தியானம் செய்த பின் மலரைப்போல, இலேசாக உணருவீர்கள்


21
2012
April
தியான ரகசியங்கள்- கலிபோர்னியா...

சப்தத்திலிருந்து நிசப்தத்திற்கும், அசைவிலிருந்து அசையாத்தன்மைக்கும், வரையறுக்கப்பட்ட அடையாளத்திலிருந்து, எல்லையில்லா விண்வெளியை உணருவதுமான நிலைக்கு செல்லும் பயணமே தியானம். 

நேற்றிரவு, தியான நிலையை அடைய ஐந்து வழிகளை பற்றிக் கூறினேன்.அதன் முக்கிய அம்சங்களை மீண்டும் பார்ப்போம்.முதலாவதாக உடல்உறுப்புகளைக்  கையாளுதல். யோகப் பயிற்சி, தாய்-சி இவையெல்லாம்,உடல் உறுப்புகளை விரிக்கவும், குறுக்கவும் செய்வதால்,
மனம் ஒரு விழிப்புணர்வு நிலையை அடைகிறது. அதை  தியானம் எனலாம். 

இரண்டாவதாக, மூச்சுப் பயிற்சி, ப்ராணாயமம் இவற்றின் மூலம் மனம் ஒரு நிசப்தமான நிலையை அடைகிறது. 

மூன்றாவதாக, ஐம்புலன்களின் உணர்வு நிலையால், மனம் ஒரு வெற்றிடமான, பரபரப்பற்ற, எண்ணங்களற்ற, அமைதியான,அகஅழகுடன் கூடிய நிலையை அடைகிறது. முற்றிலும்
ஈடுபட்டு லாலி பாப் அல்லது மிட்டாயோ, சுவைத்துக்கொண்டிருக்கும் ஒரு குழந்தையைப் பாருங்கள். அப்போது அக்குழந்தையிடம் " உன் பெயர் என்ன" என்று கேட்டால் பதில் வராது!
நூறு சதம் ஈடுபாட்டுடன் புலன் சார்ந்த அனுபவத்தில் இருப்பதும் ஒரு தியானமே. 

ஒரு ஓய்வு நாளில் படுத்துக் கொண்டு வானத்தையே பார்த்துக் கொண்டிருங்கள். எண்ணங்க
ளற்ற ஒரு நிசப்த நிலையை மனம் ஒரு க்ஷணம் அடையும்.  எங்கிருக்கிறீர்கள் என்பதே தெரியாது, னால் நீங்கள் யார், என்பதை அறிவீர்கள். எங்கும் மைய நிலையையும் எல்லையில்லா பரப்புவெளியையும் உணர்வீர்கள்.

வெட்ட வெளியைக் காண்பதில் லயித்திருக்கும் போது, வரையறை இல்லா விழிப்புணர்வு ஏற்படும். ஏனெனில் நமது மனம் வெறுமையானது, விழிப்புணர்வும் வெறுமையானது. இன்னிசையை அனுபவித்து கொண்டிருந்து விட்டு திடீரென்று அது நின்றால்,இசை ஒலிக்கா விடினும், எல்லையில்லாத மோன நிலையில் கரைந்து இருப்பதுபோன்று உணருவீர்கள்.யோக சாஸ்திரத்தில் இது ‘லய யோகா’ என்று அழைக்கப்படுகிறது. இது தியான நிலைக்கு அழைத்துச்செல்லும்.எந்த ஆச்சர்யமான அல்லது அதிசயத்தக்க நிலையும் இதே போன்ற உணர்வை அளிக்கும். இத்தகைய "வாவ்'' என்று அதிசயக்கத்தக்க நிலையை அடையும்
போது எண்ணங்கள் இல்லாத,  மனமே இல்லாதது போன்ற உணர்வைப்பெறுவீர்கள்.  

தொடுநிலை, வாசனை, காட்சி, ஒலி இவைகளும் உங்களை தியான நிலைக்கு அழைத்து செல்லலாம்.ஆனால் இவை எல்லாமே சரியான வழியில் திறமையுடன் செயல் படுத்தப்பட வேண்டும்.

மன உணர்ச்சிகளும் உங்களைத் தியான நிலைக்கு எடுத்துச்செல்லலாம்.நேர் மறையான உணர்ச்சிகள் மட்டுமின்றி எதிர்மறை உணர்ச்சிகளும் கூட இதை செய்யலாம். அதிர்ச்சியான ஒரு நிலையும் தியானத்திற்குக் கொண்டு செல்லலாம். ஆனால் இது ஒரு சிக்கலான நிலை. மிகுந்த அதிர்ச்சி நிலையில் நீங்கள் இனிமேல் பொறுக்க முடியாது என்ற  நம்பிக்கையற்ற நிலையை அடைந்து செயல் நிலையை துறந்து விடலாம்.அப்படிப்பட்ட மனமுறிவு அல்லது மனஅழுத்தம், அல்லது வன்முறை போன்றவற்றில் சறுக்கிவிடாமல் இருந்தால், அப்போது, இந்த மனமில்லா நிலையை உணரலாம். இத்தகைய நேர்மறை எதிர்மறை உணர்ச்சிகள் உங்களை மனமில்லா நிலைக்கு எடுத்து செல்லலாம். 

அடுத்து, அறிவாற்றல் தூண்டுதல் நிலை.ஞானம்,விழிப்புணர்வு நிலை இவற்றின் மூலம் தியான நிலையை அடையலாம்.இது ‘ஞான யோகா’ எனப்படும்.வானவெளி அருங்காட்சி சாலையில் நுழையும் முன்னும்,வெளிவந்த பின்னும் நீங்கள் வித்தியாசமாக உணருவீர்கள். ஏனெனில் இந்த பிரபஞ்சத்தின் சூழலில் உங்களை அங்கு காண்கிறீர்கள். நீங்கள் யார்? என்ன செய்கிறீர்கள்? எங்கு இருக்கிறீர்கள்? ஆழங்காண முடியாத எல்லையில்லாத இந்தப் பிரபஞ்சத்தில் எப்படி தொடர்புடையவராக இருக்கிறீர்கள்? 

நீங்கள் சக்திச் சொட்டுப் பெளதிகவியல் படித்திருந்தால் எல்லாமே அணுக்கள்,அலைக் கோவை, ஆற்றல் என்று தெரிந்து கொள்வீர்கள்.நீங்கள் சக்திச் சொட்டுப் பெளதிகவியலை நன்கு ஊன்றி பார்த்து, பின்னர் வேதாந்தம், தியானக்கலை யோக சாஸ்திரம் இவற்றை படித்தால் இரண்டிற்கு மிடையே உள்ள கருத்தைக் கவரும் ஒற்றுமைகளை அறிவீர்கள்.

இரண்டுமே ஒரே கருத்துமொழி என்பதை தெரிந்து கொள்வீர்கள். ஆதிசங்கரர்''காண்பதெல்லாம் மெய்யல்ல'' என்கிறார். தற்கால சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான டாக்டர் ஹான்ஸ் பீட்டர் டுர்ர் என்பவர் ''நான் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக பொருண்மை என்பது பற்றி படித்து வந்தேன். இறுதியில் அப்படி எதுவும் இல்லை என்பதை அறிந்துகொண்டேன். இல்லாத ஒன்றை இத்தனை ஆண்டுகளாக படித்து வந்தேன்!" என்கிறார். ஆக, அறிவாற்றல் மூலமாகவும் நீங்கள் தியான நிலையை அடையலாம். 

தியானத்தின் பயன்களைப் பற்றி உங்களுக்கு நான் எதுவும் கூறப்போவதில்லை. கூகிள் வலைத் தளத்தில் அவற்றை தெரிந்து கொள்ளலாம். பல அறிஞர்கள் நிறைய ஆராய்ச்சிகள் செய்து தியானத்தின் பயன்கள் என்ன என்று விரிவாகக் கூறியி ருக்கிறார்கள்.எந்த வகை தியானமும் பயனளிக்கும். ஆனால் அதன் ரஹசியம் என்ன? என்பதை அறிந்து கொள்ளவே நாம் ஆவலாக இருக்கிறோம். 

ரகசியங்கள் என்று எடுத்துக்கொண்டால் கீழை நாடுகளுக்கும் மேலை நாடுகளுக்கும் வேறுபாடு உள்ளது. மேலை நாடுகளில் எது வெட்கப்பட வேண்டிய விஷயமோ அது ரகசியமாக வைக்கப்  பட்டுள்ளது.கீழை நாடுகளில் எது புனிதமானதோ அது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. நான் வியப்பதிர்ச்சி தரக்கூடிய இந்த வேறுபாட்டைக் காண்கிறேன்.கீழை நாடுகளில் ஏதாவது ரகசியமாகக் கருதப்பட்டால் அது புனிதத்துவம் உடையது. மேலை நாடுகளில் ரகசியங்கள் வெட்கப்பட வேண்டிய குற்றங்களாகக்  கருதப்பட்டு, சமய குருமார்களிடம் முறை படத் தெரிவிக்கப்படுகிறது.ஆனால் எது உண்மையான ரகசியம் என்றால் ஒருவருக்கு அளிக்கப்படும் மந்திரம். அந்த சப்தம் மனதில் ரகசியமாக காக்கப்படுகிறது. 

அது ஏன் ரகசியமாக கருதப்படுகிறது? மந்திரம் என்பது விதை போன்றது. விதை ரகசியமாகவே முளைவிட்டு வளரும். மண்ணுக்கடியில் ஒரு வதை விதைத்து, அதை மண்ணிட்டு மூடிவிட்டால் அது முளைவிட்டு வளர்ந்து மரமாகும்.

தொன்மையான கோட்பாடுகளின் படி மந்திரம் என்பது ஒரு ஒலி. அது ரகசியமாக மனதில் வளருகிறது, அதாவது அது மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.எதை ரகசியமாக
வைத்துக் கொண்டு இருக்கிறீர்களோ அது உங்களை விட்டு நீங்காது. அது  உங்கள் அடிமனப் படிவங்களின் ஆழத்திற்கு உங்களை அழைத்துச்செல்லும். இதுவே குற்றங்களை முறைபடத் தெரிவிப்பதற்கு ஒரு காரணமும் ஆகும்.

ஏன் வெளிப்படையாக எதையும் தெரிவிக்கிறீர்கள்? அது உங்கள் மன ஆழத்திற்குச் செல்லாது.
ஒரு குற்றம் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டவுடன் அது உங்கள் மனதை விட்டு நீங்குகிறது. பின்னர் அது உங்கள் மனதை துன்புறுத்துவதில்லை. ஆனால் ஒருவருக்குத் தரப்பட்ட மந்திர சப்தம், அதிலும் ஆழ் தியான நிலையில் உள்ள, தியானத்தை நன்கு கற்றறிந்தவரால், தரப்படும் போது,அது மனதின் ஆழத்திற்க்கு செல்கிறது. கற்பவரிடம் " இதை உனக்குள் மாத்திரமே வைத்துக்கொள். இது உன் தனிப்பட்ட மந்திரம்;அது வளரட்டும்"என்று கூறி அளிக்கப்படுகிறது. இங்கு மந்திரத்தின் அர்த்தம் முக்கியமல்ல. அதன் அதிர்வு தான் முக்கியம். பொருளைப் புரிந்து கொள்வதை விட அதிர்வை உணருதல் முக்கியம். 

முற்காலத்தில் மந்திரத்தை அளிக்க, நான்கு நாட்கள் விழவாக கொண்டாடுவார்கள். ஒரு குழந்தைக்கு மந்திர தீக்ஷை அளிப்பதற்கு, உறவினர்களையும்,நண்பர்களையும், அழைப்பார்கள். குதிரை மேல் குழந்தையை ஏற்றி ஊர்வலமாக வருவார்கள். இது பழைமையான முறை. ஆன்மீகப் பயணம் என்பது புனிதமாகவும், தனிப்பட்டதாகவும், பெருமைக்குறியதாகவும் கருதப்பட்டது. ரகசிய ஒலியைக் கேட்டு அடைவது என்பது அம்மந்திரத்தின் புனிததன்மையால் பெருமைக்குறியதாக இருந்தது. 

தியானம் ஒரு மாறுபட்ட நிலையில் நிகழ்வது. உண்மையில் தியானம் என்பது  நிகழ்வது. உங்களால் அதை செய்ய முடியாது. அது நிகழ்வதற்கு உகந்த ஒரு சூழ்நிலையை உண்டாக்குவது மட்டுமே உங்களால் முடியும்.   

பதின்பருவம் எனப்படும் வாலிபப் பருவத்தில் மனம் அலைபாயத் துவங்குகிறது. வாலிபப் பருவத்திற்கு முன் அப்படி நடப்பதில்லை. நம் உடலில் நாளச் சுரப்பிகள் செயல்படத் துவங்குவதற்கு முன் அப்படி நடப்பதில்லை. ஒரு குழந்தையின் மனம் எப்போதும் ஏதோ
ஒன்றில் முழுவதும் ஈடுபட்டு அங்கேயே நிலைத்து நிற்கின்றது.  ஆனால் நாளச் சுரப்பிகள்
மேலும் மேலும் வேலை செய்ய துவங்கியவுடன் மனமானது அலைபாயவும் ஊஞ்சலாடவும் துவங்குகிறது. ஒருமுகப்படுத்தப்பட்ட கவனம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைகின்றது.   

பழங்காலத்தில்  இது நிகழ்வதற்கு முன்பே, அதாவது ஒருவர் வாலிபப் பருவத்தினை அடைவதற்கு முன்பே  யோகம், தியானம் போன்றவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தார். எனவே  மனம் இங்கும் அங்கும் அலைபாயும் வாலிபப் பருவம் முழுவதும்   மனதை எப்படி அடக்கிக் கையாளுவது  என்பதில் ஏற்கெனவே பயிற்சி பெற்று விடுகிறார். எட்டு அல்லது ஒன்பது வயதிலேயே இதைத் துவங்குவது மிகவும் நல்லது.   ஹார்மோன்களின் மாற்றங்கள் உடலில் நிகழத் துவங்குவதற்கு சற்று முந்தைய நேரம் தான்  யோகம், தியானம் போன்ற பயிற்சிகளைத் துவங்க மிகச் சரியான நேரம். உடல் மனம் இரண்டுமே தயாராக இருக்கும் நேரம்.   

இன்று எட்டு அல்லது ஒன்பது வயது குழந்தைகள்கூட அலைபாயும் மனத்தைக் கொண்டிரு க்கின்றனர். பல விஷயங்கள் குழந்தைகளை பாதிக்கின்றன.உணவு நம் மனதின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவது போலவே நம் சுற்றுச் சூழல், வாழ்க்கை முறை மற்றும் பல விஷயங்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் அவற்றின் பாதிப்பு மிகவும் சிறிய அளவில்தான் இருக்கும்.   

தியானம் என்பது நம் சக்தியை மேலெழுப்பி வெளியில் பரவச் செய்வதே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம் மனதை மேலெழுப்பி பரவ செய்வது. ஒலி இதனை செய்கிறது. ஒலி உங்களை மேலெழுப்பவும் உங்கள் மனசாட்சியினை சுருங்க வைக்கவும் வல்லது. எப்படி? நான் இப்போது உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். நீங்கள் வலியை அனுபவிக்கும் போதே ல்லாம் உங்களிடமிருந்து வெளிப்படும் ஒலி எது? "ஹா" மங்கோலியாவிலிருந்து tierra Del Fluego  வரை உலகம் முழுவதும் இதே ஒலிதான். ஒருவர் வலியிலிருக்கும்போது என்ன ஒலி எழுப்புவார் என்று நீங்கள் எங்கே சென்று யாரைக் கேட்டாலும் அவர்கள் "ஹா" என்று தான் சொல்வார்கள். வலியிலிருக்கும் எவரும் "ஹோ" என்று சொல்வதில்லை,ஆச்சரியம் உண்டாகும் போதுதான் "ஹோ" என்னும் ஒலி உண்டாகிறது.  

நீங்கள் "ஹா" என்று சொல்லும்போது பிராண சக்தி எங்கே இருக்கிறது?அது உங்கள் உடலின்
கீழ் பகுதியில் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். இப்பொழுது நீங்கள் "ஹோ" என்று சொல்லும் போது பிராண சக்தி உடலின் நடுப் பகுதியில் அதாவது மார்புப்  பகுதியில் இருக்கின்றது.
வியப்பும் ஆச்சரியமும் உண்டாகும்போது இந்த இடத்தில் இருக்கும்.   

இன்னும் சற்று அதிகமான  ஆச்சரியம் உண்டாகும்போது நீங்கள் "வாவ்" என்று சொல்கிறீர்கள். அப்பொழுது பிரானா உச்சமடைந்து தொண்டை மற்றும் உடலின் மேல் பகுதியில் இருக்கும். உயிராற்றல் அதிகமாக இருக்கும். நீங்கள் சிரிக்கும்போது உண்டாகும் ஒலி எது? 'ஹி,ஹி, ஹி, ஹி," ஒவ்வொரு உண்மையான சிரிப்பிலும் 'ஹி' என்னும் ஒலி இருக்கும். நீங்கள் 'ஹி' என்று சொல்லும்போது என்ன நடக்கிறது? 

ஒரு உண்மையான விரிவடைதலின் உணர்வு உண்டாகின்றது.  

நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போதெல்லாம் அந்த மகிழ்ச்சி ஒரு விவடையும் உணர்வோடு சம்பந்தப்பட்டிருப்பதை கவனியுங்கள். நீங்கள் துக்கமாக இருக்கும் போதெல்லாம் ஏதோ ஒன்று சுருங்கும் உணர்வு உண்டாவதையும் கவனியுங்கள்.  மகிழ்ச்சியாக இருக்கும் போதெல்லாம் விரிவடைந்து துக்கமடையும் போதேல்லாம் சுருங்கும் ஏதோ ஒன்று உங்களுக்குள் இருக்கின்றது. நாம் இதனை கவனிக்காமல் நம் கவனத்தை வெளியில் மட்டுமே வைத்துக்கொண்டிருக்கிறோம். 

நாம் வெளியில் இருக்கும் காரணத்தை மட்டுமே பார்க்கிறோம்.அது உண்மையான காரணம் இல்லை.உள்ளே விரிவடைந்தும் சுருங்கி கொண்டும் இருக்கும் ஏதோ ஒன்றினை உண்மை
யான் காரணத்தை  நாம் கவனிப்பது இல்லை.   

பழங்கால முனிவர்களில் ஒருவரான சுடபடாசார்யா "உங்களுக்குள்ளே விரிவடைந்து கொண்டி ருக்கின்ற ஏதோ ஒன்று உங்களால் அறிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று." என்று சொல்லி யிருக்கிறார்.   

அந்த உள்ளுணர்வை உங்களுக்குள்ளே இருக்கும் அந்த சக்தியை ஒரு கண நேரம் உணர்ந்தாலே போதும். அது உங்கள் முகத்திலிருக்கும் புன்னகையினை  எந்த சக்தியாலும் உங்களிடமிருந்து பிரிக்க முடியாத அளவிற்கு வலிமைப்படுத்தும்.   உங்களை எவரும் துன்பப்படுத்த முடியாது. உங்கள் ஆனந்தத்தை எவராலும் உங்களிடமிருந்து விலக்க முடியாது. வாழ்க்கை மாறுபட்ட கோணத்தை அடையும்.  நம்முள்ளே விரிவடையும்.ஏதோ ஒன்றினைப் பற்றிய ஒரு கண நேர  உணர்தல் மட்டுமே போதும்.  அந்த விரிவடைதல் எப்போதும் சிரிப்பு, ஆனந்தம், 'ஹி' என்னும் ஒலியோடு  தொடர்புள்ளது.   

ஒருவரது சிரிப்பில் 'ஹா'என்னும் ஒலி இருந்தால் அது வில்லத்தனமான சிரிப்பாகும்."ஹா
ஹா ஹா ஹா ஹா! நான் அப்போதே சொன்னேன் இல்லையா? என் பேச்சை நீ கேட்காத
தனால் விழுந்து விட்டாய் பார்த்தாயா? என்று சிரிப்பதை போன்றது.

சிரிப்பைச் சற்று கவனித்தாலே அது எந்த மாதிரியான சிரிப்பு என்று கண்டு பிடித்து விடலாம். அது கிண்டலானதா கேலி செய்வதா அகந்தை அல்லது கோபத்திலிருந்து உண்டானதா  என்று அறிந்து கொள்ளலாம்.  மக்கள் கோபத்தில் கூட சிரிக்கிறார்கள்.  ஆனால் அந்த சிரிப்பு வேறு விதமான ஒலியுடையது.ஒரு உண்மையான் குழந்தைத் தனமான சிரிப்பில்  நிச்சயம் 'ஹி'
என்னும் ஒலி இருக்கும்.   

நாம் இன்று இரண்டு விதமான ஒலியைக்கொண்டு தியானம் செய்யப் போகிறோம்."ஹோ" என்னும் ஒலியை முழுமையான வேகமும் அழுத்தமும் சக்தியும் கொண்டு ஆறு முறை உச்சரிக்கப் போகிறோம். ஏழாவது முறை நாம் 'ஹி' என்று உச்சரிக்கப் போகிறோம்  நம்
உடலில் நாளமில்லா சுரப்பிகளை ஒத்து ஏழு சக்தி மையங்கள் உள்ளன. இவை புனிதமான் மையங்களுமாகும்.   

நீங்கள் இந்த தியானத்தை மந்திர தியானம் என்று தவறாகப் புரிந்து குழப்பமடைய வேண்டாம். இது வழிநடத்தப்பட்ட தியானம். இது தியான நிலையின் ஒரு கண நேர அனுபவத்தினை உங்களுக்கு அளிக்கக்கூடியது. வழி நடத்தல் இன்றி நீங்களாகவே  தியானம் செய்ய வேண்டு மென்றால் மந்திரம் உச்சரித்து தியானம் செய்வது நல்லது.  அதுவே சஹஜ் சமாதி தியானம். 

சில நேரங்களில் நீங்கள்  குறுந்தகடுகளை உபயோகித்து  அதனைப் பின்பற்றி அதில் கூறிய
வாறும் தியானம் செய்யலாம். இதனை அவ்வப்போது செய்யலாம்.தினமும் செய்ய இயலாது. மந்திரம் உச்சரிக்கும் தியானத்தினை தினமும் எங்கு  வேண்டு மானாலும் செய்யலாம்.
ஓரிடத்தில் உட்கார்ந்து  மந்திரத்தினை உச்சரித்து அனைத் தையும் விட்டு தளர்வாக மந்திரத்துடனேயே ஒன்றி இருக்கலாம்.   

சரி.  நீங்கள் தியானம் செய்வதற்கு தயாரா? பட்டையினை இறுக்கிக் கட்டுங்கள்...

வசதியாக அமருங்கள் முதுகுத்தண்டு நேராக இருக்கட்டும்.உடல் தளர்வாக இருக்கட்டும். உங்களுக்குத் தெரியுமா? சில நேரங்களில்  மக்கள் உடலை மிகவும் இறுக்கமாக வைத்துக் கொண்டு தியானத்திற்கு அமர்கிறார்கள். முழு நேரமும் அவர்கள் உடலைப் பற்றியே
சிந்தனை செய்து கொண்டிருப்பார்கள்.அதனால் பின்னர் அவர்களிடம் உண்டாவது கோபம் மட்டுமே. ஏனென்றால் அவர்கள் அத்தனை பிரயத்தனம் செய்தும் அந்த இறுக்கமும்
முயற்சியும்  உண்மையான தியான நிலையை கொண்டு வருவதில்லை. 

நீங்கள் தியானம் செய்திருந்தால் ஒரு மலரைப் போன்று லேசாக மென்மையாக உணர்வீர்கள். உங்கள் உள்ளே மிருதுவாக,மிக அழகாக இனிமையாக நுட்பமாக  சௌகர்யமாக உணர்வீர்கள். அப்படியில்லாமல் உங்களுக்குள்ளே  கோபமாகவும் இறுக்கமாவும் நிலை தடுமாற்றமாகவும் உணர்ந்தால் தியானம் நிகழவில்லை. 

இப்பொழுது நீங்கள் "ஓ! நான் மென்மையாகவும் லேசாகவும் இருக்க வேண்டும்.குருஜி சொன்ன எல்லாம் நிகழ வேண்டும்,என்று எண்ணிக் கொண்டு உட்கார வேண்டாம். இந்த எதிர்பார்ப்பு என்பதே தியானம் நிகழ்வதற்கு தடையாக அமைந்து விடும்.

அதனால் தான்  சொன்னேன் இது மிகவும் நுட்பமான ஒன்று.நாம் எதுவும் நிகழ வேண்டு
மென்று எதிர்பார்க்கக் கூடாது.  இயல்பாக இருக்க வேண்டும். 

அனுபவங்கள் வரும்; போகும்;அவை மாறும். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான அனுபவங்கள் உண்டாகும். கவலை வேண்டாம். தியானம் செய்யும் முறை சரியாக இருக்க வேண்டும். தியானம் செய்யும் முறை என்பது என்ன? உடல் இறுக்கமாக இல்லாமல் அதே
சமயம் மிகவும் தளர்வாகவும் இல்லாமல் இருப்பது.வைத்திருப்பதும் பயன் தராது. நீங்கள் கால்களை மேலே தூக்கி வைத்துக் கொண்டு படுத்துக்கொண்டு தியானம் செய்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தால், உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள்.அது வேலை
செய்யாது.

இது உருளைக் கிழங்கு வறுவல் பொட்டலத்துடன் தொலைக்காட்சியினைப் பார்ப்பது போன்றது இல்லை.குருஜி சொல்லியிருக்கிறார் சாப்பிடுவதன் மூலம் கூட நாம் தியான நிலை அடையலாம் என்று.இது அப்படியில்லை.நீங்கள் இப்படி ஆரம்பியுங்கள்.முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும், ஆனால் உடல் தளர்வாக இருக்க வேண்டும். தோள் பட்டைகள் தளர்வாக இருக்க வேண்டும். தலை நேராக இருக்க வேண்டும். பிறகு உங்கள் கண்களை மூடிக்கொண்டு அனைத்தையும் விட்டு விடுங்கள்.   

தியானம் செய்யும் நேரத்தில் தலை கீழே குனிந்தால் பரவாயில்லை. உங்கள் தலை கீழே சென்றாலோ பக்கவாட்டில் சென்றாலோ அல்லது எந்த நிலையிலிருந்தாலும்  பரவாயில்லை. ஆனால் தியானம் செய்யத் துவங்கும் போது அப்படி இல்லாமல் நேராக இருக்க வேண்டும்.  மிகச் சரியான உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் சட்டை ஒரு சட்டை மாட்டியில்  தொங்குவது போல் உடல் தளர்வாகவும் முதுகுத்தண்டு நேராகவும் இருக்க வேண்டும்.  

(குருஜி  பார்வையாளர்களை தியானத்திற்கு வழி நடத்துகிறார்) 

கேள்வி: பத்து நிமிட தியானம் என்பது எட்டு அல்லது பத்து மணி நேர உறக்கத்தை விட அதிக சக்தியைத் தருகின்றதே ஏன்? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அது அப்படித்தான். தியானம் என்பது வேறு விதமான சக்தியைத் தருகின்றது. உணவு வேறு விதமான சக்தியைத் தருகின்றது. உடற்பயிற்சி வேறு விதமான சக்தியைத் தருகின்றது. ஞானம் வேறு விதமான சக்தியைத் தருகின்றது. தியானம் என்பது நிச்சயமாக
இவை அனைத்திலும் மேலானது.   

கேள்வி: நாம் தியானத்தில் அமரும்போது ஒவ்வொரு முறையும் சில நிமிடங்களுக்கு  அமைதியான விஞ்சிய நிலையை அனுபவிப்பதென்பது அவசியமா? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அப்படி எதுவும் அடிப்படையோ அளவுகோல்களோ இல்லை. அது எங்கே வேண்டுமானாலும் எந்த நேரமும் நிகழலாம். நிகழாமலும் போகலாம்.  நீங்கள் தவறான உணவு உண்டிருந்தாலோ அல்லது மனக் குழப்பத்தில் இருந்தாலோ சில சமயங்களில் அது நிகழாமல் போகலாம். ஆனால் கவலைப்பட வேண்டாம். 

தியானத்திற்கென அமர்வதே முக்கியம். நீங்கள் இருபது நிமிடங்கள் அல்லது அரைமணி நேரம் சும்மா அமர்ந்தால் கூட நீங்கள் தியானத்திற்கென அமராமல் இருக்கும் நிலையை விட
மேலாக நிச்சயம் உணர்வீர்கள். இங்கே பாருங்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது
எப்படியும் எளிதாக தியானம் செய்ய முடியும், நீங்கள் குழப்ப மடைந்திருக்கும் போது தான் தியானம் செய்ய முடியாது. அப்பொழுதுதான் நீங்கள் அமைதியடைய வேண்டியது மிகவும் அவசியம். அப்பொழுது தான் தியானம் செய்ய வேண்டா மென்ற எதிர்ப்பு உங்களுக்கு இருக்கும். 

கேள்வி: சில சமயங்களில் நான் தியான நிலையில் இருந்து பணிகளில் ஈடுபடச் சற்று
சிரமப்படுகிறேன் .செயல் குழப்பத்திற்கு ஆளாகி பின்னர் வருந்துகிறேன்.தியானத்திலிருந்து
சீராக எவ்வாறு பணி நிலைக்கு செல்வது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: சிறிது யோகப்பயிற்சி, பிராணாயமம், இன்னிசை, பண்ணிசைப்பு ஆகியவை இந்த இடைவெளியை சரிசெய்து மன அமைதியை ஏறடுத்தும். அப்போது சுலபமாக பணி நிலைக்கு செல்லலாம். 

கேள்வி: காலப்போக்கில் தியானம் நமது உடல் நிலையில் மட்டுமன்றி உயிர் அணுக்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கேள்விப்படுகிறேன்? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆம் உண்மைதான். மனம் உடல் மீது தாக்கம் உண்டாக்கும். நிறைய ஆராய்ச்சிகள் நிகழ்ந்திருக்கின்றன. குகிள் வலைத்தளத்தில் பாருங்கள். தியானத்தின் மூலம் மனத்திலும் உடலிலும் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி ஆய்வுகள் உள்ளன. 

கேள்வி: பிரார்த்தனை என்பது கடவுளிடம் பேசுவது என்றும் தியானம் என்பது கடவுள்
கூறுவதை கவனிப்பது என்றும் தாங்கள் கூறியிருக்கிறீர்கள். என் பிரார்த்தனையின் போது கேட்கப்பட்ட கேள்விகளின் பதில்களை அறிய நான் என்ன செய்ய வேண்டும்? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இளைப்பாறுங்கள்! உள்நோக்கத்துடனும் ஆசைகளுடனும் உங்களால்
தியானம் செய்ய முடியாது. இவை அனைத்தையும் விட்டால் தான் தியான நிலையை
அடைய முடியும். உள்நோக்கங்கள், ஆசைகள் இவற்றை விட்டு விடுங்கள்