அமைதி - கடவுளை நோக்கி நாம் எடுக்கும் பயணத்தின் முதல் படி …..


28
2012........................  Germany
Apr

ஜெர்மன்  ஆஷ்ரம் ...


ஸ்ரீ ஸ்ரீ, கேள்விக்கூடையில் உள்ள கேள்விகளை பார்த்து கொண்டே நான் முதலில் தொடங்க   ஒரு புத்திசாலித்தனமான கேள்வியை தேடிக்கொண்டு இருக்கிறேன். எல்லா கேள்விகளும் ஒன்றே.உண்மையில் எல்லா கேள்விகளும் பதிலைக் கேட்ட பின்  ஒரே விளைவை தான் ஏற்படுத்துகின்றன.நீங்கள் சரியான பதிலை கேட்கும் போது"ஆமாம்.நான் ஒத்துக்கொள்கிறேன் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.அதுவே தவறான பதில் கேட்டால் "இது தவறானது" என்று   சொல்வீர்களே தவிர,ஆமாம்'இது  சரியான பதில் என்று கூற மாட்டீர்கள்.ஆனால் சரியான பதில் கேட்கும் போது,நீங்கள் 'ஆமாம்' என்று கூறுகிறீர்கள். எனவே ஒவ்வொரு பதிலும்,அது சரியான பதிலாக இருக்கும் போது,உங்கள் மனதில் 'ஆம்' என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. 
ஆனால் எல்லா பதில்களும் மேலும் பல கேள்விகளை உருவாக்கினால்,அது ஒரு முடிவில்லா பயணமாகிவிடும்.
ஒரு விதத்தில் அது நல்லது, ஏனெனில் அது அறிவாற்றலுக்கு நல்ல பயிற்சியாகும்.

ஆனால் அதற்கு அப்பால் அதில் வேறு ஒன்றுமில்லை.அது ஒரு நல்ல பொழுதுபோக்கு அவ்வளவே.ஆனால் அதற்காக கேள்விகளே இல்லாமல் இருக்கவேண்டுமா? இல்லை கேள்விகளும் அவசியமே.அறிவு சார்ந்த தூண்டுதல்  வேண்டும்.அறிவுத்திறன் ஒரு முக்கிய பகுதியாகும் .மிக பழமையான இலக்கியமான பகவத் கீதையிலும் ,கிருஷ்ணர் எல்லா ஞானத்தையும் கொடுத்து,பின்னர் இறுதியாக 'நீங்கள் யோசித்து,பகுத்தறிந்து உங்களுக்கு
இது சிறந்தது என்று முடிவெடுங்கள்' என்றே கூறுகிறார்.மேலும்,'ஒன்றை நினைவில்  வைத்துக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு நல்லதையே கூறுவேன்.நீங்கள் உங்களுக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ளுங்கள்'.என்கிறார். 

தலைவனுக்கும்,மாணவனுக்குமிடையே நடக்கும் இந்த உரையாடல் சிறப்பானது.எல்லோரும் இதை வாழ்வில்  ஒரு  முறையாவது  படிக்க வேண்டும்.ஐன்ஸ்டீன் உட்பட உலகின் சிறந்த விஞ்ஞானிகள்  அனைவரும்.அதை படித்து விட்டு'எங்கள் வாழ்க்கையே மாற்றியமைத்து விட்டது இந்த கீதை,ஏனெனில் இதுவரை  எங்களை அனைவரும் கேள்வி கேட்ககூடாது  என்று தான் கூறியுள்ளார்கள்' என்றனர். 

மதமும்,  நம்பிக்கைகளும்  கேள்வி கேட்காமல் கண்மூடித்தனமாக அனைத்தையும் பின்பற்ற வேண்டும் என்றே கூறுகின்றன. ஆனால் யோகா வேதாந்த தத்துவம் அப்படி கூறவில்லை.  நீங்கள் உங்கள் அறிவை முழுமையாக பயன்படுத்துங்கள். ஆனாலும் அறிவற்றலே அனைத்தும்  அல்ல.உண்மை அதற்கும் ஒரு படி மேலே அப்பாற்பட்டது. 

எனவே அறிவாற்றலிலேயே சிக்கி கொள்ளாமல்,அதே சமயம் அறிவையும் பிரகாசமாக வைத்துகொள்ளுங்கள். பக்தியும், அன்பும்,அறிவை திருப்தி படுத்தி அறிவாற்றலுக்கு அப்பால் செல்கின்றன. 

கேள்வி: மக்கள் பலர் சிறு வயதிலேயே மனதில் தெளிவுடன் நாங்கள் மருத்துவர்கள், பொறியாளர்கள், மற்றும் ஆசிரியர்களாக ஆக முடிவெடுத்து  தங்கள் முடிவுகளில் உறுதியாக உள்ளார்கள்?.  துரதிர்ஷ்டவசமாக எனக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை,மேலும்  நான் இப்போது இளைமைப்பருவத்திலும் இல்லை.இந்த  திசையற்ற போக்கு எனக்கு பயமாக இருக்கிறது. நான் என்ன செய்வது? 

ஸ்ரீ ஸ்ரீ: கவலைபடாதே. வாழ்க்கை தானே வடிவமைக்கப்பட்டது. உனக்கு நீ என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு  இல்லை என்றால், தியானம் செய்து  உன் உள்ளுணர்வு என்ன கூறுகிறதோ அதன் படி செய்எல்லா துறைகளும் ஒன்று தான்.எந்த துறையில் உள்ள மக்களும் மகிழ்ச்சியாக இல்லை. மருத்துவர்களை பாருங்கள் எவ்வளவு துன்பம்எப்போதும் உடல் நலமில்லாத மக்களுடனே இருக்க வேண்டும். ஒரு நாளில் பதினைந்து மணி நேரம் அவர்கள்  உடல் நலமில்லாதவர்களுடன் இருக்க வேண்டும்.  குறைகளை கேட்டு தீர்வு கூறினாலும் மறுபடியும் அதே கேள்விகளை கேட்பார்கள். 

உங்கள் உடல் ஆரோக்யமாக இருக்கிறது என்று அவர்கள் யாரிடமாவது கூறினால் அந்த நோயாளிக்கு கோபம் வந்து விடும். பல மருத்துவர்கள் நீங்கள் உடல்  நலமாக இருக்கும் போதும் 'உங்கள்  உடல் நலமில்லை' என்று கூறுகிறார்கள்.இது உங்களை மகிழ்விக்கிறது. பிறகு இவர் தான் சிறந்த மருத்துவர் என்று கூறுகிறோம்,என் பிரச்னையை நன்கு ஆராய்ந்து தீர்வு கூறுகிறார் என்கிறோம். 

மருத்துவர்கள் நிலை எளிதானது அல்ல.அவர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு எங்கும் செல்ல முடியாது. நள்ளிரவில் அழைப்பு வரும். நள்ளிரவில் அவர்கள் யூகித்து மருந்து தர வேண்டும்.
பிறகு இரவு முழுவதும் பதற்றமாக இருக்க வேண்டும்.இதுவே இந்தத்துறையின் ரகசியம்.  உங்களுக்கு தலைவலி வரும்போது அஸ்பிரின் தருகிறார்கள். ஆனால் எப்போதுமே அவர்கள்
ஒரே மருந்தைப் பரிந்துரைப்பதில்லை.சில பிரச்சனைகளுக்கு யூகித்துதான் மருந்து தர வேண்டியுள்ளது.  

பொறியாளர்களைப் பாருங்கள்.இரவு பகல் முழுவதும் இயந்திரங்களோடு வேலை செய்கிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்.'ஆம்.இரவும் பகலும் இயந்திரங்களோடு சலித்து விடுகிறது'.கனவில் கூட அவர்கள் இயந்திரத்தையே பார்கிறார்கள். அவர்கள் கார் தொழிற் சாலையில் வேலை பார்க்கும் போது, கனவில் கார்களே வருகிறது.அதுவும் மனிதர்கள் இல்லாத கார்கள். இங்கு, கார் தொழில் சாலையில் வேலை பார்த்த ஒருவர்,'ஒவ்வொரு இரவிலும் நான் பெல்டில் அல்லது ஒரு லாரியில் நகரும் கார்களை கனவில் காண்கிறேன். அதில் மக்கள் இல்லை.  
 
வழக்கறிஞர்கள்; அவர்களின் நிலையை கூட கேட்க முடியாது. அவர்கள் உயிர்வாழ எங்கோ சில பிரச்சனை இருக்க வேண்டும். எல்லாம் அமைதியாக இருந்தால் வழக்கறிஞர்கள் பிழைக்க முடியாது. இரு சகோதரர்களுக்கு இடையில் சண்டை என்றால், வழக்கறிஞர்கள் மகிழ்வோடு அவர்கள் என்னிடம் வரட்டும் நான் பணம் பண்ணுகிறேன்'. அதிர்ஷ்டவசமாக அவர்கள் அதிகம் யோசிக்க வேண்டாம் ஏனெனில் உலகில் போதுமான சண்டை உள்ளது, அவர்கள் அனைவரும் இவ்வழக்கறிஞர்களிடம் தான் வரவேண்டும். இவர்கள், 'வாருங்கள் உங்கள் பிரச்சனைகளை நான் தீர்த்து வைக்கிறேன்' என்பார்கள். ஆனால் எளிதில் தீர்க்காமல் ஒத்தி வைத்துக் கொண்டு இருப்பார்கள். எதற்காக விரைவாக தீர்க்க வேண்டும். வழக்கு  நீழும் வரை நல்லது தானே. ஒவ்வொரு முறை அந்த நபர்  வழக்குக்காக வரும்போதும் பில் தரலாமே.அவர்கள் வழக்கை  சீக்கிரம் விட முட்டாள்கள் அல்ல. 
நீங்கள் எந்த துறையை எடுத்துக்கொண்டாலும்  அதில்  குறைபாடுகள் உண்டு.

மடத்தை சார்ந்தவர்கள் என்றால்  மிகப்பெரிய  பிரச்சனை. ராமாயணத்தில் ஒரு நல்ல கதை உண்டு. நீங்கள் கதை கேட்க விரும்புகிறீர்களா?  

தெருநாய்  ஒன்று சென்று கொண்டு இருக்கும் போது  யாரோ ஒருவர் அதன் மீது கல் எரிந்து அதை விரட்டினர்அதனால் அந்த நாய் நீதிமன்றம் சென்றதுராமர் நாட்டின் நீதிமன்றத்தில், அனைவருக்கும்,விலங்குகளுக்கு கூட நீதி கிடைத்தது என்று கூறப்படுகிறது.அந்த நாய் சென்று சாலை எல்லோருக்கும் சொந்தம் தானே.சாலையில் எங்கும்  நாய்கள் செல்லகூடாது என்று சொல்லவில்லையே. அதனால் நீங்கள் என்னைக் காயப்படுத்திய அந்த நபரை தண்டிக்க வேண்டும் என்றதுராமர் அந்த நபரிடம் நாய் கூறுவது  உண்மையா? என்றார். அவரும் பொய் சொல்ல முடியாமல்உண்மையை ஒப்புக்கொண்டார். 

அந்த காலத்தில்,பாதிக்கப்பட்டவரையே குற்றவாளிக்கு என்ன தண்டனை வழங்குவது என்று கேட்பார்கள்அந்த நாயிடம் உன்னை கல்லால் அடித்து காயப்படுத்திய நபருக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்று கேட்டபோது,அந்த நாய், 'குற்றவாளியை மத நிறுவனத்திற்கு தலைவராக அல்லது ஒரு ஆசிரமத்திற்கு குருவாக நியமியுங்கள்என்று  கூறியது. 

மக்கள் இந்த தண்டனை ஒரு வித்தியாசமான தண்டனை என்று கூறினர்.அந்த நாய்,' எதற்கு கேட்கிறீர்கள்? சொன்ன தண்டனையை வழங்குங்கள். நானும் என் கடந்தகால வாழ்வில் ஒரு குருவாக இருந்தேன்.என்ன நடந்தது பாருங்கள்.இறப்பதற்கு முன்,நான் ஒரு குருவாக  இருப்பதை விட நாயாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்தேன். நான் இப்போது ஒரு நாய் ஆகிவிட்டேன். நான் மிகவும் சிரமப்பட்டேன்.அதனால் தான் அவனும் ஒரு ஆசிரமத்திற்கு தலைமை ஏற்றால் தான்,வாழ்வில் பிரச்சனை என்றால் என்ன,வலி என்றால் என்ன,பாதிப்பு என்றால் என்ன என்று புரியும். என்றது.இது  ராமாயணத்தில் ஒரு நகைச்சுவை கதை.

நீங்கள் பார்த்தால் பில்லியனர்கள் கூட தங்கள் பணத்தை இரண்டு மடங்காகவும் மற்றும் மூன்று மடங்காகவும் எப்படி வளர செய்ய முடியும் என்று ஆச்சர்யப் படுகிறார்கள். இந்த பந்தயம் ஓயாது.நான் இந்த வருடம் டாவோஸ் என்ற இடத்தில்  இருந்தேன். அங்கு எல்லா பில்லியனர்கள் இருந்தனர்.

அவர்கள் கண்களையும், முகத்தையும் பார்க்கும் போது அதில் ஒரு மனநிறைவு இல்லை, மகிழ்ச்சி இல்லை,அமைதி இல்லை,எந்த உயர்ந்த எண்ணமும் இல்லை. நான் கூறுவது உங்களுக்கு புரிகிறதா? நீங்கள் குடிசையில் புன்னகையை பார்க்கலாம், ஆனால் ஒரு அரண்மனையில் அதை பார்க்கமுடியாது. ஒரு அமைதியான மனத்தைக் கூட அரண்மனையில் நீங்கள் பார்க்க முடியாது.

கேள்வி:  நம் தீய வினைகளை  எப்படி அழிப்பது? நான் என்னை நேசிக்க எப்படி கற்று கொள்வது?

ஸ்ரீ ஸ்ரீ :  கிருஷ்ணர் பகவத்கீதையில் உங்கள் வினைகளை விட்டு நீங்கள் விலகமுடியாது.அதை என்னிடம் விடுங்கள் நான் பார்த்து கொள்கிறேன்.நீங்கள் உங்கள் வேலையை மட்டும் செய்து கொண்டு  உங்கள் தீயவினைகளை பற்றி கவலைப்படாதீர்கள். அதற்கு தான் ஒரு குரு இருக்கிறார். 

நீங்கள் உங்கள் தீய வினைகளை பற்றியோ அல்லது எப்படி அதிலிருந்து மீள்வது என்றோ கவலைப்படாதீர்கள்,அவை நீங்கள் சத்சங்கத்தில் இருக்கும் போது,அறிவார்ந்த செயல் புரிந்து வாழும் போது,தியானம் செய்யும் போது,மற்றும் சுதர்ஷன் க்ரியா செய்யும் போதும். அதுவாகவே நீங்கிவிடும். இவை எல்லாம்  நீங்கள் செய்வதால் உங்கள் தீய வினை  நீங்கி விடும். தீய வினை என்றால் என்ன? நம் மனதில், மனசாட்சியில்  உள்ள தீய நினைவுகளே தீய நினைவுகளாக மாறுகின்றது. 

இன்னும் உங்களுக்கு அவ்வெண்ணங்கள் இருந்தால் நீங்கள்,குருஜிஎன் மன வருத்தங்களை  உங்களிடம் தருகிறேன் நீங்கள் அதை பார்த்துக்கொள்ளுங்கள்.' என்று என்னிடம் கொடுத்து விடுங்கள். எல்லாம் சரியாகி விடும்.

கேள்வி: உங்களுக்கு எங்கள் மேல் ஏன் இவ்வளவு கருணை?நான் திரும்பத் திரும்ப அதே
தவறை பலமுறை செய்து உங்களுக்கு தாழ்வு ஏற்படுத்தினாலும்,உங்களுக்கு ஏன் என்
மேல் கோபமே வருவதில்லை. என் மீது எனக்கே வெறுப்பாக இருக்கிறது.

ஸ்ரீ ஸ்ரீ:  கவலைப்பட வேண்டாம். உட்கார்ந்து கடந்த  காலத்தை எண்ணி வருந்த வேண்டாம். ஒரு குழந்தை நடக்க ஆரம்பிக்கும் போது பல முறை விழுந்து எழும்.பத்து முறை விழுந்தாலும், அது  எழுந்து  நிற்கும் முயற்சியை நிறுத்துவதில்லை. நான் சொல்ல வருவது என்னவென்றால் நீங்கள் நன்றாக  செயல்படுகிறீர்கள்,தொடர்ந்து முன்னேற்றுங்கள். குறைந்தது அந்த தவறின் வலி உங்களிடம் இருக்கும்,அது உங்களை மேலும் தவறு செய்யாமல் காக்கும்.

நீங்கள் ஏன் தவறு செய்கிறீர்கள் தெரியுமா? ஏனெனில் உங்களுக்கு அதில் ஒரு மகிழ்ச்சி கிடைக்கும் என நினைக்கிறீர்கள்.போதை மருந்து, புகைபிடித்தல்,மது அருந்துவது உடலுக்கு
கேடு என்று தெரிந்தாலும் நாம் அதை செய்வது, ஏன்? அதில் ஒரு மகிழ்ச்சி இருப்பதாக நீங்கள்  நினைப்பதால் தான். உண்மையில்,அது சந்தோஷத்தை கொடுக்கவில்லை,உறுதி மட்டுமே அளிக்கிறது.   

மற்றொரு  கதை, ஒரு  நற்பண்பு கொண்ட மனிதர் சந்தைக்கு செல்ல அங்கு ஒரு சன்யாசி யிடம்  ஆசிபெற்று ஒரு சங்கு  பெற்றார். அது ஒரு விசித்திரமான,சிறப்பான சங்கு. நீங்கள் எது கேட்டாலும் தரக்கூடியது அது. அந்த மனிதரின் நண்பர் இதைக்கண்டு  மிகவும் ஆர்வம் கொண்டு, தானும் ஒரு சங்கு பெற எண்ணினார் 

பலமுறை நாம் ஒரு பொருள் வேண்டும் என்று எண்ணுவது, நம் பயன் பாட்டிற்கு  அல்ல, பிறரிடம் அது உள்ள காரணத்தினாலேயே  தான்.உங்கள்  நண்பரிடம் அது உள்ளது எனவே உங்களுக்கும் அப்பொருள் வேண்டும். 

உங்கள் நண்பரிடம்  நல்ல audi அல்லது benz  கார் இருந்தால் உங்களுக்கும் அது வேண்டும்.   என்ன வேறுபாடு  ஏற்படப்போகிறது. ஒரு கார்  வேண்டும் அவ்வளவு தானே. உங்கள் நண்பர்
பெரிய கார் வைத்துள்ளதால் உங்களுக்கும் ஒரு நல்ல கார் வேண்டும். 

எனவே அந்த நண்பரும் சங்கு பெற சந்தை சென்றார். கடைகாரர் ஒரு  சங்கை காண்பித்தார். அதன் சிறப்பு  என்னவென்றால் நீங்கள் எதைக்கேட்டாலும் அது  இரண்டு மடங்காக தரும்.
நீங்கள் ஒரு கார் வேண்டும் என்றால்,சங்கு, ஏன் ஒரே ஒரு  கார் , இரண்டு எடுத்துக் கொள்'
என்று சொல்லும். இந்தக்கதையை கேட்டிருக்கிறீர்களா?  இல்லையா?என் புத்தகங்களையோ, காசெட்டுகளையோ  கேட்பதில்லை.

பிறகு அந்த சங்கை  வாங்கிக்கொண்டு  வீடு  சென்றார்.  அந்த சங்கிடம் ஒரு கிலோ தங்கம் கேட்டார்.அந்த சங்கோ ஒரு கிலோ என்ன இரண்டு கிலோ தங்கம் எடுத்துக்கொள் என்றது.சரி இரண்டு கிலோ தங்கம் கொடு என்றார். எதற்கு இரண்டு கிலோ,நான்கு கிலோ தங்கம் கேள் என்றது. சரி  நான்கு கிலோ தங்கம் கொடு என்றார்.அதற்க்கு அந்த சங்கு  எதற்கு நான்கு,எட்டு கிலோ தங்கம் கேள் என்றது. அதற்கு அவர் சரி.எட்டு கிலோ தங்கம் கொடு.வேறு எதுவும் வேண்டாம்' என்றார்.அதற்க்கு அந்த சங்கு, எதற்கு எட்டு,பதினாறு கிலோ தங்கம் எடுத்துக் கொள்' என்றது.அது பெருக்கிக் கொண்டே சென்றதே தவிர பொருள் ஒன்றும் தரவில்லை.

 
எனக்கு ஏதாவது தா என்றார் அவர். எதற்கு ஏதாவது,பல பொருள்கள் எடுத்துக்கொள் என்றது. அந்த மனிதர் தன் காதுகளை இழுத்துக்கொண்டு 'வாவ்!' என்றார். இதையே தான் நம் பழக்கங்கள் நமக்கு செய்கின்றன.நம் பழக்கங்கள் நமக்கு சந்தோஷத்தை  உறுதியளிக்கிறது ஆனால் அதைத் தருவதி ல்லை.கெட்ட பழக்கங்களில் இருந்து  இம்மூன்றும் நமக்கு தேவை, அவை  அன்பு, பயம் மற்றும் பேராசை.எதன் மீதான ஆழமான அன்பு அல்லது நாம் நேசிப்பவரிடும் இனிமேல் கெட்ட வழியில்   செல்ல மாட்டேன் என்று கொடுத்த உறுதிமொழி,எவை நம்மை கெட்ட பழக்கங்களில் இருந்து வெளியே கொண்டு வரும்.

 
உங்கள் மருத்துவர் உங்களிடம், நீங்கள் மது அருந்தினால் உங்கள் கல்லீரல் பாதிக்கப்பட்டு நீங்கள் இறந்து விடுவீர்கள் என்றால் பிறகு நீங்கள் மதுவைத் தொடமாட்டீர்கள்.யாரேனும் ஒருவர் நீங்கள் நாற்பது  நாட்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்களுக்கு மில்லியன் டாலர் பணம்  தருவேன் என்றால்,நீங்கள் நாற்பது என்ன நாற்பத்தி ஐந்து நாட்கள் இருப்பேன்' என்பீர்கள்.எனவே அன்பு, பயம் அல்லது பேராசையும் நம்மை தீய எண்ணங்களிளிருந்து நம்மை விழியே கொண்டு வரும்.