விளக்கம் வேண்டாம், புகார் செய்ய வேண்டாம்

செவ்வாய்கிழமை - 01-27-2015,

பெங்களூர், இந்தியா

கேள்வி - பதில்


குருதேவ், சிசுபாலன் அவதூறாக பகவான் கிருஷ்ணரை ஏசிய பொழுது, பகவான் கிருஷ்ணர் ஏன் அவனை கொன்றார்? பகவான் கிருஷ்ணர் வேறு வழியில் கூட தண்டனை கொடுத்திருக்கலாமே? 

நன்று. பகவான் கிருஷ்ணர் அவரது வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் செய்து உள்ளார். அந்த காலத்தில் அவர் ஏன் செய்தார், என்ன செய்தார் என்று எப்படி என்னால் சொல்ல முடியும். எப்படி தெரியும். ஒவ்வொரு அவதாரத்திலும் அவர் வாழ்ந்த காலத்தில் ஏதோ ஒன்று நிகழ்த்தி கொண்டு தான் உள்ளார். அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த  விஷயங்கள் உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளையோ அல்லது படிப்பினைகளையோ நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள். யமுனா நதியில் குளித்த கிராமத்து பெண்களின் உடைகளை பகவான் கிருஷ்ணர் ஏன் ஒழித்து வைத்தார்? நானும் அதுபோல் செய்யட்டுமா? என்று கேட்க விரும்பம் உண்டா? இவ்வாறாக நீங்கள் எண்ண நினைத்தால், பிறகு உங்களுக்கு கஷ்டம் தான் (சிரிப்பு) அல்லது நீங்கள் நினைக்கலாம் “ஏன் பகவான் கிருஷ்ணர் ஒரு காலில் மட்டும் நிற்பதாக தோன்றினார். இதெல்லாம் அவரது விரும்பத்திற்கு ஏற்ற செயல், எப்படி அவரோ அப்படியே” என்று நான் சொல்வேன். (சிரிப்பு)

என் வாழ்நாள் முழுதும் பொய் பேசவில்லை என்றால், இந்த ஓடும் நதி நிற்கட்டும் என்று பகவான் கிருஷ்ணர் ஒரு முறை சபதம் எடுத்து ஆற்றின் அருகில் நின்றார் என்பது உங்களுக்கு தெரியுமா? அவர் சொன்ன உடனே நதி ஓடாமல் நின்று விட்டது. பகவான் கிருஷ்ணரின் வாழ்க்கையில், இது போல் நிறைய கதைகள் உள்ளன. அவரது வாழ்க்கையும், காலமும் ஒப்பற்றது மற்றும் அதை கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கும். ஆகையால், பகவான் கிருஷ்ணர் ஏன் சிசுபாலனை கொன்றார் என்று எனக்கு தெரியாது. அவருடைய செயல்கள் பற்றி பேச,நான் அவருடைய வக்கீல் அல்லவே. அதனால் தான் “ விளக்கவும் வேண்டாம் மற்றும் புகார் செய்யவும் வேண்டாம்”என்று சொல்கிறேன்.
பிரம்மஞானியாக இருப்பதின் அடையாளம் என்ன? எப்பொழுது நீ எதும் கேட்பது இல்லையோ அல்லது விளக்கம் கொடுப்பதில்லையோ மற்றும் எதை பற்றியும் புகார் செய்வது இல்லையோ, பின் அது தான் ஞானத்தின் அடையாளம். அதனால் தான், பகவான் கிருஷ்ணர், அவரது எந்த ஒரு செயலுக்கும் பின் உள்ள காரணத்தை விளக்கவோ, நியாய படுத்தவோ அல்லது எதை பற்றியும் எந்த புகாரும் செய்யாமல் இருந்தார். “தன்னிஷ்டப்படி”க்கும் “விதி”க்கும் உள்ள வேறுபாடு என்ன?
வாழ்க்கை முழுவதும் தன்னிஷ்டப்படியோ அல்லது விதிப்படியோ நடப்பதல்ல. இரண்டும் சேர்ந்தது தான். உதாரணமாக, உங்கள் உயரம், உங்களது விதி. உங்களது எடை, உங்களது இஷ்டம்ப்படி.
வீரம் என்பது கர்வத்தின் அடையாளம் மற்றும் தற்பெருமையின் வெளிப்பாடு இல்லையா?
நீங்கள் சாதாரணமாகவும், கர்வம் இல்லாமலும் வீரனாக இருக்கலாம், ஆனால் கோழையாக இல்லாமல். கோழை தனத்தில் துன்பமும், தற்பெருமையும் இருக்கும். இயற்கையாக மற்றும் கர்வம் இல்லாமல் நீங்கள் இருக்கும் பொழுது, அங்கு மகிழ்ச்சியும்,வீரமும் தான். சாத்விக தற்பெருமை என்று அழைக்கலாம், ஆனால் “துர்அகங்கார” என்று அழைக்கக்கூடாது. தற்பெருமை ஒவ்வொருவரிடத்திலும் உள்ளது. தற்பெருமை என்பது ஒருவரது இருப்பின் நிலை. “நான்” – இது தற்பெருமை
நம்மை சரணாகதி அடைய சொல்லும்பொழுது, அது “தாமதம் செய்தல் அல்லது தவிர்த்தல்”   இல்லை என்று எப்படி நாம் தெரிந்து கொள்வது? 
யார் உங்களை சரணாகதி செய்ய சொன்னது? நான் சொல்கிறேன் - சரணாகதி செய்ய வேண்டாம். எதுவாக இருந்தாலும் அதையே பிடித்துக்கொள்ளுங்கள். யார் சொல்வதையும் கேட்டு, சரணாகதி செய்ய வேண்டாம். புரிந்ததா? இன்னும் குழப்பமா? ஆம், உங்களை குழப்பமடைய செய்வது தான் என் வேலை! (சிரிப்பு). மற்றவர்கள் சொல்வதை மறந்து விடுங்கள். உங்களுக்கு என்ன வேண்டும்?
பக்தர்: என்னுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டும்.

உங்கள் வாழ்க்கையை பின்னோக்கி பாருங்கள். இதற்கு முன் பிரச்சனை இருந்தது, அதற்கு தீர்வும் கிடைத்தது. சரியா? ஆகவே, தீர்வு வரும்.நீங்கள் இப்பொழுது சரியான இடத்தில், சரியான காரியம் செய்து கொண்டுள்ளீர்கள். உங்கள் பிரச்சனைகளை,ஆசிரமத்தில் விட்டு, சந்தோசமாக செல்லுங்கள்.
வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கும் போது,ஞானத்தை கிரகிக்க முடியாது. பிரச்சனைகள் மனதை மறைக்கிறது. ஆகையால், சரணாகதி அடைவது அவசியம். ஆகவே, குரு அல்லது உங்கள் மேல் அன்பு செலுத்துபவர் தேவை. பின், வாழ்க்கையில் என்ன நடந்தாலும், அவர்கள் என்னுடன் உள்ளார்கள், என்ன நடந்தாலும் துணையாக இருப்பார்கள் என்ற ஆழமான நம்பிக்கையோடு இருப்பது.

இந்த, ஆழமான நம்பிக்கை உங்களுள் இருக்கும் பொழுது, பிரச்சனைகள், பிரச்சனைகளாக தெரியாது. வீட்டில் சமைப்பதற்கு ஆள் இருக்கும் பொழுது, சாப்பாட்டை பற்றி கவலைப் படுவதில்லை. நேரத்திற்கு உட்கார்ந்து சாப்பிட்டு விடுகிறாய். உங்களை தவிர, வீட்டில் யாரும் இல்லை என்று கற்பனை செய்து பாருங்கள். பின், உட்கார்ந்து, வீட்டில் யாரும் இல்லை, நான் தான் சமையல் செய்ய வேண்டும். என்ன செய்வது? என்ன காய்கறி, எங்கிருந்து வாங்குவது?தேவையான காய்கறி  வீட்டில் உள்ளதா? இதுபோல் பலவற்றை நினைக்க ஆரம்பிகிறாய். யார் இதுபோல்  நிறைய விசயங்களை பற்றி நினைப்பது? ஒருவர் வீட்டில் இருந்து எல்லோருக்கும் உணவு சமைத்து, உண்ண கொடுக்கிறார்கள் என்பதை அறியாதவர் தான் இதுபோல் பல விசயங்களை நினைக்கிறார்கள்.

குருதேவ்,ஏற்கனவே பார்த்ததாக உணரும் நிலை” யை நான் நிறைய அனுபவித்துள்ளேன். இதை பற்றிய முக்கியத்துவத்தை அறிய விரும்புகிறேன்.

பாருங்கள்,நமது உள்ளுணர்வு பழைமையானது மற்றும் புதியது ஒரே நேரத்தில் இரண்டும். ஆகவே, இறந்த காலத்தில் மற்றும் எதிர் காலத்தில் நிகழ்வுகளை அது தூண்ட முடியும். நீங்கள் சாலையில் நடக்கும் பொழுது, தெறிந்த வரை தான் பார்க்கலாம்.ஆனால், சாலை மேல் பறந்தால், நீங்கள் முழு சாலையையும் காணலாம். அது போல் தான். உள்ளுணர்வு மற்றும் விஞ்ஞானிகளின் “மனம் பற்றிய கருத்தை” நீங்கள் படிக்க வேண்டும். ஏற்கனவே நடந்ததை தான், ஒரு உணர்வு நிலையில் இருந்து காண்பதாக சொல்கிறார்கள். ஆகையால், ஏற்கனவே பதிவு செய்ததை தான் திரும்ப பார்ப்பதாக சொல்கிறார்கள்.

குருதேவ், “ஆயுஷ் ஹோமம்” என்றால் என்ன?

நீண்ட, ஆரோக்யமான வாழ்க்கையை வேண்டி செய்யப்படும் சிறப்பு பூஜை தான் ஆயுஷ் ஹோமம். உடல் மற்றும் உடல் உறுப்புகள் ஆரோக்யமாக இருக்க பிரார்த்தனை செய்வது தான். நமது மனது, புத்திசாலித்தனம் நல்ல நிலையில் இருக்க ஆசீர்வாதம் “ஆயுஷ் ஹோமம்” நடக்கும் போது கேட்கலாம். “ஒவ்வொருவரது புத்தி பிரகாசமாகவும் மற்றும் தெய்வீகத்தை ஈர்ப்பதாக இருப்பது” என்பது தான் காயத்ரி மந்திரத்தின் அர்த்தம். நிரந்தரமாக நம்முள் இருக்கும் தெய்வீக சக்தியை, ஆழமாக உணர்வது மற்றும் நீ தெய்வீகத்துள் உறைந்திருப்பது. இந்த உணர்வோடு செய்வது தான் எல்லா யாகமும், யஞ்யமும்.