நம்முடைய உணர்வுகள் மிக பழைமையானது ………


ஏப்ரல், 5, 2012 - பாலி

நாம் பெருங்கடலைப் பார்க்கும்போது அதன் அலைகள்  எப்படி நிற்காமல் வந்து கொண்டே இருக்கின்றன. அது சலிப்படை வதே இல்லை. பறவைகள் மீண்டும் மீண்டும் அதே பாடலைப் பாடுகின்றன. அவைகள் சலிப்படைவதே இல்லை. தங்கள் வாழ்நாள் முழுவதும் பறவைகள் ஒவ்வொரு நாளும் காலை வேளையில் பாடுகின்றன. அவை சலிப்படை வதில்லை. இந்த மனிதர்கள் தான் "ஐயோ  மீண்டும் அதே தானா?"என்று சலிப்படைகிறோம்.நாம் ஏன் சலிப்படை கிறோம் என்றால் நமக்கிருக்கும் ஞாபக சக்தியினால் தான். 

நீங்கள்  முன்பு என்ன செய்தீர்கள் என்பது உங்கள்  நினைவில் இருப்பதனால் தான் நீங்கள் சலிப்படைகிறீர்கள். ஞாபகம் என்பது ஒரு வரம்.அதே நேரத்தில் அது ஒரு சாபமும் கூட நீங்கள் சலிப்படைவதனால் தான் வித்தியாசமான புதுமையான ஏதோ ஒன்றின் அவசியத்தை உணர்கின்றீர்கள் படைப்புகள் உருவாவது அப்படித்தான். நீங்கள் இறுதியான ஒன்றினைத் தேடுகிறீர்கள்.இல்லையென்றால் நீங்களும் மிருகங்களைப் போல் ஒரே வேலையை தினமும் செய்துகொண்டிருப்பீர்கள். ஆனால் உங்களுக்கு சலிப்பு ஏற்படுவதனால் உங்களால் அப்படிச்செய்ய முடியவில்லை. இல்லையா? 

இந்த அர்த்தத்தில் பார்க்கும்போது சலிப்பு என்பது ஒரு வரம். சலிப்பு ஏற்படுவதனால் தான்  நீங்கள் மேலே சென்று முன்னோக்கிப் பார்க்கிறீர்கள். உங்களுக்குள் ஒரு தேடல் உண்டாகி நீங்கள் மேலே எழுகிறீர்கள். ஆனால் அதே சமயம் அது ஒரு சாபம் ஏனென்றால் அது உங்களை ஒரு இடத்தில் நிலையாக இருக்க விடாது. உங்களுக்குள் நிலையாக இருக்க விடாது. மனம் என்பது ஒரு இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எந்த வித குறிக்கோளும் இன்றி தாவிக்கொண்டிருக்கும். நீங்கள்எல்லாவற்றிலும் சலிப்படைவீர்கள் உங்களால் எதையும் அனுபவிக்க முடியாது. நான் சொல்வது புரிகிறதா?  

ஞானத்திற்கு வழி காட்டும் போது சலிப்பு ஒரு வரமாகிறது. ஏமாற்றம், மன அழுத்தம் போன்ற வற்றிற்கு வழி காட்டும் போது அது சாபமாகிறது. சலிப்பு நம்மை அழைத்துச் செல்லும் இருவேறு பாதைகள் இவைதான். சலிப்படைவதனால் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாமல் ஏமாற்றமும் மன அழுத்தமும் அடைகிறீர்கள் அதே  பாதையில் செல்கிறீர்கள். இல்லையென்றால் சலிப்படை வதனால்  நீங்கள் விழித் தெழுந்து தேடலைத் துவங்குகிறீர்கள். நீங்கள் மேலே சென்று உங்களுக்குள்ளே என்றும் புதிதாக இருக்கும்.

நான் என்னும் உங்கள் தன்மையை உணர்கிறீர்கள்.நம்முள் இருக்கும் நான் என்பது புதியது.
நாம் வெளியே மேலோட்டத்தில் இருப்பதில் சலிப்படைவதனால் தான் நம்முள்ளே ஆழமாகச் செல்ல முடிகிறது.நான் சொல்வது புரிகிறதா? 

காதல் வயப்பட்டிருப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படுவது இல்லை. நம் இதயத்திற்கு சலிப்பு
என்பது தெரியாது. ஆனால் நம் அறிவிற்கு தான் சலிப்பு என்றால் என்ன வென்று
தெரியும்.ஆனால் வாழ்க்கையில் மனம் அறிவு இரண்டுமே அவசியம். நாம் மனம் அறிவு இரண்டையும்சம நிலையில் வைக்க பழக வேண்டும். அதுவே யோக நிலை. மனம் அறிவு இரண்டையும்சம நிலையில் வைத்திருப்பதுதான் ஆன்மிகம் ஆகும். குறிப்பாக வாழ்க்கையில்தோல்வி அடைந்துவிட்டோம் என்று நினைப்பவர்களுக்கு இது அவசியம்.

தோல்வியடைந்ததாக நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் விழித் தெழுங்கள். அதனால் என்ன? வாழ்க்கை என்பது முடிவில்லாதது. ஒரு வருடத்திற்கு 365  நாட்கள் உள்ளன. உங்கள் வாழ்வில் எத்தனையோ வருடங்கள் உள்ளன. ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு  நீங்கள் வீணாகவும் தோல்விஅடைந்து விட்டதாகவும்  உணர்ந்தால் கவலைப்படாதீர்கள். இதுபோல் பல ஜென்மங்கள் நாம்இங்கே வந்திருக்கிறோம். நம் ஆன்மா என்பது மிகவும் பழமையானது. 

பௌர்ணமி நிலவைப் பாருங்கள் ஒரு பௌர்ணமி அன்று மேகமூட்டமாகவும் நிலவொளி இல்லாமலும்இருந்தால் நிலவு உடனே ஏமாற்றம் அடைகிறதா? ஒரு பௌர்ணமி அன்று நிலவைப் பார்க்க முடியாவிட்டால் என்ன?  நிலவு இன்னமும் அங்கேதான்  இருக்கிறது.அதே போல் உங்களுக்குள் முழுமையான ஆற்றலும் தெய்வீகமும் இருக்கின்றது. அது ஒருநாள் வெளிப்பட வில்லை என்றால் கவலை வேண்டாம். உங்களிடம் எல்லா நல்ல குணங்களும் உள்ளன. சில குறிப்பிட்ட நாட்களில் சில குணங்கள் வெளிப்படவில்லை என்றால் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நீங்களே குறை சொல்லிக்கொள்ளாதீர்கள்.உங்களைப் பற்றி அதிகம் ஆராய்ச்சி செய்யவும் வேண்டாம். நான் என்ன சொல்கிறேன் என்று புரிகிறதா? நாம் மிகவும் வருத்தப்பட்டு நிலைகுலைந்து போகும் அளவிற்கு நம்மைப்பற்றி ஆய்வு செய்கிறோம். நாம் நம்மிடமே அவ்வளவு கடுமையாக நடந்து கொள்கிறோம்.கவலை வேண்டாம். எத்தனையோ பிறவிகளில்
ஒரு பிறவி வீணானால் தான் என்ன?


நான் இதனை மிகவும் வருத்தப்படு மோசமான நிலையில் இருப்பவர்களுக்கு சொல்கிறேன். அனைவருக்கும் நான் சொன்னதாக தவறான பொருள் கொள்ள வேண்டாம்.குருஜி இந்த பிறவி வீணானால் பரவாயில்லை என்று சொன்னார். நான் எல்லா பயிற்சிகளையும் மறந்து விட்டு குடித்துகும்மாளமிட போகிறேன் என்று சொல்ல வேண்டாம். 

நான் இதனை மிகவும் அவநம்பிக்கையடைந்து தங்களை பற்றி மிகவும் மோசமாக நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு சொல்கிறேன்.நான் அவர்களுக்கு சொல்கிறேன். கவலை வேண்டாம். விழித்தெழுங்கள்.பல ஆண்டுகள் வீணாகி விட்டன. கவலை வேண்டாம் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். 

நாம் கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கும் போது தான் எல்லா கவலைகளும் உண்டாகின்றன. நீங்கள்நடந்து கொண்டிருக்கும் போது உங்கள் தலை பின்புறம் திரும்பியிருந்தால் அதுவே
கவலை ஆகிறது. தலையைத் திருப்பி முன்னோக்கிப் பாருங்கள். பிறகு எப்போதும் பிரகாசமாக இருக்கும். உங்கள் தலை திரும்பி இருந்தால் கவலை,கவலை,கவலைதான். அதை விட்டுவிட்டு மேலேசெல்லுங்கள்.

கேள்வி: குருஜி, எனக்கும் உங்களுக்கும் ஒரு ஆணித்தரமான தொடர்பு உள்ளதாக நான் கருதுகிறேன். இருந்தும் நான் உங்களை நேரில் கண்டு ஆசி பெறுவது அவசியமா?

ஸ்ரீ ஸ்ரீ  ரவிசங்கர்: இல்லை,அவசியமில்லை.ஆனால் உங்கள் கேள்வியில் இருந்து உங்களுக்கு ஏதோஒரு உணர்வு  இருப்பதாகவும் காண வேண்டும் என்பது போலவும்  தோன்றுகிறது. எப்படியானாலும் இன்று நீங்கள் இங்கே இருக்கிறபடியால் நாம் நம் எண்ணங்களை பரிமாறி கொள்ளலாம்.  

கேள்வி: குருஜி, ஒருவர் தாம் எந்த பாதையில் சென்றாலும் தர்மத்தை கடைபிடிப்பது அவசியமா? தர்மம் என்பது நாம் செய்யும் தொழிலை பொறுத்தா அல்லது நம் நோக்கத்தை பொறுத்ததா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்:  உங்கள் கடமையை பொருத்து உங்கள் தர்மம் நிச்சயிக்க படுகிறது. 
நீங்கள் உங்கள் கடமையாக எதை நினைகிறீர்களோ அதுவே உங்கள் தர்மம் ஆகிறது. நீங்கள்
அந்த பாதையில் செல்லும் பொழுது தானாகவே தர்மம் உங்களை வந்தடையும்.


கேள்வி: குருஜி, ப்ரானாவும் சுவாசமும் எப்படி சம்மந்தபடுகிறது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: சுவாசம் உங்கள்  praanaavai  மேம்படுத்துகிறது. பரானா என்பது நம் வாழ்வின் உந்துதல் ஆகும். சுவாசமும் ப்ரானாவும் மிக நெருங்கிய உறவை கொண்டதாகும்.

கேள்வி: குருஜி, எனக்கு சரியான துணையை எப்படி தேடிகொள்வது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இதை  நீங்கள் ஒரு அனுபவசாலியிடம் கேட்க வேண்டும். எனக்கு அனுபவம் இல்லை.யார் ஒருவருக்கு சரியான துணை அமையாமல் மறுபடியும் தேடி பின்னர் சரியான துணையை தேர்ந்தெடுத்து வாழ்கிறார்களோ அவர்களிடம் இதை கேட்டு நீங்கள் தெரிந்து
கொண்டு எனக்கும் கூறுங்கள்.

முதலில் உங்களுக்கு ஒரு சரியான வாழ்க்கை துணை வேண்டும். சரி, உங்களுக்கு கிடக்கிறது என்றுவைத்துகொள்வோம் அவர்களும் ஒரு சரியான துணை வேண்டும் என்று நினைப்பார்கள். நீங்களஅவர்களுக்கு ஒரு நல்ல துணையா? இது ஒரு மிக பெரிய கேள்வி. அவர்கள் நீங்கள் சரியானதுணை இல்லை என்று நினைகலாமல்லவா?


கேள்வி:
குருஜி, மறுபிறவி உண்டென்றால் ஒருவர் இந்த  பூமியில் தான் பிறவி எடுப்பார்களா அல்லது எங்கு வேண்டுமானாலும் பிறவி எடுப்பார்களா? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: பூமியில் மட்டும் தான்.