வரும் ஆண்டு பேரானந்தமான ஆண்டு

டிசம்பர் 31, 2011..

வேத கால நாள் காட்டியின் படி  இந்த  வருடம்  'நந்தா'  என்று அழைக்கப்படுகிறது. நந்தா என்பதற்கு பேரானந்தம் என்று பொருள்.இந்த வருடம் பேரானந்தத்தின் வருடம். சென்ற ஆண்டு நிச்சயத் தன்மையின் ஆண்டாகும். அதற்கும் முந்தைய ஆண்டு  ஒழுங்கின்மை மற்றும் குழப்பத்தின் ஆண்டாக இருந்தது. ஆனால்  இப்போது  வருகின்ற இந்த  ஆண்டு மகிழ்ச்சிக்கான ஆண்டு.எனவே நாம் எல்லோரும் சமுதாயத்தில் மேலும் மேலும் மகிழ்ச்சியைப் பரப்புவதென தீர்மானம் செய்து கொள்ளலாம்.

நாம் வாழ்க்கையை கவனித்துப் பார்த்தால் அனைத்துமே மகிழ்ச்சியை நோக்கித்தான் செலுத்தப் படுகின்றன.பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்துமே மகிழ்ச்சியை நோக்கித்தான் செயல் படுகின்றன.அரசியல் மகிழ்ச்சியை கொண்டு வரத்தான்  உள்ளது. பொருளாதாரமும் மகிழ்ச்சியை கொண்டு வருவதற்கே உள்ளது.அறிவும் மகிழ்ச்சியைக் கொண்டு வரத்தான் உள்ளது.எந்தப் பொருள் அல்லது எந்த மார்கத்தை எடுத்தாலும் அது மகிழ்ச்சியை நோக்கித்தான் செலுத்தப் படுகிறது.

மனித சமுதாயம் இதை எங்கேயோ மறந்து விட்டது போல் தெரிகிறது. நாம் மகிழ்ச்சி என்னும்  இலக்கின் மீது  கவனத்தைச்செலுத்தாமல்இடையில்உள்ளவற்றில்நம்மைத்தொலைத்து விடுகிறோம். வழி அல்லது வழி முறைகளையே இலக்கென்று நினைக்கிறோம். செல்லும் பாதையையே வீடென்று நினைக்கிறோம்.நாம் நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். நாம் குறிப்பபிட்ட ஒரு  இடத்திற்கு  செல்லவேண்டு மென்பதை மறந்து இதுவே வீடென்றுநினைத்து பயணம் செய்கிறோம். பணம், அரசியல், கேளிக்கைகள் போன்றவைகளையே இலக்கென்று நினைக்கிறோம். இவை எல்லாம் மகிழ்ச்சியை  தருபவையே உண்மையில் மகிழ்ச்சி என்பது நிபந்தனையற்றது. இவை எல்லாம் இருந்தாலும்  ஒருவன் மகிழ்ச்சியின்றி இருக்கலாம்.இவை எதுவும் இல்லாமலும்  ஒருவன் மகிழ்ச்சி என்னும் இலக்கை அடையலாம். வருவது வரட்டும், எப்படியானாலும்,எது எல்லாம் தலைகீழனாலும் சரி,ஆகாவிட்டாலும் சரி,நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடிவு செய்யுங்கள்.மகிழ்ச்சியாக இருங்கள்.இன்று உலகில் மக்கள் முழுமயான தேசிய மகிழ்ச்சி குறியீட்டை நோக்குவதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.

நாட்டின் முழுமயான மகிழ்ச்சி குறியீடு, நாட்டின் முழுமயான உற்பத்தி குறியீடு கிடையாது, இன்று உலக  மக்கள் மொத்தத்தில்  தேசிய மகிழ்ச்சி பற்றி பேசுவது சுவாரசியமாக இருக்கிறது. இன்றைய தேவை மொத்த தேசிய மகிழ்ச்சி (GNH)இங்கிலாந்து,அமெரிக்கா, ஐரோப்பா போன்ற எல்லா இடங்களிலும் இது பற்றி பேசத் துவங்கி விட்டனர் என்று நினைக்கிறேன்.பங்களாதேஷ், பூடான் போன்ற குறைந்த வளங்கள் உள்ள சிறிய நாடுகளில்,நாட்டின் மொத்த மகிழ்ச்சி குறியீடு,பொருளா தார வளர்ச்சியடைந்த இச்காண்டிநேவிய  போன்ற நாடுகளை விட அதிகமாக இருக்கிறது.அதிக பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகளில் மகிழ்ச்சி என்பது மிகக் குறைவாக இருக்கிறது.ஏன்? எதனால்? இதை நாம் எப்படி அணுக வேண்டும்?இங்கு தான் நாம் உலக மக்களுக்கு அழைப்பு விடுத்து "வாருங்கள்; விழித்தெழுங்கள் ; மகிழ்ச்சியாக இருங்கள்" என்று சொல்ல வேண்டும்.

நாம் ஒரு ஆன்மீக விழிப்புணர்வு அலையை, மனித நேய அலையை கொண்டு வர வேண்டும். மனித நேயம் குறைந்தால், மக்கள் சமுதாயம் மிருகத்தனமான உலகமாக மாறி விடும்.  மனித நேயம் இல்லாத சமுதாயத்தை மக்கள் சமுதாயம் என்றோ அல்லது விலங்குகளின் ராஜ்ஜியம் என்றோ கூட சொல்ல முடியாது. ஏனென்றால், விலங்குகள்கூட சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழ்கின்றன.பசி இல்லாதபோது எந்த ஒரு சிங்கமும் பிற விலங்குகளை வேட்டையாடாது.இந்த கிரகத்திலுள்ள எந்த விலங்கினமும் காடுகளை மாசுபடுத்துவது இல்லை.பல கோடி ஆண்டுகளாக இருந்த போதிலும் காடுகள் மாசு படவில்லை. அவை தூய்மையாக வைக்கப்பட்டுள்ளன.மனித சமுதாயம் தான் அதன் பேராசையினாலும்  தவறான பயன்படுத்துதல் மூலமாகவும் இந்தக் கிரகத்தினை பாழ்படுத்துகிறது. வருங்கால சந்ததியினர் வாழத் தகுதியற்றதாக மாற்றிக் கொண்டு வருகிறது.இங்கு தான் இந்த வருடம்  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. மக்கள் மனிதகலாச்சாரம், ஆன்மீககலாச்சாரம்,சுற்றுச்சூழல்கலாச்சாரம்ஆகியவற்றில் விழிப்ப்புணர்வு பெறுவார்கள்.

வாழும் கலை  உறுப்பினர்களான  நீங்கள் அனைவரும் பெரும்பணியாற்ற வேண்டியுள்ளது. நீங்கள் முன்னோடிகளாக இருந்து சமுதாயத்தில் விழிப்புணர்வை உண்டாக்க வேண்டியுள்ளது.2011ல் நாம் பல எழுச்சிகளைக்கண்டுள்ளோம். எல்லா ஒடுக்கப்பட்ட சமூகங்களும்,சர்வாதிகாரம்,வன்முறை,சுயந லம் ஆகியவற்றிற்கு எதிராக எழுந்துள்ளன.2011  ஆம்  ஆண்டு  அரேபிய  நாடுகள், எழுச்சிகளையும், புரட்சிகளையும் கண்டுள்ளன.

வரும் ஆண்டு உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும்  காயப்பட்ட மக்களுக்கு மருந்தாக அமையுமென்று நம்புகிறோம்.நம் எல்லோருக்கும் இந்தப் பொறுப்புள்ளது. நாம் அனைவரும்உடைந்துபோனநெஞ்சங்களை சரி செய்து  ஆறுதல் அளித்து சமுதாயத்திற்கு நம்பிக்கை அளிக்க வேண்டும்.

வாழும் கலை சிறிது காலமாகவே மன அழுத்தமும் வன்முறையும் இல்லாத சமுதாயத்தை எதிர் நோக்கியுள்ளது. அதை நோக்கி  நாம் முன்னேறிக் கொண்டுள்ளோம். நல்ல சாதனைகளும்  புரிந்து ள்ளோம். கடந்த ஆண்டுகளில் நம் சாதனைகள் குறித்து நாம் பெருமை அடைகிறோம். நாம் பல திட்டங்களை செயல்படுத்தி பலருக்கு ஆறுதல் அளித்துள்ளோம்.இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. எனவே நாம் செய்ய வேண்டியவற்றை மகிழ்ச்சியாக தொடர்ந்து செய்வோம்.

இன்று நாம் மிக அற்புதமான தியானம் செய்தோம். உலகின் எல்லா பகுதிகளிலிருந்தும் மக்கள் இந்த தியானத்தில் கலந்து கொண்டனர். இது உலகில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன்.

கே: குருஜி, இக்காலத்தில் துன்பப்படும் மக்களைப் பார்ப்பது  மிகவும் சாதாரணமாகி விட்டது. மக்கள் பாவங்களைச் செய்து, அவர்கள் செய்யும் பாவங்களைப் பற்றி அறிந்திருக்கும் அதே பிறவியில் ஏன் தண்டிக்கப்படுவதில்லை?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இதை நீங்கள் என்னுடையபார்வையில் பாருங்கள். நான்பார்க்கும் யாரும் தீயவர்கள் இல்லை.அறிவாளிகளையும்,அறிவிலிகளையும் மட்டுமே நான்பார்க்கிறேன்.அறிவாளிகள்உண்மையை
வெகு விரைவில் அடையாளம் கண்டு கொள்கின்றனர்.அறியாதவர்கள் சற்று அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் துன்பப்படுவதுஅவர்களதுஅறியாமையினால்இல்லை.மக்கள் உண்மையை உனராததனால் முட்டாள்களாக இருக்கிறார்கள்.

கே: குருஜி, பிரபஞ்ச மூலக்கூறு என்பது பற்றி கூறமுடியுமா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உலகம் என்பது அனைத்தும் அதிர்வலை இயக்கம் என்பது ஆகும்.வேதியில் கூற்றுப்படி பல்வேறுவகையான நுண்ணணுக்கள் இயக்கமே உலகம் என்பதாகும். மூலக்கூறு உயிரியல் படி பல வகையான நுண்ணணுக்கள்  மற்றும் உயிர்க்கூறுகள் கொண்டதே  உலகம். மூலக்கூறுகள் மேலும் சிறிதாகி அணு,ஏலேக்ட்ரோன்,ப்ரோடான்,நுட்ரோன் என்று பிரிந்துஅதிர்வலை இயக்கம்உண்டாகிறது.மூலக்கூறுவிதிப்படி,அதிர்வலைஇயக்கத்தில்மூலக்கூறுபிரிவதில்லை. உலகம் ஒரே சக்திதுளியிலானது.இதையே ஆதிசங்கரர் இப்பிரபஞ்சமே பிரம்மம்  என்கிறார்."சர்வம்கல் விதம் பிரம்மா நேக நனாஸ்தி  கின்ச்சனா" இப்ரபஞ்சம் ஒரேசக்தித் துளியாலனது;அதுவே பிரம்மம்.

கே:தங்கள் வழியிலுள்ள பெரும்பான்மையான நாங்கள் ஞானம் பெற விரும்புகிறோம்.தங்கள் வழி காட்டுதலில் நாங்கள் அதனை பிற்காலத்தில் அடைய முடியும்.அதற்கு ஏன் இத்துணை சோதனைகளை தாண்ட வேண்டும்? ஏன் தாங்கள் எங்களை இப்போதே ஞானிகளாக்க கூடாது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆஹா!!நாம் இதை வேடிக்கையாக செய்து அடையலாம்.உப்பு சப்பற்ற உணவை விட காரசாரமான உணவு பிடிக்குமல்லவா? அதுபோல் சிறிது சுவையோடு ஞான வழியை தேடினால் சுவாரஸ்யமாக இருக்கும்.

கே: நமது முற்பிறவியை பற்றி எதுவும் தெரியாது.இறைவன் சித்தப்படி பிரபஞ்சத்தில்,ஆத்மா பரமாத்மாவினை அடைந்தபின்னும், பிறவி ஏற்படலாம்.அப்படியானால் ஏன் ஞானிகள் பிறப்பு - இறப்பு எனும் பெருங்கடலைத் தாண்ட வேண்டும் என்று விரும்புகின்றனர்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இது மிக இயற்கையானது.நீங்கள் ஒரு நீண்ட மூச்சை உள்ளிழுக்கிரீர்கள் அதை வெளிவிட வேண்டும் என்று விரும்புவது இயல்பு.உங்கள் கையை இருக்க மூடியிருக்கிரீர்கள். அதை திறக்க வேண்டும் என்று விரும்புவது இயல்பு.கைகள் திறந்து இருக்கும்போது மூடவேண்டும் என்று விரும்புவது இயற்கையானது.மூச்சை வெளிவிட விரும்புவது போல பிறவியிலிருந்து விடுதலை அடைய விரும்புவதும் இயற்கையனதுவே.உங்கள் புலன்களின் விருப்பப்படி நீங்கள் செயல்படும்போதும் இது நிகழ்கிறது.உணவு அருந்துகிறீர்கள்.

ஒரு கட்டத்தில் போதும் என்கிற உணர்வு ஏற்படுகிறது.ஒரு காட்சியை காண்கிறீர்கள்.சிறிது நேரத்தில் கண்களை மூடிக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.பத்துமணி நேரம் இசையை கேட்கிறீர்கள்.பதினோராவது மணிநேரத்தில் சற்று அமைதியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. அந்தஅமைதியைமிக ரசிக்கிறீர்கள்.அதுபோல் பிறரின் அண்மையை தொடுகையை  விரும்புகிறீர்கள். ஆனால் அது எவ்வளவு நேரத்திற்கு? சிறிது நேரத்தில் தனிமையை விரும்புகிறீர்கள்.எந்த நிலையிலும் அதிக நேரம் இருக்க முடியாது ஒய்வு எடுக்க விரும்புகிறீர்கள்.அதுதான் மோக்ஷம் என்பது.மோஷம் என்பது உலக ஈடுபாட்டில் இருந்துவிடுவித்து கொள்வது, புலன்களின் ஆட்சியில் இருந்து விடுதலை.செயல்பாடுகளில் இருந்து விடுதலை.இந்த விடுதலை உணர்வு எல்லா மனிதர்களுக்கும் இயல்பாகவே உண்டு.த்யானம் இந்த விடுதலையை அளிக்கும்.

கே: குருஜி! பணம்எந்தஅளவு முக்கியமானது?சம்பாதிக்கும்திறன்இருந்து, பணம்சேர்க்காமல் இருப்பது தவறாகுமா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: பணம் சேர்ப்பது என்பது ஒரு அளவில் இருப்பது நல்லது.அதிக ஆசை எவ்வளவு பணம் சேந்தாலும் திருப்தியை தராது.அமெரிக்காவை பாருங்கள்.தனது நாணய மதிப்பினால் உலகையே ஆளும் நாடு, இன்று பல லக்ஷம் கோடி டாலர் கடனில் உள்ளது.அமெரிக்காவை பணக்கார நாடு என்பீர்களா அல்லது ஏழை நாடு என்பீர்களா ? நான் என்ன கூறுகிறேன் என்றால்,  பணம் சம்பாதியுங்கள் அதுவே வாழ்வின் லட்சியம் என்று கருதக்கூடாது. உடல்நலம், சந்தோஷம் ஆகியவற்றை பணையம் வைத்து சம்பாதிப்பது பயன்படாது.செல்வம் சம்பாதிக்க உடல் ஆரோக்கியத்தினி பணயம் வைக்கிறிர்கள்.பிறகு பாதி செல்வத்தை பழைய உடல் நிலையை பெற செலவழிகிரிர்கள் வாழ்க்கையை ஒரு சமநிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.பணம் சம்பாதியுங்கள் ஆனால் அதில் தீவிரம் வேண்டாம்.சமுதாய தொண்டில் ஈடுபட்டு மகிழ்ச்சியாக இருங்கள்.  வங்கிக்கணக்கில் இருக்கும் பெருந்தொகையை விட அது உங்களுக்கு அதிக திருப்தியைத் தரும்.

கே: குருஜி,வேதாந்தம் ஏன் மிகவும் முக்கிய உயரிய அறிவாக எண்ணப்படுகிறது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஏனென்றால் அதற்கு இணையாக வேறு எதுவும் இல்லை.

கே: குருஜி, நாம் 151 நாடுகளில் இருக்கிறோம்.இனிமேல் இதற்கு அடுத்தபடி என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நான் உங்கள் நோக்கத்திற்கே விட்டுவிடுகிறேன்.நாம் வாழும் கலை பயிற்சியில் 30 வருடம் முடித்திருக்கிறோம்.2011ல் இதை கொண்டாட ஆரம்பித்தோம்.அது 2012 லும் தொடரும். வாழ்க்கையை ஒரு கொண்டாட்டமாக ஆக்குவதே நம் கொள்கை.நாம் இன்னும் உலகின் அநேக இடங்களுக்கு போய் சேரவில்லை.அங்கெல்லாம் சென்று இதைப்பரப்ப வேண்டும்.ஐரோப்பா எங்கும் கொண்டாட்டமும் மகிழ்ச்சி அலையும் கொண்டு வர வேண்டும்.மற்றதை உங்களுக்கு விட்டு விடுகிறேன்.உங்களுடைய நோக்கம்,எண்ணத்தினால் எதை செய்து முடிக்க வேண்டுமோ அதை செய்யுங்கள்.உங்களுடைய சொந்த விருப்பத்தை விட்டு உலகளாவிய நன்மையைப் பற்றி யோசியுங்கள்.உங்கள் தேவையை ஓதிக்கி விடுங்கள்.சமூகத்திற்காகவும் நோக்கம் தேவை.நான் உங்களுடைய தேவைகளை கவனித்து கொள்கிறேன்.

சமுகத்திற்காக உலகத்திற்காக எல்லாருக்காகவும் நீங்கள் செய்ய தயாரானால் உங்களுடைய தனிப்பட்ட தேவைகள் தானாக நிறைவேற்றப்படும்.நீங்கள் பின் தங்க மாட்டீர்கள்,நீங்கள் உங்களைப் பற்றியே  எண்ணிக் கொண்டிருந்தால் அதில் சந்தோஷமோ மகிழ்ச்சியோ இல்லை.பழைய சம்ஸ்கிருத பழமொழி ஒன்றில்"சின்ன விஷயங்களில் குதூகலம் இல்லை,பெரிய விஷயங்கள் தான் மகிழ்ச்சி கொடுக்க கூடியது"என்று சொல்லப்பட்டிருக்கு.அதனால் வாழும் கலைக்காகவும் உலகதிற்க்காகவும்,சமுகதிற்ககாகவும் தொலை நோக்கு தேவை.அதனால் உங்களுடைய அன்றாட தேவைகளும் சின்ன சின்ன விருப்பங்களும் நிறை வேறும்.

நீங்கள் என்ன விரும்பினீர்களோ அது உண்மையாகி கொண்டிருக்கிறது.உங்களுக்கு பாக்கியம் கிடைக்கும்.அதனால் சோம்பேறியாக இல்லாமல் சுறுசுறுப்புடன் இருங்கள்.குருஜி "ஒரு குறிக் கோளுடன் இருங்கள் என்று சொன்னார்.அதனால் மற்ற எல்லாவற்றையும் மறந்து விடுங்கள், எல்லாம் சரியாகி விடும்" என்று சொன்னாரே என்று நினைக்காதீர்கள்.சோம்பேறித்தனம்  இல்லாமல் சுறுசுறுப்பாகவும்,குறிக்கோளுடன் இருப்பதுவும் தான் முக்கியமான பிணைப்பு.

கே: குருஜிஇளைர்களுக்கு இந்த வருட செய்தி என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இளைஞர்கள் இன்னும் இளைஞர்களாக இருக்கிறார்கள்.ஒவ்வொரு மணித்துளியும் இளைஞர்களுக்கே சொந்தம்.அதனால் நீங்கள் இளைஞர் என்ற துடிப்போடு இருந்தால் இந்த வருடம் உங்களுக்கே.இளமை என்பது வயதால் மட்டும் அல்ல,ஆர்வத்தாலும் தான்.ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்,மக்களின் உணர்வை பாருங்கள்.அது இளமையிலும் இளமையாக உள்ளது.

2011 ல் என்ன லாபம் பெற்றீர்கள்! நீங்கள் செய்த தவறுகள் உங்களை அறிய வைத்தது. அதற்கு வருந்தாமல் மீண்டும் அதை செய்யமாட்டேன் என்று சபதம் எடுத்து கொள்ளுங்கள். மற்றவர்களிடமிருந்து அவர்கள் செய்த தவறுகளையும் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள்,அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது என்று பாருங்கள்.நமக்கு தப்பு செய்தவர்கள் மீது கோபமும் ஆத்திரமும் வருகிறது.ஆனால் அதற்கு மாறாக அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் ஏனென்றால் அவர்களுடைய வீழ்ச்சியால் அவர்கள் உங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கிறார்கள்.அவர்கள் தப்பு செய்துவிட்டு "பார் நான் எவ்வாறு தப்பு செய்திருக்கிறேன்,அதுமாதிரி நீயும் செய்யாதே"என்று அதனால் அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு மேலே செல்ல வேண்டும்.

நீங்கள் ஒரு வேளை இறந்து வேறு இடத்தில் பிறந்தால் அங்கே வாழ்க்கை புதியதாகத்தானே இருக்கும்.கொரியாவில் பிறந்ததாக வைத்துக்கொள்வோம்.குழந்தைப்போல் பல்வேறு மனிதர்கள் பல்வேறு மொழிகள் பேசுவதும் புதியதாகவும் ஆர்வமாகவும் இருக்கும்.நீங்கள் இறந்து விட்டீர்கள் பழயதை மறந்துவிட்டீர்கள்.அதன்பின் என்ன "இப்பொழுது பழையதை எண்ணி வேதனைப் படாதீர்கள்.நான் இப்படி செய்து விட்டேன்,அவள் இப்படி தவறு செய்துவிட்டாள்.அவர்கள் இவ்வாறு செய்து விட்டார்கள்" என்று எண்ணாமல்,அதை மூட்டைகட்டி அட்லாண்டிக் சமுத்திரத்திலோ எறிந்து விடுங்கள்,முழித்துக்கொள்ளுங்கள்.இவ்வுலகத்தைபுது கண்ணோட்டத்துடன் புது மனத்துடன் பார்த்தால் யாவும் புதியதாக இருக்கும்.வாழ்க்கை போய் கொண்டிருக்கு.இது போல் பல முறை நடந்திருக்கு.நீங்கள் பல முறை இறந்து பல முறை பிறந்திருக்கிறீர்கள்.ஒவ்வொரு கணமும் பிறந்து இறக்கிரீர்கள்.அதுதான் அறிவுத் தெளிவு,"இப்பொழுதில்"இருங்கள்.புதுவாழ்வு,பழையது போய் விட்டது."இப்பொழுதில்"இருந்து வாழ்க்கையின் சவால்களை ஏற்று மேலே செல்லுங்கள். மற்றவர்களுக்கு நாம் எவ்வாறு உதவியாக இருக்க முடியும் என்ற நினைவோடு மேலே செல்லுங்கள்.இதுதான் நினைவுகளை அழித்துவிட்டு ஒளியை நோக்கிச்செல்வது.நினைவுகளை கொன்று விட்டால் நீங்கள் லேசாக உணர்வீர்கள்.

மனது என்பது என்ன? எண்ணங்களின் இருக்கை,பழயதை எண்ணிக் கொண்டு வருத்தப்படுவதும், உங்கள் மீதும் மற்றவர் மீதும் கோபப்படுவதும் அந்த மீள முடியாத வட்டத்திற்குள் மாட்டிக்கொண்டு விடுவீர்கள்.மனதை மறந்து விட்டு ஒவ்வொரு நொடியும் இறந்து விடுங்கள்.ஆனால் என் அறை எண்ணை மறந்து விடுவேனே என்று கேட்காதீர்கள்.நீங்கள் மறக்க மாட்டீர்கள்.உங்களுடைய ஞாபக சக்தி கூர்மையாகும்.நீங்கள் ஒவ்வொரு வினாடியும் இறந்து பிறக்கும் போது உங்கள் ஞாபக சக்தி விரிவடைகிறது.அதனால் நீங்கள் இறப்பதோ,பிறப்பதோ இல்லை என்று உணர்வீர்கள்.உங்கள் ஆத்மா,வாழ்க்கை முடிவற்றது என்று அறியும்.ஐயாயிரம், பத்தாயிரம் முந்தய வருட எண்ண அலைகளை நினைவு கூறும் .

அது இருக்க வேண்டிய அவசியம் இல்லை.ஆனாலும் உங்கள் உள்ளுணர்வால் நீங்கள் அதை அணுக முடியும் .

கே: குருஜி,எங்களுடன் உங்கள் சுதர்சன க்ரியா அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியுமா?

ஸ்ரீ  ஸ்ரீ  ரவிசங்கர்:அதான் செய்து கொண்டிருக்கிறேன்.வேறு என்ன செய்கிறேன்என்று நினைகிறீர்கள்?நான் உலகோடு சுதர்சன க்ரியா அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.அதைத்தான் நாம் எல்லா இடங்களிலும் சொல்லிக் கொடுத்திருக்கிறோம்.நான் அந்த அனுபவத்தை வெளிப்படுத்தி ருக்கிறேன்.

கே: எதாவதுநடக்கப் போகிறது என்ற எதிர்பார்பிர்க்கும்,நடக்கும் என்று நம்புவதற்கும் என்ன வித்தியாசம் ?

ஸ்ரீ  ஸ்ரீ ரவிசங்கர்: நீங்களே விடையை சொல்லி விட்டீர்கள்.ஒன்று எதிர்பார்ப்பு,மற்றது நம்பிக்கை.

கே: எனக்கு சாதனை செய்வதற்கு உந்தும் படியாக உபாயம் சொல்லவும்.நான்இரண்டு குழந்தைகள், படிப்பு,வேலை என்ற அவசர உலகில் உள்ளேன்?

ஸ்ரீ  ஸ்ரீ ரவிசங்கர்: இளைப்பாறுங்கள் "சாதனா" செய்யவேண்டும் என்ற உந்துதலோடு ஓய்வெடுங்கள். அதுவே அந்த வழியில் நடத்திச்செல்லும்.