இரகசியங்களுக்குள் ஒரு பார்வை

வியாழக்கிழமை, 5 பெப்ரவரி 2015,

பெங்களூரு இந்தியா

படைப்பு முழுமையிலும், மூலம் காணப்படவே இல்லை. ஒரு விதை முளைக்கின்றது, ஆனால் விதைக்குள் என்ன இருக்கிறது என்பது அறியப்படவில்லை. அது போன்று கர்ப்பத்தில் ஒரு குழந்தை உருவாகிறது, ஆனால் அது வெளியே தெரிவதில்லை. ஒரு நதி எங்கேயோ உருவாகிறது ஆனால் அந்த நதியின் மூலாதாரத்திற்கு செல்ல முடியாது. ஆகவே மூலம் என்பது ஒரு ரகசியமாகவே இருக்கின்றது.  அது போன்றே இறப்பும் ஒரு ரகசியம். பிறப்பு ரகசியம், மற்றும் இறப்பிற்கு பின்னர் என்ன என்பதும் ரகசியம். நுட்பத்திலிருந்து மொத்தம், மீண்டும் நுட்பம்.  நுட்பத்திலிருந்து எவ்வாறு மொத்தம் ஏற்பட்டது என்பதும் ரகசியமே.


எனவே  ரகசியத்தை பார்க்கும் போது, மனதில் ஆஹா! என்னும் திகைப்பும் கேளிக்கையும் ஏற்படுகின்றது. இதுவே யோகாவின் அடித்தளமாகும். படைப்பைப் பற்றிய கேளிக்கையுணர்வு  ஏற்படும் போது, யோகாவின் முன்னுரை துவங்குகின்றது. குழந்தைகளுக்கு எதைப் பார்ததாலும் ஒரு ஆச்சரியம் தோன்றுகிறது. அவை தங்களுடைய விரல்களையே திகைப்புடன் நோக்குகின்றன. மலர்கள், வண்ணத்துப் பூச்சிகள், நட்சத்திரங்கள் அனைத்தையுமே ஆச்சர்யத்துடன் காண்கின்றன.வாழ்வில் திகைப்பும் வேடிக்கையும் உதிக்கின்றன, யோகாவும் துவங்குகின்றது.

குருதேவ், தனித்துவம் கரைந்த பின்னர் எவ்வாறு ஒரு தனி மனிதன் செயல்படுவது?

இரண்டு கோணங்கள் உள்ளன. நாம் தனி வாழ்க்கை வாழ்கின்றோம், அதே சமயம் நமக்கு ஒரு பெரிய வாழ்வும் உள்ளது. நீங்கள் தூங்கும் போது என்ன நிகழ்கின்றது? உங்களுடைய தனித்துவம் இப்பிரபஞ்சத்தில் ஒன்றுமில்லாத நிலையில் கரைந்து விடுகிறது. விழித்தெழுந்தவுடன், உங்களது வாழ்க்கையில் ஏற்றிருக்கும் பாத்திரங்கள் முன்வருகின்றன.அது போன்றே தியானம் செய்யும்போது என்ன நிகழ்கின்றது? அதில் நீங்கள் கரைந்து விடுகின்றீர்கள்.தியானத்திலிருந்து வெளி வந்தவுடன், என்ன நிகழ்கின்றது? தனித்துவம் உள்ளது.

எனவே வாழ்க்கை தனிப்பட்டது மற்றும் உலகளாவியது. நம்முள் ஒரு அம்சம் உலகளாவியது.
உபநிஷதங்களில் ஒரு அழகான  கதை உள்ளது. இரண்டு பறவைகள் ஒரு மரக்கிளையில் அமர்ந்திருந்தன. ஒன்று கவனித்துக் கொண்டிருக்க மற்றது உண்டு கொண்டிருந்தது. அது போன்று உங்களுக்குள் ஒன்று உலகளாவியது, அது கவனித்துக் கொண்டே இருக்கின்றது, மற்றொன்று செயல்படுகின்றது. செயல்படும் அது தனிப்பட்ட சுயம். நீங்கள் உருவமுள்ளவரா உருவமற்றவரா? இரண்டுமே தான். உங்களது உடலுக்கு உருவம் உள்ளது, மனதிற்கு உருவம் இல்லை. சரியா? அது எவ்வாறு சாத்தியமாகும்? ஒன்று உருவம் இருக்க வேண்டும் அல்லது உருவமற்றவாரக இருக்க வேண்டும், இரண்டுமாக எப்படி இருக்க முடியும்? என்று உங்களில் ஒருவர் கேட்கலாம். அது தவறான தர்க்கம்

குருதேவ், உலகிலேயே தாங்கள் மட்டும் தான் அனைத்து யோகா உருவங்களையும் வெளிப் படுத்திக் காட்டியிருக்கின்றீர்கள். இப்போது தாங்கள் வாழும்கலையின் கலைநிகழ்ச்சிகள் அக்காடமியினைத் (ALAP) துவக்கியிருக்கின்றீர்கள். உலகிற்கும் தனி மனிதனுக்கும் கலை நிகழ்ச்சிகளின் முக்கியத்துவம் என்ன?

வாழும்கலையில், அனைத்தையுமே முழுமையாகக் காண்கின்றோம். நிச்சயமாக இசை வாழ்வின் ஒரு பகுதி. உலகின் அனைத்துக் கலாச்சாரங்களிலும்,இசை வாழ்வின் பகுதியாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. குழந்தைகள் முதலில் பாடுகின்றனர், பின்னரே பேசுகின்றனர். இசையே முதலில் வருகிறது, மொழி பின்னரே வருகின்றது. குழந்தைகள் ஆ ஆ ஊஊ ஊ ஈஈ ஈ என்றெல்லாம் பாடுவதை கவனித்திருக்கின்றீர்களா? இசையே முதலில் பின்னரே குழந்தைகள் மொழியினைப் புரிந்து கொள்கின்றன. ஆகவே வாழ்க்கையில் இசையை ஓர் பகுதியாக கொள்வது முக்கியம்.

குருதேவ், நான் இங்கு வருவதற்கு முன்னர் பொருளாதார சந்தையில் சுமார் எட்டு ஆண்டுகள் பணி புரிந்திருக்கின்றேன். இடர்களைக் கையாள்வதே என்னுடைய பல முக்கியப் பணிகளில் ஒன்றாக இருந்திருக்கின்றது. தாங்கள் பல அபாயங்களை ஏற்றுக் கொள்கின்றீர்கள். எவ்வாறு அவற்றை மேலாண்மை செய்கின்றீர்கள்?

மேலாண்மை தேவையில்லை, அபாயத்தில் குதித்து, முன்னேறிச் செல்லுங்கள். அதிலிருந்து மிகச் சிறப்பானதே உங்களை வந்தடையும் என்று அறிந்து கொள்ளுங்கள்.

செய்தியில் மங்கோலியன் விஞ்ஞானிகள் தாமரை நிலையில் உள்ள 200 ஆண்டுகளான ஒரு புத்த பிட்சுவின் பதப்படுத்தப்பட்ட உடலை கண்டெடுத்து ஆய்ந்து கொண்டிருக்கின்றனர் என்று அறிந்தேன். சிலர் மிக உயர்ந்த தியான நிலையான துட்கம் என்பதிலேயே உயிருடன் உள்ளதாக நம்புகின்றனர். அது முக்திக்கு மிக அருகாமையில் உள்ள நிலை என்றும் புத்த சமயக் கருத்துப்படி உடல் கரையும் போது அதிக பட்ச சாத்தியமாக ஏற்படக் கூடிய நிலை என்றும் நம்பப்படுகின்றது. அத்தகைய தியான நிலை சாத்தியமானது தானா? உண்மையாக இருக்குமா?

தியான நிலை சாத்தியம் தான். அது உடலையும் தாக்கத்திற்குட்படுத்தும். சிலரது உடல் அழியாது. ஒருவர் இத்தனை ஆண்டுகளுக்கு பின்னரும் உயிருடன் இருக்க முடியுமா என்பதைப் பற்றித் தெரியாது. ஏன் அத்தனை காலம் உடலைப் பற்றிக் கொண்டிருக்க வேண்டும்? ஒரே ஆடையை அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குப் பற்றிக் கொண்டிருப்பீர்களா என்ன? ஒரு ஆடையையே பற்றிக் கொள்ள விருப்பம் இல்லாத போது ஏன் ஒருவர் அத்தனை காலம் உடலைப் பற்றிக் கொண்டிருக்க வேண்டும்? பொய் என்று கூற நான் விரும்பவில்லை. உடலழிவு நிறுத்தப்பட்டிருக்கலாம், ஆனால் ஆத்மா அந்த உடலைப் பற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லை. ஆத்மா உடலைப் பற்றிக் கொண்டிருக்குமானால் அது முக்தி அல்ல.

நெறிமுறைகள் மற்றும் ஆன்மீகம் இவற்றுக்கிடையே உள்ள வேறுபாடு என்ன?

ஆன்மீகம் உங்கள் வாழ்வின் அனைத்து அம்சங்களையும் இணைக்கின்றது. நெறிமுறைகள் என்பது மக்களுடன் உங்களது உறவுகளை பற்றிய விஷயம். உங்களது உறவும், பிரபஞ்சத்துடன் உங்கள் உறவும் என்பதே ஆன்மீகம்.