ஒரு நிமிட சமாதி, நூறு கோடி ஆண்டுகள் ஓய்வு எடுத்தததற்கு சமம்


22
2012
April
தியானத்தின் ரகசியங்கள் - நாள் 3


இப்போது நாம் இரண்டு நாட்களாக செய்து வந்ததை தொகுத்து பார்போம். தியானம் எப்படி பல வழிகளில் ஏற்படலாம்.
முதலாவதாகதியானம் என்பது ஒரு நிகழ்வு. இரண்டாவதுதியானம் எளிதான செயல். தியானத்தின் முக்கிய கருத்து முயற்ச்யின்மை தியானம் என்பது எதையுமே செய்யாமல் இருப்பது.


நீங்கள் எதுவுமே செய்ய இயலாத நிலையை உருவாக்குவதுஇது எப்படி சாத்தியமாகும்நாம் பல முறைகள் அல்லது வழிகளை பார்த்தோம்

நம் உடலைக் கையாளுதல் மூலமும்யோகாதாய்சி போன்ற முறைகளாலும் ஒருவித அமைதியை நம் மனதில் கொண்டு வர முடியும்முழுவதும் இல்லாமல்,ஆனால் ஒரு அளவு உடலை கையாளுதல் மூலமும்,உடற்பயிற்சி மூலமும் தியானத்தை உணர முடியும்.
இரண்டாவது பிரணாயாமம்.இது மேலும் முக்கியமானது ஏனெனில் நமக்குள்ளே ஐந்து உடல்கள் அதாவது பஞ்சகோஷங்கள் உள்ளன. முதலாவது வெளி உடல்,பிறகு உயிர் தாள விசை அல்லது மின்காந்த விசையான பிரானிக் உடல்.பிறகு மனம் அல்லது மனசாட்சி அதன் பிறகு உள்ளுணர்வுபிறகு பேரானந்த நிலை.பொதுவாக நாம் மனம் உடலுக்குள் இருப்பதாக எண்ணுவோம் ஆனால் உடல்தான் மனதினுள் உள்ளதுஇதற்கு நான் செயற் கையை தான் உதாரணம் கூறுவேன்.  ஒருவரது கை துண்டிக்கப் பட்டாலும் அவன் கை இருப்பது போலவே உணர்கிறான் அதாவது நுண்ணிய மெல்லிய உடலுணர்வு ஆகும் எனவே சுவாச உத்திகள் மற்றும் சுவாச பயிற்சிகள் மூலம் மனம் அமைதியாக மகிழ்ச்சியாக இருக்கும்.பிறகு ஐந்து புலன்களில் அதாவதுநுகர்தல்பார்த்தல்,கேட்டல், ச்பரிசித்தல்,சுவைத்தல் ஏதாவது ஒன்றின் மூலம் மனம் அமைதி தியானத்தில் ஈடுபடும். பிறகு உணர்ச்சிகள்,அதிகமான உணர்ச்சிகள், அன்பு, கருணை, சேவை மனப்பான்மை இதெல்லாம் மனதுக்கு சிறிதளவு மன அமைதியைக் கொடுக்கும். உணர்ச்சிகள்  மூலம் நாம் தியானத்தை அடைய முடியும்.பிறகு அறிவுசார் புரிதல் மூலம்.
அதாவது நீங்கள் ஒரு விண்வெளி அருங்காட்சியகம் செல்கிறீர்கள் அல்லது விண்வெளி படம் பார்கிறீர்கள், அப்போது நீங்கள் பிரபஞ்சத்தின் அளவையும், பூமியின் அளவையும்,பூமி எவ்வளவு சிறியதாக உள்ளது என்பதையும், அதில் நாம் எப்படி சிறியதாக, எங்கே இந்த பிரபஞ்சத்தில் உள்ளோம் என்று நினைக்கும் போது நம் மனதில் ஒரு மாறுப்பட்ட எண்ணம் உருவாகி வாழ்கையை வேறு கோணத்தில் பார்க்க தூண்டி,நம் மனதை தியானத்தில் ஆழ்த்துகிறதுநம் மனதில் எழும் அர்த்தமற்ற சலனப்பேச்சு நின்று விடுகிறது.எப்போதுமே அர்த்தமற்ற எண்ணங்கள் கொண்டுமற்ற வரை குறை கூறிக் கொண்டும் இருக்கும் நம் மனம் இந்த பரந்த விரிந்த பிரபஞ்சத்தையும் அதன் பரப்பையும் ஒப்பிடும் போது ஒன்று மில்லாமல் போய் விடுவதை  உணர்கிறோம்.
இந்த இருப்பு பற்றிய விழிப்புணர்வு திடீரென்று நம்மை அமைதியான, சாந்தமான ஒரு நிலைக்கு இட்டுச்செல்வதை உணர்கிறோம். அதனால் அறிவார்ந்த தூண்டுதல் மூலமும் தியானம் நடைபெறுகிறது.
கேள்வி: பக்தி எப்படி அஹங்காரத்தை மாற்றி உண்மையான ஆன்மாவை உணர உதவுகிறது என்று கூறமுடியுமா?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: பக்தி என்பது என்ன?அது ஒரு அன்பு  நிலை.அஹங்காரம் என்பது என்ன? பிரிக்கும் நிலை,ஒரு வரையறை,மதில்சுவர் ,ஒரு அடையாளம். அன்பு இந்த அடையாளத்தை கலைத்து ஒன்று கலக்க விரும்புகிறது. அஹங்காரம் ஒரு பக்க நிலையை விரும்புகிறது. இவை இரண்டும் வேறு பட்ட பாத்திரங்களை செய்தாலும் ஒன்றையொன்று சார்ந்தே இருக்கிறது. எனவே அன்பு இருக்கும் நிமிடத்தில் அஹங்காரம் இருப்பதில்லை, அஹங்காரம் இருக்கும் தருணம் அன்பு இருப்பதில்லை.
நீங்கள் ஒரு சவாலை ஏற்க்க வேண்டும் எனில் அன்பு உதவுவது இல்லை, அஹங்காரமே துணை நிற்கும் .அஹங்காரம் சவால்களை ஏற்க்க வல்லது. ஆனால் வேடிக்கையாக நிதானமாக இருக்க வேண்டும் எனில் அஹங்காரம் உடைவது, அன்பு மட்டுமே சாத்தியமாகும். நான் கூறுவது உங்களுக்கு புரிகிறதா?
அதனால் தான் இயற்கை அன்பு,அஹங்காரம் இரண்டையுமே உங்களுக்குள் கொடுத்துள்ளது. ஆனால் நீங்கள் அஹங்காரத்தில் மாட்டிக்கொண்டால், உங்கள் காலணிகளில் மாட்டிக் கொண்டது போலாகும். எப்படி வெளியே  வருவது என்றே தெரியாது. நீங்கள் உங்கள் காலணிகளோடு குளிப்பது,உறங்குவது என்ற நிலை ஏற்படும்.எப்பொழுது உங்கள் காலணிகளை கழற்ற வேண்டும் எப்பொழுது வீட்டினுள் இருக்க வேண்டும் என்ற தெளிவு இருக்க வேண்டும்.

அன்பு தான் முதன்முதலில் வாழ்வில் உருவாகிறது.ஒரு குழந்தை பிறந்து கண்களை திறந்த பின் தன் தாயைப் பார்ப்பதும் அன்புணர்வோடு தான்.முதல் பார்வையிலேயே குழந்தை தன் தாயிடமிருந்து அன்பைப்பெற்று தானும் பரிமாறிக்கொள்கிறது. ஆனால் அஹங்காரம் மூன்று வயதிலேயே வந்து விடுகிறது. மூன்று வயதுக்குப் பிறகு  தனித் தன்மை வளர்ந்து தான் என்ற எண்ணம் மிகவும் உறுதியாகி சில சமயம் செய்வதறியாது  மாட்டிக்கொள்ளும். ஆனால் மிகவும் வயதான முதியவர்களை பார்த்தால் அவர்களிடம் அஹங்காரம் இருப்பதில்லை. அவர்கள் குழந்தைகளாக மாறி விடுகிறார்கள். தொண்ணூறு வயதானவர்களிடம் அஹங்காரம் கண்டிப்பாக இருக்காது. மூன்று வயதுக்கு முன்னரும், தொண்ணூறு வயதுக்குபின்னரும் அஹங்காரம் ஒருவரிடம் இருப்பதில்லை. இது கிட்டத்தட்ட செக்ஸ் போன்றது. ஒரு வயது வரம்பு உண்டு. அதற்கு முன்னரும் சாத்திய மில்லை பிறகும் சாத்தியமில்லை. ஆனால் அவைகள் (அன்பும் அஹங்காரமும்) தம் கதாபாத்திரம் அறிந்து செயல்படுவர்.

கேள்வி: என் நண்பர்கள், இந்த பூமி மீட்க முடியாத அழிவுப்பாதையை நோக்கி  செல்கிறது, ஏனெனில், மிக அதிக மக்கள் தொகையும்,கடல்கள், காடுகள் போன்ற  இயற்கை  வளங்களும்    அழிந்துகொண்டு இருப்பதே காரணம் என்கிறர்கள்.மக்கள். பலர் நம்பிக்கையற்று இருக்கிறார்கள். நான் அவர்களிடம்  ஒரு தெய்வீக சக்தி  இவ்வளவு குழப்பத்திற்கு  நடுவில் நம்மை காக்கிறது என்று கூறுவேன்.என் கேள்வி என்னவென்றால்,நான் காற்று  குழாயின் மீது புகை வளர்கிறேனா?  அல்லது இந்த பூமியும் மக்கள் தொகையும் நனறாகவே இருக்குமா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: இந்த விஷயத்தில்  சிரத்தை கொள்ள வேண்டியது நல்லது ஆனால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது. நீங்கள் பயப்பட ஆரம்பித்தால் ஒன்றுமே செய்ய இயலாது, உங்கள் மன  நிம்மதி தான் குறையும். அதே சமயம் 'கடவுள் இருக்கிறார் எல்லா வற்றையும் பார்த்துக்கொள்வார்,நாம் நம் வேலையை பார்ப்போம் என்று இருப்பதும் தவறு. நாம் இந்த பூமியின் இயற்கை வளங்களை தவறாக உபயோகித்தாலும் இயற்கை நமக்கு திருப்பி அனைத்தையும் தரும்,கடவுள் உதவுவார் என்று இருக்க இயலாது.

நாம் நம் கிரகத்தின் மீது அக்கறை கொள்ள வேண்டும். இன்று நிறைய மக்கள் சுற்றுப்புறத்தில் அக்கறை கொள்கிறார்கள். நான் கூறுவது உங்களுக்குப் புரிகிறதா?

மக்கள் சிறு சிறு  கிராமங்களில் அக்கறை கொள்கிறார்கள்.உலகில் பல மூலைகளில் பூமியை பாதுகாப்பது  பற்றியும், ரசாயன உரங்கள் இல்லாத  இயற்கை முறை விவசாயம் பற்றியும்  பேசுகிறார்கள். இந்த கவலை நாட்டில் பல பகுதிகளில் ஊடுருவி உள்ளது. அதே சமயம் மக்கள் பலர், கோபமும், பீதியும் ,ஆக்ரோஷமும் கொண்டு,நாம் இந்த பூமியை அழிக்கிறோம் என்று பயப்படுகிறார்கள். நான் அவர்களை நிதானமாக அமைதியா இருங்கள் என்கிறேன். இவ் விஷயங்களில் பயமும் பீதியும் இன்றி அக்கறை கொள்ளலாம்.
கேள்வி: சமாதி என்றால் என்ன?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: 'தி' என்றால் அறிவாற்றல்.'சமாதி' என்றால் மனம் முழுவதும் சாந்தமாக இருப்பது. உங்கள் முழு இயக்கங்களும் சரியான சமமான நிலையில் இருப்பது.அதுவே சமாதி உடல், மனம், ஆன்மா இம்மூன்றும் ஒருங்கினைந்து அமைதியாக இருப்பது. சமாதியில் பலவிதங்கள் உள்ளன.
லய சமாதி என்பது நல்ல இனிமையான இசையில் நீங்கள் உங்களை மறந்து மூழ்கி இருப்பது. நீங்கள் இருக்கிறீர்கள் என்று உணர்வீர்கள், ஆனால் எங்கு இருக்கிறீர்கள் என்று தெரியாது. ப்ரக்யசமாதி, அசம்ப்ரஜ்நாட்ட சமாதி என்று பல உள்ளன.
மற்றொரு சமாதியில்,எண்ணங்கள் இருக்கும்,உணர்வுகள் இருக்கும் நீங்கள் அமைதியாக உணர்வீர்கள்.மற்றொரு வகையில் எண்ணங்கள் இருக்காது, உணர்வுகள் இருக்கும்.இது போல் பல வகையான சமாதிகள் இருக்கின்றன.
சமாதியின் சந்தோஷம் எப்படி விவரிக்கப்படுகிறது என்றால்'ஒரு நிமிட சமாதியில் பல மில்லியன் ஆண்டுகள் கொண்ட ஓய்வு கிடைக்கும்'.கோடி கல்ப விஷ்ராம்' - பல மில்லியன் ஆண்டுகள் ஓய்வு,இதுவே சமாதி. சமாதியில் ஏற்படும் ஒரு கண மகிழ்ச்சி உடல் இன்பத்தினால் உண்டாகும் ஓராயிரம் உணர்வுகளுக்கு சமம். அதனால் தான் யோகிகளுக்கு பிராமச்சர்யம் இயல்பாகி விடுகிறது நீங்கள் பிராமச்சர்யம் கடைபிடிக்க முயற்சி தேவை இல்லை.
மெய்மறந்த இன்பம் பெற உடலோடு உடல் உரச வேண்டிய தேவை இல்லை. நீ சற்று அமர்ந்து அமைதியானால் போதும், பேரின்பபும் ஆனந்தமும் உங்களுக் குள்ளேயே உணர்வீர்கள்.
அதனால் ப்ரஹமச்சர்யம் ஒரு செயல் அன்று, து தானே நடப்பது. அப்போது உடலில்  ஒவ்வொரு அணுக்களும் ஆனந்தமும், சுகமும் உணரும்இந்த பேரின்ப நிலையை தான் செக்ஸ் இல் அடைய முயற்சிக்கிறீர்கள்.பலர் அதை அடைகிறார்கள்,பலர் ஏமாற்ற மடைகிறார்கள்.ஆனால் இறுதியில் உடல்  களைப்படைந்து விடுகிறார்கள். இது தான் பலர் கூறி நான் கேட்டிருக்கிறேன்.
ஆனால் சமாதியில் நீங்கள் களைப்படைவது இல்லை,மாறாக ஆழ்ந்த இன்பமே உணர்வீர்கள். இதில் பதட்டம் இல்லை, பரிதவிப்பு இல்லை, களைப்பு இல்லை மாறாக ஒவ்வொரு நிமிடமும் ஒருவித சக்தியை உணர்வீர்கள். அப்படியிருக்கும் போது தானாக ப்ரஹமச்சர்யம் நிகழும்.
கேள்வி: நெருக்கமான ஒருவர் தவறி விட்டால் அந்த துயரத்தை தியானம் போக்க வழி வகுக்குமா?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: கண்டிப்பாக.தியானம் கண்டிப்பாக துயரத்தில் இருந்து விடுபட உதவும், இறப்பு  தவிர்க்க முடியாத ஒன்று. இறப்பைவிட வேறு  எதுவும் நிச்சயம் கிடையாது.
உங்கள் வாழ்கையை எப்படி வாழ்ந்தாலும் இறப்பு உறுதி. நீங்கள் வாழ்வில் வெற்றி பெற்றாலும், பெறாவிட்டாலும் இறப்பு உறுதி. பிரபலமானாலும், ஆகாவிட்டாலும் நீங்கள் இறப்பது உறுதி. ஏழையோ,பணக்காரனோ, ஆரோக்யமானவரோ, உடல்நலம் குன்றியவரோஅனைவரும் இறப்பது உறுதி .எனவே இறப்பு நிச்சயமானது. இந்த உண்மையை உணர்ந்து நீங்கள்சரி, நீ சென்று விட்டாய், இப்பொழுது விடை பெறுவோம் .சிறிது காலம் சென்ற பிறகு பார்போம்என்று  கூறலாம்.
தியானம் கண்டிப்பாக உங்களை துயரத்திலிருந்து விடுபட உதவும். அது மட்டுமல்ல நீங்கள் தியானம் செய்யும் போது அந்த அதிர்வுகள் அவர்களை அடைந்து அவர்களை நிம்மதியாக்கும்.
கேள்வி: ஒரு கஷ்டமான சூழல் வரும் போது நான் அமைதியாக ஒத்துக்கொள்ள வேண்டுமா அல்லது போராட வேண்டுமா?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: விரும்பினால் போராடுங்கள்.நீங்கள் உங்கள் முழு நூறு சதவித உழைப்பை  செய்து விட்டீர்கள் என்றால் பின்னர் பிரார்த்தனை செய்யுங்கள்.உதவி வேண்டுங்கள்.முதலில் நிலைமையை ஒத்துக்கொண்டு போராடுங்கள். போராடிய பிறகு அதை ஏற்றுக் கொள்ளுங்கள். போராட்டம் அனுசரித்து ஏற்றுக்கொள்ளும் தன்மைக்கு நடுவில் இருக்க வேண்டும் அதுவே யோகாவின் தன்மை.யோகா என்றால் என்ன? ஒரு செயலை அமைதியாக ஏற்பது மற்றும் முழு தொலை நோக்கோடு இருப்பது.
கேள்வி: ஒருவர் இறந்த பின் அவர் ஆன்மா என்னவாகிறது?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: அது திரும்பி வரத் தயாராகிறது.அடுத்த உடல் கிடைப்பதற்கு உண்டான வரிசையில் காத்து நிற்கும்.பல லட்ச கணக்கான ஆன்மாக்கள் இந்த உலகத்துக்கு வர காத்து நிற்கின்றது. அதனால் தான் தற்கொலை எண்ணம் உடையவர்களுக்கு சொல்கிறேன் தயவு செய்து உங்கள் எண்ணத்தை கைவிடுங்கள்.நீங்கள் பலகாலம் வரிசையில் காத்திருந்து இவ்வுடலை பெற்றுள்ளீர்கள்,அதை மறந்து உங்களை நீங்களே  அழித்து கொள்ளாதீர்கள்.இந்த பிறப்பு மிகவும் விலைமதிப்பு மிக்கது.
கேள்வி: இந்த உடலில் வரும் முன் நான் எங்கு இருந்தேன்?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: மிக நல்ல கேள்வி? இந்த உடலைப்பெரும் முன் நான் எங்கு இருந்தேன்?  உணர்வு மிகவும் பழமையானது.மனம் கற்களை விட பழமையானது. நீங்கள் இந்த கேள்வியை உங்களுக்குள்ளேயே வைத்திருங்கள். இது மிகவும் முக்கியமான கேள்வி. இந்த கேள்விக்கு பதில் காண அவசரப்படாதீர்கள். இந்த கேள்வியிலேயே  உங்கள்  விடையை நீங்கள்  அறிவீர்கள்,அதன் மூலம் நீங்கள் நீண்ட தியானத்தில் மூழ்க முடியும்.நான் இங்கும் இருக்கிறேன், ஆனால் எல்லா இடத்திலும் இருக்கிறேன் என்ற உணர்வு ஏற்ப்படும்.

கேள்வி: தியானத்தில் இருந்து வெளி வர அலாரம் வைக்க வேண்டுமா?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: இல்லை.ஏனெனில் அது இடைஞ்சலாக இருக்கும் நீங்கள் உங்களுக்குள் நான் இருபது நிமிடம் அல்லது அரை மணி நேரம் தியானம் செய்ய வேண்டும் என்று நினைத்து அமர்ந்தால் நீங்கள் உங்கள் கண்களை இருபது நிமிடம் சென்ற பின் திறக்க முடியும் உங்களுக்குள் ஒரு கடிகாரம் உள்ளது. அது உங்கள் சங்கல்பத்தினால் வேலை செய்கிறது.
நீங்கள் இந்த சிறு உள் இயங்குமுறை செய்திருக்கிறீர்களா?ஒரு சங்கல்பமாக நான் நாளை காலை ஐந்து மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால், சரியாக ஐந்து மணிக்கு நீங்கள் எழுந்து விடுவீர்கள்.நமக்குள்  இருக்கும் இந்த கடிகாரத்தை உபயோகியுங்கள். இருபது நிமிடம் தியானத்தில் அமருங்கள்.தியானம் செய்யும் போது பல மணி நேரம்  அமராதீர்கள். தியானம் முடிந்த பின் நாம் எங்கு இருக்கிறோம், கார் சாவி எங்கு இருக்கிறது என்றே மறந்து விடும். சாத்தியமும்  இல்லை.எனவே நான் உங்களுக்கு பரிந்துரைப்பது இருபது நிமிடங்கள் அல்லது அரை மணி நேரம் தியானம். அதற்கு  மேல் கண்கள் தானாகவே  திறந்துஅமைதி யின்மை  ஏற்ப்பட்டு விடும். நீங்களே கட்டாயப் படுத்திக் கொள்ளாதீர்கள்.குறைந்தது  இருபது நிமிடம் அல்லது அரைமணி நேரம் அதிக பட்சம்.
கேள்வி: தியானம் செய்யும் போது நான் என் வருத்தபடுகிறேன் அல்லது காயப்படுகிறேன்?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: உங்களுக்கு என் வருத்தமாக இருக்கிறது தெரியுமா? ஏனெனில் தியானம் உங்களுக்குள் இருக்கும் அன்பை வெளிக் கொணர்கிறது. அது அன்பை உள்ளேயிருந்து தூண்டி வெளிக் கொணர வைக்கிறது. அன்பு காயம் வருத்தம் இவற்றோடு இணைந்தது. நான் கூறுவது உங்களுக்கு புரிகிறதா? எனவே சில சமயம் உங்களுக்கு வருத்தமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும், அழுகையும் வரலாம். இது எதையுமே நீங்கள் மனதில் கருதி தீர்மானத்திற்கு வராமல், அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். மிகவும் தாங்க முடியாமல் துயரம்  இருந்தால் இழுத்து நன்றாக மூச்சை விடுங்கள்.பிரணாயாம, சில சுவசப்பயிற்சிகள் செய்யுங்கள்.நீங்கள் அமைதியாவதை உணர்வீர்கள்.
கேள்வி: வாழ்கையையும்,வேலையையும் சமப்படுத்த என்ன செய்வது?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: அது ஒரு சவால் தான். நீங்கள் இரண்டையும் செய்ய  உத்தேசித்து நினைத்து, கூறும்போது அது செய்ய முடியும் என்றாலும் சிறிது சிக்கலாக இருந்தாலும், நீங்கள் உங்கள் வேலையிலும் வெற்றி அடைவீர்கள் ,உங்கள் செயலிலும் வெற்றி அடைவீர்கள்.'என்னுடைய செயலின் கரணம் என் வேலையைவிட பெரிது' என்று நீங்கள் எண்ணும் போது உங்களால் இருந்தும் செய்ய முடியும்.செயலின் காரணம் உங்கள் வேலையை  விட பெரியதாகி விட்டால் பிறகு நீங்கள், இல்லை என் வேலையை நான் தூக்கி எரிந்து விட்டு என் செயலை நான் செய்வேன்' என்பீர்கள்.
இது ஒரு கடினமான பாதை தான்,ஆனால் நாள் பலன்களை தரும்.நிறைவாக இருக்கும்.
எந்த ஒரு பெரிய சாதனைக்கு பின்னும் சில தியாகங்கள் இருக்கும்.நீங்கள் உங்கள் வாழ்வில் கடினமாக இல்லாமல் ஆறுதல் மண்டலம்  வேண்டும் என்றால் வேலையும், உங்கள் செயலும் இரண்டுமே தொடரலாம்.ஆனால் 'எனக்கு என் செயல் உணர்வு அழுத்தமாக இருக்கிறது, நான் பெரியதொண்டு செய்ய வேண்டும்'என்ற எண்ணம் இருந்தால் உடனே செயலில் குதிக்க வேண்டும்.
கேள்வி: பாடுவது எப்படி தியானத்தில் உதவுகிறது?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: பாடுதல் கண்டிப்பாக உதவுகிறது.பாடுவது ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கி, பிராணா உணைவை அதிகரிக்கிறது. இது மனதை அமைதியாகவும்,ஆழமான தியானத்திலும் ஈடுபட உதவுகிறது.
எனவே பாடுதல் ஒரு அங்கமாகும்.உங்களுக்கு தெரியுமா எழுபது சதவித ஆங்கில பாடல்கள் சமஸ்க்ரீத பாஷையாகும். நீங்கள் எவ்வளவு பேர் இதை கேட்டிருக்கிறீர்கள்? தங்கை- சுவாச, மகள்-டுஹிடா,கோஎன்பது கச்சா. ஆங்கில வேர் சமஸ்க்ரீதம் ஆகும்.
கேள்வி: அவர் ஏன் வாழ்கையை உருவாக்கினார்?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: அவர் ஏன் உயிர்களை உருவாக்கக்கூடாது? அவர் வாழ்கையை உருவாக்கியது ஏனென்றால் நீங்கள் இந்த கேள்வியை கேட்பதற்கு தான்.அவர் உருவாக்க வில்லை என்றால் நீங்கள் இந்த கேள்வியை கேட்டிருக்க முடியாது.எனக்கு தெரியவில்லை,எதுவும் தோன்றவில்லை. கடவுளுக்கு  நல்ல ஆலோசகர் வேண்டும் என்று நான் நினைக்கிறன். அவர் காரியங்களை சிக்கலாக்குகிறார்.
கேள்வி: தற்போதைய தருணத்தை எப்படி ஏற்பது?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: எப்போது போல் தன, இந்த நிமிடத்தில் நான் இந்த கேள்வியை ஒத்துக் கொண்டு விட்டேன். நான் இங்கு இருக்கிறேன்.புரிந்ததா?இது தன்னிச்சையானது. தற்போதைய தருணம் தவிர்க்க முடியாதது.இப்போது என்ன உள்ளதோ அது இந்த தருணத்திலுள்ளது.எதிர்கால எண்ணம்  கூட இத்த ருணத்தில் உள்ளது உங்கள் எதிர்கால கவலை எதிர்காலத்தில் இல்லை,
இந்த தருணத்தில் உள்ளது.