உள்ளுணர்வு என்பது சாதாரணமாக காரணங்களைத் தாண்டி தோன்றும் ஒன்று


9, ஜனவரி 2012

கேள்விஅன்பான குருஜி, எனக்கு எல்லோருடனும் இயல்பாக இருப்பது கடினமாக உள்ளது.  இயல்பாக இருக்கும்போது நாம் தெய்வீகத்துடன்  நெருக்கமாக இருப்பதாக நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள்.  நான் இயல்பாக இருப்பது எப்படி?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உங்களை இயல்பாக இல்லாமல் செயற்கையாக மாற்றுவது எது?  மற்றவர்கள் நம்மை தவறாக விமர்சனம் செய்துவிடுவார்கள் என்ற பயம்.யாராவது உங்களை முட்டாள்
என்று நினைக்கலாம் என்ற  பயம்.ஒரு அரை நாள் நீங்கள் ஏன்  முட்டாள் போல நடந்து கொள்ளக்கூடாது?  அப்படிச் செய்தால் உங்கள் பயம் முழுவதும் மறைந்து விடுவதை நீங்கள் பார்க்கலாம்.தவறு செய்து விடுவோம் என்ற பயம்  உங்களை செயற்கையாக இருக்கச் செய்கிறது. கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்தவறுகள் செய்வது சகஜம். மடத்தனமான பெருந்தவறுகள் செய்வதற்குத்தான் பயப்பட வேண்டும்; சிறு சிறு தவறுகளுக்கு பயப்படத் தேவையில்லை.  

கேள்வி: குருஜி, பல தடவை நான் செய்த அதே தவறுகளை மீண்டும் செய்ய மாட்டேன் என்று உங்களிடம் சத்தியம் செய்கிறேன். ஆனால் மீண்டும் அதே தவறுகளை செய்து மனம் வருந்தி சங்கடப்படுகிறேன்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அது நல்லதுதான். அந்த வலியை  உணர்வது நல்லது  ஒன்று, இரண்டுமூன்று அல்லது நான்கு முறை அவ்வாறு நிகழலாம். பத்தாவது தடவையும் அவ்வாறு நிகழும் போதாவது நீங்கள் அதை உணர்ந்து அதிலிருந்து விலகிச் செல்வீர்கள்.கவலை கொள்ள வேண்டாம். அந்த வலியை  உணர்வதும் என்னிடம் சத்தியம் செய்து கொண்டிருப்பதும்  நல்லதே.

கேள்வி: குருஜி, ஆழ்ந்த ஆன்மீகப் பயிற்சிகளும், மக்கள் செய்யும் தியானமும் மட்டுமே  இன்றைய உலகின் ஊழல் வன்முறை போன்ற பிரச்சினைகளைத்  தீர்க்குமா? அல்லது உடல் ரீதியான பிற  முயற்சிகளும்  செய்ய வேண்டுமா? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இரண்டுமே தேவை.  நம் ஆன்மீக உள் பலத்தின் துணையுடன் உடல்ரீதியான புற முயற்சிகளையும் செய்ய வேண்டும். இரண்டுமே அவசியம்.  நாம்  தொலைகாட்சி  நிகழ்ச்சிகளைப் பர்ர்ப்பதற்கு கண்கள், காதுகள் இரண்டுமே தேவைப்படுவது போல்தான்.  நாம் பார்க்கவும் வேண்டும்; அதே சமயம் கேட்கவும் வேண்டும். 

கேள்வி:  குருஜி,” உங்களைப்போல் இல்லையென்ற காரணத்தினால் யாரையும் விலக்கி விடாமல்  எல்லோரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்என்று சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் ஒருவரது தொடர்பு அல்லது நட்பு உங்களை பாதிக்குமானால் அவர்களிடமிருந்து விலகி  விடலாம் என்றும் சொல்லி இருக்கிறீர்கள் மாறுபட்ட கருத்துக்கள் போல் தெரிவதனால் தயவு செய்து விளக்கம் கூறவும்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆம். வாழ்க்கை  மாறுபட்ட கருத்துக்கள் நிறைந்தது. அறிவுரைகள் அல்லது விதிமுறைகள்  எல்லாம் மாறுபட்டவைகளாகத்தான்  இருக்கும். அதுதான் உண்மைஇங்கு தான் விவேகம் தேவைப்படுகிறது. எங்கேஎப்பொழுது,எப்படி நடப்பது  சரியென்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

கேள்வி: குருஜி, குணங்களை  மதித்து ஆனால் அவற்றில் ஈடுபடாமல் இருப்பது எப்படி? சில சமயங்களில் அவற்றில் ஈடுபடும் பிடியிலிருந்து  ஒருவரால் தப்பிக்க முடியவில்லையே. இதை  வென்று வருவது எப்படி?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: தவறு செய்யக்கூடாது என்ற உறுதியான எண்ணம் கொண்ட மனம் என்பது ஒரு சீருந்து(கார்) வண்டியின் வேக நிறுத்தி(ப்ரேக்) போன்றது.  நீங்கள் ஒரு இடத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது நன்றாக வேலை செய்யும் ஒரு ப்ரேக் வண்டியில் இருந்தால், நாம் எப்போது  தேவைப்படுகிறதோ அப்போது உபயோகித்துக் கொள்ளலாம். வண்டியில் ப்ரேக் இல்லையென்றால்  விபத்துக்களை சந்திக்க நேரிடும். 

அதே போல், நம் மனம் "எனக்கு இதை செய்யப் பிடிக்கவில்லை; இதை செய்யக்கூடாது"  என்று சொன்னால் அதனால் நமக்கு மகிழ்ச்சி உண்டாகும் என்று உறுதி அளிக்கிறது.  ஆனால் அது உண்மையில் மகிழ்ச்சியைத் தராமல் வலியையே உண்டாக்குகிறது.

தீயது எது?  ஒருவருக்கோ அல்லது மற்றவருக்கோ வலியை உண்டாக்கும் ஒன்றே தீயது என்று சொல்லப் படுகிறது. அது குறுகிய கால  மகிழ்ச்சியைத் தரலாம்.  ஆனால்  உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நீண்ட கால வலியையே தரும்.

கேள்வி: குருஜி, கிருஷ்ணன் இருந்த காலத்தில் கோபிகளும் கோபியர்களும் உடனிருந்தனர்.  இப்பொழுது கிருஷ்ணன் யாரென்று என் மனதிற்குத் தெரியும்.  ஆனால்  நாங்கள் அதே கோபிகள், கோபியர்கள்தானா? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்:  நீங்கள் வேறு புதியவர்களாக இருந்தால் தான் என்ன?  நீங்கள் ஏன் அவர்களாகவே இருக்க வேண்டும்? இருக்கலாம்;நீங்கள் அவர்களாகவே கூட இருக்கலாம்.அறிவு முடிவில்லாதது;நிலையானது. அதே போல் உணர்வுகளும் கூட முடிவில்லாதவை; நிலையானவைகுருஜி," உணர்வுகள்  தற்காலிகமானவை; அவை  வரும்;  போகும்"என்று சொன்னீர்களே என்று என்னை இப்பொழுது  கேட்காதீர்கள் அது தற்காலிகமானது; அது நிரந்தரமானது.குழப்பம் அடைந்து விட்டீர்களா? என் வேலை முடிந்தது.  என் வேலை  உங்களை ஒத்துக்கொள்ள வைப்பது என்று யார் சொன்னது? என் வேலை உங்களை குழப்பம் அடையச்செய்வதே. ஒவ்வொரு முறை நீங்கள் குழப்பம் அடைகிற போதும் நீங்கள் ஒரு படி முன்னேருகிரீர்கள்.  

கேள்வி: குருஜி, சிறு விஷயங்களில் கூட முடிவு எடுக்க முடியாமலும் பெரும் குழப்பமாகவும் உள்ளது.  நீங்கள் சொன்னது போல் நல்லவற்றிற்கு இடையிலேயே குழப்பம் உண்டாகிறது.  நல்லவற்றிற்கு இடையே சரியானதைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்:நான் ஏதாவது சொன்னால், நீங்கள் இன்னும் அதிகமாக குழப்பம் அடைவீர்கள்இந்தக் குழப்பம் போதாது என்று நினைக்கிறீர்களா?  நான் மேலும் குழப்பத்தை அதிகரிக்க விரும்பவில்லை.  அதிகக் குழப்பம் பெரும் பிரச்சினை ஆகி விடும். உங்கள் குழப்பத்துடனேயே இருங்கள்.அது உங்களை எங்கே அழைத்துச் செல்கிறது என்று பாருங்கள்.உங்களிடம் இருக்கும் பேராசையை கவனியுங்கள்.  அளவுக்கு அதிகமாக இருக்குமானால்,உங்கள் ஆசையைக் கட்டுப்படுத்துங்கள். சரியான முடிவு உங்கள் மடியில் தானாகவே வந்து விழும். 

கேள்வி:  குருஜி, உங்கள் புத்தகம் ஒன்றில் பயம் என்பது அன்பின் தலைகீழ்  ஆகும் என்று படித்தேன்.  அப்படியானால் அன்பு என்பது பயத்தின் தலை கீழ்  வடிவமா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் வேறு கோணத்தில் பார்த்தால்,அதாவது நீங்கள் தலை கீழாக இருந்து பார்த்தால்,அவ்வாறே தெரியும்.புரிந்ததா?

கேள்வி: நேபாளத்தில் பல பண்டிகைகள் விலங்குகளை பலியிட்டு கொண்டாடப்படுகின்றன. நமது புனித உரை நூல்களில் இப்பலிகள் பற்றி கூறப்பட்டுள்ளனவா? எவ்வாறு மாற்றத்தை உருவாக்குவது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: கல்வியறிவு மூலம் மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.இறைவனை மகிழ்விக்க உயிர்களை கொல்ல வேண்டும் என்று நமது வேதப்புத்தகங்களில் எங்கும் கூறப்படவில்லை. அஹிம்சா பரமோ தர்மஹா! விலங்குகளை ஒருபோதும்  கொல்லக்கூடாதுஎல்லா உலக சமயங்களிலும்,பண்பாடுகளிலும் என்ன நிகழ்ர்ந்திருக்கிறது தெரியுமா?சர்க்கரையும் மணலும் கலந்தார் போன்ற நிலை ஏற்பட்டுள்ளது.பல நல்ல விஷயங்களிடையே வேதங்களில் கூறப்படாத விஷயங்களும் இடைசெருகப்பட்டு அவை பழக்கத்தில் உள்ளன. மக்கள் இவற்றை மரபு என நம்புகிறார்கள்.விலங்குகளை கொல்லக்கூடாது என்று மக்களுக்கு அறிவுறுத்தவேண்டும்..நமது வேத சாஸ்திரங்கள்விலங்கு மனப்பான்மையை விட வேண்டும்,ஜடத்துவத்தை நீக்க வேண்டும்என்று கூறுகின்றன

சமஸ்க்ருத மொழியில் ஒரு வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் இருக்கும்.மகிஷா என்ற சொல்லுக்கு எருமை என்பதைத் தவிர ஜடத்தன்மை என்ற பொருளும்  உண்டு.எருமை அவ்வாறு அழைக்கப்படுவதற்கு காரணம்அதன் குறைவேக செயல்பாடு  அல்லது ஜடதன்மை.நீங்கள் காரில் பயணம் செய்யும்போது,எருமை குறுக்கே நின்றால் ஊதுகுழல் ஒலிக்கசெய்தால்அது நகராது.நீங்கள் வண்டியை விட்டு இறங்கி அதை நகர்த்த வேண்டும்.எருமையை நோக்கி குச்சியை ஆட்டி மிரட்டினாலும் அது நகராது.பசுக்கள் கூர் உணர்வுடயவை.ஆனால் எருமை கூர் உணர்ச்சியற்ற ஜடத்துவம் கொண்டது.அதனால் தான் அது மகிஷா' என்று அழைக்கப்படுகிறது. மனிதருள் இருக்கும் ஜடத்தன்மை வெல்லப்பட வேண்டும்.அது போல்'அஜ' என்றால் ஆடு என்பது பொருள். மற்றொரு பொருள் 'நேற்று இல்லாமல் நாளையும் இல்லாமல் பிறந்த ' என்பதாகும். ‘  என்பது பிறந்த என்று பொருள் தரும். சாதரணமாக ''கோ'' என்றால் பசு ஆகும். வடமொழி சொல்லான ' கோ' என்பதற்கு அறிவு, இயக்கம், குறிக்கோள் அடைதல் அல்லது பேறு என்கிற அர்த்தங்களும் உண்டு. மேலும் விளக்கி கூறினால் ஞானம்  - அறிவு,கமன் - தன் வயப்படுத்துதல்,ப்ராப்தி- பேறு அடைதல்,மோக்ஷ - முக்தி ஆகிய நான்கு விதமான அர்த்தங்கள் 'கோ' என்கிற ஒரு சொல்லுக்கு கூறலாம்.
துரதிருஷ்ட வசமாக இந்த அர்த்தங்கள் திரித்துகூறப்பட்டு  உருச்சிதைவை அடைந்துள்ளன.


கேள்வி: குருஜி,எந்தவித குறிக்கோளும்  இல்லாமல் நீங்கள் வேலை செய்யும்போது மிகச்சிறந்த  பலன் கிடைக்கின்றது என்ற  ஞானம் எனக்குப் புரியவில்லை.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆம்.  அது உள்ளுணர்வின்  வேலை அல்லது திடீரென்று  ஒரு எண்ணம் தோன்றுவது.உள்ளுணர்வு உண்டாகும் போது நாம் உட்கார்ந்து கணக்கீடு செய்து கொண்டி
ருப்பதில்லை.உள்ளுணர்வு என்பது காரணங்களைத் தாண்டி திடீரென்று தோன்றுவது.புரிந்ததாஆர்கிமிடிஸ் மீண்டும் மீண்டும் யோசனை செய்துகொண்டிருந்தார்ஒன்றும் தோன்றவில்லை. அவர் மனதைத் தளர்த்தி ஓய்வெடுத்த போது திடீரென்று ஆர்கிமிடிஸ் தத்துவம்  தோன்றியது. அதேபோல் நிறைய விஞ்ஞானிகளுக்கு ஆறாம் அறிவிலிருந்துதான்  ஏதோ ஒன்று  கிடைத்தது.அதுவே உள்ளுணர்வுஅது வளர்ததுக்கொள்ளப்பட வேண்டும்..எனவே உங்கள் ஐந்தறிவையும் புத்திசாலித்தனத்தையும் மட்டும் சார்ந்து இருக்காதீர்கள்.உள்ளுணர்வும் மிக முக்கியம்.அது ஆழமானது;உண்மையுடன் நெருக்கமானது.இல்லையென்றால் உங்களுடைய முடிவுகள் பல சமயங்களில் தவராவதை  பாருங்கள்.

எத்தனைபேர் பல சமயங்களில் உங்களுடைய முடிவுகள் தவறானவை  என்று உணர்ந்திருக்கிறீர்கள்? நீங்கள் பிறரைப் பற்றி எடை போட்டு சிறிது நேரத்திற்குப் பிறகு அது அப்படி இல்லை என்று உணர்ந்திருக்கிறீர்கள்?  நான் ஒன்று நினைத்தேன்,ஆனால் அது வேறு ஒன்றாக இருந்தது என்று நினைத்திருக்கிறீர்கள் இல்லையா? ஆகவே  உண்மையிலேயே உள்ளுணர்வு என்பது மிக ஆழத்திலிருந்து தோன்றுவதனால் அது பொய் ஆகாது.  உங்களை தோல்வி அடையச் செய்யாது.

கேள்விகுருஜிவெற்றி அடைய ஒருவன் எவ்வளவு காலம் முயற்சி செய்யவேண்டும்பத்து வருட முயற்சிக்கு பின்னும் வெற்றி கிட்டவில்லை எனில் என் செய்வது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆமஅப்பொழுது உங்கள் வழிமுறை மாற்ற வேண்டும்.மன திடம் இருந்தால் இன்னும் சில காலம் முயற்சிக்கலாம்.முடிந்தவரையில் முழு மனோதிடத்தையும் பிரயோகயுங்கள் அப்படியும் பலன் கிட்டவில்லை எனில்பரவாயில்லைஇளைப்பாறுங்கள். ஒரு சங்கல்பமோ குறிக்கோளோ நிறைவடைய முயற்சி நிச்சயம் அவசியம்.சக்தியும் நிறைய செலவாகும், ஆனால்  அந்த சங்கல்பம் வெற்றிகரமாக முடியும் முடிவடையும் தருணத்தில் கிடைக்கும் திருப்தி,நமக்கு முன்னமே கிடைத்துவிடுகிறது.இதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த சங்கல்பம் பத்து வருடங்களுக்கு முன்னே உருவானது.அதற்க்கு முன் ஆனந்தமாக இருந்திர்கள் அல்லவா?அதற்க்கு பின்னும் நீங்கள் ஆனந்தமாக இருந்திர்கள் இதைத்தான் மனதில் இருத்தி கொள்ள வேண்டும்.                                                                                                                            
நம் நமது ஆசைகள்சங்கல்பம் நிறைவேறினால் தான் ஆனந்தமாக இருப்போம் என நினைக்க கூடாதுபிறகு நமது அசுரவேக செயல்பாடுகள் குறையும்அப்படியான அசுரவேக செயல்பாடுகள் நின்றதும் என்ன நடக்கவேண்டுமோ அது நடக்கும்இதனால் நீங்கள் வெறுமனே இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை.முயற்சிக்கவும்காரியங்களை செய்யவும்பின் அமைதி  கொள்ளவும்