மனிதனின் அறிவாற்றல் மிகவும் சிறந்தது.....


30
2012...............................                           நார்வே
Aprநாம் உடல் மற்றும் ஆத்மாவுடன் படைக்கப் பட்டிருக்கிறோம் என்று உங்களுக்குத் தெரியும். நம் உடல் கார்போ ஹைட்ரேட், தாதுப் பொருட்கள்,புரோட்டின்களால் ஆனது. நம் ஆத்மா தூய்மையான சக்தி,அன்பு,கருணை மற்றும் காந்த சக்தியாக இருக்கிறது. இது இயற்கையின் சக்தியாகும். பண்டைய காலத்தில் இதை இரண்டு வார்த்தைகளால் அழைத்தார்கள்.ஒன்று ப்ரகிருதி (இயற்கை) இரண்டாவது புருஷா(சக்தியின் வடிவம்) அதற்கு மேல் ஒரு படி போய் இரண்டும் ஒன்றே தான் என்றார்கள்.(ஆத்மா சூட்சுமமானது. உடல் ஸ்தூலமானது.

சக்தியும் ஸ்தூலப் பொருளும் இணைந்தே இருக்கின்றன.மனம் மற்றும் உடல் வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்றே தான். ஆனால் ஆத்மா நான்கு வழிகளில் தன்னை வெளிப் படுத்துகிறது. ஆத்மா நான்கு வித செயல்பாடுகளை அடக்கியது. உதாரணமாக ஒருவர் அலுவலகத்தில் அதிகாரியாகவும், கடைவீதிக்குப் போகும் போது வாங்குபவராக அல்லது விற்பவராகவும், ஒரு வகுப்பில் உட்காரும் போது மாணவராகவும், வீட்டில் ஒரு தகப்பனாரகவும், ஒரு கணவராகவும், ஒரு மகனாகவும் இருப்பது போல் நம் ஆத்மா நான்கு வழிகளில் செயல் படுகிறது. 

1. மனம்: நீங்கள் இங்கிருக்கிறீர்களா? கேட்கிறீர்களா? நீங்கள் இங்கிருந்து உங்கள் மனம் வேறிடத்தில் இருந்தால், நீங்கள் கேட்க முடியாது. உங்கள் காதுகள் திறந்திருக்கின்றன. ஆனால் மனம் வேறெங்கோ இருக்குமானால் நீங்கள் கேட்க முடியாது. நீங்கள் என்னைப் பார்க்கிறீர்களா? நீங்கள் இங்கிருந்து, உங்கள் மனம் வேறிடத்தில் இருக்குமானால், கண்கள் திறந்து என்னை நோக்கி இருந்தாலும், நீங்கள் என்னைப் பார்க்கவில்லை. ஆகவே மனம் என்பது ஆத்மாவின் ஒரு வெளிப்பாடு. மனம் நமது கண், காது, மூக்கு, நாக்கு, தொடு உணர்ச்சி என்கிற ஐந்து புலன்களின் மூலம் அநுபவங்களை தருகிறது. இந்த ஐந்து அறிவு எல்லா பிராணிகளுக்கும் உண்டு. 

ஒரு கரப்பான் பூச்சிக்குக் கூட மனம் அதன் கம்பி போன்ற உறுப்பின் (ஆன்டினா) மூலம் அது இருக்கும் இடத்தை உணர்த்துகிறது. அதன் உணர்ச்சிகள் அந்த உறுப்பின் மூலம் கிடைக்கிறது. முன்பே சொன்ன மாதிரி நம் மனம் நம் உடலுக்குள் இல்லை.நம் உடல் நம் மனதுக்குள் இருக்கிறது. ஒரு தீபத்தில் திரியைச் சுற்றி சுடர் இருப்பது போல் நம் உடல் ஒரு திரியாகவும், நம் மனம் ஒரு சுடராகவும் இருக்கிறது. கிர்லியன் போட்டோ மூலம் நாம் நம்மைச் சுற்றி உள்ள சுடரின் ஒளியைப் படம் பிடிக்கலாம். மனம் என்பது அறியக் கூடியது. மனம் நம் புலன்களான காதுகள்(கேட்பது),கண்கள் (பார்ப்பது), தோல் (தொடு உணர்ச்சி),மூக்கு (நுகர்வது), நாக்கு (ருசிப்பது) மூலம் அறிகிறது. 

2. அதே ஆத்மா, புலன்களின் மூலம் உணர்ந்ததை ஆராய்ந்து இது நல்லது, இது கெட்டது, இது அழகானது, இது அவலட்சணமானது, இது சரி, இது தவறு என்று முடிவுக்கு வருகிறது. இது தான் பகுத்தறிவு (புத்தி) என்பது . இது ஆத்மாவின் ஒரு முக்கியமான வேலை.ஒன்று அறிவது. மற்றொன்று அதை புரிந்து கொள்வது, முடிவெடுப்பது,சரி, சரியல்ல என்று பிரித்துப் பார்ப்பது என்பது புத்தியின் வேலை. 

இப்போது நீங்கள் எல்லோரும் ஆம் என்கிறீர்களா? அது தான் உங்கள் புத்தி என்பது. நீங்கள் இல்லை இதை ஒப்புக்கொள்ளமாட்டேன் என்கிறீர்களா? பரவாயில்லை. நீங்கள் ஒத்துக் கொள்ள வில்லைஎன்று சொல்லலாம். அவ்வாறு சொல்வதை நீங்கள் அறிந்தால் அது உங்கள் புத்தியின் செயல். இரண்டாவது முக்கிய வேலை புத்தியினுடையது. மற்ற எல்லா பிராணிகளையும் விட மனிதர்களுக்கு அறிவு அதிகம். இது நமக்குக் கிடைத்த ஒரு அருமையான பரிசு.பழங்காலத்தி லிருந்து காயத்ரி மந்திரம் என்ற புனிதமான மந்திரம் வழக்கில் இருக்கிறது. அதன் படி இந்த அறிவுத் திறன் மேலும் விளங்குவதற்கு / வளர்வதற்கு, அறிவுக்கப்பால் உள்ள சக்தி இறைவன் உதவுவாராக. என் அறிவு இறைவனால் மேலும் மேலும் வளரட்டும் என்பது ஒரு பிரார்த்தனை யாகும். இதன் பொருள்: என் மனதில் தூய எண்ணங்கள் வரட்டும்.என் அறிவு மூலம் சரியான முடிவு கிடைக்கட்டும்,அதனால் நான் செய்யும் செயல்கள், திருத்தமாக, நிறைவாக (பூரணமாக) இருக்கட்டும். 

இந்த புத்தி ஒரு தடையாகவும் மாறும். இந்த புத்தி சந்தேகத்தையும் எழுப்பும். தவறான கருத்து களையும் கொடுக்கும். சுய அறிவை மறைக்கும். உங்கள் சுய அறிவு நன்றாக இருந்து உள்மனது ஸ்வீடனில் உள்ள ஒருவரைப் பார்க்க நீங்கள் விரும்பினால், நான் ஸ்வீடனில் உள்ள அவரைப் பார்க்கப் போகிறேன் என்று நீங்கள் சொல்லலாம். உங்கள் விருப்பம் நல்லது. ஆனால் உங்கள் அறிவு அது நடக்காது என்று சொல்கிறது.அது முடியாது.உங்கள் அறிவு உள் மனதை மறைக்கிறது. இங்கு தான் நாம் தவறு செய்கிறோம். நீங்கள் ஒருவரைப் பற்றி அவர் நல்லவர் அல்லது கெட்டவர் என்று முடிவு எடுக்கிறீர்கள். ஆனால் உண்மையில் உங்கள் முடிவு படி அவர் இல்லாமல் இருக்கலாம். உங்கள் அறிவு உங்கள் உள் மனதில் குறுக்கிடாமலிருந்தால், உள் மனதில் தோன்றுவது ஆத்மாவின் இச்சையாக இருக்கலாம். அதை நாம் சித்தம் என்று சொல்லுகிறோம். 

3. மனம், புத்திக்குப் பிறகு ஞாபக சக்தி வருகிறது. பல நேரங்களில் நம் மனம் பழைய ஞாபகங்களில் அதையே நினைத்திருக்கும். ஏதோ கடந்த காலத்தில் நல்லவைகளை நீங்கள் பார்த்திருந்தால், அல்லது அவலட்சணமானவைகளைப் பார்த்திருந்தால் அதே காட்சி திரும்பத் திரும்ப உங்கள் மனதில் தோன்றும். உங்கள் ஞாபக சக்தி மனதை விட அதிக சக்தி உள்ளதாக இருந்தால் இப்படி நடக்கும். ஞாபக சக்தி அவசியம் தான். இது ஆத்மாவின் மூன்றாவது வெளிப்பாடு. 

4. மற்றும் ஆத்மாவின் நான்காவது வெளிப்பாடு நான் என்கிற தனித்தன்மை. ஆத்மாவின் இந்த நான்கு சூட்சுமமான வெளிப்பாடுகள்(மனம், புத்தி, ஞாபகம், தனித்தன்மை) அதோடு செயல் படுகின்றன. இவை எல்லாவற்றையும் விட உயர்ந்த சூட்சுமமான சக்தி வடிவமாக ஆத்மா இருக்கிறது. அதனால் தான் நாம் அதை மகத்என்று அழைக்கிறோம். அதற்கு மிக பெரிது என்று பொருள். நாம் நம் தனித் தன்மை மற்றும் ஆணவத்தைத் தாண்டிச் சென்றால் உங்களுள் இருக்கும் ஒரு மாறாத ஒன்றை எல்லா இடத்திலும் பரவியிருக்கிற ஆனால் எங்கு தேடினாலும் பார்க்க முடியாத ஒன்றை அநுபவத்தில் உணரலாம். அதை நீங்கள் அநுபவத்தில் உணர்ந்தால் மகத்” “மகாத்மாஆகலாம். 

நீங்கள் மகாத்மா காந்தியைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? காந்திக்கு மக்களால் அளிக்கப் பட்ட பெயர் மகாத்மா என்பது. எல்லா புனிதர்களும், தவ முனிவர்களும் மகாத்மா என்றே அழைக்கப் படுகிறார்கள். அதன் பொருள் அவர்கள் தனித்தன்மை, ஆணவத்தைக் கடந்தவர்கள். அவர்கள் மனம், புத்தி, ஞாபகம் மற்றும் ஆணவத்தைக் கடந்து ஒருபடி மேலே சென்று ஆத்ம அநுபூதி பெற்றவர்கள். அதன் பொருள் அவர்கள் எங்கு சென்றாலும் தன் இருப்பிடத்தில் இருப்பது போல் உணர்வார்கள். எல்லோரையும் தன்னுடையவர்களாக ஏற்றுக்கொள்வார்கள். மற்றவர் களுக்கும் தங்களுக்கும் வேறுபாடு இல்லை என்று உணர்ந்தவர்கள் அவர்கள். நீ ஒரு குழந்தையை ப்போல், தற்சமயத்தில் வாழலாம். எதுவுமே உங்களைக் காயப்படுத்தாது. எல்லாமே உன்னைச் சேர்ந்தவை தாம். பெருந்தன்மை மற்றும் பூரண அமைதி. நீ இந்த உடல் என்னுடையது என்று மட்டும் சொல்வதில்லை. நான் எல்லா இடத்திலும் இருக்கிறேன் என்று சொல்வாய். இது பேச்சு தான். 

நீ தொலைக்காட்சியில் ஒரு அலை வரிசையைப் பார்க்கிறாய்.பிபிசியைப் பார்க்கிறாய். நீ பிபிசியை அந்தப் பெட்டியில் பார்த்தாலும் பிபிசி அந்தப் பெட்டியில் மட்டுமா இருக்கிறது? இல்லை, பிபிசி, அந்த அலை அதிர்வுகள், அந்த அறை முழுவதும் இருக்கிறது. அது எல்லா இடத்திலும் இருக்கிறது. நீ தொலைக் காட்சிப் பெட்டியின் மின் இணைப்பைத் துண்டித்தாலும் பிபிசி அலை அதிர்வுகள் அந்த அறையில் இருக்கும். தொலைக்காட்சிப் பெட்டி அந்த அலைகளை ஏற்று, நமக்கு ஏதுவாக பிரித்து நன்றாகக் காட்சி அளிக்கிறது.அதே போல் நம் உடலும் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியைப் போன்றது தான்.  

உங்கள் உடல் தொலைக்காட்சிப் பெட்டி. உங்கள் ஆத்மா அலை வரிசையின் ஒரு பகுதி. அது பிபிசி போல். அவள் சிஎன்என், அந்த மனிதர் ஃபாக்ஸ், அவர் பொழுதுபோக்கு அலைவரிசை. உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி அலை அமைப்பு இருக்கிறது. அதற்காக நீங்கள் இங்கேயே மாட்டிக்கொள்ளப் போவதில்லை. இது பெறுவதற்கான அல்லது அனுப்புவதற்கான பெட்டி தான். ஆனால் அலைகள் எங்கும் இருக்கின்றன. நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா? நம் ஆத்மா எங்கும் பரவியிருக்கிறது. நேற்று சொல்லியது போல், தூய்மையான விஞ்ஞானம் இருக்கிறது. பிரயோக (கையாளும்) விஞ்ஞானம் இருக்கிறது. இரண்டுமே நமக்குத் தேவை. அவை ஒன்றை ஒன்று நிறைவு செய்பவை. தூய்மையான விஞ்ஞானம் ஆத்மாவைத் தெரிந்து கொள்வது நான் ஆத்மா” “நான் அதுதான்”. அந்த நினைவிலேயே ஓய்வு எடுப்பது. அது தான் தியானம். யோகம். ஆத்மாவில் நிலைத்திருப்பது யோகம். அது உன்னைச் சாராத ஒன்றைச் சேர்வது அல்ல. அது உன்னில் திரும்பி, ஆத்மாவில் சேர்வது தான். மறுபடியும் சேர்வது. இந்தச் சுற்றை முடிப்பது தான் யோகம். 

நீங்கள் எல்லோரும் குழந்தைகளாக இருந்த போது யோகிகாளாயிருந்தீர்கள். ஒவ்வொரு குழந்தையும் ஒரு யோகி தான். நாம் எல்லா யோக நிலைகளையும் குழந்தையாக இருந்தபோது அநுபவித்திருக்கிறோம். நிகழ் காலத்தில் வாழ்ந்திருக்கிறோம். குழந்தையாக இருக்கும்போது நம் மனம் புதியதாகவும் உயிரோட்டத்துடனும் இருந்திருக்கிறது. நாம் நம் வீட்டில் அன்போடு இணைந்திருக்கிறோம். நடுவில் எங்கோ வெளிப்புறமாக, வெளிப்புறமாக, வெளிப்புறமாகச் செல்லத் துவங்கினோம். 

உபநிஷதத்தில் ஒரு ரிஷி சொன்னார். கடவுள் நம்மை உருவாக்கும்போது ஒரு பெரிய தவறு செய்து விட்டார். நம் புலன்கள் எல்லாம் வெளிப் புறமாகவே செல்கின்றன. நடுவில் எப்போதோ சில வீரமான மனிதர்கள், தங்கள் புலன்களை உட்புறமாகத் திருப்பி உண்மையை அறிந்தார்கள். அதுவே யோகம் என்கிறார். அது எவ்வளவு பெரிய உண்மை! நம் மனம் வெளி நோக்கியே செல்கிறது.ஆனால் சில சமயம் மனதை உள் நோக்கித் திருப்புவது அவசியம். இப்போது பலர் இதைக் கற்றுக்கொண்டு மிகவும் அறிவாளிகளா கிறார்கள். அவர்கள் மனதை உள்ளே திருப்புவது எப்படி என்று தெரிந்து கொண்டி ருக்கிறார்கள். அமைதி உள்ளே இருக்கிறது, வெளியே இல்லை என்பதையும் அறிவார்கள்.  

ஒவ்வொரு குழந்தையும் யோகி. நாம் பிறப்பிலேயே யோகிகள். நடுவில் அந்த கள்ளமில்லாத குணத்தை இழந்து விட்டோம். அந்த குழந்தைத் தன்மைக்குத் திரும்புவதற்கான எளிமையை நாடி நாம் யோகசாதனைகள், தியானம் முதலியவற்றில் ஈடுபடுகிறோம்.  

அந்த நிலையை அடைய பல வழிகள் உள்ளன. இப்போது அதை நான் விவரிக்கப் போவதில்லை. சுற்றுப் புறம் புதிதாகத் தொடங்கும் ஒருவரைப் பாதிக்கிறது. ஒரு நல்ல அமைதியான இடத்தில் துவங்குவது நல்லது. நாம் சாப்பிடும் உணவில் கவனம் செலுத்துவதும் நல்லது. நம் மனநிலை நாம் உண்ணும் உணவைப் பொறுத்தது. ஆயுர்வேதம் ஒரு மகத்தான விஞ்ஞானம். ஆயுர்வேதம் யாருக்கு எந்தவிதமான உணவு பொருந்தும் என்று சொல்கிறது. உங்கள் வாதம், பித்தம், கபம் என்பதைப் பொறுத்து என்ன உணவு உட்கொள்ள வேண்டும் என்று தெரியும். அது ஒரு பூரணமான விஞ்ஞானம்.ஜெயின் பரம்பரையினர் உணவு பற்றிய ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். ஆனால் அது முடி வில்லாதது. அதைப் பற்றி மேலும் மேலும் தெரிந்துகொண்டால், உணவு பற்றிய கவலையில் மற்ற காரியம் ஒன்றும் நடக்காது. அதனால் தான் நான் உங்களை ஒரு சம நிலையில் இருக்கச் சொல்கிறேன். அளவு மீறி எதிலும் இறங்க வேண்டாம். 

ஒரு பக்கம் சிலர் தான் சாப்பிடுவது என்ன என்பதைப் பற்றிக் கவலைப் படாமல் அளவுக்கு மீறி சாப்பிடுகிறார்கள். கஷ்டப்படுகிறார்கள். மற்றொரு பக்கம் சிலர் பார்த்துப் பார்த்து எடுத்து, “இதில் சர்க்கரை அதிகம், நான் இதை சாப்பிடக்கூடாது, அதை சாப்பிடக்கூடாது என்று இரவும் பகலும் எப்பொழுதும் சாப்பிடும் உணவைப் பற்றிக் கவலை. இதுவும் நல்லதல்ல. உங்கள் உடம்பில் வளையும் தன்மையும் இணக்கமும் இருக்கிறது. நீ ஒரு உணவு உனக்கு ஒத்துக் கொள்ளாது என்று ஒதுக்கி, சாப்பிடாமலே இருந்தால் உங்கள் உடல் அதை எப்போதும் ஏற்றுக்கொள்ளாது. உடல் தன் வளையும் தன்மையையும் இழந்துவிடும். அதேபோல் எப்போதும் நீங்கள் உலர் பழங்கள் முதலியவைகளை சாப்பிடுவதும் கெடுதல் விளைவிக்கும். உலர் பழங்கள் சில சமயங்களில் நன்மை கொடுக்கும்.உங்களுக்குத் தெரியுமா? பலர் எனக்கு உலர் பழங்களைக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள்.என் பெட்டியில் பல உலர் பழங்கள் இருக்கிறது. நான் அதை தினமும் சாப்பிடுவதில்லை. எப்போதாவது சாப்பிடுவேன். என்சைம்ஸ், மினரல்ஸ் நல்லது என்பார் சிலர். ஆம் அவை நல்லது தான். ஆனால் அதிகமாக அவைகளை சாப்பிடுவது நல்லதல்ல என்று நினைக்கிறேன். உலர் பழங்கள் சாப்பிடுவது இன்று அவசியமாகி விட்டது. ஏனெனில் உணவு பயிரிடும் முறைகள் பழங்காலத்து (இயற்கை உரங்களிட்ட)முறைகளிலிருந்து வேறுபடுகிறது. 

நான் படித்திருக்கிறேன். இன்றைய வாழைப் பழத்தில் உணவுச்சத்து 19 ம் நூற்றாண்டின் பழத்தை விட 12 ல் ஒரு பகுதி தான் இருக்கிறது. இன்றைய காய்கறிகள், பழங்கள் அளவில் பெரிதாக இருக்கின்றன. ஆனால் சக்தி மிகவும் குறைவாக உள்ளது. இயற்கை உரத்தில் விளைவதில்லை. மண்ணில் பலமும் இல்லை. பஞ்சாபில் ஒரு விஞ்ஞானியின் ஆராய்ச்சிப் படி, கோதுமையில் வேண்டிய அளவு ஃபோலிக் அமிலம் இல்லை. சில வருடங்களுக்கு முன் விளைந்த கோதுமை யில் நம் உடலுக்குத் தேவையான ஃபோலிக் அமிலம் இருந்தது. இன்று பலர் இருதய நோயால் பாதிக்கப் படுகிறார்கள். வேண்டிய அளவு ஃபோலிக் அமிலம் இல்லாததால் மற்ற வியாதிகளுக்கு ள்ளாகிறார்கள். உலர் பழங்களில் தேவையான ஃபோலிக் அமிலம் இருப்பதால் அதை சாப்பிடலாம். அதற்காக எப்போதும் அவைகளைச் சாப்பிடுவதும்,அதைப் பற்றிய கவலையில் மூழ்குவதும் நல்லது அல்ல. நம் மூளை, நம் உடல் உறுப்புகள் நமக்குத் தேவையானவைகளை உருவாக்கும் சக்தி படைத்தது. 

கேள்வி: குருஜி! இந்த ப்ரபஞ்சத்தில் மிக உச்ச சக்தி என்ன? 

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: மிக உச்ச சக்தி எளிமையான சக்தி தான். எங்கும் அணுத்துளிகள் இருக்கின்றன. சரியா? பிரபஞ்சம் அணுக்கலால் சூழப்பட்டது.ஒரு அணு மின் சக்தி நிலையம் வித்தியாசமானது. அதேபோல், மிக உச்சசக்தி எளிமையானது. எளிதில் கிடைக்கிறது. இந்த ப்ரபஞ்சத்தின் மூல காரணமே அது தான்.அது ஒரு வெட்டவெளி போன்றது. அலைக்கதிர் வீசும் இடம். பூமியில் காந்த சக்தி எங்கிருக்கிறது என்று கேட்டால், அது எங்கும் இருக்கிறது. உச்ச சக்தி காந்த அலை வீச்சை விட சுட்சுமமானது. அது எங்கும் எப்போதும் பூரண சக்தியுடனும் இருக்கிறது.எங்கோ தனி யிடத்தில் இருப்பதில்லை. உச்ச சக்தி என்று அழைப்பதை விட்டு, இந்தப் ப்ரபஞ்சத்தின் உயிர் சக்தி என்று அழைக்கலாம். பழங்காலத்தில் அதை அப்படித்தான் அழைத்தார்கள் உயிர் சக்தி / ப்ராண சக்தி. சத்என்றால் எது இருக்கிறதோ,‘சித்தாஎன்றால் எல்லாம் அறிந்து இருக்கும் ஆத்மா. ப்ரபஞ்சத்துக்குக் காரணமான உச்ச சக்தியை நீங்கள் எப்படி அநுபவத்தில் உணர முடியும்? மௌனமாக நம் மனத்தை உள் நோக்கி அனுப்புவதால் பேரானந்தம் மேல் மட்டத்தில் தோன்றும்.  

கேள்வி: குருஜி! சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் மற்ற கிரகங்கள் நம் மனத்தை பாதிக்குமா? ஆம் என்றால் அது எப்படி? 

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: சந்திரன் சமுத்திரத்தை பாதிக்கிறது என்று அறிவாயா? பௌர்ணமி (முழுநிலா) அன்று கடல் அலைகள் உயர்கின்றன. சந்திரன் நீரைப் பாதிக்கிறது. நம் உடலில் 60 % நீர் தான். அதில் கடல் நீர் போல் உப்புத் தன்மையும் இருக்கிறது. எனவே உன் உடல் ஒரு கடல் நீரின் சிறிய மாதிரி தான். நீர்ச்சத்து உடலிலிருந்து குறைந்தால்., உடல் சுருங்கி விடும். நீ கடல் நீர் அடங்கிய ஒரு பை. சில இடங்களில் சிவப்பு, சில இடங்களில் நீலம்.சில இடங்களில் வேறு நிறம். எல்லாம் ஒரு பையில் நிரப்பியிருக்கிறது.ஆகவே சந்திரன் உன் உடலைப் பாதிக்கிறது. உடல் பாதிக்கப் படும் போது மனமும் பாதிக்கப்படும். அதனால் தான் பைத்தியக்காரர்களை ஆங்கிலத்தில் லூனாடிக்என்று அழைக்கிறார்கள். அதேபோல் மற்ற கிரகங்களும் நம் உடல் மற்றும் மனத்தைப் பாதிக்கிறது.சக்தியின் கதிர் வீச்சு மிகவும் ருசிகரமான விஷயமாகும். ஒரு ட்ரான்ஸிஸ்டர் ரேடியோவின் உள்ளே பார்த்தால் சில மின் கம்பிகள், சில உலோகங்களுடன் வரைபடத்துக்கேற்ப இணைக்கப் பட்டிருக்கும்.அதில் செல்லும் அலைக்கதிர்கள் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி நமக்கு உபயோகமாக இருக்கிறது. இல்லையா 

உங்கள் செல் ஃபோனில் இருக்கும் சிப்பார்த்திருக்கிறீர்களா.அதில் ஒரு குறிப்பிட்ட வரைபடம் இருக்கும்.சிப்வேறு மாதிரி இருந்தால் அது வேறு எண்ணுக்குப் போகும். ஒவ்வொரு சிறிய வரைபடமும் குறிப்பிட்ட மின் அணுசக்தியைக் கொடுக்கும்.குறிப்பிட்ட அலைக்கதிர்களை (அதிர்வுகளை) இயக்கும். அதேபோல் நம் உடலும் ஒரு எலெக்ட்ரானிக் கருவி போல் பிரபஞ்சத்துடன் இணைக்கப் பட்டிருக்கிறது. பிரபஞ்சத்தில் எல்லாமே ஒன்றை ஒன்று சார்ந்து இணைக்கப் பட்டவை. 

பழங்கால மனிதர்கள் இதை அறிந்திருந்தார்கள். அவர்கள் எப்படி அணுத்துகள்களையும், அண்ட வெளியையும் அறிந்து அவைகளுக்குள்ள இணைப்பை அறிந்திருந்தார்கள் என்பது ஒரு பெரிய ஆச்சரியமாகும். சூரியனுக்கு கண்களோடும், மனதுக்கு சந்திரனோடும், செவ்வாய்க்கு கல்லீரலோடும், சனி கிரகத்துக்கு பற்களோடும் தொடர்பு இருப்பதை அறிந்திருந்தார்கள். எனவே உடலின் வேறு வேறு உறுப்புகள் வேறு வேறு கிரகங்களின் அலை அதிர்வுகளுக்குப் பொருத்தமாக இருக்கின்றன. அவைகள் குறிப்பிட்ட தானியங் களுடனும், குறிப்பிட்ட நிறம் மற்றும் பறவைகளுடனும் தொடர்பு கொண்டுள்ளன. உதாரணமாக செவ்வாய் கிரகம் நம் உடலின் கல்லீரலோடும், செம்மறி ஆட்டோடும், கொண்டை கடலையோடும் தொடர்பு உள்ளது. நம் பழங்கால மனிதர்கள் அணுத்துகள் களுக்கும் அண்ட வெளிக்கும் உள்ள தொடர்பை அறிந்திருந்தார்கள். இது ஒரு ஆச்சரியமான விஞ்ஞானம்.ருசிகரமானது.நீங்கள் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதே போல் சனி கிரகத்துக்கும் எள்ளுக்கும் தொடர்பு உள்ளது. அது காக்கையோடும் நம் பற்களோடும் தொடர்பு கொண்டது. இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது!

நீங்கள் வண்ணத்துப்பூச்சி விளைவைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.தென் அமெரிக்க மழை க்காடுகளில் ஒரு வண்ணத்துப் பூச்சி தன் இறக்கைகளை அடிக்கும் போது அதன் அலைகள் சைனாவின் மேல் உள்ள மேகத்தை பாதிக்கின்றது. ஒரு வண்ணத்துப் பூச்சியின் இறக்கைகளின் அசைவு, சைனாவின் மேகத்தில் வித்தியாசத்தை உண்டு பண்ணுகிறது. எவ்வளவு ஆச்சரியம்! எனவே சமஸ்கிருதத்தில் யத் பிண்டே தத் ப்ரம்மாண்டேஎன்ற பழமொழி இருக்கிறது.அதன் பொருள், இந்த ப்ரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தும் ஒரு மிகச் சிறிய பெட்டகம் போல் இருக்கின்றன.  

உன் உடல் ஒரு சிறிய ப்ரபஞ்சம் போல். உடலில் உள்ள அனைத்தும் ப்ரபஞ்சத்தோடு தொடர்பு ள்ளது. நீ ஒரு தனித் தீவு அல்ல. நீ சமுதாயத்தோடு தொடர்புள்ளவன். அகில உலகத்தைச் சார்ந்தவன். நீ விரும்புகிறாயோ இல்லையோ! நீ ஒத்துக்கொள்கிறாயோ இல்லையோ!அதைப் பற்றிக் கவலையில்லை. நீ ஏற்கனவே இணைக்கப் பட்டிருக்கிறாய். 

கேள்வி: குருஜி! அவித்யை(அஞ்ஞானம்) மற்றும் மாயையைப் பற்றி விளக்குவீர்களா? 

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: எதை அளக்க முடியுமோ அது மாயை.ஆங்கிலத்தில் மெஷர்என்பது சமஸ்கிருத மாயாவிலிருந்து வந்தது.மியதே அனய இதி மாயா”.“மியதேஎன்றால் அளக்க வேண்டும் என்று பொருள்.ஐந்து பூதங்கள் அளக்கக் கூடியது. பூமி,நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவை எல்லாமே அளக்க முடியும்.ஆகவே ஐம் பூதங்களால் ஆன இந்த ப்ரபஞ்சம் ஒரு மாயை.  

எதை அளக்க முடியாது? கருணை அன்பை அளக்க முடியாது.உண்மை அளக்க முடியாதது. அழகு அளக்க முடியாதது.அன்பு, அழகு, கருணை, உண்மை, நேர்மை, நாணயம் இந்த ஆத்மாவின் குணங்களை அளக்க முடியாது. அதனால் அவை மாயை அல்ல.அவை மகேஷ்வரா” – ஆத்மாவின் இயல்பு. மாயை என்பது மாறும் பொட்களைக் குறிக்கும். எது மாறுகிறதோ, அளக்கக் கூடியதோ அது மாயை. உலகில் எல்லாமே மாறக் கூடியவை. மாயையின் ஒரு அர்த்தம்.உலகில் எல்லாமே மாறுகின்றன”. உலகில் உள்ள எல்லா வற்றையும் அளக்க முடியும்இது மற்றொரு அர்த்தம். எது மாறாமல் இருக்கிறதோ,எதை அளக்க முடியாதோ அதுவே ஆத்மா.(செல்ஃப்), ப்ரம்மம் அல்லது ப்ரபஞ்சத்தின் சக்தி(ப்ராண சக்தி) என்பதாகும். அவித்யை” “அஞ்ஞானம்என்பது மாறுபவைகளைக் கவனிப்பது. பொருள்களை அளப்பது.

வித்யை” (ஞானம்) அவித்யை” (அஞ்ஞானம்) என்று இரண்டு இருக்கின்றது. வித்யை ஆத்மாவைப் பற்றி அறிவது. அவித்யை என்பது உலகத்தில் உள்ள மாறும் பொருட்களைப் பற்றி அறிவது. 

கேள்வி: குருஜி! மோட்சம் என்பது என்ன? ஏன் மனிதர்கள் மோட்சத்தை நாடுகிறார்கள்? எதிலிருந்து விடுபட்டு மோட்சம் அடைய விரும்புகிறார்கள்? 

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: உன்னை இந்த நாற்காலியில் 10 மணி நேரம் உட்கார வேண்டும் என்று ஆணை இட்டால்,நீ என் கால்கள் மறத்துப் போய் விட்டன என்று சொல்வாயா மாட்டாயா? அது தான் மோட்சத்தை நாடுவது. 

குழந்தைகளின் கடைசி தேர்வு முடிந்தவுடன்,அவர்கள் வீடு திரும்பி தங்கள் புத்தகங்களை வீசி எறிந்துவிட்டு, தொலைக்காட்சியைப் பார்ப்பார்கள். எப்படி இருக்கிறாய் என்று கேட்டால் ஆ! விடுதலை! (புத்தகங்களிலிருந்து) முடிந்து விட்டது!என்று சொல்வார்கள். மோட்சம் (விடுதலை) என்பது ஒரு உணர்வு. நான் என்ன செய்ய வேண்டுமோ செய்து முடித்து விட்டேன்.!பூரண திருப்தி!பூரண விடுதலை! வேறு ஏதும் செய்ய வேண்டியதில்லை. செய்ய வேண்டிய கட்டாயமும் இல்லை. உள்ளே மோட்சத்தை உணருகிறேன். மோட்சம் என்பது பந்தபாசம் இணைந்தது. அதிலிருந்து விடுபடுவதே மோட்சம். நாம் நம் மனதுடன், ஆசைகளுடன், தீவிர ஆசைகளுடன், தீவிர வெறுப்புகளுடன் பிறந்திருக்கிறோம். தீவிர ஆசைகள் மற்றும் தீவிர வெறுப்புகள் மறையும் போது உள்ளே மோட்சத்தை உணரலாம். அது மிகவும் எளிது. 

எல்லோரும் ஒரு மட்டத்துக்கு மோட்சத்தை அநுபவித்திருப்பார்கள்.அதுவே வாழ்க்கையில் நிலைத்திருந்தால், உங்கள் சக்தி பூரணமாகிறது. யாரும் உங்கள் மகிழ்ச்சியை புன் முறுவலைத் தடுக்க முடியாது.நான் சொல்வது விளங்குகிறதா? இல்லாவிட்டால் சிறு சிறு விஷயங்களுக்காக யாராவது உங்கள் பொத்தான்களை அழுத்தி உங்களை வருத்துவார்கள். எதுவும் சரியாக நடக்காது. 

கேள்வி: என் காதலன் மிகவும் பொறாமையுடன் இருக்கிறார். அவரை நான் மூச்சுக் கலைப் பயிற்சியில் (பார்ட் 1) சேர்த்தேன்.ஆனால் மறுபடியும் அவர் பொறாமை அதிகரித்திருக்கிறது. ஒரு நாள் இரவு என்னை அடித்து விட்டார். நான் 1 மாதம் அவருடன் பேசவில்லை. இப்போது 1 மாதம் கிரியா செய்து மாறி விட்டதாகச் சொல்கிறார்.அ வர் மௌனக்கலை பயிற்சியிலும் (பார்ட் 2) சேர்ந்திருக்கிறார். மாறி விட்டதாகத் தான் தெரிகிறது. அவர் என்னை மற்றொரு வாய்ப்பு கொடுக்கும்படிக் கேட்கிறார். நான் என்ன செய்யலாம்? 

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: கட்டாயம் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இந்தப் பயிற்சி  ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். எல்லாரிடமும் நல்ல குணங்கள் மறைந்திருக்கும். மன அழுத்தமும் அஞ்ஞானமும் அந்த நல்ல குணங்களை மறைக்கிறது. எனவே இங்கு வெற்றிடம் காலியிடம் தியானப் பயிற்சி செய்த பின் மூடி இருக்கும் நல்ல தன்மைகளை வெளியே கொண்டு வருகிறோம். அவை மலர்ந்து பூக்களை அளிக்கும். 

கேள்வி: என் தந்தையின் எதிர்மறை எண்ணங்களை நீக்கி உதவி செய்ய விரும்புகிறேன். இந்த சூழ்நிலையை எப்படி கையாள வேண்டும்.அவரோடு வேலை செய்யும் போது இந்தக் குழப்பத்தை எப்படி ஏற்றுக் கொள்வது? 

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: இது கடினமான காரியம். வேறு வேறு தலை முறைகள் வேறு விதமாகச் செயல் படும்.உனக்கு நிறைய பொறுமை அவசியம். அவரோடு ஈடு கொடுக்க ஒரு தனித் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். சிலசமயம் பெரியவர்கள் இளைய தலைமுறையை நம்பி ஒரு வேலையை ஒப்படைக்க மாட்டார்கள். பூரணமான முடிவை எதிர் நோக்கி அவர்களே அதை செய்து முடிக்க விரும்புவார்கள். இளைய தலைமுறைக்கு இது ஒரு பிரச்சினை. நீ ஒன்று செய்யலாம்.அவர் எதிர்மறையாகப் பேசும்போது வாக்கு வாதம் செய்யாமல் அந்த இடத்தை விட்டுப் போய்விடு. இந்த சமயத்தில் வாக்குவாதம் வேலை செய்யாது. நீ சரியாகச் சொன்னாலும் அவர் அதை ஏற்க மாட்டார்.அவர் பிடித்த பிடியை விடமாட்டார். இது கடினம்.தனித் திறமையோடு உன் எண்ணங்களை அவருக்கு உணர்த்த வேண்டும். அதற்கு ஒரு தனித்திறமை தேவை. மௌனம் எல்லா திறமை களுக்கும் தாய். நீ, நான் எதற்காக இங்கு வந்து 3 நாட்கள் மௌனமாக இருக்க வேண்டும். அதில் என்ன இருக்கிறது? நான் பேசினால் என்ன ஆகிவிடும்? நீ மௌனமாக இருக்கும் போது, தனித்திறமைகளை நாடுவாய். அவை உன்னை வந்தடையும். 

 
கேள்வி: வெளிப்படுத்துதலின்(காட்சியளித்தல்) (மானிஃபெஸ்டேஷன்) பின் என்ன இரகசியம் இருக்கிறது? தியானம் செய்யும் போது என் தலை முன்னால் வளைகிறது. சில சமயம் முழு உடம்பும் வளைகிறது. அது சரியா? நான் அதைத் தவிர்த்து நிமிர்ந்து உட்காருவது அவசியமா? 

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: நாம் நிமிர்ந்து உட்கார்ந்து அப்படியே விட்டு விடுகிறோம். தியானத்தில் உன் தலை கீழே குனிகிறது. உடல் வளைகிறது. அதைப் பற்றி எண்ண வேண்டாம். அது பரவாயில்லை. அது நல்லது தான். இப்போது நான் எவ்வாறு காட்சியளிக்கிறேன்? நீ விரும்பும்போது, அது கட்டாயம் காட்சியளிக்கும். ஒரு விருப்பம், அதன் மேல் சிறு கவனம், விருப்பம் நிறைவேறும். அதை நீ காண்பாய். இதற்கு சங்கல்பம் என்று பெயர். வாழ்க்கையில் உனக்கு என்ன தேவை? உன் மனதில் அந்த விருப்பத்தை விதைத்து உறுதி செய். அதையே நினைத்து ஜுரவேகம் வேண்டாம். உன் விருப்பத்தை அப்படியே மனதில் விட்டு விட்டு ஓய்வெடு. அது தானாகவே நிறைவேறும். விருப்பத்துக்கும் ஆசைக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. ஆசை என்பது அதை விடாமல் பற்றி இருப்பது.

நீ இங்கிருந்து கோதென்பர்க்” (நார்வே) செல்ல விரும்புகிறாய் என்று வைத்துக்கொள். நான் கோதென்பர்க் போக வேண்டும், நான் கோதென்பர்க் போக வேண்டும்,நான் கோதென்பர்க் போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டேயிருந்தால், நீ கார் ஓட்டும் போது இதையே ஜுரவேகத்தில் சொல்லிக்கொண்டிருந்தால் நீ கோதென்பர்க் செல்வதை விட்டு வேறெங்கோ போய் விடுவாய். ஆனால் நீ கோதென்பர்க் செல்ல விரும்பி, காரில் கிளம்பினால் ஓரிரு இடங்களில் நிறுத்தி, மறுபடியும் பயணம் செய்து அங்கு போய் சேர்ந்து விடலாம். இது தான் விருப்பம்(சங்கல்பம்). ஆசை என்பது ஜுரவேகத்தில் அதை பற்றி இருப்பது.அது ஏமாற்றத்தைத் தரும்.

கேள்வி: நீங்கள் அருகில் இருக்கும்போது வித்தியாசமான உணர்வுகள் தோன்றுகின்றன. அமைதியாகவும் அதே சமயம் பரபரப்புடனும்,அன்பாகவும் அதே சமயம் பொறாமையுடனும் இருக்கிறேன். அது ஏன்? 

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: அது சரிதான். மனித வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர் போல மன எழுச்சி அடங்கியது.மன எழுச்சி மேலே போகும் போது அது நன்மையாகவும், அது கீழே போகும் போது எதிர்மறையாகவும் முடியும். ஆனால் அதை நீ உணர்ந்தது நல்லது தான். சாட்சியைப் போல் அவைகளை நீ பார்க்கலாம்.

கேள்வி: திட்டமிடுவதையும்,பேசுவதையும் விட்டு விட்டு அதிகமாக செயல்படுவது எப்படி? 


ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: நல்லது. நீ ஒரு தலைவன். தலைமை வகிக்கலாம். ஒரு தலைவன் செயல்பட விரும்புவான்;வெறும் பேச்சு மட்டும் அல்ல. நீ எழுந்து தலைமை வகிக்கலாம். எல்லோரையும் வழி நடத்திச் செல். மற்றவர்களை உங்கள் குழுவில் சேரத் தூண்டலாம். அவர்கள் சேராவிட்டால் தனியே சென்று காரியத்தில் இறங்கு.

இது தான் நம் கொள்கை.மற்றவர்களையும் நம்மோடு சேர்ந்து முன்னேறச் செய்வோம். யாரும் வராவிட்டாலும் பரவாயில்லை. நாம் விடாமுயற்சியுடன் தனியாக இருந்தாலும் மேலே செல்வோம். திடீரென்று திரும்பிப் பார்த்தால் பலர் உன்னைப் பின் தொடர்வதைக் காண்பாய்.

கேள்வி: கர்ம வினை பற்றி விளக்குவீர்களா? அதைப் பற்றி ஆழமாக அறிய எங்கு படிக்கலாம்? 

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: கர்மவினை என்பது என்ன? கர்மவினை என்றால் செயல் என்று அர்த்தம். செயல் மூன்று வகைப் படும்.கடந்த காலத்தில் செய்தவை. நிகழ் காலத்தில் செய்பவை, வருங்காலத்தில் செய்யப் போகும் செயல். கடந்த கால செயல்கள் நம் நினைவில் பதிந்திருக்கும்.  நிகழ் காலத்தில் செய்வதை கர்மவினை என்று சொல்லலாம்.அதற்கான பயன்கள் உடனுக்குடனே கிடைக்கும். நான் சொல்வது விளங்குகிறதா? எனவே கர்மவினை என்பது கடந்த கால செயல்களின் பதிவு, ஞானம் தேடுபவர்க்குஎன்ற புத்தகத்தில், முதல் பக்கத்தில், கர்மவினை எப்படி மாற்றலாம். சில மாற்ற முடியாத அநுபவிக்க வேண்டிய கர்மவினைகள் என்ன என்பதைப் பற்றி விளக்கி யிருக்கிறேன். ஓர் எளிய உதாரணம் சொல்லுகிறேன். எவ்வளவு பேருக்கு காலை எழுந்தவுடன் காப்பி குடிக்கும் பழக்கம் இருக்கிறது. எத்தனை பேருக்கு காப்பி குடிக்கா விட்டால் தலை வலி வருகிறது. (பலர் கையை உயர்த்துகிறார்கள்). பார்த்தீர்களா இது காப்பி கர்மவினை. நீங்கள் காப்பி குடிப்பது உங்களது உள்ளுணர்வில் பதிந்து விட்டது. ஒரு நாள் காப்பி குடிக்கா விட்டால் உங்களுக்குத் தலைவலி வருகிறது.இதிலிருந்து வெளிவர இரண்டு வழிகள் உள்ளன. காப்பி குடித்து தலைவலியைப் போக்கிக் கொள்ளலாம். தலை வலியைத் தாங்கிக் கொள்ளலாம். வலித்தால் பரவாயில்லை. ஏனென்றால் கர்மவினை என்பது எப்போதும் ஒரு கால கட்டத்துக்குத் தான். உங்களுக்கு விபத்து நடந்து கர்மவினை ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதுவும் ஒரு கட்டத்தில் முடியும். அந்த செயல் அந்த கால கட்டத்துக்குப் பிறகு உங்களை பாதிக்காது. நீங்கள் காப்பி குடிக்காததால் வந்த தலைவலி தண்ணீர் குடித்து சாப்பிட்டு வேறு வேலை செய்யும் போது நீங்கிய மாதிரி கர்மவினை ஒரு காலகட்டம் வரை தான். விளங்குகிறதா? இது கர்மவினையைப் பற்றிச் சொல்லும் போது ஒரு நல்ல உதாரணமாகும்.

அதே போல் வாழ்வில் சில சமயம் மன அமைதியின்றி இருப்பாய்.என்ன செய்தாலும் உனக்கு மகிழ்ச்சியில்லை. மற்ற சில சமயங்களில் நீ மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறாய்.  இப்படி உங்களுக்கு நடந்திருக்கிறதா? கவனித்துப் பார்த்தால், ஒர் ஆண்டு காலத்தில், பிப்ரவரியிலோ, டிசம்பர், ஜனவரியிலோ, எப்போதோ, எங்கோ ஒரு வாரத்தில், அல்லது மாதத்தில் அல்லது 15 நாட்கள் நீ மிகவும் வருத்தமாக இருக்கிறாய். மற்ற ஒரு சமயத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறாய். ஏனென்றால் உன் மனம், நேரம், கர்மவினை ஒன்றோடொன்று தொடர்புடையது. அப்படிப் பட்ட சமயத்தில் என்ன செய்வது? அதைப் பற்றிய ஞானமே (அறிந்து கொள்வதே) அதை விட்டு வெளிவர வழி செய்யும் என்று சொல்வார்கள்.

ஓ! இது பிப்ரவரி. இந்த மாதத்தில் ஒவ்வொரு ஆண்டும் இப்படி ஏதாவது நிகழ்கிறது. இது எப்படியும் கடந்து விடும் என்ற ஞானம். நிறைய தியானம் செய்யலாம். சத்சங்கத்தில் பங்கு கொள்ளலாம். யோக சாதனைகள், ஞானம் சம்பந்தமான புத்தகங்கள் படிக்கலாம். பெரியவர்களின் வாக்குகளைக் கேட்கலாம். இப்படிச் செய்வதால் எதிர்மறைச் சக்திகளை மாற்ற முடியும். இப்படிப் பட்ட சூழ்நிலை ஒரு கால கட்டத்துக்குத் தான்.“சாதனாஎன்பது உண்மையான செல்வம் எனப்படும்.இது உங்களை இடம், காலம், மற்றும் கர்மவினை களுக்கப்பால் எடுத்துச் செல்லும் சக்தி படைத்தது.

கர்ம வினைகளை யோக சாதனைகள் மூலம் குறைக்க முடியும்.அதனுடைய கால கட்டத்தையும் தீர்த்து உங்கள் ஆத்மாவை மேல் நிலைக்குக் கொண்டு செல்லலாம். அதனால் தான் அதை சாதனா உண்மையான செல்வம் என்கிறோம்.எப்போது உங்களுக்கு அவசியமோ அப்போது நீங்கள் அதைச் செய்ய விரும்புவதில்லை. இது ஒரு சிக்கலான ஒன்று. இது எப்படியென்றால் ஒரு நோயாளி மருந்து சாப்பிட விரும்பவில்லை என்பது போல். குளிரில் நடுங்கும் ஒருவரைக் கூப்பிட்டு ஒரு கம்பளி ஆடையை அணியக் கொடுக்கும்போது எனக்கு கம்பளி ஆடை அணிய விருப்பமில்லை என்று அவர் மறுப்பது போல். நீங்கள் என்ன செய்ய முடியும்?

இது அப்படித்தான். எப்போது தேவையோ உங்கள் மனம் அதைச் செய்வதைத் தடுக்கிறது. நம் மனம் நமக்குச் சிறந்த நண்பனாகவும், கொடிய பகைவனாகவும் செயல் படுகிறது. உங்கள் பகைவன் வெளியில் இல்லை. உங்களுடனே இருக்கிறான். எனவே உங்கள் மனத்துடன் நல்ல சம்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதைத் தான் நாங்கள் இங்கு செய்கிறோம். (பார்ட்2 பயிற்சி). தேய்த்துத் தேய்த்து மெருகேற்றுகிறோம்.

கேள்வி: நான் 10 வருடமாக இந்தப் பாதையில் செல்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு இன்னும் சில தடைகள் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கீழ் உள்ள சக்கரங்களில் சக்தி குறைவாக இருக்கிறது. இது மாறி நன்மையாக முடிய வாய்ப்பு இருக்கிறதா?
ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: கட்டாயம். நீ மகிழ்ச்சியாக இருந்தால் நீ சரியான திசையில் செல்கிறாய். கீழ் சக்கரங்களின் சக்தி பற்றி கவலைப் பட வேண்டாம். அதை அதிகரிக்க ஏன் விரும்புகிறாய். அதை அப்படியே விட்டு விடு. இயற்கை அதன் வேலையைச் செய்யட்டும்.

கேள்வி: நாம் வாழும் கலையில் செய்வது எல்லாம் விழிப்புணர்வு பெற்று ஆத்ம ஞானம் அடைவதற்காகவா, அல்லது நல்லுணர்வுகளை அநுபவிக்கவா? நான் விழிப்புணர்வு பெற விரும்புகிறேன். 

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: இது ஒரு மகா சமுத்திரம் மாதிரி. எல்லாமே கிடைக்கும். நீ கடற்கரையில் நடக்க விரும்பினால் வரலாம். நீ நீரில் ஆழமாக மூழ்கி எண்ணெய் எடுக்க விரும்பினால் அதுவும் கிடைக்கும். வழி ஒரு சமுத்திரம் போல. உப்பு எடுக்கலாம். எண்ணெய் எடுக்கலாம். மீன் பிடிக்கலாம்.கோடி கோடி பொருட்கள் கிடைக்கும். கட்டாயமாக ஆத்ம ஞானமும் அடங்கியிருக்கிறது. நீ அதை நாடினால் எனக்கு மகிழ்ச்சி. எல்லா மக்களும் ஆத்ம ஞானத்தை நாடவேண்டும். நீ அதை நாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. நீ இங்கு சிறிய சுகத்தை நாடி வரவில்லை. அது மிகவும் நல்லது.

வா. நிறைய காரியங்கள் செய்வோம்.ஆன்மிகம்: உங்களை சந்திப்பதற்கான ஒரு நேரம்


29
2012Ap2012.................நோர்வே 
பாருங்கள், நான் ஒரு விஷயம் சொல்ல வேண்டும், உங்களை நீங்களே அதிகமாக தீர்மானிக்காதீர்கள். நாம் நம்மையே தீர்மானிக்கும் பழக்கத்தை அல்லது அடுத்தவரை தீர்மானிக்கும் போக்கை கொண்டுள்ளோம். உங்களை நீங்களே  குற்றம் சொல்லிக் கொள்கிறீர்கள் அல்லது அடுத்தவரை குற்றம் சொல்கிறீர்கள். நீங்கள் உங்களை சரியல்ல என்று அறிகிறீர்கள், அல்லது அடுத்தவரை சரியல்ல என்று காண்கிறீர்கள். நீங்கள் விழித்துக்கொண்டு, தீர்மானிப்பதை  நிறுத்துங்கள்.

உங்களின் மேல் மிகக் கடினமாக இருக்காதீர்கள். நீங்கள் நிகழ்தலின் ஒரு பகுதி. அங்கே மரங்கள் இருக்கின்றன, ஆறுகள் இருக்கின்றன, பறவைகள் இருக்கின்றன அது போல நீங்களும் இங்கே இருக்கிறீர்கள். பல பறவைகள் பிறக்கின்றன, பல பறவைகள் இறக்கின்றன. இல்லையா? பல மரங்கள் வளர்கின்றன மற்றும் மறைந்து போகின்றன. அதைப் போல, பல மக்கள், பல உடல்கள் இங்கே வந்திருக்கின்றான் மற்றும் அவை எல்லாம் மறைந்து விடுகின்றன. மற்றும் புதிய மக்கள் வருவார்கள் மற்றும் மறைந்து போவார்கள்.

இந்த கிரகம்(கோள்) பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக இங்கே இருந்து கொண்டு இருக்கிறது. உங்களுடைய வாழ்க்கையை பெரிய பின்னணியில் பாருங்கள், பிறகு உங்களை நீங்களே குறை கூறுவதை நிறுத்தி விடுவீர்கள். ஆன்மீகப் பாதையில் முதல் விதி, உங்களை நீங்களே குறை கூறுவதை நிறுத்துதல் ஏனெனில் நீங்கள் யாரை குறை சொல்கிறீர்களோ, அவர்களுடன் இருக்க விரும்புவீர்கள்? உங்களுடன் சந்தோசமாக இல்லாத ஒருவருடன் நீங்கள் இருக்க விரும்புவீர்களா? இல்லை. ஆகையால், உங்களை நீங்களே குறை கூறினால், உங்களுடன் நீங்கள் இருக்க முடியாது. ஆன்மிகம் ஒரு உங்களை நீங்கள் சந்திக்கும் நேரம்.

உங்களை நீங்களே குறை கூறிக் கொண்டிருந்தால், உங்களுடன் நீங்கள் எப்பொழுதும் நேரம் ஒதுக்க முடியாது. ஆகையால், ஆன்மீகப் பயணத்தில் அல்லது பாதையில் முதல் சட்டம் உங்களை நீங்களே குறை சொல்வதை நிறுத்தவேண்டும்.

இப்பொழுது, "ஓ அப்படியெனில், நான் அடுத்தவரை குறை கூற முடியும்." என்று சொல்லாதீர்கள். இல்லை! ஒவ்வொரு முறையும் நீங்கள் சிலரை குறை கூறி இருக்கிறீர்கள், பரந்த கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது நீங்கள் எதற்க்காக குறை கூறினீர்களோ, அது தவறு அது பயனற்றது என்று பார்கிறீர்கள். இப்பொழுது, உங்களுடைய மதிப்பீடு தவறு என்று அறிந்த பொழுது, பிறகு மிக விரைவாக உங்களை நீங்களே குறை கூறுகிறீர்கள். ஆகையால், நான் ஏன் மற்றவர்களை குறை கூற வேண்டாம் என்று சொல்கிறேன் எனில், நீங்கள் மற்றவர்களை குறை கூறினால், அது உங்களிடமே திரும்ப வரும். நீங்கள் யாரையும் குறை கூறக் கூடாது.

இந்த 56 வருடங்களில் நான் ஒரு மோசாமான வார்த்தைகூட யாருக்கும் சொன்னது கிடையாது. "நீ முட்டாள்" என்பது தான் என்னிடம் இருந்து வந்த மிக mosamanaa  வார்த்தை. சிலநேரங்களில், நான் கோபமாக அல்லது கவலையாக  இருந்த பொழுது,"நீ முட்டாள்" என்று கூறியது, இதற்க்கு அதிக பட்சமாக ஏதும் இல்லை. நான் யாரையும் குறை கூறியதோ அல்லது எதாவது மோசமான வார்த்தை சொன்னது கிடையாது. எப்பொழுதும் என்னிடம் இருந்து வந்ததில்லை. அது நடப்பதற்கு நான் எதுவும் செய்த தில்லை; ஆரம்பத்திலிருந்தே அது போல இயற்கையாகவே இருந்தது. நான் யாரையும் துஷ்ப்ரயோகம் செய்ய முடியாது . வார்த்தை  துஷ்ப்ரயோகம் அல்லது மற்ற  துஷ்ப்ரயோகம். நீங்கள் இதற்க்கு கவனத்தை செலுத்தும் போது, மோசமான வார்த்தை உபயோகிக்கும்போது, உங்களுடைய வார்த்தை ஆசீர்வதிப்ப தற்கு சக்தியை பெறுகிறது. உங்களுடைய ஆசீர்வாதம் வேலை செய்யும். நான் என்ன சொல்கிறேன் என்று தெரிகிறதா?

ஆகையால், உங்களை குறை கூறுவதை நிறுத்துங்கள் மற்றும் அடுத்தவரை குறை கூறுவதை நிறுத்துங்கள். விஷயங்கள் அவைகள் இருக்கின்ற படி இருக்கின்றன, வெறுமனே நகர்ந்து செல்லுங்கள் அவ்வளவுதான். உங்களுக்கு தெரியும், சில நேரங்களில் மக்கள் சொல்கிறார்கள், " ஓ இவன் ஒரு ஏமாற்றுக்காரன், இவன் நேர்மையானவன் அல்ல." ஆனால் எது நேர்மை, எது ஏமாற்றுத்தனம் என்று ஒருவர் சொல்வதற்கு வரைமுறைகள் இருக்க வேண்டும். பல நேரங்களில், மற்றவர்களை மதிப்பிடுவதற்கு உங்களுக்கு வரை முறைகள் இல்லை, வெறுமனே குறை கூறுகிறீர்கள், "ஓ அவன் ஏமாற்றுக்காரன்" அவ்வளவு தான் முடிந்தது. மற்றவர்களை குறை கூறுவதற்கு மற்றும் தன்னை தானே குறை கூறுவது பிறகு அதைப் பற்றி குற்ற உணர்வு கொள்வது, இது சமூகத்தில் வளர்ந்த விழிப்புணர்வற்ற நடவடிக்கை. மற்றும் அதை நீக்கி திருப்புவதற்கு இந்த ஆன்மீகப் பாதை இருக்கிறது. இது ஒரு அப்படிப் பட்ட நுட்பமான விஷயம் ஆகும்.

நீங்கள் செய்த எல்லா தவறுகளையும் சரி என்று தீர்மானிப்பதாக அர்த்தம் அல்ல. நீங்கள் சில தவறுகளை செய்யும் பொழுது, அவர்கள் சொல்கிறார்கள் "ஓ  நான் ஆன்மீகப் பாதையில் இருக்கிறேன், என்னுடைய தவறுகளை ஏற்றுக் கொள்ள முடியாது மற்றும் என்னை நானே குறை கூற முடியாது. ஆகையால் நான் செய்ததெல்லாம் சரி. இல்லை! அது ஒரு நுட்பமான சமநிலை. அது உன்னுடைய தவறை தீர்மானிப் பாத்து அல்ல ஆனால் அதே நேரத்தில் உன்னுடைய தவறை அறிந்து கொண்டு உங்களை நீங்களே குறை கூறாமல் இருப்பது.

நீங்கள் உங்களுடைய தவறை அறிந்து கொண்டு ஏற்றுக் கொள்ளவில்லை எனில், நீங்கள் எப்பொழுதும் முன்னேற மாட்டீர்கள். அது கதையின் முடிவாகி விடும். அதே நேரத்தில், உங்களுடைய தவறை அறிந்து கொண்டு நீங்கள் மிகுந்த குற்ற உணர்வு கொண்டால் அதுவும் கூட நபிக்கையற்ற நிலை. ஆகையால் உங்களுக்கு மிகுந்த நுட்பமான சமநிலை வேண்டும். இந்த பக்கமோ அல்லது அந்த பக்கமோ அல்லது கத்தி முனையில் நடங்கள்.

கே: நாம் மிகச்சிரியவர்கள் எனில் பிறகு இங்கே இந்த போக்கில் ஏன் அவ்வளவு பணத்தை, நேரத்தை, ஆதாரங்களை மற்றும் ஆற்றலை நம்மீது உபயோகித்து கொண்டிருக்கிறோம்? ஒவ்வொருவரும் ஒரு பொருட்டே அல்லாத போது நாம் ஏன் ஆன்மீகமாக மற்றும் எல்லாமாக ஆகவேண்டும்? அவைகள் ஒரு விசயமே இல்லாத போது நல்லவர்களாக இருந்து உதவி செய்வதற்கு நாம் யார்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உங்களுக்கு இந்த கேள்விக்கு பதில் வேண்டுமா? அது ஒரு விசயமே இல்லை! ஏன் நீங்கள் இந்த கேள்வியை பற்றி மிகவும் அக்கறை கொள்ள வேண்டும்? அது ஒரு விசயமே அல்ல!

கவனியுங்கள் இருப்பில் பல அடுக்குகள் உள்ளன, ஆனால் ஞானத்தில்  இரண்டு அடுக்குகள் தான். ஒன்று பயன்படுத்தப்படும் ஞானம் மற்றும் மற்றொன்று தூய்மையான ஞானம். தூய்மையான அறிவியல், பயன்படுத்தப்படும் அறிவியல். தூய்மையான ஞானம் என்பது என்ன? இந்த அறையில், எல்லாமே மரத்தால் ஆனவை. இந்த இருக்காய் மரம், அந்த மேசை மரம் மற்றும் அந்த கதவு மரம். அது என்ன? எல்லாமே அணுக்கள் தான்.

ஆகையால், ஒவ்வொன்றும் மரத்தால் ஆனவை அல்லது எல்லாமே அணுக்கள்-இது தூய்மையான ஞானம். அனால் ஒவ்வொன்றும் அணுக்களால் ஆனபோதும் கூட உங்களால் இருக்கையை கதவாகவோ அல்லது கதவை இருக்கையாகவோ உபயோக்கிக்க முடியாது. உங்களுக்கு புரிகிறதா?

ஆகையால், வைரமும் நிலக்கரியும் ஒரே பொருட்களால் ஆனவை. அது மெய்நிகராக ஒன்று. ஆனால் நிலக்கரியை உங்கள் காதுகளில் அணிந்து கொள்ள முடியாது மற்றும் வைரத்தை அடுப்பில் போட முடியாது, சரியா? ஆகையால் அவைகள் ஒரு அடுக்கில் வேறு வேறானவை. அது பனிக்கட்டியும் தண்ணீரும் ஒன்று என்று கூறுவதுபோல, அவை இரண்டும் H2O தான். ஆனால் தண்ணீரிலிருந்து தேநீர் தயாரிக்க முடியும். ஆனால் பனிக்கட்டியிலிருந்து தேநீர் தயாரிக்க முடியாது. பனிக்கட்டி தண்ணீராக மாறவேண்டும், அதன் பிறகே அதிலிருந்து தேநீர் தயாரிக்க முடியும். இல்லையா? ஆகையால் இது பயன்படுத்தப் படும் ஞானம்.

ஆகையால் தூய அறிவில் நீங்கள் முக்கியமில்லாதவர்கள் என்று சொல்லப் படுகிறது. ஏன்? ஏனெனில் திடீரென்று நீங்கள் உங்களை பிரபஞ்ச பின்னணியில் பார்கிறீர்கள்.

நீங்கள் சாப்பிடக்கூடாது என்று அர்த்தம் அல்ல. நீங்கள் மிகசிரியவர்கள் என்றல் ஏன் இருக்கவேண்டும்? ஏன் சாப்பிடுகிறீர்கள்? ஏன் தூங்குகிறீர்கள்? ஏன் எதையாவது செய்கிறீர்கள்? சரியா? நீங்கள் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் மற்றும் நீங்கள் இந்த பயிற்சியிலும் இருக்க வேண்டும். புரிந்ததா?

இங்கே இருப்பதனால் என்ன நடக்கிறது? மனம் ஆற்றலை பெறுகிறது. உடல் ஆற்றலை பெறுகிறது மற்றும் உங்களிடம் ஞானம் தங்குகிறது. பல விஷயங்கள் நடக்கின்றன.

கே: தியனத்திலோ அல்லது ஓய்வில் இருக்கும் போது அழுவது சரியா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அழுவது சரி. ஒரு தடவை அல்லது இரண்டு தடவை சரி அனால் எல்லா நேரங்களிலும் அதை ஊக்குவிக்க வேண்டாம். குறிப்பாக, எல்லோரும் தியானத்தில் இருக்கும்பொழுது மற்றும் அங்கெ ஒரு சிலதன்மை இருக்கும் பொழுது, உங்களுடைய உணர்வுகளை கவனித்து அதை விட்டு விடுவதே சிறந்ததாகும்.

கே: பகலில் சிறிய தூக்கம் கொள்வது நல்லதா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் ௪௫ வயதை கடந்து விட்டீர்கள் எனில் சரி. அதற்க்கு முன்னால் அல்ல.

கே: நான் எப்பொழுதும் எதையும் உணரவில்லை எனில் என்ன அர்த்தம்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் காலியாக உணர்கிறீர்களா? அது ஏதோ ஒன்று.
உங்களுக்கு தெரியுமா, சில நேரங்களில் உணர விரும்புகிறீர்கள். நீங்கள் மற்றவரின் அன்பவங்களை கேட்கிறீர்கள் மற்றும் நீங்கள் உட்கார்ந்து அதை உணர நினைக்கிறீர்கள், அப்பொழுது அது நிகழ்வதில்லை. ஏதோ ஒரு அனுபவத்தை பெற நினைப்பதை விட்டுவிடுங்கள். நீங்கள் என்னோடு இருக்கிறீர்களா?

பாருங்கள், ஒரு எதிர்பார்ப்பு அல்லது மிக அதிகமான விழிப்புணர்வு, உங்களை மூளையின் முன்னாள் மடலில்  வைக்கிறது மற்றும் நீங்கள் மிகவும் கவனமாக இருக்கிறீர்கள் .அந்த நேரத்தில் நீங்கள் தூங்க முடியாது, நீங்கள் ஓய்வாக இருக்க முடியாது. உங்களால் ஏதோ ஒரு அனுபவத்தை மற்றும் ஆழமாகவும் கூட செல்ல இயலாது. ஆகையால் அது ஒரு வகை சாத்தியம். இரண்டாவது, உங்களில் நிறைய பேர் கேட்டிருக்கிறீர்கள், "எல்லா நேரங்களிலும் நான் தூங்கி விடும் போது நான் என்ன செய்வது". நாம் நம்முடைய தூக்க அமைப்பை மாற்றிவிட்டோம் அது தேவைப் படுகிறது மற்றும் உடல் அதை எடுத்துக் கொள்கிறது. உங்களுடைய சக்கரை அளவு அதிகமாகவோ குறைவாகவோ இருந்தால், நீங்கள் அடிக்கடி தூக்கத்தில் விழுவீர்கள் . இது ஒரு விஷயம்.

இரண்டாவது, உங்களுடைய அமைப்பில் தேவையான அளவு பிராண இல்லை யெனில்,நீங்கள் தூக்கத்தில் விழுவீர்கள். ஆகையால், பிரணாயாம உங்களுக்கு உதவி செய்யும்.தியானத்திற்கு முன், ஒரு சில ஆழமான மூச்சு உங்களுக்கு உதவி செய்யும். உடலில் உள்ள சக்கரை மற்றும் கனிமங்கள் அளவுகளை கண்டிப்பாக பாருங்க. சிலநேரங்களில் அவைகள் பற்றாக்குறையாக இருக்கும்போதும் கூட நீங்கள் சோர்வாகவும் உணர்வீர்கள் மற்றும் நீங்கள் தூக்கத்தில் விழுவீர்கள்.பிறகு உடல் மிகவும் சோர்ந்திருக்கும் போதும் வாய்ப்பு இருக்கிறது. சில நேரங்களில், நீங்கள் சோர்வாக இருக்கும் போது நீங்கள் தூக்கமாக உணர்வீர்கள்,சிலநேரங்களில்,சோர்வாக இருப்பீர்கள், உங்களால் தூங்க முடியாது. உங்களில் எத்தனை பேருக்கு இந்த அனுபவம் இருக்கிறது? நீங்கள் சோர்வாக இருப்பீர்கள் ஆனால் உங்களால் தூங்க முடியாது.ஆகையால் தியானத்தில் இவைகள் மாறிவிடுகின்றன,மற்றும் நீங்கள் ஏன் தியானத்தின் போது தூக்கம் வருகிறது எனில் அது ஒரு காரணம். ஆனால் பொருட் படுத்த வேண்டாம்.

கே: ஏன் என்னுடைய தலை எப்பொழுதும் பாடிக்கொண்டிருக்கிறது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: எப்பொழுதும் என்று சொல்லாதீர்கள். அது எப்பொழுதும் பாடிக்கொடிருக்கின்றது  என நான் நினைக்க வில்ல. நீங்கள் மூளையின் அந்த பகுதியின் அதிக மாக உபயோகித்திருக்க வேண்டும். அதாவது உங்கள் மூளையின் வலது பகுதி, மற்றும் ஆகையால் இசை உங்களுக்கு சாதரணமாக வருகிறது. மற்றொரு மாற்று வலி சிக்கலான கணக்குகளை தீர்ப்பதில் கொஞ்ச நேரத்தை செலவிடுவது. குருக் கேளு துளுகளை போல, பிறகு நீங்கள் மூளையின் மற்றொரு பகுதியை உபயோகிகிரீர்கள். நீங்கள் உட்கார்ந்து எங்களை எண்ணலாம்; சில கணக்குகளை போடுங்கள் அல்லது பணத்தை எண்ணுங்க .அந்த செயல்களை செய்யுங்கள் அது மூளையின் மற்றொரு பகுதியை சமப்படுத்தும்.  அல்லது எதாவது படியுங்கள். அல்லது ஞானத்தை கேளுங்க . இப்பொழுது நீங்கள் ஞானத்தை கவனித்துக் கொண்டிருக்கீர்கள் மற்றும் உங்கள் மனம் பாடிக்கொண்டிருக்கவில்லை. ஆகையால் படிப்பது, கவனிப்பது, எண்ணுவது , இவை எல்லாம் உங்களுடைய இடது மூளையை செயல்படுத்த உதவுகிறது.

கே: நாம் எல்லோரும் மூச்சுடனும் உள்ளே எல்லா ஞானங்களுடனும் பிறக்கிறோம். ஆகையால், ஏன் ஒவ்வொருவரும் உங்களை போல ஒரு குருவாக இருக்கவில்லை? ஞானத்தினால் நீங்கள் ஏன் ஒரு குருவாகி விட்டீர்கள்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இந்த பெரிய வடிவமைப்பு நாமெல்லோரும் சில பெரிய திட்டத்தோடு இங்கு வந்திருக்கிறோம். இதை போல - நீங்கள் இதை செயுங்கள், நீங்கள் இதை செயுங்கள் மற்றும் நீங்கள் அதை செயுங்கள். பாருங்கள், இந்த கட்டிடம் கட்டப்பட்ட பொழுதுஎல்லா மூலப் பொருட்களும் வேறொரு பக்கம் வைக்க பட்டிருந்தன. ஆனால்கட்டிடகலை நிபுணர் சொன்னார், "ஜன்னல் இங்கே இருக்கும், அது கதவாக.அதே போல, நம்முடைய வாழ்க்கையும் அப்படி இருக்கிறது.ஒரு பெரிய திட்டம் சொல்லியது, "நீ அங்கே பிறப்பாய் மற்றும் நீ அங்கே பிறப்பாய், மற்றும் நீ இங்கே பிறப்பாய்" ஆகையால், நாமெல்லோரும் உலகில் வேறு வேறு இடங்களில் பிரப்பெடுதிருக்கிறோம் மற்றும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், நாம் எல்லோரும் இங்கே வந்து சேர்கிறோம்.

நான் உங்களிடம் சொல்கிறேன், அது மிகவும் வசீகரத்துடன் உண்மையை நோக்குவது. இந்த உலகில் நாம் என்ன கருதுகிறோமோ அதை விட அதிகமாக இருக்கிறது. நாம் இந்த உலகில் பார்ப்பது வெறும் பனி பாறையின் ஒரு சிறிய பகுதி மட்டுமே, மற்றும் நாம் அதை தான் முழு உலகம் என்று நினைக்கிறோம். நாம் ஒரு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு இது தான் கடல் என்று நினைக்கும் தவளை போல இருக்கிறோம். நாம் அதைப் போல ஒரு வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டி ருக்கிறோம். நாம் விழித்து கொண்டு பார்ப்போமானால் இந்த உலகம் கிணற்றிக்கு அப்பால் இருக்கிறது, பல விஷயங்கள் உங்களுக்கு புலப்படும் மற்றும் பல விஷயங்கள் உங்களை உணர  வைக்கும்.

ஆகையால், இந்த உலக அடுக்கில் எல்லா திட்டங்களும் ஏற்கனவே செய்யப்பட்டு விட்டன. ஒருவர் மருத்துவர் ஆகவேண்டுமெனில், அது ஏற்கனவே செய்யப்பட்டு விட்டது. இப்பொழுது நீங்கள் என்னை கேட்களா , "பிறகு அங்கே எப்பொழுதும் சுதந்திரம் இல்லை?"நான் சொல்கிறேன், ஆமாம், அங்கே இருக்கிறது! விதி மற்றும் ஒரு குறிப்பிட்ட அளவு சுதந்திரம் இரண்டும் சேர்ந்த கலவை தான் வாழ்க்கை.அது இரண்டும் சேர்ந்தது.

கே: என்னுடைய சகோதரி மன அளவில் ஆரோக்கியம் இல்லாமல் இருக்கிறார். அவள் நம்முடைய ஆற்றலை கீழே இழுப்பதில் மற்றும் நம்மை வருத்தத்தில் ஆழ்த்துவதில் நன்றாக இருக்கிறாள். நான் அவளிடமிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு விலகி இருக்கிறேன். ஆனால் அவள் மிகவும் தனிமையாக இருக்கிறாள். எப்படி மற்றவர்களுக்கான பொறுப்புக்கும் உங்களுக்கும் இடையே சமனாக இருப்பது.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்:  நீங்கள் ஒருவர் நோயாளியாக இருக்கிறார் என அறியும்பொழுது, அவர்களை காத்து கொடுத்து கேட்க வேண்டாம். காத்து அடைப்பான்களோடு அவர்களுடன் இருங்கள். அவர்களுடைய வர்தைகல்மற்றும் அவர்களின் நடவடிக்கைகளை நீங்கள் உங்கள் தலைக்குள்ளே கொண்டு செல்வதால் நீங்கள் வருத்தத்திற்கு உள்ளாவீர்கள். நீங்கள் உங்கள் தலை ஒரு பிழை ஏற்படுத்தாது செய்யுங்கள் மற்றவர்களிடமிருந்து விசயங்களை உறிஞ்சாமல் இருப்பீர்கள் மற்றும் அவர்களுக்கு எப்பொழுதெல்லாம் முடியுமோ அப்பொழுதெல்லாம் உதவுங்கள்.

ஒரு பண்டைய பழமொழி உண்டு அது சொல்கிறது "யாரும் இன்பத்தையும் துன்பத்தையும் கொடுப்பதில்லை". நீங்கள் துன்பப்படுகிறீர்கள் எனில் அது உங்களுடைய செயலால்; யாரோ ஒருவர் உங்களுக்கு தந்ததல்ல. மற்றும் நீங்கள் மகிழ்ச்சியாக ஆனந்த மாக இருக்கிறீர்கள் எனில் அதுவும் உங்களுடைய செயலினால் அது அந்த ஆனந்தத்தை கொண்டு வருகிறது.

இதை நீங்கள் அறியும் பொழுது, உங்களுடைய இன்பத்திற்கும் துன்பத்திற்கும் நீங்கள் யாரையும் குற்றஞ்சாட்ட மாட்டீர்கள். ஏனெனில் மற்றவரிடமிருந்து மகிழ்ச்சியை பெறுகிறீர்கள், நீங்கள் வேண்டும் பொழுது அதை கொடுக்க வில்லை என அவர்களை குற்றன்சாட்டுகிறீர்கள். நான் சொல்வது என்ன என்பது புரிகிறதா? ஏன் அன்பு வெறுப்பாக மாறுகிறது? அது ஏனெனில் நீங்கள் ஒருவர் மேல் அன்பு செலுத்துகிறீர்கள் மற்றும் அவர்கள் உங்களுக்கு அதிக மகிழ்ச்சியை கொடுத்தார்கள், அதன் பிறகு அவர்கள் மீது கோபப்படுகிறீர்கள் ஏனெனில் அந்த உணர்வு கிடைக்கப் பெறுவதில் குறைவாக இருக்கிறது. ஆகையால், அவர்கள் அந்த மகிழ்ச்சியை கொடுக்காத போது நீங்கள் அவர்களை குற்றன்சாட்டுகிறீர்கள், நீங்கள் அவர்கள் மேல் கோபம் கொள்கிறீர்கள், நீங்கள் வெறுக்கிறீர்கள் மற்றும் எல்லா உறவும் சென்று விடுகிறது. இல்லையா? ஆகையால், உங்களுடைய இன்பமும் துன்பமும் உங்களுடைய முயற்சியால் வருவது. மற்றவர்கள் எல்லோரும் ஒரு தபால் காரர்போல் உங்களுக்கு வினியோக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி செலுத்துங்கள்! பிறகு உங்களை சுற்றி இருப்பவர்களிடம் உங்களுக்கு ஒரு நல்ல உறவு இருக்கும்.

கே: தயவு செய்து எனக்கு வாழ்கையில் ஒரு பாதையை கண்டுபிடிக்க ஆசீர்வதியுங்கள்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் ஏற்கனவே உங்கள் பாதையில் இருக்கிறீர்கள்! நீங்கள் சரியான இடத்தில இருக்கிறீர்கள். நான் சொல்கிறேன். ஓய்வாக இருங்கள்! ஒரு ரயிலையோ விமானத்தையோ பிடிக்கும் வரை தான் நீங்க முயற்சிக்க வேண்டிய திருக்கும்.நீங்கள் விமானத்திற்கு வந்த பின், மேலும் கீழும் ஓடுவதில் அர்த்தம் இல்லை.விமானம் வேகமாக போய்ச்சேருவதில்லை.

கற்பனைக்காக, ஒருவர் ரயிலில் ஏறி தன்னுடைய சுமைகளுடன் ஓடிக்கொண்டு சொல்கிறார் "நான் எல்லோருக்கும் முன்னே சென்றடைய வேண்டும்". வெறுமனே ஓய்வாக இருங்கள்! உங்கள் சுமைகளை கீழே போடுங்கள். நீங்கள் பாதையில் இருக்கிறீர்கள், நீங்கள் தியானதிற்க்குள்  இருக்கிறீர்கள். சஹஜ் சமாதி தியானம் கற்றுக்கொள்ள வில்லை எனில் அதை கற்று கொள்ளுங்கள். அஷ்ட வக்கிர கீதாவை கேளுங்கள்.உங்களில் எத்தனை பேர் அஷ்ட வக்கிர கீத கேட்டிருக்கிறீர்கள்?உங்கள் வாழ்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறதா? மற்றவர்கள்,கேட்காதவர்கள், அதைக் கேளுங்கள். நீங்கள் கண்டிப்பாக கேட்க வேண்டும், மற்றும் அதைக் கலந்துரை யாடுங்கள் மற்றும் அதில் வாழ்ந்து விடுங்கள். ஞானத்தில் சில நிமிடங்கள் தினந்தோறும் செலவழிப்பது மிகவும் உபயோகமாக இருக்கவேண்டும். உங்களிடம் "மௌனத்தை கொண்டாடுங்கள்" மற்றும் "ஞானம் தேடுபவருக்கு" ஆகிய புத்தகங்கள் இருந்தால், அந்த புத்தகங்களின் பக்கங்களை புரட்டுங்கள். அவைகள் நீங்கள் சிந்திப்பதை மாற்றும்.

கே: நான் ஒரு நபருடன் தொடர்பு வைத்துக் கொள்ள விரும்பவில்லை. நான் தொடர்பை விட்டு விடுவது அல்லது அவர்களுடன் தொடர்பை வைத்துக் கொள்ள விரும்ப வில்லை என அவர்கள் மனம் புண்படாதபடி அவர்களுக்கு எப்படி அறிய வைப்பது ஆனால் இன்னும் பாசத்துடனும் பரிவுடனும் தெளிவாகவும் இருப்பது எப்படி?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் விருப்பப் பட்டபடி நீங்கள் எப்பொழுதும் செய்யலாம்.அது ஒன்றும் பெரிய பிரச்னை அல்ல. நீங்கள் மெதுவாக சொல்ல முடியும். நீங்கள் வாய்மொழியாக எல்லாவற்றையும் சொல்ல வேண்டியது இல்லை. நான் இன்று இப்படி உணர்ந்தேன், நான் நேற்று இப்படி உணர்ந்தேன் யார் உங்களுடைய உணர்வு பற்றி கவலைப்படுகிறார்கள்?யார் உங்களுடைய சந்தோசத்தை பற்றி கவலை படுகிறார்கள். வாழ்க்கை மிகவும் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.பூமி வேகமாக சுற்றுகிறது,அது சூரியனை மிக வேகமாக சுற்றி வருகிறது. எல்லாமே மாறிக் கொண்டிருக்கிறது. இலைகள் விழுந்து கொண்டிருக்கின்றன மற்றும் புதிய இலைகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு மரத்திலிருந்து எவ்வளவு இலைகள் விழுகின்றன என யார் எண்ணிக் கொண்டி ருக்கிறீர்கள்? அதனால் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று ஏன் கவலைப் படுகிறீர்கள்? உங்களுடைய உணர்வுகளை யெல்லாம் தொகுத்து கடலில் தூக்கி எரிந்து விடுங்கள் மற்றும் ஓய்வாக இருங்கள். யார் அக்கறை கொள்வது. உங்களுடைய உணர்வுகள் எல்லா நேரமும் மாறிக் கொண்டிருக்கன்றன. அப்படி இல்லையா? உங்களுடைய உணர்வுகள் எத்தனை முறை மாறியிருக்கின்றன? எவ்வளவு முறை மாறியிருக்கின்றன? ஆகையால் அதை பற்றிய பெரிய பேரம் என்ன? நம்முடைய உணர்வுகளை பற்றி நாம் பெரிய பிரச்சினையாக உருவாக்குகிறோம்.

நான் இதை உணர்கிறேன். நான் அதை உணர்கிறேன். எழுந்து நில்லுங்கள். இந்த உலகத்தில் என்ன செய்ய விரும்புகிறீர்கள், வெறுமனே செய்யுங்கள், வெறுமனே முடித்து விடுங்கள். அவ்வளவு தான். காலம் அது போல் ஓடுகிறது. 30 வருடங்களாக வாழும் கலை வளர்ந்தது.  நாம் வாழும் கலையை 1982 ல் ஆரம்பித்தோம். ஆனால் நாம் நமது நிறுவனத்தை அதற்க்கு  சில மாதங்கள்  முன்பு  ஆரம்பித்தோம். நாம் வேத விக்ஞான் மஹா வித்யா பீடம், பெங்களூர் ஆஷ்ரமத்தை 13 நவம்பரில் 1981ல் பதிவு செய்தோம். என்ன நடந்தது? ஏற்கனவே 30 வருடங்கள் முடிந்தது. நாம் மார்ச் 1982 ல் முதல் அடிப்படை பயிற்சியை ஆரம்பித்தோம். நாம் ஏற்கனவே 30  வது வருடத்தில் நுழைந்து விட்டோம்.காலம் கடந்து விட்டது.

இந்த மாதத்தில் இது 14 வது நிறுத்தம் என நான் நினைக்கிறேன்; உலகம் முழுவது 14  நகரங்கள சென்றிருக்கிறேன், ஏப்ரல் 1  லிருந்து இப்பொழுது வரை. எல்லாப் பக்கமும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் நான் காண்கிறேன். வாழ்கையை வெளி படுத்துவதற்கு நேரம் இல்லை.நாம் என்ன உணர்கிறோம்,நாம் என்ன உணரவில்லை  என்று உட்கார்ந்து யோசிப்பதற்கு எங்கே நேரம் இருக்கிறது. இந்த உலகத்தில் செய்வதற்கு நிறைய இருக்கின்றன. இருப்பினும் ஒன்றும் செய்வதற்கு இல்லை. இரண்டும் ஒன்றாக செல்கின்றன. அங்கே செய்வதற்கு நிறைய இருக்கிறது இருப்பினும் நீ எதையும் செய்ய வேண்டியதில்லை. எல்லாமே நிகழதபட்டு விட்டன. முழுமையான பூர்த்தி.

கே: மற்ற ஆறு அடுக்குகள் இல்லாமல் சுய இருப்பு இருக்க முடியுமா.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆமாம்  கண்டிப்பாக. மற்ற ஆறு அடுக்குகளும் தன்னுடைய சொந்த வெளிக்காட்டல். சிலந்தியைப் போல, அது தன்னுடைய சலிவா மூலமாக தன்னுடைய முழு வலையையும் நெய்கிறது. ஆனால் வலை இல்லாமல் சிலந்தி இருக்க முடியும். ஒரு விழிப்புணர்வு எல்லா மட்டங்களையும் உருவாக்கி இருக்கிறது. இருப்பினும், அந்த அடுக்குகள் இல்லாமல் அது இருக்க முடியும்.

கே: என்னுடைய மின்கல அடுக்குகளை நிரப்புவது அமைதி என்று எனக்கு தெரியும், ஆனால் ஏன் நான் தனிமையாக உணர்கிறேன்பல வற்றை பல மனிதர்களிடம் பக்கிட்டு கொள்வதற்கு இருக்கிறது.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இந்த தனிமை அனுபவம் பிரிவுகளுக்கு  தற்காலி கமானது . இந்த உலகத்திற்கு  வந்த பொழுது நீங்கள் எப்பொழுதும் தனிமையாக உணர்ந்ததில்லை. நீங்கள் தனியாக வந்தீர்கள். நீங்கள் இரட்டையர்களாக வந்தாலும் கூட இந்த உலகத்திற்கு தனியாக வருவது போல் நல்லது. மற்றும் நாம் இங்கிருந்து செல்லும்போது தனியாக செல்கிறோம். நீங்கள் உட்கார்ந்து சொல்கிறீர்கள் "நான் தனிமையாக உணர்கிறேன், நான் தனிமையாக உணர்கிறேன்" இல்லை! அதை விட்டு விடுங்கள். மற்றவர் யாரும் இல்லை என்ற உணர்வுக்குள் ஆழமாக செல்லுங்கள்.

கே: குருஜி, நான் எப்படி வெற்றியாளனாகவும் சந்தோசமாகவும் இருப்பது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் வெற்றியாளனாவதர்க்கு மூன்று விசயங்கள் வேண்டும்

1. திறமை
2. ஆற்றல் மற்றும்
3. இயக்கத்தன்மை

உங்களுக்கு திறமை இருந்தும் ஆற்றல் இருந்தும் நீங்கள் எதுவும் செய்ய வில்லை எனில் நீங்கள் வெற்றியாளனாக ஆக முடியாது. திறமை இல்லாமல் வெறுமனே செய்து கொண்டிருந்தாலும் கூட நீங்கள் வெற்றியாளனாக ஆக முடியாது. உங்களுக்கு திறமை, இயக்கத்தன்மை இருந்த போதும் ஆற்றல் இல்லை எனில் நீங்கள் வெற்றியாளனாக ஆக முடியாது. வெற்றி அடைவதற்கு  திறமைஆற்றல் மற்றும்  இயக்கத்தன்மை மூன்றும் வேண்டும். நீங்கள் இயக்க ஆற்றல் நிறைந்தவராக இருக்க வேண்டும். நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும் இவை மூன்றும் வேண்டும். ஒரு சிலர் உட்கார்ந்து திட்ட மிடுவார்கள்  திட்ட மிடுவார்கள்  திட்ட மிடுவார்கள். அவர்கள் வாழ்க்கை முழுதும்  திட்ட மிடுவார்கள் வேறு ஒன்றும் செய்ய மாட்டார்கள். பெங்களூரில்  15 முதல் 20  வருடங்களுக்கு முன்பு நம்முடைய சட்சங்கதிர்க்கு ஒரு இளைஞர்  வந்திருந்தார். அவர் ஒவ்வொரு மாதமும் எப்படி வெற்றியாளர் ஆவது எப்படி பணம் சம்பாதிப்பது என 25  பத்திரிக்கைகள் வாங்குவார். மற்றும் அவர் படித்துக் கொண்டே இருப்பார், திட்ட மிட்டுக் கொண்டே இருப்பார் மற்றும் ஒவ்வொருதடவையும் வந்து சொல்லுவார், "என்னிடம் இந்த சிறந்த பத்திரிக்கை இருக்கிறது, என்னிடம் இந்த பெரிய யோசனை இருக்கிறது. என்னை ஆசீர்வதியுங்கள். "நான் சொன்னேன்"சரி செய்யுங்கள்"

அடுத்த வாரம் அதே பத்திரிக்கையுடன் வந்து அவர் ஆசீர்வாதம் கேட்பார். ஒரு வருடம் கழிந்து விட்டது. நானும் கூட பொறுமையாக இருந்தேன் மற்றும் அவர் ஒரு நாள் ஏதாவதை ஆரம்பிப்பார் என நினைத்தேன். ஆனால் அவர் எதையும் ஆரம்பிக்க வில்லை. அவர் பாதிர்க்கை வாங்க மட்டுமே செய்தார், என்னிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டிருந்தார் மற்றும் பெரிய திட்டங்களை போட்டுக் கொண்டிருந்தார், எல்லா வற்றையும் கணினியில் பதிந்து கொண்டிருந்தார் அவ்வளவு தான். பெங்களூரில் நமக்கு 100 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த மற்றொரு மனிதர், கணினியில் உட்கார்ந்து இந்த திட்டங்களை எல்லாம் உருவாக்குகிறார் அங்கு விதை விதைப்பார் மற்றும் எப்படி பயிரிடுவார். அவர் விவசாய துறை தலைமை யாக இருந்தார். ஆஸ்ரமத்தில் இருந்த மற்ற எல்லோரும் சொல்வார்கள், "அவர் விவசாயத்தை கணிப்பொறியில் மட்டுமே செய்கிறார்" அவர் அறையில் உட்கார்ந்து திட்டமிடுவார். களத்திற்கு சென்று எப்பொழுதும்  விதை விதைக்கமாட்டார்.

அதே போல இந்த மனிதர் அல்ல பத்திரிக்கைகளை வாங்கி படிக்கிறார். ஒரு நாள் அவரை அழைத்து "பாருங்கள், இனி ஆசீர்வாதம் கிடையாது, என்னுடைய ஆசீர்வாதத்தை வீணடிக்க விரும்ப வில்லை"  நாம் முயற்சி செய்தால் மட்டுமே ஆசீர்வாதம் வேலை செய்யும்.  ஆகையால், இந்த பத்திரிக்கைகள் எல்லாவற்றையும் அந்தப் பக்கமாக வைத்து விடுங்கள். படிக்கவோ இன்னும் பத்திரிக்கை வாங்கவோ  செய்ய வேண்டாம். ஒரு விஷத்தை எடுத்துக்கொண்டு அதில் வேலை செய்யுங்கள் மற்றும்  நீங்கள் வெற்றியாளர் ஆவீர்கள். நான் இதை சொல்கிறேன் எனில், சிலநேரங்களில் பெரிய திட்டங்களோடு இருக்கும் மக்கள், அதை பயிற்சி களத்திற்கு கொண்டு செல்வதில்லை. மற்றும் மற்றொரு சிலர் யோசனை செய்யாமல், திட்ட மிடாமல் கடினமாக உழைப்பார்கள். அவர்களும் வெற்றியாளராக முடியாது.

ஆகையால் நீங்கள் இரண்டையும் செய்ய வேண்டும். ஆசீர்வாதம் இன்றி விஷயங்கள் நகராது என்பது எனக்கு தெரியும். ஆசீர்வாதம் தேவை, ஆனால் வெறுமனே ஆசீர்வாதம் மாட்டும் வேலை செய்யாது ஏனெனில் சிலர் அதே போல நன்றாக வேலை செய்ய வேண்டும். ஆமாம்! ஆசீர்வததுடன் வேலை உங்களை வெற்றி யாலராக்கும். நான் சொல்ல வேண்டும், நீங்கள் கடின உழைப்பு மற்றும் வெற்றியும் கிடைத்த பிறகும் கூட , உண்மையான வெற்றி உங்களுடய நம்பிக்கையில் இருக்கிறது. உண்மையான வெற்றி என்பது, எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது, எவ்வளவு புன்னகை கொண்டிருக்கிறீர்கள் மற்றும் எவ்வளவு தைரியமாக நீங்கள் நடக்க முடியும் என்பதில் இருக்கிறது. அது உங்களின் வெற்றியை குறிக்கிறது.

கே: நான் முதல் நிலை பயிற்சி செய்திருக்கிறேன் மற்றும் அமைதி கலை பயிற்சி இரண்டு முறை செய்திருக்கிறேன். என்னுடைய பகுதியில் கடந்த ஒரு வருடங்களாக சேவை செய்து வருகிறேன். எங்கள் பகுதியில் ஆசிரியர் இல்லை. ஆகையால் நான் ஆசிரியர் ஆகலாமா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: கண்டிப்பாக! எனக்கு நிறைய நிறைய ஆசிரியர்கள் இப்பொழுது தேவை. எவ்வளவு ஆசிரியர்கள் முடியுமோ அவ்வளவு ஏனெனில் மிகுந்த மக்கள் தொகையை உள்ளடக்க வேண்டும். இங்கே உங்களில் எத்தனை பேர் ஆசிரியராக வேண்டும்? ஆமாம் நீங்கள் எல்லோரும் ஆசிரியராக வேண்டும். உங்களை சுற்றி உள்ள மக்களுக்கு நீங்கள் நிறைய செய்ய முடியும். மிக்க நல்லது.