உங்கள் இதயத்தின் அமைதியான மூலையில், அடைக்கலம் அடையுங்கள்


03
2012
Jan


கேள்வி: குருஜி, பாதுகாப்பின்மையை  சமாளிப்பது அல்லது முறியடிப்பது எப்படி?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்:  நமக்கென்று யாருமில்லை  என்று நினைப்பது தான் நமக்கு பாதுகாப்பின் மையை  உண்டாக்குகிறது. விழித்தெழுந்து பாருங்கள் இந்த உலகத்தில் எவ்வளவு மனித நேயமும்  அன்பும் நிறைந்துள்ளது என்று.  அப்பொழுது நீங்கள் பாதுகாப்பின்மையை  உணர மாட்டீர்கள். நாம் சாலையில் நடந்து  செல்லும்போது யாருக்கேனும் உதவி தேவைப்படலாம்.  தங்களுடைய கனமான பையை அவர்களால்  தூக்க முடியவில்லை என்றால்  நீங்கள் சென்று உதவ மாட்டீர்களா? 

நாம் எப்பொழுது பாதுகாப்பின்றி  உணர்கின்றோம் தெரியுமா?  யாரும் இரக்கத்துடன் இல்லை, யாரும் சிநேகமாக இல்லை. மனித நேயம்,கருணை எதுவும் இல்லை என்று  நினைக்கும் போது தான்.  நாம் சற்றே விழித்துப் பார்த்தால், உலகத்தில் நிறைய அன்பும் கருணையும் நம்மவர் என்ற உணர்வும்  உள்ளது.  பாதுகாப்பற்ற உணர்விற்கு அவசியமே இல்லை. சரியா? பிராணாயாமம்,  மூச்சுப் பயிற்சிகள் தியானம் போன்றவை நிச்சயமாக பாதுகாப்பற்ற உணர்வை வெல்ல உதவும்.  இது ஏற்கெனவே நிகழ்ந்துள்ளது.  இங்கே எத்தனை பேர் ஏற்கெனவே அதை உணர்ந்துள்ளீர்கள்?

கேள்வி:  குருஜி, ஒருவருடைய உறவு எனக்கு நல்லதா இல்லையா என்று எப்படித் தெரிந்து கொள்ளுவது?  அவர் என்னை வெறுமனே ஆட்டி வைக்கிறாரா? அவர் எனக்கு நல்லது செய்கிறாரா இல்லையா என்று எப்படித் தெரிந்து  கொள்ளுவது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்:  இதில் எனக்கு அனுபவம் இல்லை. அதனால் என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. நீங்கள் மற்றொருவரை எடை போடுவதற்கு முன்  நீங்கள் அவருடன் எப்படி சம்பந்தப்பட்டிருக்கிறீர்கள் என்று பாருங்கள். உங்களுக்கு எவ்வளவு பரந்த மனம் இருக்கின்றது  நீங்கள் ஒருவருக்கு எவ்வளவு இடங்கொடுத்து  இணங்கிப்போக முடியும்? மற்றவர்களை மாற்றக்கூடிய  ஆற்றல் உங்களிடம் எவ்வளவு இருக்கின்றது? இதைத்தான் நீங்கள் முதலில் பார்க்க வேண்டும். எப்போதும்  நம் சந்தேகங்கள் நேர்மறையான ஒன்றைப் பற்றித்தான் இருக்கும். 

கேள்வி: குருஜி, மற்றவர்களுடன் எப்படி உண்மையான தூய்மையான உறவினை ஏற்படுத்திக்கொள்வது? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்:  உறவினை ஏற்படுத்திக்கொள்ள முயற்சி செய்யாமல் இருப்பதே  மிகவும் சிறந்தது.  நீங்கள் நீங்களாகவே இருங்கள்.  இயற்கையாகவும் எளிமையாகவும் இருங்கள்.  உறவுகள் தானாகவே ஏற்படும்.உறவினை உண்டாக்க முயற்சி  செய்யும்போது நீங்கள் சிறிது  செயற்கைத்தனமாக  மாறிவிடுகிறீர்கள்.  உங்கள் நடத்தை இயற்கையாக இல்லாமல்  செயற்கையாகி விடுகிறது. 

உங்கள்  மனத்தைக் கவரயாரேனும் முயற்சி செய்தால் உங்களுக்குத் தெரிந்து விடுகிறது இல்லையா? நீங்கள் என்ன செய்கிறீர்கள்?விலகி விடுகிறீர்கள். நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதையே தான் மற்றவர்களும் விரும்புகிறார்கள்.உங்களுக்கு மற்றவர்கள் நேர்மையாகஇயற்கையாகதிறந்த மனதுடன் எளிமையானவராக  இருப்பது பிடிக்கும். சரியா? அதையே தான் மற்றவர்களும் உங்களிடம் இருந்து விரும்புகிறார்கள்.

நீங்கள் ஒரு முதலாளி என்று வைத்துக் கொள்வோம்.எந்த மாதிரியான உதவியாளர்கள் அல்லது ஊழியர்கள் உங்களுக்குப் பிடிக்கும்? ஒளிவு மறைவில்லாத திறந்த மனம் உள்ளவர்களை தான். இல்லையா?  அதையே தான் உங்கள் முதலாளியும் விரும்புவார்.  உங்கள் முதலாளியையோசிநேகிதியையோசிநேகிதனையோ கவர கடினமாக முயற்சி செய்ய வேண்டாம். எல்லாம்  கெட்டு விடும். நீங்கள் நீங்களாகவே இருங்கள்.  இயற்கையாக, மன்னிக்கும் மனதுடன், நிகழ் காலத்தில் இருங்கள். அது பெரும் மாற்றத்தை உண்டாக்கும். 

கேள்வி: ஒரு தருணத்தில் உலகத்தில் எல்லாமே வெறுமையாக, மாயையாகவும் தோன்றுகிறதே.  உலகத்தில் அன்பே இல்லாதது போலும் தோன்றுகிறது. அப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அப்பொழுதான் உங்கள் ஞான  கண்கள் திறக்கின்றன. இதை மையமாக கொண்டு நான் நிறைய புத்தகங்களும் சி.டிகளும் வெளியிட்டுள்ளேன். அஷ்டவக்ர கீதையில் சொல்லப் பட்டவையும்,த்யானமும் மிகவும் சிறந்ததாகும்.இவை இரண்டும் இதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.மௌன பாட கோப்பு வகுப்பு எங்கிருந்தாலும் நீங்கள் உடனே சென்று பங்கெடுப்பது நல்லது.எல்லாம் வெறுமையாக காணும் பொழுதுதான் வாழ்வின் சாராம்சம் விளங்கும்.

கேள்வி: உயர்ந்த ஆத்மாக்கள் எப்படி உயர்ந்தனவாகிறது? நாம் எப்படி உயர்ந்த ஆத்மா ஆவது ?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் உயர்வான நிலைக்கு செல்ல எந்த விதமான உயர்ந்த காரியத்தையும் செய்வது அவசியமில்லை. நீங்கள் உயர்ந்த நிலையை அடைய சிறிய விஷயங்களை சரியாக செய்தாலே போதுமானது

நீங்கள் இயற்கையாக, எளிமையானவராக  இருந்தால் உயர்ந்த விஷயங்கள் தானாகவே உங்கள் வாயிலாக நடந்தேறும். புரிந்ததா? உயர்ந்த காரியங்கள் செய்வதற்கு நீங்கள் பிரபலமானவர்களாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. உயர்ந்த தன்மை என்பது உங்களுக்குள் இருக்கிறது. அது உங்களுள் ஒரு விதையை போல் இருக்கிறது.

கேள்வி: ஏன் பெண்களில் குருநாதர்களோஞானிகளோ  அல்லது சிறந்த தொண்டர்களோ காணபடுவதில்லை?ஆண்களே மிகுதியாக இருகிறார்கள் பெண்ணகளின் எண்ணிக்கை மிக குறைந்ததாக காணபடுகிறதே?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: வாய்ப்புகள்  இருக்கிறது! நீங்களும் ஒருவராக .ஆகலாம்.

கேள்வி: தயவு செய்து  குணப்படுத்துவது  பற்றி கூறுகிறீர்களா ?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: எப்பொழுது சக்தி அதிகமாக இருக்கிறதோ, அன்பும் இருக்கிறதோ அப்பொழுது குணப்படுத்துவது நடைபெறும்.

கேள்வி: குருஜி, என்னுடைய  வாழ்க்கைத் துணைவர் எப்போதும் எஜமானாக இருந்து என்னை அதிகாரம் செய்து கொண்டிருக்க விரும்பினால் என்ன செய்வதுநான் அவரை மிகவும் நேசிக்கிறேன்.  ஆனால் அவர் என்னை அமைதியிழக்கச்  செய்கிறார்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஒரு கனவானைக் கேட்டார்கள்உங்கள் வீட்டில் யார் எஜமான்? என்று.அவர் சொன்னார்,நான் தான்.ஆனால் அப்படிச் சொல்வதற்கு என் மனைவியின் அனுமதி எனக்கு இருக்கிறது. நீங்கள் எஜமானாக இருங்கள். இதை மிக நுட்பத்துடன் செய்ய வேண்டும். மிகச் சிறியவர் போன்று அடக்கத்துடன் இருங்கள்.நல்ல உறவிற்கு ஒரு ரகசியம் இருக்கிறது. ஒன்று நீங்கள் உங்கள் கணவரை சிறுமையாக உணரச் செய்யக் கூடாது. நீங்கள் உங்கள் கணவரிடம் நீங்கள் ஒன்றுக்கும் உதவாதவர், நீங்கள் ஒரு சோம்பேறி என்று சொன்னால் அவருடைய சுயமரியாதை குறைந்து உண்மையிலேயே ஒன்றுக்கும் உதவாதவர் ஆகி விடுவார். அவர் எவ்வளவு பயனற்றவர்பலவீனமானவராக இருந்தாலும் நீங்கள் அவரை நீங்கள் தான் மிகச் சிறந்தவர் என்று சொல்ல வேண்டும். தான் என்னும் முனைப்பினை அவரிடம் ஊக்கப்படுத்த வேண்டும்.

இந்த உலகம் முழுவதும் அவருக்கு மூளை இல்லையென்று சொன்னாலும், அதை நீங்கள் சொல்லக்கூடாது.ஒரு துணைவராக நீங்கள் அவரிடம் இந்த உலகத்திலேயே சிறந்த மூளை உங்களுக்கு இருக்கிறது. நீங்கள் அதைச் சரியாக பயன்படுத்த வில்லை என்பதனால் உங்களுக்கு மூளை இல்லை என்று அர்த்தமில்லை என்று சொல்ல வேண்டும்.

அதேபோல் பெண்களிடம் அவர்களது உணர்ச்சிகளைக் காயப் படுத்தக் கூடாது. பெண்களுடன் உணர்ச்சி பூர்வமான பிணைப்பு மிகவும் முக்கியமானது. நீங்கள் எப்பொழுதும் அவளது பெற்றோர்அவள் அம்மா,அவள் அப்பா,அவள் சகோதரன், அவள் சகோதரி என்று யாரைப் பற்றியும் எதுவும் புகார் சொல்லக்கூடாது.அவளாகவே ஏதாவது புகார் சொன்னாலும் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்.எதுவும் சொல்ல வேண்டாம். நீங்கள் அவர்கள் பக்கமாகப் பேசினாலும் உங்களுக்குப் பிரச்சினை வரும்.அவர்களை எதிர்த்துப் பேசினாலும் உங்களுக்குப் பிரச்சினை வரும். நீங்கள் அவள் பெற்றோரை சார்ந்து பேசினால் அவள் தனிமைப் படுத்தப்பட்டு "நீங்கள் என்னைப் புரிந்து கொள்ளவில்லை" என்று கத்தலாம்; திட்டலாம். எந்தப் பக்கம் பேசினாலும் பிரச்சினை தான். அமைதியாக அந்த இடத்தைவிட்டு நகர்ந்து விடுங்கள் அல்லது பேச்சை மாற்றுங்கள். 

உங்கள் மனைவி பொருட்கள் வாங்க கடைத் தெருவுக்குச் சென்றால் உங்கள் கடன் அட்டையைக் கொடுத்து அனுப்புங்கள்.அவளிடம் பத்து ஜோடி செருப்புகள் இருக்கும். அவள் பதினொன்றாவதாக ஒரு ஜோடி வாங்கினால்,"உனக்கு என்ன பதினோரு ஜோடி கால்களா இருக்கின்றன?"என்று கேட்டால் அவள்  மனம் உடைந்து விடுவாள்.கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம். 

கேள்வி: என் மனதிற்கு மிகவும்  பிடித்த பெண் என்னை 100 % விரும்புகிறாளா என்று எப்படி தெரிந்து கொள்வது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: எனக்கு தெரியாது. உங்களுக்கும் தெரியாது. ஒரு முயற்சி எடுத்துப் பாருங்கள். ஒரு வேளை இதே கேள்வியை உங்களிடம் ஒருவர் கேட்டால் என்ன கூறுவீர்கள்? உங்களால் உங்கள் அன்பையே 100 % உறுதி செய்ய முடியாது. ஒரு வேளை இந்த கணத்தில் உறுதி செய்யாலாம் ; அடுத்த மாதம் இதே அளவு இருக்குமா என்று தெரியாது. தன் மனதையே சரியாக மதிப்பேடு செய்ய முடியாதபோது மற்றவர் மனதை எப்படி அறிய முடியும்?

ஒரு விஷயம்  தெரிந்து கொள்ளுங்கள். எது உங்களுடையது என்றிருக்கிறதோ அது எப்போதும் உங்களிடம் இருக்கும்.எது உங்களை விட்டு விலகுகிறதோ அது முன் எப்போதும் உங்களிடம் இருந்தது இல்லை. இதை நீங்கள் உணர்ந்து கொண்டால் மன அமைதியுடன் இருப்பீர்கள். இந்த ஆழ்மன அமைதியுடன் இருந்தால் இந்த உலகமே உங்களுக்கு சொந்தமாகிறது. இல்லையென்றால் எவ்வளவு  முயற்சித்து ஒருவரை சொந்தமாக்கிக்கொள்ள விரும்பினாலும் அவர்கள்  விலகியே செல்வர். அதற்கு ஞானம் அடைவது அவசியம். ஞானத்தின் மூலம் நீங்கள் இப்பிரபஞ்சத்தின் மையமாகலாம். அவ்வாரான மைய நிலையில் எல்லாமே இயல்பாக உங்களை வந்தடையும்.

பகவத் கீதை இரண்டாம் அத்யாயத்தில் " நதிகள் அனைத்தும் கடலைத்தேடி ஓடிவருவது போல ஆழ்ந்த விழிப்புணர்வு நிலையில் இருக்கும் யோகி ஒருவனிடம், விருப்பங்கள்  நிறைவேறும் உணர்வும், திருப்தியும் தேடி வந்தடையும். எனவே யோகா, த்யானம், இவற்றின் மூலம் ஞானத்தைத் தேடுங்கள்.எல்லாமே உங்களை வந்தடையும். ஆசைகளின் பின்னால் அலைபவனுக்கு எதுவும் கிடைக்காது. எல்லாவற்றையும் அதன் போக்கில் விட்டுவிட, எல்லாமே தன் வசமாகும்.

கேள்வி: என்னால் இந்த  உயர் பண்புகளை என்னுடைய அலுவலகத்தில் பின்பற்ற முடியாது என்று தோன்றுகிறது. இந்த வேலையை விட்டு விடட்டுமா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: வேண்டாம். உங்களால் இப்பண்புகளை உங்கள் அலுவலகத்தில் உருவாக்க முடியும். கவலைப்படாமல் மற்றவர்களிடம் பேசிப்பாருங்கள். ஒரு சில நாட்கள் உங்களை கேலி செய்யலாம். பரவாயில்லை. தொடர்ந்து பேசுங்கள். அவர்களே புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வார்கள்.

நான் முதன் முதலில் மேற்கத்திய நாடுகளுக்கு சென்ற போது,யாரும் என் கருத்துக்களை  மனதில் வாங்கி கொள்ளவில்லை.ஆனால் நான் விடாமல் அந்நாடுகளுக்கு சென்று பேசி வந்தேன். பின்னர் ஒவ்வொருவரும் என் கருத்துக்களை விரும்ப தொடங்கினார்கள்.அது போல நீங்களும் உங்கள் அலுவலகத்தில் தொடர்ந்து பேசி அவர்களிடையே ஞான அறிவு, மாற்றம் இவற்றை கொண்டு வாருங்கள்.

எனக்கு தெரிந்து, இருபது ஆண்டுகளுக்கு முன் சைவ உணவுசுற்றுச்சூழல்மரம்நடுதல் இவை பற்றிப் பேசினால் மக்கள் எள்ளி நகையாடுவர். யாராவது நல்ல  சுற்று சூழலை பற்றியோ பிளாஸ்டிக் பொருள்கள் அற்ற நிலையை அடைவது பற்றி பேசினாலோ. இது அர்த்தமற்றது நடைமுறைக்கு ஒவ்வாததுஎன கூறுவார்கள்.முப்பது ஆண்டுகளுக்கு முன் புகை பிடிக்காதீகள் என்று கூறினால் மக்கள் அதை அபத்தம் என்று கேலி செய்வர். புகை பிடிக்காதவர்கள்  முக்கியஸ்தர்களாக அச்சமயம் கருதப்படவில்லை விமானத்தில் ஒவ்வொரு இருக்கையிலும் சாம்பற்படிக்கம் பொருத்தப்பட்டிருக்கும்.

விமானம் புறப்படும்போதும், தரையிறங்கும்போது மட்டுமே, பயணிகள் புகை பிடிக்காமல் இருப்பர். மீதி பயண நேரம் முழுதும் புகை பிடித்துக் கொண்டே இருப்பர். விமானத்தில் முற்பகுதியில் மூன்று அல்லது நான்கு வரி இருக்கைகள் மட்டுமே புகை பிடிக்காதவருக்காக ஒதுக்கப் பட்டிருக்கும். அதனால் பயனில்லை.ஏனெனில் பின்னாலிருந்து புகை முன்னிருக்கைகளை வந்தடையும்! இப்போது பாருங்கள் உலகம் முழுவதும் விமானப் பயணத்தில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு விமானத்திலும் சாம்பற்படிக்கம் கிடையாது.

ஆகவே நல்ல கோட்பாடுகள், மற்றும் த்யானம் பற்றி பேசிப் பாருங்கள். அக்காலத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து த்யானம் செய்வது அசாதாரணமாக கருதப்பட்டது. இப்போது பாருங்கள்! பெரிய நிறுவனங்கள் மன ஓய்வுக்கு யோகா,த்யானம் இவற்றை விளம்பரப் படுத்துகிறார்கள். எல்லாமே மாறிக்கொண்டு வருகிறது. பொது நிறுவனங்களில்  பணிபுரிவோருக்காக நமது சிறப்பு பயிற்சி முறைகள் உருவாக்கப் பட்டுள்ளன. சிறந்த முறையில் பயிற்றுவிக்க ஆசிரியர்களும் உள்ளனர். தற்போது "போச் " நிறுவனத்திலிருந்து இரண்டு குழுக்கள் பயிற்சிக்காக நமது ஆஸ்ரமத்திற்கு வந்திருக்கிறார்கள்.

சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர், லுப்தான்சா மற்றும் பிரிட்டிஷ் விமான நிறுவனங்களில் பணி புரிவோர் நமது பயிற்சிகளை எடுத்திருக்கிறார்கள்.அந்த விமான நிறுவனங்கள் த்யான சேனல்களை தங்கள் விமானங்களில் உபயோகிக்கிறார்கள்.ஆகவே எல்லா இடங்களிலும் மாறுதல்கள் ஏற்பட்டுக்கொண்டு வருகின்றன. உங்கள் நிறுவனத்திலும் நீங்கள் மாறுதலை உருவாக்கலாம்.நீங்கள் பணி மாறுவதற்கு ஊதிய உயர்வு காரணம் என்றால் மாறுங்கள். உடன் பணிபுரிவோர் காரணம் என்றால் ஓடி ஒளிய எண்ணாதீர்கள். நீங்கள் தொடர்ந்து அங்கிருக்க வேண்டும். நீங்கள்தான் அங்கு நம்பிக்கை ஒளி, உங்களால் தான் மாற்றத்தை கொண்டு வரமுடியும்.

மற்ற ஒரு  நாள் ஒருவர் என்னிடம் கேட்டார்.எனக்கு ஒரு மிக சரியான மனிதர் மட்டுமே வேண்டும்.உங்களுக்கு கிடைப்பார் என கூறினேன். ஆனால் ஒரு மிக சரியான ஆண் ஒருமிக சரியான பெண்ணே வேண்டும் என எதிர்பார்ப்பார். அப்பொழுது நீங்கள் மிக சரியானவரா?நீங்கள் சரியானவராக இல்லாத பட்சத்தில் ஏன் மற்றவர்கள் சரியானவராக  இருக்கவேண்டும் என எதிர்பார்கிறீர்கள்.ஒரு சில சமயம் நாம கற்பனை பண்ணிக் கொண்டு இருக்கிறோம் 

நாம் நடைமுறையில் எது சாத்தியம் என்று பார்ப்பதில்லை. அதனாலே வாழ்க்கையில் நாம் மிக சரியான என்பதில் இருந்து விலகி வரவேண்டும்.சின்ன சின்ன விஷயங்கள் கூட உங்களுக்கு கோபத்தை கொடுக்கும்,மன உளைச்சலை கொடுக்கும். நீங்கள் மிக எளிதாக உணர்ச்சி வச படுபவராக இருப்பீர்கள். அப்படி நீங்கள்  இருக்க ஆரம்பித்தீர்கள் என்றால் எல்லோரும் உங்களை பார்த்து பயப்படுவார்கள்யாருக்கும் உங்களோடு பழக பிடிக்காது.

அதனால எப்போ உங்களக்குள் போய் மையத்தில் இருக்கையில் எந்த ஒரு தேர்வுக்கும் அவசியம் இல்லாத இல்லாத நிலையில் இருப்பீர்களோஅதன்பின் எல்லாமே தானாக உங்கள் வழியில் நடக்கும்.

கேள்வி: குருஜி நான் என்னுடைய அலுவலக வேலையும் குடும்ப பணியும் நன்றாக செய்து வருகிறேன். மேலும் படிப்பவர்களுக்கு உதவி செய்கிறேன். இப்ப செய்வதை விட நிறைய சமூகத்திற்கு செய்ய முடியும் என்று தோன்றுகிறது. ஆனால் எப்படி செய்ய வேண்டும் என தெரியவில்லை. நீங்க எனக்கு வழி காட்ட வேண்டும்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் நம் வாழும் கலையுடன் இணைந்து பணி செய்யலாம். நாம் நிறைய செய்ய வேண்டி இருக்கிறது. நீங்கள்  அதற்கு நிச்சயமாக உதவி செய்யலாம்.

நாம் இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு பல்கலை கழகம் நிறுவ உள்ளோம்.அதில் கிழக்கு மற்றும் மேற்கில் உள்ள எல்லா நல்ல வற்றயும் இணைத்து குழந்தைகளுக்கான படிப்பை கொடுக்க உள்ளோம். தேவையானதும்,தேவைற்றதும் கிழக்கு மற்றும் மேற்கில் உள்ளது. அதனால் கிழக்கு மற்றும் மேற்கில் உள்ள உண்மையான ஞானத்தை ஒருங்கு கிணைத்து அதன் முலமாக முழுமையான மாற்றத்தை மனித உணர்வுகளில் உண்டாக்கி உள்ளோம். ஆகையால் உங்களிடமிருந்து எல்லாம் உதவி தேவை படுகிறது .

நமக்கு நன் கொடைகள் திரட்டுவதற்கும்,குழந்தைகளுக்கு உதவிகள் பெறுவதற்கும் மற்றும் கட்டிடம் கட்டி தருவதர்க்கும் நிறைய பேர் வேண்டிவுள்ளது.அங்கு பல விஷயங்கள் நடக்க போகின்றன. அதனால் நீங்கள் தாராளமாக இதில் பங்கு கொள்ளலாம். 

கேள்வி: :உங்களை சத்சங்கத்திலோ,க்ரியாவிலோ பார்த்தால் எங்களுக்கு உற்சாகமாக இருக்கு. ஆனால் எப்பொழுதும் அப்படியே இருப்பது எப்படி?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: எப்பொழுதும் என்பதை மறந்து விடுங்கள். நீங்கள் குளிக்கும் போது வெது வெதுப்பாகவோ, அல்லது, குளிர்ச்சியாகவோ உணர்வீர்கள்.அந்தக் குளியல் கொஞ்சநேரம் தான்.ஆனால் அது நாள் முழுவதும் சுத்தமாக இருக்க வைக்கிறது. அல்லவா? நீங்கள் எப்பொழுதும் நீரிலேயே இருக்க நினைத்தால் ஒரு மீனாக இருந்தால் தான் முடியும். 

உலகில் அதுதான் இயற்கை. சக்தி அலையாக வருகிறது.அது உங்களை உற்சாகமாக வைக்கிறது. பின் நீங்கள் வெளியே போனாலோ, சினிமா பார்த்துவிட்டு வந்தாலோ அந்த சக்தியின் நிலை குறைகிறது.

சினிமாவிலிருந்து வெளியே வருபவர்களைப் பார்த்தால் தூக்கத்தில் நடப்பவர் போல் இருப்பர். பிரகாசமான கண்களோ, அறிவார்ந்த முகமோ, ஆர்வமோ இல்லாமல்,2 மணி நேரம் உட்கார்ந்து பார்த்து விட்டு, களைப்பாகவும் இருப்பார்கள். இது நடக்கக்கூடியது. சக்தி பரிமாணம் ஒரே நிலையில் இருக்காது. அலைகள் போல் மேலும் கீழும் செல்லும்.கிரியா பயிற்சி செய்துவிட்டு சத்சங்கம் வரும்போது ஆற்றல் நிலை அதிகமாக இருக்கும்.சில சமயங்களில் அது குறைந்து விட்டால் அதற்காக என் சக்தி குறைந்துவிட்டதே என்று கவலைப்பட்டால், அது இன்னொரு கவலையாகி விடும். உங்கள் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் போது தியானம், சத்சங்கம் இவைகளில் ஈடுபாடு கொண்டு வரும்போது உங்கள் சக்தியின் வடிவும் சீராக இருக்கும். 

கேள்வி: நான் ஒரு உணர்வுப்பெருக்கோடு சாப்பிடகூடியவர்.கோபம்,வருத்தம்,கவலை இருந்தால் தானாகவே சாப்பிட ஆரம்பித்து விடுவேன். இதை எவ்வாறு கட்டுப் படுத்துவது? ஏனென்றால் என் உடல் எடை அதிகமாகிறது.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நான் இப்பொழுது கருத்துக்களோ,உபாயங்களோ சொல்லப் போவதில்லை. ஏனென்றால் அதை மறந்துவிட்டு,நினைவு வரும் போது,சொன்னவற்றை கடைப்பிடிக்க வில்லையே என்று மேலும் வருத்தப்படுவீர்கள். நீங்கள் சலனத்துடன் இருக்கும் போது எது நல்லது தெரியுமா? பாட்டுப் போட்டு அதற்கு ஆடுங்கள்.அது சோககீதமாக இருந்தாலும் பரவாயில்லை. ஆடும் போது எடை குறையும்.அப்போது அதிகம் சாப்பிடமாட்டீர்கள். நீங்களாக தீர்மானம் செய்தாலொழிய ஒருவரும் ஒன்றும் செய்யமுடியாது.உங்கள் முடிவே தீர்ப்பு.

கேள்வி: தியானம் செய்யும் பொது உடல் அதிர்வது இயற்கையானது தானா?  

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆம்.அது நல்லது. 

கேள்வி: மிகவும் முக்கியமான கஷ்டமான கேள்வி.நிறைய சாப்பிடாமல் இருப்பதும்,மிக 
உயர்ந்த சாப்பாடு மட்டும் எடுத்து கொள்வதும், அதிக கட்டுப்பாடு இருப்பதுவும் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இதன் காரணம் என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: எப்பொழுதும் உயர்ந்த உணவே சாப்பிட்டால் உங்கள் உடல் தானாகவே
சரி செய்துகொள்ளக்கூடிய தன்மையையும்,நோய் எதிர்ப்பு சக்தியையும் இழந்து பலகீனமாக ஆகிவிடும். உடல் இனங்ககூடியதாக இருக்க வேண்டும். சில சமயங்களில் மிகவும் ஆரோக்கியமான உணவு சாப்பிட வேண்டும்.அதற்காக நலக்குறைவான உணவை சாப்பிட அவசியம் இல்லை. சில தடவை தாவர உணவோ அல்லது மற்ற உணவோ சாப்பிட்டு உடலை ரொம்ப உணர்ச்சி உள்ளதாக வைக்கவேண்டாம்.இந்தியாவில் குடிசைப் பகுதியில் வசிப்பவர்கள் நீங்கள் ஆச்சர்யப்படும் அளவு பலசாலி ஆகவும், நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவராகவும்,உடல் எக்கு (இரும்பு) போல் இருப்பார்கள். 
  
நகரத்தில் மக்கள் உடல் அமைப்பு பலவீனமாக இருக்கிறது.மாசு நிறைந்த இடங்களுக்கு சென்றால் ஜலதோஷம்,இருமல் வந்து விடுகிறது ஆனால் குடிசைப்பகுதியில் இருப்பவர்கள் பலசாலி களாகவும், நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தவர்களாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறார்கள்.இதுவே உண்மை. சுகாதார குறைவான இடங்களில் இருப்பவர்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள் என்று சொல்ல மாட்டேன். பொதுவாக பிரேசிலுக்கு சென்றால் அவர்களுடைய "பைவிலாஸ்"என்ற சேரிக்குப் போய் பாருங்கள். "ரயொடே ஜனீரோ" நகரத்திற்குப் பக்கத்தில் உள்ள சேரிக்கு நடந்து சென்று பார்த்தேன்.அது சேரி போல் இல்லை.  அவர்கள் திடகாத்திரத்துடன் உள்ளனர். 

எப்போதும் மிக உயர்ந்த உணவையே உங்கள் உடலுக்குப் பழக்கப் படுத்தாதீர்கள். நடுநிலையுடன் சுகாதாரமான உணவை எடுத்துக்கொண்டு சில சமயங்களில் மற்ற விதமான உணவையும் சாப்பிட்டுப்பாருங்கள்.

கேள்வி: எனக்கு இந்தப் பயிற்சியால், முன்னை விட, மற்றவருடன் பிணைப்பு அதிகரிக்காமல், தனிமை அதிகரிப்பதாகவே உணர்கிறேன். தயவு செய்து ஆலோசனை கூறவும்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: முழித்துக் கொள்ளுங்கள். அவ்வாறாக நினைக்காதீர்கள். முதலில் அப்படி 

எண்ணம் வரலாம். பின்னால் அது மறைந்து விடும்.அந்தத் தனிமையிலேயே இருங்கள்.பின் 

அதனுள் ஆழமாக சென்றால் அது உங்களுக்கு அதிக சக்தியைக் கொடுக்கும்.