முயற்சிகள் சிறிதாயிருப்பின் பலன் உண்டு....


ஏப்ரல் 1, 2012 - சிங்கப்பூர்



நீங்கள் மெழுகுவர்த்தியை தலைகீழாக திருப்பும் போது,சுடர் மேல்நோக்கியே தான் இருக்கிறது. வாழ்க்கையிலும் கூட, பல சம்பவங்கள் வரும் அங்கே உங்களுடைய உற்சாகம் கீழே இறங்கி விடும். உங்களுடைய ஆன்மா கீழே செல்கிறது. அந்த நேரத்தில் ஞாபகத்தில் கொள்ளுங்கள்" நான் மெழுகுவர்த்தி போல மற்றும் நான் அதிலிருந்து மேலே வருவேன்,என் ஆனமாவையும் உற்சாகத்தையும் எதுவும் தடுக்க முடியாது."அது போல நகர்ந்து செல்லுங்கள். வாழ்க்கை சக்தி எப்பொழுதும் மேல் நோக்கியே செல்கிறது. அதனால் தான் இந்து மற்றும் புத்த மத சடங்குகளில் யார் ஒருவர் வந்தாலும் ஆரத்தி எடுப்பார்கள். ஒரு விளக்கு பற்ற வைத்து "ஒரு விளக்கை போல் இரு, உங்களுடைய வாழ்க்கை ஞானம் மற்றும் இறைத்தன்மையை சுற்றி எப்பொழுதும் மேல் நோக்கியோ செல்லட்டும்" என்று விளக்கை சுற்றி வந்து சொல்வார்கள். பிறகு நெற்றியில் சிறிது கும்குமம் இட்டு "எப்பொழுதும் ஞானம் உங்களோடு இருக்கட்டும்." என்று சொல்வார்கள். சிறந்த பரிசு விவேகம் மற்றதெல்லாம் வரும் போகும்.

கேள்வி: நமக்கு இன்னும் முப்பது வருட வாழ்க்கை உள்ளது, ஆனால் அது கண் இமைக்கும் நேரத்தில் போய்விடும். அது வரைக்கும் நாம் இங்கு இருக்கிறோம். நமது வாழ்க்கைக்கு எதாவது ஒரு அர்த்தம் இருக்க வேண்டும். நான் ஏதாவது செய்ய வேண்டும்.அதில் முழுமை அடைய வேண்டும். இன்னும் நான் அந்த செயலை செய்ய வில்லை. தேடிக் கொண்டு தான் இருக்கிறேன்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நன்று, நீ சீக்கிரம் செய்வாய். நீ தியான செய்யும் போது அமைதியை உணர்ந்தாயா? அது தான் முக்கியம், நாம் அந்த உள் அமைதியிலே நிலைப் பட்டு இருக்க வேண்டும். சுற்றி இருப்பவர்களுக்கு நன்மையையே செய்ய வேண்டும். நாம் கொஞ்சம் சேவை செய்ய வேண்டும்.

கேள்வி: அன்பிற்கும் நம்பிக்கைக்கும் உரிய குருஜி, 2012 ஆம் ஆண்டை பற்றி கூறுங்களேன். ஒருவருக்கு என்னென்ன தகுதிகள் இந்த புதிய பூமியில் நுழைவதற்கு. இருக்க முடியும்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: பூமி அமெரிக்க திரைப் படங்களில் மட்டுமே காணமல் போகும், நிஜத்தில் அல்ல. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன வேனில் இது புது வருடம் நிறைய மக்கள் ஆன்மீகத்தில் ஈடுபடுவார்கள். மேலும் அவர்கள் மனித தன்மையை அடைவார்கள். போட்டி பொறமை குற்றம் எல்லாம் குறையும். மக்கள் அன்பானவர்களாகவும் ஆன்மீகத் தன்மை உடையவர்களாகவும் இருப்பார்கள்.இது தான் நடக்கும். சீனக் நாட்காட்டியில் இது நாக வருடம். அனுகூல மான வருடமாக கருதப் படுகிறது. இந்திய நாட்காட்டியில் இது நந்தா வருடம். அதாவது ஆனந்தம். 2012 நல்ல வருடம். நீங்கள் புதிய வருடத்திற்குள் நுழைய வேண்டாம், நீங்கள் அதில் தான் இருக்கிறீர்கள்.

கேள்வி: நாம் எப்படி கடைமையும் எதிர்பார்ப்பையும் வேறுபடுத்துவது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: கடமை என்பது உனது மனது சொல்லும். இது தான் நான் செய்ய வேண்டும் என்பதை உணர்வாய். எதிர்பார்ப்பு என்பது மற்றவர்கள் நீ செய்ய வேண்டும் என நினைப்பது. இரண்டையும் சமமாக கருத வேண்டும். சில சமயம் எதிர் பார்ப்பு பூர்த்தி செய்யப்படும், ஆனால் உன் கடமையின் மீது அதிக அக்கறை எடுக்க வேண்டும்.

கேள்வி: நான் தினமும் 45 நிமிடம் ப்ரனயமாவும் க்ரியா பயிற்சியை செய்கிறேன் மற்றும் அதை அப்படியே தொடரவா அல்லது ஆழமாக செல்வதற்கு எனக்கு நானே அமைதி கொள்ள முயற்சி செய்யவா மற்றும் உங்களுடன் இசைந்து செல்லவா. இன்னும் அதிக ஆழம் செல்ல நான் என்ன செய்ய வேண்டும்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நான்கு முதல் ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஒரு முது நிலை பயிற்சி செய்வது நல்லது. அது உன்னுடைய தியானத்தை ஊக்குவிக்கும். குறைந்த பட்சம் வருடத்திற்கு ஒருமுறை அமைதி பயிற்சியை செய்யுங்கள். மகிழ்வுந்தை (car ) புதுப்பிப்பது போல, மூன்று நாட்கள் அமைதி, தியானம் மற்றும் ஆசனாஸ் மூலம் உங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மாவை புதுப் பித்து கொள்ளுங்கள்.

கேள்வி: இரு முனை நிலை குறை பாடு உள்ள மக்களுக்கு சுதர்சன் கிரியா கொடுக்கலாமா அல்லது அமைதி பயிற்சி செய்யலாமா ?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நான் .அமைதி பயிற்சி செய்ய நான் ஆலோசை கொடுக்க மாட்டேன் ஆனால் அவர்கள் அடிப்படை பயிற்சியில் சுதர்சன் கிரியாவை தவிர மற்ற எல்லாவற்றையும் செய்யலாம். சாதரன் தியானம், யோகா மற்றும் பிரணாயாம அவர்களுக்கு மிகவும் நல்லது. அவர்கள் ஸ்ரீ ஸ்ரீ யோகா செய்ய வேண்டும்.

கேள்வி: தொழில் மற்றும் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க ஆசைப்பட்டால், நாம் என்ன செய்ய வேண்டும்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உங்களுடைய முயற்சியை இட்டு ஆசீர்வாதத்தை கேளுங்கள். ஆசீர்வாதத்தினால் நிறைய விஷயங்கள் உங்களுக்கு கிடைக்கும். ஆசீர்வாதம் மற்றும் முயற்சி இரண்டும் முக்கியமானது. சில முயற்சிகள்.சிறுமுயற்சிகள் எடுப்பவர்களுக்கு கூட ஆசீர்வாதம் வருகிறது. இது சூரியன் வரும்போது நாம் சன்னலை திறந்து வைப்பது போன்றது.சூரியன் உங்கள் வீட்டுக்குள் வரவேண்டுமெனில் நீங்கள் திரைச் சீலையை விலக்கி வைக்கவேண்டும். ஆனால் நாடு இரவில் திரைச் சீலையை விலக்கி வைத்து சூரியனை வரச்சொன்னால், அது வராது. நீங்கள் காத்திருக்க வேண்டும்.

கேள்வி: எல்லா முயற்சிகளிலும் தோல்வி அடைந்த பின் உலகத்திற்காக போலிப் புன்னகையுடன் மகிழ்ச்சியாக இருப்பதாக காட்ட வேண்டுமா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: எல்லாவற்றிலும் தோல்வி அடைந்து விட்டதாக எப்பொழுதும் நினைக்காதீர்கள். உங்கள் எண்ணங்களின் செயலாக்கம் தோல்வியடைந்ததால் நீங்கள் தோல்வி அடைந்தீர்கள். நீங்கள் அதிக ஆவலோ அதிக ஆசையோ கொண்டிருந்தால் சரியான எண்ணங்கள் மனதில் தோன்றாது.எதிர்மறை சிந்தனையை கொண்டுவராது.நீங்கள் தியானம் செய்யும் போது உங்கள் எண்ணங்கள் நேர்மறையாகவும் மற்றும் இயல்பானதாகவும் இருக்கும். சம்ஸ்கிருததில் ஒரு பழமொழி உண்டு, சத்வ மற்றும் உள்ளிருக்கும் ஒத்திசைவினால் வெற்றி நிகழ்கிறது, உங்கள் வசதிகளால் அல்லது ஆயுதத்தினால் அல்ல.குறைந்த பட்சம் உங்கள் புன்னகையை இழக்காதீர்கள். உங்கள் புன்னகையை இழப்பதினால் இரண்டு தோல்வியாகின்றன. ஒரு தோல்வி நிகழ்ந்தது, பொருட்படுத்த வேண்டாம். உங்களுடைய இயல்பான புன்னகையை இழக்க வேண்டாம்.

கேள்வி: எங்களை போன்ற 20 முதல் 30 வயதுடைய இளைஞர்களுக்கு நமது பொருள் இலக்கை நோக்கிய நம் வேலை மற்றும் உழைப்பு உறுதிப்பாட்டோடு ஆண்மேத்தை எப்படி பயிற்சிக்கு கொண்டு வருவது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அவைகள் ஒன்றுகொன்று முரண் பட்டவை அல்ல. அவை ஒன்றுக் கொன்று முரண்பட்டவை என நினைக்க வேண்டாம். உங்கள் அறத்தின்படி வியாபாரம் செய்யலாம். உங்களுடைய வேலையிடத்தில் மிகவும் நேர்மையாக நீங்கள் வேலை செய்யலாம் மற்றும் நீங்கள் இன்னும் போக முடியும். புத்திசாலித் தனத்துடன் மற்று திறமையுடன் உங்களுடைய வாழ்கையில் நடந்து செல்லலாம் . ஆசிய கண்டம் ஆன்மீக உச்சத்தில் இருந்த போது, செல்வச் செழிப்போடு இருந்தது. கி பி 1200 இந்திய ஸ்ரீ லங்கா மற்றும் சிங்கப்பூர் ஆகியன உலக நாடுகளின் உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதி இங்கே இருந்தது. அது ஆன்மிகம் உச்சத்தில் இருந்த காலம். இரு நூறு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து சென்ற பயணி makulay ஆகியோர் எழுதியிருக்கி றார்கள். "நான் இந்தியாவில் மற்றும் ஆசியாவில் நீல அகலத்திற்கு பயணம் செய்திருக்கிறோம், ஒரு பிச்சைகாரர், ஒரு நோயாளி மற்றும் ஒரு ஏழையை கூட பார்க்க வில்லை. ஆன்மிகம் உச்சத்தில் இருக்கும் போது, மக்களும் தரமான வாழ்க்கை பெற்றிருந்தனர்.

கேள்வி: பிரணாவிர்க்கும் விளிப்புனர்விற்க்கும் உள்ள தொடர்பு என்ன ?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உடல் மற்றும் மனம் போல அவைகள் இனைந்து உள்ளன. அவைகள் வேறு வேறானவை இருப்பினும் ஒன்றுகொன்று தொடர்புடையவை. உடல், மனம், பிராணா, மூச்சு மற்றும் விழிப்புணர்வு ஆகியவை ஐந்து அடுக்குகளாக வகைப் படுத்தலாம்.

கேள்வி: நமது உடம்பில் உள்ள விழிப்புணர்வின் இருக்கை என்று அழைக்கப் படுகிற ஆத்மா ராம் வழியின் மகத்துவம் என்ன மற்றும் அது ஒருவரின் மிகச்சிறிய வடிவமா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உங்களில் எதனை பேருக்கு "ராம்" என்பதின் அர்த்தம் தெரியும். ஆங்கில வார்த்தை "Rays " என்பது "Rasmi " என்ற சம்ஸ்கிருத வார்தையிருந்து வந்தது. ரா என்றால் ஒளி, கதிர்கள். மா என்றால் நான் என்று அர்த்தம். ராம் என்றால் ஒருவரில் உள்ள ஒளி என்று அர்த்தம். தசரத என்றால் பத்து ரதங்கள், பத்து உணர்சிகள், அவைகள் ஐந்து அறிதலால் மற்றும் ஐந்து செயல்களால். ஆகையால் உங்கள் உடல், உணர்வுளால் ஆனா ஐந்து உறுப்புகள் மற்றும் எண்ணங்களால் ஆனா ஐந்து உறுப்புகளினால் ஆனா ரதம். கௌசல்யா என்றால் திறமைமிக்க என்று பொருள். பத்து ரதங்கலின் உடல் (கண், காது, மூக்கு போன்றன) திறனுடன் ஒருங்கி ணைக்கப்பட்ட சுயம், ஆழத்தினுள் உள்ள ஆன்மா, உணர்வுகளுக்கு அப்பால் அதுதான் "ராமா". ஆகையால் ராமாயண தினமும் நமது உடலில் நடக்கிறது. இன்று ராம நவமி (ராமர் பிறந்த நாள்)

கேள்வி: ஒரு குழந்தை அவளுக்கெதிரான குறிப்பிட்ட நடத்தைக்காக அவருடைய பெற்றோரை எப்படி மன்னிக்கிறது? பெற்றோர்கள் எந்த அறநெறி அதிகாரத்தை கொண்டிருக்கலாம்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: கவனியுங்கள், நல்ல கல்வி அல்லது நல்ல வாய்புகள் கிடைக்காததனால் அவர்கள் சில தவறுகளை செய்திருக்கலாம். அவர்களுடைய மனதை, உணர்வுகளை மற்றும் உடலை எப்படி நிர்வகிப்பது என்று தெரியாமல் இருக்கலாம். அவர்கள் வாழ்கையில் அப்படி செல்வது துரதிர்ஷ்டமானது. ஆகையால் அவர்களை மன்னித்து விடுங்கள், நீங்கள் அமைதியாக இருப்பீர்கள். ஆன்மீகப் பாதையில் செல்வதற்கோ அல்லது ஞானதிலோ இருந்திருந்தால் அவர்கள் அப்படி செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் அதை அவர்களின் அறியாமையால் செய்திருப்பார்கள். இதை அறிந்து அவர்களை மன்னித்துவிடுங்கள், உங்கள் மனம் அமைதியாக இருக்கும். இல்லையெனில், உங்களுக்கு யாரேனும் மீது எல்லா நேரங்களிலும் வெறுப்பு இருக்குமானால் பிறகு உங்கள் மனம் இறுக்கமாக இருக்கும் மற்றும் நச்சுப் பொருள்கள் உருவாகும். நீங்கள் எதிர்மறையாக உணர்ந்தால் உங்கள் மனதில் நச்சுப் பொருட்கள் அதிகமாகும். இந்த நச்சுப் பொருட்கள் பல் நோய்களுக்கு காரணம், புற்று நோய்க்கும் கூட. ஆகையால், நமது மனதை எப்பொழுதும் சுதந்திரமாக வைத்திருக்க வேண்டும்.அதனால் தான் எல்லோரையும் மன்னித்து விடுங்கள், பிறகு நாம் அமைதியாக இருக்கலாம்.

கேள்வி: வாழ்கையில் எல்லா வெறுப்பு மற்றும் எல்லா சவால்களையும் தாண்டி எப்படி புன்னகையோடு இருப்பது.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் அப்படி உணர்ந்தால் என்னிடம் கொடுத்து விடுங்கள். நான் இருக்கிறேன். எப்பொழுதெல்லாம் சவால்களை சந்திக்கிறாயோ என்னை ஞாபகத்தில் கொள்ளுங்கள். உங்களுடைய சவால்களை என்னிடம் விட்டு விடுங்கள், நீங்கள் தனியாக இருப்பதாக உணருங்கள்.அந்த பிரச்சனைகளை கடந்து பயணம் செய்கிறீர்கள், நான் உத்திரவாதம் தர முடியும்.தனியாக நீங்கள் கடினமாக கருதலாம்.எல்லாம் சரியாக இருந்தால் ஒவ்வொருவரும் புன்னகைகிறார்கள் விஷயங்கள் தவறாகப் போது சிரிக்கும் திறனே உங்களுடைய உண்மையான சாதனை ஆகும்.எல்லாம் தவறாக நடந்தும் புன்னகையுடன் இருந்தால் நீங்கள் ஒரு வாழும் கலை உறுப்பினர். நீங்கள் நன்றாக ஞானத்தில் ஊரியிருக்கிறீர்கள்

கேள்வி: உங்களை எப்படி தத்துவமாக உணரமுடியும்? 24 /7 நான் உங்களுடன் எப்படி இருப்பது, உங்களை அனுபவிப்பது மற்றும் நேசிப்பது? இந்த வாழ் நாள் வாய்ப்பை நழுவ விட விருப்ப மில்லை.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அமைதியாக இரு. அன்பு செயல் அல்ல. நீங்கள் யாரோ ஒருவரை நேசிக்க முயற்சி செய்ய முடியாது. அன்பு அங்கெ இருக்கிறது என்று ஓய்வாக உணருங்கள்.

கேள்வி: புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற ஆரோக்யமற்ற பழக்கங்களுக்கு ஏன் அடிமை ஆகிறார்கள்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அதன் மூலம் ஏதோ ஒரு ஆனந்தம் கிடைக்கும் என்று நீங்கள் உணருகிறீர்கள்,அதனால் தான் நீங்கள் அதற்க்கு அடிமை ஆகிறீர்கள்.பழக்கத்திலிருந்து விடு படுவதற்கு தியானம் மிகவும் உதவியாக இருக்கும்.

கேள்வி: மனித நாகரீகத்தின் கடைசி பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இல்லை. நான் சொன்னது போல் திரைப்படங்களில் மட்டும் தான்.

கேள்வி: மறப்பதற்கும் மற்றும் மன்னிபதற்க்கும் சரியான வழி என்ன ?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: என்னிடம் கொடுத்து விடுங்கள், விட்டு விடுங்கள். யாருக்காவது மன்னிக்க முடியாதது அல்லது ஏதாவது மனதை பாதிப்பது ஏதாவது இருந்தால், எல்லாவற்றையும் எடுத்து கொள்வதற்கு நான் இருக்கிறேன். உங்களுடைய பிரிச்சனைகளையும் சவால்களையும் எடுத்துக் கொள்வதற்காகவே குரு இங்கே இருக்கிறார். ஆகவே இங்கே தள்ளிவிடுங்கள்.

கேள்வி: வாழ்க்கையின் தோற்றம் பற்றி பேசுங்கள்

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நாம் நேர்கோட்டில் சிந்திக்கும் போது, எங்கோ தொடங்கி எங்கோ முடியும் என்று நினைக்கிறோம். ஆனால் நாம் கோல வடிவமாக யோசிக்க வேண்டும். டென்னிஸ் பந்தின் ஆரம்பப் புள்ளி எங்கே என்று சொல்ல முடியுமா? இல்லை.உங்களால் டென்னிஸ் பந்தின் ஆரம்பப் புள்ளி கண்டு பிடிக்க முடியாத மோது இந்த பிரபஞ்சத்தின் ஆரம்பத்தை ஏன் கண்டு பிடிக்க முயற்சி செய்கிறீர்கள்? கணிதம் தவறு. நேர்கோட்டு சிந்தனை மற்றும் கோளவடிவ சிந்தனை என்று இரண்டு வகை உண்டு. இந்த உலகத்திற்கு ஆரம்பமும் இல்லை முடிவும் இல்லை மற்றும் இதுதான் வேத கருத்து. வேத கருத்துப்படி மூன்று விசயங்கள் பெரியவை. பிரபஞ்சம், தெய்வீகம் மற்றும் வாழ்க்கை. அவைகளுக்கு ஆரம்பமும் இல்லை முடிவும் இல்லை. அவைகள் சுழற்சியில் சென்று கொண்டிருக்கும். இது தான் விருப்பமான மற்றும் மிகவும் அறிவியல் விருப்பமான புரிதல்.

கேள்வி: ஆன்மீகப் பாதையில் நடப்பதற்கு உங்களின் ஆசீர்வாதம் வேண்டும்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நான் ஆசீர்வாதம் வழங்குவதில் கருமி அல்ல. நான் மிகவும் தாரளமாக இருக்கிறேன். உங்கள் எல்லோருக்கும் ஆசீர்வாதம் இருக்கிறது. நான் ஒன்று சொல்ல வேண்டும், ஒவ்வொரு வருடங்களிலும் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளுங்கள் குறைந்த பட்சம் நான்கு அல்லது ஐந்து நாட்கள் வந்து உற்கார்ந்து தியானத்தில் ஆழமாக செல்லுங்கள். முது நிலை பயிற்சி செய்யுங்கள். நீங்கள் சாதாரணமா நேசித்து அனுபவிப்பீர்கள். உங்களுடைய ஆன்மீக வளர்சிக்காக வருடத்தில் ஐந்து நாட்களை உங்கள் நாட்காட்டியில் நீங்கள் குறித்துக் கொள்ளவேண்டும். இன்று நாம் என்ன கற்றுக் கொண்டோமோ அது வலுவடைந்து நம்மிலே இருக்கும்.

கேள்வி: இடை வயது பிரச்சனை. ஐம்பதுக்கு மேல் வாழ்வதற்கு எப்படி விருப்பம் கொள்வது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: என்னைப் பாருங்கள். எனக்கு நீங்கள் வேண்டும், வந்து என்னுடன் இருங்கள். நாம் உலகம் சுற்றி செல்வோம் மற்றும் நிறைய வேலைகளை நாம் செய்ய முடியும். எனக்கு நிறைய பேர் வேண்டும். நீங்கள் ஐம்பது மேல் எனில் மற்றும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எல்லாம் முடித்து விட்டீர்கள், உங்கள் குழைந்தைகளை குடியமர்த்தி விட்டீர்கள் அப்படி எனில் பிறகு வாருங்கள். நீங்கள் குடியமர வில்லைஎனினும் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் விடுப்பு கொடுத்து பயணம் செய்யுங்கள். நமக்கு நிறைய ஆசிரியர்கள் வேண்டும். எப்படி அமைதியாகவும் மையத்திலும் இருப்பது என்று நீங்கள் சென்று சொல்லி கொடுக்கலாம். எந்த ஒரு சிறிய ஞானம் உங்களுக்கு கிடைத்தாலும் மற்றவர்களுக்கு நீங்கள் அதை வழங்கலாம். இன்னும் கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது மற்றும் நீங்கள் மிக ஆழமாக செல்ல முடியும். ஆமாம் மிகுந்த அதிசயங்கள் இருக்கும். வாழும் கலையில் அதற்க்கு எந்த பஞ்சமும் இருக்காது.

கேள்வி: வாழ்க்கை சலித்து மற்றும் ஊக்கம் மற்று இருப்பதாக கண்டால், நாம் என்ன செய்வது.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: மிகுந்த வேலையில் இருங்கள்.இங்கே நமக்கு வாழும் கலை பயிற்சி மையம் இருக்கிறது எப்பொழுதும் நீங்கள் அங்கே சென்று ஒரு இரண்டு நிமிடங்கள் உட்கார முடியும். நாம் அந்த இடத்திற்கு தியானத்தின் மூலம் ஆற்றல் அளிப்போம், அங்கே யாரெனு ஒருவர் சென்று ஒரு இரண்டு நிமிடங்களுக்கு உட்கார்ந்தாள் அவர்கள் மேலே உயர்ந்தது போல் உணர்வார்கள்.

கேள்வி: குருஜி, எப்படி மன்னிப்பது என்று தயவு செய்து கூறுங்கள்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஒருவரை குற்றவாளி என்று அறியம்போது, விசாலமான கோணத்தில் இருந்து பாருங்கள். ஒருவர் குற்றவாளி ஆக இருக்கிறார் ஏனெனில் அவருக்கு அல்லது அவளுக்கு அவரே சாட்சியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஞானம் இல்லை, அவர்கள் அறியாமையில் இருக்கிறார்கள், அவர்களுடைய சொந்த இதயத்தில் அவர்களுக்கு காயம் மற்றும் வலி இருக்கிறது. ஞானத்தை பற்றி அறிந்து கொள்வதற்கு என்றும் வந்ததில்லை. ஆகையால் அவர்களின் மேல் கருணை கொள்ளுங்கள். ஓவ்வொரு குற்றவாளியின் உள்ளே பார்க்கும்பொழுது, உதவிக்காக அங்கே ஒரு சாட்சி அழுது கொண்டிருக்கிறேன், அவர்களை உங்களால் மன்னித்துவிட முடியும். இந்த காரணத்திற்க்காக நீங்கள் சிறைச் சாலைக்கு செல்லவேண்டும்.அங்கே இருக்கும் குற்றவாளிகளிடம் பேசுங்கள்.உண்மையில், நீங்கள் அவர்களின் மேல் கருணை கொள்வீர்கள். அவர்கள் செய்த எல்லா பாவத்தையும் மன்னித்து விடுவீர்கள். ஏழை மக்களை வலி நடத்தி செல்ல யாரும் இல்லை. வழிநடத்தல் இல்லை மற்றும் அன்பு இல்லை மற்றும் ஆகையால் அவர்கள் எல்லா தவறான செயலகளையும் செய்தார்கள்.

கேள்வி: சரி எது தவறு எது என்று நமக்கு தெரிகிறது. சரியானதை பயிற்சி செய்வது மிகவும் கடினமாக இருக்கிறது.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: எப்பொழுதும் இல்லை எனில், சிலநேரங்களில் ஆவது அதை செய்யுங்கள்.

கேள்வி: (பார்வையாளரிடமிருந்து செவிக்கு புலப்படாத கேள்வி)

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நாம் வேறுபட்டவர்கள் அல்ல. நான் உன்னில் பகுதி. நீங்கள் என்னில் பகுதி. நாம் எல்லோரும் ஒன்று மற்றும் பிணைக்கப்பட்டவர்கள் என்று உணரும்போது, சார்ந்திருத்தல் என்று ஒன்று இல்லை.என்னுடைய வலது கைக்கு உதவுவதற்கு இடது கையை சார்ந்திருக்கிறேன் என்று சொல்ல முடியாது.

கேள்வி: (பார்வையாளரிடமிருந்து செவிக்கு புலப்படாத கேள்வி).

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: பகுத்தறிவற்றது என்று நீங்கள் சொல்லகூடிய விசயங்களை உங்களால் கிரகித்துக் கொள்ளவோ அல்லது அதை தர்க்கத்திற்கு உற்படுத்தவோ முடியாது. தர்க்கம் எல்லைக் குற்பட்டது. எல்லையற்ற தர்க்கம் என்று எதுவும் இல்ல. தர்க்கம் என்பது நீங்கள் அறிந்த எதோ ஒன்று மற்றும் அதன் மூலமாக வேறொன்றை அறிய முயற்சி செய்வது. அதற்கென்று ஒரு இடம் இருக்கிறது. நீங்கள் தொலை காட்சி பார்க்கும் பொழுது, உங்கள் காதுகள் மிக முக்கியம், ஆனால் உங்களுடைய கண்களும் முக்கியமானது,அதற்க்கு மற்றொரு கோணம் உள்ளது. அறிவார்ந்த தர்க்கம் உங்களுடைய மூளைக்கு முக்கிய காரணம் மற்றும் அது மிக முக்கியமானது. கிழக்கில் தர்க்கம் தவறு என்று நாம் சொல்லவில்லை, ஆனால் தர்க்கம் முழுமையானது அல்ல என்று சொல்லியிருக்கிறோம். அது ஒரு பகுதி மட்டும் தான். மற்ற பகுதிகள் உணர்வுகள், உணர்ச்சிகள், புலனுணர்வுகள். அவையும் கூட அவற்றின் பகுதிகள். இரண்டும் முக்கியமானவை, இரண்டையும் எடுத்துக்கொண்டு நகர்ந்து செல்லுங்கள்.நீங்கள் இசையை கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது, நீங்கள் அறிவார்ந்து கவனிக்க முடியாது. இந்த வரி ஏன் பத்து தடவை திரும்ப வருகிறது என்று நீங்கள் கேட்க முடியாது. அந்த நேரத்தில் நீங்கள் அதனோடு இயைந்து பாய வேண்டும். நீங்கள் உட்கார்ந்து கணக்கு பார்த்துகொண்டிருக்கும் பொழுது யாரவது ஒரே கணக்கு பட்டியலை ஐந்து முறை திரும்ப கொடுத்தால் நீங்கள் கேட்க முடியும். ஆகையால் வாழ்க்கை ஒரு சிக்கலான விஷயம். அது நேரான கணக்கு அல்ல. வாழ்கையில் தர்க்கம் தாண்டி ஏதோ ஒன்று வேண்டும், மற்றும் வேறு வேறு

நேரங்களில் வேறு வேறு சவால்கள் அதை எதிர்கொள்ளுங்கள், அவைகள் வாழக்கையில் தன்னிச்சையாக வரும். தன்னிச்சையானதாக ஆக இருக்கவேண்டும் என்பதே வாழ்கையில் சூத்திரம்.

கேள்வி: நாம் தூசியை போன்று மிக முக்கியமானவர்கள் அல்ல என்று ஒரு புறம் நீங்கள் குறிப்பிட்டீர்கள் ஆனால் மற்றொரு புறம், உங்கள் வாழ்க்கை முழுவதும் திரும்பிப் பாருங்கள், சவால்களிலிருந்து எப்படி மீண்டு வந்தீர்கள். நம்மை வழிகாட்டும் கை அங்கே இருப்பதை பாருங்கள்,கேள்வி என்னவெனில், நாம் முக்கியமில்லாதவர் எனில், முதலிடத்தில் வழிகாட்டும் கைஏன் இருக்கிறது. அப்படி வழி காட்டும் கை இருக்குமெனில்,நாம் முக்கிய மில்லாதவர் என்று சொல்வதற்கு சமமா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஒரு வழிகாட்டும் கை இருக்கிறது என்று அறியும் வரை உண்மையில் நீ ஒரு முக்கியமில்லாத மனிதர். ஆனால், வழிகாட்டும் கை ஒன்று இருக்கிறது அறிந்த பின்னர் matrum நீங்கள் athil ஒரு பாகம் என உணர்ந்த பின்னர் நீங்கள் மிக முக்கியமானவராக ஆவீர்கள். நிலக்கரி மற்றும் வைரம் இரண்டும் ஒரே பொருளால் ஆனவை. நிலக்கரி அதனளவில் முக்கியத்துவமற்றது, ஆனால் அது வைரம் ஆகும் போது, அது மிகவும் மதிப்பு வாய்ந்ததாகிறது. உண்மை எப்பொழுதும் முரண்பாடானது.