வாழ்க்கையில் சிறிய விஷயங்கள்

வெள்ளிக்கிழமை, 3 அக்டோபர், 2014, 
பெங்களூரு, இந்தியா
பல்வேறு நகரங்களிலிருந்தும் நுண்ணலை வழியாக எங்களுடன் இணைந்திருக்கும் அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள். ஒன்பது தெய்வீக விழா நாட்களுக்கு பின்னர், இன்று வெற்றி நாள் விஜயதசமி. இன்று சிறுமையின் மீது பெருமையின் வெற்றி, சிறிய மனதின் மீது பெரும் மனதின் வெற்றி, தீமையின் மீது நன்மையின் வெற்றி என்று கொண்டாடுகின்றோம்.
சாதரணமாக, மனம் எதிர்மறை உணர்வுகளால் தாக்கப்பட்டால் அதை நாம் எதிர்க்கின்றோம். இறைமையிடம் சரணடைந்து "என்னால் என் மனதுடன் போராட இயலவில்லை, தாம் அதைக் காத்து எனக்கு நல்வழி காட்டவும்" என்று வேண்டிக் கொள்கின்றோம்.இதைத்தான் நவராத்ரியின் ஒன்பது நாட்கள் குறிப்பிடுகின்றன.அதாவது, சிறிய அற்ப விஷயங்களுக்கு மேலான ஆத்மா எனும் ஆன்மீக சக்தியின் வெற்றி. நாம் அனைவரும் நமக்கு அளிக்கப் பட்டிருக்கும் அனைத்தையும் உலக நன்மைக்காக பயன்படுத்துவோம் என்று சங்கல்பம் எடுத்துக் கொள்வோம். நமது கண்ணோட்டத்தை விரிவாக்கிக் கொள்வோம்.

இன்று நன்றியறிதலுடன் கூடிய நாளும் ஆகும். நாம் வாழ்வில் அடைந்துள்ள அனைத்திற்கும் நன்றியை கூறும் நாளும் ஆகும். இந்தப் பிரபஞ்சத்தில் எதுவுமே முக்கியம் இல்லை, அல்லது எல்லாமே (சிறிய விஷயங்கள் உட்பட ) முக்கியமானது ஆகும். நீங்கள் பைக் ஒட்டிக் கொண்டு வேகமாக செல்லும்போது, உங்கள் ஷர்ட்டில் பட்டன்கள் அவிழ்ந்து விட்டால் என்ன ஆகும்? ஷர்ட் பறந்து உங்கள் முகத்தை மறைக்கும் எனவே அந்த சிறிய பட்டன்களும் மிக முக்கியமானவை.  ஒரு ஊசி கூட பயன் நோக்கம் உள்ளது ஆகும். ஊசி இல்லாமல் நீங்கள் அணிந்து கொண்டிருக்கும் ஆடைகளை பயன்படுத்த முடியாது. அல்லவா? எனவே சிறிய விஷயங்களும் கூட நமது வாழ்வில் பொருள் உள்ளதாகவே அமைகின்றன. இன்றைய தினம் நம் வாழ்வில் பயன்பாடுள்ள அனைத்து உபகரணங்களுக்கும் நன்றி செலுத்தும் நாளாகும். அனைத்து உபகரணங்களும் மனதால் உருவாக்கப் பட்டவை, நம் மனம் இறைமையால் உருவாக்கப்பட்டது. விமானம், காமரா ,மைக் போன்ற அனைத்தையும் உருவாக்கிய எண்ணங்கள் மனதிற்கு வந்தவை, அனைத்தும் ஒரே மூலமாகிய தேவியிடமிருந்தே பிறந்தன. இதையே சண்டி ஹோமத்தில் "யா தேவி சர்வ பூதேஷு புத்தி ரூபேண சம்ஸ்திதா" என்று வணங்குகின்றோம். இந்த பிரார்த்தனையின் மூலம் நாம் அனைத்து உயிர்களிலும் அறிவு என்று வெளிப்படுவது  தெய்வீகத்தன்மை அன்றி வேறில்லை என்று அறிகின்றோம்.
அனைத்து உயிர்களிலும் அறிவு என்று வெளிப்படுவது தெய்வீகத்தன்மை.இதே தெய்வீகத் தன்மையே அனைத்து மனிதர்களிடமும் பசி உறக்கம் என்றும் இருக்கின்றது. அதே போன்று போராட்டம் அல்லது அமைதியின்மை என்றும் வெளிப்படுகின்றது. அனைத்தும் இறைமையின் வெளிப்பாடு என்று உணர்ந்து அறிதல் மனதிற்கு ஓய்வை அளிக்கின்றது. எனவே நீங்கள் "இந்த மனதை என்ன செய்வது என்று கேட்க வேண்டாம். உங்கள் மனதை எதுவும் செய்ய வேண்டாம், தளர்த்திக் கொள்ளுங்கள். ஏதேனும் சிந்திக்க வேண்டும் என்று தோன்றினால், உங்கள் மனதிற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்காமல் இந்த உலகிற்கு என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். உங்கள் மனத்தைக் காக்க மேலான ஒரு சக்தி உள்ளது.
இந்த விஜயதசமி நன்னாளில் நாம் அனைவரும் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அனைத்தையும் உலக நன்மைக்காக பயன்படுத்துவோம் என்று சங்கல்பம் எடுத்துக் கொள்வோம். கண்ணோட்டத்தை விரிவாக்கிக் கொள்வோம். என்ன உணர்ச்சிகள் தோன்றுகின்றன என்பதை ஒதுக்கிவிடுங்கள், ஏனெனில் அவை மாறிக் கொண்டே இருக்கும். ஒரு நிமிஷம் மிக நன்றாகவும் அடுத்த நிமிஷமே நன்றாக இல்லாமலும் இருக்கும். அதனால் என்ன?  வீரம் மற்றும் தைரியத்துடன் முன்னால் நகர்ந்து செல்லுங்கள். சின்ன மனதை வெற்றிக் கொள்வதே விஜயதசமி பல்வேறு விதமான மன நிலைகள் உள்ளன, ஆனால் பொதுவாக அதை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
1. அடங்கா ஆசை அல்லது ஏக்கம் - உலக அல்லது ஆன்மீக அனுபவங்களை நோக்கி ஏக்கம்.
2. மந்தத்தனம் ஆசை விருப்பம் எதுவுமற்ற மனசெயலற்ற நிலை. இது வாழ்வில் அவ்வப்போது  ஏற்படலாம்.
3. திருப்தி, மகிழ்ச்சி ஆனந்தம்.
இந்த கொண்டாட்டங்களின் நோக்கம், செயலற்ற தன்மையிலிருந்து மகிழ்ச்சி நிலைக்கு செல்லுதல், ஏக்கத்திலிருந்து திருப்தி நிலைக்கு செல்லுதல்,ஆகும்.இது மிகவும் அழகானது.சிலர் தங்கள் மனதினை பார்ப்பது கூடக் கிடையாது, அவர்கள் வேலை என்றே இருக்கின்றார்கள்.வேறு சிலர் தங்கள் மனதையே இடைவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.இரண்டுமே நல்லதன்று. இரண்டுக்குமிடையேயான வழியை தேர்ந்தெடுங்கள். சமயங்களில் உங்கள் மனத்தை கவனியுங்கள் ஆனால் எப்போதுமே அல்ல நான் கூறுவது புரிகின்றதா?அப்படி இருந்தால் சுயநலமாகி விடுவீர்கள். எனக்கு என்ன வேண்டும்?ஓ நான் இவ்வாறு உணருகின்றேன் என்றெல்லாம் அனைத்தும் தன்னை பற்றியதாகவே ஆகி விடும். சின்ன மனதை வெற்றி கொள்வதே விஜயதசமி.அந்தச் சின்ன மனதில் பூசல்கள், தீர்ப்புக்கள் போன்ற சப்தங்கள் இருந்து கொண்டே இருக்கும். இத்தகைய உணர்வுகளை தாண்டி மூலாதாரத்துடன் இணைவதே நவராத்திரி நேரம் ஆகும்.

இந்த நவராத்ரியின் போது நாம் 9000 சூரிய ஒளி விளக்குகளை மின்சாரம் இல்லாத கிராமங்களுக்கு அளித்திருக்கின்றோம். மேலும் சமையல் பணியாளர்கள் அனைவரும் இரவு பகல் முழுவதும்  புன்முறுவலுடன் அயராமல் உழைத்து சிறந்த பணியாற்றி இருக்கின்றனர். அவர்களுக்கு என் நன்றி.