நேர்மையாக வியாபாரம் செய்!! உன் வருவாய் அதிகரிக்கும்.

31 ஜனவரி 2015
 
பெங்களூர், இந்தியா

கார்ப்பரேட் நிறுவனங்களின் கலாசாரமும்,ஆன்மீகமும் என்ற தலைப்பில், பல தொழிலதிபர்களை கூட்டி ஆக்கபூர்வமாக பேச்சு வார்த்தை நடத்தி, வியாபாரத்தில் நேர்மையை கடைப்பிடிக்கும் படித் தூண்டுவதற்காக, பெங்களூரில் உள்ள வாழும் கலை நிறுவனத்தின் பன்னாட்டு மையத்தில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல வியாபார நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டு கீழே கொடுத்திருக்கும் தலைப்புகளில் உரையாற்றினார்கள். தொழில் நிறுவனங்களின் பொதுவான மதிப்புகள்; உழைப்பவர்களின் திறமையை மேம்படுத்தும் வழிகள்; நிறுவனங்களுக்கிடையே ஒத்துழைப்பு; புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் வியாபார வளர்ச்சி.


வாழும் கலை நிறுவனம் மற்றும் வியாபாரத்தில் நேர்மையை வளர்ப்பதற்கான உலக அமைப்பு இரண்டும் சேர்ந்து நடத்திய இந்த மாநாட்டில் சிறந்த (நேர்மையான) தொழிலதிபர் / வியாபாரி மற்றும் சிறந்த (நேர்மையான) வியாபார / தொழில் நிறுவனம் இரண்டுக்கும் குருதேவரின் பெயரால் ஶ்ரீஶ்ரீ பரிசுகள் வழங்கப்பட்டன. (இம்மாநாட்டைத் துவக்கி வைத்து குருதேவர் ஆற்றிய உரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

12 ஆண்டுகளுக்கு முன் கேட்ட ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். புதிதாக வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் சில இளைஞர்களுடன் பெங்களூரில் பேசிக் கொண்டிருந்த போது வியாபாரத்தில் நேர்மை என்ற தலைப்பு வந்தது. அந்த இளைஞர்களின் கருத்து எப்படி இருந்தது என்று அறிய விரும்புகிறீர்களா? அவர்களின் கருத்துப்படி நேர்மையாக அப்பாவிகளால் தான் முடியும். வியாபாரத்தில் வெற்றி அடைய ஒருவர் (அதி புத்திசாலியாக) இருக்க வேண்டும். ஸ்மார்ட்டாக இருப்பது என்றால் எந்த வழியிலும் சென்று குறுகிய காலத்தில் நிறைய பணம் சம்பாதிப்பது என்பது அவர்களுடைய கருத்தாக இருந்தது. எனவே நேர்மை என்பது அப்பாவித்தனம். ஸ்மார்ட்டாக இருப்பது என்றால், பிடிபடாத வரை நேர்மையற்ற செயல்களில் ஈடுபட்டாவது நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். பிடிபடாத வரை நேர்மையற்ற செயல்கள் செய்வதில் தவறு இல்லை என்று சிலர் நினைத்தார்கள். இந்த இளைஞர்களிடையே கருத்து, பலர் நீண்ட நாட்களாக நேர்மையாக வியாபாரம் நடத்தி லாபம் சம்பாதிப்பதும் தெரிந்தது. அவர்களுடைய நிறுவனங்களும் பன்மடங்கு வளர்ச்சி பெறுவதைக் காணலாம்.

கடந்த 10 ஆண்டுகளில் இளைஞர்களிடையே நிலவி வந்த தவறான கருத்து  மாறியிருக்கிறது. ஏனென்றால் நேர்மையற்ற வழியில் சென்ற பல நிறுவனங்கள் மூடப்படுவதை நாம் கண்டோம். நம் இளைஞர்களும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளால் பாடம் கற்றுக் கொள்கின்றனர். ஆனாலும் நேர்மையின்மையும், ஸ்மார்ட்டாக இருப்பதும் எப்படி ஒன்று சேர்ந்தது என்பதை நினைத்தால் திகைப்பாக இருந்தது. அந்த சமயத்தில் இளைஞர்கள் கொண்டிருந்த தவறான கருத்தை மாற்ற ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தேன். நேர்மையாக வியாபாரம் செய்து வளர்ச்சி பெற்ற பலரை அழைத்து அவர்களுடைய அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள செய்து அவர்களை இவ்வுலகுக்கு முன்னுதாரணமாகக் காட்டுவது அவசியம் என்று எண்ணினேன்.
பல வியாபாரிகள் / தொழிலதிபர்கள் நேர்மையான வழியில் சென்று நல்ல லாபமடைந்து தங்கள் தொழிலை வளர்த்துக் கொள்கிறார்கள்.

ஆனால் பொதுவாக நேர்மையானவர்கள் முன்னுதாரணமாக காட்டப்படுவதில்லை. நேர்மையான வியாபாரத்திலும் லாபமடைய முடியும் என்ற உறுதி செய்ய இவர்களை முன்னுதாரணமாக மற்றவர்களுக்குக் காட்ட வேண்டும். எனவே இவர்களை அழைத்துப் பாராட்டி அவர்களுடைய அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக இந்த மாநாட்டைத் துவங்கினோம். கார்ப்பரேட் நிறுவனங்களின் கலாசாரமும் ஆன்மீகமும் என்ற தலைப்பில் இந்த மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இன்று இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பலர் பயன் பெறுவதை நினைத்து பெருமைப்படலாம். மக்களின் கருத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நேர்மையாக வியாபாரம் செய்பவர்கள் மக்களின் மதிப்பைப் பெறுகிறார்கள். அப்படிப்பட்ட நேர்மையான வியாபாரிகளும், தங்கள் வளர்ச்சியடைந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறார்கள்.

வியாபாரம் என்பது பயனற்றதல்ல. இந்தியாவில் பலர் வியாபாரம் செய்வதால் ஒன்றும் பயன் கிடையாது என்று நினைத்து வியாபாரம் செய்ய முன் வருவதில்லை. நேர்மையாக வியாபாரம் செய்வதால் எந்தக் கெடுதலும் வராது. ஆனால் நேர்மையற்ற வழியில் வியாபாரம் செய்வது நல்லதல்ல.

பெரிய வியாபார நிறுவனங்கள் தங்கள் சமூகப் பொறுப்பை உணர்ந்து, நேர்மையான வழியில் வியாபாரத்தை நடத்தி, அதில் வரும் லாபத்தில் ஒரு பகுதியை சமூக நலத் திட்டங்களுக்காக செலவழிக்கும் போது, அவர்களுடைய நிறுவனங்கள் ஒரு சமூக அந்தஸ்தைப் பெற முடியும். அவர்கள் மக்களின் நன்மதிப்பைப் பெறுவார்கள்.

நேர்மையற்ற வழியில் சென்று குறுகிய காலத்திலேயே உயர்ந்த இடத்தைப் பெறமுடியும். ஆனால் அவர்களின் வீழ்ச்சி மிகப் பெரிதாகவும், மிக வேகமாகவும் இருக்கும். அதிர்ஷ்டவசமாக கடந்த 10 வருட காலத்தில் அவர்களை பார்த்தோம். இலஞ்சமும்,நேர்மையின்மையும் எல்லாத் துறைகளிலும் நுழைந்து இருப்பதைப் பார்க்கிறோம். விளையாட்டுத் துறை, வியாபாரம், அரசியல் மற்றும் மதச் சார்பான அமைப்புகளிலும் இலஞ்ச ஊழலையும், நேர்மையின்மையையும் காண முடிகிறது. இப்படி சமூகத்துக்குத் தூண் போன்ற ஒவ்வொரு துறையிலும் இலஞ்சம் ஒரு புற்றுநோய் போல் பரவி விட்டது. எனவே இந்த நான்கு துறைகளும் முன் வந்து நேர்மையற்ற செயல் முறைகளில் ஈடுபடுவதை தவிர்த்து தங்கள் அமைப்புகளை தூய்மையாக வழி நடத்த வேண்டும்.

நேர்மையற்ற வழியில் குறுகிய காலத்தில் உச்சநிலையை அடைவதைப் பார்க்கலாம். ஆனால் அவர்களின் வீழ்ச்சியும் பெரிதாகவும், வேகமாகவும் இருக்கும். இயற்கை கடந்த பத்து ஆண்டுகளில் இப்படி பலரை நமக்குக் காட்டிக் கொடுத்திருக்கிறது. பல உதாரணங்கள் உள்ளன. அதில் ஒன்று விளையாட்டுப் போட்டிகளின் முடிவை முன்னதாகவே நிர்ணயித்து சூதாடுவது. (மேட்ச் ஃபிக்ஸிங்). இது வருத்தப்படக் கூடிய செயல். பல கோடி மக்கள் விளையாட்டுப் போட்டிகளை விரும்பிப் பார்க்கிறார்கள். நேர்மையற்ற சிலர் போட்டிகளின் முடிவை முன்னதாகவே அறிந்திருக்கிறார்கள்.  போட்டியில் யார் வெற்றி பெறுவார்? எத்தனை கோல்கள்? எத்தனை விக்கெட்டுகள் போன்ற விஷயங்களை முன்னதாகவே தீர்மானித்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.

விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பல துறைகளில் ஏன் இப்படிப் பேராசை நுழைந்தது என்பது சிந்திக்க வேண்டிய விஷயமாகும். புதிய தலைமுறையினருக்கு நல்ல உதாரணங்களை முன்வைப்பது நம் கடமையாகும். ஏனென்றால் இளைஞர்கள் வெகு வேகமாக முன்னேற்றமடைய விரும்புகிறார்கள். அவர்கள் நேர்மையானவர்களை உதாரணமாகக் கொண்டு நல் வழியில் செல்வது அவசியம். இந்த மாதிரி மாநாடுகள் வியாபாரம், அரசியல், விளையாட்டுத் துறைகள் மற்றும் மதச் சார்பான அமைப்புகளில் நேர்மையாக நடந்து வெற்றி பெற்றவர்களின் அனுபவங்களை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்ட உதவும்.

ஆம் ! நீங்களும் நேர்மையான வழியில் சென்று வெற்றியடைய முடியும்.நேர்மையாக இருந்தால் நன்றாகத் தூங்க முடியும். பயமில்லாமல் இருக்கலாம். இதயம் மலர புன்முறுவல் பூக்கலாம். ஆனால் நேர்மையற்ற செயலை செய்திருந்தால், முதலில் அது உன் புன்னகையைத் திருடிவிடும். தூக்கம் வராது. மற்ற சுகங்களையும் அனுபவிக்க முடியாது. பார்க்கப் போனால் நேர்மையற்ற வியாபாரம் உனக்கு அதிக நஷ்டத்தையே கொடுக்கும். நிறைய செலவு செய்து குறைந்த லாபம் பெறுவதை யார் விரும்புவார்கள்? இது நல்ல பொருளாதாரக் கொள்கையல்ல. சமுதாயத்தில் பல துறைகளிலுள்ள இளைஞர்களுக்கு இந்த விஷயத்தைப் பற்றி எடுத்துச் சொல்லவேண்டும். எனவே நேர்மையைக் கடைப்பிடிப்பதும் ஸ்மார்ட்டாக இருப்பதும் ஒன்றே. அதே போல் சேவையில் ஈடுபடுவது ஸ்மார்ட்டாக இருப்பவரின் அடையாளம். இந்த விஷயத்தை தெளிவாக எடுத்துரைக்க் வேண்டும். இந்த மாநாடு அதற்கு உதவும். நேர்மையான வழியைக் காட்டி உலக மக்களை நல் வழியில் நடத்த உதவும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நேர்மையற்ற செயலால் நீ உன் புன்னகையை இழக்கிறாய். தூக்கத்தை இழக்கிறாய். மற்ற சுகங்களை அனுபவிக்க முடியாமல் போய்விடும். இன்று உலக அளவில் தகவல் தொடர்பு மிக வளர்ச்சியடைந்திருக்கிறது. இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் கருத்துகள் இங்குள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல் சில நிமிடங்களில் உலகம் முழுதும் சென்றடையும். நிமிடங்களுக்கு அவசியம் இல்லை. செகண்டுகளில் சென்றடையும். ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் அமெரிக்கா நாடுகளிலுள்ள பலர் இந்நிகழ்ச்சியை பார்க்கிறார்கள். எனவே நாம் அடுத்த இரண்டு நாட்களில் நடத்தும் உரையாடல்கள் நேர்மையான வழிகளில் எல்லாத் துறையினரும் நடந்து கொண்டு இச் சமுதாயத்தை மேம்படுத்த உதவும்.

இச்சில வார்த்தைகளுடன், நான் உங்களனைவரையும் பாராட்டுகிறேன்.கருத்துப் பரிமாற்றங்களோடு, நேர்மையான சமுதாயத்தை வளர்க்க நல்ல திட்டங்களை உருவாக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். மாநாட்டில் பேசிய விஷயங்கள் அதோடு நிற்காமல், சமுதாய மேம்பாட்டுக்கான திட்டங்களை தேர்வு செய்து செயல்படுத்தப்பட வேண்டும். பேசினால் மட்டும் போதாது. செயல்படுத்த வேண்டும்.
இத்தனை அறிவாளிகள் கூடியிருக்கும் மாநாட்டில், கண்டிப்பாக நல்ல திட்டங்கள் உருவாகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்படும் போது சமுதாயம் வளர்ச்சியடையும். எல்லோருக்கும் நல்வழி காட்ட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !!

பரமானந்தம்

வெள்ளிக்கிழமை 30 ஜனவரி, 2015

பெங்களூர், இந்தியா


கேள்வி – பதில்கள்

ஆன்மீக சாதனைகள் செய்வது கடவுளை சந்திப்பதற்காக என்று நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அது என் இலட்சியமல்ல. நான் என் வாழ்க்கையிலும், என் வேலையிலும் சிறந்தவனாக இருக்க விரும்புகிறேன். அதற்கு ஆன்மீகம் எப்படி உதவ முடியும்? எல்லா விதமான வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கும் ஆன்மீகம் ஏன் ஒரு பொதுவான தீர்வைச் சொல்கிறது?

பார்! நீ பசியோடு இருக்கும்போது, பசியை தணிக்க ஒரே வழி உண்பது மட்டுமே.உனக்குத் தாகமாக இருக்கிறது தாகத்தைத் தணிக்க ஒரே வழி தான் உள்ளது. திரவப் பொருள்களை குடிக்க வேண்டும். ஆனால் எந்த வகையான திரவம் என்பதை நீ தேர்ந்தெடுக்க முடியும்.உனக்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. நீர், பழரசம், பால் முதலியன. திரவம் மட்டுமே உன் தாகத்தைத் தணிக்க வல்லது. அதே போல் வாழ்க்கையை சிறப்பாக வாழ, ஆன்மீகம் தேவை. உண்மையில் ஆன்மீகம் என்றால் என்ன? ஆன்மீகம் என்பது ஆன்மாவின் இயல்பான குணங்களை குறிக்கிறது. அதாவது அன்பு, அமைதி,ஆனந்தம்,கருணை,வாக்குறுதியை நிறைவேற்றுவது மற்றும் புரிந்து கொள்ளுதல்.  இவைகளே ஆன்மாவின் இயல்பான குணங்களாகும். நீ மனதைக் காத்து வளர்க்க வேண்டும். 

நல்லுணர்வுகளை வளர்க்க வேண்டும். அறிவைக் கூர்மையாக்க வேண்டும். உன் நடத்தை சிறப்பாக இருப்பதற்கு வேண்டிய எல்லாமும் செய்யவேண்டும். எனவே ஆன்மாவைப் போற்றி வளர்க்கும் எல்லாவற்றையும் ஆன்மீகம் என்று சொல்லலாம்.முறையான ஓய்வு,ஞானம் தேடுதல்,விரிவடைந்த பார்வை – இவைகளும் ஆன்மீகத்தின் ஒரு பகுதி தான். நாகரீகமான ஆனந்த மயமான வாழ்வுக்கு மேல் சொன்ன அனைத்தும் அவசியம்.

வாழ்க்கையின் செயல்களின் நோக்கமும் ஆனந்தமாக இருப்பது தான். ஏன் மற்றவர்களுக்குத் தொண்டு செய்கிறாய்? அப்படிச் செய்வது உனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. சேவை செய்யும் போது உனக்கு மகிழ்ச்சி கிடைக்கும். வாழ்வின் எல்லாச் செயல்களுமே மகிழ்ச்சியை நோக்கியே உள்ளன. மேலும் மகிழ்ச்சி,மகிழ்ச்சி என்று மனம் சொல்லும். ஆன்மாவில் ஒன்றியிருப்பதே பரமானந்தம் எனப்படும். எல்லோரும் உன்னைச் சேர்ந்தவர்கள். நீ எல்லோரையும் சேர்ந்தவன் என்ற உணர்வு வரும்போது இது ஏற்படும். வாழ்வில் வெற்றியடைய சில நன்மதிப்புகள் தேவை. நீ நேர்மையாக நடக்க வேண்டும். தொலை நோக்குப் பார்வை வேண்டும். உனக்கு சக்தி அவசியம். சுறுசுறுப்பு தேவை. ஆன்மீகம் ஒன்று மட்டுமே இவையனைத்தையும் தர வல்லது.

நீ ஆரோக்கியமாக இருந்தால் உன் பார்வை சிறப்பாக இருக்கும். நீ நன்றாகச் சாப்பிடலாம். உன் வாக்குவன்மை அதிகரிக்கும் தெளிவாக கேட்க முடியும். நன்றாக ஓட முடியும். இவை எல்லாமே ஒன்றைப் பொறுத்திருக்கிறது.(ஆரோக்கியத்தைப்  பொறுத்திருக்கிறது).அதே போல் வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் சிறப்பாக்குவது ஆன்மீகம் மட்டுமே.

குருதேவா! நட்புக்கு காலாவதியாகும் தேதி இருப்பது போலுள்ளது.(எக்ஸ்பைரி டேட்). என் பள்ளி நண்பர்கள் யாரும் என்னை இப்போது தொடர்பு கொள்வதில்லை. காலாவதி தேதி இல்லாத உறவு ஏதாவது இருக்கிறதா?

உன் ஆத்மாவுடன் உனக்கு இருக்கும் உறவுக்கு காலாவதி தேதி கிடையாது. மற்றவர்களோடு நீ நட்பாக இருப்பாயானால், உனக்கு முன்னால் வரும் எல்லோரிடமும் நீ நட்போடு  பழகுவாய். உன்னுடைய நட்புக்கு காலாவதி தேதி கிடையாது. அதற்கு உருவான தேதியும் கிடையாது. (மானுஃபாக்சரிங் டேட்)

குருதேவா! “சாதிப்பதால் நீ அதிக உற்சாகமடையும் போது நடுநிலைமையை இழக்க நேரிடும்” என்று சொன்னீர்கள். நாங்கள் குறைவாக சாதிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்கள் என்பது தெளிவு. சாதனையாளனாக, அதே சமயம் நடுநிலைமையில் இருப்பவனாக விளங்க என்ன வழி ?

அதை நீ தான் கண்டறிய வேண்டும்.

3 “C” க்கள் உனக்கு உதவும் என்று சொல்வேன்.
1.   கான்டெக்ஸ்ட் டு லைஃப் – வாழ்க்கையின் சந்தர்ப்பத்தைப் புரிந்து நடப்பது. வாழ்க்கையின் பெரிய நோக்கத்தைப் புரிந்துகொள்ளும் போது, உனக்கே ஆச்சரியமாக இருக்கும். உனக்குள் மாற்றங்கள் ஏற்படத் துவங்கும்.கோடிக்கணக்கான நட்சத்திரங்களை உள்ளடக்கிய பேரண்டத்தில் (பிரபஞ்சத்தில்), சூரிய மண்டலம் ஒரு புள்ளியை விட சிறிதாக உள்ளது. இந்த சூரிய மண்டலத்தின் பகுதியான பூமி ஒரு மிகச் சிறிய கிரகம் தான். இந்த பூமியில் 700 கோடி மனிதர்கள் வாழ்கிறார்கள். நீ அதில் ஒருவனாக இருக்கிறாய். பிரபஞ்சத்தில் நம் பங்கு  மிகவும் சிறியது. (அற்பமானது)

உன் பார்வை விரிவடையும் போது, நீ ஒன்றுமில்லை என்பதை உணர்வாய். ஒரு சிறு மணல் துளி போன்றவன்.அதையும் விடச் சிறியவன். நீ இந்த பூமியில் ஒரு அற்பமானவன் என்று புரிந்து கொண்டால், உனக்குள் ஓரு பெரிய மாற்றம் நிகழும். பிரபஞ்சத்தில் உன் சந்தர்ப்பத்தைப் புரிந்து கொண்டால், அது உன்னை நடு நிலைமையில் வைக்கும்.வாழ்க்கையில் அவ்வப்போது  சாதிப்பதால் கிடைக்கும் வெற்றிகளால் நீ கர்வமடைய மாட்டாய். நடு நிலைமையை இழக்கமாட்டாய்.

2.   கம்பாஷன் – கருணை
நீ சாதித்த வெற்றிகளுக்கு பலர் காரணமாக இருந்திருப்பார்கள்.அவர்களுக்கு நன்றியுடன் இருந்தால் நடுநிலைமையில் இருப்பாய். பந்தயத்தில் ஒருவன் வெற்றியடைய, அவன் பின்னால் பலரின் ஒத்துழைப்பு இருக்கும். இது மிகவும் இன்றியமையாதது

3.   கமிட்மென்ட் – மன உறுதி
மனஉறுதி வலிமையாக இருந்தால்,நடு நிலைமை தவற மாட்டாய். ஒவ்வொரு சிறு வெற்றியையும் உன் பாதையில் இருக்கும் படிகளாகப் பார்ப்பாய்.

குருதேவா! மதத்தையும், ஆன்மீகத்தையும் ஒரு வாழைப் பழத்தின் தோலுக்கும், உள்ளிருக்கும் பழத்துக்கும் ஒப்பிட்டு விளக்கினீர்கள். பழத்தைக் காப்பதற்காக அதன் மேலிருக்கும் தோலுக்கு  அவசியம் இல்லையா ?

சரியான மதத்துக்கு ஒரு இடம் உண்டு. மதமே இருக்கக்கூடாது என்று சொல்ல நான் கம்யூனிஸ்ட் மற்றும் நாத்தீகன் அல்ல. ஆனால் உள்ளே பழம் இல்லாத போது, தோல் இருந்து என்ன பயன் ? உள்ளே ஒரு பயனும் இல்லாமல், மனித நேயப் பண்புகள் இல்லாமல், கருணை இல்லாமல், அன்பில்லாமல், ஒருவரை ஒருவர் சார்ந்தவர் என்ற உணர்வில்லாமல், சடங்குகளை மட்டும் பின் பற்றி, மேலோட்டமான அடையாளங்களைக் கொண்ட மதங்கள், உலகில் பல மோதல்களுக்கும் வன்முறைச் சம்பவங்களுக்கும் காரணமாக உள்ளன. அப்படிப்பட்ட மதங்கள் உபயோகமற்றவை. அது தான் நான் சொன்னது.

மதங்களுக்குரிய இடம் உண்டு. அது இருக்கட்டும். உங்கள் திருமணம் உங்கள் மத வழக்கப்படி நடக்கிறது. பெயர் சூட்டும் விழா மத வழக்கப்படி நடக்கிறது. இறந்த பின் உடல் மத வழக்கப்படி அடக்கம் செய்யப்படுகிறது. ஆனால் மதங்கள் ஆன்மீகத்தை விழுங்க விடக்கூடாது. ஆன்மீகத்தின் அடிப் படையான அன்பு, கருணை, ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் பண்பு, பணிவு முதலியவற்றை மதங்கள் அழிக்க விடக் கூடாது. இந்த நற்பண்புகளையே ஆன்மீகம் என்று சொல்கிறோம்.

குருதேவா! உலகைத் துறப்பது பற்றி புத்தர் சொன்னதன் நோக்கம் என்ன? நாம் இவ்வுலகை விட்டுச் செல்ல வேண்டுமென்ற பொருளில் சொன்னாரா?

நீ எப்போதும் சந்தர்ப்பத்தை கவனிக்க வேண்டும். நீ புத்தரைப் பற்றி, அவர் என்ன சொன்னார் என்று பேசும் போது, யாருக்கு அப்படிச் சொன்னார். அந்தக் காலத்தில் சமுதாயம் எப்படி இருந்தது என்பதை மறக்கக் கூடாது. அதே போல் நீ ஏசு கிறிஸ்துவைப் பற்றியோ, முகம்மது நபியைப் பற்றியோ அல்லது மற்ற தீர்க்கதரிசிகளைப் பற்றிப் பேச விரும்பினால், அவர்கள் பேசிய சந்தர்ப்பத்தை மறக்கக் கூடாது – எப்போது? எந்த இடத்தில்? என்ன சொல்லப்பட்டது? யாருக்குச் சொல்லப்பட்டது?

புத்தரின் காலத்தில் இந்தியா மிக உயர்ந்த நிலையில்  இருந்தது. உலகத்தின் செல்வமனைத்தும் இந்தியாவில் இருந்தது. அந்தக் காலத்தில் இந்தியா மிகவும் வளர்ச்சியடைந்த நாடாக விளங்கியது. மக்களிடம் எல்லா செல்வங்களும் இருந்தன. பொன், பொருள், செல்வம் மிகுதியாக இருந்தது.
200 ஆண்டுகளுக்கு முன் லார்ட் மெக்காலே,இந்தியாவிலிருந்து லண்டனுக்குத் திரும்பிச் சென்றபின், ராணி எலிஸபெத்துக்கு கடிதம் எழுதினார். “நான் இந்தியாவில் எல்லா இடங்களுக்கும் பயணம் செய்து பார்க்கும் போது, எங்குமே ஒரு பிச்சைக்காரனைக் கூட பார்க்க முடியவில்லை. ஒரு திருடனைக்  கூட பார்க்க முடியவில்லை. அத்தனை செல்வ வளத்தை இந்த நாட்டில் கண்டேன். மக்கள் நல்லொழுக்கத்தோடு, உயர் பண்புகள் வாய்ந்தவர்களாக, தர்ம நெறிப்படி வாழ்கிறார்கள். என் கருத்துப் படி, இந்தியாவின் முதுகெலும்பான ஆன்மீகத்தையும், கலாசார பாரம்பரியத்தையும் உடைத்தாலன்றி, அந்த நாட்டை நாம் எப்போதும் வெற்றி கொள்ள முடியாது.

புத்தருடைய காலமும் பொற்காலமாக இருந்தது. பொருட் செல்வம் மிகுந்திருந்தது. மக்கள் செல்வ வளத்தில் மூழ்கி இருந்தார்கள். எனவே புத்தர் அவர்களை அழைத்து, “விழித்துக் கொள்ளுங்கள். பொருட் செல்வமளிக்கும் சுகத்தை மிஞ்சிய ஒன்று உள்ளது” என்று சொன்னார். அக்காலத்தில் மக்கள் ஒருவரோடொருவர் போரில் ஈடுபட்டிருந்தார்கள். முட்டாள்தனமான சின்ன சின்ன காரணங்களுக்காக போர் செய்வது வழக்கமாக இருந்தது. எனவே புத்தர் அவர்களை அழைத்து “இப்படிச் செய்வதை விட்டு விடுங்கள். வாழ்க்கையில் உலக சுகத்தை மிஞ்சிய ஒன்று உள்ளது” என்று சொன்னார்.

உண்மையான அனுபவமின்றியே, மக்கள் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்தார்கள். தத்துவங்கள் அவர்களிடம் இருந்தன. கடவுளை அறியாமலேயே, கடவுளைப் பற்றிப் பேசி வந்தார்கள்.புத்த பகவான் அவர்களிடம், “வாருங்கள்! நான் உங்களுக்கு ஒரு எளிமையான விஷயத்தைப்  பற்றிச் சொல்வேன்” என்றழைத்தார். அவர்கள் மறந்துவிட்ட தியான நிலைக்கு படிப்படியாக எடுத்துச் சென்றார்.

புத்தர் என்றும் ஒரு புதிய மதத்தை ஆரம்பிக்க வில்லை. ஒரு இந்து துறவியாகவே வாழ்ந்தார். துறவிகளின் விதிகள்படி வாழ்ந்து, துறவியாகவே உயிர் துறந்தார். புத்தரின் மறைவுக்குப் பின்னர், அவர் கற்பித்த தத்துவங்களை மக்கள் தனி மதமாக ஏற்றுக் கொண்டார்கள். அதுவே புத்த மதம். உபநிஷதங்களிலுள்ள அனைத்தையுமே புத்தர் மக்களுக்குச் சொல்லி வந்தார். தத்துவத்தில் ஒரே ஒரு வித்தியாசம் மட்டும் இருந்தது. அது அனாத்மவாதம். அவர் தத்துவப்படி ஆத்மா என்பது இல்லாத ஒன்று. ஆத்மா என்று எதுவும் இல்லை. நான் ஆத்மாவைத் தேடிப்பார்த்து, எனக்கு அது கிடைக்கவில்லை. இருப்பதெல்லாம் வெற்றிடம் மட்டுமே” என்று புத்தர் சொன்னார்.

எல்லாவற்றிலுமுள்ள வெறுமையைப் பற்றி புத்தர் அதிகம் பேசினார். “எல்லாமே ஒன்றுமில்லாத வெறுமையே” என்று அவர் சொன்னார்.

11 கேள்விகளுக்கு, புத்தர் எப்போதும் விடையளிக்கவில்லை. அந்தக் கேள்விகளில் கடவுளைப் பற்றிய கேள்வியும் ஒன்று.கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு புத்தர் பதிலளிக்கவில்லை. அவர் கடவுளை எப்போதும் மறுக்கவில்லை.அதே சமயம் அந்த உரையாடலில் அவர் புக விரும்ப வில்லை. அக்காலத்தில், மக்கள் மனதில் பல கருத்துக்கள் வழங்கி வந்தன. ஒவ்வொருவரும், அதை அறியாமலேயே, தங்களுக்குத் தெரியும் என்று நினைத்தார்கள். புத்தர் வாக்குவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை. வாழ்க்கையில் துன்பத்தை நீக்க, உங்களுக்கு ஒரு எளிமையான வழியைச் சொல்ல நான் வந்திருக்கிறேன்” என்று அவர் சொன்னார். அவர் தியானம் பற்றியும், விடுதலை பற்றியும் பேசினார்.

குருதேவா! நான் வேதாந்தம் படிக்கிறேன். நியாய சாஸ்திரம் பற்றிச் சொல்வீர்களா? (தர்க்க சாஸ்திரம், காரண சாஸ்திரம்)

நியாயம் என்றால் அறிவதற்கான வழி முறை என்று அர்த்தம். உன் அறிவு, மற்றும் அந்த அறிவை பெற உதவிய வழி முறை சரியானதா? இல்லை தவறானதா? இது அறிவார்ந்த விவாதமாகும். நியாய சாஸ்திரத்தில் 16 கொள்கைகள் இருக்கின்றன. உன் கருத்து சரியா என்று பார்க்க பல வகையான நியாயங்கள் உள்ளன. நியாய சாஸ்திரம் இவற்றை பற்றிச் சொல்கிறது.பள்ளியிலிருந்து  நாமறிந்த வரை, கலீலியோ தான் பூமி சூரியனைச் சுற்றி வருவதாகச் சொன்னவர்.ஆனால் இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே, மக்கள் சூரியன் நடுவில் இருப்பதையும், மற்ற கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருவதாக நம்பினார்கள். நீ கோவிலுக்குச் சென்று நவகிரகங்களைப் பார்த்தால், அதில் சூரியன் நடுவிலும், மற்ற கிரகங்கள் சூரியனைச் சுற்றியமைந்திருப்பதையும் காண முடியும்.

பூமி உருண்டை என்ற உண்மையை பல காலம் முன்பே இந்தியர்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே, இந்தியர்களின் பஞ்சாக்கத்தில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் இயக்கத்தை மிகவும் துல்லியமாக கணித்திருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பாகவே வரப்போகும் கிரகணங்களைப் பற்றிய விவரங்களையும்,குரு பெயர்ச்சி எப்போது நிகழும் என்ற கணிப்புகளையும் நமக்குத் தந்திருக்கிறார்கள். அவை இப்போது கணிப்புப்படி நிகழ்வதை நாம் காண்கிறோம். ஆம். மேற்கத்திய நாடுகளில் கலீலியோ இதைக் கண்டு பிடித்தார். அப்படிச் சொன்னதற்காக மரண தண்டனை பெற்றார். இந்தியாவில் மக்கள் பல காலமாக அறிந்திருந்தார்கள். வான சாஸ்திரத்தை ககோளம் என்று குறிப்பிட்டார்கள். கோளம் என்றால் உருண்டை என்று அர்த்தம். அதன்படி இந்தப் பிரபஞ்சம், மற்றும் கிரகங்கள் யாவும் உருண்டை வடிவில் உள்ளன. 

கிரகங்களின் இயக்கம் பற்றியும் அறிந்திருந்தார்கள். சரித்திரத்தை திரும்பவும் எழுத வேண்டும். சூரிய உதயத்தின் போது சூரியன் எழுவதைப் பார்க்கிறீர்கள். சூரியன் எழுவதோ, அஸ்தமனத்தின் போது கீழே செல்வதோ இல்லை. அது பூமியின் சுழற்சியால் ஏற்படும் ஒரு தோற்றம் மட்டுமே. அதேபோல் சில விஷயங்கள் விபத்து போல் நிகழ்கின்றன. ஒரு காகம் மரத்தில் உட்காரும் போது, ஒரு மாம்பழம் கீழே விழுவதைக் காண்கிறோம். பழம் கீழே விழ காகம் தான் காரணம் என்று சிலர் நினைக்கக் கூடும்.அந்தப் பழம் ஏற்கனவே நன்றாகப் பழுத்து விட்டதால், விழுந்திருக்கலாம். காக்காய் உட்கார்ந்ததால், அது கீழே விழுந்தது என்று நாம் தவறாக நினைக்கிறோம். இதை காகதலிய நியாயம் என்றழைப்பார்கள். இது நியாய சாஸ்திரக் கொள்கைகளில் ஒன்றாகும். நாம் காண்பது சரியா? தவறா? என்று புரிந்து கொள்ள பல முறைகள் உள்ளன.

எவ்வித வருத்தமும் இல்லை

புதன்கிழமை, 28/01/2015, 

பெங்களூரு, இந்தியா


கேள்வி - பதில்

குருதேவ், தியானம் பற்றி அராய்ந்து அதில் ஆழமாகப் போக வேண்டும் என்று ஆவலாய் உள்ளேன். இது நம்மை தளர்த்திக் கொள்வதற்கு எதிரானதா?

தியானத்தில் நீங்கள் ஏதும் செய்ய வேண்டியதில்லை. உங்களை தளர்த்திக் கொண்டாலே போதும், ஆழமாய் செல்லலாம். தியானத்தில் ஆழமாக போவதை தடுப்பது எதுவென்றால்,அதிகமான உணவு உட்கொள்வது அல்லது மற்ற புலன்களை அதிகமாக உபயோகப்படுத்துவது. அதிகமாக திரைப்படம் பார்த்துவிட்டு, நீங்கள் தியானத்தில் அமர்ந்தால், தியானம் நிகழாததை அனுபவிக்கவில்லை? ஒரு திரைப்படம் பார்த்தபின், தியானத்தில் அமர்ந்து உயர்நிலை செல்வது கடினம். ஏனென்றால் மனதில் ஏராளமான உருவங்களின் பதிவுகள். இரண்டாவதாக, மிகவும் சோர்வாக இருந்தாலும் தியானம் நிகழாது. நீங்கள் அதிக உணவு உண்டிருந்தாலோ அல்லது அதிகம் உடற்பயிற்சி செய்திருந்தாலோ தியானம் நிகழாது. எனவே, மிதமான உடற்பயிற்சி, மிதமான உணவு மற்றும் போதுமான பிராண சக்தி இருந்தால் ஆழமான தியானம் ஏற்படும். இவை எல்லாம் ஒன்றாக அமையவேண்டும்.

எனக்கு வயதாகிறது, மரணத்தைக் கண்டு அஞ்ச ஆரம்பித்து விட்டேன். இதற்கு ஒரு தீர்வைச் சொல்லுங்கள்.

வாழ்வில் மரணம் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம்.வாழ்க்கையில் பல வேலைகளில் நாம் ஈடுபட்டிருந்த வரை நமக்கு மரணம் பற்றிய பயம் இல்லை.செய்வதற்கு ஏதும் இல்லாதபோது, நாம் மரணமடைய போகிறோம் என்று உணர ஆரம்பிக்கிறோம். ஒருநாள் இறந்தாக வேண்டும். ஆனால் முக்கியமானது என்னவென்றால், நாம் இறக்கும் போது நம் முகத்தில் புன்னகை இருக்கவேண்டும். நம்முடைய பொறுப்புகளை,கடமைகளை முடித்துவிட்டோம் என்ற நிறைவு வேண்டும். உலகிற்கு வந்தபோது அழுதோம்,போகும் போதாவது சிரித்துக்கொண்டே போகவேண்டும். வாழ்க்கையில் வருத்தங்களை வைத்துக் கொள்ளாதீர்கள். “நான் செய்ய வேண்டியவற்றை செய்துவிட்டேன், இந்த உடலைத் துறப்பதற்கான நேரம் வரும்போது, நான் மகிழ்ச்சியாக இறப்பேன்,” என்ற உணர்வு உங்களுக்கு வேண்டும். நாம் இறப்பதற்கு முன் மற்றவர்களுக்குச் நாம் செய்ய வேண்டிய தொண்டை செய்துவிட வேண்டும்.

குருதேவ், நான் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆட்டக்காரன். விளையாட்டுத் துறையில் நேர்மையாக இருந்து வெற்றிகரமாக இருக்க முடியுமா? விளையாட்டு வீரருக்கு வெற்றி என்பது என்ன?

நீங்கள் விளையாடுவதை கோடிக்கணக்கானவர்கள் பார்கிறார்கள். அவர்களுக்கு உண்மையான விளையாட்டு விளையாடப்பட வேண்டும். நீங்கள் உண்மையாக விளையாடுகிறீர்கள் என்று நம்பும் அவர்களை ஏமாற்றக்கூடாது. ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்ட விளையாட்டை ஆடும் போது அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். எப்போதும் முட்டாளாக்காதீர்கள். விளையாட்டை ஆர்வத்தோடு பார்த்து மகிழும் மக்களை ஏமாற்றுவது நியாயமல்ல.

குருதேவ், இந்தியாவில் கூறப்படும் அர்த்தநாரீஸ்வரர் கருத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டு விட்டேன். இதைப் பற்றி தயை கூர்ந்து விளக்குங்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும் தாய் மற்றும் தந்தை கூறுகளால் ஆக்கப்பட்டவர்கள். தந்தையுடைய விந்தினாலும் தாயுடையுனடைய கருமுட்டையாலும் உருவாக்கப்பட்டவர்கள். எனவே உங்களில் பாதி தந்தை பாதி தாய் அல்லது பாதி ஆண்,  பாதி பெண். இதுதான் அர்த்தநாரீஸ்வரர். இந்தப் பிரபஞ்சமே வெளிப்பட்டவை மற்றும் மறைந்தவை சேர்ந்தது. உடலும் மனமும் சேர்ந்தது. பார்கப்பட்டதும்,பார்கப்படாததும் சேர்ந்தது. ஆண் மற்றும் பெண் தன்மை சேர்ந்தது. இதுதான் அதை முழுமையாக்குகிறது.உங்களுக்குள் உங்கள் தந்தையின் மரபணு மற்றும் தாயின் மரபணு இரண்டும் இருக்கிறது. உங்கள் உடல் ஆணோ அல்லது பெண்ணோ, அது பொருட்டல்ல.

காதலில் இரண்டு முறை தோற்றுவிட்டேன். என்ன செய்வது? இதயம் எத்தனை முறை உடையும்? நான் நொறுங்கிப் போய்விட்டேன். விரும்பிய ஒருவருக்கு ஏன் வேறொருவருடன் திருமணம் நடந்தது?

கவலை வேண்டாம். இரண்டு முறை மட்டுமே தோற்றிருக்கிறீர்கள்.IAS தேர்வுக்குக் கூட மூன்று வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது. கண்டுகொள்ளாதீர்கள்.அன்பு செய்யவதற்கும் விட்டு விலகுவதற்கும் இது ஒரு அனுபவம்.

குருதேவ், தியானம் செய்யும் போது எந்த திசை நோக்கி அமர்கிறோம் என்பது முக்கியமா? வடக்குத் திசையில் தலை வைத்து படுப்பது கூடாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆம், காந்தவிசை அந்த திசைகளில் பாய்வதால், தலை வைத்துப் படுக்கக் கூடாது. ஆனால், தியானம் செய்யும் போது சூரியன் இருக்கும் திசை நோக்கி அமரலாம். சூரியனின் மறைவுக்கு பிறகு என்றால் வடக்கு நோக்கி அமரலாம். எந்தத் திசை நோக்கி அமர்கிறீர்கள் என்பது பொருட்டல்ல. உடலுக்குத் தான் திசையின் தொடர்பு. தியானத்தின் போது நீங்கள் பேருணர்வின் வடிவமற்ற தன்மைக்குப் போகிறீர்கள். எங்கும் அதுவே. எனவே அது பொருட்டல்ல.ஆனால், ஜபம் அல்லது பூஜை செய்யும் போது கிழக்கு நோக்கியோ, வடக்கு நோக்கியோ அல்லது வடகிழக்கு நோக்கியோ அமர்ந்தவாறு செய்ய வேண்டும். நேரங்களில் தெற்கு திசை நோக்கியும் அமர்கிறோம். பரவாயில்லை.

பெரு நிறுவனங்களில் இருக்கும் பாரபட்சமான சூழலை எப்படிக் கடப்பது?


இதை நீங்கள் முழுதும் கடந்து சென்றுவிட முடியாது. பேருணர்வின் உயரிய நிலையில் மக்கள் இருந்தாலொழிய பாரபட்சத்தைத் தவிர்க்க முடியாது. கடுமையாய் உழைப்பவர்கள் சாமர்த்தியமாகவும் இருக்க வேண்டும்.

இந்தியா – பன்முகம் படைத்த நாடு

செவ்வாய், 27/01/2015  

பெங்களூரு, இந்தியா

(இது ‘புகார் செய்யவும் வேண்டாம், விளக்கவும் வேண்டாம்’ என்ற பதிவின் தொடர்ச்சி)

குடியரசு தின கொண்டாட்டங்கள் பற்றி நேற்று பேசினேன். குடியரசு தினத்தைக் கொண்டாடுவது ‘பிரம்ம ஞானத்தை’ (பிரம்மத்தை அல்லது முழுமையைப் பற்றிய அறிவு)மதித்துக் கொண்டாடுவது போலாகும். அது எப்படி? தாயின் கருவறையிலிருந்து நாம் பிறந்தபோது இந்த முழு உலகுக்கும் நாம் ‘பொது’வானவராகி விட்டோம். பிறப்புக்கு முன் நாம் தனி இடந்தில் இருந்தோமல்லவா!! மூன்று வயதிற்குப் பிறகு நாம் திரும்பவும் தனி ஆகிவிடுகிறோம். நமது சொந்த உலகில் ஒடுங்கி விடுகிறோம். ‘நான் மற்றும் எனது’ என்பதில் சிக்கிவிட்டோம்.‘என்னுடைய அம்மா’,‘என்னுடைய அப்பா’ என்று அதை மட்டுமே நினைக்கிறோம். மறுபடி நாம் தனியாகி விடுகிறோம். உங்களிடம் தனியாக ஏதுமில்லை, எல்லாம் பொதுவானது, ஒவ்வொன்றும் ஒவ்வொருவரும் உங்களுடையவர் என்ற உணர்தல் உங்களுள் எழும்போது – திரும்பவும் நீங்கள் ‘பொது’வாகி விடுகிறீர்கள். அது பொதுவரசு (குடியரசு – Re-public). நீங்கள் ‘த்விஜா’ ஆகிவிடுகிறீர்கள். அதாவது, விழிப்புணர்வு மற்றும் ஞானத்தின் பாதையில் நீங்கள் மறுபடி பிறந்திருக்கிறீர்கள், இரண்டாம் முறை பிறந்திருக்கிறீர்கள் என்று பொருள். ‘தனி’யிலிருந்து மறுபடி பொதுவாக ஆகியிருக்கிறீர்கள்.இதுவே ஞானியின் அறிகுறி. உங்களுக்குள் இருக்கும் உலகத்திற்கும் வெளியே உள்ள உலகத்திற்கும் உள்ள அத்தியாவசியமான ஒற்றுமையை நீங்கள் காண்பதே ஞானம். நீங்கள் உள்ளே வித்தியாசமாக உணர்ந்து, வெளியே வித்தியாசமாக நடந்து கொண்டால் அது மீள் குடியரசு (Re Public) அல்ல. நான் சொல்வது புரிகிறது?


கேள்வி  - பதில்

குருதேவ், நீங்கள் ஃபாரித் மகானின் பஜனைப் பாடல்களில் இருந்து “சப் சயானே ஏக் மட்”  (இறைவன் ஒன்றே என்பதை வேற்றுமையே இல்லாமல் ஞானிகள் கூறுவார்கள்) என்ற பாடலை நீங்கள் அடிக்கடி சொல்வீர்கள். ஆனால் இந்திய வரலாற்றைப் பார்த்தால், புத்தர் மற்றும் மகாவீரர் போன்ற மகான்கள் ஒரே நிலப்பகுதியில் பிறந்திருந்தாலும், வேறு வேறு பாதையில் சென்றனர். எல்லாம் ஒன்று என்றால் ஏன் இத்தனை வித்தியாசங்கள், முரண்பாடுகள்? தயவு செய்து விளக்குங்கள்.

சென்று சேரும் இடம் ஒன்று தான் என்றால் அதற்குப் பல வழிகள் இருக்க முடியும் அல்லவா? எனவே இதில் எங்கே முரண்பாடு? புத்தியைக் கொண்டு இதிலுள்ள ஆழமான உண்மையை கண்டறியாவிட்டால் இது முரண்பாடு போலத் தோன்றும்.

ஒரு குருவின் சீடர்களே தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.ஏசுபிரான் ஒருவரே, ஆனால் இன்று கிருத்துவ மதத்தில் 72 வகைகள் இருப்பதைப் பார்க்கிறோம். முகம்மது நபிகள் ஒருவரே, ஆனால் இஸ்லாத்தில் 5 வகைகள் இருக்கிறது. ஒன்றை பின்பற்றுபவர்கள் மற்றொன்றை ஏற்றுக் கொள்வதில்லை, அவர்களோடு கலப்பதில்லை.வெவ்வேறு மதங்கள், கருத்துக்கள் இருந்தாலும் இவற்றுக்குள் முரண்பாடுகளோ அல்லது மற்றதை பகையாய் பாவிப்பதோ இங்கு இல்லை என்பதே இந்தியாவின் அழகு. சிலர் ஹனுமானின் பக்தர்கள், சிலர் மகாசக்தியை வணங்குபவர்கள், சிலர் வேறு கடவுள்களை வணங்குகிறார்கள். அவர்கள் தங்களுக்குள் சண்டை போடுகிறார்களா என்ன? நமது காலாச்சாரத்தில் அப்படி வேறு வேறாய் இருந்ததால் தான், மற்ற மதங்களின் மீதும் நம்பிக்கைகள் மீதும் நமக்கு சகிப்புத்தன்மை இயல்பாகவே இருக்கிறது. நான் சொல்வது புரிகிறதா?
இந்தியாவில் எத்தனை கடவுளர்கள் இருக்கிறார்கள்? ஆயிரக்கணக்கான கடவுள்கள் இந்தியாவில் உண்டு. ஒரு கடவுளை வழிபடுபவரானாலும் மற்ற கடவுளின் கோவில்களுக்கும் சென்று ஒருவர் வழிபடுகிறார் இல்லையா? அவர்களுக்குள் சண்டை போடுகிறார்களா என்ன? கடவுள் ஒருவரே என்று தெரிந்தாலும் மக்கள் சண்டையிடக் கூடும், ஆனால் பல கடவுள்கள் இருந்தாலும் மக்கள் மற்றவர்களுடைய நம்பிக்கையை மதித்து ஒற்றுமையாய் வாழ்கிறார்கள்.

கிருத்துவ மதத்தின் ஒரு பிரிவான ‘மறுபடி பிறந்தவர்’ (Born again)ஐச் சேர்ந்த ஒருவர் கத்தோலிக்க சர்ச்சுக்குள் நுழைய மாட்டார். கத்தோலிக்க பிரிவை சேர்ந்த ஒருவர் புனிதலூதர் சர்ச்சுக்குள் நுழையமாட்டார். புனித லூதரின் சர்ச்சைச் சேர்ந்தவர் பிரஸ்பைடீரியன் சர்ச்சுக்கு போக மாட்டார். அடுத்தவர்களின் வழிபாட்டுத் தலத்திற்குள் நுழையமாட்டார்கள்.ஆனால், இந்தியாவில் எல்லோரும் எல்லா இடத்திற்கும் போகிறார்கள் இல்லையா? இந்துக்கள் சர்ச்சுக்கோ, ஜைன கோவிலுக்கோ போவதை நீங்கள் பார்த்ததில்லை? ஜைனர்கள் இந்து கோவிலுக்குச் செல்வதை நீங்கள் பார்த்ததில்லை? இந்துக்கள் புத்தர் கோவிலுக்குப் போவதை நீங்கள் கண்டதில்லை? எனவே எல்லோரும் மற்ற வழிபாட்டுத் தலங்களுக்கும் தாராளமாய்ப் போய் வருகின்றனர். ஏன் இப்படி? ஏனென்றால், அவ்வளவு வித்தியாசங்களுக்கிடையேயும் ஒற்றுமையாய் வாழ்வது நமது பழக்கம். 

அதனால் தான் பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் இறைவனை அடைய ஒரு பாதையை மட்டும் போதிக்கவில்லை. கீதையில், ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார், சிலர் விரதங்கள் மற்றும் பற்றற்ற தவ வாழ்கை மூலம் இறைவனை அடைகிறார்கள்; வேறு சிலர் தியானம் மூலம்,யோகப் பயிற்சிகள், யாகங்கள் செய்து இறைவனின் கருணையை வேண்டுகிறார்கள்; சிலர் ஜபம் செய்து இறைவனை வேண்டுகிறார்கள்; சிலர் தம் சுயத்தைப் பற்றிய ஞானத்தை அறியும் பாதை மூலம் இறைவனை அடைகிறார்கள்; இப்படிப் பல வழிகள்.

இறைவனை அடைய பல வழிகளும் நம்பிக்கைகளும் இருக்கிறது. இவை எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு அதை மதிப்பது தான் ஒருவரை உன்னதமானவராக்கும். இந்தியாவில், எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சரி, ஒரு ஞானி கொல்லப்பட்டதேயில்லை. அவரின் மூலம் அல்லது வேர் எதுவாக இருந்தாலும் சரி, ஒரு பிரம்மஞானி இந்தியாவில் எப்போதும் மிக உயர்வாகவே மதிக்கப்படுகிறார். “ஏன் ஒவ்வொருவருடைய மூக்கும் வித்தியாசமாக இருக்கிறது?” என்று ஏன் நீங்கள் கேட்கவில்லை. ஒரு கார் தொழிற்சாலையிலிருந்து ஒரே மாதிரியாக வெளிவரும் கார்களை போல, இறைவன் ஏன் மனிதர்களை ஒரே மாதிரியாக படைக்கவில்லை? ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை கொண்ட கைரேகை இருக்கும் போது ஏன் பலவிதமான ஞானப் பாதைகள் இருக்கக்கூடாது? இதையெல்லாம் பார்க்கும் போது, இறைவனுக்கு வெவ்வேறாய் இருப்பது மிகவும் பிடிக்கும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

“குருதேவ், இறைவன் ஏன் இத்தனை விதமான காய்கறிகளைப் படைக்க வேண்டும்? கத்தரிக்காய் மட்டும் போதாதா?”, என்று நீங்கள் கேட்கவில்லை? பிறகு உங்களுடைய காலை, மதியம் மற்றும் இரவு உணவு என எல்லாவற்றுக்கும், ஏன் சிற்றுண்டிக்கும் கூட உங்களை கத்திரிக்காயை மட்டுமே உண்ண வைத்திருப்பார் கடவுள். இதை ஏன் நீங்கள் கேட்கவில்லை? இதைப் போல மகான்கள் வெவ்வேறு அணுகுமுறைகளை நம்பிக்கைகளை கொண்டிருக்கலாம். அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்கள் மற்றவர்களின் கொள்கைகளையும்,வழிகளையும் கேலி செய்ய வேண்டியதில்லை. ஞானத்தை தங்களின் இயல்பில் வெளிப்படுத்துகிறார்கள். நானும் என் வழியில் தான் பேசுகிறேன். உங்களுக்குப் பிடித்திருந்தால் எடுத்துகொள்ளுங்கள், இல்லையென்றால் விட்டுவிடுங்கள். நான் மாறப் போவதில்லை. (சிரிப்பு)

குருதேவ், இந்த படைப்பு மாயை என்றால், இந்த படைப்பின் ஒரு பகுதியான ஞானமும் மாயை. பிறகு உபநிஷத்களும் பண்டைய நூல்களும்  எதைத்தான் வெளிப்படுத்துகின்றன?

அப்படியென்றால் உங்கள் கேள்வியும் மாயை தான். ஒரு மாயைக்கு நான் ஏன் பதிலளிக்க வேண்டும்? (சிரிப்பு). எதையும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. இங்குள்ள ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்தது, அததெற்கென ஒரு இடம் உள்ளது. எனவே அது மதிக்கப்படவும் போற்றப்படவும் வேண்டும். 

விளக்கம் வேண்டாம், புகார் செய்ய வேண்டாம்

செவ்வாய்கிழமை - 01-27-2015,

பெங்களூர், இந்தியா

கேள்வி - பதில்


குருதேவ், சிசுபாலன் அவதூறாக பகவான் கிருஷ்ணரை ஏசிய பொழுது, பகவான் கிருஷ்ணர் ஏன் அவனை கொன்றார்? பகவான் கிருஷ்ணர் வேறு வழியில் கூட தண்டனை கொடுத்திருக்கலாமே? 

நன்று. பகவான் கிருஷ்ணர் அவரது வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் செய்து உள்ளார். அந்த காலத்தில் அவர் ஏன் செய்தார், என்ன செய்தார் என்று எப்படி என்னால் சொல்ல முடியும். எப்படி தெரியும். ஒவ்வொரு அவதாரத்திலும் அவர் வாழ்ந்த காலத்தில் ஏதோ ஒன்று நிகழ்த்தி கொண்டு தான் உள்ளார். அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த  விஷயங்கள் உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளையோ அல்லது படிப்பினைகளையோ நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள். யமுனா நதியில் குளித்த கிராமத்து பெண்களின் உடைகளை பகவான் கிருஷ்ணர் ஏன் ஒழித்து வைத்தார்? நானும் அதுபோல் செய்யட்டுமா? என்று கேட்க விரும்பம் உண்டா? இவ்வாறாக நீங்கள் எண்ண நினைத்தால், பிறகு உங்களுக்கு கஷ்டம் தான் (சிரிப்பு) அல்லது நீங்கள் நினைக்கலாம் “ஏன் பகவான் கிருஷ்ணர் ஒரு காலில் மட்டும் நிற்பதாக தோன்றினார். இதெல்லாம் அவரது விரும்பத்திற்கு ஏற்ற செயல், எப்படி அவரோ அப்படியே” என்று நான் சொல்வேன். (சிரிப்பு)

என் வாழ்நாள் முழுதும் பொய் பேசவில்லை என்றால், இந்த ஓடும் நதி நிற்கட்டும் என்று பகவான் கிருஷ்ணர் ஒரு முறை சபதம் எடுத்து ஆற்றின் அருகில் நின்றார் என்பது உங்களுக்கு தெரியுமா? அவர் சொன்ன உடனே நதி ஓடாமல் நின்று விட்டது. பகவான் கிருஷ்ணரின் வாழ்க்கையில், இது போல் நிறைய கதைகள் உள்ளன. அவரது வாழ்க்கையும், காலமும் ஒப்பற்றது மற்றும் அதை கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கும். ஆகையால், பகவான் கிருஷ்ணர் ஏன் சிசுபாலனை கொன்றார் என்று எனக்கு தெரியாது. அவருடைய செயல்கள் பற்றி பேச,நான் அவருடைய வக்கீல் அல்லவே. அதனால் தான் “ விளக்கவும் வேண்டாம் மற்றும் புகார் செய்யவும் வேண்டாம்”என்று சொல்கிறேன்.
பிரம்மஞானியாக இருப்பதின் அடையாளம் என்ன? எப்பொழுது நீ எதும் கேட்பது இல்லையோ அல்லது விளக்கம் கொடுப்பதில்லையோ மற்றும் எதை பற்றியும் புகார் செய்வது இல்லையோ, பின் அது தான் ஞானத்தின் அடையாளம். அதனால் தான், பகவான் கிருஷ்ணர், அவரது எந்த ஒரு செயலுக்கும் பின் உள்ள காரணத்தை விளக்கவோ, நியாய படுத்தவோ அல்லது எதை பற்றியும் எந்த புகாரும் செய்யாமல் இருந்தார். “தன்னிஷ்டப்படி”க்கும் “விதி”க்கும் உள்ள வேறுபாடு என்ன?
வாழ்க்கை முழுவதும் தன்னிஷ்டப்படியோ அல்லது விதிப்படியோ நடப்பதல்ல. இரண்டும் சேர்ந்தது தான். உதாரணமாக, உங்கள் உயரம், உங்களது விதி. உங்களது எடை, உங்களது இஷ்டம்ப்படி.
வீரம் என்பது கர்வத்தின் அடையாளம் மற்றும் தற்பெருமையின் வெளிப்பாடு இல்லையா?
நீங்கள் சாதாரணமாகவும், கர்வம் இல்லாமலும் வீரனாக இருக்கலாம், ஆனால் கோழையாக இல்லாமல். கோழை தனத்தில் துன்பமும், தற்பெருமையும் இருக்கும். இயற்கையாக மற்றும் கர்வம் இல்லாமல் நீங்கள் இருக்கும் பொழுது, அங்கு மகிழ்ச்சியும்,வீரமும் தான். சாத்விக தற்பெருமை என்று அழைக்கலாம், ஆனால் “துர்அகங்கார” என்று அழைக்கக்கூடாது. தற்பெருமை ஒவ்வொருவரிடத்திலும் உள்ளது. தற்பெருமை என்பது ஒருவரது இருப்பின் நிலை. “நான்” – இது தற்பெருமை
நம்மை சரணாகதி அடைய சொல்லும்பொழுது, அது “தாமதம் செய்தல் அல்லது தவிர்த்தல்”   இல்லை என்று எப்படி நாம் தெரிந்து கொள்வது? 
யார் உங்களை சரணாகதி செய்ய சொன்னது? நான் சொல்கிறேன் - சரணாகதி செய்ய வேண்டாம். எதுவாக இருந்தாலும் அதையே பிடித்துக்கொள்ளுங்கள். யார் சொல்வதையும் கேட்டு, சரணாகதி செய்ய வேண்டாம். புரிந்ததா? இன்னும் குழப்பமா? ஆம், உங்களை குழப்பமடைய செய்வது தான் என் வேலை! (சிரிப்பு). மற்றவர்கள் சொல்வதை மறந்து விடுங்கள். உங்களுக்கு என்ன வேண்டும்?
பக்தர்: என்னுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டும்.

உங்கள் வாழ்க்கையை பின்னோக்கி பாருங்கள். இதற்கு முன் பிரச்சனை இருந்தது, அதற்கு தீர்வும் கிடைத்தது. சரியா? ஆகவே, தீர்வு வரும்.நீங்கள் இப்பொழுது சரியான இடத்தில், சரியான காரியம் செய்து கொண்டுள்ளீர்கள். உங்கள் பிரச்சனைகளை,ஆசிரமத்தில் விட்டு, சந்தோசமாக செல்லுங்கள்.
வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கும் போது,ஞானத்தை கிரகிக்க முடியாது. பிரச்சனைகள் மனதை மறைக்கிறது. ஆகையால், சரணாகதி அடைவது அவசியம். ஆகவே, குரு அல்லது உங்கள் மேல் அன்பு செலுத்துபவர் தேவை. பின், வாழ்க்கையில் என்ன நடந்தாலும், அவர்கள் என்னுடன் உள்ளார்கள், என்ன நடந்தாலும் துணையாக இருப்பார்கள் என்ற ஆழமான நம்பிக்கையோடு இருப்பது.

இந்த, ஆழமான நம்பிக்கை உங்களுள் இருக்கும் பொழுது, பிரச்சனைகள், பிரச்சனைகளாக தெரியாது. வீட்டில் சமைப்பதற்கு ஆள் இருக்கும் பொழுது, சாப்பாட்டை பற்றி கவலைப் படுவதில்லை. நேரத்திற்கு உட்கார்ந்து சாப்பிட்டு விடுகிறாய். உங்களை தவிர, வீட்டில் யாரும் இல்லை என்று கற்பனை செய்து பாருங்கள். பின், உட்கார்ந்து, வீட்டில் யாரும் இல்லை, நான் தான் சமையல் செய்ய வேண்டும். என்ன செய்வது? என்ன காய்கறி, எங்கிருந்து வாங்குவது?தேவையான காய்கறி  வீட்டில் உள்ளதா? இதுபோல் பலவற்றை நினைக்க ஆரம்பிகிறாய். யார் இதுபோல்  நிறைய விசயங்களை பற்றி நினைப்பது? ஒருவர் வீட்டில் இருந்து எல்லோருக்கும் உணவு சமைத்து, உண்ண கொடுக்கிறார்கள் என்பதை அறியாதவர் தான் இதுபோல் பல விசயங்களை நினைக்கிறார்கள்.

குருதேவ்,ஏற்கனவே பார்த்ததாக உணரும் நிலை” யை நான் நிறைய அனுபவித்துள்ளேன். இதை பற்றிய முக்கியத்துவத்தை அறிய விரும்புகிறேன்.

பாருங்கள்,நமது உள்ளுணர்வு பழைமையானது மற்றும் புதியது ஒரே நேரத்தில் இரண்டும். ஆகவே, இறந்த காலத்தில் மற்றும் எதிர் காலத்தில் நிகழ்வுகளை அது தூண்ட முடியும். நீங்கள் சாலையில் நடக்கும் பொழுது, தெறிந்த வரை தான் பார்க்கலாம்.ஆனால், சாலை மேல் பறந்தால், நீங்கள் முழு சாலையையும் காணலாம். அது போல் தான். உள்ளுணர்வு மற்றும் விஞ்ஞானிகளின் “மனம் பற்றிய கருத்தை” நீங்கள் படிக்க வேண்டும். ஏற்கனவே நடந்ததை தான், ஒரு உணர்வு நிலையில் இருந்து காண்பதாக சொல்கிறார்கள். ஆகையால், ஏற்கனவே பதிவு செய்ததை தான் திரும்ப பார்ப்பதாக சொல்கிறார்கள்.

குருதேவ், “ஆயுஷ் ஹோமம்” என்றால் என்ன?

நீண்ட, ஆரோக்யமான வாழ்க்கையை வேண்டி செய்யப்படும் சிறப்பு பூஜை தான் ஆயுஷ் ஹோமம். உடல் மற்றும் உடல் உறுப்புகள் ஆரோக்யமாக இருக்க பிரார்த்தனை செய்வது தான். நமது மனது, புத்திசாலித்தனம் நல்ல நிலையில் இருக்க ஆசீர்வாதம் “ஆயுஷ் ஹோமம்” நடக்கும் போது கேட்கலாம். “ஒவ்வொருவரது புத்தி பிரகாசமாகவும் மற்றும் தெய்வீகத்தை ஈர்ப்பதாக இருப்பது” என்பது தான் காயத்ரி மந்திரத்தின் அர்த்தம். நிரந்தரமாக நம்முள் இருக்கும் தெய்வீக சக்தியை, ஆழமாக உணர்வது மற்றும் நீ தெய்வீகத்துள் உறைந்திருப்பது. இந்த உணர்வோடு செய்வது தான் எல்லா யாகமும், யஞ்யமும்.