தியானம் என்பது மனதின் சுகாதாரம்

ஜனவரி 17, 2015

பெங்களுரு இந்தியா



கேள்வி - பதில்கள்

குருதேவ்! பிரான்சில் சார்லி ஹெப்டோ பத்திரிகையின் பத்திரிகையாளர் படுகொலை குறித்து தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மேலும் ஐரோப்பாவில் நடைபெற்று வரும் இந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு என்ன காரணம்?

முற்றிலும் அறியாமை. மனிதாபிமானமற்ற செயல். மக்களுக்கு நினைப்பதை வெளிப்படுத்தும் சுதந்திரம் இருக்கவேண்டும். அவர்கள் என்ன சொல்லவேண்டும் என்று நினைக்கிறார்களோ அதை சொல்லட்டும்.

ஒரு பக்கம் நீங்கள் இவர்களுக்காக பரிதாபமும் இரக்கமும் கொள்ளுகிறீர்கள். ஏனென்றால் அவர்களுக்கு உண்மையான மனித மதிப்புகள் அல்லது ஆன்மிக அறிவு பற்றி அறிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அவர்கள் ஆன்மிகரீதியில் அர்ப்பணிப்புகள் செய்து, சொர்கத்திற்கு செல்லுவது, கடவுளை சந்திப்பது, கடவுளின் வேலைகளை செய்வது போன்றவற்றில் ஈடுபாடு காட்டுவார்கள். 

இதுதான் அவர்களை அபத்தமான செயல்களை செய்ய தூண்டுகின்றது. அவர்களுக்கு சரியான ஞானம், வேதாந்தம் மற்றும் தியானம் பற்றிய மெய்யறிவு ஆகியவை கிடைப்பதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டிருந்தால், ஒவ்வொருவருக்குள்ளும் தெய்வீகம் உள்ளது என்பதை அறிந்து கொண்டிருந்தால், அவர்கள் இந்த மாதிரியான செயல்களை செய்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? கண்டிப்பாக இல்லை. இதற்கான பொறுப்பு நம் மீதும் உள்ளது. இந்த ஞானம் உலகம் முழுவதும் சென்றடைய செய்யவில்லை. இந்த ஞானம் உலகின் மூலை முடுக்குகள் எல்லாம்  சென்றடைய செய்ய வேண்டும். பற்களை எப்படி சுகாதாரமாக வைத்திருப்பது என்பதை எப்படி தெரிந்து வைத்து கொண்டிருக்கிறார்களோ அவ்வாறே இந்த ஞானத்தையும் தெரிந்திருக்க வேண்டும்.

ஏறக்குறைய 7 கோடி மக்களுக்கும் எப்படி பற்களை தேய்ப்பது என்று தெரிந்திருக்கும் என்று நான் கூறுகிறேன். இது எதனால்? நாம் அவர்களுக்கு அதை சொல்லிக் கொடுத்திருக்கிறோம். அதை அவர்களுக்குள் வளர்த்திருக்கின்றோம். அனைவருமே ஆடைகள் அணிகின்றனர். அனைவருமே குளிக்கின்றனர். அதே போன்று அனைருக்கும் மனதின் சுகாதாரம் பற்றி தெரிந்திருக்க வேண்டும். தியானம் மனதின் சுகாதாரத்திற்கு வழிவகுக்கும்.ஞானம் உங்களை மனதளவில் அறிவுடையவனாக வைத்திருக்கின்றது. இந்த உலகில் உள்ள அனைவருக்கும் பற்களின் சுகாதாரத்தை போலவே, மனதின் சுகாதாரத்தையும் கற்றுத்தர வேண்டும். மக்களுக்கு அகிம்சையை கற்றுத்   தருவதே முதல்படி ஆகும். "நீங்கள் எதற்காக சண்டை போடுகிறீர்கள்? எதற்காக நீங்கள் ஒருவரை ஒருவர் கொல்லுகிரீர்கள்? விழித்தெழுந்து பாருங்கள்"

மதத்தின் பெயரால் இத்தகைய கொடிய குற்றங்கள் நடைபெறுகின்றன. ஏனென்றால் அவர்கள் தாங்கள் நல்லதையே செய்கின்றோம் என்றும் அவ்வாறு செய்வதால் நிச்சயம் சொர்கத்திற்கு சென்றுவிடுவோம் என்றும் நினைக்கின்றனர். இப்போதே இங்கேயே சொர்கத்தின் ஆனந்தத்தை அனுபவிக்கின்றோம்  என்னும் எண்னத்தை அவர்களுக்கு படிப்பிக்க வேண்டும். அவர்கள் வேறு எங்கும் பார்க்க வேண்டியது இல்லை. இது மிகவும் அவசியம்.

உலகத்தில் அமைதி குறித்த பாடங்கள் காணவில்லை. ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களுடைய உணர்ச்சிகளையும் மனதையும் எப்படி மேலாண்மை செய்வது என்பதை கற்பித்து விட்டால் இந்த உலகம் ஒரு சிறந்த இடமாக இருக்கும். உங்களால் வன்முறையை முழுவதுமாக களைந்தெறிய முடியாது. ஆனால் அதை குறைந்தபட்ச அளவிற்கு கொண்டு செல்ல இயலும். 

பாரிசில் 3 மில்லியன் பிரெஞ்சு மக்கள் நடைப்பயணம் செய்த அணிவகுப்பை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அது நல்லது. ஒரு விழிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நாளில் அதே நேரத்தில் இந்தியாவில் மும்பை மாநகரத்தில் இருந்தும் உலகின் பிறபகுதிகளில் இருந்தும் 3மில்லியன் மக்கள் தியானமும் ஜபமும் செய்தனர்.அதை அமைதிக்கான ஜபம் என்று கூறினோம். சத்யம் பரம் தீமஹி. அமைதியாகவும்  ஆழ்நிலை உண்மையில் தோய்ந்தும் இருக்கட்டும். எண்ணங்கள் நம் மனதில் இருந்து தோன்றுகின்றன. நம்முடைய மனம் படைப்பின் தொடக்கமாகிய எல்லையற்ற சக்தியில் திளைத்திருக்கும் போது அதிலிருந்து வெளி வரும் எண்ணங்கள் மிக உயர்ந்ததாகவே இருக்கும்.

அதே நேரத்தில், 12  பேர் கொல்லப்பட்ட அந்த 3 மில்லியன் மக்கள் மேற்கொண்ட நடைப் பயனத்திற்கு அதிக அளவில் விளம்பரம் இருந்தது. அதற்கு ஒரு நாள் முன்பு தான் ஆப்ரிக்காவில் போகொஹராமினால் 2000 மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்த நிகழ்வை பற்றி மிக குறைந்த அளவே பேசப்பட்டது. அந்த உயிர்களுக்கு வழங்கப்பட்ட நீதி அல்ல என்று நான் கூறுவேன். 2000 மக்களும் அவர்களை போன்ற சித்தாந்தம் கொண்டவர்களாலேயே கொல்லப்பட்டனர் என்பதை அனைத்து உலக தலைவர்களும் கருத்தில் கொள்ளவேண்டும். 

வாழும் கலை ஒரு மதப்பிரிவா? ஒரு மதப்பிரிவை எப்படி வரையறுப்பீர்கள்?

நீங்கள் மதப்பிரிவு என்று சொன்னீர்கள்.ஒரு மதப்பிரிவு என்றால் என்ன என்று நீங்கள் வரையறுத்து சொல்லவேண்டும். மதப்பிரிவு என்பது ஒரு குறுகிய மனோ நிலையை கொண்டது. அங்கே நீங்கள் உங்களை தனித்தன்மை உள்ளவராக எண்ணுகிறீர்கள் மற்றவர்களை வெளியேற்றி விடுகிறீர்கள். இது எல்லா மதத்திற்கும் உண்மையானது. இந்த கிரகத்தில் எல்லா மதத்தில் உள்ள மக்களும் அவர்களுக்குள்ளாகவே தனித்துவமான உரிமை உடையவர்கள் என்று நினைக்கிறார்கள். இந்துக்கள் அவர்கள் தனிச்சிறப்பு மிக்கவர்கள் என்று நினைக்கிறார்கள். ஜைன மதத்தவர்கள் இந்துக்கள் அவர்கள் தனிச் சிறப்பு மிக்கவர்கள் என்று நினைக்கிறார்கள். இஸ்லாமியர்கள் அவர்கள் தனிச் சிறப்பு மிக்கவர்கள் என்று நினைக்கிறார்கள். கிறுத்துவர்கள் மற்றும் யூதர்கள் அவர்கள் தனிச் சிறப்பு மிக்கவர்கள் என்று நினைக்கிறார்கள். அனைத்து மதத்தினரும் அவர்கள் தனிச் சிறப்பு மிக்கவர்கள் என்று நினைக்கிறார்கள். 

அது ஒரு மதப் பிரிவாக மாறிவிடுகிறது. ஆனால் ஒருவர் "இந்த உலகம் முழுவதும் என்னுடைய குடும்பம். அனைவரும் என்னில் ஒரு பாகம்" என்று சொல்லும் போது அதை எவ்வாறு ஒரு மதப்பிரிவு என்று அழைப்பது? வாழும் கலை ஜாதி மதம் இனம் சமயம் போன்ற அனைத்து தடைகளையும் உடைத்து எறிகின்றது.  நீங்கள் அவ்வாறு நினைக்க வில்லையா? ஆனால் மக்கள் நம்மை ஒரு மதப்பிரிவு என்று வலியுறுத்தினால் பரவாயில்லை. நாம் மகிழ்ச்சியாக உள்ள மக்களின் பிரிவு. இந்த உலகத்தில் இரண்டு பிரிவுகளே உள்ளன. ஒன்று மகிழ்ச்சியாக இருக்கும் மக்களின் பிரிவு. மற்றொன்று மகிழ்ச்சி இல்லாமல் இருக்கும் மக்களின் பிரிவு. கோபம், விரக்தி, எரிச்சல், சோகம் மகிழ்ச்சியற்ற  மக்கள் உள்ளனர். மற்றும் மகிழ்ச்சி, கருணை, திருப்தி, அன்பு கொண்ட மக்களும் உள்ளனர். நீங்கள் எந்த பகுதியில் வேண்டுமானாலும் இருக்கலாம். மன அழுத்தமற்ற பிரிவு அல்லது மன அழுத்தமுள்ள பிரிவு.

நாம் பார்ப்பது எதுவாக இருந்தாலும் அது இருப்பதில்லை மற்றும் இருப்பது எதுவாக இருந்தாலும் அவை நம்மால் பார்க்கப்படுவதில்லை. பின்னர் நாம் யார்? நாம் எதற்கு இங்கு இருக்கிறோம்? நாம் ஒன்றும் இல்லை எனும்போது இந்த முழு உலகமும் என்ன? குழப்பமாக உள்ளது.

மிக நல்லது. நீங்களே உங்களை தட்டிக் கொடுக்கலாம். ஒவ்வொரு குழப்பமும் உங்களை ஒரு படி முன்னேற்றும். மனதில் நம்பிக்கை முறிவடையும் போது அது உங்களுக்கு குழப்பத்திற்கு வழி வகுக்கிறது. நீங்கள் உங்களுடைய இப்போதைய நம்பிக்கைகளில் இருந்து ஒரு படி முன்னேற்றம் அடைகிறீர்கள் என்பதே இதன் பொருள்.

உங்களுடைய மனதிற்கு ஏதாவது வடிவம் உள்ளதா என்று இப்போது சொல்லுங்கள். உங்களால் மனதை பார்க்க முயுமா? யாராவது   ஒருவர் மற்றொருவருடைய மனதை பார்த்திருக்கிறாரா? நீங்கள் காற்றை பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் மனதையும் பார்த்ததில்லை, காற்றையும் பார்த்ததில்லை. ஆனால் அவைகள் இருக்கின்றன. இதை புரிந்து கொள்ளவும்

குருதேவ்! தியாகத்தின் மூலமாக நாம் பொருள்களில் ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று ஈஷாவாஷ்ய உபநிஷதத்தில் சொல்லப்படுகிறது. இதை எப்படி அனுபவத்தில் கொண்டு வருவது?

 இந்த கேள்வியை என்னிடம் கேட்பதற்கு முன்பாக உங்களிடமே கேட்கவும்.  ஒவ்வொரு முறை நீங்கள் மூச்சை உள்ளே இழுக்கும்   போதும் அதை நீங்கள் வெளியேற்ற வேண்டும். வெளிய விடாமல் மூச்சை உள்ளே இழுக்க முடியாது.

சிறு சிறு இடைவெளிகளில் விட்டு விட முடியும் என்பதால் தான் நீங்கள் எதன் மீதும் ஈடுபாடு கொள்ளுகிறீர்கள். நீங்கள் சாப்பிடுகிறீர்கள் அதன் பிறகு நிறுத்துகிறீர்கள். நீங்கள் ஐம்புலன்களின் மூலமாக பெரும் அனைத்து  ஆதாயங்களின் மூலம் பெரும் அனுபவங்களும் இதை போன்றதே. உங்களால் இசையை தொடர்ந்து   இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா? முடியாது. சிறிது நேரம் இசையை ரசிப்பீர்கள், பிறகு அதை நிறுத்தி விட விரும்புவீர்கள். நீங்கள் 24 மணி நேரமும் சாப்பிட்டுக் கொண்டிருக்க  மாட்டீர்கள் அல்லது இசையை கேட்டுக் கொண்டிருக்க மாட்டீர்கள் அல்லது எதையாவது முகர்ந்து கொண்டிருக்க மாட்டீர்கள். முன்னாட்களில் நறுமணங்கள் மக்களிடையே   மிகவும் பிரபலமாக இருந்தன. இப்போதெல்லாம் நறுமணம் இல்லாத சோப்புகளை விரும்புகிறீர்கள். உங்களுக்கு அனைத்துமே நறுமணம் இல்லாமல் கிடைக்கின்றன.  உங்கள் அறிவாற்றலில் இருந்து வெளிவரும் எண்ணங்களையும்   சேர்த்து,  உங்கள் ஐந்தறிவின் மூலமாக கிடைக்கும் அனைத்து அனுபவங்களும்,  உங்களுக்கு தொடர்ந்து கிடைக்காது.

உங்களிடம் 20 கேள்விகள் உள்ளன என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு கேள்வியாக நீங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். ஆனால் அதன் பிறகு என்ன? நீங்கள் அனைத்தையும் கற்றுக்கொண்டீர்கள் என்றும் உங்களுக்கு அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைத்து விட்டன என்றும்  வைத்துக் கொள்வோம். பிறகு, அடுத்தது என்ன? உங்களுடைய அறிவாற்றலை திருப்திபடுத்துவதற்காக,  அமைதிபடுத்துவதற்காக  உங்களுக்கு இந்த பதில்கள் தேவைப் படுகின்றன.

உங்கள் அறிவாற்றலுக்கும் மேலான ஒரு பகுதி உங்களுக்குள்ளே உள்ளது. ஒவ்வொரு பதிலுக்கும் ஒரு நோக்கம் உள்ளது அது உங்களை அமைதி ஆக்குவதே. ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு நோக்கம் உள்ளது. அது உங்களை உங்களுக்குள்ளே மூழ்கச் செய்யவே.  உங்களை உங்களுக்குள்   மூழ்கச் செய்வது தான்   உங்கள் நோக்கம் என்றால், பல கேள்விகளை கேட்பதன் குறிக்கோள் என்ன. அத்தனை கேள்விகள் கேட்டு அவைகளுக்கான பதில்களையும்   பெற்று நீங்கள் எதை சாதிக்க போகிறீர்கள். அமைதியாக இருக்கவும்.

எப்படியும் நீங்கள் கற்று அறிந்த அனைத்தையும் விட்டு விட வேண்டி வரும். நீங்கள் கற்று அறிந்த அனைத்தையும் மறக்க வில்லை என்றால் முக்தி அடையமுடியாது என்று தென் இந்தியாவில் பேசப்படுகிறது. நீங்கள் கற்றறிந்த இசை, ஆயுர்வேதா, வேதியல் அல்லது பௌதீகம் போன்ற அனைத்தையும்  , மறந்தே ஆக  வேண்டும்.  நீங்கள் மறக்கவில்லை என்றால்   உங்களுக்கு முக்தி கிடையாது.