ஆன்மிகம்: உங்களை சந்திப்பதற்கான ஒரு நேரம்


29
2012Ap2012.................நோர்வே 




பாருங்கள், நான் ஒரு விஷயம் சொல்ல வேண்டும், உங்களை நீங்களே அதிகமாக தீர்மானிக்காதீர்கள். நாம் நம்மையே தீர்மானிக்கும் பழக்கத்தை அல்லது அடுத்தவரை தீர்மானிக்கும் போக்கை கொண்டுள்ளோம். உங்களை நீங்களே  குற்றம் சொல்லிக் கொள்கிறீர்கள் அல்லது அடுத்தவரை குற்றம் சொல்கிறீர்கள். நீங்கள் உங்களை சரியல்ல என்று அறிகிறீர்கள், அல்லது அடுத்தவரை சரியல்ல என்று காண்கிறீர்கள். நீங்கள் விழித்துக்கொண்டு, தீர்மானிப்பதை  நிறுத்துங்கள்.

உங்களின் மேல் மிகக் கடினமாக இருக்காதீர்கள். நீங்கள் நிகழ்தலின் ஒரு பகுதி. அங்கே மரங்கள் இருக்கின்றன, ஆறுகள் இருக்கின்றன, பறவைகள் இருக்கின்றன அது போல நீங்களும் இங்கே இருக்கிறீர்கள். பல பறவைகள் பிறக்கின்றன, பல பறவைகள் இறக்கின்றன. இல்லையா? பல மரங்கள் வளர்கின்றன மற்றும் மறைந்து போகின்றன. அதைப் போல, பல மக்கள், பல உடல்கள் இங்கே வந்திருக்கின்றான் மற்றும் அவை எல்லாம் மறைந்து விடுகின்றன. மற்றும் புதிய மக்கள் வருவார்கள் மற்றும் மறைந்து போவார்கள்.

இந்த கிரகம்(கோள்) பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக இங்கே இருந்து கொண்டு இருக்கிறது. உங்களுடைய வாழ்க்கையை பெரிய பின்னணியில் பாருங்கள், பிறகு உங்களை நீங்களே குறை கூறுவதை நிறுத்தி விடுவீர்கள். ஆன்மீகப் பாதையில் முதல் விதி, உங்களை நீங்களே குறை கூறுவதை நிறுத்துதல் ஏனெனில் நீங்கள் யாரை குறை சொல்கிறீர்களோ, அவர்களுடன் இருக்க விரும்புவீர்கள்? உங்களுடன் சந்தோசமாக இல்லாத ஒருவருடன் நீங்கள் இருக்க விரும்புவீர்களா? இல்லை. ஆகையால், உங்களை நீங்களே குறை கூறினால், உங்களுடன் நீங்கள் இருக்க முடியாது. ஆன்மிகம் ஒரு உங்களை நீங்கள் சந்திக்கும் நேரம்.

உங்களை நீங்களே குறை கூறிக் கொண்டிருந்தால், உங்களுடன் நீங்கள் எப்பொழுதும் நேரம் ஒதுக்க முடியாது. ஆகையால், ஆன்மீகப் பயணத்தில் அல்லது பாதையில் முதல் சட்டம் உங்களை நீங்களே குறை சொல்வதை நிறுத்தவேண்டும்.

இப்பொழுது, "ஓ அப்படியெனில், நான் அடுத்தவரை குறை கூற முடியும்." என்று சொல்லாதீர்கள். இல்லை! ஒவ்வொரு முறையும் நீங்கள் சிலரை குறை கூறி இருக்கிறீர்கள், பரந்த கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது நீங்கள் எதற்க்காக குறை கூறினீர்களோ, அது தவறு அது பயனற்றது என்று பார்கிறீர்கள். இப்பொழுது, உங்களுடைய மதிப்பீடு தவறு என்று அறிந்த பொழுது, பிறகு மிக விரைவாக உங்களை நீங்களே குறை கூறுகிறீர்கள். ஆகையால், நான் ஏன் மற்றவர்களை குறை கூற வேண்டாம் என்று சொல்கிறேன் எனில், நீங்கள் மற்றவர்களை குறை கூறினால், அது உங்களிடமே திரும்ப வரும். நீங்கள் யாரையும் குறை கூறக் கூடாது.

இந்த 56 வருடங்களில் நான் ஒரு மோசாமான வார்த்தைகூட யாருக்கும் சொன்னது கிடையாது. "நீ முட்டாள்" என்பது தான் என்னிடம் இருந்து வந்த மிக mosamanaa  வார்த்தை. சிலநேரங்களில், நான் கோபமாக அல்லது கவலையாக  இருந்த பொழுது,"நீ முட்டாள்" என்று கூறியது, இதற்க்கு அதிக பட்சமாக ஏதும் இல்லை. நான் யாரையும் குறை கூறியதோ அல்லது எதாவது மோசமான வார்த்தை சொன்னது கிடையாது. எப்பொழுதும் என்னிடம் இருந்து வந்ததில்லை. அது நடப்பதற்கு நான் எதுவும் செய்த தில்லை; ஆரம்பத்திலிருந்தே அது போல இயற்கையாகவே இருந்தது. நான் யாரையும் துஷ்ப்ரயோகம் செய்ய முடியாது . வார்த்தை  துஷ்ப்ரயோகம் அல்லது மற்ற  துஷ்ப்ரயோகம். நீங்கள் இதற்க்கு கவனத்தை செலுத்தும் போது, மோசமான வார்த்தை உபயோகிக்கும்போது, உங்களுடைய வார்த்தை ஆசீர்வதிப்ப தற்கு சக்தியை பெறுகிறது. உங்களுடைய ஆசீர்வாதம் வேலை செய்யும். நான் என்ன சொல்கிறேன் என்று தெரிகிறதா?

ஆகையால், உங்களை குறை கூறுவதை நிறுத்துங்கள் மற்றும் அடுத்தவரை குறை கூறுவதை நிறுத்துங்கள். விஷயங்கள் அவைகள் இருக்கின்ற படி இருக்கின்றன, வெறுமனே நகர்ந்து செல்லுங்கள் அவ்வளவுதான். உங்களுக்கு தெரியும், சில நேரங்களில் மக்கள் சொல்கிறார்கள், " ஓ இவன் ஒரு ஏமாற்றுக்காரன், இவன் நேர்மையானவன் அல்ல." ஆனால் எது நேர்மை, எது ஏமாற்றுத்தனம் என்று ஒருவர் சொல்வதற்கு வரைமுறைகள் இருக்க வேண்டும். பல நேரங்களில், மற்றவர்களை மதிப்பிடுவதற்கு உங்களுக்கு வரை முறைகள் இல்லை, வெறுமனே குறை கூறுகிறீர்கள், "ஓ அவன் ஏமாற்றுக்காரன்" அவ்வளவு தான் முடிந்தது. மற்றவர்களை குறை கூறுவதற்கு மற்றும் தன்னை தானே குறை கூறுவது பிறகு அதைப் பற்றி குற்ற உணர்வு கொள்வது, இது சமூகத்தில் வளர்ந்த விழிப்புணர்வற்ற நடவடிக்கை. மற்றும் அதை நீக்கி திருப்புவதற்கு இந்த ஆன்மீகப் பாதை இருக்கிறது. இது ஒரு அப்படிப் பட்ட நுட்பமான விஷயம் ஆகும்.

நீங்கள் செய்த எல்லா தவறுகளையும் சரி என்று தீர்மானிப்பதாக அர்த்தம் அல்ல. நீங்கள் சில தவறுகளை செய்யும் பொழுது, அவர்கள் சொல்கிறார்கள் "ஓ  நான் ஆன்மீகப் பாதையில் இருக்கிறேன், என்னுடைய தவறுகளை ஏற்றுக் கொள்ள முடியாது மற்றும் என்னை நானே குறை கூற முடியாது. ஆகையால் நான் செய்ததெல்லாம் சரி. இல்லை! அது ஒரு நுட்பமான சமநிலை. அது உன்னுடைய தவறை தீர்மானிப் பாத்து அல்ல ஆனால் அதே நேரத்தில் உன்னுடைய தவறை அறிந்து கொண்டு உங்களை நீங்களே குறை கூறாமல் இருப்பது.

நீங்கள் உங்களுடைய தவறை அறிந்து கொண்டு ஏற்றுக் கொள்ளவில்லை எனில், நீங்கள் எப்பொழுதும் முன்னேற மாட்டீர்கள். அது கதையின் முடிவாகி விடும். அதே நேரத்தில், உங்களுடைய தவறை அறிந்து கொண்டு நீங்கள் மிகுந்த குற்ற உணர்வு கொண்டால் அதுவும் கூட நபிக்கையற்ற நிலை. ஆகையால் உங்களுக்கு மிகுந்த நுட்பமான சமநிலை வேண்டும். இந்த பக்கமோ அல்லது அந்த பக்கமோ அல்லது கத்தி முனையில் நடங்கள்.

கே: நாம் மிகச்சிரியவர்கள் எனில் பிறகு இங்கே இந்த போக்கில் ஏன் அவ்வளவு பணத்தை, நேரத்தை, ஆதாரங்களை மற்றும் ஆற்றலை நம்மீது உபயோகித்து கொண்டிருக்கிறோம்? ஒவ்வொருவரும் ஒரு பொருட்டே அல்லாத போது நாம் ஏன் ஆன்மீகமாக மற்றும் எல்லாமாக ஆகவேண்டும்? அவைகள் ஒரு விசயமே இல்லாத போது நல்லவர்களாக இருந்து உதவி செய்வதற்கு நாம் யார்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உங்களுக்கு இந்த கேள்விக்கு பதில் வேண்டுமா? அது ஒரு விசயமே இல்லை! ஏன் நீங்கள் இந்த கேள்வியை பற்றி மிகவும் அக்கறை கொள்ள வேண்டும்? அது ஒரு விசயமே அல்ல!

கவனியுங்கள் இருப்பில் பல அடுக்குகள் உள்ளன, ஆனால் ஞானத்தில்  இரண்டு அடுக்குகள் தான். ஒன்று பயன்படுத்தப்படும் ஞானம் மற்றும் மற்றொன்று தூய்மையான ஞானம். தூய்மையான அறிவியல், பயன்படுத்தப்படும் அறிவியல். தூய்மையான ஞானம் என்பது என்ன? இந்த அறையில், எல்லாமே மரத்தால் ஆனவை. இந்த இருக்காய் மரம், அந்த மேசை மரம் மற்றும் அந்த கதவு மரம். அது என்ன? எல்லாமே அணுக்கள் தான்.

ஆகையால், ஒவ்வொன்றும் மரத்தால் ஆனவை அல்லது எல்லாமே அணுக்கள்-இது தூய்மையான ஞானம். அனால் ஒவ்வொன்றும் அணுக்களால் ஆனபோதும் கூட உங்களால் இருக்கையை கதவாகவோ அல்லது கதவை இருக்கையாகவோ உபயோக்கிக்க முடியாது. உங்களுக்கு புரிகிறதா?

ஆகையால், வைரமும் நிலக்கரியும் ஒரே பொருட்களால் ஆனவை. அது மெய்நிகராக ஒன்று. ஆனால் நிலக்கரியை உங்கள் காதுகளில் அணிந்து கொள்ள முடியாது மற்றும் வைரத்தை அடுப்பில் போட முடியாது, சரியா? ஆகையால் அவைகள் ஒரு அடுக்கில் வேறு வேறானவை. அது பனிக்கட்டியும் தண்ணீரும் ஒன்று என்று கூறுவதுபோல, அவை இரண்டும் H2O தான். ஆனால் தண்ணீரிலிருந்து தேநீர் தயாரிக்க முடியும். ஆனால் பனிக்கட்டியிலிருந்து தேநீர் தயாரிக்க முடியாது. பனிக்கட்டி தண்ணீராக மாறவேண்டும், அதன் பிறகே அதிலிருந்து தேநீர் தயாரிக்க முடியும். இல்லையா? ஆகையால் இது பயன்படுத்தப் படும் ஞானம்.

ஆகையால் தூய அறிவில் நீங்கள் முக்கியமில்லாதவர்கள் என்று சொல்லப் படுகிறது. ஏன்? ஏனெனில் திடீரென்று நீங்கள் உங்களை பிரபஞ்ச பின்னணியில் பார்கிறீர்கள்.

நீங்கள் சாப்பிடக்கூடாது என்று அர்த்தம் அல்ல. நீங்கள் மிகசிரியவர்கள் என்றல் ஏன் இருக்கவேண்டும்? ஏன் சாப்பிடுகிறீர்கள்? ஏன் தூங்குகிறீர்கள்? ஏன் எதையாவது செய்கிறீர்கள்? சரியா? நீங்கள் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் மற்றும் நீங்கள் இந்த பயிற்சியிலும் இருக்க வேண்டும். புரிந்ததா?

இங்கே இருப்பதனால் என்ன நடக்கிறது? மனம் ஆற்றலை பெறுகிறது. உடல் ஆற்றலை பெறுகிறது மற்றும் உங்களிடம் ஞானம் தங்குகிறது. பல விஷயங்கள் நடக்கின்றன.

கே: தியனத்திலோ அல்லது ஓய்வில் இருக்கும் போது அழுவது சரியா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அழுவது சரி. ஒரு தடவை அல்லது இரண்டு தடவை சரி அனால் எல்லா நேரங்களிலும் அதை ஊக்குவிக்க வேண்டாம். குறிப்பாக, எல்லோரும் தியானத்தில் இருக்கும்பொழுது மற்றும் அங்கெ ஒரு சிலதன்மை இருக்கும் பொழுது, உங்களுடைய உணர்வுகளை கவனித்து அதை விட்டு விடுவதே சிறந்ததாகும்.

கே: பகலில் சிறிய தூக்கம் கொள்வது நல்லதா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் ௪௫ வயதை கடந்து விட்டீர்கள் எனில் சரி. அதற்க்கு முன்னால் அல்ல.

கே: நான் எப்பொழுதும் எதையும் உணரவில்லை எனில் என்ன அர்த்தம்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் காலியாக உணர்கிறீர்களா? அது ஏதோ ஒன்று.
உங்களுக்கு தெரியுமா, சில நேரங்களில் உணர விரும்புகிறீர்கள். நீங்கள் மற்றவரின் அன்பவங்களை கேட்கிறீர்கள் மற்றும் நீங்கள் உட்கார்ந்து அதை உணர நினைக்கிறீர்கள், அப்பொழுது அது நிகழ்வதில்லை. ஏதோ ஒரு அனுபவத்தை பெற நினைப்பதை விட்டுவிடுங்கள். நீங்கள் என்னோடு இருக்கிறீர்களா?

பாருங்கள், ஒரு எதிர்பார்ப்பு அல்லது மிக அதிகமான விழிப்புணர்வு, உங்களை மூளையின் முன்னாள் மடலில்  வைக்கிறது மற்றும் நீங்கள் மிகவும் கவனமாக இருக்கிறீர்கள் .அந்த நேரத்தில் நீங்கள் தூங்க முடியாது, நீங்கள் ஓய்வாக இருக்க முடியாது. உங்களால் ஏதோ ஒரு அனுபவத்தை மற்றும் ஆழமாகவும் கூட செல்ல இயலாது. ஆகையால் அது ஒரு வகை சாத்தியம். இரண்டாவது, உங்களில் நிறைய பேர் கேட்டிருக்கிறீர்கள், "எல்லா நேரங்களிலும் நான் தூங்கி விடும் போது நான் என்ன செய்வது". நாம் நம்முடைய தூக்க அமைப்பை மாற்றிவிட்டோம் அது தேவைப் படுகிறது மற்றும் உடல் அதை எடுத்துக் கொள்கிறது. உங்களுடைய சக்கரை அளவு அதிகமாகவோ குறைவாகவோ இருந்தால், நீங்கள் அடிக்கடி தூக்கத்தில் விழுவீர்கள் . இது ஒரு விஷயம்.

இரண்டாவது, உங்களுடைய அமைப்பில் தேவையான அளவு பிராண இல்லை யெனில்,நீங்கள் தூக்கத்தில் விழுவீர்கள். ஆகையால், பிரணாயாம உங்களுக்கு உதவி செய்யும்.தியானத்திற்கு முன், ஒரு சில ஆழமான மூச்சு உங்களுக்கு உதவி செய்யும். உடலில் உள்ள சக்கரை மற்றும் கனிமங்கள் அளவுகளை கண்டிப்பாக பாருங்க. சிலநேரங்களில் அவைகள் பற்றாக்குறையாக இருக்கும்போதும் கூட நீங்கள் சோர்வாகவும் உணர்வீர்கள் மற்றும் நீங்கள் தூக்கத்தில் விழுவீர்கள்.பிறகு உடல் மிகவும் சோர்ந்திருக்கும் போதும் வாய்ப்பு இருக்கிறது. சில நேரங்களில், நீங்கள் சோர்வாக இருக்கும் போது நீங்கள் தூக்கமாக உணர்வீர்கள்,சிலநேரங்களில்,சோர்வாக இருப்பீர்கள், உங்களால் தூங்க முடியாது. உங்களில் எத்தனை பேருக்கு இந்த அனுபவம் இருக்கிறது? நீங்கள் சோர்வாக இருப்பீர்கள் ஆனால் உங்களால் தூங்க முடியாது.ஆகையால் தியானத்தில் இவைகள் மாறிவிடுகின்றன,மற்றும் நீங்கள் ஏன் தியானத்தின் போது தூக்கம் வருகிறது எனில் அது ஒரு காரணம். ஆனால் பொருட் படுத்த வேண்டாம்.

கே: ஏன் என்னுடைய தலை எப்பொழுதும் பாடிக்கொண்டிருக்கிறது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: எப்பொழுதும் என்று சொல்லாதீர்கள். அது எப்பொழுதும் பாடிக்கொடிருக்கின்றது  என நான் நினைக்க வில்ல. நீங்கள் மூளையின் அந்த பகுதியின் அதிக மாக உபயோகித்திருக்க வேண்டும். அதாவது உங்கள் மூளையின் வலது பகுதி, மற்றும் ஆகையால் இசை உங்களுக்கு சாதரணமாக வருகிறது. மற்றொரு மாற்று வலி சிக்கலான கணக்குகளை தீர்ப்பதில் கொஞ்ச நேரத்தை செலவிடுவது. குருக் கேளு துளுகளை போல, பிறகு நீங்கள் மூளையின் மற்றொரு பகுதியை உபயோகிகிரீர்கள். நீங்கள் உட்கார்ந்து எங்களை எண்ணலாம்; சில கணக்குகளை போடுங்கள் அல்லது பணத்தை எண்ணுங்க .அந்த செயல்களை செய்யுங்கள் அது மூளையின் மற்றொரு பகுதியை சமப்படுத்தும்.  அல்லது எதாவது படியுங்கள். அல்லது ஞானத்தை கேளுங்க . இப்பொழுது நீங்கள் ஞானத்தை கவனித்துக் கொண்டிருக்கீர்கள் மற்றும் உங்கள் மனம் பாடிக்கொண்டிருக்கவில்லை. ஆகையால் படிப்பது, கவனிப்பது, எண்ணுவது , இவை எல்லாம் உங்களுடைய இடது மூளையை செயல்படுத்த உதவுகிறது.

கே: நாம் எல்லோரும் மூச்சுடனும் உள்ளே எல்லா ஞானங்களுடனும் பிறக்கிறோம். ஆகையால், ஏன் ஒவ்வொருவரும் உங்களை போல ஒரு குருவாக இருக்கவில்லை? ஞானத்தினால் நீங்கள் ஏன் ஒரு குருவாகி விட்டீர்கள்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இந்த பெரிய வடிவமைப்பு நாமெல்லோரும் சில பெரிய திட்டத்தோடு இங்கு வந்திருக்கிறோம். இதை போல - நீங்கள் இதை செயுங்கள், நீங்கள் இதை செயுங்கள் மற்றும் நீங்கள் அதை செயுங்கள். பாருங்கள், இந்த கட்டிடம் கட்டப்பட்ட பொழுதுஎல்லா மூலப் பொருட்களும் வேறொரு பக்கம் வைக்க பட்டிருந்தன. ஆனால்கட்டிடகலை நிபுணர் சொன்னார், "ஜன்னல் இங்கே இருக்கும், அது கதவாக.அதே போல, நம்முடைய வாழ்க்கையும் அப்படி இருக்கிறது.ஒரு பெரிய திட்டம் சொல்லியது, "நீ அங்கே பிறப்பாய் மற்றும் நீ அங்கே பிறப்பாய், மற்றும் நீ இங்கே பிறப்பாய்" ஆகையால், நாமெல்லோரும் உலகில் வேறு வேறு இடங்களில் பிரப்பெடுதிருக்கிறோம் மற்றும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், நாம் எல்லோரும் இங்கே வந்து சேர்கிறோம்.

நான் உங்களிடம் சொல்கிறேன், அது மிகவும் வசீகரத்துடன் உண்மையை நோக்குவது. இந்த உலகில் நாம் என்ன கருதுகிறோமோ அதை விட அதிகமாக இருக்கிறது. நாம் இந்த உலகில் பார்ப்பது வெறும் பனி பாறையின் ஒரு சிறிய பகுதி மட்டுமே, மற்றும் நாம் அதை தான் முழு உலகம் என்று நினைக்கிறோம். நாம் ஒரு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு இது தான் கடல் என்று நினைக்கும் தவளை போல இருக்கிறோம். நாம் அதைப் போல ஒரு வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டி ருக்கிறோம். நாம் விழித்து கொண்டு பார்ப்போமானால் இந்த உலகம் கிணற்றிக்கு அப்பால் இருக்கிறது, பல விஷயங்கள் உங்களுக்கு புலப்படும் மற்றும் பல விஷயங்கள் உங்களை உணர  வைக்கும்.

ஆகையால், இந்த உலக அடுக்கில் எல்லா திட்டங்களும் ஏற்கனவே செய்யப்பட்டு விட்டன. ஒருவர் மருத்துவர் ஆகவேண்டுமெனில், அது ஏற்கனவே செய்யப்பட்டு விட்டது. இப்பொழுது நீங்கள் என்னை கேட்களா , "பிறகு அங்கே எப்பொழுதும் சுதந்திரம் இல்லை?"நான் சொல்கிறேன், ஆமாம், அங்கே இருக்கிறது! விதி மற்றும் ஒரு குறிப்பிட்ட அளவு சுதந்திரம் இரண்டும் சேர்ந்த கலவை தான் வாழ்க்கை.அது இரண்டும் சேர்ந்தது.

கே: என்னுடைய சகோதரி மன அளவில் ஆரோக்கியம் இல்லாமல் இருக்கிறார். அவள் நம்முடைய ஆற்றலை கீழே இழுப்பதில் மற்றும் நம்மை வருத்தத்தில் ஆழ்த்துவதில் நன்றாக இருக்கிறாள். நான் அவளிடமிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு விலகி இருக்கிறேன். ஆனால் அவள் மிகவும் தனிமையாக இருக்கிறாள். எப்படி மற்றவர்களுக்கான பொறுப்புக்கும் உங்களுக்கும் இடையே சமனாக இருப்பது.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்:  நீங்கள் ஒருவர் நோயாளியாக இருக்கிறார் என அறியும்பொழுது, அவர்களை காத்து கொடுத்து கேட்க வேண்டாம். காத்து அடைப்பான்களோடு அவர்களுடன் இருங்கள். அவர்களுடைய வர்தைகல்மற்றும் அவர்களின் நடவடிக்கைகளை நீங்கள் உங்கள் தலைக்குள்ளே கொண்டு செல்வதால் நீங்கள் வருத்தத்திற்கு உள்ளாவீர்கள். நீங்கள் உங்கள் தலை ஒரு பிழை ஏற்படுத்தாது செய்யுங்கள் மற்றவர்களிடமிருந்து விசயங்களை உறிஞ்சாமல் இருப்பீர்கள் மற்றும் அவர்களுக்கு எப்பொழுதெல்லாம் முடியுமோ அப்பொழுதெல்லாம் உதவுங்கள்.

ஒரு பண்டைய பழமொழி உண்டு அது சொல்கிறது "யாரும் இன்பத்தையும் துன்பத்தையும் கொடுப்பதில்லை". நீங்கள் துன்பப்படுகிறீர்கள் எனில் அது உங்களுடைய செயலால்; யாரோ ஒருவர் உங்களுக்கு தந்ததல்ல. மற்றும் நீங்கள் மகிழ்ச்சியாக ஆனந்த மாக இருக்கிறீர்கள் எனில் அதுவும் உங்களுடைய செயலினால் அது அந்த ஆனந்தத்தை கொண்டு வருகிறது.

இதை நீங்கள் அறியும் பொழுது, உங்களுடைய இன்பத்திற்கும் துன்பத்திற்கும் நீங்கள் யாரையும் குற்றஞ்சாட்ட மாட்டீர்கள். ஏனெனில் மற்றவரிடமிருந்து மகிழ்ச்சியை பெறுகிறீர்கள், நீங்கள் வேண்டும் பொழுது அதை கொடுக்க வில்லை என அவர்களை குற்றன்சாட்டுகிறீர்கள். நான் சொல்வது என்ன என்பது புரிகிறதா? ஏன் அன்பு வெறுப்பாக மாறுகிறது? அது ஏனெனில் நீங்கள் ஒருவர் மேல் அன்பு செலுத்துகிறீர்கள் மற்றும் அவர்கள் உங்களுக்கு அதிக மகிழ்ச்சியை கொடுத்தார்கள், அதன் பிறகு அவர்கள் மீது கோபப்படுகிறீர்கள் ஏனெனில் அந்த உணர்வு கிடைக்கப் பெறுவதில் குறைவாக இருக்கிறது. ஆகையால், அவர்கள் அந்த மகிழ்ச்சியை கொடுக்காத போது நீங்கள் அவர்களை குற்றன்சாட்டுகிறீர்கள், நீங்கள் அவர்கள் மேல் கோபம் கொள்கிறீர்கள், நீங்கள் வெறுக்கிறீர்கள் மற்றும் எல்லா உறவும் சென்று விடுகிறது. இல்லையா? ஆகையால், உங்களுடைய இன்பமும் துன்பமும் உங்களுடைய முயற்சியால் வருவது. மற்றவர்கள் எல்லோரும் ஒரு தபால் காரர்போல் உங்களுக்கு வினியோக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி செலுத்துங்கள்! பிறகு உங்களை சுற்றி இருப்பவர்களிடம் உங்களுக்கு ஒரு நல்ல உறவு இருக்கும்.

கே: தயவு செய்து எனக்கு வாழ்கையில் ஒரு பாதையை கண்டுபிடிக்க ஆசீர்வதியுங்கள்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் ஏற்கனவே உங்கள் பாதையில் இருக்கிறீர்கள்! நீங்கள் சரியான இடத்தில இருக்கிறீர்கள். நான் சொல்கிறேன். ஓய்வாக இருங்கள்! ஒரு ரயிலையோ விமானத்தையோ பிடிக்கும் வரை தான் நீங்க முயற்சிக்க வேண்டிய திருக்கும்.நீங்கள் விமானத்திற்கு வந்த பின், மேலும் கீழும் ஓடுவதில் அர்த்தம் இல்லை.விமானம் வேகமாக போய்ச்சேருவதில்லை.

கற்பனைக்காக, ஒருவர் ரயிலில் ஏறி தன்னுடைய சுமைகளுடன் ஓடிக்கொண்டு சொல்கிறார் "நான் எல்லோருக்கும் முன்னே சென்றடைய வேண்டும்". வெறுமனே ஓய்வாக இருங்கள்! உங்கள் சுமைகளை கீழே போடுங்கள். நீங்கள் பாதையில் இருக்கிறீர்கள், நீங்கள் தியானதிற்க்குள்  இருக்கிறீர்கள். சஹஜ் சமாதி தியானம் கற்றுக்கொள்ள வில்லை எனில் அதை கற்று கொள்ளுங்கள். அஷ்ட வக்கிர கீதாவை கேளுங்கள்.உங்களில் எத்தனை பேர் அஷ்ட வக்கிர கீத கேட்டிருக்கிறீர்கள்?உங்கள் வாழ்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறதா? மற்றவர்கள்,கேட்காதவர்கள், அதைக் கேளுங்கள். நீங்கள் கண்டிப்பாக கேட்க வேண்டும், மற்றும் அதைக் கலந்துரை யாடுங்கள் மற்றும் அதில் வாழ்ந்து விடுங்கள். ஞானத்தில் சில நிமிடங்கள் தினந்தோறும் செலவழிப்பது மிகவும் உபயோகமாக இருக்கவேண்டும். உங்களிடம் "மௌனத்தை கொண்டாடுங்கள்" மற்றும் "ஞானம் தேடுபவருக்கு" ஆகிய புத்தகங்கள் இருந்தால், அந்த புத்தகங்களின் பக்கங்களை புரட்டுங்கள். அவைகள் நீங்கள் சிந்திப்பதை மாற்றும்.

கே: நான் ஒரு நபருடன் தொடர்பு வைத்துக் கொள்ள விரும்பவில்லை. நான் தொடர்பை விட்டு விடுவது அல்லது அவர்களுடன் தொடர்பை வைத்துக் கொள்ள விரும்ப வில்லை என அவர்கள் மனம் புண்படாதபடி அவர்களுக்கு எப்படி அறிய வைப்பது ஆனால் இன்னும் பாசத்துடனும் பரிவுடனும் தெளிவாகவும் இருப்பது எப்படி?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் விருப்பப் பட்டபடி நீங்கள் எப்பொழுதும் செய்யலாம்.அது ஒன்றும் பெரிய பிரச்னை அல்ல. நீங்கள் மெதுவாக சொல்ல முடியும். நீங்கள் வாய்மொழியாக எல்லாவற்றையும் சொல்ல வேண்டியது இல்லை. நான் இன்று இப்படி உணர்ந்தேன், நான் நேற்று இப்படி உணர்ந்தேன் யார் உங்களுடைய உணர்வு பற்றி கவலைப்படுகிறார்கள்?யார் உங்களுடைய சந்தோசத்தை பற்றி கவலை படுகிறார்கள். வாழ்க்கை மிகவும் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.பூமி வேகமாக சுற்றுகிறது,அது சூரியனை மிக வேகமாக சுற்றி வருகிறது. எல்லாமே மாறிக் கொண்டிருக்கிறது. இலைகள் விழுந்து கொண்டிருக்கின்றன மற்றும் புதிய இலைகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு மரத்திலிருந்து எவ்வளவு இலைகள் விழுகின்றன என யார் எண்ணிக் கொண்டி ருக்கிறீர்கள்? அதனால் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று ஏன் கவலைப் படுகிறீர்கள்? உங்களுடைய உணர்வுகளை யெல்லாம் தொகுத்து கடலில் தூக்கி எரிந்து விடுங்கள் மற்றும் ஓய்வாக இருங்கள். யார் அக்கறை கொள்வது. உங்களுடைய உணர்வுகள் எல்லா நேரமும் மாறிக் கொண்டிருக்கன்றன. அப்படி இல்லையா? உங்களுடைய உணர்வுகள் எத்தனை முறை மாறியிருக்கின்றன? எவ்வளவு முறை மாறியிருக்கின்றன? ஆகையால் அதை பற்றிய பெரிய பேரம் என்ன? நம்முடைய உணர்வுகளை பற்றி நாம் பெரிய பிரச்சினையாக உருவாக்குகிறோம்.

நான் இதை உணர்கிறேன். நான் அதை உணர்கிறேன். எழுந்து நில்லுங்கள். இந்த உலகத்தில் என்ன செய்ய விரும்புகிறீர்கள், வெறுமனே செய்யுங்கள், வெறுமனே முடித்து விடுங்கள். அவ்வளவு தான். காலம் அது போல் ஓடுகிறது. 30 வருடங்களாக வாழும் கலை வளர்ந்தது.  நாம் வாழும் கலையை 1982 ல் ஆரம்பித்தோம். ஆனால் நாம் நமது நிறுவனத்தை அதற்க்கு  சில மாதங்கள்  முன்பு  ஆரம்பித்தோம். நாம் வேத விக்ஞான் மஹா வித்யா பீடம், பெங்களூர் ஆஷ்ரமத்தை 13 நவம்பரில் 1981ல் பதிவு செய்தோம். என்ன நடந்தது? ஏற்கனவே 30 வருடங்கள் முடிந்தது. நாம் மார்ச் 1982 ல் முதல் அடிப்படை பயிற்சியை ஆரம்பித்தோம். நாம் ஏற்கனவே 30  வது வருடத்தில் நுழைந்து விட்டோம்.காலம் கடந்து விட்டது.

இந்த மாதத்தில் இது 14 வது நிறுத்தம் என நான் நினைக்கிறேன்; உலகம் முழுவது 14  நகரங்கள சென்றிருக்கிறேன், ஏப்ரல் 1  லிருந்து இப்பொழுது வரை. எல்லாப் பக்கமும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் நான் காண்கிறேன். வாழ்கையை வெளி படுத்துவதற்கு நேரம் இல்லை.நாம் என்ன உணர்கிறோம்,நாம் என்ன உணரவில்லை  என்று உட்கார்ந்து யோசிப்பதற்கு எங்கே நேரம் இருக்கிறது. இந்த உலகத்தில் செய்வதற்கு நிறைய இருக்கின்றன. இருப்பினும் ஒன்றும் செய்வதற்கு இல்லை. இரண்டும் ஒன்றாக செல்கின்றன. அங்கே செய்வதற்கு நிறைய இருக்கிறது இருப்பினும் நீ எதையும் செய்ய வேண்டியதில்லை. எல்லாமே நிகழதபட்டு விட்டன. முழுமையான பூர்த்தி.

கே: மற்ற ஆறு அடுக்குகள் இல்லாமல் சுய இருப்பு இருக்க முடியுமா.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆமாம்  கண்டிப்பாக. மற்ற ஆறு அடுக்குகளும் தன்னுடைய சொந்த வெளிக்காட்டல். சிலந்தியைப் போல, அது தன்னுடைய சலிவா மூலமாக தன்னுடைய முழு வலையையும் நெய்கிறது. ஆனால் வலை இல்லாமல் சிலந்தி இருக்க முடியும். ஒரு விழிப்புணர்வு எல்லா மட்டங்களையும் உருவாக்கி இருக்கிறது. இருப்பினும், அந்த அடுக்குகள் இல்லாமல் அது இருக்க முடியும்.

கே: என்னுடைய மின்கல அடுக்குகளை நிரப்புவது அமைதி என்று எனக்கு தெரியும், ஆனால் ஏன் நான் தனிமையாக உணர்கிறேன்பல வற்றை பல மனிதர்களிடம் பக்கிட்டு கொள்வதற்கு இருக்கிறது.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இந்த தனிமை அனுபவம் பிரிவுகளுக்கு  தற்காலி கமானது . இந்த உலகத்திற்கு  வந்த பொழுது நீங்கள் எப்பொழுதும் தனிமையாக உணர்ந்ததில்லை. நீங்கள் தனியாக வந்தீர்கள். நீங்கள் இரட்டையர்களாக வந்தாலும் கூட இந்த உலகத்திற்கு தனியாக வருவது போல் நல்லது. மற்றும் நாம் இங்கிருந்து செல்லும்போது தனியாக செல்கிறோம். நீங்கள் உட்கார்ந்து சொல்கிறீர்கள் "நான் தனிமையாக உணர்கிறேன், நான் தனிமையாக உணர்கிறேன்" இல்லை! அதை விட்டு விடுங்கள். மற்றவர் யாரும் இல்லை என்ற உணர்வுக்குள் ஆழமாக செல்லுங்கள்.

கே: குருஜி, நான் எப்படி வெற்றியாளனாகவும் சந்தோசமாகவும் இருப்பது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் வெற்றியாளனாவதர்க்கு மூன்று விசயங்கள் வேண்டும்

1. திறமை
2. ஆற்றல் மற்றும்
3. இயக்கத்தன்மை

உங்களுக்கு திறமை இருந்தும் ஆற்றல் இருந்தும் நீங்கள் எதுவும் செய்ய வில்லை எனில் நீங்கள் வெற்றியாளனாக ஆக முடியாது. திறமை இல்லாமல் வெறுமனே செய்து கொண்டிருந்தாலும் கூட நீங்கள் வெற்றியாளனாக ஆக முடியாது. உங்களுக்கு திறமை, இயக்கத்தன்மை இருந்த போதும் ஆற்றல் இல்லை எனில் நீங்கள் வெற்றியாளனாக ஆக முடியாது. வெற்றி அடைவதற்கு  திறமைஆற்றல் மற்றும்  இயக்கத்தன்மை மூன்றும் வேண்டும். நீங்கள் இயக்க ஆற்றல் நிறைந்தவராக இருக்க வேண்டும். நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும் இவை மூன்றும் வேண்டும். ஒரு சிலர் உட்கார்ந்து திட்ட மிடுவார்கள்  திட்ட மிடுவார்கள்  திட்ட மிடுவார்கள். அவர்கள் வாழ்க்கை முழுதும்  திட்ட மிடுவார்கள் வேறு ஒன்றும் செய்ய மாட்டார்கள். பெங்களூரில்  15 முதல் 20  வருடங்களுக்கு முன்பு நம்முடைய சட்சங்கதிர்க்கு ஒரு இளைஞர்  வந்திருந்தார். அவர் ஒவ்வொரு மாதமும் எப்படி வெற்றியாளர் ஆவது எப்படி பணம் சம்பாதிப்பது என 25  பத்திரிக்கைகள் வாங்குவார். மற்றும் அவர் படித்துக் கொண்டே இருப்பார், திட்ட மிட்டுக் கொண்டே இருப்பார் மற்றும் ஒவ்வொருதடவையும் வந்து சொல்லுவார், "என்னிடம் இந்த சிறந்த பத்திரிக்கை இருக்கிறது, என்னிடம் இந்த பெரிய யோசனை இருக்கிறது. என்னை ஆசீர்வதியுங்கள். "நான் சொன்னேன்"சரி செய்யுங்கள்"

அடுத்த வாரம் அதே பத்திரிக்கையுடன் வந்து அவர் ஆசீர்வாதம் கேட்பார். ஒரு வருடம் கழிந்து விட்டது. நானும் கூட பொறுமையாக இருந்தேன் மற்றும் அவர் ஒரு நாள் ஏதாவதை ஆரம்பிப்பார் என நினைத்தேன். ஆனால் அவர் எதையும் ஆரம்பிக்க வில்லை. அவர் பாதிர்க்கை வாங்க மட்டுமே செய்தார், என்னிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டிருந்தார் மற்றும் பெரிய திட்டங்களை போட்டுக் கொண்டிருந்தார், எல்லா வற்றையும் கணினியில் பதிந்து கொண்டிருந்தார் அவ்வளவு தான். பெங்களூரில் நமக்கு 100 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த மற்றொரு மனிதர், கணினியில் உட்கார்ந்து இந்த திட்டங்களை எல்லாம் உருவாக்குகிறார் அங்கு விதை விதைப்பார் மற்றும் எப்படி பயிரிடுவார். அவர் விவசாய துறை தலைமை யாக இருந்தார். ஆஸ்ரமத்தில் இருந்த மற்ற எல்லோரும் சொல்வார்கள், "அவர் விவசாயத்தை கணிப்பொறியில் மட்டுமே செய்கிறார்" அவர் அறையில் உட்கார்ந்து திட்டமிடுவார். களத்திற்கு சென்று எப்பொழுதும்  விதை விதைக்கமாட்டார்.

அதே போல இந்த மனிதர் அல்ல பத்திரிக்கைகளை வாங்கி படிக்கிறார். ஒரு நாள் அவரை அழைத்து "பாருங்கள், இனி ஆசீர்வாதம் கிடையாது, என்னுடைய ஆசீர்வாதத்தை வீணடிக்க விரும்ப வில்லை"  நாம் முயற்சி செய்தால் மட்டுமே ஆசீர்வாதம் வேலை செய்யும்.  ஆகையால், இந்த பத்திரிக்கைகள் எல்லாவற்றையும் அந்தப் பக்கமாக வைத்து விடுங்கள். படிக்கவோ இன்னும் பத்திரிக்கை வாங்கவோ  செய்ய வேண்டாம். ஒரு விஷத்தை எடுத்துக்கொண்டு அதில் வேலை செய்யுங்கள் மற்றும்  நீங்கள் வெற்றியாளர் ஆவீர்கள். நான் இதை சொல்கிறேன் எனில், சிலநேரங்களில் பெரிய திட்டங்களோடு இருக்கும் மக்கள், அதை பயிற்சி களத்திற்கு கொண்டு செல்வதில்லை. மற்றும் மற்றொரு சிலர் யோசனை செய்யாமல், திட்ட மிடாமல் கடினமாக உழைப்பார்கள். அவர்களும் வெற்றியாளராக முடியாது.

ஆகையால் நீங்கள் இரண்டையும் செய்ய வேண்டும். ஆசீர்வாதம் இன்றி விஷயங்கள் நகராது என்பது எனக்கு தெரியும். ஆசீர்வாதம் தேவை, ஆனால் வெறுமனே ஆசீர்வாதம் மாட்டும் வேலை செய்யாது ஏனெனில் சிலர் அதே போல நன்றாக வேலை செய்ய வேண்டும். ஆமாம்! ஆசீர்வததுடன் வேலை உங்களை வெற்றி யாலராக்கும். நான் சொல்ல வேண்டும், நீங்கள் கடின உழைப்பு மற்றும் வெற்றியும் கிடைத்த பிறகும் கூட , உண்மையான வெற்றி உங்களுடய நம்பிக்கையில் இருக்கிறது. உண்மையான வெற்றி என்பது, எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது, எவ்வளவு புன்னகை கொண்டிருக்கிறீர்கள் மற்றும் எவ்வளவு தைரியமாக நீங்கள் நடக்க முடியும் என்பதில் இருக்கிறது. அது உங்களின் வெற்றியை குறிக்கிறது.

கே: நான் முதல் நிலை பயிற்சி செய்திருக்கிறேன் மற்றும் அமைதி கலை பயிற்சி இரண்டு முறை செய்திருக்கிறேன். என்னுடைய பகுதியில் கடந்த ஒரு வருடங்களாக சேவை செய்து வருகிறேன். எங்கள் பகுதியில் ஆசிரியர் இல்லை. ஆகையால் நான் ஆசிரியர் ஆகலாமா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: கண்டிப்பாக! எனக்கு நிறைய நிறைய ஆசிரியர்கள் இப்பொழுது தேவை. எவ்வளவு ஆசிரியர்கள் முடியுமோ அவ்வளவு ஏனெனில் மிகுந்த மக்கள் தொகையை உள்ளடக்க வேண்டும். இங்கே உங்களில் எத்தனை பேர் ஆசிரியராக வேண்டும்? ஆமாம் நீங்கள் எல்லோரும் ஆசிரியராக வேண்டும். உங்களை சுற்றி உள்ள மக்களுக்கு நீங்கள் நிறைய செய்ய முடியும். மிக்க நல்லது.