ஞானம் ஒரு மிக பெரிய சுமை தாங்கி.....




2012
  10
April                      


10 ஏப்ரல் 2012 - தைவான்

நாம் அனைவரும் இந்த கிரகத்தில் குழந்தைகளாக வந்தோம். நம்மிடம் அபொழுது மகிழ்ச்சி சந்தோஷம், மற்றும் அனைவரையும் நம் சொந்தமாக காணும் உணர்வு இருந்தது இல்லையா? ஆனால் வளர வளர  நம்மிடம் அந்த மகிழ்ச்சியும், நேசமும், அனைவரிடமும் அன்பும் சிறிது சிறிதாக இழந்து  விட்டோம். என்னவாயிற்று? இதன் காரணத்தை நாம் அறிய வேண்டும்.மீண்டும் நாம் மனதளவில் குழந்தைகளாக மாற முயற்சிக்கலாமே?

நாம் பொதுவாக வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று கூறுவதற்கு தேங்காயை உதாரணமாக பயன்படுத்துவோம், தேங்காயைச் சுற்றிலும் உமி உள்ளது. அது வெகு உயரத்தில் இருந்து விழுந்தாலும் உடையாது. ஏனெனில் அதன் மேல் ஒரு மெத்தென்ற எந்த பாதிப்பையும் தாங்கும் தன்மை உள்ளது. எனவே நம் அணுகு முறை நட்பாகவும், அறிவு பூர்வமாகவும், மேலும் நம் வாழ்வை மன அழுத்தம் இன்றியும் வாழ்ந்தால்,அதுவே நமக்கு வாழ்வில் எந்த அதிர்ச்சியையும் பாதிப்பையும் தாங்கும் சுமை தாங்கி போல் விளங்கும். அனுபவ அறிவு ஒரு சிறந்த இடி தாங்கி.

நம் உடல் தேங்காயின் வெளி மட்டை போல் உறுதியாக இருக்க வேண்டும். நம் மனம் உள்ளே இருக்கும் அந்த மென்மையான  வெள்ளையான பருப்பு போலும், நம் உணர்வுகள் அதன் உள்ளே இருக்கும் இளநீர் போல் இனிமையாக வேண்டும். இதுவே வேறு மாதிரி இருந்தால் பிரச்சனை ஆகி விடும். நம் உடல் மென்மையாக, பலவீனமாக இருந்து, மனம் ஒரு உறுதியான மட்டை போல் இருந்தால்,எந்த உணர்வுகளும் இல்லாமல் எல்லாம் வறண்டு போய், வாழ்க்கை ஒரு சுமையாகிவிடும்.இந்த காரணத்தினால் தான் பலர் தற்கொலை முயற்சியிலும்,மன அழுத்தத்திலும் ஈடுபடுகிறார்கள் இல்லையா?அதனால் இந்த மதிப்பை உணர்ந்து ஒரு மாற்றத்தை நம்முள்ளேயும், நம் சமூகத்திலும், நம் குடும்பங்களிலும் கொண்டு வர வேண்டும்.

மதியம் நான் பத்திரிகையாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவர்கள் தைவான் நாடு அதன் பாரம்பர்யத்தை, கலாச்சாரத்தை இழந்து விட்டது என்றார்கள்.அவர்கள் கலாச்சாரத்தின் வேறை பிடித்துக்கொள்ள வேண்டும் என்றேன். தைவான் பாரம்பர்யம்
 மிக்க ஒரு நாடு. அதன் கலாசார மதிப்பு பேணி பாதுகாக்கப்பட வேண்டும். குறிப்பாக குடும்ப கலாசாரம் மிகவும் முக்கியம் .தனிமனித ஒழுக்கம் மிகவும் முக்கியமானது இல்லையா?

இந்த கலாச்சாரத்தை பலப்படுத்தவேண்டும், அதே சமயம் சக்திவாய்ந்த முன்னேற்றமும் தேவை, அதை தைவான் செய்து கொண்டுதான் இருக்கிறது. தைவான் ஒரு சிறந்த நாடு. மேலும் தைவானில் ஆர்வமிக்க தன்னார்வலர்கள் இருக்கிறார்கள்.

நம்முடைய (வாழும் கலை அமைப்பு) சர்வதேச திட்டங்கள் அனைத்திலும், எப்போதுமே
ஆர்வமும், சுறுசுறுப்பும், உற்சாகமும் கொண்ட தைவான் குழு எப்போதுமே இருக்கும. தைவான் மக்கள் உலகில் எங்கு சென்றாலும் பரிசு எடுத்துச்செல்வார்கள். தைவானியர்  ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு பரிசு கொண்டு செல்வார்கள். இந்த பரிசுகளை  பரிமாறி கொள்ளும் பண்பு மிகவும் உன்னதமானது மற்றும் பாரம்பர்யத்தின் தனிப்பட்ட பண்பாகும். நாம் எல்லா கலாச்சாரங்களிலும் உள்ள நல்ல மற்றும் மதிப்பு மிக்க பண்புகளை பின்பற்றி மேலும் பாதுகாக்க வேண்டும்.
நம் மனம் அமைதியாகவும், மன அழுத்தமில்லாமலும் இருந்தால் தான் இவற்றை செய்ய முடியும்.

புத்த பகவான் ,இந்தியாவில் நாற்பது ஆண்டுகள் பயணம் செய்தார். அவர் வெகு எளிதாக கூறினார், "நாம் தத்துவங்களை ஒரு பக்கம் வைத்து விட்டு ,ஒன்றைப் புரிந்து கொள்ள
வேண்டும்” அதாவது "துன்பம் உள்ளது, அத்துன்பத்தைத் துடைக்கும் வழியும் உள்ளது".
மனத்தின் உள்ளே துயர் நீங்கி அமைதியாக  வாழ வழி உள்ளது. இந்த செய்தி உலகளா
வியது  மற்றும் இதுவே நமக்கு இப்போது வேண்டும்.

நாம் அனைவரும் மன அழுத்தமில்லாத,வன்முறை இல்லாத சமுகத்தை உருவாக்க வேண்டும் அதற்கான வழி தியானமே ஆகும். பலமுறை நாம் தியானத்தில் அமரும்போது நம் மனம்
எல்லா  இடத்தும் செல்கிறது. இதற்கு  தான் யோகாவும்,சுதர்ஷன் கிரியா என்ற மூச்சு பயிற்சியும் நம் மனதை அமைதியாகவும், சாந்தமாகவும் இருக்க உதவுகிறது.

நம் மனம் சாந்தமாகவும்,அமைதியாகவும் இருந்து, நமக்கென்று எதுவுமே வேண்டாம் என்ற எண்ணம் வரும்போது, பிறரை ஆசிர்வதிக்கும் மகத்தான சக்தி நமக்கு கிடைகிறது.மனம்
உள்ளும் புறமும் எண்ணங்கள் அற்று தெளிவாக இருந்து, யாருக்காவது ஏதேனும் தேவைப்பட்டால், நீங்கள் உங்களின் ஆசியை அவர்களுக்கு  தரும் போது அவர்களுக்கு அவ்வெண்ணம் நிறைவேறும். ஆசிர்வதிப்பதற்கான பயிற்சிமுறை ஒன்று உள்ளது .நான்கு
அல்லது 5 நாட்கள் உள்ள இந்த பயிற்சி முடித்த பின் நீங்களும் பிறரை ஆசிர்வாதம் செய்ய முடியும்.



நான் உலகின் முன்னணி விஞ்ஞானி ஒருவரிடம் பேசினேன்.அவர் என்ன கூறினார் தெரியுமா? நான் முப்பது வருடங்களாக மேட்டர் என்ற ஒன்று இல்லை,என்பதை கண்டுபிடிக்கவே

முப்பது வருடங்கள் படித்திருக்கிறேன் என்றார். அவர் ஒரு குவாண்டம் இயற்பியல் நிபுணர்.
அவர் எங்கு பேசினாலும்,நீங்கள் புத்த மதத்தை போதிக்கிரீர்களா என்று கேட்கிறார்களாம். இப்போதெல்லாம் நான் சொற்பொழிவு ஆற்றும் போது மக்கள் நான் புத்த மத்தை அல்லது வேதாந்தத்தை பேசுவதாக நினைகிறார்கள்' என்றார். புத்த மதமும், வேதாந்தமும் ஒரே விஷயமான உள்ளுணர்வைப்பற்றியே பேசுகிறது, சிறிது வித்தியாசத்துடன்  அவ்வளவே .புத்த மதம் கூறும் வெறுமையும்,வேதாந்தம் கூறும் முழுமையும் ஒன்றே. அதனால் இவை எல்லாம் அதிர்வுகளே.இந்த அதிர்வுகள் மாறிக்கொண்டே இருக்கும். அவை நம் வாழ்கையையே மாற்றி விடும்.

இவை நமக்கு என்ன வேண்டுமோ அல்லது நாம் என்ன விரும்புகிறோமோ அதை நமக்கு கொடுக்க வல்லது. நம் மனம் பூரணமாக இருக்கும் போது நாம் மற்றவருக்கு பூரண
அமைதி கொடுக்க முடியும். எனவே இன்று நீங்கள் எல்லோரும் உங்கள் கவலை மற்றும் பிரச்சனைகளை விட்டு விடுங்கள், நான் உங்கள் கவலைகளை எடுத்துக் கொள்ள
வந்துள்ளேன். எனக்கு வேண்டிய தெல்லாம் நீங்கள் மகிழ்ச்சியாக  இருக்க வேண்டும்.

தினமும் நீங்கள் பத்து நிமிடம் தியானம் செய்தால் மனம் அமைதியடையும்.தனிப்பட்ட வளர்ச்சி ஒவ்வொருவருக்கும்  மிகவும் முக்கியம். எங்கு எப்படி இருந்தாலும், நாம் சமுகத்திற்கு சில சேவைகள் செய்ய வேண்டும். நம் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளலாம். எப்போது சிக்கலோ, கஷ்டமோ வரும் போது நீங்கள் தனியாக இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு வரும் துன்பங்களை புன்னகையுடன் கடந்து அதிலிருந்து மீள முடியும்.ஆமாம் நாம் நம் ஆன்மா, மனம், உடல் இவற்றை வலுவாக்கி, நம் உடன் இருக்கும் நம் மக்களுடன் நம் பிணைப்பை உறுதியாகவும்,வலுவாகவும் செய்ய வேண்டும். இதுவே வாழும் கலை ஆகும்.

வன்முறை இல்லா சமூகமும்,நோயில்லாத உடலும், குழப்பமில்லா மனமும்,தடையில்லாத அறிவாற்றலும்,அதிர்வுகளில்லாத நினைவும், குற்றமற்ற ஆத்மாவும் ஒவ்வொருவரின் 
பிறப்புரிமை ஆகும் .எனவே இன்று இப்போது உங்கள் குறைகளை என்னிடம் கொடுத்து
விட்டு நீங்கள் புன்னகையுடன் செல்லுங்கள்.

தைவான்,பொருளாதாரத்தில் வலுவான ஒரு
  சிறிய நாடு. இங்குள்ள அனைவரும் ஒரு சிறிய  முயற்சி மேற்கொண்டால் தைவானை மகிழ்ச்சியிலும், வலுவான நாடாக மாற்ற முடியும். நாம் தைவானை துக்கமில்லாத,வன்முறையில்லாத, தற்கொலையற்ற, குற்றமற்ற நாடாக நினைக்க முடியும். எனக்கு அப்படி ஒரு தைவானை பார்க்க வேண்டும் என்று ஆசை. இதுவே தைவானை பற்றி என் கனவு. நாம் அப்படி  ஒரு நிலையை அடுத்த இரண்டு வருடத்தில் அடைவோம் என்றால் அது தைவானுக்கு மிகவும் பொருத்தமான நிலையாகும். இதவே மற்ற நாடுகளுக்கு ஒரு முன் உதாரணமாக அமையும். உங்களுக்கு தெரியுமா உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடு பூட்டான்  ஆகும். அது ஒரு பெளத்த நாடு, மேலும் அங்குள்ள மக்கள் மிகவும் எளிமையாக வாழ்கிறார்கள். அங்குள்ள அனைவரும்  வன்முறையற்ற மகிழ்வான வாழ்வையே நம்புகிறார்கள். அதனாலேயே பூட்டான் மகிழ்ச்சியில் முதன்மையாக விளங்குகிறது. 

சமீபத்தில், சில நாட்களுக்கு முன்பு, மகிழ்ச்சியைப்பற்றி ஐக்கிய நாடுகளின் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது.மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) இருந்தால் மட்டும் பத்தாது, மொத்த  உள்நாட்டு மகிழ்ச்சியும் (GDH ) வேண்டும். உண்மையில் இந்த  ஐக்கிய நாடுகளின் கருத்தரங்கில் நான் கலந்து கொள்வதாக இருந்தது. பூட்டான் பிரதமர் என்னை அழைத்திருந்தார், முன்பே நான் இங்கு, மற்றும் தென் கிழக்கு நாடுகளான சிங்கப்பூர், பாலி மற்றும் தைவான் வருவதாக முன்பே  ஒத்து கொண்டதால் அதில் கலந்துகொள்ள இயலவில்லை. என் பயணத்தை ரத்து செய்யமுடியா விடிலும், இந்த நாடுகளுக்கு இதே செய்தியை தான் எடுத்துச் செல்கிறேன் என்று கூறினேன்.

எனவே இங்கு இப்போது நாம் அனைவரும் கூட்டாக அடுத்த இரண்டு வருடங்களில் எப்படி எல்லா மக்களையும் சென்றடைந்து அவர்களுக்கு மன அழுத்தத்தை போக்குவது பற்றியும் மகிழ்ச்சியாக இருப்பது பற்றியும்  கற்றுத்தர முடியும் என்று கனவு காண வேண்டும்.
பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், வீடுகளிலும் கொண்டாட்டங்களே இருக்க வேண்டும்.
வாழ்கையை ஒரு பரந்த கண்ணோட்டத்தில் பார்போம். நாம் வாழும்
  வாழ்க்கையோ?
எண்பது ஆண்டுகள், அதை மன அழுத்தத்தோடும், கவலையோடும் வாழ்வது நியாயமாகுமா? 
இந்த குறுகியகால வாழ்வில் நாமும்
  மகிழ்ச்சியாக இருந்து, மற்றவரையும் மகிழ்வித்து
வாழ வேண்டாமா? உங்களுக்கு இந்த எண்ணம் இல்லையா?

நாம் அனைவரும் இந்த கனவு கொள்வோம்....

எனவே இரண்டு விஷயங்கள், ஒன்று நாட்டுக்காகவோ, உலகுக்காகவோ ஒரு பெரிய கனவு. மற்றொன்று உங்கள் தனிப்பட்ட தேவை, ஆசை இரண்டுமே நிறைவேற்றப்படலாம். நீங்கள் உங்கள் பெரிய கனவில் கவனம் செலுத்தி, சிறிய கனவை என்னிடம் விட்டு விடுங்கள்.
சரியா?

இன்று நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து தியானம் செய்ததால், நாம் நம் ஒரு விருப்பத்தை கேட்கும்  உரிமை நமக்கு உள்ளது.இன்று நாம் உறங்க போகும் முன் ஒரு விருப்பத்தை மனதில் நினைத்து விட்டு உறங்கி விடலாம்.இனி, நாம் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் நேரம்  தியானம் செய்வதற்கும, சேவை செய்வதற்கும் ஒதுக்க  வேண்டும்.ஒரு மாதத்தில் குறைந்தது நான்கு மணி நேரமாவது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.மன அழுத்தமில்லாத வன்முறை இல்லாத தைவானை உருவாக்கும் விசாலமான எண்ணம் நம்மிடையே இருக்கிறது.

எனவே நாம் 15 ,20  பேர் குழுக்களாக சென்று மக்களை சந்தோஷமாக இருக்க உத்வேகப்படுத்த வேண்டும். நாம் தைவானில் ஒரு மகிழ்ச்சி அலையை உருவாக்குவோம்.

கேள்வி: குருஜி இன்று நான் இந்தக்கூடையில் என் கவலைகளை விட்டுவிட்டேன்,நாளை நான் எழுந்ததும் அது மறைந்துவிடுமா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீ உன் கவலைகளை இந்த கூடையில் விட்டு விட்டாய், அதை உன் மனதில் வைத்துக் கொள்ளாதே. எவ்வளவு நேரம்  ஆகும் என்று என்னால் கூற முடியாது . இன்று, அல்லது நாளை அல்லது 10 நாட்கள் அல்லது 12 மாதங்கள் ஆகலாம், ஆனால் கண்டிப்பாக உன் குறைகள் தீர்ந்து விடும்.

கேள்வி: நான் எப்படி உங்களைப்போல் ஆக முடியும்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீ குழந்தையாக இருந்த போது என்னை போல் இருந்தாய். நான் வளர மறுக்கும் ஒரு குழந்தை,உனக்குள்ளும் ஒரு குழந்தை உள்ளது,அதை உணர்ந்தால் போதும் .