ஒருதலைக் - காதல்

ஜனவரி 28, 2014

பெங்களூர், இந்தியாகேள்விகளும் - பதில்களும்

குருதேவ்! நான் ஒரு தலைக் காதலினால் பாதிக்கப்பட்டவன். அதை இரு வழிக் காதலாக மாற்ற ஏதேனும் ஆலோசனை கூறுங்கள்?

குருதேவ்: எனக்கு இதில் அனுபவம் இல்லை! யோசிக்கலாம். எல்லாப் பிரச்சினைகளுக்குமே காதல் தான் காரணம். இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று, மக்கள் தங்கள் அன்பை அதிகமாக வெளிப்படுத்தி விடுகின்றார்கள், அல்லது சிலர் வெளிப்படுத்துவதே இல்லை. நீங்கள் மிக அதிகமாக அன்பை வெளிப்படுத்தினால், அதைப் பெற்றுக் கொள்பவருக்கு எவ்வாறு பதிலுருப்பது என்பது தெரிவதில்லை. உங்களை அந்த நிலையில் வைத்துப் பாருங்கள்யாரேனும் ஒருவர் உங்களிடம் மிக அதிகமாக அன்பு காட்டினால், உங்களுக்கு ஓடி விடலாம் என்று தோன்றும்.நீங்கள் நடு நிலையில் நின்று இறைமையிடம் ஒரு நிலைப்பட்ட அன்பு செலுத்துபவராக இருந்தால் அன்றி உங்களுக்கு அதைத் தாங்க முடியாது.

உலகளாவிய ஒரு நிலை அன்பு கொண்டவராக நீங்கள் இருந்தால் அப்போது பரவாயில்லை. கடவுளும் இத்தகைய ஒரு தலை அன்பினை உணருகின்றார் என்று நான் எண்ணுகின்றேன்ஒரு தலைக்காதலில் மிக அதிகமாகப் பாதிக்கப் பட்டவர் கடவுளே ஆவார். அவர் உங்களை மிக அதிகமாக நேசிக்கின்றார், ஆனால் நீங்கள் அதை கண்டு கொள்வது  கூட இல்லைஆகவே அவரும் இவ்வாறே வருந்திக் கொண்டிருப்பார். கடவுள் உங்களை நேசிக்கிறார், அவரது படைப்பு உங்களை நேசிக்கின்றது, ஆனால் நீங்கள் அதை அறிந்து கொள்வதே இல்லை. அதை உணர்ந்து உங்களுக்குள் அமைதியாக இருந்தால் அறிந்து கொள்ளலாம்இந்த பிரபஞ்சமே உங்களை நேசிக்கின்றதுஉங்களால் தாங்க முடியாத அளவு இந்தப் பிரபஞ்சம் உங்களை விரும்புகின்றது.

நீங்கள் இவ்வுலகத்தை விரும்புவதை விட அதிகமாக இவ்வுலகம் உங்களை விரும்புகின்றது. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களால் புரிந்து  கொள்ள அல்லது  கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்குக் கடவுள் உங்களை நேசிக்கின்றார்.

நான் கூறியது போன்று ஒரு விதையானது, மண்ணின் மேல் பரப்பில்  தூவப்பட்டால், முளை விடாது. அது போன்று மண்ணின் மிக ஆழத்தில் விதைக்கப்பட்டாலும் துளிர்க்காது. இடை நிலையில் விதைக்கப்பட வேண்டும். மிக ஆழத்தில், அல்லது காற்றில் இருக்காமல் சிறிது மூடப்பட்ட நிலையில் விதைக்கப்பட வேண்டும். அது போன்று அன்பின் வெளிப்பாடும், சற்று நடு நிலையில் இருக்க வேண்டும். நீங்கள் வார்த்தைகளில் வெளிப்படுத்தாத அன்பு உங்கள் செயலில் வெளிப்படும்.

குருதேவ்! பிறருடைய தவறுகளை நம்மால் எளிதாக கண்டு பிடிக்க முடிகின்றது, ஆனால் திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருக்கும்  நம்முடைய தவறுகளை காண முடிவதில்லையே? பிறருக்கு  எளிதாக கூற முடிகின்ற ஞானத்தை தம் மீது ஏன்  பயன் படுத்த முடிவதில்லை?

குருதேவ்: இது ஒரு நல்ல மெய்யுணர்தல் ஆகும். நாம் கற்பவற்றை பயன்படுத்துவதில்லை 
என்பதை உணருதலே மாற்றத்தின் ஆரம்பமாகும். தவறுகள் ஏன் கவர்ச்சியூட்டுகின்றனவாக  இருக்கின்றன என்று தெரியுமா? ஏனெனில், அவற்றின் மூலம் நாம் ஏதோ பெரு மகிழ்ச்சியை, சுகத்தை அடையப் போகிறோம் என்னும் எண்ணமாகும்.காலப் போக்கில் இது குறைந்து விடும்.

குருதேவ்! ஒரு குரு ஆன்மீக வளர்ச்சி ஆர்வலர்களுக்கு எவ்வளவு உண்மையை கூற வேண்டும், எவ்வளவு மறைக்க வேண்டும் என்று எப்படி முடிவு எடுக்கின்றார்?

குருதேவ்: உண்மையான குரு எந்த முயற்சியும் எடுப்பதில்லை.உள்ளத் தூய்மையும், தெளிவான சிந்தனையும் இயல்பான செயலும் அவருக்கு இருக்கும்.

குருதேவ்! நான் கற்றுக் கொடுக்கும் போது எனக்குத் தெரியும் என்னும் நிலையிலிருந்து செய்கின்றேன். உண்மையில், சில சமயங்களில், எனக்குத் தெரியாது. நான் ஞானம் தேடுபவன். எப்படி தெரியும், தெரியாது என்னும் இரு நிலைகளில் இருப்பது? கற்றுக் கொடுப்பவனாகவும், தேடுபவானகவும் ஒரே சமயத்தில் எப்படி இருப்பது?

குருதேவ்: ஒரே சமயத்தில் சில விஷயங்கள், தெரியும், பல விஷயங்கள் தெரியாது. அவ்வளவு தான்.எது தெரியுமோ அதைக் ஸ்திர  உணர்வுடன் கற்றுக் கொடுங்கள்.  எது தெரியாதோ அதற்கு வெற்றிட மற்றும் காலியிடத்தில் காத்திருங்கள். வாழ்கை என்பது கோபமான "எனக்குத் தெரியாது" என்பதிலிருந்து அழகான "எனக்குத் தெரியாது" என்னும் நிலைக்குச் செல்லும் பயணம் ஆகும். ஒருவர் வேதனையும் வெறுப்புணர்வும் கொண்டிருக்கும் போது "எனக்குத் தெரியாது, எனக்கு அதை பற்றிக் கவலையில்லை, என்னைக் கேட்காதே என்றெல்லாம் கூறுகின்றார். இந்த கோபமான எனக்குத் தெரியாது என்பதிலிருந்து ஆச்சர்யமான எனக்குத் தெரியாது என்னும் நிலைக்கு செல்லும் பயணம். வெறுப்பிலிருந்து வியப்பிற்கு செல்லும் பயணம்.

குழந்தையாக இருந்தபோது நாம் அனைவருமே இந்த அழகான "எனக்குத் தெரியாது" என்னும் வியப்பு நிலையில் இருந்தோம். துரதிர்ஷ்டவசமாக இந்த அழகான "எனக்குத் தெரியாது" நிலையிலிருந்து கோபமான "எனக்குத் தெரியாது" நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். இதை மாற்ற வேண்டும்.

குருதேவ்! எவ்வாறு மக்களின் ஆன்மீக வளர்ச்சி ஒரு நாட்டின் வளத்திற்கு  உதவ முடியும்? ஆன்மீக சார்புடைய மக்கள் எவ்வாறு ஒரு நாட்டைக் காக்க முடியும்?

குருதேவ்: ஆன்மீக சார்புடைய மக்களுக்கு வாழ்க்கையில் நல்ல மனப்பான்மை இருக்கும். அவர்களுக்கு தீய எண்ணப்போக்கு இருக்காது. அவர்கள் பணிவு, கண்ணியம், பிறரின் கௌரவம் காத்தல், பிறர் மீது அக்கறை, கருணை இவற்றுடன் செயல்படுவார்கள். இக்குணங்கள் அனைத்தும், ஆன்மீகப் பற்றுள்ளவர்களுக்கு இருக்கும். ஆன்மிகம் சார்புடைமையை ஏற்படுத்தும். அத்தகைய உடைமையுணர்வு இருக்கும் போது ஊழல் குறையும். சார்புடைமையற்ற நிலையில்தான் ஊழல் தோன்றுகின்றது.

குருதேவ்! ஹிந்து அரசர்களுக்கு ஒருங்கிணைந்த நாடு உருவாக்கப்படுதல் பற்றித் தெரியாதது சாணக்கியருக்கு வேதனை அளித்தது. அவ்வரசர்களுக்குள் நிகழ்ந்த பூசல்கள் அலெக்சாண்டரும், பின்னர் முகலாயர்களும் இந்தியாவை கைப்பற்றியாள அனுமதித்தது. இன்றும் ஆட்சியில் இருப்பவர்கள் சமயச்சார்பின்மை என்னும் உடைத்தோற்றத்தில் இருக்கின்றார்கள். எப்படி நாம் ஹிந்துமதத்தின் பெருமையை மீண்டும் உயிர்ப்பூட்டுவது?

குருதேவ்: உண்மையில் ஹிந்துயிசம் என்றால் உலகளாவியது என்று பொருள். இது ஒரு தனி சமயப் பிரிவு அல்ல. இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதா கிருஷ்ணனிடம் "யார் ஹிந்து" என்று கேட்டபோது, அவர்," யார் ஒருவர் முஸ்லிம் இல்லையோ, யார் ஒருவர் கிறிஸ்தவர் இல்லையோ, மீதமிருப்பவர் ஹிந்து" என்று கூறினார். அனைத்தையும் ஏற்றுக் கொள்பவர்கள் ஹிந்துக்கள். வாழ்வு முறையை சமயம் என்று வரையறுத்துக் கூறுவது கடினமாகும். மனித இனப் பொதுச்சமய அமைதி வழி என்பது தான் ஹிந்துயிசம். அது ஒரு வேத நூல், ஒரு புத்தகம், ஒரு வழிபாடு என்று கட்டாயப் படுத்துவதில்லை. உலகம் முழுவதும் ஒரு குடும்பம்,எல்லா வழிகளிலிருந்தும் ஞானத்தை ஏற்றுக்கொள்ளுதல் சிறப்பு என்று கூறுகின்றது. உங்களை அறிந்து கொண்டு பிறருக்குத் தொண்டு செய்யுங்கள். இது தான் கோட்பாடு.,

நான் அமெரிக்காவில் இருந்த போது, சிலரிடம் அமெரிக்க அரசியல் சட்டத்தை பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அது ஹிந்துயிசம் போன்றதே ஆகும். வேற்றுமைகளைப் போற்றுதல், வழிபாட்டு சுதந்திரம், அனைவருக்கும் தன்னுரிமை,மற்றும் நீதி, இவை அனைத்துமே அடங்கியது தான் ஹிந்துயிசம். இப்பிரபஞ்சம் பலதுறை திறன் வாய்ந்தது. ஒரு உண்மையை பல்வேறு வழிகளில் கண்டடையலாம். இது தான் ஹிந்துயிசம்.

துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டில் சுய மதிப்பு மிகக் கீழே சென்று விட்டது. ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் மக்கள் துன்புற்று, நாட்டின் மதிப்பும் கௌரவமும் கீழிறங்கி விட்டன. மகாத்மா காந்தியின் காலத்திற்குச் சற்று முன்பு, சுவாமி விவேகானந்தர் மக்களுக்கு, தங்கள் மதிப்பு கலாசாரம்,சமயம் ஆகியவற்றை மீண்டும்  நிலைநாட்டும் படி எடுத்துக் கூற முயற்சித்தார்.
மெக்காலே பிரபு, லண்டனுக்குச் சென்று, அரசி எலிசபெத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில்," இந்தியா முழுவதும் நான் பயணம் செய்து கவனித்ததில், பிச்சை எடுப்பவன், திருடன் என்று எவரையும் காணவில்லை. மிகுந்த செல்வம், உயர்ந்த அறநெறிகள், பண்பாற்றல் மிகுந்த மக்கள், ஆகியவை நிறைந்த இந்நாட்டின் முதுகெலும்பான ஆன்மீக கலாசாரத் தொன்மையை உடைத்தால் மட்டுமே இந்நாட்டை கைப்பற்றுவது என்பது இயலும்" என்று எழுதி இருந்தார்.

இது ஆங்கில பாராளுமன்றத்தில் அவர் அளித்த பிரபலமான உரையும் ஆகும். அதன் பின்னர் ஆங்கிலேயர், படிப்படியாக இந்தியக் கலாச்சாரத்தை அழிக்க முற்பட்டனர். மக்கள் தாங்கள் திறமையற்றவர்கள் என்று எண்ணிக் கொள்ள துவங்க வேண்டும் என்று கூறினார், அது வெற்றிகரமாக  நிகழ்ந்தது. நாற்பது மற்றும் ஐம்பதுகளில் மக்கள் . இந்தியாவிலுள்ள எதுவுமே சிறந்தது அன்று என்னும் எண்ணம். கொண்டிருந்தனர். ஆனால் காலம் மாறத் துவங்கிவிட்டது. நாம் இந்தியாவில் சில நல்லவை, வேறெங்கிலும் போல சில நல்லன அல்லாதவையும் இருக்கின்றன என்று கூறத் துவங்கி விட்டோம். ஏனெனில் நமது கலாசாரத்தில் நல்லன அல்லாதவை இடைசெருகப்பட்டு விட்டன.

புராதனமாக, ஜாதி முறை என்பது தொழில் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டிருந்தது. அந்தந்த தொழிலுக்குரியோர் வகைப் படுத்தப்பட்டிருந்தனர். அது பின்னர் பரம்பரையாக ஆயிற்று. பின்னர் இறுக்கம் அதிகரிக்கத் துவங்கியது.ஜாதி விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் தண்டனையாக ஜாதியிலிருந்து சில காலம் தீண்டத்தகாதவராக தள்ளி வைக்கப்பட்டனர். உதாரணமாக, வணிககுழுவிலுள்ள ஒருவர் தவறு செய்தால் விலக்கப்படுவது போன்றது அது. தீண்டாமை என்பது ஹிந்து சமயத்திற்கு பெரும் பிரச்சினை ஆயிற்று.பல கால கட்டங்களில்,துறவிகள் தீண்டாமையை ஒழிக்கப் பணியாற்றி வெற்றி கண்டனர். தலித்துகளின் பரம்பரையுரிமை என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளேன். பல புனித மகான்கள் தீண்டத்தகாதோர் இனத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

சுய மதிப்புக் குறைவு என்பதைப் பார்த்தோமேயானால், ஹிந்துயிசமில் ஒரு தனிப்பெரும் தலைவர் கிடையாது. அது வாழ்வியல் முறையாகும். அதனால் அதில் சில நன்மைகளும் குறைகளும் உள்ளன.குறை என்னவென்றால், சீர்மைபடுத்த இயலாது. ஆனால் வளர்ச்சிக்கு நிறைந்த வாய்ப்புக்கள் உள்ளன. சுய மதிப்பை அடைய சமயம் மட்டும் போதாது, சுய மதிப்பு கௌரவம் இவற்றை மீண்டும் அடைய, ஆன்மீக நிலையும் மிக அவசியமானது ஆகும்.

மனதை வலுப்படுத்துதல்

ஜனவரி 27, 2014

பெங்களுரு இந்தியா

கேள்வி பதில்கள்


குருதேவ்! மனம், உடல் ஆத்மா ஆகியவற்றில் எது பலமானது? இம்மூன்றையும் எவ்வாறு நல்வழியில் நான் பயன்படுத்த முடியும்?

குருதேவ்: ஆத்மாவிற்கு அதற்குறிய பலம் உள்ளதுமனதிற்கும் பலம் உள்ளது. உடலுக்கும் அதற்குறிய இடம் உள்ளது. ஒவ்வொன்றும் அவைகளுக்குறிய பலத்தினைக் கொண்டுள்ளது. அவைகளுக்குறிய பலத்துடன் சமமாக வைத்திருங்கள்இன்று காலையிலிருந்து எதுவும் உண்ணாமல் இங்கு ஒரு இளைஞர் காத்திருந்தார். குருதேவ் பலரை சந்தித்துக் கொண்டு மிகுந்த  வேலையில் ஈடுபட்ட நிலையில் இருக்கின்றார். அவரைக் காணும் வரையில் சாப்பிட மாட்டேன் என்ற எண்ணத்துடன் காத்திருக்கின்றார். இவ்வாறு செய்தால் எப்படி சரியாக இருக்கும்? நீங்கள் இப்படி செய்யக் கூடாது.

உங்கள் உடலை அதற்குத் தகுந்த வகையில் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். சரியான உடற்பயிற்சி செய்து உரிய வேளையில் உணவருந்த வேண்டும்எப்போதுமே நான் கூறுவேன்; ஏதோ ஒரு வேலையில் ஈடுபட்டிருப்போம் ஆயினும் சரியான காலத்தில் உணவு உட்கொள்ள வேண்டும்இல்லையெனில் எனக்கு அது ஒரு அதிகப்படியான பாரமாகி  நீங்கள் உரிய காலத்தில் உணவு எடுத்துக் கொண்டீர்களா இல்லையா என்று வேறு நான் கவனித்துக் கொள்ள வேண்டும்தன்னை தானே கவனித்துக் கொள்ளுங்கள்உணவு எடுத்துக் கொண்டு பணியில் ஈடுபடுங்கள். உரிய காலத்தில் உணவு உட்கொள்ளுதல்உடற்பயிற்சி, சாதனா ஆகியவற்றை செய்தல் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுவது மிக அவசியமாகும். மனதை பலப்படுத்துவதற்கு ஞானம் தேவை. ஒவ்வொரு நாளும் ஞான உபதேசங்களைக் கேளுங்கள்.

அன்றாடப் பணிகளில் ஈடுபடுவதாலும்மக்களை சந்திப்பதாலும் மனதில் பல எண்ணங்கள் எழுகின்றன. மனம் அவற்றால் அலைக்கழிக்கப்படுகின்றது. விருப்பங்கள், வெறுப்புகள், பொறாமை, பேராசை, சபலங்கள் போன்றவை மனதை கீழே வீழ்த்துகின்றன. ஒவ்வொரு நாளும் மனதைத் தெளிவாக வைத்திருத்தல் முக்கியமானது. எப்படி தினமும் ஒன்று அல்லது  இரண்டு முறை பல் துலக்குவது, குளிப்பது ஆகியவற்றைச் செய்கின்றீர்களோ அவ்வாறு ஞானச் செய்தியினை படிக்கவோ,கேட்கவோ வேண்டும். அப்போது மனமும் அறிவும் தூய்மையாக இருக்கப் பெறும்
"நீ ஏன் மரணத்தை நினைவில் கொள்ளுவதில்லை? ஒரு நாள் நீ இறக்கப் போகின்றாய்! என்று நீங்கள் மனத்தைக் குற்றம் சாட்டுங்கள். மரணம் என்னும் எண்ணத்திலேயே மனதில் உள்ள ஒழுங்கின்மை மறைந்து விடும். வாழ்க்கை நிலையற்றது என்று உணரும் அந்த நொடியிலேயே மனம் சந்தோஷம் அடைந்து விடும். வாழ்க்கை விரைந்து செல்லக் கூடியது. சில காலமே வாழ்வோம். எவ்விதமான சிரமங்கள் ஆனாலும் அவற்றை தாங்கிக் கொள்ளுவோம்.என்னன்ன நற்பணிகளோ அவற்றை செய்துவிட்டு போவோம்.

இங்கு சோம்பி இருப்பதற்காக வரவில்லை. இவ்வுலகில் நாம் வந்ததற்கு காரணம் ஏதேனும் செய்வதற்கே! அதை செய்வோம். இத்தகைய உணர்வு எழ வேண்டும். ஏதேனும் பணிகளை எப்போதும் செய்து கொண்டிருந்தாலும் மனக்கவலைகள் குறையும். சரி ! இப்போது எவ்வாறு ஆத்மாவைப் பலப்படுத்துவது? ஆத்மா ஏற்கனவே பலம் உள்ளதாகவே இருக்கின்றது. கடவுள் என்னுடையவர் என்னும் நம்பிக்கை இருக்கும் போது ஆத்மாவின் பலம் அதிகரிக்கின்றது. எது எனக்கு நிகழ்கின்றதோ  அது எனக்கு நல்லதே ஆகும் என்னும் திடமான தீர்மானம் அவசியம் ஆகும். எப்போதுமே நிகழ்வதெல்லாம் எனக்கு நன்மையே. இன்று ஏதேனும் சரியாக நிகழவில்லை அதை விட மேலான ஏதோ ஒன்று காத்திருக்கின்றது, அதனால் தான் அது இன்று நிகழவில்லை என்னும் உறுதியான எண்ணம் மனதில் இருக்க வேண்டும். 

இந்த ஆஸ்ரமம் எப்போதும் உங்களுக்காகத்  திறந்திருக்கின்றது. எப்போதெல்லாம், இங்கு வர வேண்டும் என்று தோன்றுகின்றதோ, சோர்வுற்று வருந்துகின்றீர்களோ அப்போதெல்லாம் இங்கு வாருங்கள், சேவையில் ஈடுபடுங்கள். தாஸ் கபி உதாஸ் நஹி ஹோதே (தொண்டு செய்பவன் எப்போதுமே வருந்த மாட்டான்).உங்களின் பலம் அதிகமாக இருக்கும் போது, பெட்ரோல் நிரம்பி இருக்கும் போது காரை ஓட்டிச் செல்லுங்கள். காலியானவுடன் இங்கு திரும்பி வாருங்கள். இந்த உடல் ஒரு வாகனத்தை போன்றது தான். இவ்வுடல் ரதம் என்றே சாஸ்த்திரங்களில் அழைக்கப் பட்டு வருகின்றது. மனம் தான் சாரதி (ரதம் ஓட்டுபவன்) அதில் பயணம் செய்வது ஆத்மா ஆகும்.

(அரங்கத்தினரில் ஒருவர் கேட்ட கேள்வி செவிக்குப் புலனாகவில்லை)

குருதேவ்: ஏற்றுக்கொள்ளுதல் என்றால் என்ன? எதை ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்அழகான ஒன்றை, "இது அழகாக உள்ளதுஇதை ஏற்றுக் கொள்ளுகின்றேன் என்று கூறுவீர்களாஏற்றுக் கொள்ளுதல் என்பதே, எது ஒன்றை ஒப்புக்கொள்ள முடியாதோ அதை ஏற்றுக் கொள்ளுவது தான். எதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது? அரைகுறையான, செம்மையற்ற எதையும் ஏற்றுக் கொள்ள விரும்ப மாட்டீர்கள். உங்களுக்கு அருகில் அமர்ந்து இருப்பவர் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத எதையாவது செய்கிறார் என்று வைத்துக் கொள்ளுவோம். தும்மிக் கொண்டோ, அல்லது விசித்திரமாக எதையோ செய்து கொண்டிருப்பதாக வைத்துக் கொள்ளுவோம். நீங்கள் தியானம் செய்து கொண்டிருக்கும் போது, அருகில் அமர்ந்திருப்பவர் ஏப்பம் விட்டுக் கொண்டிருந்தால், "கடவுளே! நான் தியானம் செய்ய விரும்புகிறேன்.இந்த மனிதரின் ஏப்பத்தை கேட்டுக் கொண்டிருக்க இங்கு வரவில்லை! என்றுதான் எண்ணுவீர்கள். 

நீங்கள் செம்மையான சூழ்நிலையை விரும்புகிறீர்கள், அருகிலிருப்பவர் பல்வேறு விதமான சப்தங்களை எழுப்பிக் கொண்டு உங்களுக்குத் தொல்லை தருகின்றார். அச்சமயத்தில், உங்கள் மனதில் ஒரு இடம் ஒதுக்கி, "சரி! இவர் இப்படித்தான். நாம் ஏதேனும் செய்யலாம். தியானம் செய்து முடித்த பின்னர், அவருக்கு த்ரிபலா சூரணம் தேவையா என்று கேட்கலாம். அவரது வயிறு சரியில்லை. அவர் உடலில் ஏதோ கோளாறு. வாதம் அதிகமாயுள்ளது. அதிகம் உருளைக்கிழங்கு சாப்பிட்டிருக்கலாம் என்று எண்ணுங்கள். அவரது இனிமையற்ற, செம்மையில்லாத நிலைக்கு நீங்கள் உதவக் கூடுமானால் அதைச் செய்யுங்கள் அல்லது செம்மையற்ற அந்நிலைக்கு ஒரு இடம் ஒதுக்குங்கள். அது உங்களுக்குப் பொறுமையை ஏற்படுத்தும். இதுதான் ஏற்றுக் கொள்ளுதல் என்பது. ஏற்றுக்கொள்ளுதல் என்பது செம்மையற்றவைக்கு ஒரு இடம் அளித்தல் என்பதாகும். வாழ்க்கையில் செம்மையற்றதிற்குச் சிறிது இடம் ஒதுக்குங்கள். அது உங்களுக்கு மிகுந்த பலத்தை அளிக்கும். பொறுமையும் அதிகரிக்கும். ஒன்றுமில்லாத விஷயத்திற்கு கோபப்படுவதையும் தடுக்க உதவும். எது ஒன்றையும் ஏற்றுக்கொள்ளாத நிலையிலேயே ஒருவர் கோபப்படுகின்றார்.

அதனால் எல்லாவற்றையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் கூறவில்லை. ஒரு அநீதி நிகழும்போது, அதை  எதிர்க்க வேண்டும். அது அநீதி என்று ஏற்றுக் கொண்டு, அது அநீதி என்று கண்டறிந்து கொண்டு அதற்கெதிராகப் போராட வேண்டும்.அடுத்தது, அகங்காரம். உங்களிடம் 'தான்' என்னும் அகந்தை இருப்பதை அறிந்தால், சரி அது இருக்கட்டும். அதை தகர்க்கவோ அழிக்கவோ முற்பட  வேண்டாம். ஏன் அதைச் செய்ய வேண்டும்அகந்தை இருக்கட்டும். ஆனால் அதற்குறிய இடத்தில் அதை வையுங்கள். எல்லோரிடமும் அதை காட்டவேண்டாம். அப்போது நீங்கள் தோற்றடிக்கப்படுவீகள். உங்களுக்குப் புரிகின்றதாஉங்களுக்கும், மற்றவர்களுக்கும் இடையே உருவாக்கப்படும் தடை வேலியே அகந்தை ஆகும்அதற்கான மாற்று மருந்து நட்புடனும் இயல்பாகவும் இருப்பது தான். முற்றிலும் இயல்பாக இருப்பது தான் மாற்று மருந்து.

தான் என்னும் அகந்தை உங்களைத் தொல்லைப்படுத்தும் போது, அதினின்றும் வெளி வருவது மிகச் சுலபம். எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா? கிறுக்கு போல ஒரு நாள் நடந்து கொள்ளுங்கள். அனைவரும் சிரித்து மகிழட்டும். அவர்கள் உங்களை பார்த்து சிரிக்கும் போது நீங்கள் அதை வசதியாகவே உணருங்கள். அடுத்த நாள் நீங்கள் சாதாரணமாகி விடுவீர்கள். இயல்பாகவும், வசதியாகவும் உணருதலே உங்களைப் பற்றி எண்ணி துன்புறும் அனைத்திற்கும் மாற்று மருந்து ஆகும்.

குருதேவ்! உலகில், மீட்சிக்குப் பல பாதைகள் இருக்கின்றன. விடுதலைக்கு நிச்சயமான ஒரு வழியைக் கூறுங்கள்.

குருதேவ்: அதை தான் நான் செய்து கொண்டிருப்பதாக எண்ணுகின்றேன்! நிச்சயமான வழியைத் தான் நான் கூறிக் கொண்டிருக்கின்றேன். உங்களை என்ன துன்புறுத்துகின்றதுஎப்போது மனம் துன்புறுகின்றதோ, எதிர்மறை எண்ணங்கள் மேலோங்குகின்றதோ, மூச்சுத் திணறுவது போன்று மகிழ்ச்சியற்று உணருகின்றீர்களோ, 'ஞானம் தேடுபவருக்கு ஞானப் பேழை' என்னும் புத்தகத்தை படியுங்கள். எதிர்மறை உணர்ச்சிகளை எவ்வாறு கையாள்வது? அதிகப்படியான காமம்,கோபம், ஆணவம்,பற்று, மருட்சி ஆகிய ஆறு எதிர்மறை உணர்ச்சிகள். உள்ளன. மனம் இவற்றில் சிக்கிக் கொள்கின்றது. உங்களுக்கு மகிழ்ச்சி தருவதில்லை. இவற்றிலிருந்து விடுபடவும் முடியாது. ஏனெனில், விடுபடுவது மேலும் அதிக வலி அளிக்கக் கூடியது. இதுதான் மருட்சி என்பது. இதை சமஸ்க்ரிதத்தில் மோஹா என்று அழைக்கின்றோம். இதன் பொருள் பற்றுதல். தொண்டையில் ஏதோ சிக்கிக் கொள்வது போன்றது ஆகும். விழுங்கவும் முடியாது, துப்பவும் முடியாது என்னும் நிலை ஆகும். இத்தகைய நிலைதான் மோஹா எனப்படுவதாகும்.

எதிர்மறை எண்ணங்களைக் கையாள்வத்ற்குப் பல வழிகள் உள்ளன. எப்படியாவது அவற்றை கையாண்டு விட்டால் சரி. அப்போது நீங்கள் விடுதலை அடைந்து விடுவீர்கள். பிராணாயாமமும் தியானமும் இவ்வழிகளில் ஒன்றாகும்.

குருதேவ்! சில தினங்களுக்கு முன்னர் தாங்கள், யோகாவின் அடிப்படை வியப்பு நிலை தான் என்று கூறினீர்கள்.யோகா என்பது என்ன என்று எங்களுக்குக் கூற முடியுமா ?

குருதேவ்: சிறிய மனத்தையும் பெரிய மனத்தையும் ஒருங்கிணைப்பது தான் யோகா. உடல், மூச்சு, மனம் இவற்றிடையே இணக்கத்தை ஏற்படுத்துவதுதான் யோகா. உடல்மனம் இரண்டுமே இருக்கின்றன. இவையிரண்டும் சீரமையாவிடில் அது யோகா அல்ல. யோகாவில், நீங்களாக இவைகளை இணைப்பதில்லைமூச்சு, உடல், மனம் இவற்றை  சீரமைக்கின்றீர்கள், அதனால் மிக நல்ல உணர்வினை அடைகின்றீர்கள். உங்கள் கையை அக மன உணர்வின்றியே நீங்கள் தூக்கலாம். ஆனால், அக உணர்வுடன் நீங்கள் கையை உயர்த்தும் போது, அதில் ஒரு தாள லயத்தினை உணருகின்றீர்கள். அதில் ஒரு நல்லுணர்வை பெறுகின்றீர்கள். அது போன்று, சிறு மனமானது, இயற்கை முழதளாவிய பெரிய மனத்துடன் ஒருங்கிணைவது தான் யோகா.  

குருதேவ்! கர்மத்திற்கு சத்வா (தூய்மை) தேவை என்று கூறப்படுகின்றது. ஆயின், ரஜஸ் தேவையில்லையா? என்னுடைய நிலையில், நான்,அதிகமான சாதனா செய்யும் போது வேறெந்த வேலையும் செய்ய விருப்பமில்லாமல் இருக்கின்றது.

குருதேவ்: சத்வா என்பதற்கு அறிவுத்தூய்மை என்று ஒரு பொருளும் உள்ளது. ஒரு காரியத்தை செய்வதற்கு ரஜோகுணம் தேவை. ரஜோகுணம், தமோகுணம் சதோகுணம் எனப்படும் மூன்று குணங்களுமின்றி உடலானது உறுதியாக இருக்காது. உடலில் இந்த மூன்று குணங்களுமே இருக்க வேண்டும். அவற்றில் சத்வ குணம் முக்கியமாக இருத்தல் வேண்டும்.ரஜோ குணம் மற்றும் தமோ குணம்இவை அடங்கி இருக்கும். ஆனாலும் நிச்சயமாக அவை இருக்கும். ஒரு சமயம், ஒரு அணு அறிவியல் நிபுணர் இங்கு வந்திருந்தார். ஒரு செயல்திட்ட உருப்படத்தை கொண்டு வந்திருந்தார். அதில் மூன்று ஆரக்கால்கள் இருந்தன. இந்த மூன்று விசைச்சேர்க்கைகளினாலேயே இவ்வுலகம் தாங்கி நிற்கப்பட்டு இயக்கப்படுவதாக கூறினார். ஒரு காற்றாலையின் மூன்று விசிறிகள் போன்று இந்த ஆரக்கால்கள் ஒத்திசைந்து மேலும் கீழும் சென்று வருவதாகக் கூறினார். அது போன்று, இம்மூன்று குணங்களினால், இவ்வுலகம் இயங்கி வந்திருக்கின்றது, இனியும்,முடிவற்றதாக இயங்கி வரும்.

சத்குணத்தின் பெயரில் சோம்பேறி ஆகிவிடாதீர்கள். சாதனாவின் மூலம், சதகுணம் பெருகுவதாக எண்ணுகின்றோம். ஆனால் தமோ குணம் பெருகி விட்டால், சோம்பேறித்தனம் ஏற்படும்.கவனித்துக் கொள்ளுங்கள். எனவே சத்குணத்துடன் பணியில் நிலையுறுதியும் பெறவேண்டும்.முதிய வயதில், அதாவது 70, 80 வயதுகளில், ரஜோ குணம் மற்றும் தமோ குணம் தாமாகவே குறைந்து விடும். தூக்கமும் குறைந்து விடும். அப்போது, படியுங்கள், சிந்தியுங்கள், எப்போதும் உங்களை சுறு சுறுப்பாகவே வைத்துக் கொள்ளுங்கள்.

குருதேவ்! தாங்கள் தரும் ஒவ்வொரு துளி ஞானமும் ரசமுள்ளதாக இருக்கின்றது. எளிதாகவும் உள்வாங்கிக் கொள்ள முடிகின்றது. யோக வசிஷ்டத்தைப் பற்றி எளிமையான முறையில் எடுத்துக் கூற முடியுமா?

குருதேவ்: இது ஒரு பெருங்கடலை ஒரு சிறு பானைக்குள் அடக்குவது போன்றது.இயலாத செயல். யோக வசிஷ்டம் விண்வெளியைப் போன்றது. பெருங்கடலைப் போன்றது. நீங்களே அதில் ஆய்வுப் பயணம் சென்று அறியவேண்டும். தன் விளக்கம் உள்ளது. ஞான அர்த்தம் உள்ளது. குறிஈட்டுள்ளது. உள்ளுயிர்த் தன்மை என்பது விண்வெளியைப் போன்றது, காலியானது, பெருங்கடலைப் போன்றது, முழுமையானது.

இன்று விஞ்ஞானிகள், இப்பிரபஞ்சத்திலுள்ள எல்லா கோள்களும், விண்மீன்களும், தங்களை சுற்றியுள்ள வெற்றிட அழுத்தத்தால் ,உருண்டையாகவே இருக்கின்றன என்று கூறுகின்றார்கள். சூரியனைச் சுற்றியுள்ள வெற்றிடமானது அழுத்தமும் சக்தியும் மிகுந்து எப்போதும் சூரியனை வட்ட வடிவமாகவே வைத்துள்ளது. வெற்றிடம் என்பது சூரியனை விட பத்து லட்சம் அளவு அதிக சக்தியுடையது. இருட்டாக உள்ள அந்த இடம் விண்மீன்களை விட பல மடங்கு சக்தி வாய்ந்தது. வேதங்களில் கூறப்படுவது இதுதான் இருட்டை இருட்டு கவ்வியது தான் ஆதியானது என்பதாகும். இன்று விஞ்ஞானிகள் கூறும் இருட்டு மற்றும் கரும் சக்தி என்பதெல்லாம் இந்த சக்தி தான்.
ரிக்வேதத்தில் .படைப்புச் சூத்திரம் என்று ஒரு சூத்திரம் உள்ளது. இருட்டை இருட்டு சூழ்ந்து கொள்வது என்பதை மக்களால் புரிந்து கொள்ள இயல வில்லை. அது ஏதோ ஒரு கவியின் கற்பனை அல்லது கவி ஏதோ கூற முயற்சித்து அது பொருளற்றதாகி விட்டதாக எண்ணினார்கள்.  வெகு காலத்திற்கு மக்கள் இவ்வாறே அதற்குப் பொருள் விளக்கம் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று அறிவியல் வல்லுனர்கள் கூறுவதில் ஒத்திசைவு உள்ளது. அதனால் தான் அறிவியலும் ஆன்மீகமும் நெருங்கியவை. பௌதீக இயலும், சக்திச் சொட்டுப் பொறியியலும் நீங்கள் படிக்கும் போது, வேத ஞானதிற்குள் சென்று விடுகின்றீர்கள். எக்காலத்திலுமே மக்களுக்கு ஞானம் வழங்கப் படாமல் இல்லை.ஞானம் வழங்கப்பட்டு உள்ளதுஅதை மக்கள் புரிந்து கொண்டார்களா இல்லையா என்பது வேறு விஷயம்.

குருதேவ்! தயவு செய்து பிராணப் பிரதிஷ்டை பற்றிக் கூற முடியுமாதானியங்கள் மற்றும் நீரில் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்வார்கள் என்று கேள்வியுற்றிருக்கின்றேன்.  அதன் முக்கியத்துவத்தைக் கூற முடியுமா?

குருதேவ்: ஆம்.ஆகமங்களில் அது பற்றி நிறைய கூறப்பட்டுள்ளது. ப்ராணா (சக்தி) சிலை அல்லது விக்ரஹத்தில் செலுத்தப்படுகின்றது. ஒரு கோவிலில் பல சிலைகள் உள்ளன. ஆனால் எல்லாமே வழிபாட்டுக் குரியவையாக இருப்பதில்லை.கர்ப்பக் கிரஹத்தில் உள்ள விக்ரஹம், சிலை மட்டுமே ஆராதிக்கப்படுகின்றது. அதற்கு, பலவிதமான சமயச் சடங்குகள் செய்கின்றார்கள். முதலில் மந்திரங்களை ஜபித்து, விக்ரஹத்தை குறிப்பிட்ட நாட்களுக்கு நீரிலும் பின்னர் தானியங்களிலும் வைக்கின்றார்கள். கோவில் உள்ள இடத்தில் தானியங்களை விதைத்து, அவை முளையிடுகின்றன. பலபடிகளில் இச்சடங்குகளை செய்து, காற்றுஆகாய வெளி,நெருப்பு,நீர்,சப்தம் ஆகியவற்றிலிருந்து சக்தி விக்ரஹத்துள் செலுத்தப்படுகின்றது.

சிலையை விட அதனடியில் உள்ள மண்டலா அல்லது யந்த்ரா என அழைக்கப்படும் வரைபடம் உள்ள செப்புத் தகடு மிக முக்கியமானது. அது ஒரு மின்சுற்று வரை படம். ஒரு டிரான்சிஸ்டர் அல்லது தொலைக் காட்சிப் பெட்டியைத் திறந்தால், அங்கு ஒரு மின்சுற்று வரை படம் இருப்பதைக் காண்பீர்கள். உங்களுக்கு அது பொருள் இல்லாத செப்புக் கம்பிகள் இங்குமங்குமாகச் செல்லும் ஒரு வரைபடமாகத் தோன்றும். ரேடியோவினுள்ளும் இவ்வாறே இருப்பதைக் காணலாம். ஆனால் இந்த வரைபடம் மிக முக்கியமானது. அது போன்றே விக்ரஹத்தின் அடியிலும் இத்தகைய வரைபடம் உள்ளது. அது நேர்மறை சக்தியினைக் காக்கும் வலிமை உள்ளது.மக்கள் வழிபடும் போது, அவர்கள் அந்த அதிர்வலைகளை உணருகின்றார்கள். இது மிகவும் பழமையானது. துரதிர்ஷ்டவசமாக பெரும்பான்மையானவர்கள் இதை அறியாமல் இருக்கின்றார்கள். மிகச் சிலரே இதை அறிந்திருக்கின்றார்கள்.

குருதேவ்! நமது சடங்குகள் அனைத்திலும் நீர் உபயோகப்படுத்துவதன் முக்கியத்துவம் என்ன?

குருதேவ்: நமது உடலில் 60 சதவீதம் நீர்தான் உள்ளது. உணர்வுகளுடனும், சப்தத்துடனும் நீரின் ஒலி அலை அதிர்வு ஏற்படுகின்றது. மந்திரங்கள் நீருடன் ஆழ்ந்து கலந்து விடுகின்றன. நீர் எவ்வாறு வெவ்வேறு விதமான உணர்ச்சிகளுக்கு பிரதிபலிப்பாக உள்ளது என்பது பற்றி ஒரு அழகான காட்சிதொகுப்பு நமது வலைத்தளத்தில் உள்ளது. ஒரு பாட்டிலில் தண்ணீர் உங்கள் முன்னால் வைத்துக் கொண்டு," நான் உன்னை வெறுக்கின்றேன்" என்று கூறுங்கள். நீரிலுள்ள படிகங்கள் வேறு விதமாக ஆகும். அது போன்று நீருக்கு அருகில், நேர்மறையான பண்ணிசைப்பு நிகழும் போது, அதில் ஒத்திசைந்த அழகிய அதிர்வுகள் ஏற்படும். ஜப்பானிலிருந்து ஒருவர் இத்தகைய பரிசோதனைகளை நடத்தி, அது கணினினித் தொடர்பில் உள்ளது. மிக ஆச்சரியமானது.

குருதேவ்! தொண்டு, சாதனா, சத்சங்கத்தில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் பட்சத்தில் ஏன் முக்தி நிலையை தேடவேண்டும்? பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பால் ஏதேனும் இருக்கின்றதா?

குருதேவ்: மகிழ்ச்சியை விரும்பாதவன் மோக்ஷத்தை அடைகின்றான்.மோக்ஷத்தை விரும்பாதவன் அன்பினை அடைகின்றான் .மகிழ்ச்சிக்கான தேடுதல் இல்லாத போது மோக்ஷம் கிட்டுகின்றது.
ஏன் மக்கள் தற்கொலை செய்து கொள்ளுகின்றார்கள்ஏனெனில் அவர்கள் மகிழ்ச்சியை தேடுகின்றனர். துன்பத்தைப் பற்றிய பயமும் மகிழ்ச்சிக்கான தேடுதலும் முடிவில்லாமல் போகும் போது தற்கொலை எண்ணம் தோன்றுகின்றது.

குருதேவ்! கடந்த பத்து ஆண்டுகளாக நான் இரண்டே இரண்டு பிரச்சினைகளையே சந்தித்து வருகின்றேன். இதிலிருந்து நான் எப்போது விடுபடுவேன்? வாழ்வில் வித்தியாசமான பிரச்சினைகள் இருந்தாலும் பரவாயில்லை.

குருதேவ்: பிரச்சினைகள் பாதியாகக் குறைக்கப்பட்டாலும் அவையின்றி அமைதியின்மை ஏற்படும்! சற்றுப் பிரார்த்தனை செய்யுங்கள். நன்மைகள் ஏற்படும். தூய்மையான உள்ளத்துடன் பிரார்த்தனை செய்தால் கடவுள் கேட்டதை கொடுப்பார்.ஆழ்மனதிலிருந்து "இது வேண்டும்" என்னும் பிரார்த்தனை எழுந்தால், தாமதமின்றி அது கிடைக்கும்.

குருதேவ்! விசாலாக்ஷி மண்டபம் யாருடைய வடிவமைப்புமற்றும் கட்டிடக்கலை? அது வெனிலா ஸ்ட்ராபெரி கேக் போன்று மிகுந்த சுவையுடன் உள்ளது. அதைப் பார்த்தாலே எனக்கு மிகுந்த அமைதி ஏற்படுகின்றது

குருதேவ்: நமது பயிற்சிகள் மற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் கூரை வேய்ந்த கொட்டகைகளிலேயே நடைபெற்று வந்தன. மழை பெய்யும் போது, ஈரமில்லாத இடங்களுக்கு தங்கள் இருக்கைகளை மாற்றிக்கொள்வார்கள். கடுமையாக மழை பெய்யும் போது எல்லாவற்றையுமே நிறுத்தி விட வேண்டியது இருக்கும். இவ்வாறு தான் பழைய வளாகத்தில் நிகழ்ந்து வந்தது. ஹாங்காங்கிலிருந்து ஒரு கனவான் "குருதேவ்! உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் இங்கு வருகின்றார்கள். அவர்கள் மழையில் நனைவதையோவசதியின்றி இருப்பதையோ நீங்கள் விரும்பவில்லை. எனவே ஒரு ஒரு அரங்கம் அமைக்க வேண்டும்" என்று கூறினார். ஒரு வரைபடம் வரைந்து இது போன்று அமைப்போம் என்று கூறினேன். அவ்வாறே கட்டினார்கள். பின்னர், ஒவ்வொரு தூண் அமைப்பிற்கும் சுற்றியுள்ள கிராமத்தில் ஒரு எழை குடும்பத்திற்கு இலவச வீடு அமைத்துத் தர வேண்டும் என்று கூறினேன்.

அவ்வாறே சுற்றியுள்ள கிராம மக்களுக்கு வீடுகள் அமைத்துத் தந்தோம். விசாலாக்ஷி மண்டபம் அமைத்து 12 ஆண்டுகள் ஆகி விட்டன. இப்போதும் அதைப் பார்த்தால் நல்லுணர்வு ஏற்படுகின்றது.  அதன் அமைப்பு கண்களுக்குக் குளுமையாக இருக்கின்றது. துபாயிலிருந்து ஒருவர் "நான் இதற்கு மின் விளக்குகள் பொருத்துகின்றேன்" என்றார். "நல்லது! அவ்வாறே செய்யுங்கள் என்று கூறினேன்.
தற்காலத்தில் அலுமினியச் சட்டங்கள், கண்ணாடி கூரை, கண்ணாடி தகடுகள், இவற்றுடன் கூடிய நவீன கட்டிட அமைப்பைத்தான் செய்கின்றார்கள். இந்த மண்டபத்தை கட்டிய இது போன்ற பழைய கட்டிட அமைப்பு கொத்தனார்கள் வெகு காலம் வேலையின்றி இருந்தார்கள்.ஏனெனில் இது போன்ற கட்டிடங்கள் கட்டப்படுவதில்லை. இக்கட்டிடம் அமைக்க இரண்டரை முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆயிற்று.சுமார் 7000 பேர் பல்வேறு கட்டங்களில் இதில் பணிபுரிந்து வருவாய் அடைந்தனர். மிக்க மகிழ்ச்சியுடன் இருந்தனர். இத்தகைய கலை நுணுக்கம் இந்தியக் கோவில்களிலேயே காணப்பட்டது. இம்மாதிரியான கோவில்களோ, கட்டிடங்களோ இப்போது எவரும் கட்டுவதில்லை.

நமது கட்டிடங்கள் எல்லாமே அநேகமாக இத்தகைய இதழ்கள் வடிவமைப்பு உள்ளவை ஆகையால் கொத்தனார்களுக்கு வேலை இருந்து கொண்டே இருக்கின்றது. அவர்களுக்குத் தெரிந்த இத்தகைய கட்டிடக்கலை அமைப்பு ஒரு தனித்திறன் அல்லவா?