பணம் சம்பாதிக்க,குறுக்கு வழி கிடையாது..



வியாபாரத்தில் நேர்மைக்கான உலக பஞ்சாயத்து 
இன்று மக்களில் முன் உதாரணமாக இருப்பவர்கள் மிக மிக அவசியமாகத் தேவைப் படுகிறார்கள். தொழிலதிபர்களாக விரும்பும் இளைஞர்கள், அனுபவம் நிறைந்த  நேர்மையாகத் தொழில் நடத்தும், சமூக நலத்தைப் பேணும் கம்பெனிகளை நடத்துபவர்களை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது நடக்கக்கூடிய ஒன்று.நடக்க வேண்டும்.எத்தனையோ கம்பெனிகளில் நேர்மையாக தொழில் நடத்துகிறார்கள்.அவர்களைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரிவிப்பதே இந்த உலக பஞ்சா யத்தின் முக்கிய நோக்கமாகும். அப்படிப் பட்டவர்கள் வரும் இளைய தலைமுறைக்கு நேர் வழி காட்டக் கூடிய உதாரணமாகத் திகழ்கிறார்கள்.
உங்களுக்குத் தெரியும். பணத்தைப் பல வழிகளில் அடையலாம். ஆனால் ஒரு நல்ல தூக்கத்தை பலவழிகளில் அடைய முடியாது. நல்ல தூக்கமும், மன அமைதியும், நீ நல்ல உணர்வுகளோடு, நேர்மையாக இருந்தால் தான் கிடைக்கும்.ஒளிவு மறைவில்லாமல், தூய்மையான,எளிமையான மனத்தோடு இருந்தால் தூக்கம் நன்றாக வரும்.
பொதுவாக கம்பெனிகளிலும், தொழிற்சாலைகளிலும் 10 லிருந்து 20 நிமிடம் தியானம் செய்து விட்டுஎல்லோரும் சேர்ந்து உணவு உண்ணும் பழக்கம் இருந்தால் ஒருகுழுவாக ஒன்று சேர்ந்து செயல்படுவதைப் பார்க்கலாம்.ஒன்று சேர்ந்து வேலை செய்து குழு மனப்பான்மையை,  உற்சாகத்தைவளர்க்கலாம். எல்லோரும் சேர்ந்து உண்ணும் பழக்கம் மிகவும் நல்லது.
நான் பேசுவதைக் குறைத்து அதிகம் காரியம் செய்வதில் நம்பிக்கை உள்ளவன்.நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லி விட்டேன். உங்களுக்கு ஏதாவது கேட்க வேண்டுமென்றால் கேளுங்கள்.
கேள்வி:  சிறிது நேரம் முன்பு தன் சுய தேவைகளை வரையறுப்பது பற்றி சுவாரஸ்யமான விவாதம்நடந்தது. அதைப் பற்றி மறுபடியும் ஏதாவது சொல்வீர்களா?
ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: ஆம். சுய தேவைகளைப் பூர்த்தி செய்வது மிகவும் அவசியம்.பல காலமாக  நேர்மையற்ற வழியில் குறைந்த சமயத்தில் நிறையச் செல்வம் ஈட்டுவதில் நாட்டம் கொண்டி ருந்தால், நீ உன்னை அழிவுப் பாதையில் கொண்டு சேர்க்கும் அபாயத்துக்கு உள்ளாகிறாய். சுய தேவைக்காக காரியம் செய்ய வில்லை. சுயமாக அழிவைத் தேடுகிறாய். உனக்கு அது சுய தேவைக்காக மட்டும் செய்யும் செயல் போல் தோன்றினாலும் அது நீயே தேடிக் கொண்ட அழிவாகும்.
இன்னொரு கோணத்தில் பார்க்கும் போது, சுயமான தேவைகளைப் பூர்த்தி செய்ய நினைக்கும் போது,மேலும் சிலரையும், சமூகத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்ய விரும்பு.தன்னுடையது என்று பார்க்கும் போது, நீ உன்னை மட்டும் எண்ணிப்பார்க்கிறாய்.அல்லது உன்னுடைய கம்பெனியில் வேலைசெய்பவர்களை சேர்த்துக்கொள்கிறாய்.உன் கம்பெனியைப் பற்றி மட்டும் நினைக்கிறாய். சமூகத்தில் ஒரு ஆதரவான வளர்ச்சி இல்லாவிட்டால், மக்களுக்கு உன் பொருட்களை வாங்கும் சக்திஇல்லாவிட்டால்,நீ பொருட்களை உற்பத்தி செய்வதில் ஏதும் பயன் இல்லை.ஒருவராலும் உன் பொருட்களை வாங்க முடியாவிட்டால் நீ என்ன செய்வாய்?உன் சுய தேவைக்காக வேலை செய்யும் போது மக்களின் வாங்கும் சக்தியையும் புரிந்து கொள்ள வேண்டும். உன் உற்பத்தித் திறனை எப்படி அதிகரிக்க விரும்புகிறாயோ,அப்படியே மக்களுக்கு வாங்கும் சக்தியைப் பெருக்குவதும் அவசியம். ஆகவே மக்களின் வாங்கும் சக்தி உன் சுய தேவைக்குள் அடங்கும். நம் சுய தேவையைப் பற்றி எண்ணும்போது நாம் சமூகத்தின் தேவைகளைப் பற்றியும் எண்ண வேண்டும்.
கேள்வி: நான் தலைமை வகிப்பதைப் பற்றி, அதுவும் பொது மக்களின் தலைமை வகிப்பதைப் பற்றிப்பாடம் நடத்துகிறேன். மக்கள் அனாவசியமான தலையீடுகளையும், லஞ்ச ஊழலையும் சந்திக்கும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும், என்ன முடிவெடுக்க வேண்டும் என்று அவர்களுக்கு உதவி செய்கிறேன். நீங்கள் பெரிய அளவில் காரியம் செய்ய எப்படி முடிவு எடுக்கிறீர்கள்? திருப்தி அளிக்கக் கூடிய உங்கள் சொந்த முடிவுகளை எப்படி எடுக்கிறீர்கள்? மக்களுக்கு இப்படிப் பட்ட முடிவுகளைப் பற்றிச் சொல்லி உதவுவீர்களா? அது திருப்தியைப் பற்றியோ அல்லது தொல்லைகளிலிருந்து விடுபடுவதைப் பற்றியோ இருக்கட்டும்.
ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: நீ அவர்களின் பார்வையை விரிவாக்க வேண்டும்.வா.விழித்துக் கொண்டுபார்.
நீ என்ன செய்ய விரும்புகிறாய்? நீ இந்த வருடம் வரி கட்டாமல், அடுத்த வருடம் மாட்டிக் கொள்ள விரும்புகிறாயா? அபராதமும் கட்ட வேண்டியிருக்கும். அல்லது செலுத்த வேண்டிய வரியை இப்போதே செலுத்துவாயா? செலுத்தி விட்டு மேலே செல். தெரிந்து கொள். இந்தக் கருத்தைப்பற்றி மக்களுக்குச் சொல்ல வேண்டும்.நீ நேர்மையாக நடக்கும் போது வளர்ச்சியும் நீண்ட நாட்களுக்குத் தொடரும். இது முதல் பாடம்.
இரண்டாவது பாடம். பணம் சம்பாதிப்பதற்குக் குறுக்கு வழி கிடையாது. இந்தக் கருத்தை இளம் தொழிலதிபர்களுக்கு ஆணித்தரமாக உணர்த்த வேண்டும். பெரும்பாலோர் குறுகிய காலத்தில் பணம்சேர்க்க விரும்பி பெரிய பள்ளத்தில் விழும் அபாயத்துக்குள்ளாகிறார்கள். இந்தப் பாடம் மிகவும் அவசியம். சமூகத்தில் பெரிய வித்தியாசத்தைப் பார்க்கிறேன். 5, 10 வருடங்களுக்குள் மக்களின் நிலையில், நடவடிக்கையில் மிகப் பெரிய வித்தியாசத்தைப் பார்க்கிறோம். நிறைய தொழிலதிபர்கள் கம்பெனிகள் மிக வேகமாக முன்னேறி திடீரென்று நஷ்டத்துக்குள்ளாகி தொழிலை மூட வேண்டிய நிலையில் உள்ளார்கள். யாருமே அந்தப் பட்டியலில் சேர விரும்ப மாட்டீர்கள். இப்படிப்பட்ட (கெட்ட) உதாரணங்களும் மக்கள் தவறான பாதையில் செல்வதைத் தடுக்கின்றன.
கேள்வி: இந்த மன அழுத்தம், வன்முறை, லஞ்ச ஊழல்ல் நிறைந்த உலகில், தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: உலகம் முழுதும் லஞ்ச ஊழலில் ஈடுபடவில்லை என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். சிலர் லஞ்சம் வாங்குவதில், ஊழலில் ஈடு படுகிறார்கள்.
எங்கு ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் பண்பு முடிவடைகிறதோ, அங்கு லஞ்சம் துவங்குகிறது. யாருமே தன்னைச் சேர்ந்தவர்களிடம் லஞ்சம் வாங்க, கொடுக்க முடியாது. ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் போது, லஞ்ச ஊழல் இருக்க சாத்தியமில்லை. எனவே ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பதால் உள்ள பயன்களைப் பற்றி மக்களுக்குச் சொல்ல வேண்டும். அவர்களை அப்படிப் பட்ட மரியாதையான, நேர்மையான வாழ்க்கை வாழும்படித் தூண்ட வேண்டும். இதைத் தான் ஆன்மீகம் என்று சொல்வேன். ஆன்மீகம் மக்களை, ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ வைக்கிறது. இயல்பாகவே மக்கள் ஒருவரை ஒருவர் அனுசரித்து நேர்மையாக வாழ்வதற்கு ஆன்மீகம் வழி செய்கிறது. லஞ்ச ஊழலுக்கு இங்கு இடமில்லை.
கேள்வி: குருஜி! நாம் அனைவரும் நேர்மை, நற்குணங்கள் மற்றும் சுய தேவைகளைப் பற்றி விவாதித்தோம். மனிதருக்கு ஒரு சிறிய அளவாவது ஆன்மீகம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்கள் எந்த மதத்தவராக இருந்தாலும், ஒவ்வொரு மதமும் சில ஆன்மீகக் கொள்கைகளை, நற்பண்புகளை, நேர்மையாக நடப்பதைப் பற்றிச் சொல்லி அவர்களை நல்வழிப் படுத்துகிறது. சமநோக்குப் பார்வை உள்ளவராக ஆக்குகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: நான் உனக்கு ஒரு உதாரணம் தருகிறேன். எங்கெல்லாம் கூட்டம் இருக்கிறதோ அங்கு திருட்டு நடைபெறும். இந்தியா மாதிரி நாடுகளில் இது சகஜம். ஆனால் கும்பமேலா  நடக்கும்போது (கங்கைக் கரையில் 12 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் இந்துக்களின் யாத்திரை) ஒரே இடத்தில் 3 கோடி பேர்கள் சேரும் போது, ஒரு திருட்டு கூட நடக்காது. ஏனென்றால் அது ஒரு புனிதமான மத சம்பந்தமான ஒரு உணர்ச்சி. நான் ஒரு புனித யாத்திரைக்கு வந்திருக்கிறேன் என்ற உணர்வு. மக்கள் தங்கள் பொருட்களை, லாப் டாப் கம்ப்யூடர்களைக் கூட ஒரு இடத்தில் வைத்து விட்டு இங்கும் அங்கும் போவார்கள். யாரும் அதைத் திருட மாட்டார்கள். மற்ற நாட்களில் அப்படி நினைத்துப் பார்க்கக் கூட முடியாது.
நீ ஒரு பழைய மூக்குக் கண்ணாடியை வைத்து விட்டுப் போனாலும், யாராவது எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். உங்கள் காலணிகள் கூட திருட்டுப் போய்விடும். ஆனால் கும்ப மேலாவில் ஒருலாப்டாப் கம்ப்யூடர் கூட்ட திருட்டுப்  போவதில்லை. இது ஆச்சரியமான்ன விஷயம்! கும்ப மேலாவில் மற்றவர்களுக்குக் கொடுப்பதும், மற்றவர்களுக்கு உதவுவதும் அதிகமாகக் காணப்படும்.
இன்னொரு நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்கிறேன். குளிர் காலத்தில் ஜனவரி மாதம் அலகா பாத்தில் நடந்தது. மிகவும் குளிராக, சூன்ய டிகிரியோ அதை விட குறைவோ என்னவோ, இருந்தது. நான் இரவில் என் மாணவர்களுடன் 50 சால்வைகளை எடுத்துக்கொண்டு விநியோகம் செய்யப் புறப்பட்டேன். வெகு தூரத்திலிருந்து பயணம் செய்து வந்திருக்கும் சில ஏழை மக்கள் இருந்தார்கள். அவர்களுக்கு அறையில் தங்கும் வசதி கூட இல்லை. எனவே நாங்கள் அங்குள்ளவர்களுக்கு சால்வைகளைக் கொடுத்தோம்.
ஒரு இளைஞன் பாலத்துக்கடியில் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தான். 20, 22 வயதிருக்கும். நாங்கள் அவனுக்கு ஒரு போர்வையைக் கொடுத்த போது, அவன் “எனக்குப் போர்வை  இரவு தேவையில்லை. நான் குளிரைத் தாங்கிக் கொள்வேன். அங்கு பல முதியோர்கள், பெண்கள் பாலத்துக்கடியில் இருக்கிறார்கள். அவர்களுக்குப் போர்வை மிகவும் அவசியம். அவர்களுக்குக் கொடுங்கள்” என்று சொன்னான். அரை கிலோ மீட்டர் தூரத்தில் பல முதியோர்களுக்கு இ சால்வை தேவைப்படும். நான் இளைஞன். சமாளித்துக் கொள்வேன்” என்றான்.
மற்றவர்களைப் பற்றிக் கவலைப் படும் அவன் குணம் என்னை நெகிழச் செய்தது. அவன் ஒரு சாதாரண டி ஷர்ட் அணிந்திருந்தான். குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தான்.“முதலில் முதியோர் களுக்குக் கொடுங்கள். மிஞ்சினால் நான் எடுத்துக் கொள்வேன்” என்று சொன்னான். ஒருவர் மேல் ஒருவர் பரிவாக இருப்பது ஏழைகளிடம் அதிகமாகக் காணப் படுகிறது. எனவே நேர்மையும், ஆன்மீகமும் நம்மிடம் இருக்கும் (ஆழப் புதைத்து வைத்த) நற்பண்புகளை, மனிதநேயப் பண்புகளை மேல்மட்டத்துக்குக் கொண்டு வருகின்றன.
3 மாதத்துக்கு முன் வடக்கு டெல்லி போலீஸ் கமிஷனர் வாழும் கலை ஆசிரியர் ஒருவரை அழைத்துப் பேசினார். அவரிடம் 350 விசாரணைக் கைதிகள் இருப்பதாகச் சொன்னார். அவர்கள் யார் தெரியுமா? சமூக விரோதச் செயலில் ஈடு படுபவர்கள். திருட்டு மற்றும் கெட்ட காரியங்களில் ஈடு படுபவர்கள். அவர்களை சிறையில் வைப்பதும் கடினம். அவர்களால் பொது மக்களுக்கும் மிகத் தொந்தரவு தான். அவர்களைப் போக்கிரிகள் என்கிறோம்.
எனவே போலீஸ் கமிஷனர் 350 பேரை ஒன்றாக நிறுத்தி வாழும் கலை ஆசிரியர் அவர்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா? என்று கேட்டார். அந்த போக்கிரிகளிடம் ஏதாவது நல்ல குணங்களை, சிறிதளவு ஆன்மீகத்தைக் கொண்டு வர முடியுமா என்று கேட்டார்.
அவர்களைச் சமாளிப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் 6 நாட்கள் பயிற்சிக்குப் பின் அவர்களிடம் பெரிய மாற்றம் தெரிந்தது. இரண்டு அல்லது 3 மணி நேரம் தினமும் அவர்களுக்கு தியானம், பிராண யாமம் (மூச்சுப் பயிற்சி), நல் வார்த்தைகள் முதலிய வற்றால் அவர்களுக்குப் பயிற்சி அளித்தோம். அவர்களில் நிறைய மாற்றம் ஏற்பட்டது. அதே சமூக விரோதிகள் வெளியே வந்து மக்களுக்கு சுகாதாரத்தைப் பற்றியும், சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைப்பதன் அவசியத்தையும் உணர்த்தி நல்ல காரியங்களில் ஈடு பட்டார்கள். வடக்கு டெல்லியில் 90% குற்றங்கள்நடப்பது குறைந்தது.போலீஸ் கமிஷனர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து நாம் ஏன் இதை எல்லாஇடத்திலும் செய்யக் கூடாது என்று வினவினார். இதே போல் மேலும் மேலும் பயிற்சி அளிக்கத் தயாராக இருக்கிறோம் என்று சொன்னோம்.
நம்முடைய கல்வி முறை மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு ஏதுவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மன அழுத்தம் மிகவும் பொதுவாக உணரப்படுகிறது. இதை ஒரு மனச் சுகாதாரம் என்று அழைக்கலாம். நாம் பற்களின் சுகாதாரத்தைப் பற்றி கல்வி அளிக்கிறோம். (டெண்டல் ஹைஜீன்)ஆனால் மனச் சுகாதாரத்தை (மெண்டல் ஹைஜீன்) மறந்து விட்டோம். பள்ளிகளில், கல்லூரிகளில் எப்படி மனதை அமைதியாக வைப்பது பற்றியும், மன அழுத்தத்தால், கவலையால், பைத்தியம் பிடித்தவர்கள் போல் ஆவதைத் தவிர்ப்பது எப்படி என்று சொல்லித் தர வேண்டும்.
30 % ஐரோப்பியர்கள் மனச் சிதைவால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.சிங்கப்பூரில் எவ்வளவு பேர் என்று எனக்குத் தெரிய வில்லை. அந்த அளவு இருக்காது. 20 % இருக்கலாம்.சில ஆண்டுகளுக்கு முன் இப்படி இல்லை. பொருளாதார வளர்ச்சி அடைய அடைய நாம் இப்பிரச்சினைகளை எதிர் கொள்ளக் கூடாது. ஆனால் நாம் இப்பிரச்சினைகளை அதிகமாகப் பார்க்கிறோம். அதனால் தான் மக்களுக்கு ஆன்மீகத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நீங்கள் அப்படி நினைக்க வில்லையா? ஆன்மீகம் என்பது உங்களை எப்போதும் நடு நிலையில் வைக்கிறது. ஆன்மீகம் என்பது ஒரு இடத்தில் உட்கார்ந்து மத சம்பந்தமான காரியங்கள் செய்வது அல்ல. அது வாழ்க்கையை ஒரு விரிவான கோணத்தில் பார்க்க வேண்டிய ஒன்றாகும். மதம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் முக்கியமான பகுதியாகும். ஆன்மீகம் என்பது சிறிது வித்தியாசமானது. ஆன்மீகம் ஒருவரை தன் வாழ்க்கையில் விரிவான பார்வையில் பார்க்கச் செய்து, அவருடைய தகுதிகளை, திறமைகளை அவருக்கு உணர்த்தக் கூடிய ஒன்று.
கேள்வி: உலகத்தின் பல நாடுகளில் பேராசையை ஒரு மதிக்கத் தக்க குணமாகப் போற்று கிறார்கள்.இங்கு சிங்கப்பூரில் அதிர்ஷ்ட வசமாக அரசின் கொள்கைகளால், முயற்சிகளால் ஏழை பணக்காரர் வித்தியாசம் அதிகமில்லாமல் இருக்கிறோம்.மற்ற நாடுகளில் அவ்வாறு இல்லை. உங்கள் வாழும் கலைப் பயிற்சிகளிலும், மற்ற பாடங்களிலும் நாங்கள் தன்னார்வலர்களாக பங்கு கொள்கிறோம்.
ஆனால் பேராசை, லாபம் சம்பாதிப்பது, கோடீஸ்வரனாக ஆவது என்பதே வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்கும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டு, அரசியல் சட்ட திட்டத்துக்குட்பட்டு, வாழும் கலை சம்பந்தமான காரியங்களில் ஈடு படுவதென்பது போருக்கழைத்த மாதிரி.இதை நீங்கள் விளக்கி எங்களுக்கு வழி காட்டுவீர்களா?
ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: தொழில் திறமையும் போட்டியும் இருப்பது மிகவும் நல்லது..அவை சமூகத்துக்கு அவசியம். ஆனால் ஒரு விளையாட்டை அதன் சட்டப்படி விளையாடாமல் வெற்றி பெற முயற்சிப்பது அழிவில் கொண்டு விடும். ஆகவே ஒருவன் விரும்பியதை அடைய பேராசைப் படலாம்.அதற்காக தகாத வழியில் செல்லக் கூடாது. நான் சொல்வது புரிகிறதா?
நீ எவ்வளவு சாப்பிட முடியுமோ அவ்வளவு சாப்பிடலாம். நீ உண்ண விரும்புகிறாய். உண்ணலாம். ஆனால் “புலிமியா” வியாதி மாதிரி உண்ணக் கூடாது. இந்த வியாதியால் பீடிக்கப் பட்டவர்களால் சாப்பிடுவதை நிறுத்தவே முடியாது. சாப்பிட்டதை வாந்தி எடுத்து விட்டு உடனே மீண்டும் சாப்பிடுவார்கள்.
தொழில் திறமையை நான் எதிர்க்க வில்லை. கம்பெனிகள் அதிக அளவில் லாபம் ஈட்டுவதையும் நான் எதிர்க்க வில்லை. நேர்மையான வழியில் எவ்வளவு வேண்டுமானாலும் லாபம் சம்பாதிக் கலாம்.எவ்வளவுக் கெவ்வளவு லாபம் சம்பாதிக்கிறாயோ, அதில் ஒரு பகுதியை சமூக காரியங்க ளுக்காகச் செலவழிக்க வேண்டும். நீ அப்படிச் செய்தால், உன் தொழில் நன்றாக நடக்கும்.மேலும் மேலும் வளரும்.வெகு சீக்கிரமாக சிகரத்தைத் தொட்டு வேகமாக கீழே விழுவது நல்லதல்ல. கடந்தசில வருடங்களில் பலர் அதை அனுபவித்திருக்கிறார்கள்.இன்றைய தொழிலதிபர்கள் அதை அறிவார்கள்.