மனித வாழ்க்கை முறையின் ஐந்து உறைகள்.... (உலக கலாச்சார மன்றம்)

மே 18, 2013 - ஹாங்ஷௌ, சைனா





நாம் உயிர்ச்சூழலியலில் அக்கறை காட்டவேண்டும் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறோம் ஆனால் இக்கல்வி, கிராமப்புறங்கள் வரை, கிராம மக்கள் வரை, நகர்ப்புறங்கள் வரையிலும் கூடச் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது, நாம், மக்களுக்குக் கல்வி புகட்டி, விழிப்புணர்வைக் கொண்டுவர வேண்டும். இன்று, நமது சமுதாயத்தை பேராசை விழுங்கி வருகிறது. உயிர்ச்சூழியலை அழித்து, குடும்பங்களை அழித்து, நமது மனிதத்தன்மையை அழித்துக் கொண்டிருக்கிறது. பேராசையை கட்டுப்பாடில் வைக்க, சார்புமிக்க மனப்போக்கை நாம் உண்டாக்க வேண்டும்.
உங்களில் பலர் ஆன்மீகத்தின் முக்கியத்துவங்கள், அன்பு, மனிதத் தன்மை மற்றும் மனித நேயங்கள் ஆகியவைகளைப் பற்றி இந்த மாநாட்டில் பேசியிருப்பது எனக்கு மெத்த மகிழ்ச்சி. பத்து வருடங்கள் முன்பு, இருபது வருடங்கள் முன்பு இது தடைக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஒன்று. எந்த உயிர்ச்சூழியல் அல்லது விஞ்ஞான மாநாட்டிலும் அன்பு பற்றி பேசுவது கூட பொருத்தமற்ற ஒன்றாகக் கருத்தப்பட்டது. இன்று, சமுதாயத்தை சந்தோஷப்படுத்த வேண்டியது நமக்கு அவசியம் என்பதை நாம் அறிந்துள்ளோம். நமக்கு அதிகமான உள்நாட்டு விளைபொருள் மட்டும் போதாது, நமக்கு மிகுதியான உள்நாட்டு சந்தோஷமும் வேண்டும்.
சந்தோஷத்தை உண்டாக்க, நாம் அந்த விழ்ப்புணர்வை உண்டாக்க வேண்டும். பாரத்தின் புனித நன்நூலான பகவத் கீதையின் படி, இயற்கை எட்டு மடிப்புகள் உடையது அல்லது பிரபஞ்சம் பின்வரும் எட்டு பொருட்களால் ஆன ஒன்று: பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனது, புத்தி மற்றும் பிரக்ஞ. நாம் பூமியைப் பாதுகாக்க வேண்டும். சுரங்க வேலை என்ற பெயரால் நாம் இத்தனை கடினமான வெடிகளை வைக்க முடியாது. நாம் நமது பேராசைக்கு ஒரு தடை வைக்க வேண்டும், மனித இனநலக் கோட்பாடு மலரும்போதுதான் நுகர்வோர்களுக்கான பாதுகாப்பு சரிபார்க்கப்பட முடியும். நமக்கு சார்ந்திருக்கும் பாவஉணர்ச்சி இருக்கும்போது, இந்த கிரகத்திற்காக அக்கறை காட்டுவதென்பது மேலும் மேலும் முக்கியமானதாகிறது. பூமியே ஒரு அங்கஜீவி. அது உயிர் வாழ்கிறது ஏனெனில் அது அவ்வளவு உயிர்களுக்கு இடமளிக்கிறது. நாம் பூமியைப் போற்ற வேண்டும்.
உலகம் முழுவதும், பண்டைய கால மக்கள், பூமியை, நதிகளை, மலைகளை மேலும் காற்றை போற்றுவது வழக்கமாக இருந்தது. நாம் இந்த பண்டைய மதிப்பீடுகளைத் தக்க வைத்து, ஒவ்வொருவரின் மேம்பாடு மற்றும் வளத்திற்கான நவீன நோக்கையும் கொண்டிருக்க வேண்டும்.
அழுத்தமற்ற மனம் இன்னும் அதிக முக்கியமானது. ஒன்று நாம் உண்டாக்கும் சுற்றுச் சூழல் தூய்மைக் கேடுகள்; மற்றொன்று, உணர்ச்சி சார்ந்த தூய்மைக் கேடு. மன அழுத்தத்துடன் ஒருவர் இருந்தால், அவர் மன அழுத்த அலைகளை சுற்றிலும் பரப்புகிறார். முழு உலகும் அதிர்வுகளேயன்றி வேறொன்றுமில்லை, அனைத்தும் அலைகள்.  மக்கள் சந்தோஷமாக இருப்பதை உறுதி செய்ய, நாம் இவ்வுலகை அலைகளாகப் பார்க்கும் கோணத்தையே உபயோகிக்க வேண்டும்.
உலகில் தற்கொலை விகிதங்கள் ஏறிக்கொண்டு போகின்றன, ஏனெனில் நாம், அன்பு, சார்ந்திருக்கும் பண்பு மற்றும் பரிவு ஆகிய சொற்களுக்குப் போதிய கவனத்தைச் செலுத்துவதில்லை. மன அழுத்தத்திற்கு உட்படுவதற்கு ஒரு சுலபமான சுருக்க விதிமுறை உள்ளது: சும்மா உட்கார்ந்து, உங்களைப் பற்றி மட்டுமே நினைத்துக் கூறுங்கள், ‘என்னைப் பற்றிய விஷயம் என்ன? என்னைப் பற்றிய விஷயம் என்ன? என்னைப் பற்றிய விஷயம் என்ன?’ இது மன அழுத்தமடைய ஒரு நிச்சயமான வழி.
நாம் இக்கிரகத்தைப் பற்றி அக்கறை காட்டும்போது, நம்மைச் சுற்றியிருப்பவர்கள் பற்றி அக்கறை காட்டும்போது,  நாம் நம் கைகளை நீட்டி, தேவையிலுள்ளவர்களுக்காக தயாராகும்போது, அப்போது மன அழுத்தம் வாழ்விலிருந்து மறைந்துவிடுகிறது. அம்மாதிரிக் கல்வி அல்லது விழிப்புணர்வு இன்று ஒரு அவசரத் தேவையாகப் பார்க்கப்படுகிறது, ஏனெனில், உலக ஆரோக்கிய நிறுவனத்தின்படி, வரும் தசாப்தத்தில், மன அழுத்தம் மிகப் பெரிய கொலையாளியாகப் போகிறது.
புற்றுநோய் மற்றொரு உடல நலக் குறைபாடு. நாம் பூமியைக் காக்கும்போது, நமது நீர் வளத்தைக், சுறுப்புறத்திலுள்ள, வளிமண்டலத்திலுள்ள அதிர்வுகளைக் காக்கும் போது, வியாதிகளனைத்தும் கையாளப்பட முடியும். அனைத்து இடங்களிலுமுள்ள பல கோபுரங்களினால் மின்காந்தக் கதிர்வீச்சுக்கள் முன்பு இருந்ததைவிட அதிகமாக உள்ளது, பல நகர்புறங்களில் அது உடல் நலக் கேடை உண்டாக்குகிறது.
இந்தியாவில் பண்டைய கூற்று ஒன்று உள்ளது, ‘மரத்தை நீ வெட்டுமுன்பு, மரத்தின் அனுமதியை நீ பெற வேண்டும்’ இது ஏனெனில், மரம் ஒரு வாழும் ஜீவன். நீங்கள் மரத்திடம், “உன்னைப் போல ஐந்து நடப் போகிறேன். ஆகவே மரத்தை வெட்ட அனுமதி கொடு” என்று சொல்லி வாக்குறுதி தர வேண்டும். இந்த பழக்கம் நீண்ட காலமாக இருந்து வந்திருக்கிறது. அது சைனாவிலும் உண்டு என்று நான் நிச்சயம் நம்புகிறேன். (சைனாவும், இந்தியாவும் வேதாந்தத்திலிருந்து புத்த மதத்தின் லா ட்ஸு வழி வந்த இந்த பொதுப் பழக்கத்தை பகிர்ந்துகொள்கிறது)
ஆகவே, இப்பிரபஞ்சம் முழுவதும் ஒரு தனிப்பகுதி, நாம் பிரபஞ்சத்தின் பகுதி. மனித வாழ்விற்கு ஐந்து உறைகள் உள்ளன: சுற்றுப்புறம் நம்முடைய முதல் உடல், பௌதீக உடல் இரண்டாவது உடல், ப்ராணா அல்லது சக்தி மூன்றாவது உடல் (சீனாவின் சொல்லியலின்படி இது சி; ப்ராணா அல்லது சக்தி உயர்ந்திருக்கும்போது, அங்கு  அதிக ஆர்வம், படைப்பாற்றல் இருக்கிறது. சக்தி குறையும்போது, மன அழுத்தம், தற்கொலைப் போக்கு மற்றும் இயற்கையையும், தன்னையும் அழிக்கும் தன்மை எழுகின்றது) இந்த ப்ராண உடலை வளர்ப்பது அத்தியாவசியமானது. நான்காவது உறை முக்கியமான பாத்திரத்தை நடிக்கும் மனம், ஐந்தாவது, உயிர்ச்சூழியலை பாதுகாத்து, மனித குலத்தை வளர்க்கும் பிரக்ஞை.
தொகுப்புரையாகக் கூறவேண்டுமானால், மாசற்ற சுற்றுப்புறம், நோயற்ற உடல், குழப்பமற்ற மனம், தடையுணர்ச்சியற்ற புத்தி, பேரதிர்ச்சியற்ற நினைவு மற்றும் துயரமற்ற ஆத்மா அனைத்தும் ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமையாகும்.