சுற்றுச்சூழலை பாதுகாக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

திங்கள் கிழமை, 6 ஜூன், 2016,

பெங்களூரு , இந்தியா


 நேற்று உலக சுற்றுச் சூழல் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டது.  உள்ளத்திற்குள்ளே  மாசு இன்றி இருப்பவர்களே சுற்றுச் சூழலையும் கவனித்துக்கொள்ள முடியும். ஒருவரது மனம், கோபம், வெறுப்பு, துவேஷம், அல்லது பேராசை இவற்றால் மாசுபட்டிருந்தால் அந்த நபர் எவ்வாறு சுற்றுச் சூழலைச் சுத்தப்படுத்த முடியும்? பேராசை கொண்டவர் சுற்றுச் சூழலின் நலனைப் பற்றிக் கவலைப்பட மாட்டார். தன்னுடைய வேலையை மட்டுமே செயது கொண்டிருப்பார்.

இன்று சுற்றுச் சூழலில் தூயமைக் கேடு பேராசையாலேயே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. ஒருவர் எப்போதும் கோபத்துடன் இருந்தால் அவரது பார்வை மங்கி, வெளியுலகில் எதையும் சரியாக எடுத்துக் கொள்ளமாட்டார். அவரது பார்வை சிதைந்திருக்கும்போது, ஏற்றுக் செய்யும் பணியும் அது போன்றே இருக்கும்.கோபம் நிறைந்த ஒருவரின் செயல்களை விசனமே தொடரும். இது நிச்சயம். உங்களுடைய வாழ்க்கையையே எடுத்துக் கொண்டு பாருங்கள். எந்த ஒரு செயலை கோபத்துடன் செய்த்தீர்களோ அதைப் பற்றி பின்னர் வருந்தியிருக்கிறீர்கள் அல்லவா? அவ்வாறு தான் நிகழும். ஏனெனில், கோபம் என்பது சரியான மன நிலை அல்ல.கோபமே ஏற்படக் கூடாது என்று நான் கூறவில்லை. ஆனால் எப்போதெல்லாம் கோபம் வருகிறதோ ஒரு நிமிஷத்திற்கு மேற்பட்டு அது மனதில் தங்கக் கூடாது.அப்போது அது தூய்மைக்கு கேடு அல்ல. ஆனால் கோபம் நீண்ட காலத்திற்கு மனதில் நிலைத்திருக்கும்போது அது மாசு ஏற்படக் காரணமாகிறது.

ஓர் வாழைப்பழத்தை சாப்பிடுகின்றீர்கள்.அதன் தோலை உரித்து அதை மேஜையின் மீதே வைத்து விட்டால் அது மாசினை ஏற்படுத்துவதில்லை.ஆனால் அந்த உரிக்கப்பட்ட பழத்த தோல், இரண்டு மூன்று நாட்களுக்கு அதே மேஜையில் இருந்தால் அது மாசினை ஏற்படுத்துகிறது.ஒரு சாக்கலேட்டை சாப்பிடும்போது அதன் மேலுறை ஒரே இடத்தில் நான்கைந்து நாட்களுக்கு இருந்தால் அது மாசினை உருவாக்கும்.குப்பைகள் சேரும்போது அவை  மாசு ஆகும்.

சில சமயங்களில் வாழ்வில் கோபம் அவசியமாகும்.பணிகளை நிறைவேற்ற வைக்க அது அவசியம். ஆனால் நமக்குள் அது ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டால்  அது தூய்மையின்மையை உருவாக்கும்.நமது பார்வையை மாசுள்ளதாக்கும். நமது பணிகள் பாதிக்கப்பட்டு, வருத்தம் நிறைந்தவர்களாகி விடுகிறோம்.வெறுப்பு நிறைந்த  ஒரு நபர், சுற்றுச்சூழலை முக்கியமானதாகக் கருத முடியாது.  இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மிகவும் மென்மையானதும்  மற்றும் உணர்திறன் அதிகமுள்ளதுமாகும். அதன்  மென்மையான தன்மையைப் புரிந்து கொள்ளும் பொருட்டு நாம்  உள்ளத்தில்  உணர்திறன் உள்ளவராக வேண்டும். உள்ளத்துள் நீர்மையும், எளிமையும் நிறைந்தவர் சுட்டுக் சூழலைப் பற்றிய உணர்திறனுடன் இருக்க முடியும்.

நமது வாழ்வின் ஐந்து உரைகளில் ( பஞ்சகோஷா ) முதலாவது சுற்றுச் சூழலேயாகும். அடுத்து குருதி மற்றும் எலும்புகளால்  ஆன உடல். இரண்டாவது பிராணமயா கோஷா (சுவாசம்) மூன்றாவது மனோமயா கோஷா (மனம்) பின்னர் விஞ்ஞானமயா கோஷா (அறிவுத்திறன்) ஐந்தாவது ஆனந்தமயா கோஷா ( பேரின்பம்). சுற்றுச் சூழலே நமது உடல் என்று நான் நம்புகிறேன். அது எவ்வாறு? காற்று மாசுபட்டால் உடல் தரிக்காது. காற்று விஷமாகி விட்டால் எப்படி வாழ்வீர்கள்? எனவே அதுதான் முதல் உடல்.

நமது மனங்களிலிருந்து மாசினை முதலில் அகற்ற வேண்டும்.சிலர் வாழும் காலை தூய்மையின்மையை  உருவாக்கிவிட்டதாகக் கூறுகிறார்கள்.அவர்களது பார்வை தான் தூய்மையற்றதாக இருக்கிறது. பார்வையை தெளிவாக்கிக் கொண்டால் நாங்கள் இந்தத் தூய்மையின்மையையும் ஏற்படுத்தவில்லையென்று அறிந்து கொள்வீர்கள்.

வாதம், பித்தம் மற்றும் கபம் என்னும் மூன்று தோஷங்களில் எந்த விதமான ப்ரக்ருதி தியானம் செய்வதற்குச் சிறந்தது?

தியானம் செய்வதன் மூலம் நீங்கள் இந்த வாதம், பித்தம் மற்றும் கபம் என்னும்மூன்று தோஷங்களையும் கடந்து செல்ல முடியும்.இந்த மூன்று தோஷங்களையும் அழிப்பது தியானம். முதலில் தியானம் செயது விட்டு நாடி பரிசோதனை செயது பார்த்தால் அது மாறியிருப்பதை அறிவீர்கள்.மூன்று தோஷங்களும் சமநிலையில் (சம தோஷா) இருந்தால் தியானம் செய்ய மிகச் சிறந்த நிலை யாகும்.ஆரோக்கியமாக இருந்தால் தியானம் ஆழமாக இருக்கும். தியானம் செய்வதன் மூலம் ஆரோக்கியம் மேம்படும்.

கவலைகளை எழுதி கவலைக்குறிய கூடையில் போட்டுவிட்ட பின்னர் அவை எவ்வாறு தீருகின்றன?

கவலைகள் தீருகின்றன அல்லவா? எவ்வாறு என்பதை என்னிடம் விட்டு விடுங்கள். உங்களை நச்சரிக்கும் கவலைகள் தீருவதை எத்தனை பேர் உணர்ந்திருக்கின்றீர்கள்? (அவையிலும் அனைவரும் கையுயர்த்துகின்றனர்) உங்கள் கவலைகளை எழுதி, அதற்குரிய கூடையில் போட்டு விட்ட பின்னர் அவை கவனித்துக் கொள்ளப்படுகின்றன.ஆகவே அதைத் தொடர்ந்து செய்யுங்கள் அதன் ரகசியத்தை உங்களுக்குத் பின்னர் கூறுகிறேன்.


அனைவருமே உங்களுக்குத் சொந்தமானவர்கள்  தனக்கென்று எதுவும் வேண்டாம் என்ற நிலையில் அனைவரின் பண்டிகையும் செய்யும் திறன் பெற்றவர்களாவீர்கள். ( குருதேவ் "இதுதான் ரகசியம் "என்று மெதுவான குரலில் கூறுகிறார்)