உண்மையான வழிபாடு என்பது ஞானத்தில் திளைத்திருப்பதே....

12 - மே – 2013 - பெங்களுரு, இந்தியா.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம தெய்வங்கள், 12 மே அன்று பெங்களூர் வாழும் கலை சர்வதேச வளாகம், ஆஷ்ரமத்தில் கட்டப்பட்ட குருபாதுகா வனத்திற்கு எழுந்தருளினர்.


அலங்கரிக்கப்பட்ட முட்டை வடிவ அடுக்கு இருக்கை அரங்கத்தில் நடுவே, தேக்கப்பட்ட நீர் நிலை இருக்க, அழகாக அலங்கரிக்கப்பட்ட தெய்வங்கள் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அதுவும் ஆயிரம் தெய்வங்களுக்கும் ஒரு சேர ஆரத்தி அளிக்கப்பட்ட போது புலன்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட காட்சியாக இருந்தது. சூழ்நிலை முழுவதுமே ஒரே பண்டிகை மற்றும் கொண்டாட்ட சூழலாக மேளத்தோடும், சங்கு மற்றும், மணிகளின் ஓசையூடும் கோலாகலமாக இருந்தது. 

அந்த நிகழ்வின் முக்கியத்துவம் பற்றிய குருதேவரின் விளக்கமே, இந்த தமிழாக்கம் இரண்டு விதமான சக்திகள் இந்த உலகை ஆள்கின்றன. ஒன்று தெய்வ சக்தி (தேவர்களின் சக்தி) மற்றொன்று அசுரர்களின் சக்தி (அசுர சக்தி) நல்ல சக்திக்கும், எதிர்மறை சக்திக்கும் நடுவே   எப்போதும் மோதல் இருந்து கொண்டு தான் இருக்கும். நல்ல சக்தி ஜெயிக்கும் போது திருப்தியும், வசதியும், மன நிறைவும், வெற்றியும், சந்தோஷமும் உலகில் நிலவுகிறது. எதிர்மறை சக்திகள் ஜெயிக்கும் போது பிரச்சனைகளும்,வன்முறையும் நிலவுகிறது.இறுதியாக நல்ல சக்தியே வெல்லும், ஆனால் எதிர்மறை சக்தி அவ்வப்போது தலை எடுக்கும்.

இன்று பல கிராம தேவதைகள் (உள்ளூர் தெய்வங்கள்),1008 கிராமங்களில் இருந்து வந்துள்ளனர். சில கிராம தலைவர்கள்,அவர்கள் கிராம தேவதைகள் கிட்டத்தட்ட 60 முதல் 65 வருடங்களாக, கிராமங்களை விட்டு வெளியே வந்ததேயில்லை என்றனர். தான் முதல் முறையாக கிராமத்தை விட்டு வெளியே இங்கு வந்துள்ளனர். பல கிராமங்களில் இருந்தும் மக்கள் அவர்களின் மரியாதைக்குரிய கிராம தேவதைகளை கொண்டு வந்துள்ளனர். 

நம் முன்னோர்கள் ஒவ்வொரு கிராமங்களிலும், ஒரு கிராம தேவதைகளை வைத்துள்ளனர். எப்போது நாம் ஒரு சிலையை, தெய்வம் என்கிறோம்? பல மந்திரங்கள் ஜபித்து தெய்வீக சக்தியை அந்த சிலையில் எழுந்தருள செய்யும் போது, அது சித்தி (பெற்று தெய்வமாக தொழப்படுகிறது.ஒரு பகுதியை அல்லது ஊரை காக்கும் தேவதைகள் (தெய்வ சக்தி) உள்ளன. அவை க்ஷேத்ரபாலா என்று அழைக்கப்படுகின்றன. எல்லா மக்களும் தேவதைகள் மீது மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் வைத்து அவர்களின் நலவாழ்வுக்கு வழிபடுகின்றனர்.

சமஸ்க்ரிதத்தில், நிலிம்ப பரிஷத்' (அதன் அர்த்தம் கடவுளின் குழு) என்ற ஒரு வார்த்தை உள்ளது. பாராளுமன்றம் மற்றும் மாநில கூட்டங்கள் இருப்பது போல் இங்கேயும் தெய்வங்கள் அவர்களின் குழுவில் உள்ளனர்.இந்த தெய்வீகக் குழுவும் இங்கு இன்றைய கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள கூடியுள்ளனர். தேவதைகள் பல இடங்களில் இருந்தும் நாம் கொண்டு வந்து இருக்கிறோம்.

பெரியோர்கள், 'ஸ்தானபிரதானம் ந து பாலா பிரதானம்' என்று கூறியுள்ளனர். கடவுள் கோவில்களில் இருக்கும் தூண்களிலும் உள்ளார், ஆனால் நாம் தெய்வத்தை புனிதமான   வழிபாட்டு தலத்தில் தான் வழிபடுகிறோம்.வலிமை இருந்தால் மட்டும் போதாது, நல்ல நிலை தேவைப்படுகிறது. அதனால் தான் நாம் தேவதைகளுக்கு ஒரு பதவி தருகிறோம். கிராம தெய்வங்கள் திருப்தி அடைந்தால்தான், பல விஷயங்கள் நல்லபடியாக நடக்கும். கிராம தெய்வங்கள் திருப்தியாக இருக்க வேண்டும் என்றால், மக்களிடையே ஒற்றுமை இருக்க வேண்டும். அனைவரும் நன்றாக இருந்து செழிப்பு பெருக வேண்டும். வெறுப்பும், சோகமும மக்கள் மனதில் இருந்தால், கிராம தேவதைகள் வழியை உணர்வர். கிராம தேவதைகளை மகிழ்விக்க ஒரு சந்தோஷமான கொண்டாட்டம் ஏற்பாடு செய்ய வேண்டும். 

கிராமங்களில் உள்ள அனைவரும், கடந்தகாலத்தை மறந்து தங்களுக்கு கிடைத்தவற்றையெல்லாம் எண்ணி கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும். நாம் இந்த நாளை ஜாதி, மதம், இனவேறுபாடு இல்லாமல், நம்மை ஆள்வது, பாதுகாப்பது ஒரே தெய்வீகசக்தி தான் என்று கொண்டாடுகிறோம். இதுதான் ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள கிராம தேவதைகளின் முக்கியத்துவம். ஒரு மனிதன் தெய்வத்திடம் தன்னை சரணடையும் போது, தன் கடமைகளை கர்வம் இல்லாமல், தான் செய்கிறோம், என்ற எண்ணம் இல்லாமல் ஒரு வேலைக்காரனின் விசுவாசத்துடனும், நன்றியுடனும் செய்கிறான். சமுதாயத்தில் இருவகை மக்கள் உள்ளனர்: ஒரு வகையினர், 'நான் ஒன்றுமில்லை, கடவுளின் சேவகன் தான்' என்ற எண்ணத்தோடு இருப்பவர்கள். மற்றவர்கள் தான் எல்லாம் என்று நினைப்பவர்கள். ஒரு கிராமத்தில் அல்லது நகரத்தில் பிரச்சனை என்றால் அது அஹங்காரத்தால் தான்.

அஹங்காரம் எந்த ஒரு நல்ல செயலையும் அழித்துவிடும். எனவே அஹங்காரத்தை குறைக்க நம்பிக்கை அனைத்தையும் தெய்வத்தின் மீது வைப்பது அவசியமாகிறது. இங்கே அஹங்காரம் என்று நான் கூறுவது கர்வம் அல்லது துர் அஹங்காரம் ஆகும். எனவே கிராம தேவதைகள் மக்கள் மத்தியில் உள்ள அஹங்காரத்தையும், அசுர எண்ணத்தையும் அகற்றவே நிறுவப்பட்டு உள்ளனர். மக்கள் தேவதைகளை முழு நம்பிக்கையோடு வழிபடும் போது, அவர்கள் உண்மையே பேசி, நல்ல நெறியை கடை பிடித்து வாழ்கிறார்கள். உங்களுக்கு தெரியுமா, முன் காலத்தில் எல்லாம் சட்டங்களும், சட்ட மன்றங்களும் இருந்ததில்லை,மக்கள் கிராம தேவதைகளுக்கு மத்தியில் தான் கொண்டு வருவர். அவர்களின் வழக்குகளை கிராம தேவதைகளுக்கு முன் தீர்த்துக்கொள்வர். 

கிராம தேவதைகள் ஒரு நீதிபதி போல் தகராறுகளையும், குற்றங்களையும் தீர்த்து மக்கள் அனைவரும் சட்ட நெறிகளை கடைபிடித்து வாழ வழி வகுத்தனர். எந்த பிரச்சனையும் கிராம தேவதைகளின் முன் தீர்க்கப்படும். இன்றும் எந்த அலுவலகத்திலும் ஒருவர் உறுதிமொழி எடுக்கும் போதும் கடவுள் பெயரை சொல்லி தான் எடுக்கிறார்கள். ஒருவர் அமைச்சர் ஆகும் முன் கடவுள் பெயரை சொல்லித்தான் உறுதிமொழி எடுக்கிறார். கடவுளை எல்லா இடத்திலும் இருப்பதை நினைவு கூறவே இப்படிச் செய்கிறார்கள் எனவே கடவுளை உணரவைக்கவே கிராம தேவதைகள் நிறுவப்பட்டன. அதனால் கடவுள் ஒரு சிலையில் மட்டுமே உள்ளார் என்று அர்த்தமல்ல. கடவுள் மக்களின் ஒவ்வொரு செயலிலும், எல்லா இடத்திலும் இருப்பதை உணர வைக்கவே. எல்லா தேவதைகளும் ஒன்றாக இருக்கும் போது அது யாகம். இன்று ஒரு பெரிய யாகம் நடந்துள்ளது. எல்லா தேவதைகளும் எங்கு வந்து உங்களை ஆசீர்வதித்து உள்ளனர். 

தெய்வ சக்தி எல்லா அணுக்களிலும் உள்ளது.அந்த சக்திகளை தியானம், சத்சங்கம் மற்றும் பூஜை மூலம் வளர்ப்பதே யாகம் ஆகும். நாம் ஞானம் (அறிவு), தியானம், யாகம் மற்றும் ஜபம், கீர்த்தனம் (கடவுளின் மீதான பாடல்கள்) செய்தோம். இந்த கலாசாரம் இந்தியாவில் மட்டுமே உள்ளது. நாம் இதை போற்றி வளர்க்க வேண்டும். அதை அழிய விடக்கூடாது. இந்த கிராம தேவதைகளின் கொண்டாட்டம் எல்லா கிராமங்களிலும் கட்டாயம் நடக்க நாம் உறுதியாக வழி செய்ய வேண்டும். 

எப்போதும் கடவுளை நினைத்து, மற்றவர்களுக்கு பயனாக மகிழ்வோடு இருக்க வேண்டும்.  

'தைவதீனம் ஜகத் சர்வம்', இந்த உலகம் தெய்வத்தால் ஆளப்படுகிறது. 'மந்திரதீனம் து தைவதம்', தேவதைகள் மந்திரங்களால் ஆளப்படுகிறார்கள். யார் ஒருவர் மந்திரங்களில் சிறந்து விளங்குகிறார்களோ அவர்கள் தெய்வத்திற்கு சமமாக கருதப்படுகிறார்கள். அதனால் தான் மந்திரம் ஜபிப்பதும், தியானமும் முக்கியமாக கருதப்படுகின்றன. மந்திரங்களை ஜபிப்பதாலும், தெய்வத்தை வழிபடுவதாலும் ஒருவருக்கு வசதியும், செல்வமும் அமைகிறது. நம்மிடம் இருப்பதை மற்றவரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அதுவே தர்மத்தின் சாராம்சம் ஆகும் அதாவது தெய்வ சக்தியை வழிபட்டு, அசுர சக்தியிடமிருந்து இந்த சமூகம் விடுபட, வழிபட வேண்டும். மற்ற நாடுகளில்,' நாம் அசுர சக்தியையோடு சண்டையிடுவோம்' என்கின்றனர். இந்தியாவில் நாம் ,'அசுர சக்தியை அகற்ற நல்ல தெய்வ சக்தியை வளர்ப்போம் என்கிறோம்'. அதை எப்படி செய்வது? வழிபாடு, கொண்டாட்டம் மற்றும் யாகம் இவைகளால் தான். இன்றைய விழாவை கொண்டாடுவது ஒரு விஷயம். நீங்கள் இந்த அனைத்து தேவதைகளும் உங்கள் உள்ளேயும் இருக்கிறார்கள் என்று அறிய வேண்டும். 33 கோடி தேவதைகள் நம் உடலின் ஒவ்வொரு அணுக்களிலும் உள்ளனர். நாம் நம்முடனே மகிழ்வோடும், அமைதியோடும், மனம் நிறைவவோடும் இருக்கும் போது அதுவே நைவேத்யம் ஆகும்.

நம் மனம் ஞானத்தின் ஒளியோடு இருக்கும் போது,அதுவே தெய்வத்தை வழிபடுவதாகும். ல்லோருக்கும் மனதில் அன்பு கொள்ளும் போது, அதுவே புஷ்பாஞ்சலி (கடவுளுக்கு பூவை சமர்பிப்பது) ஆகும். தெய்வத்திற்கு புஷ்பாஞ்சலி என்பது மற்றவைகளுக்கு நம் மனதின் மீது மலரும் அன்பேயாகும். ஆரத்தி (கடவுளின் முன் விளக்கை சுற்றி வழிபடுவது) என்றால் என்ன? ஞானம் என்னும் ஒளி உங்கள் மனதில் உருவாகும் போது, 'நான் இந்த உடல் அல்ல, புனிதமான ஆன்மா.பிறக்கவும் இல்லை, இறக்கவும் இல்லை, எங்கும் உள்ளவன். மாற்றமில்லாதவன் என்ற விழிப்புணர்வு எழும். அதுவே உண்மையான ஆரத்தியாகும். இது போல், உங்களில் உள்ள 33 கோடி தேவதைகளையும், பூஜை செய்ய வேண்டும். இதுதான் உயர்ந்த ஞானம் என்பதை உணரவேண்டும்.