உங்கள் பிரச்சினைகளை கீழே போடுங்கள்

18 பிப்ரவரி 2013பெங்களூரு, இந்தியா



சத்தியம் என்பது நீங்கள் தப்பிக்க முடியாதது, அது விவரிக்க இயலாதது. சத்தியத்தை விவரிப்பது மிகக் கடினம், அதே அளவு அதை தவிர்ப்பதும் கடினம். அதை போலவே, அழகு என்பதை நீங்கள் கைக்கொள்ளவும் முடியாது, அதை நீங்கள் துறக்கவும் முடியாது. அன்பு என்பது மறைக்க இயலாதது. நீங்கள் அன்பை மறைக்கவும் முடியாது அதை முழுதுமாக வெளிப்படுத்தவும் முடியாது. முயன்று தான் பாருங்களேன்.அன்பை மறைப்பது முடியவே முடியாது. நீங்கள் அன்பு வைத்திருக்கும் ஒருவருக்காக உங்கள் கண்களில் அன்பு வழிந்தோடும்.

ஒருவருடைய இதயம் அன்பால் நிரம்பியிருந்தால், அவருடைய கண்களிலிருந்து அன்புக் கதிர்களே வீசும். ஆனாலும் அதை உங்களால் முழுதுமாக வெளிப்படுத்தவும் இயலாது. எப்படிச் செய்ய முடியும்? காலங்காலமாய், மனிதன் அன்பை தெரிவிக்க முயன்று வருகிறான். எல்லா வழிகளும் முயற்சித்து விட்டான் ஆனால் அவனால் முழுதுமாக வெளிப்படுத்த முடியவில்லை. அதனால் தான் காதலில் இருப்பவர், ‘என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை!’ என்று எப்போதும் கூறுகிறார்கள்.

ஏன் இதை சொல்கிறார்கள்? ஏனென்றால் அவர்களால் தங்களுடைய அன்பை முழுதுமாக வெளிப்படுத்த முடியவில்லை. தங்களை யாரும் புரிந்து கொள்வதில்லை என்று பொதுவாக பெண்கள் புகார் செய்வார்கள். பெண்கள் தங்கள் குடும்பத்தினர் அனைவர் மீதும் அன்பாய் இருப்பார்கள், தங்கள் அன்பை முழுதுமாக வெளிப்படுத்த முடியாததால், குடும்பத்திலுள்ள யாரும், கணவரோ, மகனோ, அல்லது தந்தையோ யாரும் புரிந்து கொள்வதில்லை என்று உணர்கிறாள். எனவே இன்றைய ஞானத்தின் சாரம் இது தான். இதைப் பற்றி ஆழமாய் யோசிக்கும் போது உங்களுள் மேலும் ஞானம் மலரும்.

உங்கள் வாழ்க்கையில் உங்களுக்குக் கிடைத்த அனுபவங்களை நன்றாய் கவனியுங்கள், இந்த அனுபவங்களிலிருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள் என்பது முக்கியம். அதே நேரத்தில், நீங்கள் மற்றவர்களுக்கு எப்படிப் பயன்படலாம், மற்றவர்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்று எண்ணிப் பாருங்கள்.

நாம் பார்க்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் இரண்டு – நான் மற்றவர்களுக்கு என்ன செய்யவேண்டும்? என் வாழ்க்கையிலிருந்து எனக்கு என்ன வேண்டும்?

கே: குருதேவ், என்னுடைய கேள்வி சரணாகதி பற்றியது. சரணாகதிக்கும் அகங்காரத்திற்கும் உள்ள முரணைப் பற்றி தயவு செய்து விரிவாகக் கூறுங்களேன்.

குருதேவ்: நீங்கள் எதை சரணாகதி செய்ய வேண்டும்? ஏதாவது நல்லவற்றை சரணாகதி செய்ய மாட்டீர்கள். அன்பை சரண் செய்ய வேண்டாம். சத்தியத்தை சரண் செய்ய வேண்டாம். எனவே எதைச் சரண் செய்வீர்கள்? உங்களுடைய தீய பழக்கங்கள், உங்கள் பிரச்சினைகள், மன அழுத்தம் மற்றும் உங்கள் இதயத்தை சங்கடப் படுத்தும் எல்லாவற்றையும் நீங்கள் சரண் செய்யுங்கள். உங்கள் பிரச்சினைகளைக் கீழே போடுங்கள் – இதை செய்ய தான் நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

உங்களிடம் கடவுள் என்ன கேட்கிறார்? உங்கள் வசதியை விட்டு விடுங்கள் என்று கேட்கமாட்டார். நல்லன எல்லாவற்றின் வடிவமே இறைவன். அதனால் நீங்கள் கொண்டிருக்கும் சிறு மகிழ்ச்சியை விட்டு விடச் சொல்லிக் கேட்பதினால் அவருக்கு என்ன இலாபம்? அவர் அன்புக் கடல், உங்களிடம் உள்ள கொஞ்சம் அன்பைக் கேட்டு என்ன செய்யப் போகிறார்?

இறைவனிடம் என்னதான் இல்லை? அவரிடம் பிரச்சினைகள் இல்லை, துயரங்கள் இல்லை மற்றும் கஷ்டங்கள் இல்லை; அதை தான் அவர் தன்னிடம் கொடுத்து விடும்படி கேட்கிறார். அதை உங்களால் கொடுக்க முடியாதா? எனவே உங்களுடைய எல்லா தீய குணங்களையும் சரண் செய்துவிடுங்கள்.

உங்களுடைய நற்குணங்களை சரண் செய்யச் சொல்லி யாரும் எப்போதும் கேட்க மாட்டார்கள். உங்கள் பெருமைகளையும் எதிர்மறை குணங்களையும் சரண் செய்யுங்கள். அதை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அவ்வளவு இலேசாககி விடுகிறீர்கள். எனவே நீங்கள் உள்ளேயிருந்து இலேசாக உணர்வதற்கு உதவும் செயல்முறை இது.

உங்களுக்கு தேவையில்லாத அனைத்தையும் சமர்பித்து விடுங்கள். அதை ஏன் இன்னும் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? இதுதான் சரணாகதி என்பது. இதை செய்வதின் மூலம், நீங்கள் உங்களுடைய உண்மையான இயல்பை, உண்மையான வடிவத்தை அடைகிறீர்கள். உங்களுடைய உண்மையான இயல்பு என்ன? அது அன்பு, மகிழ்ச்சி மற்றும் நிறைவு. உங்களுடைய உண்மையான இயல்புக்கு வருவதே உண்மையான சரணாகதி என்பது.
அதனால் தான், ’சமாதி சித்தௌ ஈஸ்வரி ப்ரநிதாநாத்’ என்று சொல்லப் படுகிறது. இறைவனிடம் சரணாகதி அடைவதின் மூலம் ஒருவர் இயல்பாகவே சமாதி நிலையை அடைகிறார். நமது நூல்களில் சொல்லப் பட்டிருக்கிறது.

கே: என்னுடைய அம்மா சுத்தம் பேணுவதிலும் வீட்டை தூய்மையாய் வைத்திருப்பதிலும் மிகவும் கண்டிப்பாய் இருக்கிறார். இது காலையில் ஆரம்பித்து இரவு வரை தொடரும். பூஜை மற்றும் மற்ற சடங்குகளிலும் மிகவும் குறிப்பாக இருக்கிறார். இது வீட்டில் நிறைய பிரச்சினைகள் உருவாக்குகிறது. நான் ஏன் அப்படி இருக்க வேண்டும்? இது கட்டாயம் தேவையா? அவருக்கு என் மீது அன்பு இல்லை என்று நினைக்கிறேன்.

குருதேவ்: கட்டாயம் சுத்தம் பேண வேண்டும் தூய்மை வேண்டும் என்று சாத்திரங்கள் எங்கும் சொல்லவில்லை. இதன் பின்னே உள்ள ஆழமான பொருளை புரிந்துகொள்ள வேண்டும். இரண்டு விதமான தூய்மைகள் இருக்கின்றன. அந்தஹஷுசி (உள்ளே உள்ள தூய்மை) மற்றும் பகிரங்கஷுசி (சுற்றுப்புற தூய்மை).

எனவே இந்த இரண்டு தூய்மைகளையும் நாம் கடைபிடிக்க வேண்டும். ஆனால், மக்கள் இதை வித்தியாசமாக புரிந்து கொண்டு, காலக்கிரமத்தில் இதை மிகச் சிக்கலாக்கி விட்டனர், மற்றும் சிலர் இதில் மிகக் கண்டிப்பாகி விட்டனர். அதனால் தான் நான் சொல்கிறேன், நாராயணா என்று ஜெபிப்பதன் மூலம் உங்களிடம் உள்ள எதிர்மறைகள் எல்லாம் கழுவப்பட்டு தூய்மை அடைகிறீர்கள். உங்களுக்கு புரிந்ததா?

அதனால் தான், ‘அபவித்ரா பவித்ரா சர்வாவஸ்தங்கடோபிவா யஸ்மரீத் புண்டரீகாக்ஷம் சபஹ்யா-பியந்தரஹா ஷுசிஹி’ என்று நாம் ஜெபிக்கிறோம். இதன் பொருள், எங்கும் பரவியிருக்கும் பேருணர்வான நாராயணனை தியானிப்பவர்கள் உடனடியாக உள்ளும் புறமும் தூய்மை செய்யப்படுகிறார்கள். எனவே, ‘புண்டரீகாக்ஷ புணத்துமாம்’ என்று ஜெபிப்பதே போதும் என்று உங்கள் அம்மாவிடம் சொல்லுங்கள். இதைச் செய்வதின் மூலம் உள்ளும் புறமும் எல்லாம் தூய்மை செய்யப்படுகிறது. உங்களுக்குப் புரிந்ததா?
உங்கள் அம்மா உங்களை தூய்மையாய் இருக்கச் சொல்கிறார் என்பதற்காக ஏன் நீங்கள் நொந்து போகிறீர்கள். அவர்களுக்கு எது சிறந்ததாக தெரிகிறதோ அதை செய்கிறார்கள். புரிந்ததா?

அவர்களுக்கு உங்கள் மீது அன்பில்லை என்று நினைக்க வேண்டாம். உங்கள் மீது அன்பை பொழிய ஒவ்வொருவரும் வித்தியாசமான வழிகள் பின்பற்றுகிறார்கள். நீங்கள் எல்லோர் மீதும் அன்பைப் பொழியுங்கள். எல்லோருக்கும் இடமளிக்கும் அளவு பெரிய இதயம் உங்களுக்கு இருக்க வேண்டும். அன்பு நிபந்தனைகள் கொண்டதாக இருக்கக் கூடாது. அது நிபந்தனைகள் கொண்டதாக இருந்தால் நீங்கள் மனத்தாழ்ச்சி அடைவீர்கள். எல்லோர் மீதும் அன்பாய் இருங்கள், எல்லாம் அதன் வழியில் நடந்தவாறு இருக்கும்.

எந்த ஒரு அம்மாவாலும் தன் குழந்தை மீது அன்பு செலுத்தாமல் எப்போதும் இருக்க முடியாது. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், அவ்வளவு தான். தன் சொந்த மகள் தன்னைப் புரிந்து கொள்ளவில்லையே என்று உங்கள் அம்மாவும் வருத்தத்திலிருப்பார்கள். அவர் எப்படி இருக்கிறார்களோ அப்படியே அவரை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் தாய் மீது அன்போடும் பரிவோடும் இருங்கள். அவர் விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் தூய்மையாகவும் சடங்குகள் செய்தபடியும் இருக்கட்டும்.

கே: நான் இறைவன் முன் நிற்கும் போது, என் இதயத்தின் ஒரு பகுதி இறைவன் இருக்கிறார் என்று சொல்கிறது, மற்றொரு பகுதி இறைவன் இல்லை என்று சொல்கிறது. உண்மை என்ன?

குருதேவ்: எல்லாப் பொருளும் ஒரே பொருளினால் தான் ஆக்கப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

நம்மை சுற்றி காற்று இருக்கிறதா? காற்று இருக்கிறது என்று இடைவிடாமல் உங்களுக்கு நீங்களே ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டுமா என்ன? இல்லை அல்லவா? ஆனால் அதை நம்புகிறீர்களா? ஆம்!காற்று எங்கே இருக்கிறது? உங்களை சுற்றி உள்ள வெளியில் இருக்கிறது அல்லவா?

பூமி சூரியனை சுற்றி வருகிறது என்று நம்புகிறீர்களா? அது எப்படி உங்களுக்குத் தெரியும்? பூமி சூரியனைச் சுற்றி வருவதை நீங்களே நேரடியாக எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?
(விடை: இல்லை குருதேவ், அதை நான் உணர்ந்தேன்.)

சரி தான், எனவே நீங்கள் அதை கேட்டீர்கள், நம்பிவிட்டீர்கள் அல்லவா? அதை போலவே, மனிதன் நிலவில் கால் வைத்து விட்டதாக மக்கள் கூறுகிறார்கள். யாரோ அங்கு சென்றார்கள் என்று அவர்கள் புகைப்ப்படத்தை காட்டினார்கள், அந்தப் படத்தைப் பார்த்தே நீங்கள் நம்பிவிட்டீர்கள். அதைப் போலவே, ஸ்ரீ கிருஷ்ண பகவானின் படங்களை பார்க்கும் போது அவர் உண்மையில் இருந்தார் என்று நம்புகிறீர்கள், சரிதானே? எனவே சில விஷயங்கள் உங்களுக்குத் தெரிய வேண்டும், சில விஷயங்கள் அப்படியே உண்மை என்று எடுத்துக் கொள்ள வேண்டும். முன்னே நகர்ந்து சென்று எல்லோரையும் அன்பினால் அரவணைத்து கொள்ளுங்கள்.

கே: நான் ஒரு குருவிடம் சென்று என்னை சமர்ப்பணம் செய்து விடும் போது, அந்த நிலையில், ஏதாவது ஜோதிடர் மீதாவது தொடர்ந்து நம்பிக்கை வைத்தாக வேண்டுமா என்ன?

குருதேவ்: ஆழமான பக்தியோடு, ஒரு சரணாகதி உணர்வோடு இருந்தால், பிறகு அதுதான் அனைத்திலும் ஆகச் சிறந்தது. ஜோதிட அறிவியல் என்பது இந்திந்தச் சாலை வழியாகச் சென்றால், நீங்கள் இதையோ அல்லது அதையோ அடைவீர்கள் என்று உங்களுக்கு வழிகாட்டும் ஒரு வரைபடம். நீங்கள் ஆகாய விமானம் மூலம் செல்லும் போது, நீங்கள் சாலை வழியாகச் சென்றால் எதிர் கொண்டிருக்கக் கூடும் அனைத்து தடங்கள்களையும் தவிர்த்து மாற்று வழியில் சென்று விடுகிறீர்கள். புரிந்ததா?

(அடியவர்: ஆனால் குருதேவ், ஏன் அவ்வப்போது மனம் தன்னுடைய கேள்விகளுக்கு ஜோதிடம் தான் விடைதரும் என்று உலாவி வருகிறது?)

அப்படி நடந்தால் அது பரவாயில்லை. ஏனென்றால் மனதிற்கு ஜோதிட அறிவியல் இருக்கிறதா என்று கேள்வி கேட்கக் கூடிய முனைப்பு இருக்கிறது. அப்படி அது நடந்தால், உங்களுடைய ஜாதகத்தில் எந்த கிரகம் எந்த கட்டத்தில் இருக்கிறது, அதனால் என்ன விளைவுகள் உண்டாகும் என்று தெரிந்து கொள்ள ஒரு ஜோதிடரின் உதவியை நாடலாம். அதற்கு விடைகள் கிடைத்த பின், ஒன்பது கிரகங்களின் அதிபதியான சிவபெருமானிடம் அவற்றை சமர்பித்துவிடுங்கள். ‘ஓம் நமசிவாயா’ ஜெபம் செய்யுங்கள். கிரகங்களினால் வரும் பாதகங்கள் என்று சொல்லப்பட்டவை எல்லாம் தானாக இல்லாமல் போகும்.

கே: நம் வாழ்க்கையில் சத்சங்கத்தின் முக்கியத்துவம் என்ன?

குருதேவ்: நாம் வாழ்க்கையில்,விரும்பும் சிரிப்பு, சந்தோஷம், அன்பு மற்றும் நிறைவு ஆகியவற்றை தருவது தான் சத்சங்கத்தின் வேலை. சத்சங்கத்தில்  தொடர்ந்து பங்கு பெற்றால் இவை எல்லாம் கிடைக்கும்.

கே: அன்பு குருதேவ், என் மனதில் ஒரு விருப்பம், அதை நான் வெளியில் சொல்லமாட்டேன். உங்களுக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியும், அதனால் நீங்கள் அதை நிறை வேற்ற வேண்டும் என்று விரும்புகிறேன்.

குருதேவ்: அது நல்லது. உங்களில் எத்தனை பேர் உங்கள் விருப்பங்கள் நிறைவேறியதை உணர்ந்திருக்கிறீர்கள்? இது சித்தத்வா என்று அழைக்கப்படுகிறது (சித்தி பெறுவது அல்லது விருப்பங்களை நிறைவேற்றும் அசாதாரணமான திறன்). பிராணாயாமம் மற்றும் தியானத்தை நாம் தொடர்ந்து செய்து வந்தால், நம் விருப்பங்கள் மனதிலே தோன்றுவதற்கு முன்பேயே நிறைவேறி விடும். எல்லோருக்கும் இப்படி நடப்பதை பாருங்கள். எனவே, நீங்கள் எதை கேட்கிறீர்கள், எதை விரும்புகிறீர்கள் என்பதில் கவனம் தேவை.

பெரிதானவை மீது, சிறந்தவை மீது ஆசை கொள்ளுங்கள். நம் நாட்டில் வளம் செழிப்பது தொடர வேண்டும் என்றும் யாரும் வேலை இல்லாமல் இருக்கக் கூடாது என்றும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நம் நாட்டில் உள்ள பெண்கள் பாதுகாப்பாக உணர வேண்டும் என்றும் பயமில்லாமல் வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். இந்த எண்ணத்தோடு முன்னே செல்லுங்கள். உங்கள் விருப்பங்கள் எப்படியும் நிறைவேறுகிறது. உங்கள் விருப்பங்கள் உண்மையில் நிறைவேறுகிறது என்பது இந்த சோதனை மூலம் நிரூபனமாகிறது. இப்போது நீங்கள் இந்த முழு சமூகத்தின் பெரு நன்மை வேண்டி ஆசை கொள்ளுங்கள்.

கே: அசைவ உணவு சாப்பிட வேண்டாம் என்று எல்லோரும் சொல்கிறார்கள். அசைவ உணவு உண்டால் மூளையின் சக்தி குறைகிறது. ஆனால் அசைவம் உண்ணும் பலர் புத்திசாலிகளாகவும் தங்கள் தொழிலில் முதன்மையானவராகவும் இருக்கிறார்கள்.  இதன் பின்னே உள்ள காரணம் என்ன?

குருதேவ்: அசைவ உணவு நிச்சயம் உங்கள் உடம்பை பாதிக்கிறது. அசைவ உணவு உண்பவர்களுக்கு ஏற்படும் விளைவுகளை, அதைப் பற்றி ஆராய்ந்த யாரவது விவரமாகக் உங்களுக்கு கூறமுடியும்.


மாசிடோனியாயாவைச் சேர்ந்த ஒரு பெண்மணி இதைப் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறார். வலைப் பக்கங்களில் தேடினால் ஏராளமான தகவல்கள் கிடைக்கும். அசைவ உணவு எப்படி மனிதர்கள் உண்பதற்கு ஏற்றதல்ல என்பதை நிரூபித்திருக்கிறார். அது ஆரோக்கியமான வாழ்கை முறைக்கு உகந்ததல்ல. நிறைய ஆராய்சிகள் நடந்து, சைவ உணவே மனிதர்களுக்கு அதிகம் பொருத்தமானது என்பது சொல்லபட்டிருக்கிறது. வலைபக்கங்களில் தேடி அதைப்பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தியானத்தில் மகிழ்ச்சி இருக்கிறது...


9 – பிப்ரவரி – பெங்களுரு இந்தியா 

கே: குருதேவ், இன்று குடிப்பழக்கம் தான், ஆன்மீகத்திற்கும், பாதுகாப்பான சமூகத்திற்கும் எதிராக  பெரிய  சவாலாக உள்ளது. எனினும்  கார்பரேட் கலாச்சாரம்  மற்றும் ஆன்மீக மாநாடு நடந்த இந்த இரு நாட்களில்,  ஒருவர் கூட  அதைப்பற்றி பேசவில்லை. எங்களுக்கு நீங்கள்   தான் வழிகாட்ட  வேண்டும்.

குருதேவ்: நாம் மக்களுக்கு, இங்கு வேறு  விதமான போதை தரக்கூடியது உள்ளது - தியானம், பாடல்கள், சேவை செய்தல்  போன்றவை. இவை மிகப்பெரிய உயரத்தில் கொண்டு செல்லும். இந்த வகையான விஸ்கியை மக்கள் அறியவில்லை, அவ்வளவு தான். மற்றவர்களுக்கு  சேவை செய்வதிலும், பிறரின் சிரிப்பை பார்ப்பதிலும் மகிழ்ச்சி இருக்கிறது, இந்த போதை மக்களுக்கு   புரியவில்லை.

தியானத்தில் மகிழ்ச்சி இருக்கிறது, ஆழ்ந்த  அமைதியும், ஆழமான  ஆறுதலும் மக்களுக்கு புரிவதில்லை. நாம் மக்களுக்கு  இதை புரிய வைத்துவிட்டால் பின்  மது பாட்டில்களை  தூர எரிந்துவிடுவார்கள்.

கே:  குருதேவ், ஒரு  சில ஆங்கில மக்கள் மட்டுமே வந்து, இந்தியா  போன்ற ஒரு மாபெரும்   ஆன்மீக நாட்டை எப்படி  ஆள முடிந்தது? இதில் நாம் கற்றுக்கொள்ள ஏதும் உள்ளதா?

குருதேவ்:  ஆம். நீங்கள் அதைப்பற்றி ஆச்சர்யப்படலாம். ஆனால் இந்தியாவின் ஒரு சிறப்பு என்னவென்றால், ஒற்றுமை எங்குமே இருந்தது இல்லை. ஒரு முறை நான் ஐரோப்பாவில்
இருந்த போது ஒரு பத்திரிகையாளர் என்னிடம், 'குருதேவ், எப்படி இந்திய  பத்திரிகையாளர்கள், மற்றவர்களை விடவும் அவர்கள்  இந்தியாவை  விமர்சிக்கிறார்கள்? என்று, அதற்கு நான், 'அது தான் எங்கள் சிறப்பு, நாங்கள் எங்களுக்குள்ளேயே சண்டையிட்டு கொள்வோம்' என்றேன். 

பல பேரரசர்களுக்கு நடுவே நடந்த உள்நாட்டு சண்டைகளும், அரசர்களுக்கு இருந்த பொறாமை எண்ணத்தாலும் தான் அவ்வாறு நடந்தது. ஒரு வகையில் அதுவும் நன்மை தான், ஒரு சில நன்மைகள் இந்தியாவுக்கு செய்தார்கள். நிறைய எதிர்மறை  நிகழ்வுகள் இருந்தாலும், சில  நன்மைகள் இருந்தன, அதையும் நாம் பார்க்க வேண்டும். இல்லையெனில் நாம் இன்று ஆங்கிலத்தில் பேசி இருக்கமாட்டோம். கணினியும் அறிந்திருக்க மாட்டோம்.   சீனாவைப் போல் இருந்திருப்போம். நாம் நம் சொந்த மொழிகள் கொண்டிருப்போம்; 600 வட்டாரம்,24 மொழிகள் என்று இந்திய உண்மையில் பிளவுபட்டிருக்கும். இன்று எப்படியோ ஆங்கிலம் ஒரு பொதுவான மொழியாக இருந்து இந்தியா மற்ற உலகோடு தொடர்புகொள்ள  உதவுகிறது. எனவே சில பயன்களும் சில நல்ல விஷயங்களும் உள்ளன.  வழக்கற்றுப் போன பல சட்டங்கள் இன்றும் நடைமுறையில் உள்ளன. எனவே உங்களை போன்ற இளம் தலைமுறையினர் சட்டம் இயற்றுபவர்களாக அது போன்ற சட்டங்களை மாற்ற வேண்டும். பெண்கள் ஏற்கனவே தங்கள் கைகளில் தலைமை பொறுப்பு கொண்டு, சில சட்டங்களை   மாற்றி உள்ளனர். நிச்சயம் இன்னும் நடக்கும்.

கே:  படித்த பட்டதாரிகள் பலர்  இருந்தும்  அவர்களை தொழிற்சாலையில் வேலைக்கு எடுக்கும் முன், அவர்களுக்கு மறுபடியும்  பயிற்சி அளிக்க வேண்டியுள்ளது. உங்கள் பல்கலைக் கழகத்தோடு இணைந்து தொழிற்சாலைகளுக்கு ஏற்ப  நாம் ஒரு கல்வித்திட்டத்தை எப்படி அறிமுகப்படுத்துவது?

குருதேவ்:  கண்டிப்பாக. நாம் திறமை மையங்கள் அமைக்கலாம்.  நீங்கள் நம் (ஸ்ரீ ஸ்ரீ பல்கலைக்கழகம், (ஒரிசா)  பல்கலைக்கழக வேந்தர் திரு மிஸ்ரா அவர்களிடமும், இங்குள்ள 
பிற  உறுப்பினர்களிடமும்   பேசலாம். நாம் மாணவர்களுக்கு புதிய திட்டங்களையும், புதிய   பாடத்திட்டங்களையும் உருவாக்கலாம்.

நாம் மாணவர்களுக்கு கிழக்கிலும், மேற்கிலும் சிறந்தவற்றை வழங்கவேண்டும். இன்று எல்லைகள் ஒரு பொருட்டல்ல. அவை மறைந்துவிட்டன. நாம் ஒரே  உலக சமூகத்தில் வாழ்கிறோம். வரும் தலைமுறையினரும் ஒருமைப்பட்ட உலகின் பரந்த கண்ணோட்டத்தோடு முன்னேற வேண்டும். நாம் ,'என் நாடு','உன் நாடு' என்ற எண்ணம் மறந்து  ஒரே  சமூகமாக எந்த வேறுபாடுமில்லாமல் இருக்கவேண்டும். நேற்று இங்கு ஒரு மாநாடு நடந்தது, அதில் 90 நாடுகள் கணினியின் தொகுப்பு மூலம் கலந்துகொண்டனர். பல நாடுகளில் இருந்தும் மக்கள் 

கணினியின் மூலம் தொடர்பு கொண்டனர். நாம் ஒரு புதிய அறிவின்  சகாப்த்தத்திற்கு செல்கிறோம். எனவே நாம் நம் மனதை அதற்க்கு தகுந்தார்ப் போல் மாற்றிக்கொள்ள வேண்டும். எனக்கு  இந்த கிரகத்தில் உள்ள  மாணவர்களுக்கு  கிழக்கிலும், மேற்கிலும் சிறப்பானவற்றை அளிக்க வேண்டும் என்பதே.

கே: குருதேவ், என்னால் சிறப்பாக செயல்பட முடிவதில்லை, அதனால் நான் திருப்திற்று இருக்கிறேன். வாழ்வில் சிறப்பு அடையாமல், திருப்தி அடையமுடியுமா?  வழி காட்டுங்கள்.

குருதேவ்: விரக்தி தான் திருப்தியின் தாய் என்றால் உலகில் பல திருப்தி அடையாத நாடுகள் உள்ளன, அந்நாடுகள் சிறப்பாகவும் செயல்படுவது இல்லை.மக்கள்.' திருப்தி  உங்களை மந்தமாக செயலற்று ஆக்கிவிடும். விரக்தி மனப்பான்மை, படைப்பாற்றலை  வளர்க்கும் என்றால், லெபனான், ஆப்கானிஸ்தான்  போன்ற நாடுகள்  உலகில் படைப்பாற்றல் மிகுந்த நாடாக இருந்திருக்கும் இல்லையா. ஆனால் அப்படி  இல்லையே. எனவே திருப்தி என்பது வேறு, படைப்பாற்றல் என்பது  வேறு. நீங்கள் அமைதியாக, தெளிவோடு, மென்மையாக போது உங்கள் படைப்பாற்றல் தானாக வெளிவரும் 

கே: குருதேவ், அதிக உழைப்பு இல்லாமல் எப்படி அதிக பணம் சம்பாதிப்பது? அதற்க்கு ஏதாவது மந்திரம் இருக்கிறதா?

குருதேவ்: இப்படிதான் ஊழல் உருவாகிறது (சிரிப்பு). நீங்கள்  அனைத்து ஊழல் பற்றியும் கேள்விப்பட்டு இருப்பீர்கள் இல்லையா? ஒவ்வொரு மாதமும் ஒன்றன் பின்  ஒன்றாக  நடக்கிறது. வேண்டாம், விரைவான பணத்திற்கு ஆசைப்படாதீர்கள், அதே வேகத்தில் அதை இழந்துவிடுவீர்கள். ஒரே மாதிரியான நீடித்த பொருளாதாரம் தான் நல்லது.

உங்கள் நெறிமுறைகள் நேர்மையாக உறுதியாக  இருந்தால், நீங்கள், 'நான் நல்ல நெறிமுறையோடு நல்ல முறையில் நிறைய பணம் சம்பாதிப்பேன், கண்டிப்பாக நேர்மையற்ற வழியில் அல்ல. என்று கூறுவீர்கள். கடந்த நூற்றாண்டில், மக்கள்  கர்மவினை மீது பயந்தோ   அல்லது கடவுள்  மகிழ்ச்சியாக  மாட்டார் என்றோ எண்ணி தவறான நெறிமுறையில் ஈடுபட மாட்டார்கள்.

'ஓ, இது தீவினை. எனக்கு  இந்த பணம் தேவை இல்லை' என்று கூறுவர். ஏனெனில்  மக்கள் தவறான முறையில் சம்பாதித்த பணம், செலவு செய்யும் போது மகிழ்ச்சி அளிக்காது என்று நம்பினர். என் வாழ்வை இன்னும் மோசமடைய வைக்கும்' என்று நினைத்தனர். உண்மையில்   மக்கள், தவறான முறையில் சம்பாதிக்கும் பணம், நீதிமன்றங்களிலும் மருத்துவ மனைகளிலுமே  பயன்படும். என்று  எண்ணினர்.

அந்த உள்ளுணர்வு அவர்களை உறுத்திக்கொண்டே இருந்தது. இன்று  இல்லை. மேலும், 'நாம் கூட்டாண்மை, சமுதாயப்பொறுப்பு பணியில் இருக்கும் போது அது பலமடங்கு திரும்ப கிடைக்கும் என்று கூறுகிறார்கள். ஒரு முதலீடாகவும், தவறான நியாயமற்ற முறையில் வரும் பணம் ஒரு தண்டனையாகவும் கருதப்பட்டது. அந்த மதிப்புகள் அனைத்தும் காணாமல் போய் விட்டது. அதை மறுபடியும் சரி பார்க்கவேண்டும் 

கே: குருதேவ், இன்று கூட்டாண்மை அல்லது சமுதாயம் சார்ந்தது என எந்த துறையானாலும், தவறான ஒன்றிலிருந்து நல்லதை பிரித்துப் பார்ப்பது கடினமாக உள்ளது இப்போது   கூட்டாண்மை சமுதாயப்பொறுப்பு கூட்டாண்மை நிறுவனங்களில் ஒரு கட்டாய  அம்சம் என்பதால், அவற்றில் சரியான அரசு சார்பற்ற அமைப்பை  எப்படி தேர்ந்தெடுப்பது? 

குருதேவ்:  அரசு சார்பற்ற தன்னார்வத்தொண்டு அமைப்புகள், வெளிப்படையாகவும், மதசார்பின்றியும் இருக்கிறதா என்று அறியவேண்டும். இது மிகவும் முக்கியம். சில நேரம் இந்த அமைப்புகள்  சமுதாய பொறுப்பில் ஈடுபட்டாலும், அவர்கள் நோக்கம் வேறாக இருக்கிறது.  மக்களை ஒரு மதத்திலிருந்து மற்றொன்றுக்கோ அல்லது ஒரு கொள்கையிலிருந்து மற்றோன்றுக்கோ, ஒரு வாக்கு வங்கியிலிருந்து மற்றொன்றுக்கோ  மாற்ற முயற்சி   செய்கிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும். இது நிஜமான தொண்டல்ல, இவை அறக்கட்டளை என்ற பெயரில் நடத்தப்படும் வியாபாரம் ஆகும். புனிதமான எண்ணத்தோடும் தூய மனத்தோடு இருக்க வேண்டும். இது போல் தூய எண்ணம் கொண்ட, மற்றவர்களுக்கு மகிழ்ச்சியும், சிரிப்பையும் தரவல்ல நல்ல அறக்கட்டளை  மையங்கள் இருக்கின்றன. எனவே நாம் அத்தகைய மையங்கள் நல்ல எண்ணம் கொண்டனவா அவர்களின்  வரவு செலவு கணக்குகள் சரியானவையா, பண விஷயத்தில் வெளிப்படையாக உள்ளார்களா, அவர்கள்  நிர்வாக செலவு குறைவாக இருக்கிறதா  என்று பார்க்க வேண்டும். 

சில சமயங்களில் நிர்வாக செலவு அதிகம்  இருப்பதால், பயன்தாரர்களுக்கு மிகச்சிறியதே பயன் கிடைக்கிறது. 

பல தொண்டு நிறுவனங்கள் அவர்களின் செலவு விஹிதம் 40 முதல் 50 வரை நிர்வாக செலவில் செல்கிறது, அது போல் அல்லாமல் குறைந்த பட்சம் 5 -10 வரை, அதிக பட்சம் 15 சதவிஹிதம் வரை  நிர்வாக செலவு செல்லலாம். மேலும் அந்நிறுவனங்களில்  வேலை செய்பவர்களின்  உதவியோடு அதில் ஈடுபடுங்கள்.

கே: குருதேவ், என் தந்தை  நான்  எந்த மன அழுத்தமும்  எடுத்துக் கொள்ளாமல், மற்றவர்களுக்கு மன அழுத்தம் தருகிறேன் என்கிறார். நான்  மற்றவர்களுக்கு மன அழுத்தம் தருகிறேன் என்றால், அவர்கள் ஏன் எடுத்துக்கொள்கிறார்கள்? அவர்கள்  அதை சமாளித்துக் கொள்ள கூடாதா?

குருதேவ்: இதுவும் அதைப்பார்க்கும்  மற்றொரு வழி. சில சமயம்  மக்கள், 'நான்  இங்கு  உன் பொறுமையை சோதிக்கவே வந்துள்ளேன். கடவுள்  என்னை இந்த உலகில் படைத்தது அனைவரின் பொறுமையை சோத்திக்கவே' என்பார்கள். ஒரு பழைய பழமொழி ஒன்று   உண்டு, 'வசதிகளையும், பிரச்சனைகளையும் யாரும்  தருவதில்லை. அவை நம் எண்ணத்தால் உருவாவதே' நாம் எங்கு வேண்டுமானாலும் சௌகர்யமாகவும், எங்கு வேண்டுமானாலும் கஷ்டமாக  உணரமுடியும், அது  முழுவதும் நம்  விருப்பமே.

கே: குருதேவ், 'நாம்  ஒரு  உண்மையான குருவிடம் வரும் போது, நம்முடைய ஆற்றல்கள் தானாக வெளிப்படும்'  என்று  ஒரு பழைய  பழமொழி ஒன்று உண்டு அது உண்மையா? நான்   இங்கு ஆசிரமத்தில் உள்ள யானை கூட மௌத் ஆர்கன் வாசித்துப் பார்க்கிறேன்.

குருதேவ்: ஆம். இங்கு அது போல் நடக்கிறது. இசையே அறியாத பலர் பாடத் தொடங்கி உள்ளனர். பலர் கவிதை எழுதுகின்றனர். பல படைப்பாற்றல்கள்  வெளிவரப் பார்க்கிறேன். பழைய பழமொழியை உண்மையாகுகிறார்கள் போல் உள்ளது.  உங்கள்  மனம்   எப்போதெல்லாம் அமைதியாக தியானத்தில் உள்ளதோ, மகிழ்ச்சியாக உள்ளதோ, அதன் பயனாக  படைப்பாற்றல் வெளிவருகிறது. இது இயல்பானது தான், இதுபோல் நடக்கவில்லை   என்றால் தான் நீங்கள் ஆச்சர்யப்பட வேண்டும்.

கே: குருதேவ், இப்போதெல்லாம் அனைவரும் வெறுப்பான பேச்சுகளை பேசி, மக்கள்  மனதில் கொந்தளிப்பை  உருவாக்குகிறார்கள். அதற்காக  கைதும் ஆகிறார்கள். எந்த அரசியல் அன்பான பேச்சு பேசுவதில்லை.என்ன செய்வது குருதேவ்?

குருதேவ்: முதலில் நீங்கள் அந்த 'அனைவரும்' என்ற வார்த்தையை திருப்பி எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லோரும் அவ்வாறு செய்வதில்லை. ஒன்று இரண்டு பேர் இங்கும அங்கும் இருக்கிறார்கள். அவர்கள் அப்படி செய்தால்  தான், ஊடகங்கள் அவர்களை தேர்ந்தெடுக்கும். 
அதுபோன்ற வெறுப்பான பேச்சுகளை ஊடங்கங்கள் எடுக்கின்றன. அவர்களுக்கு  ஊடகங்களின் கவனம் வேண்டும். அதனால் அவ்வாறு செய்கிறார்கள். அவர்கள் கைதானால், ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் அவர் ஒரு கதாநாயகனாகி விடுவார். உங்களால் என்ன செய்ய முடியும்? அவர்கள் எதிர்மறை விளம்பரம் செய்கிறார்கள், ஏனெனில் அவர்களால் நல்ல முறையில விளம்பரம் செய்ய இயலாது. எளிதான முறையில் விளம்பரம் வேண்டும் என்றால் எதையேனும் யாரைப் பற்றியேனும் உளறிக்கொண்டே இருக்க வேண்டும் அல்லது எங்கேனும் வெறுப்பூட்டும் பேச்சுகள் பேச வேண்டும். ஆச்சர்யமாக மக்கள் பலர் அதற்கு கைத்தட்டுவார்கள், ஏனெனில் அவர்களுக்கு அது ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.  

இனிமையான பேச்சுகள், காதல்கதைகள் எல்லாம் இப்போது யாருக்கும் சுவாரஸ்யமாக இல்லை. 'ஏய் வா அவனை குத்தலாம்' என்றால் எல்லோரும் அதற்கு  இணுங்குகிறார்கள். இது தான் கும்பல் உளவியல் என்பது. கும்பலாக ஏதாவது உலகில் அழிக்கும் வகை செய்வது சுவாரஸ்யமாக உள்ளது.  கும்பல் என்றுமே ஆக்கபூர்வமாக எதையுமே செய்ததில்லை, எப்போதுமே அழிவுப் பாதையில் தான் அனைத்தையும் செல்கிறது. சில நேரங்களில் அழிவும் அவசியமே. இதற்கு சுதந்திர போராட்டமும் ஒரு உதாரணமே. இந்த குடியேற்ற திட்டத்தை முறியடிக்க நம் மக்கள் கும்பலாக சேர்ந்தார்கள். ஆனால் அமைதியாக, ஏனெனில் அதை வழி நடத்தியவர் ஒரு ஆன்மீக மனிதர் - மகாத்மா காந்தி. அவர் நாம் இப்போது செய்வது போல் சத்சங்கம் வைத்து, தியானம், பாடல்கள் என்று நாட்டைப் பற்றிய உலகைப் பற்றிய கருத்துகளையும் விவாதித்தனர். எனவே அப்போது இருந்த ஆட்சியை  கலைக்க ரத்தம் சிந்தாமல், வன்முறையில்லாமல் அதைச் செய்ய  ஒரு அமைப்பு இருந்தது.

அது உலக வரலாற்றில் ஒரு  தனித்துவமானது. கும்பலாக ஒரு அமைப்பு, ஆனால் அவர்கள்  எதையும்  அழிக்கவில்லை, யாரையும் காயப்படுத்தவோ, துன்புறுத்தவோ இல்லை. இதுபோன்ற கும்பல்   தான்  இப்போது உலகெங்கும் இருக்கிறது. அரபு நாடுகளில் பாருங்கள், மக்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்து, பல இழப்புகள்  நேர்ந்துள்ளன. நான் வேறு ஒரு புதிய அம்சம்  ஒன்றை கனவு காண்கிறேன். நல்ல புதிய ஆக்கப்பூர்வமான யோசனைகள் மற்றும்  திட்டங்களை மக்கள்  கொண்டு வரவேண்டும்.

இது போன்ற ஒரு  புரட்சிக்கான விதை ஒன்று தில்லியில் பிப்ரவரி 3ம்  தேதி  நிகழ்ந்தது. அங்கு சேர்ந்த மக்கள் கூட்டம்,ஊழல், ஒழிப்பு இயக்கத்தை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. சாதனையில் பதிவிடும் வண்ணம், மக்கள் ஒன்றுகூடி ஆக்கப்பூர்வமாக  அங்கு   உறுதிமொழி  எடுத்துக்கொண்டனர். அரசாங்கம் கொஞ்சம் அக்கறையோடு அங்கு சில காவலர்களை அமர்த்தி இருந்தனர். உள்ளே வரும் அனைவரும் தடுத்து பரிசோதிக்கப் பட்டார்கள். மக்கள் உள்ளே செல்லவும் வெளியே வரவும் பல மணி நேரம் ஆனது. எனினும் ஆச்சர்யப்படும், வகையில் அங்கு ஒரு பழிபோடும் எண்ணமும், வெறுப்பான பேச்சும் சிறிதும் இல்லை. எல்லோரும் ஆக்கப்பூர்வமான செயல் புரிய ஒன்று சேர்ந்து இருந்தனர். நம் இளைர்களிடம் சக்தி இருக்கிறது, நாம் தான் அதை நல்வழியில்  செலுத்த வேண்டும்.   கற்பனை செய்ய முடியாதபடி, இரண்டே மாதத்தில், அடிப்படை வளங்களும் இல்லாமல் தில்லியில் மட்டுமே 1000 திட்டங்கள்  முடிக்கப்பட்டன. இவை அனைத்தும் வாழும்  கலை மையம்  தத்தெடுத்த 17 சேரிகளில்,1000 சிறிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தொண்டர்கள் இப்போது 100 சேரிகளில் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். இந்திய   மாசு மற்றும் மோசடியில் தள்ளாடிக்கொண்டு  இருக்கிறது. எனவே மக்களிடையே  ஒரு   ஆர்வத்தைக் கொண்டுவர, இது போல் ஒரு ஆக்கப்பூர்வமான் ஒன்றைச் செய்ய வேண்டும்.இங்கு குமுதவதி என்ற ஒரு நதி ஒன்று உள்ளது. அது  கிட்டத்தட்ட வறண்ட நிலையில் உள்ளது. சில தொண்டர்கள், அந்த நதியை மறுபடியும் அதன்  பிறப்பிடத்திலிருந்தே உயிர்ப்பிக்கும்  ஒரு  எண்ணத்தோடு, அது வரும் 12 டேஹ்சில்ஸ் (ஒரே மாவட்டத்தை  ஒத்த) வேலை செய்கிறார்கள். இது ஒரு நல்ல முயற்சி. இது பல கிராமங்களின்  நீர்ப்பற்றாக்குறையை போக்கும். நீர் நிலை மிகவும் குறைந்து உள்ளது. 20 முதல் 30 அடி வரை  இருக்கும் இப்போது 600 அடிவரை கீழே சென்று விட்டது. இந்த தன்னார்வலத் தொண்டர்கள் அடை புத்துயிர் தர முயச்சிக்கிறார்கள். அவர்கள்  மழை நீர் சேகரிப்பு திட்டம்  மற்றும் பல முயற்ச்சிகள் செய்கிறார்கள். 

பல கோடி ரூபாய் அதற்க்கு முதலீடு செய்யவேண்டும். ஆனால் நம் மக்கள் அவர்களின் சொந்த செலவில் பெட்ரோல் மற்றும் கார் கொண்டு அந்த வேலை செய்கிறார்கள். இது தான் சேவை செய்வதால் வரும் பேரின்பம். இங்கு நம் இரு தொண்டர்கள் ஏழை மக்களுக்கு 1000 கழிப்பறைகள் கட்டும்  திட்டத்தை கையொப்பமிட்டு அதை இங்கு அறிவித்துள்ளனர்.

கே:  குருதேவ், கேள்வி கேட்கும் கலை பற்றி எனக்கு கூறுங்கள். ஏனெனில் சில நேரங்களில், பதில்கள் எனக்கு திருப்தியாக இல்லை அல்லது கிடக்கும் பதில்  எனக்கு  மிகவும் குழப்பமாக   உள்ளது.

குருதேவ்:  தியானம்! மனம் அமைதியின்றி இருந்தால் என்ன பதில் கிடைத்தாலும் அது உள்ளே செல்லாது. மனம் அமைதியாக இருந்தால், ஒரு சிறு சைகையே போதும் நமக்கு பதில் புரிந்து விடும் ஏனெனில் நாம் தான் அதன் பிறப்பிடமே ஆகும். நீங்கள் அமைதியாக இருக்கும் போது   பதில்கள் உங்களிடமிருந்து  வெளிவரும். அதனால் தான் சிலமணி நேரம் இளைப்பாற்றல் அவசியம். நீங்கள் அமைதியில்லாதவரிடம் என்ன  கூறினாலும், 'ஆனால்'  என்பார். நீங்கள் அவர்களுக்கு பதில் அளித்தாலும் 'சரி, ஆனால்' என்று கூறி  வேறு ஏதாவது பேசிக்கொண்டெ   இருப்பார்கள். இது முழுமையாக எண்ணங்களாலும், கொள்கைகளாலும்  நிரம்பி இருக்கும் மனதின் அறிகுறி. புதிதாக  அறிவோ ஞானமோ நுழைய வழியில்லை.


ஒருமுறை  ஒரு  சீடன், குருவிடம் வந்து சில கேள்விகள் கேட்டார்.  குரு கூறிய எந்த பதிலிலும் அவர் திருப்தி அடைய வில்லை. எனவே அந்த குரு,' சரி, வா தேநீர் அருந்தலாம்' என்றார். குரு அவரிடம்,' உனக்கு தேனீர் பிடிக்குமா?' என்றார். அவரும் ஆம் என்றார். குருவும்  தேநீரை கோப்பையில் ஊற்ற ஆரம்பித்தார். கோப்பை  நிரம்பினாலும் குரு தேநீரை ஊற்றிக்கொண்டே இருந்தார். தேநீரும் நிரம்பி கீழே வழிந்தது, அதைக் கண்ட சீடன், 'குருவே, ஏன்? கோப்பை நிரம்பிவிட்டது. தேநீர் வழிகிறது' என்றார். அதற்கு  குரு,' சிரித்துக்கொண்டே  அதுதான் உன் நிலையும். உன் கோப்பை நிரம்பியிருக்கிறது. நீ  இன்னும் வேண்டும் என்கிறாய். முதலில் குடி'  என்றார். பழங்காலத்தில் ரிஷிகள் எல்லாம் வேதத்தில், 'சரவண' என்று கூறியுள்ளனர்

முதலில் கேட்பது பின் 'மனன' அதாவது  அதை  நினைத்து எண்ணிக்கொண்டு இரு. ஒரு பதிலைக் கேட்டு  அதை எண்ணிக்கொண்டு இரு.பின் அதை உன்னுடைய  தாக்கிக்கொண்டு விடு. உன்னுடைய அனுபவமா என்று  பார்த்துக்கொள். எதையும் அடுத்தவர் கூறுகிறார் என்று நம்ப வேண்டாம். முதலில் ஒருவர் இதை தான்  ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டும். என் அனுபவம் என்னுடையது, உங்கள் அனுபவம் உங்களுடையது. நான் கூறுகிறே\ன்  என்று   எதையும் அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது . மேலும் பிறர் கூறுவதையும் உதாசீனப் படுத்தக் கூடாது. நீங்கள்  கேட்பவராக இருக்க வேண்டும். முதலில் கேட்டு, பின் அதை நினைத்து,பிறகு அதையே உங்கள் அனுபவமாக மாற்றிக் கொள்ள வேண்டும். அது ஞானமாக மாறும். அறிவு, ஞானமாகும். சரவணம்,மனனம் மற்றும் நிதித்தியாசம். கீதையில் 700 பாட்டையும் கூறிவிட்டு, பகவான் கிருஷ்ணர்,' பார் அர்ஜுனா. நான் கூறுவதைக் கூறி விட்டேன். உனக்கு எது சரியாக உள்ளதோ அதை எடுத்துக்கொள்' என்றார்.

இதுபோல் பேச்சில், நினைப்பில்  நம்பிக்கையில் சுதந்திரம் வேண்டும். நம்பிக்கை என்பது  தன்னால் ஒருவர்  தனக்குத் தானே வளர்த்துக்கொள்வது.

கே:  குருதேவ், காமம் தவறானதா? அல்லது அப்படியே நாம் எதை கட்டுப்படுத்துகிறோமோ   அது  என்னும்  வளரும்  என்று அதை அப்படியே  விட்டு விடலாமா?

குருதேவ்:  மிதமாக இருக்க வேண்டும்.எதுவுமே எல்லை மீறி செல்லக் கூடாது. இச்சை ஏன் என்றால் உங்களுக்கு செய்ய வேறு  ஒன்றும் இல்லை என்று  அர்த்தம். நீங்கள் சுறுசுறுப்பாக இருந்தால், அது உங்கள்  மனதை அவ்வளவாக பாதிக்காது. உங்கள் சக்தியை நீங்கள் ஆக்கப் பூர்வமாக பயன்படுத்தினால் நீங்கள் இன்னும் நடுநிலையில் இருப்பீர்கள்.

கே:  குருதேவ்,  ஆன்மீகப் பாதையில் இருப்பது சமயத்தில் என் அலுவலக  வேலைகளில்   என்னை  திறனற்றவனாக ஆக்கிவிடுகிறது. எந்த இரண்டையும் எப்படி சமநிலையில் வைப்பது?

குருதேவ்: அப்படியானால் ஆன்மீக பாதையை விட்டு விடுங்கள், உங்கள் துறையில் திறம்பட இருங்கள்.  நீங்கள் ஏன் உங்களை திறமையற்றவராக ஆக்கும் செயலில் ஈடுபட வேண்டும். ஆன்மீக பாதை உங்களை திறமையாக செயல் புரிய வைப்பதற்கே. அது உங்கள் திறமையை குறைக்கிறது என்றால் அதை விட்டுவிடுங்கள். ஆன்மீகத்திற்கு  'பை பை'  சொல்லி விட்டு   உங்கள் வேலையில் கவனம் செலுத்த முடிகிறதா  பாருங்கள். என்னைப் பொறுத்தவரை  நீங்கள் அதை முயற்சித்து பரிசோதிக்க வேண்டும்.