போகட்டும், விடுங்கள் !

திங்கள், 6 அக்டோபர், 2014,

பெங்களூரு - இந்தியா


(யோகாவின் குறிக்கோள் என்னும் பதிவின் தொடர்ச்சி)

இறைமை எளிமையான விழிப்புணர்வு, எனக்கு தெரியாது, எனக்கென்ன கவலை? தெரியாது என்னும் உணர்வு ஆகும். நீங்கள் தளர்வாக இருக்கும் போது என்ன நிகழ்கின்றது? உடல் இளைப்பாறுகின்றது, மனம் விரிவடைகின்றது. ஆனால் நீங்கள் எதையாவது தெரிந்து கொள்ள விரும்பினால் மனம் கவனித்து தீவிரமடைந்து குவிகின்றது. நாம் கவனம் செலுத்தப் பயிற்சி பெற்றிருக்கின்றோம்.கவனிக்கும் பயிற்சியானது கவனித்து, இறுக்கத்தை ஏற்படுத்துகின்றது. எனவே, யோகாவின் முதல் படி தளர்த்தி விடுதல் ஆகும்.

எவ்வாறு இளைப்பாறுவது என்று என்னைக் கேட்காதீர்கள்!! போகட்டும் விடு என்று உணர்வது? விடுங்கள் அவ்வளவு தான். மனதிலுள்ள ஆசைகள் தாம் உங்களை கட்டுப்படுத்துகின்றன. எனக்கு இது வேண்டும்,அது வேண்டும் என்றெல்லாம் எண்ணுவதற்குப் பதிலாக, எனக்கு எது தேவையோ அது கிடைக்கும் என்று எண்ணுங்கள். இந்த உணர்வு ஏற்பட்டால் பின்னர் எதையும் விரும்பும் அவசியம் ஏது? மனம் தான் "எனக்கு இதை கிடைக்காமல் போகலாம் என்று உணர்கின்றது, அதை நோக்கி அடைய வேண்டும் என்று தேடி ஓடுகின்றது. இதை விடுத்து, நாம் "எனக்கு தேவையானது கிடைக்கும்" என்றே கவனம் கொள்ள வேண்டும். எனவே தான் “சமாதி சித்தி ஈஸ்வர ப்ரநிதான"  அனைத்தையும் இறைவனின் மடியில் விடுத்துவிடும் போது சமாதி நிகழ துவங்குகின்றது. யோக சூத்திரங்களில் இரண்டு மட்டுமே கடவுளைக் குறிப்பிடுகின்றன. அதில் ஒன்று, சமாதி அடைய விரும்பினால் ஒருவன் தன்னையே உயர்ந்த சக்தியுடன் அளித்துவிட வேண்டும். கிலேசா (வேதனை) கர்மா (நன்மை தீமை) விபாகா (செயலின் பலன்) இவையனைத்துக்கும் அப்பாற்பட்ட புருஷா அல்லது கடவுள் உங்களுக்குள்ளேயே இருக்கின்றார். இது போதும், இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.

ஐந்து வ்ரித்திகள் வந்து போகும். அவற்றுடன் நாம் சண்டையிடக் கூடாது.அவற்றை கண்டறிந்து இளைப்பாறிக் கொள்ள வேண்டும். மனப்பரப்பில் எதையாவது அடையும் வழி, தளர்த்திக் கொள்ளுதலே ஆகும், நடவடிக்கை அல்ல. உடல் பரப்பில், எதையாவது அடைய வேண்டுமெனில் செயல்பாடு அவசியம், விழிப்புணர்வு நிலையில் செயலற்ற நிலையே தேவை. வாழ்க்கையில் எங்கோ செயலும் எங்கோ செயலின்மையும் ஏற்படுகின்றன. இப்போது நாம் வேத ஞானம் என்பது பற்றிப் பேசலாம்.

வேதங்கள் எப்போது எழுதப்பட்டன என்று யாருக்குமே தெரியாது. ஆனால் வரலாற்றாசிரியர்கள் மிகவும் பழமையான இலக்கியம் ரிக் வேதம், அதை விடப் பழமையானது எதுவுமே இல்லை என்று கூறுகின்றார்கள். வேதங்கள் என்பவை யாவை?  அது ஸ்ருதி அதாவது," நாம் கேட்டவை" என்று அழைக்கப் படுகின்றது. பழமையான ரிஷிகள் ஆழ்ந்த தியானத்திலிருந்த போது எதையோ செவியுற்றனர். அதையே ஓதினர். அவ்வாறு  ஓதப்பட்டதை மக்கள் கேட்டு தாங்களும் மீண்டும் கூறிப் பதிவு செய்தனர். எனவே எது ஆழ்ந்த தியானத்தில் கேட்கப்பட்டதோ அதுவே ஸ்ருதி கணினி முறையில் பதிவிறக்கம் செய்யப்பட்டதாகக் கூறலாம்.

அவ்வாறு பதிவிறக்கம் செய்தவர்கள் ரிஷிகள் என்று அழைக்கப்பட்டனர்.அந்த ரிஷிகள் ஆயுர்வேதம் உட்பட பலவற்றைப் பதிவிறக்கம் செய்தனர். உங்களில் எத்தனை பேருக்கு ஆயுர்வேதத்தின் பிறப்பினை பற்றித் தெரியும்? இந்தியாவின் மத்தியப்பகுதியில்,உள்ள காடுகளில் ஆயிரக்கணக்கான முனிவர்கள் அல்லது அக்கால விஞ்ஞானிகள் சேர்ந்திணைந்து, "நாம் அனைவரும் ஆழ்ந்த தியானத்திற்கு சென்று, மனிதர்களுக்கு எது நன்மையானது, எவ்வாறு உடல்நலத்துடன் வாழ்வது எவ்வாறு நோயுற்று இருப்பவர்களைக் குணப்படுத்துவது" என்பவற்றையெல்லாம் கண்டறிய வேண்டும் என்று கூறினர். அதற்கு முன்னர் மெட்டீரியா மெடிகா போன்றவையெல்லாம் இருந்ததில்லை. பின்னர், அனைவரும் தியானத்தில் ஆழ்ந்துவிட்டால், யார் அவற்றைப் பதிவு செய்வார்கள் என்று சிந்தித்தனர். எனவே ஒரு ரிஷியான பரத்வாஜர் " நான் தியானம் செய்ய வில்லை, நீங்கள் அனைவரும் சமாதியில் செல்லுங்கள், என்ன செவியுருகின்றீர்களோ அவற்றைக் கூறுங்கள், நான் பதிவு செய்கின்றேன்" என்று கூறினார். ஆழ்ந்த தியான நிலையில் அவர்கள் உடலின் எப்பகுதிக்கு எந்த மூலிகை அம்மூலிகையின் வடிவம், மூலிகை மருத்துவம், பல்வேறு விதமான மருந்துகளைத் தயாரிக்கும் விதம் ஆகிய அனைத்தையும் விவரித்தனர்.

ஒரு மருத்துவ அகராதி கவிதை உருவில் ஏற்படுத்தப்பட்டிருக்குமானால் அது ஆயுர்வேதா ஆகும். முழுவதும் கவிதையே உரைநடையில் எதுவும் இல்லை.பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத மருத்துவ முறை இன்றும் சிறப்புடன் திகழ்கின்றது.காலத்தின் சோதனைகளைக் கடந்து இன்றைய அறிவியல் உலகில் மிகவும் பயனுள்ளதாக திகழ்கின்றது.இப்போது அலோபதி முறை கூட ஆயுர்வேதா மற்றும் மூலிகை மருத்துவத்தை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கின்றது.

மிகச் சிறந்த உதாரணம், மஞ்சள். 1980  ஆம் ஆண்டு டெல்லியில் ஒரு மாநாடு நடத்தினோம். அலோபதி மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களை அதில் கலந்து கொள்ள வரவழைத்தோம். ஆயுர்வேத மருத்துவர்கள் மஞ்சளின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினர். உடலின் திசுக்களின் அழிவைக் கட்டுப்படுத்தி,வயோதிகத்தை குறைக்கும் என்று கூறினர். அலோபதி மருத்துவர்கள், தங்களுக்கிடையே புன்முறுவல் பூத்து, அது வெறும் வண்ணபொருள், உணவுப்பொருள் அல்ல என்று கூறினர். அதன் முக்கியத்துவத்தை முற்றிலும் மறுத்து விட்டனர். இன்று அதே அலோபதி மருத்துவர்கள், மஞ்சளில் 19 வகையான முக்கியக் கூறுகள் இருப்பதாகவும், 19 உயிர்காக்கும் மருந்துகளின் பணியை அது செய்வதாகவும் கூறுகின்றனர். மேலும் அது அல்ஷேமர் நோயை தடுக்கின்றது. அது ஒரு எதிர் ஆக்சிகரணி, ஆஸ்பேரினைப் போன்று   ரத்தத்தின் அடர்த்தியை மெலிய வைக்கின்றது. ஆஸ்பேரின் வயிற்றினைப் பாதிக்கும், ஆனால் மஞ்சள் உடலுக்கு எந்தத் தீங்கும் செய்யாது. அது வைரஸ் பக்டீரியா, கான்செர் இவற்றையெல்லாம் எதிர்க்கும். மஞ்சளின் இத்தனை பயன்களும் இப்போது கண்டுணரப்பட்டுள்ளன.

இதேபோன்று வெண்ணெய்.வெண்ணெய் உடல் நலத்திற்கு நல்லதல்ல என்னும் எண்ணத்துடன், அதை உண்ணாமல் ஒரு தலைமுறையே இவ்வுலகை விட்டு சென்று விட்டது. இப்போது டைம் பத்திரிக்கை வெண்ணையின் சிறப்பைப் பற்றி ஒரு தலைப்பு கட்டுரையை வெளியிட்டுள்ளது. ஆயுர்வேத மருத்துவர்கள் எப்போதுமே சிறிதளவு வெண்ணெய் இதயத்திற்கு நல்லதே ஆகும் தீமை அல்ல என்று கூறி வந்தார்கள். ஆகவே, ஆயுர்வேதம் வேதங்களில் வேரூன்றிய ஒரு அறிவியல் ஆகும். அது போன்று யக்யங்கள் மற்றும் ஞானம் இவையனைத்தும் மிகவும் பரந்தவை, அவற்றை ஒருவன் தனது வாழ்நாளில் முற்றிலும் அறிந்து கற்க இயலாது.  வேதங்களில் 16 பிரிவுகள் உள்ளன. அவற்றில் ஒருவன் ஒன்று அல்லது இரண்டு பிரிவுகளையே தனது வாழ்நாளில் கற்க இயலும். எவ்வாறெனில், ஒருவன் அனைத்து  நோய்களுக்கும் வைத்தியனாக இருக்க இயலாது என்பது போன்றதாகும். ஒருவர் குழந்தை மருத்துவராக,இதய நிபுணராக, மூளை அறுவை சிகிச்சை நிபுணராக மட்டுமே இருக்க முடியும். அறுவை சிகிச்சையில் கூட ஒரு உடற்பகுதியையே தேர்ந்தெடுத்து கற்க முடியும். அது போன்று பொறியாளர்களில், மின்னியல், கட்டிடம், சிற்பக் கலை பொறியாளர்கள் என்னும் பிரிவுகள் உண்டு. அனைத்தையும் ஒருவனால் கற்க முடியாது.ஒரு வாழ்நாள் முழுவதும் அதற்குத் தேவைப்படும். அது போன்று வேத ஞானமும் பல மார்க்கங்களைக் கொண்டது ஆகும். இங்கு வேத ஞானம் கற்க வந்திருப்பவர்களுக்கு இந்த 40 நாட்களில் இவை அனைத்திற்கும் ஒரு அறிமுகம் மற்றும் மேலோட்டமான பார்வை ஆகியவையே கிடைக்கும்.

சமாதி என்றால் என்ன? கண்கள் மூடியிருக்கும் போது மட்டுமே அது நிகழுமா?

குருதேவ்: ஆரம்பிக்கும்போது கண்களை மூடிக் கொள்ளலாம். பின்னர் கண்கள் திறந்திருக்கும் போதும் நிகழலாம்.கன்னடத்தில் மிக அருமையான ஒரு செய்யுளை ஒரு பக்தர் பாடியிருக்கின்றார். "என்னுடைய மூச்சு மிக வாசனையுடன் இருக்கும்போது மலர்கள் எனக்கு எதற்கு? உங்களுடைய மனம் உயர்ந்து, அல்லது மிக இனிமையான நிலையில் இருக்கும் போது உங்கள் மூச்சு ஒரு மலரைப் போன்று இருக்கின்றது. வலியும், ஜுரவேகமும் மனதில் இருக்கும் போது, உங்கள் மூச்சும் பளுவாக இருக்கின்றது.அனைவரிடமும் அன்பு கொள்ளும் போது,மூச்சுக்கு வாசனை ஏற்படுகின்றது. அத்தகைய மணம் வீசும் போது மலர்கள் எதற்கு ? பின்னர் அவர் தொடர்ந்து, க்ஷமே (மன்னிப்பு) தயா (கருணை) சாந்தி (அமைதி) சைர்ந்னே (சகிப்புத்தன்மை) இவை அனைத்தும் என் மனதில் இருந்தால் நான் ஏன் சமாதியில் அமர வேண்டும்?

முழு மன்னிப்பு,முழு கருணை,முழு அமைதி, முழு சகிப்புத் திறன் இவையனைத்துடன் எதிர்ப்பை வரவேற்கும் திறன் இருந்தால், ஏன் சமாதி தேவைப்படும்?இனிமையான வற்றையும் இனிமையற்ற வைகளையும் சமமாக கையாளும் திறன் இருத்தல் நல்லது. ஏனெனில் ஒவ்வொரு வேதனையும் இனிமையற்ற நிகழ்வும்,வாழ்க்கைக்கு ஆழத்தை தருகின்றது. வாழ்வின் முன்னேற்றத்திற்கு அவையும் கருவியாகினறன. இனிமையற்ற நிகழ்வுகளும் ஒரு படிக்கல்லே ஆகும். அவை, உங்களது பலத்தை மேலும் கூட்டுகின்றன. எனவே இந்த நான்கும் என்னிடம் இருந்தால் சமாதி எதற்கு?

இந்த நான்கு என்ன?
1. க்ஷமே அதாவது மன்னிக்கும் குணம். பூமி க்ஷமே என்றே அழைக்கப்படுகின்றது. ஏன் தெரியுமா? பூமி மிகுந்த மன்னிக்கும் திறன் உடையது. பூமியை வியர்த்து உழைத்துத் தோண்டும் போது அதற்குப் பதிலாக உங்களுக்குத் தாகத்தைத் தணிக்கும்  நீரைத் தருகின்றது. பூமியை உழுதால் தானியங்களைத் தருகின்றது.எனவே பூமி மிகவும் மன்னிக்கும் குணம் உடையது.
2. தயா அதாவது கருணை.
3. சாந்தி அதாவது அமைதி.அமைதி என்பது முழுமையான இளைப்பாறல். உடல் மனம் மற்றும் உணர்ச்சிகளின் இளைப்பாறல்.
4. சைர்ந்னே என்பது பொறுமை அல்லது சகிப்புத் தன்மை.
அடுத்தது மிகவும் சுவாரஸ்யமானது."நானே இவ்வுலகமாகிவிட்ட பின்னர் பிரபஞ்சம் முழுவதையும் நானாகவே என்னால் காண முடியும் போது, எதற்காக தனிமையை நாட வேண்டும்? நான் எங்கு போய் மறைந்து கொள்ள முடியும்? அது தேவையே இல்லை" என்று அவர் கூறுகின்றார். பின்னர் அந்த பக்தர், கடவுளிடம்,"கவனித்துக் கொண்டிருக்கின்றீர்களா? இது என்னுடைய கருத்து, சரியாகக் கவனியுங்கள்" என்று கேட்கின்றார்.


நாட்டில் ஒவ்வொரு மாகாணமும், ஆசீர்வதிக்கப்பட்ட முனிவர்கள் எழுதியுள்ள ஞானச் செறிவைக் கொண்டது.அவர்கள் எழுதியவை பள்ளிகளுக்கு சென்றோ அல்லது இலக்கியங்களிலிருந்தோ கற்றவை அல்ல. அவை அவர்களது சொந்த அனுபவத்திலிருந்து எழுந்தவை ஆகும்.