பொறாமையை வெல்வோம்


27 நவம்பர் 2013 - பெங்களூர், இந்தியா



நேற்று முன் தினம் பாகிஸ்தானில் ஒரு பெரிய தியான சங்கமம் வெற்றிகரமாக நடந்தது. பாகிஸ்தான் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். இது மிகவும் நல்லது.

கே: குருஜி ! பொறாமையை வெல்வது எப்படி?

குருதேவர்: ஒரு நாள் நீ இறக்கப் போகிறாய், மற்றவரும் இறக்கப் போகிறார் என்று தெரிந்து கொள்.  நீ யாரைப் பார்த்துப் பொறாமைப் படுகிறாயோ அவரும் இறந்து விடுவார். நீயும் இறந்து விடுவாய். எல்லாம் சாம்பலாகப் போகிறது. எதைப் பார்த்து பொறாமைப் படுகிறாய்?

ஒரு நாள் வெய்யில் காலத்தில் முல்லா நஸ்ருதீனும் அவருடைய நண்பரும் ஒரு மரத்தின் நிழலில் தூங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். தூங்கி எழுந்த முல்லா நஸ்ருதீன் சொன்னார். “நான் ஒரு அருமையான கனவு கண்டேன். ஒரு அழகான பெண் என் மேல் காதல் கொள்கிறாள்.” இதைச் சொல்லும் போது அவருடைய கண்கள் ப்ரகாசமாயின. 

அவருடைய மகிழ்ச்சியைக் கண்டு, அவர் நண்பர் சொன்னார். உன்னைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. என்னுடைய கனவில் ஏன் அழகான பெண்கள் வருவதில்லை ? எப்போதும் என் கனவுகள் பயங்கராமாக இருக்கின்றன. கனவில் என் மனைவியே வருகிறாள். எனக்கு பயத்தில் வியர்த்து விடுகிறது” என் மனைவியை நினைத்தால், பயத்தால் எனக்கும் வியர்த்து விடும் என்று உனக்குத் தெரியாதா? இது ஒரு கனவு தான். ஏன் உனக்கு நல்ல கனவு வரக் கூடாது? என் கனவை பற்றிக் கேட்டு ஏன் பொறாமைப் படுகிறாய்? அது தற்போது உண்மையாகுமோ இல்லை பிற்காலத்தில் உண்மையாகுமோ தெரியாது. உனக்கும் நல்ல கனவுகள் வர முடியும்” என்று முல்லா நஸ்ருதீன் சொன்னார்.

ஒருவரை பற்றி பொறாமைப் படும் போது நீ வாழ்க்கையைக் குறுகிய கண்ணொட்டத்தில் பார்க்கிறாய். அதைத் தாண்டிச் செல்ல வேண்டும். அதற்கு பற்றின்மை அவசியம். பற்றின்மை உன்னை உறுதியாக நடுநிலையில் வைக்கும். அப்போது மற்றவர்கள் உன்னைப் பார்த்துப் பொறாமைப்படுவார்கள்.

கே: குருதேவா ! ஒரு குரங்கின் கண்ணோட்டதில்  இவ்வுலகின் உண்மை ஒரு நாயின் கண்ணோட்டதிலிருந்து மாறு பட்டது. அதே போல் ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகை தன் கண்ணோட்டத்திலேயே பார்க்கிறான். அப்படி இருக்கும் போது முழுமையான உண்மையை எப்படி அறிய முடியும்? முழுமையான உண்மைக்கு (அப்சல்யூட் ட்ரூத்) அடையாளம் என்ன?

குருதேவர்: உண்மைக்கு பல நிலைகள் இருக்கின்றன. ஆத்மா விரிவடையும் போது அறிவும் மாற்றமடைகிறது. சிறு குழந்தையின் கண்களில் காணும் உலகுக்கும், ஒரு சிறுமியின் கண்களில் காணும் உலகுக்கும் மாறுபாடு இருக்கிறது. நீ வளர வளர இது மாற்றமடைகிறது. எனவே அறிவு ஆத்மாவின் ஒரு வெளிப்பாடு தான். ஆத்மா விரிவதையும் போது அறிவும் விரிவடையும்.

கே: குருதேவா ! இன்று சங்காராச்சாரியாரின் மேலிருந்த குற்றச் சாட்டுகளிலிருந்து அவரை விடுவித்து விட்டார்கள். அவர் போன்ற மகானுக்கு இப்படிப் பட்ட நிலை ஏன் வந்தது? எந்த அரசியல் வாதியும், பத்திரிக்கையாளரும்  அவர் மேல் குற்றம் சாட்டியதற்காக வருத்தம் தெரிவிக்கவில்லை.

குருதேவர்: அபாண்டமாக குற்றம் சாட்டியதற்காக வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். அரசியல் வாதிகளும், பத்திரிக்கையாளர்களும் மன்னிப்புக் கேட்க வேண்டும்.  அவர்கள் ஒரு தனி மனிதரைப் பழி சொல்ல வில்லை. ஒரு நிறுவனத்தின் மேல் பழி சுமத்தியிருந்தார்கள். அதுவும் 2000 வருடமாக இருக்கும் ஒரு நிறுவனத்தை குற்றம் சாட்டியிருக்கிறார்கள். அந்த நிறுவனத்தின் தலைவர் இந்து மதத்தை / சநாதன தர்மத்தைக் காக்கும் பிரதிநிதியாவார். இந்தக் குற்றச் சாட்டால் பலர் பல ஆண்டுகளாக வருந்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு கடந்த ஒன்பது ஆண்டுகள் கடும் சோதனையான காலமாக இருந்திருக்கும். ஆனால் சங்கராச்சாரியாருக்கு இது 

ஒரு தவம் போன்றது. அவர் இதை பற்றிக் கவலைப் பட வில்லை. ஒரு ஞானி போற்றுவதையும், இகழ்வதையும் சமமாக எடுத்துக் கொள்வார். எல்லாவற்றையும் புன்னகையோடு ஏற்றுக் கொள்வார். ஆனால் ஒரு அமைப்புக்கு, மக்களின் நம்பிக்கைகு இது ஒரு பெரிய கேள்விக் குறியாகும்.

சிலர் மக்களின் நம்பிக்கையைக் குலைத்து தீமை விளைவிக்கப் பார்க்கிறார்கள். ஆன்மீகத்தில், மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர்கள், போதை மருந்து கலாசாரத்துக்கும், துப்பாக்கி கலாசாரத்துக்கும் செல்ல மாட்டார்கள். தெய்வ நம்பிக்கையுள்ளவர்கள் மதுபானம் அருந்தும் விருந்துகளில் கலந்து கொள்ள மாட்டார்கள். எனவே இப்போதைப் பொருட்களையும், ஆயுதங்களையும் விற்பவர்கள் மக்களின் மத நம்பிக்கையையும், ஆன்மீக நாட்டத்தையும் அழிப்பதற்காக எதையும் செய்யத் துணிகிறார்கள். இது ஒன்றும் புதிதல்ல. வெகு காலமாக நடந்து வருகிறது. ஒரு கொசுவையோ, கரப்பான் பூச்சியையோ கூடக் கொல்லாதவர்கள் மேல் கொலைக் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். ஒன்பது ஆண்டுகள் கழித்து, 32 பேர்களும் நிரபராதிகள் என்று சொல்லி குற்றச் சாட்டை திருப்பி வாங்கி விட்டார்கள். நீதி காலம் தாழ்த்தாமல் கிடைத்திருக்க வேண்டும். ஆறு மாத காலத்துக்குள் இது நடந்திருக்க வேண்டும். ஆனால் ஒன்பது வருடம் ஆகி விட்டது. என்றாலும் உண்மை எப்போதும் வெற்றி அடையும் என்பதில் நம்பிக்கை வைக்க வேண்டும்.

கே: குருதேவா! விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் எது மிகவும் அழகானது? கல்கி அவதாரத்தைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள்?

குருதேவர்: அழகு பார்ப்பவரின் கண்களில் உள்ளது. எதை நீ விரும்புகிறாயோ அது உனக்கு அழகாகத் தெரியும். அழகு எங்கு இல்லை? முள் கூட அழகானது தான். இலைகளும் அழகானவை. உன் கண்ணோட்டத்தை நீ மாற்றிக் கொள்ளும் போது அழகு எல்லா இடத்திலும் இருப்பதைக் காண்பாய். ஒவ்வொரு அவதாரத்திலும் சில நல்ல குணங்களும், சில கெட்ட குணங்களும் இருக்கின்றன.