குருதேவரின் தீபாவளி வாழ்த்துரை

வெள்ளி, 24/10/2014

சிகாகோ, ஐக்கிய அமெரிக்க நாடுகள்


எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

தீபாவளி தீபங்களின் திருவிழா, மகிழ்ச்சி, செல்வம், அறிவு, ஞானம் மற்றும் எல்லாவற்றுக்குமான திருவிழா. ஏனென்றால் ஒளி பலவற்றைக் குறிக்கிறது.ஒரு விளக்கை ஏற்றினால் போதாது, ஞானம் மலர, இருள் அகல பல விளக்குகள் ஏற்ற வேண்டும்.அதனால் தான் தீபாவளி பல விளக்குகள் ஏற்றப்படுகின்றன. நாம் ஏற்றும் விளக்கு ஒரு குறியீடு மட்டுமே. உண்மையான விளக்கு நீங்கள் தான். நீங்கள் ஒளிர்விட்டு, துடிப்பாக, புன்னைகையோடு, ஆனந்தமாக, சக்தி நிறைந்தவராக இருக்க வேண்டும். அதுதான் உண்மையான திருவிழா.ஞானத்தினால் மட்டுமே நடக்கும், வசதிகளினாலோ, மின்னணுக் கருவிகளாலோ, பணத்தாலோ அல்லது நண்பர்களாலோ நடக்காது. உண்மையான மகிழ்ச்சி ஞானத்தினால் கிடைக்கிறது. 

இறை எங்கும் நிறைந்திருக்கிறது,ஆனால் அது உறக்கத்தில் இருக்கிறது. பூஜை என்பது அதை விழிப்படையச் செய்யும் செயல்முறை. இறையுடன் தொடர்பிலிருப்பவர்களுக்கு எந்த விதமான இறப்பும் கிடையாது. அன்னை இறைவிக்கும், தேவதைகளுக்கும் மற்றும் எல்லா கடவுள்களுக்கும் நன்றி கூறும் இலட்சுமி பூஜை செய்து, ‘உங்களுக்கு மிக்க நன்றி. இந்த வருடம் முழுதும் என்னைக் காத்து எனக்கு வேண்டியதை அளித்தீர்கள். அடுத்த வருடத்திலும் அதைத் தொடர்ந்து செய்ய வேண்டுகிறேன்.’ என்று கூறுகிறோம். அவர்களோடு நமக்குள்ள தொடர்பை புதுபித்துக்கொள்ள பிரார்த்திக்கிறோம்; ஒப்பந்தத்தை அல்ல தொடர்பை. இறையோடு உள்ள தொடர்பைப் புதுப்பித்துக் கொள்ள பிரார்த்தனை செய்கிறோம்.

இறையோடு தொடர்புள்ள யவருக்கும் எந்த விதமான இறப்பும் கிடையாது. மறுபடி தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது. (இது நம்முடைய ஒவ்வொரு அணுவிலும் இருக்கிறது, அதை விழிப்படைய செய்ய வேண்டும், அவ்வளவே.) இறை எங்கும் நிறைந்திருக்கிறது, ஆனால் அது உறக்கத்தில் இருக்கிறது. பூஜை என்பது அதை விழிப்படையச் செய்யும் செயல்முறை. இறையை எழுப்புவது!
இங்குள்ள மறையவர் ரிக்வேதத்திலுள்ள மிகத் தொன்மையான மனிதகுலத்தின் முதல் பிரார்த்தனையை இப்போது ஓதுவார். நமக்காக ஸ்ரீ சுக்தத்தை ஓதுவார்.

நம் வாழ்க்கையில் வரும் தடங்கல்கள் அனைத்தையும் விளக்க முதலில் கணபதி பூஜை செய்து விட்டு பிறகு கலச பூஜை செய்கிறோம்.இந்தக் குடத்திலுள்ள தண்ணீரில் எல்லா தேவதைகளையும் எழச் செய்து, இந்தப் புவியுலுள்ள அனைவருக்கும் நல்ல மனம், நல்ல இதயம், நல்ல புத்தி, நல்ல அறிவு ஆகியவற்றை அளிக்க ஆசி தருமாறு பிரார்த்தனை செய்கிறோம்.

ஒவ்வொருவருள்ளும் மூன்றுவிதமான சக்திகள் இருக்கின்றன. அவை:
1.        இச்சா சக்தி (ஒருவரின் விருப்பம்)
2.        கிரியா சக்தி (வேலை செய்ய சக்தி) மற்றும்
3.        ஞான சக்தி (அறிவு அல்லது ஞானம்)

அதைப்போல, மகாகாளி (சக்தியின் அடையாளம்), மகாஇலட்சுமி (செல்வத்தின் அடையாளம்) மற்றும் மகாசரஸ்வதி (ஞானத்தின் அடையாளம்). சூட்சுமமான சக்திகளால் ஆளப்படும் வாழ்கையின் வெவேறு பரிமாணங்கள் இவை. இந்த சூட்சும உலகை தொடர்புகொள்ளும் வழியே பூஜை. இந்த உலகில் நாம் பார்ப்பவை எல்லாம் ஒரு மிகப் பெரிய மலையின் ஒரு மிகச் சிறிய முனையையே. பூஜையும் மந்திரங்களும் உலகின் அந்தப் பக்கத்தைத் தொடர்புகொள்ளும் தொன்மையான முறைகள்.

அதை எப்படிச் செய்வது? அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் இருந்தவாறு இந்த மந்திரங்களை கேட்க வேண்டும்,அதில் முழுதுமாக நனைய வேண்டும். இது மந்திர ஸ்நானம் (குளியல்) என்று அழைக்கப்படுகிறது, அதாவது அழ்ந்த தியானத்திலிருந்தவாறு மந்திரத்தின் ஒலியில் நனைதல். இந்த ஆதி மந்திரங்களின் அதிர்வுகள் நமது முழு சுயத்தை, நம் ஆத்மாவை சக்தியூட்டுகிறது. பூஜையில் நடைபெறும் அனைத்தையும் நம்மால் புரிந்துகொள்ள இயலாததாக  இருக்கலாம், அமர்ந்து கண்களைத் திறந்தவாறோ அல்லது கண்களை மூடியவாறோ அதை அனுபவித்து மகிழ்ந்தாலே போதும். இதுதான் ஷ்ரத்தா எனப்படுகிறது,பொருள் தெரியாததின் மீது அன்பில் ஆழ்வது. ஏதோ இருக்கிறது என்று தெரியும் ஆனால் அது என்னவென்று தெரியாது. அதன் மீது அன்புகொண்டவுடன் அது என்னவென்று அறிய ஆரம்பிக்கிறோம். ‘ஓ, இது ஒரு சக்தி,’ என்று உணர்கிறோம். அன்னை இறைவி என்பது யாரோ ஒருவரின் மனதில் உதித்த ஒரு தத்துவம் அல்ல அது ஒரு உண்மை என்பதை பிறகு உணர்கிறீர்கள். பிரபஞ்சத்தின் உண்மை இது. சூட்சுமமான சக்தி என்பது அவ்வளவு உண்மை. அது அவ்வளவு உண்மையானது வெளிப்படையானது என்று உணரப்படும் வரை இந்த தெரியாததின் மீது அன்பு வைப்போம்.
படிகள் உள்ளன.

1.        தெரியாததின் மீது அன்பு வைப்பது, நீங்கள் அதைச் செய்தபிறகு
2.        தெரியாததைத் தெரிந்துகொள்ள ஆரம்பிக்கிறீர்கள்

அதைத் தெரிந்துகொண்ட பிறகு, அது உங்களின் ஒரு பகுதி என்பதையும், அது உங்களிலிருந்து வேறானது அல்ல என்பதையும் அது உங்களில் இருந்து விலகி இருப்பதல்ல என்பதையும் உணர்கிறீர்கள். இதுதான் வேதம் மற்றும் அந்த வேதாந்தம், அதாவது, அதில் ஒன்றிவிடுதல்.
மேலும், இன்று குஜராத்திகளுக்கு புது வருடம். குஜராத்திகளுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள், 

மற்றவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்! அன்னை இறைவிக்கும் மற்றும் பார்க்கக்கூடிய மற்றும் பார்க்க இயலாத இறை வெளிப்பாடுகளுக்கும் பிரார்த்தனை செய்தவாறு புது வருடத்தை ஆரம்பிப்பது மிக அருமையாய் இருக்கிறது! எல்லோரும் இங்கு அமர்ந்து ஒன்றாகப் பூஜை செய்து, ஒன்றாகத் தியானம் செய்து, ஒன்றாகப் பாடுவது யக்னம் அல்லது யாகம் என்று அழைக்கப் படுகிறது. யாகம் என்ன செய்கிறது? ஸ்வஸ்தி (ஆரோக்கியம் மற்றும் மைய நிலை), ஷ்ரத்தா (அசைக்க முடியாத நம்பிக்கை), மேதா (விழிப்படைந்த புத்தி) ஆகியவற்றை அளிக்கிறது. 

நம்பிக்கையும் புத்தியும் ஒன்றுகொன்று எதிரானது என்று கருதப்படுகிறது, ஆனால் யாகத்தில் இரண்டுமே கூர்மைப் படுத்தப்படுகிறது. நம்பிக்கை ஆழமாகிறது, புத்தி (காரணப்படுத்துதல்) மிகக் கூர்மையாகிறது. இதைப் போல யாகத்திற்குப் பல பலன்கள் உள்ளன; யாஷா (நல்ல பெயர்), பிரக்யா (உயர்ந்த பேருணர்வு),வித்யா (கல்வி), புத்தி (அறிவு), பலம் (வலிமை), வீர்யம் (வீரம் அல்லது சக்தி), ஆயுஷ் (நீண்ட ஆயுள்), ஐஸ்வர்யம் (செல்வம்), இன்னும் பலப்பல.

ஆசைகளின் வட்டம்

செவ்வாய்க்கிழமை, 14 அக்டோபர், 2014 

க்விபெக், கனடா


(நம்பிக்கையின் மூலம் வலிமை பெறுதல் என்ற பிரசுரத்தின் தொடர்ச்சி)

கேள்வி – பதில்கள்

ஆசைகளை வெல்வது எப்படி ?

குருதேவர்: இதுவும் ஒரு ஆசை தான். “ஒரு ஆசை நிறைவேறிய பின்பு அந்த ஆசை தோன்றிய இடத்துக்கே அழைத்துச் செல்கிறது“ என்பதைத் தெரிந்து கொள். ஆசை தோன்றுவதற்கு முன் இருந்த மன நிலையைக் கற்பனை செய்து பார். ஆசை தோன்றி அது நிறைவேறிய பின்பு அந்த வட்டத்துக்குள் சுழன்று நீ ஆசை தோன்றிய இடத்துக்கே செல்கிறாய்.

தினசரி வாழ்க்கையிலும், துக்கமான சமயங்களிலும் இறைவனுடன் தொடர்பை நிலை நிறுத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும் ?

குருதேவர்: இறைவனுடன் தொடர்பை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற விருப்பமே, நீ மீண்டும் மீண்டும் இறைவனோடு இணைந்திருப்பதை காட்டுகிறது. இதை நீ ஒரு வழக்கமாக்கி கொள். நீ தூங்கி எழுந்தவுடன் இறைவனோடு இணைந்திருப்பதை உணரலாம். தூங்கப் போவதற்கு முன்பு உனக்கு அன்று கிடைத்த எல்லாவற்றுக்காகவும் இறைவனுக்கு நன்றி சொல். இதை வாய் விட்டுச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உனக்குக் கிடைக்கும் எல்லாமே இறைவன் தந்தது என்பதை உணர்ந்து இயல்போடு இரு. இறைமை என்பது மிகவும் எளிய விழிப்புணர்வாகும். இறைத்தன்மை நம்முடைய இயல்பான குணமாகும். எந்த நேரத்தில் நீ மிகவும் ஓய்வாக வீட்டில் இருப்பது போல் உணர்கிறாயோ அப்போது இறைவனோடு இணைந்திருக்கிறாய் என்பதை அறிந்து கொள்.

இதற்கு மிகவும் தேவையானது முழுமையான திருப்தி. எப்போது முழு மனதோடு திருப்தி அடைகிறாயோ, அப்போது இறைவனோடு இருக்கிறாய் என்று அர்த்தம். தற்சமயத்தில் வாழ்வது முழுமையான திருப்தி என்பதை தெரிந்து கொள். தற்சமயம் முழுமையான திருப்தியைக் கொடுக்கும். நாளை என்றால் ஆசை, திட்டமிடுவது, மேலும் மேலும் தேவைகளைப் பற்றி சிந்திப்பது. எனவே தற்சமயத்தில் முழு திருப்தியோடு சாந்தமாக இரு. நீ முழு திருப்தியும், முழுமையான அமைதியும் அடையும் நேரங்களை அதிகமாக்கிக் கொள்வது உன்னைப் பொறுத்திருக்கிறது. சில சமயம் எந்த வித முயற்சியுமில்லாமல் உன்னால் அப்படி இருக்க முடிகிறது. அதனால் தான் பழங்கால ஞானிகள், அவர்களுக்குக் கிடைத்த அனைத்தையும் இறைவனின் பரிசாக நினைப்பதாகச் சொன்னார்கள்.

“கர்வா சௌத் “ பண்டிகையின் முக்கியத்துவம் என்ன? அதற்கு பின்னால் உள்ள கதை என்ன ? திருமணமான பெண்கள் மட்டும் தான் அதைக் கொண்டாட வேண்டுமா? அன்றைய தினம் தியானம் செய்வது நல்லதா ?

குருதேவர்: இந்தியாவில் பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் ஒரு ஞாயிற்றுக்கிழமை இருப்பது போல ஒவ்வொரு வாரமும் ஒரு பண்டிகை கொண்டாடப்படுகிறது.
கர்வாசௌத் அன்று திருமணமான பெண்கள் தங்கள் கணவனின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். அதைப் பற்றி பல கதைகள் உண்டு. அந்த கதைகளைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. அந்தக் காலத்தில் பெண்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருந்ததாகத் தெரிய வருகிறது. சூரியனைப் பார்த்து இன்று நீ மறைய வேண்டாம் என்று சொன்னால் சூரியன் அன்று மறையாமல் இருந்ததாக சொல்கிறார்கள். பெண்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருந்தார்கள். இப்படி பல கதைகள் உள்ளன. கதைகள் பலரை ஊக்குவிப்பதற்காக சொல்லப் பட்டன. ஒரு பெரிய நல்ல காரியத்துக்காக சொல்லப்பட்டன. எனவே கர்வா சௌத் என்பது இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு இன்றியமையாத பண்டிகையாகும்.

உணவு உண்ணுவதைத் தவிர்த்து உபவாசம் இருப்பதும், பிரார்த்தனை செய்வதும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டவை. இது எல்லா மதங்களிலும் வழக்கத்தில் உள்ளது. உலகின் எல்லா பழைய கலாசாரங்களிலும், உண்ணா விரதமும் பிரார்த்தனையும் இணைந்திருப்பதை காண முடிகிறது. உண்ணாவிரதம் இருந்து நீ எந்தக் கடவுளையும் திருப்தி செய்யத் தேவையில்லை. உடலில் இருக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்ற விரதம் உதவுகிறது. உடலிலிருந்து நச்சுப் பொருட்கள் வெளியானவுடன் நம் சிந்தனை ஆக்க பூர்வமான விஷயங்களில் ஈடுபடும். நம் உடலில் நச்சுப் பொருட்கள் அதிகமிருந்தால், நம் கணையத்தில், கல்லீரல் மற்றும் குடலில் நச்சு பரவியிருந்தால், நம் சிந்தனை தெளிவில்லாமல், குழப்பமாகவும் எதிர்மறையாகவும் இருக்கும். எனவே பண்டிகை நாள்களில் உண்ணா விரதத்தைக் கடைப்பிடித்து உடலையும் மனதையும் தூய்மைப்படுத்திக் கொள்வது வழக்கத்தில் இருந்தது. கடவுளைத் திருப்திப் படுத்துவதற்காக அல்ல.
விரதமிருக்க சில விதிகள் உண்டு. ஆனால் மக்கள் இதை முறையாக பின்பற்றுவதில்லை. விரதத்தின் போது மக்கள் சில பொருட்களைத் தவிர்த்து மாற்று பொருட்களை உண்ணலாம் என்று நினைக்கிறார்கள். வழக்கமான உணவைத் தவிர்த்து பழங்கள், உலர் பழங்கள், கொட்டைகளை உண்ணலாம் என்றூ நம்புகிறார்கள். இது தவறு. இது விரதமாகாது.

சிலர் விரதத்தின் போது இனிப்பு மற்றும் வேக வைத்த உருளைக்கிழங்கு மட்டும் உண்கிறார்கள். இது தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வது. சிலர் நாள் முழுதும் ஒன்றும் உண்ணாமல் அடுத்த நாள் சூரியன் உதிப்பதற்கு முன்பே வயிறு நிறைய உண்பார்கள். நாள் முழுதும் உண்ணாமல் சூரியன் மறைந்த பின் வயிறு நிறைய உண்பார்கள். இது மிகவும் தவறான விரத முறையாகும். விரதம் விஞ்ஞான பூர்வமாக இருக்க வேண்டும். விரதத்தின் போது பழச்சாறுகள், மற்றும் பழங்கள் மட்டும் உண்டால், உடலில் சுரப்பிகள் நன்றாக வேலை செய்யும். முன்பு உண்டு ஜீரணமாகாமல் குடலில் இருக்கும் உணவுப் பொருட்கள் நன்றாக ஜீரணமாகும். நாள் முழுதும் உண்ணாமல் பின் இரவு நேரத்தில் உண்பது உடலுக்கு மிகவும் கெடுதல் விளைவிக்கும். ஏனென்றால் உணவை ஜீரணிக்கத் தேவையான பொருட்களை சுரக்கும் சுரப்பிகள் இரவு நேரத்தில் வேலை செய்வதில்லை. நேரம் கழித்து உண்பவை ஜீரணமாகாது. எனவே அந்தப் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். பல மக்கள் விஞ்ஞான விதிகளுக்கு எதிராக விரதமிருக்கிறார்கள். விரதத்தை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் எல்லா மதத்தினருமே (யூதர்கள், கிறிஸ்தவர்கள், முகமதியர்கள், இந்துக்கள்) தவறான முறையில் விரதமிருக்கிறார்கள். எல்லா விதமான கலாசாரங்களை பின்பற்றும் மக்களும் விஞ்ஞான முறையோடு விரதம் இருக்க வேண்டும்.

ஆயுர்வேதத்தில் விரத முறைகளைப் பற்றிக் குறிப்பு இருக்கிறது. சில பழங்கள், பழச்சாறுகள், நீர், எலுமிச்சைச் சாறு இவைகளை மட்டுமே உண்ணா விரதத்தின் போது உண்ணலாம். உங்களால் முடியுமென்றால் ஓரிரண்டு நாட்கள் நீர் மட்டும் அருந்தி உண்ணா விரதமிருக்கலாம். இதைப் பற்றிய விவரங்களை மக்களிடையே பரப்ப வேண்டும்.

ரம்சான் மாதத்தில் பகல் முழுதும் உணவு எடுக்காததால் உடலில் பித்தம் அதிகரிக்கும்.மாலையில் அதிக அளவில் உண்கிறார்கள். இது தவறு. மாலையில் எளிதில் ஜீரணமாகும் பச்சைக் காய்கறிகள், பழங்களை மட்டும் உண்ண வேண்டும். ஜீரண உறுப்புகளுக்கு இரவில் ஓய்வு கொடுக்க வேண்டும். நவராத்திரியின் போது விரதமிருக்கும் இந்துக்களில் சிலர் ஜிலேபி உண்கிறார்கள். இனிப்புகளையும் உண்கிறார்கள். வேக வைத்த உருளைக்கிழங்கை (ஸ்டார்ச்) உண்கிறார்கள். அது தவறு. பழம் மற்றும் பழச் சாறு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

சில சமயங்களில் வாழும் கலையில் இருந்து கொண்டு இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுவதில் முரண்பாடுகள் இருப்பதாக உணர்கிறேன். விசேஷமாக “சிவ” அல்லது “ராம்” மந்திரங்களை உச்சரிக்கும் போது அப்படி உணர்கிறேன். துரதிஷ்டவசமாக இஸ்லாமிய மதம் கெட்ட பெயரைப் பெற்றிருக்கிறது.

குருதேவர்: இஸ்லாமிய மதத்தின் சரித்திரத்தை நீ அறிய வேண்டும். அது எப்படித் தோன்றியது ? அந்த சமயத்தில் அதன் போதனைகளில் என்ன எழுதியிருந்தது? காலப்போக்கில் அதில் எப்படிப் பட்ட மாற்றங்கள் வந்தன என்பதை நீ அறிய வேண்டும். அப்போது என்ன சொல்லப்பட்டது? எதற்காக சொல்லப்பட்டது? தற்காலத்தில் அதில் எதை கடைப்பிடிக்க முடியும்? எதை கடைப் பிடிக்க முடியாது? அந்த காலத்தில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட மிக அதிகமாக இருந்தது. அதனால் ஒரு ஆண் நான்கு பெண்களைத் திருமணம் செய்து கொள்ள அனுமதித்தார்கள். இப்போது அதைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதே போல், ஒரு சமயம் முகமது நபி கம்பியுள்ள இசைக் கருவிகளை தூக்கி எறியச் சொன்னார். இசைக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் இன்று எந்த நாட்டில் இசைக்குத் தடை விதித்திருக்கிறார்கள் என்று சொல். இஸ்லாமிய நாடுகளில் இசைக்குத் தடை விதிக்கப்படவில்லை. ஆனால் சில தீவிர வாத இஸ்லாமியர்கள் “ இசை மற்றும் நடனத்தில் ஈடுபடுவது இஸ்லாமிய மதத்துக்கு எதிரானது. எனவே இஸ்லாமியர்கள் இசை, நடனத்தில் ஈடுபடக் கூடாது” என்று சொல்கிறார்கள்.

இரண்டாவதாக, இஸ்லாம் மதப்படி மனிதர்களின் முகத்தை புகைப்படம் எடுக்கக் கூடாது. இப்படி செய்வது மதத் துரோகமாக கருதப்படுகிறது. நீ சொல் புகைப்படம் எடுக்காமல் பாஸ்போர்ட் எப்படிக் கிடைக்கும்? அது நடக்கவே நடக்காது. என்னை பஹ்ரைன் நாட்டுக்கு அழைத்திருந்தார்கள். பஹ்ரைன் மன்னர் அவருடைய அரண்மனையில் ஏற்பாடு செய்திருந்த ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக என்னை அழைத்திருந்தார். அங்கு பல இஸ்லாமிய தலைவர்களுடன் உரையாடும் போது, அவர்கள் மதப்படி ஹஜ் யாத்திரையின் போது காபாவை (கறுப்புக் கல்) புகைப்படம் எடுப்பது மறுக்கப்பட்டிருப்பதாக சொன்னார்கள். இன்று பலர் தங்கள் கைபேசியில் உள்ள கேமராவின் மூலம் படம் பிடித்துக் கொண்டு செல்கிறார்கள். அவர்கள் காபாவின் புனிதக் கல்லை மட்டுமல்லாமல் தங்களையும் சேர்த்து செல்ஃபி படம் பிடித்துக் கொள்கிறார்கள்.

அதனால் தான் இஸ்லாமியக் கட்டடங்களில், மசூதிகளில் மனித முகமுள்ள சிலைகளையோ, ஓவியங்களையோ காண முடியாது. ஆனால் தற்காலத்தில் அப்படி இருக்க முடியுமா? சில இமாம்கள் தொலைக் காட்சிப் பெட்டிகளுக்கு எதிராக (டெலிவிஷன்) ஃபட்வா விதித்திருக்கிறார்கள். அவர்கள் மக்களிடம் சாத்தான் டெலிவிஷன் பெட்டிக்குள் புகுந்திருப்பதாக சொல்கிறார்கள். உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் 5000 வீடுகளிலிருந்தவர்களை தங்கள் டெலிவிஷன் பெட்டிகளை ஒரு பொது இடத்துக்குக் கொண்டு வந்து குழி தோண்டிப் புதைக்கச் சொன்னார்கள். கல்லை விட்டெறிந்து அதற்குள் புகுந்திருந்த சாத்தானை விரட்டச் சொன்னார்கள். ஏனென்றால் மனித முகத்தைப் பார்ப்பது இஸ்லாமிய மதக் கோட்பாடுகளுக்கு எதிரானது.

எனவே இன்றைய காலகட்டத்தில் இஸ்லாம் என்ன நிலையில் இருக்கிறது? இஸ்லாம் மதத்தின் நோக்கம் என்னவாக இருந்தது? இரண்டுக்கும் இடையில் இருக்கும் தூரம் அதிகமாகி விட்டது.
இஸ்லாமிய மதக் கொள்கைப்படி, இஸ்லாமிய மதத்தைச் சேராதவர்கள், அல்லாவை நம்பாதவர்கள் உயிரோடு இருக்க உரிமையற்றவர்கள் என்று சொல்கிறார்கள். அதனால் தான் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிர வாதிகள் இஸ்லாம் மதத்தைத் சேராதவர்களை கொன்று குவிப்பதில் ஈடுபடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை இஸ்லாமியர்களில் ஒரு பிரிவான சூஃபி இனத்தை சேர்ந்த புனிதர்களும் கெட்டவர்கள். ஏனென்றால் அவர்கள் இசையை விரும்புகிறார்கள். மந்திரங்களை ஜபிக்கிறார்கள். ஒரு சூஃபி புனிதர் இறந்த பின் அவர் உடல் அடக்கம் செய்த இடத்தில் சமாதி கோயில் கட்டுவது இஸ்லாமிய மதத்துக்கு எதிரான செயலாகக் கருதுகிறார்கள். முகமது நபியின் சமாதியையும் அவ்வாறே அழித்து விட்டார்கள். ஏனென்றால் இஸ்லாமிய மதப் படி சமாதி கோயில் கட்டக் கூடாது. எனவே ஷியா பிரிவினரையும் தங்கள் மதத்தில் சேர்ப்பதில்லை. ஏனென்றால் ஷியா பிரிவினர் சமாதி கோயில் கட்டி வழிபடுவதை நம்புகிறார்கள். சமாதி கோயில்களை கௌரவிக்கிறார்கள்.

எனவே இப்படிப் பட்ட கருத்து வேறுபாடுகளால், இஸ்லாமிய மதத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. இஸ்லாமிய மதச் சட்டப்படி திருடுபவர்களின் கைகளை வெட்டி விட வேண்டும். ஒரு குழந்தை ஒரு பொருளை திருடிவிட்டால், கைகளை வெட்டுவதை கற்பனையில் பாருங்கள். திருடுபவரின் கைகளை வெட்டுவது சரியாகுமா? ஒரு குழந்தையின் கைகளை வெட்டலாமா? இசையை அனுமதிக்கக் கூடாது. புகைப்படம் எடுக்கக் கூடாது. இப்படி சட்டங்களை இன்றைய காலகட்டத்தில் பின்பற்ற முடியுமா? எத்தனையோ விதமான மக்கள் இவ்வுலகில் வாழ்கிறார்கள். எல்லோரையும் அனுசரித்து வாழ வேண்டும். தீவிரவாத இஸ்லாமியரின் கொள்கைகளால் மற்ற எல்லா இனத்தவர்களோடும் முரண்பாடுகள் / பிரச்சினைகள் உருவாகின்றன. இஸ்லாமிய மதப்படி மற்றொரு கருத்து இருக்கிறது.நாம் பல்வேறு வகையான இனத்தவர்களை உருவாக்கியிருக்கிறோம். பல்வேறு வகையான ஞானம் உள்ளது. இவற்றையெல்லாம் நாம் கௌரவிக்க வேண்டும். மதிக்க வேண்டும். இது முகமது நபியால் சொல்லப்பட்டது.

தென் ஆப்பிரிக்காவில் ஒரு ஆசிரியர் வாழும் கலைப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். சுதர்சன கிரியா பயிற்சிக்கு முன்பு நாம் “ஓம்” மந்திரத்தை மூன்று முறை சொல்கிறோம். வகுப்பிலிருந்த ஒருவர் “ஓம்” என்று சொல்ல மறுத்தார். ஏனென்றால் அப்படிச் சொல்வது அவருடைய மதக் கொள்கைக்கு எதிரானது என்றார். ஆசிரியர் அவரைப் பார்த்து,“உன் மதம் அவ்வளவு வலுவிழந்ததா நீ “ஓம்” சொல்வதால் உன் மதத்தை விட்டு விலக்கப்படுவாயா? “ என்று கேட்டார். “ நான் அப்படி நினைக்கவில்லை. நான் “ஹாலுலூயா” என்றும் “அல்லா ஹூ அக்பர்” என்றும் அல்லது “புத்தம் சரணம் கச்சாமி” என்று சொன்னாலும் என் மதத்தைப் பின் பற்ற முடியும். என் மதத்துக்கு உரிய கௌரவத்தை நான் அளிக்கிறேன் “ என்று சொன்னார். இந்த வார்த்தைகளைக் கேட்டு அந்த பயிற்சி பெற வந்தவருடைய கண்கள் திறந்தன. (அவர் ஆசிரியரின் சொற்களை ஏற்றுக் கொண்டார்) “ஓம்” என்று சொல்வதால் உனக்கு ஒரு நஷ்டமும் வராது. லாபமே கிடைக்கும்.

அதே போல் கிற்ஸ்த்மஸ் கரோல் பாடுவதால் நீ கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றப் பட மாட்டாய். கிறிஸ்தவப் பாடலை நீ பாடுவதால் உன் கடவுள் உன் மேல் கோபமடைய மாட்டார். அதே போல் நீங்கள் பஜனை பாடுவதால் உங்கள் கடவுள் உங்களை தண்டிக்க மாட்டார். “சிவா” என்றால் என்ன எது மிக அழகாக இருக்கிறதோ, அன்பே உருவானதோ, நன்மை அளிக்கிறதோ அதை “சிவா” என்றழைக்கிறோம். “நாராயணா” என்றால் என்ன ? நம் நரம்பு மண்டலத்தில் உள்ள சக்தியை, படைப்பின் சக்தியை “நாராயணா” என்றழைக்கிறோம். ஜீவன்களில் ஒளி விடும் உயிர் சக்தியை “நாரயணா” என்று சொல்கிறோம். நரம்பு மண்டலம் (நர்வஸ் ஸிஸ்டம்) என்ற சொல் சமஸ்கிருத மொழியிலிருந்து வந்த “நர” என்ற வார்த்தையிலிருந்து வந்தது. “நரர்” என்றால் மனிதர்கள் என்றும் அர்த்தமாகிறது.

இந்த அழகான, பிரமிப்பூட்டுகிற, ஆச்சரியமான நரம்பு மண்டலத்தில் குடியிருப்பவரை “நாராயணன்” என்று சொல்கிறோம். நரம்பு மண்டலமில்லாத மனிதனைக் கற்பனை செய்து பாருங்கள். அப்படிப் பட்ட மனிதன் உயிரோடு இருக்க முடியாது. நரம்பு மண்டலம் வேலை செய்வதால் மட்டுமே நீ உன்னை வெளிப்படுத்த முடிகிறது. இந்த பிரபஞ்சம் முழுவதிலும் இருக்கும் சக்தியையே (தன்னை உணர்ந்து வெளிப்படுத்திக் கொள்ளும் சக்தியையே) “நாராயணன்” என்று சொல்கிறோம். மற்ற மொழிகளில் பாடுவதோ, மற்ற கலாசாரங்களைப் பின்பற்றிப் பாடுவதோ, எந்த இனத்தவரின் கடவுளுக்கும் எதிரானது அல்ல. அப்படி நினைப்பது தவறாகும். ஆனால் தீவிர மதவாதிகள் அவ்வாறு நினைக்கிறார்கள். மற்றவர்களுக்கும் அவ்வாறே பயிற்சி அளிக்கிறார்கள். நீ மற்ற மதத்தினரின் கடவுள்களின் பெயரைச் சொல்வதால் உன் மதத்துக்கு துரோகம் செய்வதாக நம்ப வைக்கிறார்கள்.

இன்று இந்த இடத்துக்கு வருவதற்கு முன் ஈராக்கில் நடந்த தற்கொலை கார் வெடிகுண்டு வெடித்த சம்பவத்தைப் பற்றி செய்தித்தாளில் படித்தேன். மக்கள் இந்த விபத்தில் உயிரிழந்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் இப்படிப்பட்ட மனித வெடிகுண்டு (தற்கொலைப் படை) வெடிக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன. பலர் உயிரிழக்கிறார்கள். அமைதியின் பெயரால் பல வன்முறைச் சம்பவங்கள் பாகிஸ்தானில் நிகழ்கின்றன.

இஸ்லாம் என்றால் அமைதி என்று அர்த்தம். ஆனால் இன்று இஸ்லாம் என்ற பெயரில் மிக அதிகமாக, கற்பனை செய்ய முடியாத வன்முறைச் செயல்கள் நடைபெறுகின்றன.

ஈராக்கில் யஸ்டி இனத்தவர்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக தங்கள் கலாசாரத்தைப் பின்பற்றி வாழ்ந்து வருகிறார்கள். தற்சமயம் அவர்கள் பல கொடுமைகளுக்கு உள்ளாகிறார்கள். பெரிய அளவில் கொல்லப்படுகிறார்கள். அவர்கள் அல்லாவுக்கு எதிரானவர்கள் என்று பிரசாரம் செய்யப் படுகிறது. அது உண்மை என்றால் எல்லாம் வல்ல அல்லா அவர்களை ஏதாவது செய்திருப்பார். (இத்தனை ஆண்டுகள் வாழ விட்டிருக்க மாட்டார்) அவர்களை டினாசௌர் என்ற மிருக வர்க்கத்தை அழித்தது போல் அழித்திருப்பார். கடவுளுக்காக நாம் அந்தக் காரியத்தை செய்யத் தேவையில்லை. கடவுளை அவருடைய வேலையை செய்யவிடுவோம். நம் வேலையை செய்வோம்.மதத்தின் பெயரால் இவ்வளவு வன்முறைகள்  நடைபெறுவது மிகவும் துரதிஷ்டவசமாகும். எனவே மதங்களுக்கிடையே  உள்ள தடுப்பு சுவர்களை உடைக்க வேண்டும்.

இஸ்லாமிய மதத்தில் பல சிறந்த விஷயங்கள் உள்ளன. உதாரணத்துக்கு எல்லோரும் சமம் என்று நம்புவது. எல்லோரும் இணைந்து பிரார்த்தனை செய்வது. – பிரார்த்தனையில் எல்லா மக்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த சிறந்த விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு, பிரிவினை வாதம், வன்முறை, பல்வேறு இனங்களிடையே உள்ள ஏற்றத் தாழ்வுகள் முதலிய விஷயங்களைக் கைவிட வேண்டும். என் மதம் உயர்ந்தது,மற்ற மதங்கள் தாழ்ந்தவை என்ற கருத்து சரியானதல்ல. நான் சொல்கிறேன். இஸ்லாமியர்களில் பல ஞானிகள் உள்ளனர். இந்த பூமியில் பல நல்ல இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். சில தீவிர மதவாதிகளால், வன்முறையாளர்களால் இஸ்லாமிய மதத்துக்கு மிகவும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. இது துரதிஷ்டவசமானது.

முகமது நபியின் மனைவி பாத்திமா என்றும் புர்கா அணிந்ததில்லை. ஹிஜாப் என்ற உடையையும் அணிந்ததில்லை. அவருக்கு எல்லா விதமான (ஆண்களுக்குச் சமமாய்) அதிகாரங்களும் கொடுக்கப் பட்டது. பிற்காலத்தில் பெண்களுக்கிருந்த அதிகாரம் (உரிமைகள்) ஆண்களால் பறிக்கப்பட்டது என்று நினைக்கிறேன். தற்காலத்தில் பெண்களை அடிமையாக நடத்தக் கூடாது.

நம்பிக்கை மூலம் வலிமை பெறுதல்

செவ்வாய், 14/10/2014,

கியூபெக், கனடா


கேள்வி பதில்

நம்பிக்கையை ஒருவர் வளர்ப்பது எப்படி? அல்லது இது ஒரு உடன் பிறந்த குணமா?

நம்பிக்கையை வளர்ப்பதென்பது முடியாது, உங்களிடம் உள்ள சந்தேகங்களை உணர்ந்து அவற்றை விட்டுவிட்டாலே போதும். உங்கள் சந்தேகங்கள் விடப்பட்டால், நம்பிக்கை ஏற்கனவே அங்கே இருக்கிறதுசந்தேகம் என்பது மனதை சூழ்ந்திருக்கும் மேகம் போல, விழித்தெழுந்து உணருங்கள், ‘இது என்ன சந்தேகம்? இது என்னைக் கீழே தள்ளி என் சுமையை அதிகரிக்கிறது. இது எனக்குத் தேவையில்லை.’ கடந்த காலத்தில் இருந்துவந்த பல சந்தேகங்கள் உங்களை அழுத்துவதை நீங்கள் மறுத்து விலக்கும்போது, நீங்கள் விழித்தெழுகிறீர்கள். பிறகு நீங்கள் விழித்தெழும்போது, நம்பிக்கை அங்கே ஏற்கனவே இருக்கிறது.

நம்பிக்கையை உருவாக்க முடியாது, ஆனால் சந்தேகங்களை விலக்க முடியும். சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதற்கு முடிவேயில்லை. சந்தேகங்களுக்கு விளக்க அளிக்க முயற்சி செய்யக் கூடாது, ஏனென்றால் ஒரு சந்தேகத்திற்கு விளக்கம் அளிக்கும் போது அது பத்து புதிய சந்தேகங்களை உருவாக்குகிறது. ‘இது என் மீது சுமையாய் அழுத்துகிறது, என்று உணர்ந்து அதை விட்டுவிட்டாலே போதும். அதை விட்டபின்னர், உங்களுக்குள்ளே ஆழத்தில், வலிமை, சத்தியம் மற்றும் உறுதி நிறைந்த இடத்திற்குச் செல்கிறீர்கள். இதுதான் நம்பிக்கை. எப்போதெல்லாம் 

உங்களுக்கு சந்தேகம் வருகிறதோ அப்போதெல்லாம் நீங்கள் பலவீனமாய் உணர்வதை அனுபத்திருப்பீர்கள். உங்களிடம் நம்பிக்கை இருக்கும் போது, நீங்கள் மிக வலிமையாய் உணர்கிறீர்கள். உங்களுக்குள் ஏறக்குறைய வெல்லவே முடியாதவர் என்ற உணர்வைப் பெறுகிறீர்கள். எனவே, உங்களுக்கு முன் உள்ளே வாய்ப்புகள் இரண்டு, வலிமையான உங்களை யாரும் வெல்லவே முடியாத உணர்வு அல்லது பலவீனமான உணர்வு.

சந்தேகம் எப்போதும் ஏதாவது நல்லவை பற்றியே எழுகிறது. எதிர்மறை விஷயங்களைப் பற்றியோ தீமையான விஷயங்களைப் பற்றியோ நாம் சந்தேகப்படுவதே இல்லை. ஏதாவது நல்ல விஷயங்களைப் பற்றியே சந்தேகம் கொள்கிறோம். உங்களை சந்தேகத்திலிருந்து காக்க இந்த ஒரு புரிதல் மட்டுமே போதும்.

அன்பு குருதேவ், நான் தாந்திரிக பயிற்சிகளில் ஈடுபடலாமா என்று தயவுசெய்து கூறுங்கள். பத்து வித மகாவித்தியாக்களில் ஒரு பயிற்சியை நான் கற்றுகொண்டிருக்கிறேன், நான் அதைச் செய்யலாமா?
குருதேவ்:
பாருங்கள், பத்து மகாவித்தியாக்களும் தெரிந்தவர்கள் வெகு சிலரே. எனவே அதைச் செய்வது தேவையில்லை. சற்றே தளர்ந்து மந்திர உச்சாடனங்களை கேளுங்கள். அப்படி பல ஒலிப்பதிவுகளை வாழும்கலை வெளியிடுள்ளன, அவை அனைத்தும் இதன் பகுதிகளே. சஹஜ் தியானத்தில் உங்களுக்கு தரப்படுபவை பீஜ மந்திரங்கள், சக்தி வாய்ந்தவை. பத்து மகாவித்தியாக்களையும் கற்றுத் தருவதாக யாராவது கூறலாம், ஆனால் அவை மிகச் சிக்கலானவை. அவர்களை நீங்கள் தூரத்திலிருந்து மரியாதை செய்யுங்கள் போதும். பயிற்சிக்கு, இங்கே கற்றுத் தரப்பட்டவையே பெரிது. விரும்பினால், இங்கே நடக்கும் வேத பாட வகுப்புகளில் சேர்ந்து கற்றுக் கொள்ளலாம். 40 நாட்களில் இவற்றை நீங்கள் வெகுவாக புரிந்துகொள்ளலாம். இந்தியாவிற்கு வந்தால், அங்கே உபநயனம் செய்விக்கிறோம்,அதிலும் நீங்கள் மந்திரங்களை கற்றுக் கொள்ளலாம். ‘நான் இதைக் கற்றுத்தருகிறேன், அதைக் கற்றுத் தருகிறேன்,’ என்று பலர் கூறலாம், ஆனால் அவையெல்லாம் குழப்பத்தைத்தான் தரும்.

யோக நித்திரையின் பலன் என்ன அது எப்படி வேலை செய்கிறது?

அது வேலை செய்கிறது, இல்லையா? உங்கள் கவனத்தை உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதிக்குக் கொண்டு செல்வத்தின் மூலம், உடலும் பேருணர்வும் எப்படி பிரிந்திருக்கிறது என்று காண்கிறீர்கள். ஆனாலும், அவை ஒன்றோடொன்று கலந்தவை.

பல கஷ்டங்களுக்கு இடையேயும், அநியாங்களுக்கு இடையேயும், உள் மன அமைதியின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டிருக்கிறேன். ஆனால், வன்முறையை தங்கள் கைவசம் வைத்துக்கொண்டு ஆதிக்கம் செய்பவர்களை, எல்லாவிதமான ஆதிக்கங்களையும் எதிர்க்கும் ஒரு ஆர்வலனாக எப்படி எதிர்கொள்வது? வேறு விதமாகச் சொல்வதென்றால், ஒரு சக்திவாய்ந்தவரை பலமில்லாதவர் எப்படி சமாளிப்பது?

நாம் கலங்கியிருக்கும் போது நம் செயல்களுக்குத் தகுந்த பலன் கிடைக்காது. நாம் சாந்தமாய் இருக்கும் போது உள்ளுணர்வுகள் நமக்கு எண்ணங்களைத் தருகிறது, இந்த எண்ணங்களை கொண்டு திட்டமிட்டு, அதன்படி செயல்படத் தொடங்குங்கள். அடக்குமுறை செய்பவரை தனியாக எதிர்கொள்ள முடியாது. விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, ஒரு குழுவாக செயல்பட்டால் அது முடியும். அதே நேரத்தில், உங்கள் எண்ணத்தை வலுவாக வைத்துக்கொண்டு, உங்களை ஆதரித்து வழிநடத்தும் சக்தி ஒன்று உண்டு என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

மகாத்மாகாந்தி அவர்கள் சில நேரங்களில் தனியாக நடக்க வேண்டியிருந்தது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். மற்ற நேரங்களில், விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்த முழு கண்டத்தையே நடத்தி சென்றார் இல்லையா? அவர் எப்போதும் தியானம் செய்து வந்தார். தினசரி பஜனைகள் செய்து சத்சங்கத்தில் ஈடுபட்டுவந்தார். காலை வேலைகளில் பகவத்கீதை படித்து வந்தார். எனவே, ஆன்மீகப் பார்வை இல்லாமால் மாகாத்மாவால் அவர் அடைந்த இலட்சியத்தை  சாதித்திருக்க முடியாது.

அன்பை நிலைநிறுத்துவதற்கு ......

வியாழக்கிழமை, அக்டோபர் 13 , 2014,

குபெக், கனடா

குருதேவ், நான் வாழ்க்கை துணையை எவ்வாறு தேடுவது?எல்லா வழிகளிலும் தேடிவிட்டேன் ஆனால் அதிர்ஷ்டம் இல்லை. எவ்வாறு வித்தியாசமாகத் தேடுவது?

குருதேவ்: நான் இதில் வல்லுநர் அல்ல. இக்கேள்வியை நீங்கள், பல உறவுகளைக் கொண்டு பின்னர் வெற்றிகரமாக ஒருவருடன் வாழும் நபரை கேட்க வேண்டும். அவர், உங்களுக்கு சிறந்த அறிவுரையைக் கூற முடியும். ஆனால் ஒரு விஷயம் என்னால் கூற முடியும். துணையை தேடி கொண்டிருந்தால், அவரது வாழ்க்கையில் நீங்கள் பங்குகொள்ள வேண்டும். நீங்கள் வாழ்க்கை துணையிடம் இருந்து ஏதேனும் அடைய வேண்டும் என்றும், உங்கள் துணை உங்களிடமிருந்து ஏதேனும் அடைய வேண்டும் என்றும் விரும்பினால் அந்த "அடைய விரும்பும்" உணர்வானது உங்கள் இருவரையும் பிரித்து விடும். ஆனால் உங்களது முழு நோக்கமும் ஒருவருக்கொருவர்  ஆதரவு, வழிகாட்டுதல்,மற்றும் பங்களிப்பு என்று இருந்தால், அத்தகைய உறவு எப்போதும் நீடிக்கும்.

ஞானம் என்பது என்ன? சாதாரண மனிதன், ஒரு ஞானியை எவ்வாறு கண்டு பிடிப்பது?

குருதேவ்: அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. உணர்ந்தறிய வேண்டும். அன்பை நீங்கள் விவரிக்க முடியாது. அன்பு என்பது உடலில் சுரக்கும் என்ட்றோபின் அல்லது ஒக்சிடோசின் என்று விவரிக்க முடியாது, உங்கள் இதயம் அதை உணர வேண்டும். வேடிக்கையான விஷயம் என்னவென்றால் அது ஒவ்வொருவரிடமும் உள்ளது. இயல்பாக ஒவ்வொருவரிடமும் சிறிதும் மறைக்கப் படாமல் இருப்பிலேயே ஏற்படுத்தப் பட்ட ஒன்று ஆகும்.

நான் பாலியல் ஆசைகளை எவ்வாறு தடுப்பது ?

குருதேவ்: உயர்ந்த நிறைவின் மூலம்.எவ்வாறெனில், குழந்தைகள் பஞ்சு மிட்டாய், சாக்கலேட்டுகள் இவற்றுக்கு ஆசைப்படுகின்றன. ஆனால் வளர்ந்த பின்னர் அவர்களுக்கு அத்தகைய விருப்பங்கள் இருப்பதில்லை. அது போன்று பிராணாயமம் போன்றவையும், வாழ்வில் உயர்ந்த இலக்குகளும் இதற்கு உதவும். அதிக பணிகள் இருக்கும் போது பாலியல் உணர்வுகள் ஒரு பிரச்சினையாக எழாது. தேர்வு நேரத்தில் பாலியல் எண்ணங்கள் தோன்றுகின்றனவா என்று ஒரு மாணவனை கேளுங்கள். இல்லை என்றே கூறுவான். தேர்வு நடக்கும் அந்த மாதம் முழுவதும், அவன் மனம் வெற்றி பெற வேண்டும் என்னும் இலக்குடன் அதிலேயே ஆழ்ந்திருக்கும். ஒரு நொடி கூட வேறு சிந்தனை ஏற்படாது. புத்தகங்களிலேயே மூழ்கியிருப்பான். எனவே ஆக்க பூர்வமான ஏதாவது பணியில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.

இன்பம் முதலில் உங்களை அதை நோக்கி ஓடச் செய்யும், பின்னர் அதை விட்டு ஓடச் செய்யும். இதுதான் அதன் இயல்பு.முதலில் ஆசையுடன் அதை நோக்கிச் செல்வீர்கள், பின்னர் அதை விட்டு விலகி ஓட விரும்புவீர்கள், ஏனெனில் அதைச் சமாளிக்க முடியாது. யோகா தான் உங்களை நடு நிலையில் வைத்து நிலைநிறுத்தும்.நீங்கள் நிலையாக, மையத்தில் இருந்தால் இன்பம் கிடைத்தால் அனுபவிப்பீர்கள், இல்லையெனில் கவலைப்பட மாட்டீர்கள் ஏனெனில் அது உங்கள் மனதை ஆக்கிரமிப்பதில்லை.. ஏக்கம் உங்களைத் துன்புறுத்துவதில்லை.

எவ்வாறு பொய் சொல்லுவதை நிறுத்தி என் பெற்றோருடன் திறந்த மனதுடன் இருப்பது?

குருதேவ்: நீங்கள் ஏற்கனவே பொய் கூறுவதில் களைப்படைந்து விட்டீர்கள். அதனால் தான் அதை நிறுத்தவேண்டும் என்று விரும்புகின்றீர்கள். நல்லது. சரியான வழியில் வந்து விட்டர்கள். ஒரு காலகட்டத்தில், கடவுளே! இதை இனி என்னால் சமாளிக்க முடியாது" என்னும் நிலை ஏற்படும், ஏனெனில் அதிக அளவில் பொய் கூறி முன்பு என்ன கூறினீர்கள் என்பதே உங்களுக்கு மறந்து போகும் நிலை ஏற்படும். உண்மை என்பது விடுதலையும் ஆறுதலும் அளிக்கக் கூடியது ஆகும். எப்போதும் எல்லோரிடமும் உண்மையைக் கூற முடியாது. அறிவும் பாகுபடுத்தும் திறனும் தேவை. உலகின் சில பகுதிகளில் மக்கள் "நான் உண்மையுடன் இருக்க வேண்டும், அனைத்தையும் கூறி விட வேண்டும்" என்னும் உணர்வுடன் வாழ்கின்றார்கள். ஆயினும் உங்களது கருத்துக்கள் எவ்வளவு தூரம் உண்மையானவை என்பது தெரியாது.

இங்கு கனடா ஆஸ்ரமத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை உதாரணமாகக் கூறுகின்றேன். ஒரு முதிய தம்பதி தங்கள் மகளுடன் இங்கு வந்திருந்தார்கள். அந்த மகள் பல தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தவள். அந்த நிகழ்ச்சிகள் ஒன்றில், ஒரு குழந்தை "என் தந்தை என்னை இங்கே தொட்டார், என் தாய் இதைச் செய்தாள்" என்றெல்லாம் கூறியிருக்கின்றது. திடீரென்று இப்பெண்ணுக்கு தன்னுடைய தந்தையும் தனது இரண்டாவது வயதில் தன்னைத் தவறாகத் தொட்டு அணுகியதாக எண்ணம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெற்றோர் மனம் உடைந்து உண்மையில் தந்தைக்கு தற்கொலை செய்து கொள்ளும் அளவு மனத்துயர் ஏற்பட்டது. ஆனால் அப்பெண்ணோ "நீங்கள் இவ்வாறு செய்யவில்லை என்று நிரூபித்துக் காட்டுங்கள்" என்று கூறிக்கொண்டு இருக்கின்றாள். பெற்றோர் அழுது கொண்டே என்னிடம் வந்தனர். அத்தந்தை "என்னால் இவ்வாறெல்லாம் நினைக்கக் கூட முடியுமா" என்று கதறினார்.

இவ்வாறு பலரிடம் நிகழ்கின்றது. நமது நினைவில் சிலவற்றை திணித்துக் கொண்டு நமக்கு அவை நிகழ்ந்து விட்டதாகவே எண்ணுகின்றோம். பாதிக்கப்பட்டவராகவே கருதி கொள்கின்றீர்கள்.அவ்வாறு பாதிக்கப்பட்டவராக இருப்பது ஒரு மகிமை என்றும் நினைத்து கொள்கின்றீர்கள். ஏனெனில் அத்தகையோர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் போற்றப்படுகின்றனர். இந்த தம்பதியின் மகளான அந்த இளம் பெண்ணும் அவ்வாறே தன்னுடைய மனதில் ஒரு கற்பனை எண்ணத்தை வளர்த்துக் கொண்டிருக்கின்றாள். இது உண்மையாக வே நிகழ்ந்திருந்து ஒரு குழந்தை அதை நினைவில் வைத்துக்கொண்டிருந்தால் அது வேறு விஷயம். ஆனால் அவ்வாறு கற்பனை செய்து கொள்வது  அதுவும் இரண்டு வயதில் நிகழ்ந்ததை என்பது எவ்வாறு சரியாகும்? ஆறு அல்லது ஏழு வயதில் அவ்வாறு நிகழ்ந்ததை நினைவு கொள்வது என்றாலும் சரி. மகிழ்ச்சியான ஒரு குடும்பம் இவ்வாறு துன்புற்று சிதைவது வேதனையான ஒரு விஷயம். நமது கருத்துக்கள் பல சமயங்களில் சரியானதாக இருக்காமல் போகலாம்.

அன்புள்ள குருதேவ், பாட்டும் நடனமும் ஆற்றலை சமநிலைப்படுத்தும் வழிகள் ஆகும்.பாப், ஜாஸ் ராக் & ரோல் பாடல்களைக் கேட்பது தவறாகுமா?

குருதேவ்: இல்லை. தவறு என்பதில்லை.ஆனால் அவை அதிக ஒலியை ஏற்படுத்தக் கூடியவை. நரம்பு மண்டலத்திற்கு கடினமானவை. மேலும் அவை முதல் சக்கிரத்தை ஊக்குவிக்க கூடியவை. ஆகையால் சந்தேகமின்றி செயலற்ற சோம்பல் நிலையிலிருந்து வெளிக்கொண்டு வருகின்றது. ஆனால் நுட்பமான, சீரியதான நரம்பு மண்டலம் உங்களுக்கு இருந்தால், இந்தப் பாடல்களின் ஒலி நாராசமாக இருக்கக் கூடும். எவ்வாறு மேன்மையான கணினிக்கு, குளிரூட்டப்பட்ட தரமான சூழல் தேவையோ அது போன்று நமது நரம்பு மண்டலத்திற்கும் தேவை. அதிக அளவிலான ரஜசிக் அல்லது நாராசமான ஒலியை நரம்பு மண்டலத்தினால் ஏற்றுக் கொள்ளமுடியாது. அதிக ஒலியுள்ள ராக் இசை நிகழ்ச்சியை ஒரு பத்து நிமிடங்கள் நின்று ரசிக்கலாம், பின்னர் அங்கிருந்து சென்று விடலாம் என்று தோன்றும். வீட்டிற்கு திரும்பி வந்ததும் உங்கள் உடல் முழுவதும் பதறும். இதை எத்தனை பேர் அனுபவித்து உணர்ந்திருக்கின்றீர்கள்? (பலர் கை உயர்த்துகின்றனர்) எத்தனை பேர் ! நான் ராக் இசை நிகழ்ச்சிக்கே சென்றதில்லை. ஆயினும் நாம் எங்கிருந்தாலும் ஆடிக்கொண்டே இருக்கின்றோம் !! 

நம்பிக்கை போதுமானது

 திங்கள்கிழமை, 13 அக்டோபர் 2014

குபெக், கனடா.


உண்மையான சரணடைதல் கடவுள் அருளியதா? எவ்வாறு மனிதர்கள் அதை அடைய முயற்சி செய்யலாம் ?

குருதேவ்: கடவுள் மீது ஆணையாக, சரணடைய முயற்சிக்காதீர்கள். சரணடைதல் என்னும் சொல்லானது, பல தடவைகள் அச்சம் ஏற்படுத்தக் கூடிய அளவில், தவறான முறையில் பயன் படுத்தப்படுகின்றது. ஆகவே, அந்தச் சொல்லை தவிர்த்து விடுங்கள், வேண்டுமென்றால் ஏரியில் தூக்கிப் போடுங்கள். இயல்பாக எளிமையாக இருங்கள், சரணடைய முயற்சிக்காதீர்கள். உங்களுக்கு மேலான ஒரு சக்தி உங்களைக் கவனித்து உங்களுக்கு உதவுவதாக நம்பிக்கை இருந்தால், அது போதும். எதை  உங்களால் கையாள முடியாதோ, அதை "நான் விட்டு விடுகிறேன்" என்று கூறி விடுங்கள். அப்போது சரணடைந்து விடுகின்றீர்கள். இதை விரக்தியுடன் செய்யலாம், அல்லது முழுமையான தளர்வுடன் செய்யுங்கள்.

குருதேவ்:ஆம் என்னும் நேர்மறையான மனப்போக்கை கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு கற்பிக்கின்றீர்கள். சில சமயங்களில் பலவற்றிற்கு நான் ஆம் என்று கூறி விடுகின்றேன், ஆனால் என்னால் அவற்றை பூர்த்தி செய்ய முடிவதில்லை. இந்த ஆம் மனப்போக்கிற்கும் நேர மேலாண்மைக்கும் இடையே மோதலை நான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றேன்.

குருதேவ்: அது மோதல் இல்லை. ஆம் எனும் மனப்பான்மைக்கு எதற்கும் கண்மூடித்தனமாக அனைத்திற்கும் ஆம் என்று கூறவேண்டும் என்னும் பொருள் இல்லை. நேர்மறையான  அறிவு பூர்வமான சிந்தித்தல் என்பதே அதன் பொருள் ஆகும். ஆம் என்னும் மனப்பான்மை எப்போதுமே அறிவுடன் கூடியதாகச் செல்ல வேண்டும் முட்டாள்தனமாக அன்று. ஒருவர், இந்த ஏரி நீர் இளம்சூடாக இருக்கின்றது, அதில் நீ குதிக்கலாம் என்று கூறினால், ஆம் என்று நீங்கள் கூற முடியாது. நீங்கள், "உன்னுடைய கருத்து வேறுவிதமாக இருக்கின்றது என்றே எண்ணுகின்றேன். இது கோடைக்காலம் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். இப்போது கடும் குளிர் காலம்" என்றே கூறவேண்டும். எனவே, ஆம் மனப்பான்மை யார் எதை கூறினாலும் அதற்கு தலையாட்டுவதாக இருக்கக் கூடாது, அறிவுபூர்வமானதாக இருக்க வேண்டும்.

படைப்பில், உயிரினங்கள் எந்த நிலையில் ஆத்மாவை அடைகின்றன? கொசுக்கள், மரங்கள், பாக்டீரியாக்கள் திசுக்கள் போன்றவற்றைக் குறிப்பிடுகின்றேன்.

குருதேவ்: ஆன்மா, எறும்பிலிருந்து பாக்டீரியா வரையில் அனைத்திலுமே உள்ளது. ஆனால் முதிர்ந்த ஆன்மாவானது ஒரு உயிரில் ஒரு காலகட்டத்தில் நுழைகின்றது, கருத்தரிக்கும் காலத்திலேயோ நான்காவது அல்லது ஐந்தாவது மாதத்திலேயோ அல்லது பிறக்கும் காலத்திலேயோ கூட இது நிகழலாம்.இவை தாம் மூன்று சாத்தியக் கூறுகள். ஆனால் இதை  அறிய முடியாது. அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டியது தான்.

தங்களிடமிருந்து நாங்கள் எந்த முக்கியமான பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றீர்கள்?

குருதேவ்: இது எவ்வாறு இருக்கிறதென்றால், ஒரு மருந்துக் கடைக்குச் சென்று, எந்த சிறந்த மருந்தை நீங்கள் எனக்குத் தர முடியும் என்று கேட்பதை போன்று இருக்கின்றது. ஒன்றல்ல, என்னவெல்லாம் தேவையோ அவற்றையெல்லாம் இங்கிருந்து நீங்கள் பெற முடியும். ஏன் ஒவ்வொருவருக்கும் ஒரு அறிவுரை என்று நான்  குறைத்துக் கொள்ள வேண்டும்? ஒருவர் இடது புறமாகச் சாய்ந்தால், வலது புறமாக நகருங்கள் என்று கூறுவேன். ஒருவர் வலது புறமாக சாய்ந்தால் இடது புறமாக நகருங்கள் என்று கூறுவேன். நடுவிலேயே இருங்கள்!

தாங்கள் வலது கையா அல்லது இடது கை பழக்கம் உள்ளவரா?

குருதேவ்: அனைத்தையும் சரியாக செய்பவன். நான் எது ஒன்றையும் விடுவதில்லை என்றே கருதுகின்றேன். எதையும் விடாததால் நான் சரியாக இருப்பதாகவே எண்ணுகின்றேன்.

விலங்குகளுக்கு மனம் உள்ளதா? எப்படி எந்த மனப் பிரச்சினைகளும் இல்லாமல் அவை இருக்கின்றன?

குருதேவ்: விலங்குகளுக்கும் மனம் உள்ளது, அவைகளுக்கும் உணர்ச்சிகள் இருக்கின்றன. எப்படி ஒரு சிறுத்தை ஒரு குரங்குக் குட்டி பிழைக்க  உதவியது, எப்படி  ஒரு டால்பின் வகை மீனால் ஒரு நாய் காக்கப்பட்டது என்பது பற்றியெல்லாம் ஒரு கட்டுரை வந்திருக்கின்றது. இத்தகைய ஆச்சர்யமான விஷயங்கள் உள்ளன. சாதரணமாக நாம் "பூனையும் நாயும் போன்று சண்டையிட்டுக் கொள்வது" என்று கூறுவோம்.ஆனால் நமது ஆஸ்ரமத்தில் ஒரு நாய் ஒரு பூனைக் குட்டிக்கு பால் கொடுத்து வருகின்றது. பூனைக் குட்டி நாயின் முதுகில் சுகமாக அமர்ந்து கொள்கின்றது, நாயும் அக்குட்டியைக் கொஞ்சி மகிழ்கின்றது. அவையிரண்டும் மிக சிநேகமாக உள்ளன. ஒரு மாதத்திற்கு முன்பு, பானு என்னிடம், ஆஸ்ரமத்தில் ஒரு மயில் பாம்பிற்குக் காவலாக இருப்பதை பார்த்ததாகக் கூறினாள். சாதரணமாக மயில்களும் பாம்புகளும் தீவிரப் பகையுடன் ஒன்றையொன்று கொன்று விடும். அந்த இடத்தில் முயல்களும் இருப்பதால், பாம்பு முயல்களைக் கொன்று விடாமல் காப்பதற்காக மயில் பாம்பினைக் கண்காணித்து வருகின்றது.

ஆகவே விலங்குகளுக்கும் மனம் உண்டு. யானைகள் மிகுந்த புத்திசாலிகள். நமது ஆஸ்ரமத்தின் யானை நான் அரிசி கொடுத்தால் தனது தும்பிக்கையில் வாங்கிக் கொள்ளமாட்டாள், ஏனெனில் அது குளறுபடியாகி விடும் என்று அவளுக்குத் தெரியும். வாழைப்பழம் கொடுத்தால் தும்பிக்கையில் வாங்கிக் கொள்வாள், அரிசி கொடுத்தால் என்னுடைய கையை இழுத்துத் தன் வாயில் அரிசியைப் போடும்படி செய்வாள். மாவுத்தன் அவள் என்னுடைய அறைக்கு வரும் போது ஓடி வருவதாகவும், திரும்பச் செல்வதற்கு மறுத்து அடம் பிடிப்பதாகவும் கூறுகின்றான். "குருதேவ், தங்கள் அறைக்கு வரும் போது நான் கூறுவதையெல்லாம் கவனிக்கிறாள், திரும்பச் செல்லும் போது எனக்கு அடங்குவதேயில்லை" என்று மாவுத்தன் கூறுகின்றான்.

விலங்குகள் புத்திசாலிகள். அவைகளுக்கும் மனம் உண்டு. ஆனால் அவை இயற்கையோடு இணைந்து வாழ்கின்றன. இயற்கைக்குப் புறம்பாக எதுவும் செய்வதில்லை. அதிக உணவு உண்பதில்லை. அதிக உறக்கம் அல்லது உறக்கமின்மை கிடையாது. மனிதர்களை போன்று அதிகப் படியான இன்பம் போன்ற செயல்பாடுகள் கிடையாது. அவை இயற்கையோடு இயைந்து இருக்கும் படியான சீரமைப்பு கொண்டுள்ளதால் நன்றாகவே இருக்கின்றன.