பகவத் கீதையின் பரந்த ஒளிக்கற்றை!

10 மே 2013 - பெங்களூரு. இந்தியா


பகவத் கீதையின் ஏழாவது அத்தியாயத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வாறு கூறிக் கொண்டே ஆரம்பிக்கிறார்,
‘மையா அசக்தாமனா பார்த்தா யோகம் யுஞ்சன் மத்-அஷ்ரயா. அஸம்ஸயம் ஸமாக்ரம் மாம் யதா ஞாஸ்யாஸி தத்-ச்ருணு’ (7-1). அவர் சொல்கிறார், ‘ உன்னுடைய பாசம் முழுவதையும் என்னிடம் வைத்து, நான் விவரித்துள்ளவாறு யோகப் பாதையைப் பயிற்சி செய்து, என்னை நீ எவ்வாறு முழுமையாக தெரிந்து கொள்வதென நான் உனக்கு இப்போது விவரிக்கிறேன்.

இங்கு,ஆசக்தி என்பது பாசமென பொருள்படும்,ஆஷ்ரயா என்பது நாம் எதைச் சார்ந்திருக்கிறோமோ அது. நாம் அன்பு செலுதுபவர்களைக் குறித்து பாசம் (ஆசக்தி) உள்ளது, நாம் சார்ந்திருப்பவர்களும் (ஆஷ்ரயா) இருக்கிறார்கள். நாம் எதோடு தொடர்பு கொண்டுள்ளோமோ அது யோகா எனப்படுகிறது.  இங்கே, ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அனைத்தையும் சேர்க்கிறார். உங்கள் இருதயம், உங்கள் மனம், இரண்டும் ஈடுபட்டுள்ளன. உதாரணத்திற்கு, உன்னுடைய வேலை, உன்னுடைய பொழுது போக்கிலிருந்து மாறுபட்டது. உன்னுடைய பொழுதுபோக்கு குறித்து ஆசக்தி, (அதாவது ஆசை அல்லது பிடிப்பு)  உள்ளது ஆனால் நீ வேலை என்று செய்ய வேண்டியிருப்பதால் நீ அதைச் செய்கிறாய். ஆகவே, எவ்வாறு இருந்தாலும் வேலை செய்துகொண்டிருப்பது கர்ம யோகமாகும் (ஒருவர் பணி செய்யும் பாதை). நாம் வேலை செய்ய வேண்டியுள்ளதால் ஒரு பக்கம் வேலை செய்யும் போது, நம்முடைய பிடிப்பு வேறெங்கேயோ, வேறெதையோ குறித்து உள்ளது. 

இவ்விடத்தில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா இவ்வாறு ஆரம்பிக்கிறார், ‘என்னிடம் முழு பாசம் உடையவன், என்னை முழுவதுமாக சார்ந்துள்ளவன், யோகப் பயிற்சியின் மூலம் (பரமாத்மாவே விவரித்துள்ளபடி) சதா என்னோடு தொடர்பு உண்டாக்கிக் கொள்வதில் முனைந்திருப்பவன் மேலும் சந்தேகமற்று இருப்பவன்; எவ்வாறு அத்தகைய ஒருவன் என்னையும், என் முழு வடிவத்தையும் முழுவதுமாக அறிய முடியும், அதை நான் உனக்கு விவரிக்கிறேன்.’ பல முறைகள் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனிடம் கூறினார்,‘என்னிடம் மட்டும் மனதை நிலை நிறுத்து,இங்குமங்கும் அல்ல’. இதை அவர் ஏன் பல முறைகள் கூறினார்? ஏனெனில் அர்ஜுனன் அவ்வளவு மனமுடைந்து, அவனுடைய சந்தேகத்தினாலேயே பீடிக்கப்பட்டிருந்தான்.

எவன் ஒருவனுடைய சந்தேகங்கள் மறைந்துள்ளனவோ அவன் மட்டுமே அறிவைப் பெற முடியும். வழக்கமாக நாம் அது நேர்மாறாக என்று நினைக்கிறோம். அறிவை பெறுபவன் அனைத்து சந்தேகங்களிலிருந்தும் நிவாரணமடைகிறான். இரு விஷயங்கள் இருக்கின்றன. முதலாவதாக, அறிவைப் பெறுபவன் அனைத்து சந்தேகங்களிலிருந்தும் விடுவிக்கப்படுகிறான், இது, பௌதீக உலகத்திற்குப் பொருந்தும், அது வரையறக்குட்பட்டது. மற்றொன்று, சந்தேகத்திலிருந்து விடுவிக்கப்பட்டவன்; எந்த ஒருவனுடைய பிராணன் (நுண்ணிய உயிர் சக்தி அல்லது சக்தி) மிகவும் உயர்ந்துள்ளதோ, அறிவை மிகவும் ஆழமான நிலையில் புரிந்து கொள்ளும் சக்தியுள்ளவனாக ஆகிறான். அவனே உண்மையில் அறிந்தவன்.

நம்முடைய சந்தேகங்கள் கேள்விகள், பதில்கள் மூலமாக தீர்க்கப்பட்டு விட முடியும் என்று நாம் அடிக்கடி நினைக்கிறோம். ஒரு கேள்வியை பதிலளிப்பதென்பது,மனதில் வேறு பத்து கேள்விகளுக்கு வழிவகுக்கும்.ஒரு ஜோடி கேள்வி பதில் பத்து புதிய கேள்விகளுக்கு இடமளிக்கிறது, பின்னர் இந்த கேள்விகள், பதில்கள் சங்கிலி முடிவில்லாமல் தொடர்கிறது ஆனால் சந்தேகம் விலகுவதில்லை. நாம் கேவிகள் கேட்பதன் காரணமே நமது சந்தேகங்களைத் தீர்க்கவே, ஆனால், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கூறுவது, அனைத்து சந்தேகங்களிலிருந்து விடுபட்டுள்ள ஒருவனே சத்தியத்தை அறியும் திறன் படைத்தவன் என்பதாகும். சந்தேகத்தின் பொருள், உன்னுடைய பிராணன்  முழுவதுமாக மலரவில்லை என்பதே, அது அதன் உன்னத நிலையை அடையவில்லை. பிராணன் உடலில் எங்கேயோ சிக்கியுள்ளது.

நீ முழுவதும் பிராணனாக இருக்கும் போது, அனைத்து சந்தேகங்களும் தானாகவே மறைகின்றன. ஆகவே தான் நீ மிகவும் சந்தோஷமாக இருக்கும் போது, உன் மனதில் சந்தேகங்கள் இல்லை. நீ ஆழ்ந்த அன்பில் இருக்கும் போது, உன்னுள் எந்த சந்தேகங்களும் எழுவதில்லை.சந்தேகம் என்றால் நீ ஒன்றை நம்புகிறாய், நீ அதில் நம்பிக்கையற்றும் இருக்கிறாய். நீ எதையாவது முழுவதும் நம்பவில்லையென்றால், அப்போது சந்தேகம் கிடையாது, நீ ஒன்றை முழுவதுமாக நம்பினால், அப்போதும் உனக்கு எந்த சந்தேகமும் இருக்காது.ஆகவே, நீ ஒன்றை நம்பியும், நம்பாமலும் இருக்கும் போது சந்தேகம் எழுகிறது, இந்த நிலையில், எவ்வாறு ஒருவன் அனைத்து சந்தேகங்களிலிருந்தும் விடுபட்டு, ஒன்றை முழுவதுமாக அறிந்து கொள்ள முடியும்? இதுதான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுவதெல்லாம்: ‘ஞானம் தேஹம் ஸ-விஞானம் இதம் வக்ஸ்யாமி ஆஸேஸாத். யஜ் ஞாத்வா நேஹ பூயோ ந்யாஜ் ஞாதவ்யம் அவஸிஸ்யதே.’ (7.2), அவர் ‘இது ஒரு ஆழ்ந்த ஞானம் ஆனால் அதற்கு ஒரு விஞ்ஞானமும் இருக்கிறது. இதைத்தான் நான் உனக்கு சொல்லப் போகிறேன்,தெரிவதற்கு இல்லை என்று தெரிந்தபின்பு.’

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா சொல்கிறார், ‘உனக்குத் தெரியாமல் நான் ஒன்றையும் வைத்துக் கொள்ளப் போவதில்லை. நான் உனக்கு முழு அறிவையும் வழங்குகிறேன்.’ அவர், அந்த அறிவின் ஒரு பகுதியை இன்றும், மிச்சமுள்ளதை நாளைக்கும் சொல்கிறேன் என்று சொல்லவில்லை. வழக்கமாக பாட்டு வாத்தியார்களும், புகழ் வாய்ந்த இசைப்பாடல் இயற்றுபவரும் இதைச் செய்கிறார்கள். அவர்கள் அறிவை, கருமித்தனமாக, கொஞ்சம் கொஞ்சமாகத் தருகிறார்கள். அவர்கள், ஒரு பாட்டின் இரண்டு வரிகளை கற்றுக் கொடுத்துவிட்டு, அதைப் பயிற்சி செய்துவிட்டு மறுநாள் வரும்படி சொல்வார்கள். பிறகு அவர்கள் வேறொரு இரண்டு வரிகளை கற்றுக் கொடுத்துவிட்டு, மறுபடியும் பயிற்சி செய்யுமாறு செய்வார்கள். அவர்கள், பல்லவி (கர்னாடக சங்கீதத்தில் பாட்டின் உட்கருத்தை கொண்ட முக்கியமான வரி) பகுதியை ஒரு நாள் கற்றுக்கொடுத்து, அனுபல்லவியை (முக்கியமான வரியின் குறுகிய பக்கம்) மறுநாள் கற்றுக் கொடுப்பார்கள். ஆக, அவர்கள், மாணவர்களுக்கு முழுவதையும் கற்றுக் கொடுப்பதில்லை. முழு அறிவையும் வழங்கு முன்னர் அவர்கள் மாணவர்களை சோதித்துக்கொண்டே இருக்கிறார்கள். இங்கு ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனை சோதிக்கவில்லை ஏனெனில் அவருக்கு, அர்ஜுனனைப் பற்றி அனைத்தும் தெரியும்; ஆகவே சோதனைக்கு அவசியமில்லை.

எது எப்படியிருந்தாலும், அர்ஜுனன் முன்னமே மனது ஒடிந்திருக்கிறான், அவனை மேலும் சோதிப்பதில் என்ன பயன். ஆகவே அவர் அவனிடம் சொல்கிறார், ‘கவலைப்படாதே. நான் உனக்கு அனைத்தையும் சொல்லி உனக்குத் தெரிந்து கொள்ள ஒன்றையும் விட்டு வைக்க மாட்டேன்.’ அவர் சொல்வது, இந்த அறிவு அவ்வளவு பரந்த ஒன்றாகையால், இது தெரிந்த பின்பு மேலும் தெரிய ஒன்றுமில்லை. ஒரு மாணவன் அவனுக்கு ஆழ்ந்த அறிவு அளிக்கப்படவுள்ளது என்று சொல்லப்பட்டதும், அவன் விழிப்புள்ளவனாகிறான். அதைக் கேட்பதனாலேயே, அவன் கவனிப்புடன் நிற்கிறான், எதிர்பார்ப்புடன் அவனுடைய சிகைக் கால்கள் குத்திட்டு நிற்கின்றன. பின்னர் அவன் முழு கவனத்துடன் உன்னிப்பாகக் கேட்கிறான். ஆகையால் தான், மேலே செல்வதற்கு முன்பு ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா இந்த வரியைச் சேர்க்கிறார். ஒன்றை நம்மிடம் சாதாரணமாக கூறும் போது, அநேக முறை, நாம் அதைக் கேட்பது கூட இல்லை. ஆனால் அவர்கள் உன்னிடம் இவ்வாறு கூறும் பட்சத்தில், ’இங்கே வா! உன்னிடம் சொல்ல ஒரு இரகசியம் இருக்கிறது’, நீ ‘சரி என்ன அது? சொல்லு’ என்கிறாய். அந்தக் கணம் நீ முழு கவனமுடையவனாகிறாய். இது உனக்கு நடக்கிறதா இல்லையா? அவர்கள் சொல்ல விரும்புவது மிக சாதாரணமான ஒன்றாக இருக்கலாம் ஆனால் அதற்கு முன்பு, ‘கேள்! நான் உனக்குச் சொல்ல விரும்பும் ஒரு இரகசியம் உள்ளது. அது மிகவும் அவசரமானது.’ என்று அவர்கள் சொன்னால், நீ விழிப்படைந்து, கவனமுள்ளவனாக ஆகிறாய், கேட்பதற்கு முழுவதுமாக தயாராகிறாய்.

அதே மாதிரி, இங்கு, குருவான (பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்),தன்னை கவனத்துடன் கேட்க சிஷ்யனான (அர்ஜுனனை) அவர் தயார் செய்து கொண்டிருக்கிறார். இல்லையெனில், குரு பேசிக் கொண்டே போக, சிஷயன் தூங்கி விடுகிறான். இதுதான் வழக்கமாக நடப்பது. பல முறைகள், நாம் ஆழ்ந்த அறிவைக் கேட்க ஒரு கூட்டத்திற்குச் செல்கிறோம்,ஆனால், ‘ஐயோ! அந்த அறிவு அவ்வளவு உயர்மட்டமுடைய ஒன்று, அதில் எதையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவை என் மூளைக்கப்பால் சென்றுவிட்டது.’ என்று கூறிக்கொண்டு திரும்புகிறோம். இது ஏன் நிகழ்கிறதென்று உனக்குத் தெரியுமா? அது நாம் கேட்பதே இல்லை என்பதனால். நம் மனது எப்போதுமே கவலைகள் நிறைந்ததாக இருக்கிறது; நம்முடையது, நம்மை சுற்றியிருப்பவர்களது. நம்மால் கவலைப்படாமல் வாழ முடிவதில்லை. பிரச்சினைகள் இல்லையென்றால், நாம் நமக்கென்று பிரச்சினைகளை உண்டாக்குகிறோம்.நாம் கவலையுடனிருக்க 1000 காரணங்களை கண்டுபிடிக்கிறோம்.

அடுத்த செய்யுளில், அவர்  ‘மனுஷ்யாணம் சஹஸ்ரேஷு கஸ்சித் யதாதி சித்தயே. யததம் அபி சித்தனம் கஸ்சின் மாம் வெட்டி தத்வதா.’ (7.3)

இலக்ஷோப இலக்ஷம் மக்களில், சிலரே ஆன்மீகப் பாதையில் நடந்து, சத்தியம் பற்றிய அறிவைப் பெற முயற்சி எடுக்கிறார்கள். சிலரே யோகப் பாதையைப் பின்பற்றுவார்கள்.

அந்த நாட்களில் கூட, ஆன்மீகத்தின் நிலை அப்படியே தான் இருந்தது. மகாபாரதம் அப்போது நடந்தது,அது இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. முன்பு போர்க்களமான குருக்ஷேத்திரத்தில் நடைபெற்றது, இன்று அது நமது பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது. எது எப்படியோ, டெல்லி, குருக்ஷேத்திரத்திலிருந்து வெறும் 100 கிலோ மீட்டர்கள் தள்ளி உள்ளது. இன்று உள்ள ஒரே வித்தியாசம், கீதை அங்கு ஓதப்படுவதில்லை. நீ கவனித்தால், இன்று ஒவ்வொரு வீட்டிலும் குருக்ஷேத்திரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது (நீதிநெறி நிலைமையைக் குறிப்பிட்டு)
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்வது, இலக்ஷக்கணக்கான மக்களில், சிலரே ஆன்மீகப் பாதையில் நடக்க முடியும், இன்னும் சிலரே என்னை அறிந்துகொள்ளவும், என்னுடைய உண்மையான உருவத்தில் (தத்துவத்தில்) என்னை முழுவதுமாக தெரிந்து கொள்ளவும் முடியும். மற்ற ஜனங்கள் வருகிறார்கள், சும்மா கேட்கிறார்கள், ஒன்றையும் புரிந்து கொள்ளாமல் சென்று விடுகிறார்கள். அரிதாக, வெகு சிலரே, உண்மையில் என்னை, என்னுடைய உண்மையான குணத்தில் (தத்வ ஞானம்: ஆழ்ந்த தத்துவத்தில் அல்லது மூலப்பொருளில்) தெரிந்துகொள்ள முடிகிறது. இது ஒரு இரகசியம். அவர் இங்கு பேசிக்கொண்டிருக்கும் தத்துவம் என்ன? அவர் இதை நான்காவது செய்யுளில் விவரிக்கிறார்: ‘பூமிர் அபோ நாலோ வாயு கம் மனோ புத்திர் ஏவ ச. அஹம்கார இதீயம் மே பின்ன ப்ரக்ரிதிர் அஷ்டதா.’ (7.4)

அவர் ,’நான் இந்த பௌதீக உடல் தான் என்று நீ நினைக்கிறாயா? இல்லை! நான் பூமி, நான் நீர், நான் நெருப்பு, நான் காற்று, நான் ஆகாயம். நான் மனம், புத்தி மற்றும் அகங்காரம். இவைகள் எட்டு விதமான சக்திகள், அதாவது நான், நான் இவைகளை என்னுடைய அபார-ப்ரக்ருதி (பௌதீக பிராந்தியத்தில், தெய்வீகத்தின் எட்டு விதமான குணங்கள் அல்லது வெளிப்பாடுகள்). நான் இந்த எட்டுமே. நான் இந்த பூமியின் ஒவ்வொரு துகளின், நீரின் மூலக்கூறு. நீர் எல்லா இடங்களிலும் உள்ளது – பூமியில், ஆகாயத்தில், காற்றில் மேலும் கடலில்; அது எங்குமிருக்கிறது. உனக்குத் தெரியுமா, உன் உடலில் 60% நீர் நறைந்தது என்று? ஆகவே, இங்கு, இன்று அமர்ந்திருக்கும் மக்கள் அனைவரும் பல லிட்டர்கள் நீரே (சிரிப்பு).

நீ 60 கிலோ இருந்தால், அப்போது உன்னுடைய உடலில் சுமார் 36 கிலோ நீரை தவிர வேறொன்றுமில்லை. ஒவ்வொரு நபரும் நீரால் நிரப்பப்பட்ட ஒரு மண்பாண்டம் போன்றவரே. அது போலவே, உன் உடலின் 15% காற்றாலானது. உன்னுடைய உடலும் பூமியின் அம்சத்தை கொண்டது. மேலும் இவைகள் அனைத்தும் நெருப்பு அம்சத்தால் ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ளன, அங்கிருந்து தான் உடல் வெப்பம் வருகிறது. ஆக, நெருப்பு அம்சத்தால் உடலில் வெப்பம் உள்ளது. பிறகு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ‘நான் மனம், புத்தி மற்றும் அகங்காரம்’ என்றும் சொல்கிறார். பல சந்தர்பங்களில் மக்கள் என்னிடம் வந்து சொல்கிறார்கள், ‘குருதேவ், நான் என் அகங்காரத்தை விட ஆசைப்படுகிறேன்.’

நீ எதை விட வேண்டுகிறாய்? அகங்காரமும் ஒரு வடிவான இறைவன், ஆகவே, அதை சும்மா இருக்க விடு. உன்னுடைய ஆழத்தில் அமர்ந்திருக்கும் அகங்காரமும் ஒரு வகையான தெய்வீகம். அவர், ‘இந்த எட்டு விதமான குணங்களும் உன்னுள் இருக்கின்றன, அவைகளெல்லாம் என்னுடைய வெவ்வேறு வடிவங்களைத் தவிர வெறொன்றுமில்லை, இதுதான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனுக்குச் சொல்வது. அடுத்த செய்யுளில் அவர் கூறுகிறார்: 

‘அபரேயம் இதாஸ் த்வ அன்யம் ப்ரக்ர்திம் வித்தி மே பரம். ஜீவ-பூதம் மஹா-பாஹோ யாயேதம் தார்யதே ஜகத்.’ (7.5) இந்த எட்டு விதமான அபார-ப்ரக்ருதி (அபார என்பது பொருட்சார்ந்த உலகத்திற்குத் தொடர்புடையது) என்று மொத்தமாக அழைக்கப்படும் குணத்தைத் தவிர, மேலும் உயர்ந்த பர-ப்ரக்ருதி என்று அழைக்கப்படும் பரக்ருதி என்ற மற்றொரு சக்தி உள்ளது. படைப்பில் அனைத்தும் இந்த பர-ப்ரக்ருதியால் நிலைநிறுத்தப்படுகிறது. நீ உலகில் பார்கக் கூடிய அனைத்து வடிவங்களையும் எடுத்துள்ள ஒன்று; உலகில் நடக்கும் அனைத்திற்கும் காரணமாக உள்ள ஒன்று, சூரியன் பிரகாசிப்பதற்கும், சந்திரன் சுழல்வதற்கும் காரணமாக உள்ளது பர-ப்ரக்ருதி. பௌதீகப் படைப்பில் நிகழும் அனைத்திற்கும் பிரதான காரணம் இது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் சொல்கிறார், ‘எது இல்லாமல் எந்த உயிரினமும் அல்லது மனிதப் பிறவியும், பூமியோ, பிரஞ்சமோ அல்லது முழு படைப்பும் இருக்க முடியாதோ, அந்த தத்துவமான பர-ப்ரக்ருதி நான், பார்க்க முடியாதது, இருந்தும், இருப்பவைகள் அனைத்திற்கும் ஆதாரமான பர-ப்ரக்ருதி நான். இதுவே நீ தெரிந்துகொள்ள வேண்டியது. படைப்பு முழுவதும், இன்று விஞ்ஞானிகள் அழைக்கும் கருப்புப் பொருள், கருப்பு சக்தி பர-ப்ரக்ருதியைச் சார்ந்துள்ளது.
அனைத்து பக்கங்களிலிருந்தும் வரும் மிதமிஞ்சிய அழுத்தத்தால் சூரியன் கோளத்தைப் போல உள்ளது என்று இன்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இந்த வெற்று ஆகாயத்தில் சூரியனைச் சுற்றியுள்ள சக்தியானது சூரியனை விட சக்தி வாய்ந்தது. அது, நீ ஒரு தண்ணீர் புட்டியில் எவ்வாறு ஒரு நீர்க்குமிழியைக் காண்கிறாயோ அது போன்றது. இந்த நீர்க்குமிழி, உருவத்தில் ஏன் வட்டமாக உள்ளது? அது, அனைத்து பக்கங்களிலுமுள்ள நீர் அழுத்தத்தைக் கொடுப்பதால். ஆகவே தான், எந்தப் பொருளும் வட்டமாகத் தெரிவதற்குக் காரணம்,(கண்ணில் புலப்படாத) ஆகாயத்தில் உள்ள, பொருளைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிக திறன் கொண்ட சக்தியின் அழுத்தத்தினாலேயே. நீ இங்கு பார்க்கும் எல்லா வெற்றிடமும், உண்மையில் காலியில்லை. அது கருப்பு சக்தி, கருப்புப் பொருள் என்று அழைக்கப்படும் சக்தி நிறைந்தது. ‘எது பார்க்கப்படவில்லையோ அது சத்தியம்’  என்று சொல்லப்படுகிறது. இது, நீ பார்க்கக் கூடியதெல்லாம் உண்மையாக இருப்பதன் ஒரு சிறிய பகுதியே. நீ ஆகாயத்தில் பார்க்கும் அனைத்து நக்ஷத்திரங்களும், கிரகங்களும், அவைகளைச் சுற்றியுள்ள, நஷத்திரங்களை விட அதிக திறன் வாய்ந்த புலப்படாத சக்தியை விட மிக சிறியவைகள். இது தான் இன்று விஞ்ஞானிகள் கூறியுள்ளது, இதுவேதான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் சொல்லப்பட்டது.

அவர் சொல்கிறார், ‘படைப்பு முழுவதையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், இந்த படைப்பு சார்ந்திருக்கும் பர-ப்ரக்ருதி நான். ஆக, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இன்று விஞ்ஞானிகள் குறிப்பிடும் அந்த கருப்பு சக்தி. கிருஷ்ணா என்ற சொல் கருப்பு நிறம் என்பதையும் குறிக்கும்.எது பார்க்க முடியாதோ, அது அனைத்திற்கும் ஆதாரம், நாம் பார்க்கக் கூடியது உண்மையில் ஒன்றுமில்லை (சிரிப்பு) நாம் பார்கக் கூடிய எதுவும் – மரங்கள், பூக்கள் – அவற்றின் ஒரு சிறு பகுதி, அது அபார-ப்ரக்ருதியின் படைப்பு. ஆனால், இந்த அபார-ப்ரக்ருதி, பார்க்க முடியாத ப்ர-ப்ரக்ருதியினுள் அடங்கியுள்ளது. ஆகவே ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா இவைகள் இரண்டையும் கூறுகிறார். உதாரணத்திற்கு, உன்னுள் உள்ள பிரஞ்ஞையை நீ பார்க்க முடியாது. ஆனால், மனம், புத்தி மற்றும் அகங்கார வடிவில் வெளிப்படும் உன்னுடைய பிரஞ்ஞையை நீ புரிந்துகொள்ள முடியும். இல்லையா?

தத்வ-ஞானம் என்பதைப் பற்றி பேசும் போது இதைத் தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். (படைப்பை அதனுடைய அடிப்படைக் கொள்கை அல்லது தத்துவம், அதாவது, தெய்வீகம் மூலமாக அறிந்துகொள்வது) பாரத நாட்டு ஆன்மீகத்தின் தனித்துவம் அது ஒரு போதும் விஞ்ஞானத்தை ஏற்றுக் கொள்ளாமலில்லை. உண்மையில், பாரத நாட்டு ஆன்மீகத்தில், விஞ்ஞானத்திற்கு எப்போதுமே சரிசமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே தான், ‘தத்துவ- ஞானம்’, முதலில், படைப்பை, பஞ்ச பூதங்களான – பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் தோற்றமாக அறிந்துகொள். இந்த அபார-ப்ரக்ருதி அறிவைப் புரிந்துகொண்டு, நீ பிறகு உயர் மட்ட அறிவான பர-ப்ரக்ருதியைப் புரிந்து கொள்ள முடியும். இதுவே தத்வ-ஞானம். இறைவன் கூட தத்துவமாக அல்லது அடைப்படைக் கொள்கையாக அடையாளம் கண்டு கொள்ளப்பட்டுள்ளார். ஆகவே தான், பாரத ஆன்மீகமானது, ஆன்மீக அறிவு மற்றும் விஞ்ஞான தத்துவங்களின் சேர்க்கை.