெயரில் தற்காலிக கடன் பெற்று இரண்டு அல்லது மூன்று மாதங்களில் திரும்ப செலுத்தியிருக்கின்றோம். 

1990ஆம் ஆண்டுகளில் என நினைக்கிறேன், நான் சுற்று வட்டாரங்களில் இருந்த 20 முதல் 35 வயதான வேலையற்ற இளைஞர்களை கூப்பிட்டு ஏதாவது ஒருவேலையை செய்யுமாறு கூறினேன். அவர்கள் வேலை ஏதும் செய்யாமல், நாள் முழுவதும் ரேடியோ கேட்டுக்கொண்டும், சீட்டு அல்லது கிரிக்கெட் ஆடியும், வெறுமனே அமர்ந்தும் அவர்களுடைய குடும்பக்களுக்கு பாரமாக இருந்தனர்.

மாலை வேளைகளில் அவர்கள் குடிக்க சென்று விடுவார்கள். நாங்கள் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடங்கள் அமைத்தோம் ஆனால் அந்த இளைஞர்களோ   வேலையின்றி இருந்தனர். அவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆனால் வயல் வெளிகளில் வேலையோ விவசாயமோ செய்ய விரும்பவில்லை. பள்ளிக்கே   செல்லாதவர்கள் அல்லது ஆரம்ப பள்ளி வரை சென்றவர்கள் மட்டுமே விவசாயம் செய்பவர்கள் என்ற எண்ணம் அவர்கள் மனதில் இருந்தது. அவர்கள் ஏன்   விவசாயம் செய்வார்கள்? வயல் வெளிகளில் சென்று வேலை செய்ய அவர்கள் விரும்பவில்லை.   

நான் கர்நாடக அரசு சிறு தொழில் துரையின் இயக்குனரிடம் இந்த 200 வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தரக்கூடிய திட்டங்களை அளிக்கும்படி கேட்டுக்கொண்டேன். நான் அவர்கள் எதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினேன். (நாங்கள் அஷ்டவக்ர கீதையை சொல்லும் கூடத்திற்கு அந்த இளைஞர்களையும் இயக்குனரையும் வரவழைத்தோம்). அந்த இயக்குனர் மிக ஆர்வத்துடன் வந்து, கடும் முயற்சியோடு 225 திட்டங்களை பற்றி மூன்று நான்கு மணி நேரம் எடுத்துரைத்தார். அந்த இளைஞர்கள் இது எப்படி சாத்தியப்படும் அது எப்படி சாத்தியப்படும் என்றெல்லாம் சாக்குகள் கூறினர். இயக்குனர் ஒரு திட்டத்தை பற்றி விளக்கி கொண்டிருக்கும் போதே "குருதேவ்! இது சாத்தியமல்ல" என கூறுவார். இறுதியாக நான் அவர்களிடம் எது சாத்தியப்படும் என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் காவல் துறையிலோ அல்லது பேருந்து நடத்துனர் வேலையோ பெற்று தருமாறு கேட்டனர். அரசாங்கத்தில் காவல் துறையிலோ, நடத்துனராகவோ எத்தனை வேலை கிடைக்கும்? ஒருவரும் தொழிலதிபராகவோ அதற்க்கான முயற்சியை எடுக்கவோ விருப்பப்படவில்லை. இவர்கள் ஏழைகளாக இருக்கவே விரும்புகின்றனர். நீங்கள் என்ன செய்ய முடியும்.

இந்த நேரத்தில் தான் நாங்கள் இளைஞர்களுக்கான தலைமை பயிற்சி திட்டத்தை (YLTP)  ஆரம்பித்தோம். நாங்கள் அவர்கள் அனைவரையும் 3 மாத தீவிர பயிற்சியில் ஈடுபடுத்தினோம். அவர்களிடம் இருந்த மெத்தனப்போக்கை அகற்ற காலையில் உடற்பயிற்சிகள் செய்ய வைத்தோம்.  அவர்கள் சுதர்சன கிரியாவும், தியானமும் செய்ய ஆரம்பித்த போது, அவர்களுக்கு நாங்கள் 3 மாதம் வேலை கொடுத்தோம்.     எனினும் அவர்களிடம்" நீங்கள் ஏதாவது தொழில் செய்ய வேண்டும்" என்று சொன்னோம்.இன்று அவர்களில் பலர் தொழிலதிபர்கள் ஆகியுள்ளனர்.       

இப்போது நீங்கள் ஆசிரமத்தை சுற்றி ஓலை வேய்ந்த கூரையை காண முடிகிறதா? இல்லையே! மக்கள் வீடுகள் கட்டிக் கொண்டுள்ளனர். இந்த கிராமத்தில் மட்டும் அல்ல. சுற்றியுள்ள அனைத்து கிராமங்களும் வளம் பெற்றுள்ளன. பொருளாதாரம் மலர்ச்சியடைகிறது. இந்த பகுதியில் வேலையாட்கள் கிடைப்பதில்லை. அவர்கள் வேறு பகுதிகளில் இருந்து வருகிறார்கள்.  

அதே போல், இங்கே வாயிற்காவலராக வேலை பார்த்த ஒரு பையன் இருந்தான். இன்று அவன் கீழே 400 பேர் வேலை செய்கின்றனர். அவனுடைய கதை மிக சுவாரசியமானது. குழந்தையாக இருக்கும் போது அவன் பள்ளியில் அனைவரிடமும் சண்டையிட்டுக் கொண்டு தொந்தரவு கொடுப்பவனாக இருந்தான். எந்த பள்ளியும் அவனை சேர்த்துக் கொள்ள தயாராக இல்லை. அவனுடைய பெற்றோர் மிகவும் சோர்வுற்று நோய் வாய்பட்டு அவனை இங்கே கொண்டு வந்து விட்டு விட்டனர்.  அவன் அனைவரையும் அடிப்பதாலும் சுற்றிலும் உள்ளவகளுக்கு மிகவும் தொந்தரவு    தருவதாலும் அவனை அவர்கள் வீட்டில் வைத்துக்கொள்ள விரும்பவில்லை, நீங்கள் அவனை என்ன செய்ய விரும்புகிறீர்களோ அவ்வாறு செய்து கொள்ளலாம் என்று கூறி சென்று விட்டனர். அவன் சக்தி குடீருக்கு வெளியே அமர்ந்து என்னுடைய அறைக்குள்ளே வருபவர்களை தடுத்து நிறுத்திக் கொண்டிருப்பான்.அந்த நாட்களில் எங்களுக்கு பாதுகாப்பு காவலர்கள் யாரும் கிடையாது. அவன் ஒருவனே இருந்தான்.      அவன் அனைவரையும் நிறுத்திவிடுவான், என்னுடைய அம்மாவையும் கூட. என்னுடைய அம்மா உள்ளே வருவதற்காக அவனுடன் சண்டையிட வேண்டி இருக்கும்.

இங்கே இருந்ததே அவனுள் ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கியது. அவன் திரும்ப சென்று திருமணம் செய்து கொண்டான். அவன் அதிகம் படிக்கவில்லை ஆனால் ஒரு பெரிய தொழிலை துவக்கினான். அவனிடம் 300-400 ஆட்கள் வேலை செய்கின்றனர். இம்மாதிரியாக ஒன்றல்ல, பல உதாரணங்கள் உள்ளன. இந்த மெத்தனப்போக்கு நீங்க வேண்டும்.

நம் நாட்டில் மந்திரியாக இருக்கின்ற ஒருவர் ஒரு காலத்தில் தேனீர் விற்பனை செய்து கொண்டிருந்தவர் ஆவார். அவர் ஒரு மிக ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர். இன்று அவர் ஒரு மாநில முதல் மந்திரியாக இருக்கிறார். இன்னுமொரு உதாரணம் ராம்நாத் கோயங்காஜி. அவர் இந்திரா காந்தியின் பதவிக்கே ஆபத்தை உருவாகிய இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழை ஆரம்பித்தார். அவர் இரண்டாம் வகுப்பு வரை தான் படித்தவர். மும்பையில் கைவண்டியில் தெருதெருவாக காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்று கொண்டிருந்தவர். அவர் மிக ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவர் எனினும் இன்று ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கியிருக்கிறார். 

வறுமை அல்லது ஏழ்மையில் இருந்து வெளி வர உங்களுக்கு அந்த ஆன்மீக சக்தி, நம்பிக்கை மற்றும் விருப்பம் ஆகிய அனைத்தும் தேவைப்படுகிறது. ஏழைகளுக்கு உணவு மற்றும் பொருட்களை கொடுப்பது பயனற்றதாகும்.

எதியோபியா நாடு இன்னொரு உதாரணம் ஆகும். அங்கே ஏழு ஆண்டும் பஞ்சம் இருந்தது. எட்டாவது ஆண்டு, அங்கே மழை பெய்த பின்பும் யாரும் வேலை செய்ய விரும்பவில்லை. அவர்களுக்கு மற்ற நாடுகளில். இருந்து உதவிகள் கிடைத்துக் கொண்டிருந்தன. எவரிடமிருந்தாவது உணவு மற்றும் பொருள் உதவி கிடைக்கும்   என்று அவர்கள் எதிர்பார்த்தனர். இன்றும் எதியோபியாவில் பெரும் அளவிலான நிலங்கள் உள்ளன. அந்நாட்டு மக்களிடம் ஆர்வம் இல்லாததால் இந்தியர் மற்றும் சீனர் அங்குள்ள நிலங்களை வாங்கி பயிர் செய்கின்றனர்.

எதியோபியாவில் மிகப் புதுமையான இன்னொரு வழக்கமும் உள்ளது. ஏதோ ஒரு மத நம்பிக்கையினால் அந்நாட்டு மக்கள் வருடத்தில் ஆறு மாதங்கள் பால் பண்ணை பொருள்கள் எதையும் உபயோகிப்பதில்லை. பால் பண்ணை பொருள்களை விற்க இயலாது என்பதனால் யாரும் அங்கே அந்த வியாபாரத்தை செய்ய விரும்புவதில்லை. ஒரு வேலை பண்டைய நாட்களில், குளிர் காலத்தில் குளிர்ந்த பால் அருந்தக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கலாம் அல்லது அது தர்க்கரீதியான ஒரு முடிவாக இருக்கலாம். எனினும் ஆறு மாதங்களுக்கு பால் அருந்தாமல்   இருப்பதும் இதர பால் பண்ணை பொருட்களை உபயோகிக்காமல் இருப்பதும் அந்த தொழிலை மிகவும் பாதிக்கும். ஏழ்மையில் இருந்து வெளி வருவதற்கு ஒருவருக்கு சரியான மனப்போக்கு தேவைப்படும். நான் என்ன சொல்கிறேன் என்றால் ஏழ்மை மற்றவர்களால் பலியாக்கப்படுவதை விட அதிகமாக  சுயமாக திணிக்கப்பட்டு கொள்வதே ஆகும். நான் பலியாக்கப்படுகிறேன் யாரோ ஒருவரிடம் பணம் உள்ளது, என்னிடம் அது இல்லை என்று பலர் கூறுவர்.   

ஏன் உங்களிடம் பணம் இல்லை? ஏன் என்றால் நீங்கள் அதற்காக உழைக்கவில்லை. ஆயினும் ஏழைகள் சுரண்டப்படுகிறார்கள் என்கின்ற இன்னொரு பக்கமும் உள்ளது. அதுவும் சரி அல்ல.

கே: குருஜி, என்னுடைய புகுந்த வீட்டில் சாதத்தை கையால் தொட்டால் கையை கழுவ வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். அதே போல் மாத விடாய் காலத்தில் பூஜை அறை, சமையல் அறை உள்ளே போக கூடாது, துணி மணிகளையும் தொடக்கூடாது என்கிறார்கள்.அவர்கள் ஏன் இந்த வழக்கங்களை பின்பற்றுகிறார்கள்? இதற்கு எதாவது விஞ்ஞான பூர்வமான காரணம் இருக்கிறதா?

குருதேவ்: ஒரு வழக்கம் சரியா தவறா என்று நிர்ணயம் பண்ணுவதற்கு விஞ்ஞான
பூர்வமான பரிசோதனை செய்ய வேண்டியிருக்கிறது. உதாரணத்திற்கு நம் பழங்காலத்து வீடுகளில், கழிவறைக்கு செல்லும் போது பூணுலை காதில் சுற்றி மாட்டி கொள்வார்கள்.  இதற்கு விளக்கம் கூறுகையில் ஒரு வேளை பூணுல் மிகவும்  நீளமாக இருந்ததால் இப்படி செய்தார்களோ என்று நினைத்தார்கள். ஆனால் நியூ யார்க்கில் ஒரு விஞ்ஞானி காது மடல் மற்றும் காதின் பின்புறமும் நம் குடல் உறுப்புக்களும் நேரடியாக சம்பந்த பட்டிருக்கின்றன என்று நிரூபித்தார். இதனால் காதை அழுத்திய பிறகு நம் ரத்த அழுத்தம் சீராகிறது அதனால் குடல் உறுப்புக்கள் சரியாக வேலை பண்ணுகின்றன என்பதை நிரூபித்தார். அதனால் இந்த பழக்கத்திற்கும் நம் உடல் ரீதியான வழக்கத்திற்கும் சம்பந்தம் உள்ளது. அதனால் எல்லாமே மூட நம்பிக்கைகள் என்று ஒதுக்கி விட முடியாது. மூட நம்பிக்கை என்று நினைத்தது கூட விஞ்ஞான பூர்வமாக பார்க்கும் பொழுது சரியாக படுகிறது.

அதே போல மஞ்சளை பற்றி நிறைய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தார்கள். அதை சமையலில் சேர்ப்பதை பற்றி; பாத்திரங்கள் சுத்தபடுதுவது பற்றி ; எல்லாமே மூட நம்பிக்கைகள் என்றார்கள். பல பதார்த்தகங்களில் சமைத்த பின் துளசி இலை போடுவார்கள். எண்பதாம் ஆண்டுகளில் ஆராய்ச்சி செய்தவர்கள் அது வெறும் நிறம் மட்டும் தான் கொடுக்கும் மற்றபடி அதை சமையலில் சேர்ப்பதால் எந்த ஒரு உபயோகமும் இல்லை என்றார்கள். ஆனால் தொண்ணூறாம் ஆண்டுகளில் மஞ்சள் ஒரு நல்ல ஆண்டியாக்சிடண்ட்(Anti Oxidant) என்று கண்டுபிடித்தார்கள்.

ஆயுர்வேத மருத்துவர்கள் மஞ்சள் “வயச்தாபன்" ஆக செயல்படுகிறது, அதாவது முதுமை அடைவதை நிறுத்துவது என்று கூறினார்கள். ஆங்கில மருத்துவர்கள் இதை ஒத்துக் கொள்ளவில்லை. பிற்காலத்தில் விஞானிகள் மஞ்சள் உடலுக்கு நல்லதே என்று நிரூபித்தார்கள். அது கான்சரை கூட தடுக்க வல்லது. அதனால் நாம் எந்த ஒரு வழக்கத்தையும் தவறு என்று நிரூபிக்கும் வரை ஒதுக்கிவிட முடியாது. எனவே நாம் எதையும் திறந்த மனதுடன் பார்க்க வேண்டும்; ஒரு சமயம் சரி என்று சொன்னதை இன்னொரு சமயம் தவறு என்று பின்னல் நிரூபிக்க கூடும்.

கடலை எண்ணெய் மிகவும் மோசமானது என்று பெரிய சர்ச்சை. தென் இந்திய வீடுகளில் கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தான் உபயோகபடுத்துவார்கள். பாமாயில் தயாரிக்கும் நிறுவனங்கள் தன்னுடைய பொருளை விற்பதற்காக இந்த எண்ணைகள் மோசமானவை, பாமயில் தன் உயர்வானது என்றன. திடீரென எல்லோரும் பாமாயிலை உபயோகிக்க ஆரம்பித்து விட்டனர்.

இப்போது ஆராய்ச்சியில் கடலை எண்ணெய் மிக நல்லது என்று நிரூபித்து விட்டது. அதுதான் உன்னதமானது என்று புகழ் பாடுகிறார்கள். சொல்ல போனால் கடலை எண்ணெயை நூற்றுகணக்கான, ஆயிரகணக்கான வருடங்களாக உபயோகித்து வருகிறார்கள். எள் எண்ணையை தமிழ் நாட்டில் நல்லெண்ணெய், நல்ல எண்ணெய் என்று கூறினார்கள். அது நமது உடலுக்கு நல்லதை செய்யும். பாமாயில் முழுவதும் மலேசியாவில் இருந்து இறக்குமதியாவதால் சில விஞ்ஞானிகள் இந்த ஆராய்சிகள் பாமாயில் நிறுவனங்களின் நிதி உதவியால் செய்யப்படுவதால் இந்த மாதிரி கதைகளை, தவறான எண்ணங்களை கொடுத்தனர். எனவே ஆராய்சிகள் உண்மையானவையாக இருக்க வேண்டும், மேலும் திறந்த மனதுடன் ஆராய்ச்சியை வரவேற்க வேண்டும். பிற்காலத்தில் இந்த முடிவு தவறானவை என்றால் பழையதை பற்றிகொள்ளாமல் அதையும் ஏற்று கொள்ள வேண்டும்.

ஆயுர்வேதத்தின் பெருமை அது 5000 ஆண்டு காலத்து சோதனைகளை கடந்தது .எனவேதான் பழக்கங்களை ஒதுக்கிவிட முடியாது. அப்படி சொன்னாலும் பல நேரங்களில் பழக்கம் என்ற பெயரால் பல மாறுபட்ட விஷயங்களும் கடைபிடிக்கபடுகின்றன. உதாரணமாக அரிசி பாயசத்தை சிறு குழந்தையின் உடலில் தடவினால் குழந்தை நன்றாக வளரும், அல்லது குழந்தையை தலைகீழாக சில நிமிடங்கள் வைத்திருந்தால் சில கடவுள்களுக்கு திருப்தி அளிக்கும் என்று சொல்லுவார்கள். இவை முட்டாள்தனமானவை. இவை மிகவும் அரிதானவை. சில கிராமங்களில் மதத்தின் பெயரால் செய்யக்கூடும். இது கேலிக்குரியது. நான் எல்லா பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. அதே சமயம் பழக்க வழக்கங்களை முழுவதுமாக ஒதுக்கி விட முடியாது. நாம் நடு பாதையை மேற்கொள்ள வேண்டும்.

ஒரு வீட்டில் குழந்தை பிறந்தாலோ அல்லது யாராவது இறந்து விட்டாலோ தீட்டு என்று சொல்வார்கள். பத்து நாட்களுக்கு அவர்களுடைய மற்றும் அவர்களுடைய நெருங்கிய உறவினர்களால் இது அனுசரிக்கப்படும்.அவர்கள் இந்த நாட்களில் எதையும் கொண்டாட மாட்டார்கள். எங்கும் செல்ல மாட்டார்கள். அவர்களில் வீட்டில் இருந்து யாரும் உணவு வாங்கிக்கொள்ள மாட்டார்கள். இதற்கு என்ன காரணம். யாராவது இறக்கும்போது உறவினர்கள் மிகுந்த துக்கத்தில் இருப்பார்கள்.அந்த துக்க சூழ்நிலையில் அவர்கள் எல்லா விதமான கடமைகளில் இருந்து விடுபடுகிறார்கள்.  அவ்வளவு தான். யாரையாவது தொடுவதினால் ஒன்றும் ஆகிவிடாது. அந்த சூழ்நிலை துக்கமானது, அவ்வளவு தான்.

ஒரு குடும்பத்தில் யாராவது வெகு நாளாக உடல் நிலை சரியாக இல்லாமல் இருந்து இறந்து விட்டால் துக்கம் இருப்பதில்லை. சந்தோஷபடுகிறோம். அவருக்கு முக்தி கிடைத்து விட்டது. நான் அவருக்காகவும் எனக்காகவும் சந்தோஷபடுகிறேன். அப்படி இருந்தால் மறை முறை எண்ணங்களோ, மன அழுத்தமோ, துக்கமான அலைகளோ இருப்பதில்லை. சந்தோஷமாக இருக்கிறார்கள். எல்லோரும் என்றாவது ஒருநாள் போகத் தானே வேண்டும்.

அதே போல் குழந்தை பிறக்கும் போது மிகுந்த உத்வேகம் மற்றும் சந்தோஷபடுகிறார்கள். உற்சாக அலைகள் அமைதி அடைவதில்லை .அந்த நிலையிலும் கடமைகளில் இருந்து விடுபடுகிறார்கள். மக்கள் நமது அறிவுக்கு புலப்படாத அளவிற்கு மனதை விரிவடைய செய்து விடுகிறார்கள்.

பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்படும் போது நல்ல ஓய்வு தேவை. அந்த நோக்கத்தை கொண்டு தான் பெண்களை எந்த வேலையும் செய்யகூடாது என்ற சம்ப்ரதாயம்  ஏற்பட்டது.  பெண்கள் தூக்கம் ஓய்வு, படிப்பு, பின்னுதல் போன்ற வேளைகளில் ஈடுபடலாம். இல்லாவிடில் வேலை என்று ஆரம்பித்தால் பெண்களுக்கு நிறைய வேலை செய்ய வேண்டி இருக்கிறது.

சாதம் மற்றும் சாப்பாட்டை பற்றி கூறும்போது முற்காலத்தில் சமையலில் கஞ்சி மற்றும் பசை பதம்  உடையதாக இருந்தது. சாதரணமாக அது பாத்திரத்தில் இருந்து வெளியே வழியும். நீங்கள் பாத்திரத்தை தொட்டு விட்டு வேறு எவற்றை தொட்டாலும் அதிலும் ஒட்டிக்கொள்ளும். அதனால் தான் கைகளை அலம்பிகொள்ள வேண்டும். இந்நாளில் கைகளை உபயோகபடுத்துவது இல்லை, கரண்டி உபயோகிக்கிறோம். முன்னாட்களில் தூய்மைக்கு மிகுந்த மகத்துவம் உண்டு. எனவே பசை பதம் உள்ள உணவை தொட்டால் கைகளை அலம்ப வேண்டும். பழங்களையும் தனியாக வைத்திருந்தார்கள். இதை பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

யுதர்களிடியே பாலை தொட்டால் மாமிசத்தை தொடாத வழக்கம் இருந்தது .சில விதி முறைகள் இருந்தன. ஜப்பான் நாட்டு மக்களிடமும் சில பழக்கங்கள் உண்டு. விருந்தாளிகளுக்கு என்று தனி கிண்ணங்களும் பாத்திரங்களும் உண்டு. அவை தனியான அலமாரியில் வைக்கப்பட்டு இருக்கும். அவர்கள் விருந்தாளிகளின் பாத்திரங்களை உபயோகிக்க மாட்டார்கள். தங்களுடை பாத்திரங்களையும் மற்றவர் உபயோகிக்க விடமாட்டார்கள். இந்த அதிசயத்தை நான் ஜப்பானில் கண்டேன். இந்தியாவிலும் சில குடும்பங்களில் இந்த வழக்கம் உள்ளது . ஜப்பானில் இந்த வழக்கம் பாரம்பரியம் உள்ள குடும்பங்களிலும் புத்த மதாலயங்களிலும் பின்பற்றபடுகிறது.

இந்த பழக்க வழக்கங்களுக்கு விஞ்ஞான அடிப்படை இல்லாவிட்டால் அதை நிறுத்திவிட வேண்டும். சில பழக்க வழக்கங்கள் இருந்தால் அவை நல்லவையா  என்று பார்க்க வேண்டும் அல்லது பரிசோதனையவது செய்கின்ற திசையில் செல்ல வேண்டும்.

கே: குருதேவ்! போதை மருந்துகளுக்கு அடிமைப்பட்டு தன்னையே காயப்படுத்திக் கொள்ளும் ஒருவரை எவ்வாறு ஏற்றுக்கொள்வது?

குருதேவ்: அவரை அதில் இருந்து வெளிக்கொண்டு வர உங்களால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்ய வேண்டும். அன்பு திறமை அல்லது ஏதாவது ஒரு சக்தி மூலமாக அவர் வெளியே வர அவருக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும். ஏதேனும் ஒரு மறுவாழ்வு மையத்தில் அவரை நாம் சேர்க்க வேண்டும். கல்கத்தாவில் ஒன்றும் மற்றும் பல இடங்களிலும் உள்ளன. அவரை அப்படி ஒரு மையத்திற்கு கொண்டு சென்று எப்படியாவது சுதர்சன கிரியா செய்ய வைக்கவும்.  அவர் பிரணாயமம் மற்றும் சுதர்சன கிரியா கற்றுக்கொண்டால் அது ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.சுதர்சன கிரியா பயிற்சி செய்த பலர் போதை மருந்து  மற்றும் குடிப் பழக்கத்தை விட்டிருக்கின்றனர்.        

கே: குருதேவ்! தற்போது அதிக மக்கள் பற்று நோயால் துன்பப்படுகின்றனர். எப்படி இந்த நோயை கட்டுப்படுத்த முடியும். நோயாளியும் அவருடைய குடும்பமும் எவ்வாறு அந்த துபத்தை குறைக்க முடியும்?.

குருதேவ்: வாழ்க்கை முறையில் மாற்றம் உதவியாக இருக்கும். நீங்கள் உறங்க செல்லுமுன் ஐ-போன், ஐ - பேட், வைபை போன்ற எல்லா மின்னணு சாதனங்களையும் அனைத்து விட்டு படுக்க செல்லவும். திரிபாலா சாவனப்ரகாஷ் எடுத்துக்கொள்ளவும். மஞ்சள் உபயோகிக்கவும். இம்மாதிரியான பிராணவாயுவை முன்னேற்றும் பொருட்கள் (ஆண்டியாக்சிடன்டஸ்) உடலுக்குள் செல்ல வேண்டும். 

பொறாமையை வெல்வோம்


27 நவம்பர் 2013 - பெங்களூர், இந்தியாநேற்று முன் தினம் பாகிஸ்தானில் ஒரு பெரிய தியான சங்கமம் வெற்றிகரமாக நடந்தது. பாகிஸ்தான் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். இது மிகவும் நல்லது.

கே: குருஜி ! பொறாமையை வெல்வது எப்படி?

குருதேவர்: ஒரு நாள் நீ இறக்கப் போகிறாய், மற்றவரும் இறக்கப் போகிறார் என்று தெரிந்து கொள்.  நீ யாரைப் பார்த்துப் பொறாமைப் படுகிறாயோ அவரும் இறந்து விடுவார். நீயும் இறந்து விடுவாய். எல்லாம் சாம்பலாகப் போகிறது. எதைப் பார்த்து பொறாமைப் படுகிறாய்?

ஒரு நாள் வெய்யில் காலத்தில் முல்லா நஸ்ருதீனும் அவருடைய நண்பரும் ஒரு மரத்தின் நிழலில் தூங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். தூங்கி எழுந்த முல்லா நஸ்ருதீன் சொன்னார். “நான் ஒரு அருமையான கனவு கண்டேன். ஒரு அழகான பெண் என் மேல் காதல் கொள்கிறாள்.” இதைச் சொல்லும் போது அவருடைய கண்கள் ப்ரகாசமாயின. 

அவருடைய மகிழ்ச்சியைக் கண்டு, அவர் நண்பர் சொன்னார். உன்னைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. என்னுடைய கனவில் ஏன் அழகான பெண்கள் வருவதில்லை ? எப்போதும் என் கனவுகள் பயங்கராமாக இருக்கின்றன. கனவில் என் மனைவியே வருகிறாள். எனக்கு பயத்தில் வியர்த்து விடுகிறது” என் மனைவியை நினைத்தால், பயத்தால் எனக்கும் வியர்த்து விடும் என்று உனக்குத் தெரியாதா? இது ஒரு கனவு தான். ஏன் உனக்கு நல்ல கனவு வரக் கூடாது? என் கனவை பற்றிக் கேட்டு ஏன் பொறாமைப் படுகிறாய்? அது தற்போது உண்மையாகுமோ இல்லை பிற்காலத்தில் உண்மையாகுமோ தெரியாது. உனக்கும் நல்ல கனவுகள் வர முடியும்” என்று முல்லா நஸ்ருதீன் சொன்னார்.

ஒருவரை பற்றி பொறாமைப் படும் போது நீ வாழ்க்கையைக் குறுகிய கண்ணொட்டத்தில் பார்க்கிறாய். அதைத் தாண்டிச் செல்ல வேண்டும். அதற்கு பற்றின்மை அவசியம். பற்றின்மை உன்னை உறுதியாக நடுநிலையில் வைக்கும். அப்போது மற்றவர்கள் உன்னைப் பார்த்துப் பொறாமைப்படுவார்கள்.

கே: குருதேவா ! ஒரு குரங்கின் கண்ணோட்டதில்  இவ்வுலகின் உண்மை ஒரு நாயின் கண்ணோட்டதிலிருந்து மாறு பட்டது. அதே போல் ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகை தன் கண்ணோட்டத்திலேயே பார்க்கிறான். அப்படி இருக்கும் போது முழுமையான உண்மையை எப்படி அறிய முடியும்? முழுமையான உண்மைக்கு (அப்சல்யூட் ட்ரூத்) அடையாளம் என்ன?

குருதேவர்: உண்மைக்கு பல நிலைகள் இருக்கின்றன. ஆத்மா விரிவடையும் போது அறிவும் மாற்றமடைகிறது. சிறு குழந்தையின் கண்களில் காணும் உலகுக்கும், ஒரு சிறுமியின் கண்களில் காணும் உலகுக்கும் மாறுபாடு இருக்கிறது. நீ வளர வளர இது மாற்றமடைகிறது. எனவே அறிவு ஆத்மாவின் ஒரு வெளிப்பாடு தான். ஆத்மா விரிவதையும் போது அறிவும் விரிவடையும்.

கே: குருதேவா ! இன்று சங்காராச்சாரியாரின் மேலிருந்த குற்றச் சாட்டுகளிலிருந்து அவரை விடுவித்து விட்டார்கள். அவர் போன்ற மகானுக்கு இப்படிப் பட்ட நிலை ஏன் வந்தது? எந்த அரசியல் வாதியும், பத்திரிக்கையாளரும்  அவர் மேல் குற்றம் சாட்டியதற்காக வருத்தம் தெரிவிக்கவில்லை.

குருதேவர்: அபாண்டமாக குற்றம் சாட்டியதற்காக வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். அரசியல் வாதிகளும், பத்திரிக்கையாளர்களும் மன்னிப்புக் கேட்க வேண்டும்.  அவர்கள் ஒரு தனி மனிதரைப் பழி சொல்ல வில்லை. ஒரு நிறுவனத்தின் மேல் பழி சுமத்தியிருந்தார்கள். அதுவும் 2000 வருடமாக இருக்கும் ஒரு நிறுவனத்தை குற்றம் சாட்டியிருக்கிறார்கள். அந்த நிறுவனத்தின் தலைவர் இந்து மதத்தை / சநாதன தர்மத்தைக் காக்கும் பிரதிநிதியாவார். இந்தக் குற்றச் சாட்டால் பலர் பல ஆண்டுகளாக வருந்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு கடந்த ஒன்பது ஆண்டுகள் கடும் சோதனையான காலமாக இருந்திருக்கும். ஆனால் சங்கராச்சாரியாருக்கு இது 

ஒரு தவம் போன்றது. அவர் இதை பற்றிக் கவலைப் பட வில்லை. ஒரு ஞானி போற்றுவதையும், இகழ்வதையும் சமமாக எடுத்துக் கொள்வார். எல்லாவற்றையும் புன்னகையோடு ஏற்றுக் கொள்வார். ஆனால் ஒரு அமைப்புக்கு, மக்களின் நம்பிக்கைகு இது ஒரு பெரிய கேள்விக் குறியாகும்.

சிலர் மக்களின் நம்பிக்கையைக் குலைத்து தீமை விளைவிக்கப் பார்க்கிறார்கள். ஆன்மீகத்தில், மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர்கள், போதை மருந்து கலாசாரத்துக்கும், துப்பாக்கி கலாசாரத்துக்கும் செல்ல மாட்டார்கள். தெய்வ நம்பிக்கையுள்ளவர்கள் மதுபானம் அருந்தும் விருந்துகளில் கலந்து கொள்ள மாட்டார்கள். எனவே இப்போதைப் பொருட்களையும், ஆயுதங்களையும் விற்பவர்கள் மக்களின் மத நம்பிக்கையையும், ஆன்மீக நாட்டத்தையும் அழிப்பதற்காக எதையும் செய்யத் துணிகிறார்கள். இது ஒன்றும் புதிதல்ல. வெகு காலமாக நடந்து வருகிறது. ஒரு கொசுவையோ, கரப்பான் பூச்சியையோ கூடக் கொல்லாதவர்கள் மேல் கொலைக் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். ஒன்பது ஆண்டுகள் கழித்து, 32 பேர்களும் நிரபராதிகள் என்று சொல்லி குற்றச் சாட்டை திருப்பி வாங்கி விட்டார்கள். நீதி காலம் தாழ்த்தாமல் கிடைத்திருக்க வேண்டும். ஆறு மாத காலத்துக்குள் இது நடந்திருக்க வேண்டும். ஆனால் ஒன்பது வருடம் ஆகி விட்டது. என்றாலும் உண்மை எப்போதும் வெற்றி அடையும் என்பதில் நம்பிக்கை வைக்க வேண்டும்.

கே: குருதேவா! விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் எது மிகவும் அழகானது? கல்கி அவதாரத்தைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள்?

குருதேவர்: அழகு பார்ப்பவரின் கண்களில் உள்ளது. எதை நீ விரும்புகிறாயோ அது உனக்கு அழகாகத் தெரியும். அழகு எங்கு இல்லை? முள் கூட அழகானது தான். இலைகளும் அழகானவை. உன் கண்ணோட்டத்தை நீ மாற்றிக் கொள்ளும் போது அழகு எல்லா இடத்திலும் இருப்பதைக் காண்பாய். ஒவ்வொரு அவதாரத்திலும் சில நல்ல குணங்களும், சில கெட்ட குணங்களும் இருக்கின்றன.

புண்பட்டவர்களை நோக்கும் நான்கு வழிகள்

நவம்பர் 26, 2013  - பெங்களூரு, இந்தியாகே: எதிர்பார்ப்பே இல்லாமல் எப்படி அன்பாய் இருந்து கொண்டிருப்பது? அன்பு செய்வதில், எதிர்பார்ப்புகள் எழுகின்றன, அது நிறைவேறவில்லை என்றால் காயப்படுத்துகிறது.

குருதேவ்: ஆம், இது போன்ற குட்டிக்கரண சாகசங்களை நீங்கள் கடந்து சென்றாக வேண்டும். உங்களுக்கு ஞானமிருந்தால், இதைக் கற்றுக்கொள்ள இந்த அவஸ்தைகளை படவேண்டிய அவசியம் இல்லை. ஞானமில்லாத போது, இந்த வலிகளை நீங்கள் கடந்தாக வேண்டும், ஆனால் கொஞ்ச காலத்தில் இதிலிருந்து மீண்டு விடுவீர்கள், கவலை வேண்டாம். ஒருவருடைய வாழ்க்கைக்கு ஒரு பெரிய அர்த்தம் இருக்க வேண்டும் என்பதின் காரணம் இது தான். ஒரு பெரிய அர்த்தம் இருக்கும் போது, இப்படிப்பட்ட சின்னஞ்சிறு விஷயங்கள் உங்களை உண்மையில் பாதிப்பதில்லை. சமுத்திரத்தின் மேலே எழும் அலைகளைப் போன்றது, அவை எழும் விழும்; ஏரியின் பரப்பில் ஏற்படும் நீர் வளையங்களைப் போல, காற்றடிக்கும் போது அவை எழும், காற்றடிக்காத போது அந்த வளையங்கள் இல்லை.

எனவே, இன்னும் பெரிய அர்த்தம் கொள்ளுங்கள். அதாவது ஆத்மஞானம் (சுயத்தைப் பற்றிய அறிவு; எதுவும் என்னை அசைக்க முடியாது, உணர்சிகளை விட நான் மிகப் பெரியவன், என்னை சுற்றியுள்ள உலகத்தை விட மக்களை விட நான் மிகப் பெரியவன். அவர்களுடைய புகழுரைகளோ, ஏச்சுக்களோ எனக்குப் பொருட்டல்ல. இவை எல்லாவற்றையும் விட நான் மிகப் பெரியவன்! இந்த விழிப்புணர்வு நம்மை மேலே உயர்த்துகிறது, பிறகு ஒருவர் உணர்சிகளின் சமுத்திரத்தில் மூழ்குவதில்லை, காயமடைவதில்லை.புண்பட்டவர்களை நான்கு விதமாகப் பார்க்கலாம்.

உங்களை புண்படுத்தியவர் வலி வயப்பட்டிருக்கிறார். அவர்களுக்கு தழும்புகள் உள்ளது, அவர்கள் மகிழ்ச்சியின்றி பரிதாபமான நிலையில் உள்ளார்கள். அவர்களிடம் உள்ளதை  தான் அவர்களால் பகிர்ந்து கொள்ள முடியும். அவர்கள் காயம் பட்டிருக்கிறார்கள், அந்த காயத்தைத் தான் அவர்களால் பகிர்ந்து கொள்ள முடியும். உங்களை காயப்படுத்துபவர்களிடம், உங்களுக்கு வலி தருபவர்களிடம், அவர்கள் வேண்டுமென்றே அதை உங்களுக்கு செய்வதாக நினைத்தாலும், உண்மையில் அவர்களிடம் மகிழ்ச்சி இல்லை என்பதே காரணம். அவர்களிடம் அமைதி இல்லை. வலி கொண்டிருக்கிறார்கள், காயம் பட்டிருக்கிறார்கள், எனவே அவர்கள் உங்களை காயப்படுத்துகிறார்கள். எனவே காயம் பட்டவருக்கு என்ன தேவை? பரிவு. எனவே உங்களை காயப்படுதுபவர்களிடம் நீங்கள் பரிவாய் இருக்க வேண்டும், ஏனென்றால் அவர்கள் அடிபட்டு புண்பட்டிருக்கிறார்கள். இது ஒன்று.

உங்களைக் காயப்படுத்துபவர் அறியாதவராயிருக்கிறார். அவர்களுக்கு வாழ்கை பற்றிய விசாலமான பார்வை இல்லை. அவர்களுக்கு தம்மைப் பற்றியே தெரியவில்லை மற்றும் தாம் என்ன செய்கிறோம் என்பதும் அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் அறியாதவர்களாகவும் அகங்காரம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களை கண்டு நீங்கள் வருத்தம் கொள்ள மட்டுமே முடியும், என்றாவது ஒரு நாள் அவர்கள் புத்திசாலியாவார்கள்  என்று நம்பிக்கை வைக்கலாம். தம்முடைய செயல்கள் மற்றவர்களை காயப்படுத்துகிறது என்று தெரியாமல் இருக்கிறார்கள், அவர்கள் இந்த உணர்வுகளை பெற வேண்டும் என்று பிரார்த்தித்து கொள்ளுங்கள்.

இது வினைப் பயன். நீங்கள் புண்பட வேண்டியிருப்பது உங்கள் வினைப் பயன், இவரில்லாவிட்டால் மற்றொருவர் இதை உங்களுக்குச் செய்திருப்பார். நாம் முற்காலத்தில் யாரையாவது காயப்படுதியிருப்போம், எனவே இயற்கை நமக்கு இப்போது அதை திருப்பித் தருகிறது. செய்த வினையின் பயன் தான் திரும்பக் கிடைக்கிறது என்று உங்களுக்குத் தெரியும்போது, நீங்கள் சாந்தமடைகிறீர்கள் அல்லவா?

உங்களை மேலும் உறுதியாக்க இது செய்யப்படுகிறது. நீங்கள் இன்னும் வலிமையாக வேண்டும் என்று இயற்கை இதை உங்களுக்கு அளிக்கிறது; உங்களிடம் உள்ள வலிமையையும் ஆற்றலையும் நீங்கள் கண்டு கொள்ள வேண்டும் என்ற நோக்கமே காரணம்.பந்தல் (துணி அல்லது தென்னங் கீற்றினால் ஆன தற்காலிக நிழற்கூடங்கள்)  கட்டும் போது, அதில் உள்ள மூங்கில் கம்பங்களை வேகமாய் அசைத்துப் பார்பார்கள். அதன் நோக்கம் அது உறுதியாய் இருக்கிறதா இல்லையா என்று பரிசோதிப்பதே. காயம் என்பதும் அதுவே தான், உங்களுக்குள் நீங்கள் சரியாக நிறுவப்பட்டிருக்கிறீர்களா இல்லையா, நீங்கள் ஞானத்திலிருக்கிறீர்களா இல்லையா என்று சரி பார்ப்பது.

ஒவ்வொரு காயமும் நீங்கள் உறுதியாய் இருக்கிறீர்களா இல்லையா என்று உங்களை அசைத்து பார்க்க முயல்கிறது. உங்கள் உறுதியை சோதனை செய்கிறது. இது உங்களை மேலும் உறுதியாக்க  தான். ஒரு அறிவாளி அல்லது யாரோ ஒரு புத்திசாலி உங்களை புண்படுத்துகிறார் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் நன்றியுணர்வு கொள்ள வேண்டும், ஏனென்றால் அதில் ஒரு நல்ல பொருள்  உள்ளது. நீங்கள் வலிமையாக வேண்டும் என்று விரும்புகிறார்கள். உங்களுடைய தாயார் உங்களை திட்டுகிறார் என்றால், ஒரு தீய நோக்கோடு அதைச் செய்யவில்லை. உங்கள் தந்தை உங்களைத் திட்டுகிறார் என்றால், ‘ஓ என் தந்தை என்னைக் காயப்படுத்துகிறார்! என் தாய் என்னைக் காயப்படுத்துகிறார்!’ என்று நீங்கள் கூற முடியாது.
உங்கள் பெற்றோர் உங்களை காயப்படுத்துவதில்லை; அவர்கள் உங்கள் மீதுள்ள கொண்டுள்ள அக்கறையினாலும் கவலையினாலும் அதைச் செய்கிறார்கள். அவர்கள் அன்பினாலும், தமக்குள்ள அளவான புரிதலினாலும் அதைச் செய்கிறார்கள் என்று நீங்கள் உணர வேண்டும்.

நீங்கள் காயமடையும் போது உணரும் இரண்டு முக்கியமான விஷயங்கள் – தகவல் தொடர்புக் குறைபாடு அல்லது புரிதல் குறைபாடு. காயமடைவதற்கு மற்றொரு காரணம் – தொடர்பில்லாத தற்காலிகமான விஷயங்களுக்கு உணர்ச்சிவசப்படுவது. நிகழ்வுகள் எல்லாம் தற்காலிகமானவை, அவை எல்லாம் நகர்ந்துகொண்டே இருக்கிறது. எல்லாமும் மாறிக் கொண்டிருக்கிறது. நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுவது தேவையில்லை, ‘ஒ அவன் இதை என்னிடம் சொன்னான், அவள் இதை என்னிடம் சொன்னாள்!’கன்னடத்தில் ஒரு பழமொழி உண்டு, ‘கடவுள் நாக்கில் எலும்பை வைக்கவில்லை; நாக்கு சுழல்கிறது, எல்லாத் திசைகளிலும் அது நகரும்.’ மக்களுடைய வாயிலிருந்து என்ன வார்த்தைகள் வருகிறது என்பதைக் கண்டுகொள்ளாதீர்கள்.

இன்றைய உலகில் இது ஒரு பெரும் பிரச்சினை. பல நோய்களுக்கும் முரண்பாடுகளுக்கும் மூல காரணம், நமக்கு வாயில் என்ன போடுவது என்று தெரியவில்லை, வாயிலிருந்து என்ன வர வேண்டும் என்பது தெரியவில்லை! மக்கள் எல்லாவிதமானவற்றையும் வாயில் அடைத்துக் கொள்கிறார்கள். இந்தச் சின்னஞ்சிறு துளையில் டன் டன்னாக (ஒரு டன் = நூறு கிலோ) உணவு உள்ளே செல்கிறது, வண்டி வண்டியாய் குப்பை வெளியே வருகிறது; இதுவே இந்த உலகின் துயரம். மறுபடி, கன்னடக் கவிஞர் ஒருவர் கூறினார், ‘மக்கள் கொள்ளும் எல்லா மகிழ்ச்சியும் வார்தைகளினால் மட்டுமே!’

விகடங்களும் சிரிப்புகளும் வார்த்தைகளால் நடக்கிறது, எல்லா முரண்பாடுகளும் வெறுப்புகளும் பேச்சினால்தான் ஏற்படுகிறது. பேச்சே உங்களை மகிழ்விக்கிறது, உங்களை சிரிக்க வைக்கிறது, அந்தப் பேச்சே சமூகத்தில் பிளவையும் மக்களிடையே வெறுப்பும் ஏற்படுத்துகிறது. எல்லாவிதமான செல்வமும் உங்களுக்கு உங்கள் பேச்சினால் கிடைக்கிறது. பேச்சே உலகில் உண்மையான பொக்கிஷம். எல்லாவிதமான காயங்களும் பேச்சினால்தான். சில வார்த்தைகள் வெளி வருகிறது, பிறகு யாரவது சொல்கிறார்கள், ‘ஓ, நான் காயப்பட்டுவிட்டேன்!’

இப்போது, உங்களை யாராவது உடல் ரீதியாக காயப்படுத்த முயன்றால், எச்சரிக்கையாய் இருந்து உங்களை நீங்கள் காத்துக் கொள்ளுங்கள். உங்களைக் காயப்படுத்த யாராவது வந்தால், உடனே நீங்கள் அவர் காலில் விழுந்துவிடுங்கள் என்று நான் சொல்லவில்லை. இல்லை, நீங்கள் புத்தியோடு இருந்து, உங்களை காத்துக் கொள்ளுங்கள்; குறிப்பாக சிறுமிகளும் பெண்களும், நீங்கள் தனியாக இங்கும் அங்கும் செல்லக் கூடாது.

பிரச்சினை என்னவென்றால், மதுவின் பயன்பாடு மூன்று மடங்கு அதிகரித்துவிட்டது, அதன் நேர் விகிதமாக உலகில் வன்முறையும் அதிகரித்துவிட்டது. ஆண்கள் தீயவர்கள் அல்ல, ஆனால் அவர்களை தீயவராக்குவது மது. இந்தியாவில் உள்ள ஆண்கள் அனைவரும் தீயவர்கள் என்று எண்ண வேண்டாம். பலப்பல தீய நிகழ்வுகள் பெண்களுக்கு நடந்துகொண்டிருக்கிறது; அது மதுவின் ஆதிக்கத்தால் தான். ஒருவர் செய்யும் ஒரே தீய செயல் மது அருந்துவது மட்டுமே. ஒருவர் மது அருந்திய நிலையில், அவர் அவராக இருப்பதில்லை, மற்றும் மது அருந்தியவருக்கு அருகில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதில்லை. பெண்கள் இந்த மது வியாபரங்களையெல்லாம் மூடுவதற்கு முயசிகள் எடுக்க வேண்டும்; மாறாக பெண்கள் கைகோர்த்து அவர்களும் சேர்ந்து மது அருந்துகிறார்கள்!

பெண்களின் பாதுகாப்புக்காகவே இந்தப் பெரிய விஷயம் நடந்தது; மதுவிற்குத் தடை விதிப்பதைப் பற்றியோ அல்லது மது தயாரிப்புக்குத் தடை விதிப்பதைப் பற்றியோ யாரும் பேசவில்லை. மதுவிற்குத் தடை இருக்கும் மாநிலங்களில், தடை இல்லா மாநிலங்களை விட குற்ற விகிதம் குறைவாக உள்ளது.
ஏன், கடவுள்கள் கூட மக்களை பாதுகாக்க ஆயுதங்கள் வைத்திருக்கின்றன. ஸ்ரீ இராமபிரான் வில் ஏந்தியிருக்கிறார், ஸ்ரீ கிருஷ்ணர் சக்ராயுதம் ஏந்தியிருக்கிறார். எனவே வெகுளியாக, எங்கும் சுற்றிவர வேண்டாம். குறிப்பாக தேர்தல் காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் மதுவின் பயன்பாடு அதிகரித்து வருகிறது, மக்கள் அதிகம் குடிக்கிறார்கள், இந்த நாட்களில் எச்சரிக்கையாய் இருத்தல் வேண்டும்.

கே: குருதேவ், நான் மிக அதிகமாய் விரும்புபவை எனக்குக் கிடைப்பதில்லை. என்னுடைய இந்த விருப்பம் ஒரு பலவீனமா?

குருதேவ்: பொறுமையாய் இருங்கள். நீங்கள் விரும்புவதை அடைய மூன்று விஷயங்கள் தேவை.
உண்மையான நோக்கம் – நீங்கள் விரும்புவது உங்களுக்கு ஒரு உண்மையான தேவையாக இருக்க வேண்டும். நம் விருப்பங்கள்  மாறிக்கொண்டே இருக்கிறது, ஆனால் அது தேவையாய் இருக்கும்போது அது கிடைக்கிறது. நம் விருப்பம் நமது தேவையாய் இருக்க வேண்டும்.

சுய முயற்சி – உங்கள் எந்த விருப்பத்தை அடையவும் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். சும்மா உட்கார்ந்துகொண்டு, ‘எனக்கு இது வேண்டும், எனக்கு இது வேண்டும்!’ என்று ஆசைப்பட்டுக் கொண்டே இருக்க முடியாது. அதற்காக நீங்கள் முயற்சி எடுத்தீர்களா? உங்கள் விருப்பம் தேவையாக மாறியதா? அதற்காக நீங்கள் உழைத்தீர்களா? உங்களுடைய 100% பங்களிப்பைச் செய்தீர்களா? இது அவசியம்.
நேரம் அல்லது வினைப் பயன் – அதற்கான வினைப் பயன் இருந்தால், நேரம் சரியாக இருந்தால், 

உங்களுக்குக் கிடைக்கும்! இந்த இருண்ட இரவில் நிலவைக் காண விருப்பம் கொள்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். நான் எவ்வளவு முனைந்தாலும் எப்படி நிலவைப் பார்க்க முடியும்? முழு நிலவைப் பார்க்க நான் 15 நாட்கள் காத்திருக்க வேண்டும். அமாவாசையன்று முழு நிலவைப் பார்க்க விழைந்தால் நீங்கள் 15 நாட்கள் காத்திருக்க வேண்டும்.மாதுளை கன்றை நட்டு வைத்துவிட்டு, ‘இல்லை, எனக்கு இப்போதே பழம் வேண்டும்!’ என்று சொன்னால்? நீங்கள் மூன்று வருடம் காத்திருக்க வேண்டும் அல்லவா! மாதுளை மரம் இரண்டு அல்லது மூன்று ஆண்டு காலத்திற்கு பிறகே பழம் தர ஆரம்பிக்கும். எனவே காலம் அல்லது வினைப் பயன் ஒரு காரணி.

கே: வடிவம் அற்றதை அடைய நாம் ஏன் வடிவு உள்ளதை அன்பு செய்ய வேண்டும்? இந்தக் கொள்கை முழுதும், உண்மையைத் திரித்துவிட்டு மக்களுக்கு அவர்களுடைய பாதையைக் காட்டாமல் ஒரு தவறான கருத்தை அல்லவா உருவாக்கி இருக்கிறது?

குருதேவ்: உணர்ச்சிகள் வடிவத்தை நோக்கியே பாய்கிறது. வடிவம் அற்றதின் மீது உணர்ச்சிகள் இருக்காது. பாருங்கள், நீங்கள் என்னிடம் மட்டுமே பேச முடியும், எனக்கு பக்கத்தில் உள்ள வெறுமையான இடதினோடு உங்களால் பேசமுடியாது. நான் காலி இடத்துடன் பேசுவேன் என்று நீங்கள் சொன்னால், பிறகு ஏதோ தவறாய் இருக்கிறது என்று பொருள். ஒரு வடிவத்தை மட்டுமே உங்களால் பார்க்க, தொட, முகர, சுவைக்க, தொடர்புகொள்ள மற்றும் உங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும். எந்த உணர்ச்சிகளின் நிறைவும், முழுக்க முழுக்க வடிவமே இல்லாத ஒரு இடத்தை, எல்லா வடிவங்களின் ஆதாரத்தை / மூலத்தை நோக்கியே உங்களை அழைத்துச் செல்லும்.

சமஸ்க்ருதத்தில் இரண்டு அழகான வார்த்தைகள் இருக்கிறது, விருபாக்ஷா மற்றும் விஸ்வரூபா. விருபாக்ஷா என்றால் வடிவம் இல்லாத கண்கள் என்று பொருள்; பலர் இதை ஒரு பெயராகவே உபயோகப்படுத்துகிறார்கள். விருபா என்றால் வடிவில்லாதது என்று பொருள், அக்ஷா என்றால் கண்கள் என்று பொருள், அதாவது வடிவம் இல்லாத கண்கள். இன்னும் ஆழமாகச் சென்றால், நம் மெய்யுணர்வு கண்களே இல்லாமல் பார்ப்பதையும், தோல் இல்லாமல் உணர்வதையும், நாக்கில்லாமல் சுவைப்பதையும் மற்றும் காதில்லாமல் கேட்க முடிவதையும் காணலாம்; இதுவே யோக சமாதி. ஆழ்ந்த சமாதியில், கனவைப் போலவே இப்படிப்பட்ட விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கிறது. ஐந்து புலன்களும் இல்லாமல், நுகரவும், சுவைக்கவும் அனைத்தையும் கனவில் செய்ய முடிகிறது அல்லவா? எனவே, விருபாக்ஷா என்பது வடிவே இல்லாமல் கண்கள் கொண்ட மெய்யுணர்வு.

விஸ்வரூபா என்றால் ஒவ்வொரு வடிவத்திலும் இருப்பது. இந்தப் பிரபஞ்சமே இறை வடிவம்; இறைவன் மரங்கள், மலைகள், ஆறுகள் வடிவாக இருக்கிறார். இந்த முழுப் பிரபஞ்சமே இறைவனின் வெளிப்பாடு; இறைவனின் உடல். இந்தப் படைப்பை விட்டுவிட்டு இறைவன் எங்கோ சொர்கத்தில் அமர்ந்திருக்கவில்லை, அவரே படைப்பு.

இறைவனும் படைப்பும் வேறு வேறு அல்ல. எள்ளின் உள்ளே எண்ணெய் இருப்பதைப் போல, அதை போலவே, இந்தப் படைப்பின் ஒவ்வொரு அணுவிலும், மெய்யுணர்வு உள்ளது. ஆடுபவரையும் ஆடலையும் எப்படி பிரிக்க முடியாதோ அப்படி. நீங்கள் ஆடலைப் பார்த்துக் கொண்டிருந்தால், ஆடுபவரையும் பார்க்கிறீர்கள். ஆடுபவரைப் பார்க்காமல் ஆடலைப் பார்க்க முடியுமா? எனவே இந்தப் பிரபஞ்சமே ஆடல், யார் அதை ஆட்டுவிப்பது? அந்த ஆடுபவர்!

ஒவ்வொரு மரத்திலும், ஒவ்வொரு மிருகத்திலும், ஒவ்வொரு மனிதரிலும் இருக்கும் உயிர் என்ன? அதுவே இறைவன்! இறைவன் பஞ்சபூதாத்மிகா, பஞ்ச பூதத்தில் இருக்கிறார். அவரே நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாசம்; அவரே இந்த ஐந்து பூதங்களின் ஆத்மா. இறைவன் ஐந்து பூதங்களாகவும், மெய்யுணர்வாகவும் இருக்கிறார். இறைவன் எங்கோ சொர்கத்தில் அமர்ந்திருக்கிறார் என்பது சரியானதல்ல.
மற்றொரு எளிமையான உதாரணம், எங்கும் நிறைந்திருக்கும் காற்று. இப்போதும் கூட காற்று இருக்கிறது. காற்று இல்லாமல் நீங்கள் இருக்க முடியாது. ஆனாலும், சில நேரங்களில் வெம்மையாக புழுக்கமாக உணரும்போது காற்று இருப்பதை நீங்கள் உணரவில்லை, ஆனால் காற்று இருக்கிறது. காற்றே இல்லை என்று நீங்கள் சொல்ல முடியாது. ஆனாலும், ஒரு குளிர்விப்பான் முன்னே அல்லது மின் விசிறியின் முன்னே நீங்கள் அமரும்போது காற்றை உணர முடிகிறது. தியானத்திலோ, சாமதியிலோ அல்லது ஞானத்திலோ அதுதான் நிகழ்கிறது.

கே: குருதேவ், எனக்கு என்னதான் உண்மையில் வேண்டும் என்று குழம்பியிருக்கிறேன். நான் ஆசைப்படும் பொருட்களை கேட்க ஆசிரமத்திற்கு வருகிறேன், ஆனால் இங்கு வந்து அருட் பேரானந்ததையே கேட்டு வீட்டிற்கு எடுத்துச் செல்கிறேன். அருட் பேரானந்தம் நன்றாகவே இருக்கிறது, ஆனால், இதனால் எனக்கு வாழ்க்கையில் எந்த பொருள் ரீதியான விஷயங்களும் கிடைக்காதா?

குருதேவ்: எனக்கு ஏதாவது வேண்டும் என்று பலமுறை சொல்கிறீர்கள், பிறகு உங்கள் ஆசைகளை குறைத்துக் கொள்கிறீர்கள், ‘இல்லை, எனக்கு இது வேண்டாம்!’ என்று கூறிவிடுகிறீர்கள். உங்களுடைய சங்கல்பங்கள் (உறுதியான விருப்பங்கள்) உங்களுடைய விகல்பதினாலேயே (சந்தேகங்கள்) குறைக்கப்படுகிறது.  நீங்கள் உண்மையாகவே ஏதேனும் நடக்க வேண்டும் என்று விரும்பினால், அது நிச்சயம் நடக்கும். நீங்கள் ஆசீர்வாதங்களை வேண்டினால் அது நிச்சயம் நடக்கிறது.

மகாபாரதப் போரில், ஸ்ரீ கிருஷ்ண பகவான் மூன்று முறை துரியோதனனைச் சந்தித்துக்  கூறினார், ‘சண்டை போடாதே, இந்தப் போர் நமக்கு வேண்டாம். அமைதியானப் பேச்சுவார்த்தைக்கு வா. உட்கார்ந்து அமர்ந்து பேசி ஒரு முடிவை ஒத்துக் கொள்வோம்.’ இந்தப் போர் நிச்சயம் நடக்கும், அதிலிருந்து கீதை பிறக்கப் போகிறது என்று ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்குத் தெரியும், ஆனாலும் அமைதியை வேண்டி மூன்று முறைகள் சென்றார். ஏன்? ஏனென்றால் ஒரு கால கட்டத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தாக வேண்டிய தேவை இருக்கிறது.

மகாபாரதத்தில், துரியோதனன் பாண்டவர்களுக்கு ஐந்து கிராமங்கள் தருவதாக ஸ்ரீ கிருஷ்ண பகவானிடம் ஒத்துக் கொண்டிருந்தால், அந்தச் சூழ்நிலை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து பாருங்கள். கீதையே இருந்திருக்காது! ஏன் மகாபாரத நூலே இருந்திருக்காது! யாராவது கேட்கிறார்கள், ‘இந்தச் செயல் எந்தப் பயனையும் அளிக்கப் போவதில்லை என்று தெரிந்துகொண்டே ஏன் அதைச் செய்கிறாய்?’ அதற்கு விடை, ‘ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பெரிய நோக்கம் இருக்கிறது, அது அந்தச் செயலினால் விளையும் பயனோடு தொடர்புடையது அல்ல. இதிலிருந்து எனக்கு என்ன கிடைக்கிறது என்பதல்ல கேள்வி; அந்தச் சூழ்நிலையில் நான் செயல்பட்டேனா என்பதுதான் கேள்வி.’

மருத்துவமனையில், நோயாளி உயிர் பிழைக்க முடியாது என்று நன்றாகத் தெரிந்தும் பல முறை மருத்துவர்கள் தங்களால் ஆன எல்லா முயற்சியையும் எடுக்கிறார்கள். இவர் உயிர் பிழைக்க மாட்டார் என்று தெரிந்த அந்தக் கணமே தங்கள் சிகிச்சையை நிறுத்தி விடுகிறார்களா என்ன? இல்லை! இதனால் எந்தப் பயனுமில்லை என்று தெரிந்தாலும் கூட, இதயத் துடிப்பு இருக்கும்வரை, மூச்சு இருக்கும்வரை ஒரு நோயாளியை மருத்துவர்கள் கவனித்துக் கொள்கிறார்கள். எனவே சில விஷயங்கள் நடக்க வேண்டும் எனும்போது நடந்தாக வேண்டும் என்ற பிரபஞ்சத் தத்துவத்தின் ஒரு உதாரணமே இது. ‘நடக்கட்டும்; எப்படியும் பிறக்கும் ஒவ்வொருவரும் இறந்துதான் ஆகவேண்டும். நோயாளியோ அல்லது ஆரோக்கியமானவரோ எப்படியும் ஒருவர் இறந்துதான் ஆகவேண்டும், பிறகு ஏன் ஒருவரை யாராவது பார்த்துக் கொள்ள வேண்டும்? அமைதியாக இருந்து விடுவோம்.’ என்று நாம் சொல்ல முடியாது. இது செய்வதற்கு சரியான விஷயமல்ல, நாம் அதை கவனித்தாக வேண்டும்.

சுனாமி ஏற்பட்டபோது, சுவாமி சத்யோஜதாவும் நானும் இலங்கைக்குச் சென்றிருந்தோம். நம்முடைய வளைகுடா நாட்டு மையம் துணிகள், மருந்துகள் என்று பல பொருட்களை  அனுப்பி இருந்தனர், நம்முடைய தொண்டர்களும் இருந்தனர். இராணுவத்தைச் சேர்ந்த சிங்கள விமானி ஒருவர் இருந்தார், அவர் இலங்கையின் தென் கிழக்குப் பகுதியில் பல உதவிகளைச் செய்துவந்தார். அவர் ஒரு வருத்தமான பாவ மன்னிப்பை தெரிவித்தார். தமிழர்கள் இருக்கும் பகுதியில் சுமார் 600 குழந்தைகள் படிக்கும் பள்ளிப் பகுதியில் வெடி குண்டுகள் போட அவருக்கு ஆணையிடப்பட்டது. அவர் கூறினார், ‘அந்த வேலையைச் செய்தாக வேண்டிய தருணத்தில் என் இதயமே இடிந்தது, நான் என் வேலையைத் துறந்து விட்டேன்.’
பிறகு, அவர் சுதர்ஷன்க் கிரியா பயின்றார். தன் வேலையைத் துறந்தபின், தன் முழு வாழ்க்கையைத் தொண்டு செய்ய அர்பணித்தார். குழந்தைகள் வாழ்வு மேம்படவும், அநாதை இல்லங்களிலும் சேவை செய்துவருகிறார். அந்த ஒரு நிகழ்வு, வேறு வழி இல்லாமல் தன்னுடைய மேலதிகாரிகளின் கட்டளைக்கு கீழ் படிய வேண்டி இருந்த அந்த ஒன்று, அவருடைய வாழ்க்கையே மாற்றிவிட்டது.

புத்தமதத்தைச் சார்ந்த அவருக்கு, வன்முறை எவ்வளவு பாவச் செயல் என்பது தெரியும். பல வருடங்களாக அது அவருக்குக் கடுமையாய் இருந்தது. சுனாமி நிகழ்ந்தபோது, அவர் வாழும்கலை நிறுவனத்துடன் சேர்ந்து அவ்வளவு சேவைகள் செய்தார். அந்த அதிர்சியிலிருந்து மீள்வதற்கு சிலருக்கு நீண்ட காலம் ஆகிறது. ஆனால் ஞானத்தின் துணை கொண்டு, அஷ்டவக்கிர கீதா, கிரியா மற்றும் தியானத்தின் பயனால் இவர் கூறினார், ‘முதல் முறையாக என்னால் புன்னகைக்க முடிகிறது; என் வாழ்வில் ஆனந்தம் திரும்பிவிட்டது.’
இந்த அறிவு, இந்த ஞானம், அளப்பரிய மதிப்புடையது.  இது அளவில்லா அழகுடையது மற்றும் இது அளவில்லாத சக்தி உள்ளது. இது மக்களை ஆழ்ந்த தழும்புகளிலிருந்தும், குற்றவுணர்விலிருந்தும், காயங்களிலிருந்தும் மற்றும் வலிகளிலிருந்தும் விடுவிக்க வல்லது; புதிய ஒளியை அளித்து ஒருவருடைய ஆன்மாவை மேலே உயர்த்த வல்லது. இது அந்த அளவு மனதைத் தொடுவதாக இருக்கிறது.

முன்பெல்லாம், அஷ்டவக்ர கீதா பொதுமக்களுக்கு அளிக்கப்படவில்லை. இந்தியாவில் கூட, இரண்டு மூன்று ஒளி நாடாக்களே ஒவ்வொரு மையத்திலும் இருந்தது, சற்று முன்னேறியவர்களுக்கு மட்டுமே இந்த வகுப்புகள் எடுக்கப்பட்டன. பிறகு, மக்கள் அந்த நிலை அடையும் வரை காத்திருக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும், எங்கே இருந்தாலும், ஒரு சில வரிகளே அவர்களின் வாழ்க்கையில் வித்தியாசத்தை ஏற்படுத்த வல்லது. இதற்குப் பிறகே எல்லோரும் அஷ்டவக்ர கீதா கேட்க அனுமதிக்கப்பட்டனர்; நாம் அதைத் திறந்து விட்டுவிட்டோம்.

அஷ்டவக்ர கீதா ஒரு உயர்ந்த ஞானம், உயர் நிலைக் கணிதம் கற்பதைப் போன்றது. கணிதத்தின் அடிப்படை அறிவு இல்லாமல் இதைக் கற்க முடியாது. இந்த வாதத்தைத் தான் முன்னோர்கள் கொண்டிருந்தார்கள். குவாண்டம் இயற்பியல் ஆரம்பப் பள்ளியில் கற்பிக்க முடியாது. ஆனாலும், செய்பவன் நான் என்ற நிலையிலிருந்து ஒருவரை உயர்த்தி, உண்மையை அப்படியே இருக்கும் நிலையில் பார்க்கும்படி செய்வது அஷ்டவக்ர கீதையில் கிடைக்கும் மிக மிக மதிப்புள்ள ஒரு ஞானம்.

கே: அன்பு குருதேவ், நான் மிக முக்கியமான வேலை செய்ய அல்லது படிக்க முற்படும் போது என்னுடைய மனநிலை குறுக்கே வருகிறது. என்னுடைய பெரும்பாலான செயல்களுக்கு என் மன நிலையையே நம்பியிருக்கிறேன். எப்படி இந்த மன நிலைகளிலிருந்து விடுபடுவது?

குருதேவ்: முதலில், இந்த நிலையை உணர்வதே பாதி வேலையைச் செய்துவிடுகிறது. உங்களை அலைக்கழிப்பது மன நிலை தான் என்பதை இப்போது உணர்ந்து கொண்டீர்கள், அப்படியானால் உங்கள் புத்தி விழித்துக் கொண்டிருக்கிறது என்று பொருள். அது சொல்கிறது, ‘இல்லை, நான் அப்படி மனநிலை சார்ந்தவனாக இருக்கப் போவதில்லை.’ அந்த உறுதியை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனநிலை படி செயல்பட முடியாத பல தருணங்கள் வாழ்க்கையில் உள்ளது. உதாரணமாக, நீங்கள் விமானத்தில் இருக்கிறீர்கள், திடீரென்று உங்கள் பயணத்தை தொடரவேண்டாம் என்று நினைக்கிறீர்கள், உங்கள் மனநிலை பாதியில் மாறிவிட்டாலும் உங்களால் விமானத்தை விட்டு வெளியேற முடியாது! நீங்கள் அங்கே இருந்தாக வேண்டும். அது நீங்கள் ஓட்டிக் செல்லும் நான்கு சக்கர வாகனம் அல்ல, நினைத்த இடத்தில் திரும்பிச் செல்ல. ஏன் நான்கு சக்கர வாகனத்தில் கூட எங்கு வேண்டுமானாலும் திருப்பிக் கொள்ள முடியாது, அதற்கான வெளியேறும் வழி அல்லது குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே நீங்கள் அதைச் செய்ய முடியும். எங்கு வேண்டுமானாலும் திருப்ப முடியாது.

எனவே, நீங்கள் ஞானத்தை மதிக்கவில்லை என்றால் வாழ்கை உங்களுக்குக் கடினமான பாடத்தை கற்றுத் தரும். வாழ்கை என்பது கடமையேற்றுக் கொள்வதில் இருக்கிறது உங்கள் மனநிலையைச் சார்ந்து அல்ல. மனநிலை என்பது நிலையானது அல்ல, அது வரும், அது மாறும். ஆனால், கடமையும் ஞானமும் எப்போதும் நல்ல விளைவுகளையே அளிக்கும்.

கே: குருதேவ், இறைவனால் செய்ய இயலாதது ஏதேனும் இருக்கிறதா? அது என்ன?

குருதேவ்: அவருக்கு எதிர்பாராத அதிர்ச்சி அளிக்க முடியாது! இறைவனால் உங்களை பழிவாங்க முடியாது; அது நடக்கவே நடக்காது!

கே: ‘யோக கரம்சு கௌஷலாம்’ (செயலில் ஆகச் சிறந்தது) என்பதைப் பற்றி தயவு செய்து விளக்க முடியுமா? எப்படி அதை என் வாழ்க்கையில் செயல்படுத்துவது?

குருதேவ்: நீங்கள் ஆகச் சிறந்த திறன்களை விரும்புகிறீர்கள் என்பது இந்தக் கேள்வி உணர்த்துகிறது; அவ்வளவுதான், நீங்கள் ஏற்கனவே திறன் படைத்தவரே. நீங்கள் ஆகச் சிறந்த திறனை விரும்பினீர்கள் என்றால், நீங்கள் ஏற்கனவே திறன் பெற்றவரே, மேலே செல்லுங்கள். நீங்கள் அதைக் கற்க விரும்பினால், நீங்கள் ஏற்கனவே அதைக் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் வாக்களிக்கச் செல்லும் போது, ஏற்கனவே வாக்களித்து விட்டீர்கள், புரிந்ததா? எனவே கற்க வேண்டும் என்று விரும்பும்போது, ஏற்கனவே பாதி நடந்துவிட்டது, கற்பது ஆரம்பித்து  விட்டது.