முழு நிறைவற்றவர்களிடமும், முழு நிறைவு காணுதல்


13, மே 2013 - பெங்களூரு

இன்று நாம் குமுதவதி ஆற்றுத் திட்டத்தைத் துவங்கினோம்."இந்திய மேம்பாட்டிற்குத் தொண்டர்கள்மிக்க நன்றாக இப்பணியை செய்துள்ளார்கள். பெங்களூருக்குத் தேவையான தண்ணீர் தரும் வறண்டு விட்ட இந்நதி புத்துயிர் பெற செய்திருக்கின்றார்கள்.இதனால்,பெங்களூருவில் 60% தண்ணீர் பற்றாக்குறை தீரும். அது தவிர 300 கிராமங்கள் பயன் பெரும்.

ஏற்கனவே 20 ஏரிகள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன.அதற்கான எல்லா வேலைகளும் தொண்டர்களால் முடிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த மூன்று மாதங்களாக, வாரத்திற்கு ஏழு அல்லது எட்டு மணி நேரம் தங்கள் முழு கவனம் மற்றும் அற்பணிப்பை அளித்துக் கடுமையாக உழைத்த தொண்டர்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். இதுதான் தேவை. மாற்றத்தை ஏற்படுத்த பேரார்வம்.வாழ்வின் எல்லா நிலைகளிலும்,மிகத் தேவையான மாற்றங்களை உருவாக்க பேரார்வம் நமக்கு அவசியம்.

இன்று ஸ்ரீஸ்ரீ கரிம வேளாண்மை துவக்கப் பெற்றது. ரசாயனக் கலப்பற்ற (கரிம) வேளாண்மை செய்யும் விவசாயிகள் தங்கள் பொருட்களுக்குத் தகுந்த விலை கிடைக்கவில்லை என்று இனி கவலைப்பட வேண்டாம். அவர்கள் நமது வேளாண்மைத் துறையை அணுகினால் போதும், நாம் உதவி செய்வோம். கரிம வேளாண்மை செய்யும் முறை பற்றிக் கற்பித்து, அவர்களது பொருட்கள் பொது மக்களைச் சென்றடைய தேவையான வாய்ப்புகளையும் உருவாக்கி கொடுப்போம். இதுவும் மிக முக்கியமானது.

அடுத்து, மின் வசதியற்ற வீடுகளில் நமது ஸ்ரீஸ்ரீ கிராம மேம்பாட்டுப் பணிகுழு செய்து வரும் '' வீட்டுக்கு விளக்கொளி "திட்டம்.கடந்த இரண்டு மாதங்களில் 4000 வீடுகளில் விளக்கொளி வசதி செய்யப்பட்டிருக்கின்றது. இது ஒரு பெரிய சாதனை. மின் வசதியற்ற 4000 வீடுகளில் சூரிய ஒளி விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. பசுமை சக்தி. பெரும்பாலான இவ்வீடுகள் சாலை வசதியற்ற இடங்களில் உள்ளன. அந்த மக்கள் விளக்கொளி அடைந்திருக்கிறார்கள். இது மிக நல்லது.

இன்று காலை நான் விழித்தெழுந்தபோது, என் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. ஞானம் அடைந்தவர்களிடமும், நல்ல மனிதர்களிடமும் இறைவனைக் காண்பது ஒன்றும் கடினமில்லைஆனால் முட்டாள்கள், புத்தியில்லாதவர்கள், தீயவர்கள் போன்றவர்களிடத்திலும் இறைவனைக் காண்பது ஒரு சவால் ஆகும். அவர்களிடம் இறைவனை காண்பது மிகவும் கடினம். இது போன்ற மனிதர்கள் தான் நம் மனதை மிகவும் பாதிக்கின்றனர்நீங்கள் தியானம் செய்ய அமரும்போது உங்களை சங்கடப்படுத்துவது எதுதீயவர்களும்,முட்டாள்களும் தான். அவர்களும் இறைவனை வெளிப்படுத்துகின்றவர்களே என்பதை மட்டும் உணருங்கள் போதும்அப்போது உங்கள் மனம் உள்ளுணர்வின் மற்றொரு நிலைக்கு மாறிவிடும்இறைவனின் ஒருமை தன்மை, எல்லோரிடத்திலும்எல்லாவற்றிலும் இறைவன் இரண்டறக் கலந்திருக்கும் உணரும் நிலைக்கு நீங்கள் மாறி விடுவீர்கள். இது நாம் தியானத்தில் இன்னும் ஆழ்ந்த நிலைக்குச் செல்ல உதவும்.  

நாம் என்ன செய்கின்றோம்? நாம்  செயல்பட வேண்டிய இடத்தில் "இதுவும் சரியில்லை என்றால், எப்படியும் எல்லாம் இறைவன் சித்தம்' என்று நினைக்கின்றோம். இவ்வாறு நினைக்கும் போது நாம் நம்முடைய அதீத ஆர்வம் மற்றும் உற்சாகத்தை இழந்து விடுகின்றோம்.இது தவறான அணுகு முறையாகும். தியானத்தில் நீங்கள் உள்நோக்கி செல்ல விரும்பினால் அப்போது தான் 'எல்லாம் சரியாகவே நடக்கின்றது' என்ற இந்த மனப்பாங்கை வைத்துக்கொள்ளலாம். ஆனால் நாம் செயல்பட வேண்டிய நேரத்தில், நாம் நம்முடைய அறிவாற்றலை, நம்முடைய ஞானத்தை பயன்படுத்த வேண்டும். எது சரி, எது தவறு, கவனிக்கப்பட வேண்டியது. இன்னும் சிறப்பாகச் செய்வது எப்படி என்றெல்லாம் சிந்திக்க வேண்டும்

இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டினை நாம் அறிந்து கொள்ள முடிந்தால், நாம் விழிப்புணர்வின் முற்றிலும் வேறுபட்ட ஒரு நிலைக்கு உயர்ந்து செல்வோம். அந்த நிலையில் நம் ஆன்ம பலம் தங்குதடையின்றி நம் வாழ்வில் பெருகும்