பல ஜென்மங்களுக்கு பிறகு..... பகுதி ஒன்று

15 மே 2013 – பெங்களூரு - இந்தியா


பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார், ‘தேஷம் ஞானி நித்ய-யுக்த ஏக-பக்திர் விஷிஷ்யதே. ப்ரியோ ஹி ஞானினோ த்யார்த்தம் அஹம் ஸா ச மம ப்ரியா. உதார ஸர்வ ஏவைத ஞானி த்வத்மைவ மே மாதம்’. (7.17)

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார், நான்கு வகையான மக்கள் என்னிடம் பக்தியுடனிருக்கிறார்கள். பரிதாபத்திற்குரியவர்கள், உலகாயத தேவைகளின் பூர்த்தியை நாடுபவன்; துருவியறியும் தன்மையுடையவர்கள் மற்றும் ஞானியுமாவார்கள். இவர்களுள் அறிவுக் கூர்மையுடையவன் எனக்கு மிகவும் பிரியமானவன், ஏனெனில் அவனுக்கு என்னிடமுள்ள பக்தி ஒருமித்த ஒன்று. சிலர், உலகாயத ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக தெய்வத்திடம் வருபவர்களைப் போன்றவர்கள். அவர்கள் அந்த நேரம் மிகுந்த பக்தியைக் காண்பிக்கிறார்கள்.

பரீட்சை நேரத்தில், எல்லா மாணவர்களும் கோயிலுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள் (நல்ல முடிவுகளுக்காக வேண்டி). பரீட்சை முடிந்தவுடனேயே அவர்கள் கோயில் எங்கிருக்கிறது என்பதை மறந்து விடுகிறார்கள். அவர்கள் பார்க்கக் கூடியதெல்லாம் திரை அரங்குகளே! (சிரிப்பு). மனிதர்கள் சுயநலம் மிக்கவர்கள், ஒரு காரணத்திற்கு வருகிறார்கள். துருவியறியும் குணம் உடையவன கூட அவனுடைய விசாரணையை அறிவுள்ளதாக திருப்தி செய்யும் பொருட்டு இறைவன் பக்கம் திரும்புகிறான். துருவியறியும் குணம் படைத்தவன் தன்னலமும் மிக்கவன், ஆகையால் தான் தெய்வத்திடம் அவனுக்கு உள்ள பக்தி ஏதோ ஒரு விதத்தில் குறையுள்ளதாக இருக்கிறது. ஆனால் ஞானியின் விஷயம் இதுவல்ல.ஞானியானவன், திருப்தியுடையவன், திருப்தியுடனிருப்பவனது பக்தி சீராகவும், தனித் தன்மை உடையவதாகவும், ஒருமித்தாகவும் இருக்கிறது. அவனுக்கு பூர்த்தியாக வேண்டிய ஆசைகள் இருக்கின்றனவோ, இல்லையோ, பக்தி மாறுவதில்லை, ஒரே மாதிரியாக தான் இருக்கிறது. ஆனந்தமோ அல்லது துயரமோ, இறைவன்பால் அவனுக்குள்ள பக்தி ஒரே மாதிரி தான் இருக்கிறது. ஏதேனும் ஆதாயம் கிடைக்கிறதோ இல்லையோ, பக்தி பாதிக்கப்படாமல் உள்ளது. 

ஆகவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார், ‘அது போன்ற ஞானி எப்போதுமே என்னிடம் தொடர்பு கொண்டிருக்கிறான், நானும் அவனுடன் எப்போதும் தொடர்பு கொண்டிருக்கிறேன். என்னுடன் எப்போதும் தொடர்புள்ளவன் உண்மையிலேயே ஞானி, அது போன்ற ஞானியின் பக்தி எப்போதுமே சீராகவும், ஒருமித்ததாகவும் உள்ளது. எனக்குப் பிரியமானவன், மேலும் நான் அவனுக்கு மிகவும் பிரியமானவன். என்னைத் தவிர வேறெதிலும் ஆர்வம் கிடையாது. அவனுக்கு, நான் அனைத்தும். ஒருவனுக்கு, நான் அவ்வளவு பிரியமானவனாக இருக்கும் போது, அவர்களும் எனக்குப் பிரியமானவர்களாகிறார்கள்.

‘உதார சர்வ ஏவைத ஞானி த்வத்மைவ மே மடம். அஸ்திதா ஸ ஹி யுக்தாத்மா மாமேவனுத்தமம் கதிம்.’ (7-18)

அவர் சொல்கிறார், ‘இதன் பொருள் மற்றவர்கள் நல்லவர்கள் இல்லை என்பதல்ல. கிடையாது, அவர்கள் அனைவரும் நல்லவர்கள், அவர்கள் மானுடர்களுள் மிகச் சிறந்தவர்கள். ஒருவன் துயரம் காரணமாக என்னிடம் வருகிறானோ அல்லது உலகாயத ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவோ அல்லது துருவியறியும் பொருட்டோ, அவர்கள் அனைவரும் மிகச் சிறந்தவர்கள்,மிகவும் நற்குணம் படைத்தவர்கள். அவர்கள் பிரயோஜனமற்றவர்கள் என்று நினைக்காதீர்கள். வழக்கமாக, நாம் ஒருவரை மிகச் சிறந்தவர்கள் என்று கருதும் போது, மற்றவர்கள் பிரயோஜனமற்றவர்கள் என்று நாம் கருதுகிறோம். மெள்ள மெள்ள, இது நம்முடைய பழக்கமாக மாறிவிடுகிறது. ஒருவர் நல்லவராக இருக்கும் போது, மற்றவர்கள் மோசமாக இருக்க வேண்டும். ஆகவே தான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா உடனே இதை சேர்க்கிறார், ‘ இந்த நான்கு வகையான மக்களும் சிறந்தவர்கள். ஆகவே, அவர்களில் எவரையும் திறனாய்வு செய்யாதே. எவரையும், மற்றவரை விட குறைத்து எண்ணாதே. பக்தன் எவ்வாறு இருப்பினும் சரி, அவன் பரிதவிப்பினாலோ அல்லது உலகாயத சௌகரியங்களைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகவோ, நல்லறிவிற்காக துருவுவதற்காகவோ என்னிடம் பக்தி பூண்டவனாக இருந்தாலும், அனைத்தும் சிறந்ததே. ஆனால் எனக்கும், ஞானிக்குமிடையே வித்தியாசம் கிடையாது. அவனும் நானும் ஒன்றே. அது போன்ற ஞானி மிகப் பெரிய விடுதலையை பெறுகிறான், என்னுடன் இணையக்கூடியதளவிலான விடுதலையை.

இறைவன், குரு மற்றும் ஆத்மனுக்கிடையே எந்த வித்தியாசமும் கிடையாது. வாசுதேவனுக்கும் (ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் இன்னொரு பெயர்). ஞானிக்குமிடையே எந்த வித்தியாசமும் இல்லை. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா சொல்கிறார், ‘ ஒரு ஞானி, ஒரு, முகம் பார்க்கும் கண்ணாடியைப் போல. உன்னுடைய மனதின் பிரதிபலிப்பை ஒரு ஞானியிடம் தெளிவாக பார்க்க முடியும். உன்னுடைய உண்மையான ஆத்மா ஞானியிடம் பிரதிபலிக்கப்படுவதை நீ தெளிவாகப் பார்க்க முடியும். ஆகவே, ஞானியிடம் என்னைக் காண ஞாபகம் வைத்துக் கொண்டு, ஞானி நானே எனத் தெரிந்துகொள்.’

பஹூனாம் ஜன்மானம் அந்தே ஞானவான் மாம் ப்ரபாத்யதே. வாசுதேவ ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸுதுர்லபாஹா.’ (7.19)

பல ஜென்மங்களை கடந்த பின்பு ஒருவன் ஞானியாகிறான்.என்னை நம்பும் ஞானியின் ஆத்மாக்கள், பல ஜென்மங்களைக் கடந்த பின்பு என்னை அடைகின்றன (பிறப்பு-இறப்பு சுழலில் பல முறைகள் கடந்த பின்னர் என்பது பொருள்). அனைத்தும் என்னுடைய படைப்புக்களே, வேறொன்றுமில்லை என்று அறிந்து, நம்பும் அச்சிறந்த ஆத்மாக்கள், உண்மையில், மிகவும் அரிதே.’ ‘இந்த உண்மையை அறிய நான் இன்னும் எவ்வளவு பிறவிகள் எடுக்க வேண்டியிருக்கும் என்று வியப்படைகிறேன்.’ என்று உங்களில் பலர் நினைக்கக்கூடும்.

நான் சொல்வதாவது, இந்த அறிவு பற்றி கேட்க இங்கு வந்துள்ளதற்கே, நீ முன்னரே பல ஜென்மங்களைக் கடந்து விட்டிருக்கிறாய். நீ பல ஜென்மங்களைக் கடந்துள்ளாய், இங்கு சரியான நேரத்தில் இருக்கிறாய் என்பதை மட்டும் சும்மா தெரிந்து கொள். ‘இந்த அறிவைப் பெற இன்னும் எவ்வளவு கூடுதலான பிறவிகளை நான் எடுக்க வேண்டியிருக்கும் என்பதை யார் அறிவார்?’ என்று எதிர்மறையில் நினைக்காதே. இப்போதே, இது பற்றிய உன்னுடைய பார்வையை மாற்றிவிடு. நாம் எதைப் பற்றிய பார்வையையும் எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம். இறைவனை அறியக் கூட, நாம் செய்ய வேண்டியது இதுதான், நாம் பார்ப்பவைகளைக் காணும் பார்வையை மாற்ற வேண்டும்.வேறேதும் செய்ய வேண்டாம். முயற்சியால் இறைவனை அறிய முடியாது. ஆத்ம தத்துவம், முயற்சிகளால் அறியப்பட முடியாது. அதற்கு, நீ இளைப்பாறி, எவ்வாறு சூழ்நிலையைச் செல்லவிட வேண்டுமென அறிய வேண்டும். இப்போது உன்னுடைய மனம் பல அழகான விஷயங்களில் இலயித்திருப்பதால் எவ்வாறு செல்ல விடுவாய்? பல முறைகள், நீ உன்னுடைய கெட்ட பழக்கங்களை விட ஆசைப்படுகிறாய் ஆனால் உன்னால் முடிவதில்லை. கெட்டவைகளை உன்னால் விட முடியாத போது, அது உனக்கு வேதனையையும், துயரத்தையும் தருகிறது. அவ்வாறு இருக்கையில் எவ்வாறு உன்னைக் கவர்ந்திழுக்கும் நல்ல விஷயங்களைப் போக விடுவாய்? உனக்குத் துயரத்தை தருபவைகளையும், இன்பமளிப்பவைகளையும் உன்னால் விட முடியாத போது, உன்னுடைய மனம் நிலையற்றிருக்கும். இதனால் தான் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார்,

‘பலம் பலவாதம் ச அஹம் கமராக விவர்ஜிதம்’ (7.11)

‘நீ பலத்தை உணரும்போதெல்லாம், அது நானென்று தெரிந்து கொள். நான் பலவானின் பலம். எங்கெல்லாம் நீ பிரகாசத்தைக் காண்கிறாயோ அந்த பிரகாசம் நானென்று தெரிந்துகொள். அழகான ஒருவரை நீ கண்டால், அந்த அழகும் நானென்று தெரிந்துகொள். அறிவுத் திறனுள்ள ஒரு நபரை நீ பார்த்தால், அந்த அறிவுத் திறன் நான் என்று தெரிந்துகொள்.’ அழகு நீ கைவிட முடியாதது, அது நீ உடைமையாக்கிக் கொள்ளக் கூடியதுமல்ல. நீ அதை உடைமையாக்கிக் கொள்ள முயற்சித்தால் உன்னால் முடியாது. அது முடியாததொன்று. உண்மையில், நாம் அழகை உடைமையாக்கி கொள்ள முயற்சிக்கும் போது, அது பல பிரச்சினைகளுக்கு இடமளிக்கிறது. ஆகவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார், ‘பல ஜென்மங்களுக்குப் பிறகு, ஞானிகள் என்னிடம் வந்து, என்னுடைய புகலிடத்தை நாடுகிறார்கள்.

பல தரப்பட்ட ஞானிகள் உள்ளனர். தவிர, பல முறைகள், சில ஞானிகள், அவர்களது வீழ்ச்சிக்குக் காரணமாகும் அகம்பாவத்தை வளர்க்கிறார்கள். ‘நான் அனைவருள் மிகவும் அறிவுள்ளவன். எவரையும் விட நான் அதிகம் தெரிந்தவன்’ என்று அவர்கள் நினைக்கிறார்கள். அம்மாதிரி மக்கள் குறுகிய காலத்திற்கு ஞானிகள் போன்று தெரிகிறார்கள், விரைவில் அவர்கள் அறியாமையில் புதைந்துவிடுகிறார்கள். ‘நான் அவ்வளவு அறிவு மிக்கவன்’ என்ற எண்ணமே அகம்பாவத்திற்கு இடமளிக்கிறது. இது, துர்-அஹம்காரம். ஒருவன் தான் மிகவும் அறிவுள்ளவன் என்ற அகம்பாவம் உடையவனாக இருக்கும் போது, அதிலிருந்து வெளி வருவது மிகவும் கடினம். அது போன்ற மன நிலை, விஞ்ஞானிகளிடமும், அறிவு மிக்க விற்பன்னர்களிடமும் காணப்படுகிறது. அம்மாதிரி மக்கள் ஒரளவு அறிவைப் பெற்றதும், அவர்கள் எல்லாம் அறிந்தவர்கள் என்று நினைத்து, மற்ற எவர் சொல்வதையும் கேட்பதில்லை.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார், ‘ என்னுடைய பக்தனாகவும், என்னை முழுவதுமாக நம்பியும், இப்படைப்பில் என்னை அனைத்திலும் காணும் ஞானியானவன் ஒரு மஹாத்மா ’. இது, ஞானிக்கும், மஹாத்மாவிற்கும் இடையே உள்ள வித்தியாசம். மஹத் ததுவத்திற்கு (அகங்காரத்தை விடவும் நுண்ணியதென்று சொல்லப்படுகிறது) அப்பாற்பட்ட ஒருவன் ஒரு மஹாத்மா. எட்டு வித ப்ரக்ருதியைப் போல – பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி மற்றும் அகங்காரம் (பரமாத்மாவின் சக்திகளின் எட்டு பௌதீக படைப்புகளைக் குறிப்பிட்டு) – மஹத் தத்துவம் அகங்காரத்திற்கும் அப்பாற்பட்டது, மிகவும் நுண்ணியது. அஹங்காரத்தைக் கடந்து, மஹத் தத்துவத்தை அனுபவித்தவன், மஹாத்மா எனப்படுகிறான். இது, புத்திக்கும், அறிவிற்கும் இடையே உள்ள வித்தியாசம். அறிவு, புத்தியிலிருந்து பிறக்கிறது, ஆனால் அது அகங்காரத்துடன் கலக்கும் போது, அது அறியாமையாக மாறுகிறது. அம்மாதிரி மனிதன் சரிய ஆரம்பிக்கிறான். அறிவு பற்றிய அகங்காரமே மிகவும் சேதத்தை விளைவிப்பது, ஒரு அறிவுள்ளவனை வீழ்ச்சியடைய செய்வது). இப்போது, எவர் அகங்காரத்திற்கு அப்பால் செல்ல முடியும்? ஒரு பக்தன் மட்டுமே அப்பால் செல்ல முடியும். பக்தன் என்பதன் பொருள், பணிவோடு, சாதாரணமாக, இயற்கையாக இருப்பதாகும்.

ஒரு முட்டாளிடமிருந்தும் கற்கத் தயாராகவும், ஒரு குழந்தையிடமிருந்து அல்லது மாதர் அல்லது ஆடவர் இவர்களிடமிருந்து கற்கத் தயாரக இருப்பவனும், இறைவனை அனைத்திலும் காணும் காரணத்தால் எதன் மூலமாக வேண்டுமானாலும் அறிவைப் பெற தயாராக உள்ள ஒருவனும் பார்ப்பதற்கு அரிதானவன். அனைத்திலும் இறைவனைக் காணும் ஒரு மஹாத்மாவைப் பார்ப்பது கடினம். சாபமிடும் ஒருவனிடமும், புகழும் ஒருவனிடமும் வாஸுதேவனைக் (தெய்வத்தை) கண்டு, உள்உறையும் ஆத்மாவை (வெளித் தோற்றத்தினாலும், வெளிப்பாடுகளினாலும் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லப்படாமல்) அறிந்து கொள்ளும் திறன் படைத்தவனைக் காண்பது அரிது. இதன் பொருள் நீ குழந்தைகளின் கால்களில் விழுந்து, அவர்களை, ‘வாசு தேவா! வாசுதேவா!’ என்று அழைப்பது என்றல்ல. நீ அவர்களை பயமுறுத்தி விடுவாய். நீ சாதாரணமாக நடந்து கொள்ள வேண்டும் ஆனால் உன்னுடைய உள் மனதில், அனைத்தும் ஒரே தெய்வீகத்திடமிருந்து வந்துள்ளது என்ற ஆழ்ந்த உணருந்திறனைக் கொண்டிருக்க வேண்டும்.


ஒரு திரைப்படத்தின் வீர்னும், எதிரியும் ஒருவரே (அதாவது ஒரே ஜீவ தத்துவத்திலிருந்து வந்துள்ளவர்கள் என்று பொருள்) திரைப்படம் முழுவதும், ஒரே வெளிச்சமே, திரையில் அனைத்தையும் காட்டுகிறது. உன்னுடைய கவனம், படத்தின் இம்மாதிரியான பாத்திரங்களை ஒருங்கிணைத்துக் காட்டும் வெளிச்சத்தில் இருக்க வேண்டுமேயொழிய, படத்திலும், அதன் பாத்திரங்களிலும் இழக்கப்பட்டு விடக்கூடாது. அந்த தெய்வீக ஒளி வாஸுதேவன், எதிலிருந்து அனைத்தும் வந்துள்ளனவோ, எதன் மூலம் அனைத்தும் செயல்படுகின்றனவோ அந்த தூய உணர்வாகும். அனைத்தும் இந்த ஒரு உணர்வின் திருவிளையாடல், அதுவே நீயாகிறாய். 

ஒவ்வொருவரும் அவரவருக்கான பாத்திரத்தைப் பெற்றுள்ள நாடகத்தில் நீ பங்கேற்கிறாயோ அது போன்று உனக்குக் கொடுக்கப்பட்டுள்ள பாத்திரத்தில் நீ நடித்துவிடு.