ஒருதலைக் - காதல்

ஜனவரி 28, 2014

பெங்களூர், இந்தியா



கேள்விகளும் - பதில்களும்

குருதேவ்! நான் ஒரு தலைக் காதலினால் பாதிக்கப்பட்டவன். அதை இரு வழிக் காதலாக மாற்ற ஏதேனும் ஆலோசனை கூறுங்கள்?

குருதேவ்: எனக்கு இதில் அனுபவம் இல்லை! யோசிக்கலாம். எல்லாப் பிரச்சினைகளுக்குமே காதல் தான் காரணம். இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று, மக்கள் தங்கள் அன்பை அதிகமாக வெளிப்படுத்தி விடுகின்றார்கள், அல்லது சிலர் வெளிப்படுத்துவதே இல்லை. நீங்கள் மிக அதிகமாக அன்பை வெளிப்படுத்தினால், அதைப் பெற்றுக் கொள்பவருக்கு எவ்வாறு பதிலுருப்பது என்பது தெரிவதில்லை. உங்களை அந்த நிலையில் வைத்துப் பாருங்கள்யாரேனும் ஒருவர் உங்களிடம் மிக அதிகமாக அன்பு காட்டினால், உங்களுக்கு ஓடி விடலாம் என்று தோன்றும்.நீங்கள் நடு நிலையில் நின்று இறைமையிடம் ஒரு நிலைப்பட்ட அன்பு செலுத்துபவராக இருந்தால் அன்றி உங்களுக்கு அதைத் தாங்க முடியாது.

உலகளாவிய ஒரு நிலை அன்பு கொண்டவராக நீங்கள் இருந்தால் அப்போது பரவாயில்லை. கடவுளும் இத்தகைய ஒரு தலை அன்பினை உணருகின்றார் என்று நான் எண்ணுகின்றேன்ஒரு தலைக்காதலில் மிக அதிகமாகப் பாதிக்கப் பட்டவர் கடவுளே ஆவார். அவர் உங்களை மிக அதிகமாக நேசிக்கின்றார், ஆனால் நீங்கள் அதை கண்டு கொள்வது  கூட இல்லைஆகவே அவரும் இவ்வாறே வருந்திக் கொண்டிருப்பார். கடவுள் உங்களை நேசிக்கிறார், அவரது படைப்பு உங்களை நேசிக்கின்றது, ஆனால் நீங்கள் அதை அறிந்து கொள்வதே இல்லை. அதை உணர்ந்து உங்களுக்குள் அமைதியாக இருந்தால் அறிந்து கொள்ளலாம்இந்த பிரபஞ்சமே உங்களை நேசிக்கின்றதுஉங்களால் தாங்க முடியாத அளவு இந்தப் பிரபஞ்சம் உங்களை விரும்புகின்றது.

நீங்கள் இவ்வுலகத்தை விரும்புவதை விட அதிகமாக இவ்வுலகம் உங்களை விரும்புகின்றது. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களால் புரிந்து  கொள்ள அல்லது  கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்குக் கடவுள் உங்களை நேசிக்கின்றார்.

நான் கூறியது போன்று ஒரு விதையானது, மண்ணின் மேல் பரப்பில்  தூவப்பட்டால், முளை விடாது. அது போன்று மண்ணின் மிக ஆழத்தில் விதைக்கப்பட்டாலும் துளிர்க்காது. இடை நிலையில் விதைக்கப்பட வேண்டும். மிக ஆழத்தில், அல்லது காற்றில் இருக்காமல் சிறிது மூடப்பட்ட நிலையில் விதைக்கப்பட வேண்டும். அது போன்று அன்பின் வெளிப்பாடும், சற்று நடு நிலையில் இருக்க வேண்டும். நீங்கள் வார்த்தைகளில் வெளிப்படுத்தாத அன்பு உங்கள் செயலில் வெளிப்படும்.

குருதேவ்! பிறருடைய தவறுகளை நம்மால் எளிதாக கண்டு பிடிக்க முடிகின்றது, ஆனால் திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருக்கும்  நம்முடைய தவறுகளை காண முடிவதில்லையே? பிறருக்கு  எளிதாக கூற முடிகின்ற ஞானத்தை தம் மீது ஏன்  பயன் படுத்த முடிவதில்லை?

குருதேவ்: இது ஒரு நல்ல மெய்யுணர்தல் ஆகும். நாம் கற்பவற்றை பயன்படுத்துவதில்லை 
என்பதை உணருதலே மாற்றத்தின் ஆரம்பமாகும். தவறுகள் ஏன் கவர்ச்சியூட்டுகின்றனவாக  இருக்கின்றன என்று தெரியுமா? ஏனெனில், அவற்றின் மூலம் நாம் ஏதோ பெரு மகிழ்ச்சியை, சுகத்தை அடையப் போகிறோம் என்னும் எண்ணமாகும்.காலப் போக்கில் இது குறைந்து விடும்.

குருதேவ்! ஒரு குரு ஆன்மீக வளர்ச்சி ஆர்வலர்களுக்கு எவ்வளவு உண்மையை கூற வேண்டும், எவ்வளவு மறைக்க வேண்டும் என்று எப்படி முடிவு எடுக்கின்றார்?

குருதேவ்: உண்மையான குரு எந்த முயற்சியும் எடுப்பதில்லை.உள்ளத் தூய்மையும், தெளிவான சிந்தனையும் இயல்பான செயலும் அவருக்கு இருக்கும்.

குருதேவ்! நான் கற்றுக் கொடுக்கும் போது எனக்குத் தெரியும் என்னும் நிலையிலிருந்து செய்கின்றேன். உண்மையில், சில சமயங்களில், எனக்குத் தெரியாது. நான் ஞானம் தேடுபவன். எப்படி தெரியும், தெரியாது என்னும் இரு நிலைகளில் இருப்பது? கற்றுக் கொடுப்பவனாகவும், தேடுபவானகவும் ஒரே சமயத்தில் எப்படி இருப்பது?

குருதேவ்: ஒரே சமயத்தில் சில விஷயங்கள், தெரியும், பல விஷயங்கள் தெரியாது. அவ்வளவு தான்.எது தெரியுமோ அதைக் ஸ்திர  உணர்வுடன் கற்றுக் கொடுங்கள்.  எது தெரியாதோ அதற்கு வெற்றிட மற்றும் காலியிடத்தில் காத்திருங்கள். வாழ்கை என்பது கோபமான "எனக்குத் தெரியாது" என்பதிலிருந்து அழகான "எனக்குத் தெரியாது" என்னும் நிலைக்குச் செல்லும் பயணம் ஆகும். ஒருவர் வேதனையும் வெறுப்புணர்வும் கொண்டிருக்கும் போது "எனக்குத் தெரியாது, எனக்கு அதை பற்றிக் கவலையில்லை, என்னைக் கேட்காதே என்றெல்லாம் கூறுகின்றார். இந்த கோபமான எனக்குத் தெரியாது என்பதிலிருந்து ஆச்சர்யமான எனக்குத் தெரியாது என்னும் நிலைக்கு செல்லும் பயணம். வெறுப்பிலிருந்து வியப்பிற்கு செல்லும் பயணம்.

குழந்தையாக இருந்தபோது நாம் அனைவருமே இந்த அழகான "எனக்குத் தெரியாது" என்னும் வியப்பு நிலையில் இருந்தோம். துரதிர்ஷ்டவசமாக இந்த அழகான "எனக்குத் தெரியாது" நிலையிலிருந்து கோபமான "எனக்குத் தெரியாது" நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். இதை மாற்ற வேண்டும்.

குருதேவ்! எவ்வாறு மக்களின் ஆன்மீக வளர்ச்சி ஒரு நாட்டின் வளத்திற்கு  உதவ முடியும்? ஆன்மீக சார்புடைய மக்கள் எவ்வாறு ஒரு நாட்டைக் காக்க முடியும்?

குருதேவ்: ஆன்மீக சார்புடைய மக்களுக்கு வாழ்க்கையில் நல்ல மனப்பான்மை இருக்கும். அவர்களுக்கு தீய எண்ணப்போக்கு இருக்காது. அவர்கள் பணிவு, கண்ணியம், பிறரின் கௌரவம் காத்தல், பிறர் மீது அக்கறை, கருணை இவற்றுடன் செயல்படுவார்கள். இக்குணங்கள் அனைத்தும், ஆன்மீகப் பற்றுள்ளவர்களுக்கு இருக்கும். ஆன்மிகம் சார்புடைமையை ஏற்படுத்தும். அத்தகைய உடைமையுணர்வு இருக்கும் போது ஊழல் குறையும். சார்புடைமையற்ற நிலையில்தான் ஊழல் தோன்றுகின்றது.

குருதேவ்! ஹிந்து அரசர்களுக்கு ஒருங்கிணைந்த நாடு உருவாக்கப்படுதல் பற்றித் தெரியாதது சாணக்கியருக்கு வேதனை அளித்தது. அவ்வரசர்களுக்குள் நிகழ்ந்த பூசல்கள் அலெக்சாண்டரும், பின்னர் முகலாயர்களும் இந்தியாவை கைப்பற்றியாள அனுமதித்தது. இன்றும் ஆட்சியில் இருப்பவர்கள் சமயச்சார்பின்மை என்னும் உடைத்தோற்றத்தில் இருக்கின்றார்கள். எப்படி நாம் ஹிந்துமதத்தின் பெருமையை மீண்டும் உயிர்ப்பூட்டுவது?

குருதேவ்: உண்மையில் ஹிந்துயிசம் என்றால் உலகளாவியது என்று பொருள். இது ஒரு தனி சமயப் பிரிவு அல்ல. இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதா கிருஷ்ணனிடம் "யார் ஹிந்து" என்று கேட்டபோது, அவர்," யார் ஒருவர் முஸ்லிம் இல்லையோ, யார் ஒருவர் கிறிஸ்தவர் இல்லையோ, மீதமிருப்பவர் ஹிந்து" என்று கூறினார். அனைத்தையும் ஏற்றுக் கொள்பவர்கள் ஹிந்துக்கள். வாழ்வு முறையை சமயம் என்று வரையறுத்துக் கூறுவது கடினமாகும். மனித இனப் பொதுச்சமய அமைதி வழி என்பது தான் ஹிந்துயிசம். அது ஒரு வேத நூல், ஒரு புத்தகம், ஒரு வழிபாடு என்று கட்டாயப் படுத்துவதில்லை. உலகம் முழுவதும் ஒரு குடும்பம்,எல்லா வழிகளிலிருந்தும் ஞானத்தை ஏற்றுக்கொள்ளுதல் சிறப்பு என்று கூறுகின்றது. உங்களை அறிந்து கொண்டு பிறருக்குத் தொண்டு செய்யுங்கள். இது தான் கோட்பாடு.,

நான் அமெரிக்காவில் இருந்த போது, சிலரிடம் அமெரிக்க அரசியல் சட்டத்தை பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அது ஹிந்துயிசம் போன்றதே ஆகும். வேற்றுமைகளைப் போற்றுதல், வழிபாட்டு சுதந்திரம், அனைவருக்கும் தன்னுரிமை,மற்றும் நீதி, இவை அனைத்துமே அடங்கியது தான் ஹிந்துயிசம். இப்பிரபஞ்சம் பலதுறை திறன் வாய்ந்தது. ஒரு உண்மையை பல்வேறு வழிகளில் கண்டடையலாம். இது தான் ஹிந்துயிசம்.

துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டில் சுய மதிப்பு மிகக் கீழே சென்று விட்டது. ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் மக்கள் துன்புற்று, நாட்டின் மதிப்பும் கௌரவமும் கீழிறங்கி விட்டன. மகாத்மா காந்தியின் காலத்திற்குச் சற்று முன்பு, சுவாமி விவேகானந்தர் மக்களுக்கு, தங்கள் மதிப்பு கலாசாரம்,சமயம் ஆகியவற்றை மீண்டும்  நிலைநாட்டும் படி எடுத்துக் கூற முயற்சித்தார்.
மெக்காலே பிரபு, லண்டனுக்குச் சென்று, அரசி எலிசபெத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில்," இந்தியா முழுவதும் நான் பயணம் செய்து கவனித்ததில், பிச்சை எடுப்பவன், திருடன் என்று எவரையும் காணவில்லை. மிகுந்த செல்வம், உயர்ந்த அறநெறிகள், பண்பாற்றல் மிகுந்த மக்கள், ஆகியவை நிறைந்த இந்நாட்டின் முதுகெலும்பான ஆன்மீக கலாசாரத் தொன்மையை உடைத்தால் மட்டுமே இந்நாட்டை கைப்பற்றுவது என்பது இயலும்" என்று எழுதி இருந்தார்.

இது ஆங்கில பாராளுமன்றத்தில் அவர் அளித்த பிரபலமான உரையும் ஆகும். அதன் பின்னர் ஆங்கிலேயர், படிப்படியாக இந்தியக் கலாச்சாரத்தை அழிக்க முற்பட்டனர். மக்கள் தாங்கள் திறமையற்றவர்கள் என்று எண்ணிக் கொள்ள துவங்க வேண்டும் என்று கூறினார், அது வெற்றிகரமாக  நிகழ்ந்தது. நாற்பது மற்றும் ஐம்பதுகளில் மக்கள் . இந்தியாவிலுள்ள எதுவுமே சிறந்தது அன்று என்னும் எண்ணம். கொண்டிருந்தனர். ஆனால் காலம் மாறத் துவங்கிவிட்டது. நாம் இந்தியாவில் சில நல்லவை, வேறெங்கிலும் போல சில நல்லன அல்லாதவையும் இருக்கின்றன என்று கூறத் துவங்கி விட்டோம். ஏனெனில் நமது கலாசாரத்தில் நல்லன அல்லாதவை இடைசெருகப்பட்டு விட்டன.

புராதனமாக, ஜாதி முறை என்பது தொழில் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டிருந்தது. அந்தந்த தொழிலுக்குரியோர் வகைப் படுத்தப்பட்டிருந்தனர். அது பின்னர் பரம்பரையாக ஆயிற்று. பின்னர் இறுக்கம் அதிகரிக்கத் துவங்கியது.ஜாதி விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் தண்டனையாக ஜாதியிலிருந்து சில காலம் தீண்டத்தகாதவராக தள்ளி வைக்கப்பட்டனர். உதாரணமாக, வணிககுழுவிலுள்ள ஒருவர் தவறு செய்தால் விலக்கப்படுவது போன்றது அது. தீண்டாமை என்பது ஹிந்து சமயத்திற்கு பெரும் பிரச்சினை ஆயிற்று.பல கால கட்டங்களில்,துறவிகள் தீண்டாமையை ஒழிக்கப் பணியாற்றி வெற்றி கண்டனர். தலித்துகளின் பரம்பரையுரிமை என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளேன். பல புனித மகான்கள் தீண்டத்தகாதோர் இனத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

சுய மதிப்புக் குறைவு என்பதைப் பார்த்தோமேயானால், ஹிந்துயிசமில் ஒரு தனிப்பெரும் தலைவர் கிடையாது. அது வாழ்வியல் முறையாகும். அதனால் அதில் சில நன்மைகளும் குறைகளும் உள்ளன.குறை என்னவென்றால், சீர்மைபடுத்த இயலாது. ஆனால் வளர்ச்சிக்கு நிறைந்த வாய்ப்புக்கள் உள்ளன. சுய மதிப்பை அடைய சமயம் மட்டும் போதாது, சுய மதிப்பு கௌரவம் இவற்றை மீண்டும் அடைய, ஆன்மீக நிலையும் மிக அவசியமானது ஆகும்.