உனக்குள் நீ தொந்தரவு இல்லாமல் இருந்தால், மற்றவர்களும் உன்னுடன் தொந்திரவின்றி இருப்பார்கள்..



ஏப்ரல் 6, 2012 – இந்தோனேஷியா – பாலி

திருப்தியும், சந்தோஷமும் மிக முக்கியம்.மற்றவைகள் வரும், போகும். நாம் இந்த கிரகத்திற்கு பல முறைகள் வந்திருக்கிறோம், மறுபடியும் வருவோம். வாழ்க்கை தொடரும் ஒன்று; அது வந்து போய் கொண்டு, வந்து போய்க் கொண்டிருக்கிறது.

கே: நான் என் மனநிலையை எப்போதும் எவ்வாறு உயர்வாக வைத்துக் கொள்வது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீ ஏன் அமைதி குலைந்து இருக்கிறாய் என்று நினைத்துப் பார், அது சிறு விஷயங்களுக்காகத்தான் என்றும் அது சரியாகிவிடும் என்பதையும் தெரிந்து கொள். ஆகவே, இவைகள் அனைத்தும் வந்து போவதைப் பார்த்து, எல்லாம் சரியாகும்போது, “இதனால் நாம் அமைதி இழக்கப் போவதில்லை” என்று நீ சொல்கிறாய்..நான் இதை விடப் பெரியவன். ‘ஆம்’!. மனதில் வெறும் அந்த எண்ணம் மட்டும்தான் – நான் இதை விடப் பெரியவன்.அப்போது உன் மனநிலை மேலே உயர்ந்து விடுகிறது. ஆகவே நான் உடலில்லை; உடல் சதா சர்வ காலமும் பலவிதமான மாறுதல்களைக் கடந்துகொண்டிருக்கிறது. சில சமயங்களில் நான் சோர்வுட னிருக்கிறேன், சில சமயங்களில் தெம்புடன் இருக்கிறேன்.நான் உடலை விடப் பெரியவன். மனம் உடலினுள் இருப்பதாக மக்கள் எண்ணுகிறார்கள், இது தவறு, உடல் மனதினுள் இருக்கிறது.

மனம் ஒரு மெழுகு வத்தி போன்றது, அதில் ஒரு திரி உள்ளது, அதன் மேல் ஒரு ஜோதி இருக்கிறது.மெழுகு வத்தியை ஒரு மூடியால் மூடினால், அதில் பிராண வாயு உள்ள வரைதான் அது எரியும்.அதே மாதிரி, நீ ஒருவரை அறையில் வைத்து அதை மூடிவிட்டால், அந்த அறையில் பிராண வாயு உள்ள வரைதான் அவர் உயிருடன் இருப்பார். ஆகவே, மனம் பிராண வாயுவில், பிரஞையில் வாழும் ஜோதி போன்றது. ஆக, முதலில், உடல், பின்னர் மனம், அதனால் மனம் மிகப் பெரியது. இதை நினைவில் வைத்திருக்கும்போது – அதாவது, மனம் ஒரு ஒளிப் பிழம்பாக இருக்கும்போது – அது மிகப் பெரியதாக இருக்கிறது, அப்போது நிம்மதி இருக்கிறது. இருந்தும், உன்னை ஏதாவது தொந்திரவு செய்யும் போது, நன்கு மூச்சு விடு (சுதர்சன கிரியாவைக் குறிப்பிட்டு) வேகமான மூச்சுடனும், பாஸ்த்ரிகாவுடனும் அது நன்றாகி விடுகிறது.

கே: குருஜி, ஏதனால் உறவுகள் நம் சுதந்திரத்தைப் பறித்துவிடுகின்றன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உறவுகளில் அறிவு நுட்பம் இருப்பின், அது சுதந்திரத்தைப் பறிப்பதில்லை.அறிவு நுட்பம் இல்லாதபோது, சுதந்திரம் இல்லை.சுதந்திரத்தை அளிப்பது அல்லது பறிப்பதோ உறவு இல்லை. அது அறிவு நுட்ப பற்றா குறையே.

கே: அன்புள்ள குருஜி, என்னுடைய கடமை என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உன்னுடைய இருதயத்தைக் கேள்.உன்னுடைய இருதயம் உன் கடமை என்னவென்று சொல்லும்.

கே: ஜெய் குருதேவ், நம் வாழ்விலுள்ள கேடுகள் கூட கிருபைதானா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: பரந்த நோக்குடன் நீ பார்த்தால், உனக்கு வேதனையைத் தந்த நிகழ்ச்சிகள் உனக்கு ஆழ்ந்த உணர்வைத் தந்து, உன்னை முதிர்ச்சியடைந்தவனாக்கியது என்பதை நீ கவனிப்பாய். ஆக, வேதனை தரும் நிகழ்ச்சி உனக்கு ஆழ்ந்த உணர்வையும், அறிவு முதிர்ச்சியையும் தருகிறது.நீ சந்தோஷமில்லாமல் இருக்கும்போதெல்லாம் நீ சரணடைந்து விடவேண்டும். வழக்கமாக, நீ கோபமாக இருக்கும்போது ‘நான் விட்டு விடுகிறேன்’ என்று நீ சொல்கிறாய்.

ஆகவே, நீ சநதோஷமில்லாமல் இருக்கையில் அனைத்தையும் விட்டுவிடும் தன்மையைக் கொண்டு, சந்தோஷமாக இருக்கையில் சேவை செய்யும் தன்மையைப் பெற்றிருக்க வேண்டும். சந்தோஷத்தில் சேவை, சந்தோஷமற்று இருக்கையில் பற்றருத்தல்.

கே: குருஜி, நான் உலகில் பெரிய அளவில் மாற்றத்தை உண்டுபண்ண ஆசைப்படுகிறேன். அந்த மாற்றத்தை கண்டுபிடிக்கும் வழியை நான் எவ்வாறு கண்டுபிடிப்பது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இந்த உத்வேகமுள்ளவர்கள் உலகில் பெரிய மாற்றத்தை உண்டுபண்ண வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன். என்னிடம் வாருங்கள், உங்களை நிறைய வேலை செய்யக் கூடிய பல இடங்களுக்கு அனுப்புகிறேன். உங்களுக்கு செய்யும் முறை முன்னதாகவே தயாராக உள்ளது. இன்னொரு முப்பது வருஷங்கள் எடுக்கக் கூடிய, அடியிலிருந்து செய்ய வேண்டிய வேலையை, நீங்கள் செய்ய வேண்டாம்.தயார் நிலையிலுள்ள இடத்தில் இங்கிருந்து குதித்து அதை வேறொரு நிலைக்கு எடுத்துச் செல்லுங்கள். ‘நான் ஏதாவது செய்ய வேண்டும்’ என்பது ஒன்று, ஆனால் மற்றொன்று, உலகிற்குச் செய்ய வேண்டியதை நாம் செய்ய வேண்டியதென்பது.

நான் ஒரு மாறுதலை செய்ய ஆசைபடுகிறேன் என்பது, உலகில் நாம் மாற்றத்தை உண்டு பண்ண வேண்டும் என்பதிலிருந்து மாறுபட்டது.உலகிற்குச் செய்ய வேண்டியதை நாம் எல்லோரும் செய்வோம். நமக்கு இந்த உத்வேகம் இருக்க வேண்டும்.

கே: அன்புள்ள குருஜி, பயம் என்னை நிறைய தொந்திரவு செய்கிறது, என்ன செய்வது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நான் இங்கு இருக்கையில் ஏன் பயப்பட வேண்டும்?நீ என்னைச் சார்ந்தவன், நான் உன்னைச் சார்ந்தவன்.நீ தனியாக ஒருவரும் இல்லாமலிருப்பதாக எண்ணும் போதுதான் நீ பயப்படுகிறாய்.தனிமையை எண்ணி, தொடர்பற்று இருக்கும்போதுதான் பயம் இருக்கிறது. பயம் என்பது தலை கீழாக நிற்கும் அன்பாகும். யோசிக்காதீர்கள், சில உஜ்ஜாயி பிராணாயாமம் செய்து, சத்சங்கத்தில் கலந்து கொள்ளுங்கள், பயந்த நிலை மாறிவிடும்.

கே: குருஜி, நான் காமத்திற்கு அடிமையாகியிருக்கிறேன். அதில் எனக்கு சுய கட்டுப்பாடே இல்லை. நான் கடும் முயற்சி செய்கிறேன், இருந்தும் என்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உங்களுக்கு நிறைய வேலை இல்லை என்று நினைக்கிறன்  உங்களுக்கு நிறைய வேலை இருந்து, நீங்கள் கடினமாக உழைத்து, சோர்ந்து படுக்கையில் விழுந்தால், படுத்தவுடனே நீங்கள் தூங்கி விடுவீர்கள். உங்களுக்கு வெட்டியான நேரம் நிறைய இருந்து அல்லது நீங்கள் மிதமிஞ்சி சாப்பிடும் போதுதான் இந்த சிந்தனைகளும், அடிமைத் தனமும் வரக்கூடும். அது எப்போதுமே அதிக உணவிற்கும், அதிகமாக காமத்திற்கு சம்பந்த பட்டது.

கே: ஆன்மீகப் பாதையில், திருமணம் செய்து கொண்டு, குழந்தைகள் பெற்றுக் கொள்வது நல்லதில்லையா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இல்லை, நீ திருமணம் செய்துகொண்டு, குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம். அதனால்தான், தனித்துள்ள் பெண்களும், பிரும்மசாரிகளும், அவர்கள் பெயர்களைப் பதிவு செய்து ஒரு நாள் சுயம்வரத்தை வைத்துக் கொள்ளலாம் என்று நான் ஸ்ரீ ஸ்ரீ மாட்ரிமொனி என்ற தனிப் பிரிவை ஆரம்பித்துள்ளேன். அப்போது நீங்கள் யாரை கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று தேர்ந்தெடுக்கலாம். நம்மிடம் அது முன்னமேயே உள்ளது, சிறிது வளரச் செய்ய வேண்டும். யாராவது சிறிது கவனம் செலுத்த வேண்டும்; பொருத்தம் பார்ப்பதில் கை தேர்ந்த யாராவது.

கே: குருஜி, இத்தனை வருடங்களாகியும் நான் இன்னும் போராடிக்கொண்டிருக்கிறேன், ஏன்? நான் உங்களை நேசிக்கிறேன்!

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள், இருந்தும் போராடிக் கொண்டிருக்கிறீர்கள். எதற்காகத் போராடிக் கொண்டிருக்கிறீர்கள்? பணத்திற்காக என்றால், உட்கார்ந்து பகல் சொப்பனம் காணாமல், கடினமாக உழைக்கணும். ஒரு வியாபாரம் ஒத்துவரவில்லையென்றால், இன்னொன்றை தேர்ந்தெடுத்து அதைச் செய்யணும். இரண்டுடன் மட்டும்தான் நீங்கள் போராடமுடியும், வேலை அல்லது உறவு.ஆகவே, நீங்கள் அவைகளை மேலும் மேலும் ஏற்றுக் கொள்ள முயலுகிறீர்கள் ஆனால் உங்கள் மனம் வேண்டாமென்கிறது.உங்கள் அறிவினால்தான் நீங்கள் தாக்குப் பிடித்து, உயிர் பிழத்திருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்

நான் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறேன் எனபதைக் கவனிக்கிறீர்களா? எப்படியோ நீங்கள் சிலவற்றை செய்ய வைக்கிறீர்கள். ஆகவே, உங்களுக்கு ஒன்றும் வேலை செய்யவில்லை என்று நினைக்க வேண்டாம். அது உண்மை என்று எனக்குத் தோன்றவில்லை. மூன்றாவது விஷயம் உடல் நிலையாக இருக்கலாம். நான்காவது என்றில்லை. வாழும் கலை அமைப்பில் இருப்பது நீங்கள் இந்த மூன்றையும் சமாளிக்க எப்போதும் உதவுகிறது. வெட்டியாக உட்கார்ந்து,
அதிசயங்கள் நடப்பதைப் பற்றி மட்டும் சொப்பனம் கண்டுகொண்டிருக்க வேண்டாம். அதிசயங்கள் நடக்கின்றன, ஆனால் அதற்கென்று நீங்கள் ஆசைப்பட்டால் அவை பின்னால் போய்விடும். இயற்கை நீங்கள் சுறுசுறுப்புடன் இருக்க ஆசைப்படுகிறது.“என்னுடைய லாட்டரி சீட்டுக்கு சில எண்களைக் கொடுங்கள்” என்று சிலர் என்னைக் கேட்டிருக்கிறார்கள். நீங்கள் ஒன்றும் செய்யாமலிருக்க எனக்கு லாட்டரி விழ நான் ஆசைப்படுகிறேன். சதா சர்வ காலமும் சாதனைடையும் சில சேவைகளையும் செய்யுங்கள், வேறு வழியில்லை. முதலில், வாழ்வில் உங்களுக்கு என்ன வேண்டுமென்று நீங்கள் முடிவு செய்ய வேண்டும். எதனுடன் போராடுகிறீர்கள்? பணத்துடன்? பணம் என்பது எல்லோரிடமும் எப்போதுமே குறைந்திருக்கும் ஒன்று என்பது உங்களுக்குத் தெரியும். எப்போதுமே!

உதாரணத்திற்கு, பணக்கார தேசம், இந்த கிரகத்தில் சர்வ வல்லமை பெற்ற அமெரிக்கா, அது பெரும் கடனில் உள்ளது பல கோடிக்கணக்கான டாலர் கடனில். பெரிய நிறுவனங்களை எடுத்துக்கொள்ளுங்கள்; அவற்றில் பல கடனில் இருக்கின்றன.பணக்காரனாகிவிட்டால், நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கிறது. அதே சமயம், ஏழைகள் சிலர் அறநிலயத்திற்கு நன்கொடை அளிக்கிறார்கள், ஏழைகள் சேவை செய்ய நேரம் ஒதுக்குகிறார்கள், பிரமிப்பூட்டுகிறது. அவ்வளவு மிகுதியை அவர்கள் உணர்கிறார்கள்.

இந்தியாவில், ஒரு நாள் ஒருவர் என்னிடம் வந்தார்.அவருக்கு ஒரு கடை உள்ளது, அவருக்கென்று ஒரு பெட்டிக் கடை, அவர் இரண்டு கிரவுண்டை அவர் பேரில் பெற்றுள்ளார். ஆகவே அவர் எனக்கு ஒரு கிரவுண்டை கொடுக்க முன்வந்தார். “நான் இதை உங்களுக்குக் கொடுக்க ஆசைப்படுகிறேன்” என்று பிடிவாதமாக சொன்னார்.

அவர் குடும்பத்துடன், மனைவி, தாயாருடன் வந்து,” எனக்கு இரண்டு கிரவுண்டு உள்ளது, உங்களுக்கு ஒன்று வழங்கி மற்றொன்றை வைத்துக் கொள்கிறேன்.” என்றார். கிரவுண்டு மிகுந்த விலையுயர்ந்த இடத்தில் உள்ளது, அவருக்கு அதிலிருந்து மிகப் பெரிய தொகை கிடைக்கக் கூடும். ஆனால், அம்மனிதரின் மனதைப் பாருங்கள். சரி, நான் எடுத்துக் கொள்கிறேன் ஆனால் அது உங்களுடைய பெயரில்தான் இருக்கும்” என்றேன்.நீங்கள் எனக்காக வைத்துக்கொண்டு அதில் ஒரு கடை கட்டிக்கொள்ள வேண்டும். மற்றொன்றை விற்று அந்த பணத்தில் வியாபாரம் செய்ய வேண்டும்” நான் அதை எடுத்துக்கொள்ள முடியாது என்று சொல்ல முடியவில்லை ஏனெனில் அவர் வருத்தப்படுவார், ஆகையால், “சரி அது என்னுடையது ஆனால் இது உங்கள் பெயரில் இருக்கும், நீங்களே அதை வைத்துக்கொள்ள வேண்டும்” என்றேன். அம்மனிதரின் விசாலமான மனதைப் பாருங்கள். இன்னொரு நாள், ஒரு ஏழைப் பெண்மணி, அவள் பெற்றிருந்த ஒரு தங்க சங்கிலியுடன் வந்தார்.நான் காரில் போய்க்கொண்டிருந்தேன், அவர் ஓடி வந்து என்னிடம் ஒரு கவரைக் கொடுக்கிறார். வழக்கமாக, மக்கள், பிரச்சினைகள் எழுதப்பட்ட கவரைத்தான் என்னிடம் கொடுப்பார்கள். ஆகையால் நான் அந்த கவரைப் பெற்றுக் கொண்டேன், அதில் தங்கச் சங்கிலியைப் பார்த்தேன். அப்போது நான் சிலரை அனுப்பி அந்த அம்மையாரை கண்டுபிடித்து, குருஜி அவர் ஆசிகளை அனுப்பியுள்ளார் என்று சொல்லி அந்த தங்க செயினை திருப்பி கொடுக்கச் சொன்னேன். உங்களுக்குத் தெரியுமா, 

எங்கள் இருபத்தைந்தாவது ஆண்டின்போது ஒரு அழகான நிகழ்ச்சி நடந்தது. கடைசி நாளன்று நான் படிக்கட்டிலிருந்து வந்தபோது, ஒரு சிறுவன் கண்ணீருடன் என்னிடம் வந்து ஒரு கவரைக் கொடுத்தான். நான் அதை வாங்கிக் கொண்டேன், அதில் 5000 ரூபாய் இருந்த்து. நான் அந்த சிறுவனைப் பார்த்து, “நீ என்ன செய்கிறாய்?” என்று கேட்டேன். அவன் கூலி வேலை செய்வதாக சொன்னான். கவரில் இருந்த பணம் அவனது இரண்டு மாத சம்பளம், “தயவு சிது இதை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றான் அவன்.“என்னுடைய வாழ்க்கை எவ்வளவு மாறியுள்ளது என்று நான் சொல்லவே முடியாது. தயவு செய்து இதை வாங்கிக்கொள்ளுங்கள்” என்றான் அவன். நான் அதிலிருந்து 100 ரூபாய் மட்டும் எடுத்துக்கொண்டு 4900 ரூபாயைத் திருப்பிக் கொடுத்தேன். இந்த 100 ரூபாய் எனக்கு விலை மதிப்பற்றது தெரியுமா, இது போதும் என்று நான் அவனிடம் சொன்னேன். நான் இதை எடுத்துக் கொள்கிறேன்.அவன் இரண்டு மாத சம்பளம், கூலி வேலை செய்யும் ஒருவன் வந்து எனக்குக் கொடுக்கிறான். மக்களுக்கு அவ்வளவு விசாலமான மனம் உள்ளது. 

நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், நீங்களும் மிகுதியை உணரவேண்டும். மிகுதியை உணர நீங்கள் பெரிய பணக்காரராக இருக்க வேண்டாம். உண்மையில்,நிறைய பணக்காரர்கள் மிகுதியை உணர்வதில்லை, குறைப்படுகிறார்கள்.அவர்கள் தாராளமாக இல்லை. ஆனால் ஏழைகள் தாராளமாக இருக்கிறார்கள், அந்த உணர்வு, குணம் உள்ளது. ஒரு நாள் நீங்கள் மிகப் பணக்காரனாகி சேவை செய்ய ஆரம்பிப்பீர்கள் என்று நினைக்காதீர்கள், இல்லை, அவ்வாறில்லை. எந்த நிலையிலும் நீங்கள் மிகுதியை உணரலாம். மிகுதியை நீங்கள் உணர ஆரம்பிக்கும்போதே,நிலைமை நன்றாக ஆவதை நீங்கள் பார்ப்பீர்கள், புரிந்த்தா! அது போன்றே, உறவு பற்றி நீங்கள் கவலையுற வேண்டாம், தளர்ந்து இருங்கள், மக்களுடனான உங்கள் உறவு மேன்மையடைந்து நன்றாக ஆவதை நீங்கள் காணலாம்.

நீங்கள் ஒரு அட்டை போல ஒருவரிடம் உறவில் ஒட்டிக்கொண்டு அரித்துக் கொண்டிருந்தால், நீங்கள் என்னதான் நல்ல வார்த்தைகளைப் பேசினாலும், உங்களை சமாளிக்க முடியாமல் அந்த மனிதர் உங்களை விட்டு ஓடிவிடுவார். அன்பைக் காட்டுவது என்பது ஒரு அம்சம், மற்றொன்று அதை எவ்வாறு கையாண்டு, அதை பெறுவது என்பதுமாகும். அதற்குத் தேவை மனமுள்ள, நன்கு அறிந்த ஒருவன்தான். உடனே, அந்த நட்ததையை ஒவ்வொருவரிடமும் எதிர்பார்க்காதீர்கள்..
நீங்கள் உங்களிடமே தொந்திரவில்லாமல் இருக்க வேண்டும்.  நீங்கள் உங்களிடம் தொந்திரவில்லாமல் இருந்தால், மற்றவர்கள் உங்களிடம் தொந்திரவில்லாமல் இருப்பார்கள்.

கே: குருஜி, நான் உங்களிடம் பூரணமாக சரணாகதி அடைய விரும்புகிறேன்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இல்லவே இல்லை, அதைச் செய்யவே செய்யாதீர்கள்..ஏன் நீங்கள் சரணாகதி அடைய விரும்புகிறீர்கள்? ஏன் நீங்கள் சரணாகதியடைய வேண்டும்? அவசியமில்லை.நிம்மதியாக இருங்கள். நீங்கள் சரணடைவதென்பது உங்களுக்கும் எனக்கும் பெரிய வேலை; தலை வலி.நீங்கள் சரணடைய வேண்டாம், சும்மா நிம்மதியாக இருங்கள்.நீங்கள் ஏன் சரணடைய வேண்டும்?உங்கள் இருதயம், மனம், ஆத்மாவுடன்? ஒரு விதத்திலுமில்லை, அவை முன்னமேயே எனக்குச் சொந்தமானது. அனைத்தும் எனக்குச் சொந்தமானது.“ஓ! நீ என் இருதயத்தை திருடினாய்” என்று யாரோ பாடிக்கொண்டிருந்தார். எனக்குச் முன்னமேயே சொந்தமான ஒன்றை நான் ஏன் திருட வேண்டும்? நான் ஏன் உன் இருதயத்தைத் திருட வேண்டும்? இந்த கிரகத்தில் உள்ள அனைவரும் எனக்கு முன்னமேயே சொந்தமானவர்கள், நான் திருட வேண்டியதில்லை, நீங்களும் சரணாகதி யடைய வேண்டிய தில்லை. நீங்கள் முன்னமேயே எனக்குச் சொந்தமானவர். ஆகவே, நிம்மதியாக இருங்கள். உங்கள் தலையில் நிறைய எதிர்மறைகளின் சுமை இருக்கும்போது சரணாகதி என்ற சொல் உதவுகிறது. உங்களிடம் எதிர்மறையோ அல்லது வெறுப்போ இருக்கையில் அதை சமர்ப்பித்துவிடுங்கள். நீங்கள் எந்த நற்குணங்களையோ அல்லது நல்லது ஒன்றையோ எனக்குச் சமர்ப்பிக்க வேண்டாம், ஏனெனில் அவைகள் முன்னமேயே என்னுடையவைகள். எதிர்மறைகள் எதுவும் என்னுடையவைகள் அல்ல, உன்னிடம் அவைகள் இருந்தால், அவைகளை நீக்கிவிடுங்கள்.