நம்பிக்கையை அப்படியே வைத்துக் கொள்ளவும்

ஜனவரி 8, 2015

பெங்களூர், இந்தியா




நான் யார் என்ற கேள்வியை திரும்ப திரும்ப உங்களையே கேட்டுக் கொண்டிருக்கவும். இதுவே உங்களை தியானத்தில் ஆழ்ந்த நிலைக்கு செல்லும் வழியை உருவாக்கும். நீங்கள் உங்களை பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ, அதையும் நீங்கள் யார் என்று உணருகிறீர்களோ அதையும் ஒரு பக்கமாக வைக்கவும். இந்த கேள்விக்கு வார்த்தைகள் வழியாக பதில் கிடைக்காது. யார் இதற்கு வார்த்தைகள் வழியாக பதில் தருகிறாரோ அவருக்கு உண்மையில் பதில் தெரியாது. இது ஒரு முக்கியமான கேள்வி. எனவே இந்த கேள்வியை திரும்ப திரும்ப உங்களையே கேட்டுக் கொண்டிருக்கவும், நூறு முறை அல்லது ஆயிரம் முறை.    

பிறகு உங்களையே நீங்கள் "நான் ஏன் இங்கு இருக்கிறேன்" என்று கேட்கவும். உண்மையில் முதலில் நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் சொல்லுவேன். அதன் பின் நீங்கள் "நான் ஏன் இங்கு இருக்கிறேன்" மற்றும் "நான் ஏன் இங்கு இல்லை" போன்றவை பற்றி சிந்திக்கலாம். யாராவது ஒருவருக்கு நீங்கள் இங்கு தேவை இல்லாமல் இருக்கிறீர்களா என்று சிந்திக்கவும்.

நீங்கள் மற்றவர்களால் தொந்தரவு செய்யப்படவோ அல்லது நீங்கள் மற்றவர்களை தொந்தரவு செய்யவோ இங்கு இல்லை.நீங்கள் வெறுமனே சாப்பிட்டுக் கொண்டும் தூங்கிக் கொண்டும் நாட்களை கழிப்பதற்காக இல்லை. நீங்கள் இங்கு வீண்பேச்சு பேச இல்லை. இதை நீங்கள் ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால் நீங்கள் எதற்காக இருக்கிறீர்கள் என்பதை மெதுவாக புரிந்து கொள்வீர்கள். நீங்கள் என்னவாகவெல்லாம் இல்லை என்பதை பட்டியலாக தயாரிக்கவும். என்னவாகவெல்லாம் இருக்கவில்லை என்பதை ஒவ்வொன்றாக விலக்கி வரவும். அதன்பின் நீங்கள் ஏன் இங்கு இருக்கின்றீர்கள் என்பதை தெரிந்து கொள்வீர்கள். அதாவது நீங்கள் உங்களுக்கு மட்டுமல்லாது உங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் உபயோகமாகவும் உதவியாகவும் இருக்கிறீர்கள். சிலர் உங்களால் ஆறுதலும் நிவாரணமும் பெறுகிறார்கள் என்றால், அதன் மூலமாக   உங்களுக்கு கிடைக்கும் ஆனந்தமும், திருப்தியும் வார்த்தைகளால் சொல்ல முடியாததாகும்.

கேள்வி பதில்கள்

குருதேவ்! உங்களிடம் நம்பிக்கையை இழக்கத் துவங்கி இருக்கின்றேன். நான் என்ன செய்வது?

நல்லது. நம்பிக்கை என்பது ஒரு முடிவுக்கு வரக்கூடியது அல்ல, என்பது முதல் விஷயம். நீங்கள் வாழ்க்கையில் எதிலிருந்தோ ஒடப்பார்க்கிறீர்கள். அதை செய்வதற்காக கடவுளையோ அல்லது குருவையோ ஒரு போலி காரணமாக உபயோகிக்கிறீர்கள். அந்த மாதிரியாக உருவாக்கப்பட்ட நம்பிக்கை நிச்சயமாக உங்களை ஒரு நேரத்தில் அசைத்து விடும்.  ஒவ்வொரு முறையும் உங்கள் நம்பிக்கை அசைக்கப்படும் போதும், உங்கள் பக்தி உங்களுக்குள் மறுபடியும் புதுப்பிக்கப்படும். உண்மை எப்போதுமே தோற்பதில்லை, அசைக்கப்படுவதில்லை. உண்மையான நம்பிக்கை நடக்கும் அனைத்தையும் பொருட்படுத்தாமல் அசையாது நிற்கும்.  அவ்வாறு அசையும் நம்பிக்கை மேலோட்டமானதாகும். உங்களுடைய எதிர்பார்ப்புகளும் விருப்பங்களுமே உங்களை அசைத்து பார்க்கிறது.

சில நாட்களுக்கு முன்னால் ஒரு பெண்மணி என்னை அணுகினார். அவர் அவரை விட வயது குறைவான ஒருவரை நேசிக்கின்றார். அவர் என்னிடம் "நீங்கள் தான் கடவுள். நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யமுடியும். அவரை எனக்கு மணமுடித்து வைக்கவும்" என்று கூறினார்.
இம்மாதிரியாக அவர் என்னை கேள்விகள் கேட்க ஆரம்பித்தார். அந்த இளைஞன் இவரை மணக்க தயாராக இல்லை. மேலும் அந்த நினைப்பே அவரை விரட்டி விடும். நான் அந்த பெண்மணியிடம்" அந்த இளைஞன் உங்களை மணக்க விருப்பப்படுகிறாரா என்று கேட்டு சொல்லுகிறேன்" என்று கூறினேன். அந்த பெண்மணி "இல்லை குருதேவ், அவர் என்னை மணக்க விரும்பவில்லை. ஆனால் நீங்கள் அவரை சமாதானப்படுத்தி அவர் மனதை மாற்ற முடியும். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று எனக்கு தெரியும். தயவு செய்து நீங்கள் உங்களுடைய சக்தியை உபயோகித்து அவர் மனதை மாற்றி என்னை மணக்கச் செய்யுங்கள்" என்று கூறினார்.
நான் அவரிடம் " ஆரோக்யமான கட்டுக்கோப்பான ஒருவர் என்னிடம் வந்து உங்களுக்கு இதையே செய்யும்படி கோரினார். அவர் உங்களை மணக்க விரும்புகிறார். அதனால் அவர் என்னிடம் வந்து மாயமாக உங்கள் மனதை மாற்றி அவரை திருமணம் செய்துகொள்ள சமாதானப்படுத்தும்படி கூறினார். அவர் உங்களை விரும்புகிறார். இப்போது நான் என்ன செய்ய?" என்று கேட்டேன்.
இதை கேட்டதும் அவர் "ஓ குருதேவ்! நான் அவரை திருமணம் செய்தால் இறந்து விடுவேன்" என்றார். நான் "அந்த இளைஞனும் உங்களை திருமணம் செய்வது பற்றி இதையே தான் கூறுகிறான்" என்றேன். (சிரித்துக் கொண்டே). நான் அவரிடம் கேட்டேன் "இது உண்மையிலேயே என் மேல் உள்ள நம்பிக்கையா? அல்லது உங்களுடைய பேராசையும் மற்றும் விருப்பமும் உங்களை அவ்வாறு நம்பிக்கை கொள்ளச் சொல்லுகிறதா?" அடிக்கடி நாம்

நம்முடைய தீவிர ஏக்கத்தை தீவிர நம்பிக்கை என்று தவறாக புரிந்து கொண்டு தெய்வீகத்தை விருப்பங்களை நிறைவேற்றவும், பணிகளை முடிக்கவும் சூழ்ச்சியுடன் கையாளுகிறோம். உங்களுடைய விருப்பங்களையும் எண்ணங்களையும் நிறைவேற்ற மட்டுமே நீங்கள் கடவுளிடம் நம்பிக்கை கொண்டிருந்தால் அது நிறைவேறாது. எது பெரியது? கடவுளா? அல்லது  உங்கள் விருப்பமா?  அதை பற்றி சிந்திக்கவும். நீங்கள் கடவுளை உங்களுடைய பரிமாற்றங்களுக்காக உபயோகிக்க விரும்புகிறீர்கள். அதையே தான் உங்கள் குருவிடமும் செய்ய விரும்புகிறீர்கள். பக்தியும் நம்பிக்கையும் உங்கள் வாழ்வில் உயரவும் உங்களுக்குள் ஆழ்ந்து செல்லுவதற்கும் உதவவே தேவைப்படுகின்றன. அனைவருடைய வாழ்விலும் சிரமங்களும் மகிழ்ச்சியற்ற நேரங்களும் வரும். வாழ்க்கையில் பிரச்சினைகள் இல்லாத யாராவது ஒருவர் இருக்கிறாரா?

கிருஷ்ண பகவான் அவருடைய வாழ்நாளில் பல தடைகளை எதிர்கொண்டார். பகவான் ராமரும் அவருடைய வாழ்வில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டார். மகாத்மா காந்தியும் அவருடைய வாழ்வில் பல தடைகளை எதிர் கொண்டார். ஆகவே வாழ்வில் கஷ்டங்கள் வரும் போகும். சிக்கலான நேரங்களில் கூட, நம்பிக்கையும் பக்தியும் அசைக்கப்படாமல் அப்படியே இருந்தால், அந்த சூழ்நிலையிலும் நீங்கள் அவஸ்தையை உணர மாட்டீர்கள். நம்பிக்கை உங்களுக்கு ஒரு நங்கூரமாக இருந்து உங்களை ஸ்திரமாக வைத்திருக்கும்.   

முழுவதுமாக இருண்ட ஒரு இரவில் மினுமினுக்கும் ஒளி கூட உங்களுக்கு வழியை காட்ட உதவியாக இருந்து முன்னோக்கி நடக்க செய்யும். ஆனால் நீங்கள் அந்த ஒளியின் ஆதாரத்தை   அணைக்க முயன்றால், அது நல்லதல்ல.கஷ்டமான  நேரங்களை கையாள மக்கள் மது பானம் அருந்துவது போன்றவற்றை செய்கின்றனர். நம்பிக்கை என்பது ஒரு உயர்ந்த செல்வம். அது உங்களுக்கு வலுவை கொடுக்கும். சில சிறிய விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடை பெறாததால், நம்பிக்கையை நீங்கள் எளிதில் முறியக் கூடியதாகவும் பலமற்றதாகவும்  உள்ளது என்று எண்ணிக் கொள்ளக் கூடாது. 

அதனால் "நீங்கள் நினைத்த எதுவோ ஒன்று நடக்காத காரணத்தினால் தான் உங்களுடைய   நம்பிக்கை பலவீனமாகிக் கொண்டு வருகிறது மற்றும் தவறி விடுகிறது என்று எண்ணுவது நல்லதே" என்று நான் கூறினேன். பரவாயில்லை. இறுதியில் நீங்கள் யார் மீதாவது அல்லது எதன் மீதாவது நம்பிக்கை வைப்பீர்கள்.

குருதேவ்! நாங்கள் எப்படி எங்கள் குழந்தைகளை ஆன்மீக ரீதியில் வலுவானவர்களாக செய்வது?

குழந்தைகள் இயல்பாகவே ஆன்மீகமானவர்கள். அவர்களை புகை பிடித்தல், மது பானம் அருந்துதல் மற்றும் வன்முறையான செயல்கள், விளையாட்டுகள் ஆகியவற்றில் இருந்து தள்ளியிருக்க செய்ய வேண்டும். நீங்கள் இதை செய்தால் அவர்கள் இயல்பாகவே ஆன்மீகமாக   இருப்பார்கள். 

குருதேவ்! நான் எப்படி மோட்சம் அடைவது? ஒருவருக்கு தியானத்தின் மூலம் என கிடைக்கிறது? என்னுடைய நண்பர்கள் அனைவரும் பல முறை என்னிடம் இந்த கேள்வியை கேட்கின்றனர்.

தியானம் உடலை வலுவாக்குகிறது. உள்ளுரத்தை கொண்டு வருகிறது. உங்கள் நடத்தையிலும் நீங்கள் உங்களை சுற்றியுள்ள மற்றவர்களிடம் அணுகும் முறையிலும்  சீர்திருத்தத்தையும் மேபாட்டையும் அடைய உதவி செய்கிறது. அது மன அழுத்தத்தை நீக்குகிறது. ஒருவருக்கு வேறு என்ன தேவைப்படுகிறது மேலும், அனைத்து நன்மைகளுக்கு அப்பால் கடவுளை தெளிவாக உணர்ந்து கொள்ள உதவுகிறது. தியானம் ஒன்றே தெய்வீகத்தை உணரவும் அடையவும் வழி. கடவுளை தெளிவாக உணர்ந்து அறிய தியானத்தை தவிர வேறு பாதை எதுவும் இல்லை என்று “புருஷ சுக்த ரிக்” வேதத்தில் கூறப்பட்டுள்ளது. கடவுளுடன்    இணைவதற்கு தியானம் ஒன்று தான் உதவி செய்யும்.   

குருதேவ்! ஆன்மீகத்தில் நம்பிக்கை முதலில் வருகிறது அனுபவம் பின்னாடி வருகிறது என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அப்படியிருக்க, அறிவியல் மனநிலை உள்ளவர்களுக்கு அது நேர் எதிராக உள்ளது. இது ஒரு முரண்பாடாகத் தெரிகிறது. மற்றும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தயவு செய்து நீங்கள் விளக்கவும்.

இல்லை, நீங்கள் எங்கேயோ தவறு செய்கிறீர்கள். இது கிழக்கத்தியவரும் மற்றும் மேலை நாட்டை சார்ந்தவரும் விஷயங்களை நோக்கும் விதத்தில் உள்ள வித்தியாசத்தை போன்றதாகும். கிழக்கில் நாம் எப்போதுமே முதலில் அனுபவம் ஏற்பட வேண்டும் அதன்பிறகு தான் நம்மால் அந்த கருத்தை முழுமையாக புரிந்து கொள்ளவும், கிரகிக்கவும் முடியும் என்று சொல்லுகிறோம். மேற்கத்திய நாடுகளில் முதலில் நீங்கள் அந்த கருத்தை நம்பிக்கையுடன் புரிந்து கொள்ள வேண்டும் அதன் பிறகு தான்  நீங்கள் அனுபவம் பெறுவீர்கள் என்று சொல்லப்படுகிறது. இவை இரண்டு வழிகள் ஆகும்.

இது ஏன் என்றால் மேற்கத்திய நாடுகளில் அறிவியலுக்கும் ஆன்மீகத்திற்கும் செயல்வகையில் வித்தியாசங்கள் உள்ளன, பவ மோதல்களும் சச்சரவுகளும் உள்ளன. அதனால் ஸ்பானிஷ் புனித விசாரணை நடந்த பல விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர், சித்திரவதை செய்யப்பட்டனர். இதற்கு காரணம் இரண்டுக்கும் செயல்வகையில் உள்ள அதிக வித்தியாசமே.

இந்தியாவில் விஞ்ஞானிகள் மீது எபோதுமே வழக்குகள் தொடரப்பட்டதில்லை, தண்டனை கொடுக்கப்பட்டதில்ல. இது எதனால்? இங்கே மதம் இரண்டுக்கும் உள்ள செயல்வகைகள் ஒன்றே. இங்கே இந்தியாவில் நாம் முதலில் அடிப்படையான கொள்கைகளை புரிந்து கொள்ள வேண்டும் என்ற பொருள் கொண்ட "தத்துவ ஞானம்" என்று சொல்லுகிறோம். ஆகவே நாம் முதலில் நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் இயல்பை புரிந்து கொள்ளுகிறோம். அதன் பிறகு நாம் நம்முடைய மனம், புத்தி, ஞாபக சக்தி மற்றும்  அகங்காரம் ஆகியவற்றை புரிந்து கொண்ட பின் இறுதியாக கடவுளை புரிந்து கொல்வதை நோக்கி செல்லுகிறோம்.

இங்கே எப்போதுமே ஒருவர் முதலில் அனுபவம் பெற வேண்டும் என்று சொல்லுகிறோம். நீங்கள் உபநிஷதங்களை படிக்கும் பொது இதை அதிகம் புரிந்து கொள்ளலாம். உபநிஷதங்கள் உங்களை படிபடியாக ஒரு மட்டத்தில் இருந்து மற்றொன்றிற்கு கொண்டு செல்லுகின்றன. இதனால் தான் கிழக்கு திசை நாடுகளில் அறிவியலுக்கும் ஆன்மீகத்திற்கும் இடையே முரண்பாடுகள் தோன்றுவதில்லை.