எவ்வித வருத்தமும் இல்லை

புதன்கிழமை, 28/01/2015, 

பெங்களூரு, இந்தியா


கேள்வி - பதில்

குருதேவ், தியானம் பற்றி அராய்ந்து அதில் ஆழமாகப் போக வேண்டும் என்று ஆவலாய் உள்ளேன். இது நம்மை தளர்த்திக் கொள்வதற்கு எதிரானதா?

தியானத்தில் நீங்கள் ஏதும் செய்ய வேண்டியதில்லை. உங்களை தளர்த்திக் கொண்டாலே போதும், ஆழமாய் செல்லலாம். தியானத்தில் ஆழமாக போவதை தடுப்பது எதுவென்றால்,அதிகமான உணவு உட்கொள்வது அல்லது மற்ற புலன்களை அதிகமாக உபயோகப்படுத்துவது. அதிகமாக திரைப்படம் பார்த்துவிட்டு, நீங்கள் தியானத்தில் அமர்ந்தால், தியானம் நிகழாததை அனுபவிக்கவில்லை? ஒரு திரைப்படம் பார்த்தபின், தியானத்தில் அமர்ந்து உயர்நிலை செல்வது கடினம். ஏனென்றால் மனதில் ஏராளமான உருவங்களின் பதிவுகள். இரண்டாவதாக, மிகவும் சோர்வாக இருந்தாலும் தியானம் நிகழாது. நீங்கள் அதிக உணவு உண்டிருந்தாலோ அல்லது அதிகம் உடற்பயிற்சி செய்திருந்தாலோ தியானம் நிகழாது. எனவே, மிதமான உடற்பயிற்சி, மிதமான உணவு மற்றும் போதுமான பிராண சக்தி இருந்தால் ஆழமான தியானம் ஏற்படும். இவை எல்லாம் ஒன்றாக அமையவேண்டும்.

எனக்கு வயதாகிறது, மரணத்தைக் கண்டு அஞ்ச ஆரம்பித்து விட்டேன். இதற்கு ஒரு தீர்வைச் சொல்லுங்கள்.

வாழ்வில் மரணம் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம்.வாழ்க்கையில் பல வேலைகளில் நாம் ஈடுபட்டிருந்த வரை நமக்கு மரணம் பற்றிய பயம் இல்லை.செய்வதற்கு ஏதும் இல்லாதபோது, நாம் மரணமடைய போகிறோம் என்று உணர ஆரம்பிக்கிறோம். ஒருநாள் இறந்தாக வேண்டும். ஆனால் முக்கியமானது என்னவென்றால், நாம் இறக்கும் போது நம் முகத்தில் புன்னகை இருக்கவேண்டும். நம்முடைய பொறுப்புகளை,கடமைகளை முடித்துவிட்டோம் என்ற நிறைவு வேண்டும். உலகிற்கு வந்தபோது அழுதோம்,போகும் போதாவது சிரித்துக்கொண்டே போகவேண்டும். வாழ்க்கையில் வருத்தங்களை வைத்துக் கொள்ளாதீர்கள். “நான் செய்ய வேண்டியவற்றை செய்துவிட்டேன், இந்த உடலைத் துறப்பதற்கான நேரம் வரும்போது, நான் மகிழ்ச்சியாக இறப்பேன்,” என்ற உணர்வு உங்களுக்கு வேண்டும். நாம் இறப்பதற்கு முன் மற்றவர்களுக்குச் நாம் செய்ய வேண்டிய தொண்டை செய்துவிட வேண்டும்.

குருதேவ், நான் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆட்டக்காரன். விளையாட்டுத் துறையில் நேர்மையாக இருந்து வெற்றிகரமாக இருக்க முடியுமா? விளையாட்டு வீரருக்கு வெற்றி என்பது என்ன?

நீங்கள் விளையாடுவதை கோடிக்கணக்கானவர்கள் பார்கிறார்கள். அவர்களுக்கு உண்மையான விளையாட்டு விளையாடப்பட வேண்டும். நீங்கள் உண்மையாக விளையாடுகிறீர்கள் என்று நம்பும் அவர்களை ஏமாற்றக்கூடாது. ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்ட விளையாட்டை ஆடும் போது அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். எப்போதும் முட்டாளாக்காதீர்கள். விளையாட்டை ஆர்வத்தோடு பார்த்து மகிழும் மக்களை ஏமாற்றுவது நியாயமல்ல.

குருதேவ், இந்தியாவில் கூறப்படும் அர்த்தநாரீஸ்வரர் கருத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டு விட்டேன். இதைப் பற்றி தயை கூர்ந்து விளக்குங்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும் தாய் மற்றும் தந்தை கூறுகளால் ஆக்கப்பட்டவர்கள். தந்தையுடைய விந்தினாலும் தாயுடையுனடைய கருமுட்டையாலும் உருவாக்கப்பட்டவர்கள். எனவே உங்களில் பாதி தந்தை பாதி தாய் அல்லது பாதி ஆண்,  பாதி பெண். இதுதான் அர்த்தநாரீஸ்வரர். இந்தப் பிரபஞ்சமே வெளிப்பட்டவை மற்றும் மறைந்தவை சேர்ந்தது. உடலும் மனமும் சேர்ந்தது. பார்கப்பட்டதும்,பார்கப்படாததும் சேர்ந்தது. ஆண் மற்றும் பெண் தன்மை சேர்ந்தது. இதுதான் அதை முழுமையாக்குகிறது.உங்களுக்குள் உங்கள் தந்தையின் மரபணு மற்றும் தாயின் மரபணு இரண்டும் இருக்கிறது. உங்கள் உடல் ஆணோ அல்லது பெண்ணோ, அது பொருட்டல்ல.

காதலில் இரண்டு முறை தோற்றுவிட்டேன். என்ன செய்வது? இதயம் எத்தனை முறை உடையும்? நான் நொறுங்கிப் போய்விட்டேன். விரும்பிய ஒருவருக்கு ஏன் வேறொருவருடன் திருமணம் நடந்தது?

கவலை வேண்டாம். இரண்டு முறை மட்டுமே தோற்றிருக்கிறீர்கள்.IAS தேர்வுக்குக் கூட மூன்று வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது. கண்டுகொள்ளாதீர்கள்.அன்பு செய்யவதற்கும் விட்டு விலகுவதற்கும் இது ஒரு அனுபவம்.

குருதேவ், தியானம் செய்யும் போது எந்த திசை நோக்கி அமர்கிறோம் என்பது முக்கியமா? வடக்குத் திசையில் தலை வைத்து படுப்பது கூடாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆம், காந்தவிசை அந்த திசைகளில் பாய்வதால், தலை வைத்துப் படுக்கக் கூடாது. ஆனால், தியானம் செய்யும் போது சூரியன் இருக்கும் திசை நோக்கி அமரலாம். சூரியனின் மறைவுக்கு பிறகு என்றால் வடக்கு நோக்கி அமரலாம். எந்தத் திசை நோக்கி அமர்கிறீர்கள் என்பது பொருட்டல்ல. உடலுக்குத் தான் திசையின் தொடர்பு. தியானத்தின் போது நீங்கள் பேருணர்வின் வடிவமற்ற தன்மைக்குப் போகிறீர்கள். எங்கும் அதுவே. எனவே அது பொருட்டல்ல.ஆனால், ஜபம் அல்லது பூஜை செய்யும் போது கிழக்கு நோக்கியோ, வடக்கு நோக்கியோ அல்லது வடகிழக்கு நோக்கியோ அமர்ந்தவாறு செய்ய வேண்டும். நேரங்களில் தெற்கு திசை நோக்கியும் அமர்கிறோம். பரவாயில்லை.

பெரு நிறுவனங்களில் இருக்கும் பாரபட்சமான சூழலை எப்படிக் கடப்பது?


இதை நீங்கள் முழுதும் கடந்து சென்றுவிட முடியாது. பேருணர்வின் உயரிய நிலையில் மக்கள் இருந்தாலொழிய பாரபட்சத்தைத் தவிர்க்க முடியாது. கடுமையாய் உழைப்பவர்கள் சாமர்த்தியமாகவும் இருக்க வேண்டும்.