மௌனத்தின் மூன்று நிலைகள்

புதன்கிழமை, 07/09/2014,

வடக்கு கரோலினா, அமெரிக்கா.


ஒன்றும் பேசாமல் இருப்பது முதல் வகை.இதை தான் மௌனம் என்று அழைக்கிறோம். பேசாமல், சைகைகள் செய்யாமல் மற்றும் ஒன்றும் செய்யாமல் இருப்பதை தான் மௌனம் என மக்கள் புரிந்து கொள்கிறார்கள். மேற்கொண்டு, ஒருபடி உயர்ந்த மௌன நிலை இரண்டாவது வகையாக உள்ளது. நம்மை சுற்றியுள்ள வெளி பொருட்களின் மேல் எந்த வித விருப்பம் இல்லாமல், ஆனால் உள் நோக்கி கவனம் செலுத்துதல். பார்ப்பது, பேசுவது,கேட்பது மற்றும் எதிலும் விருப்பமில்லாமல் இருப்பது.

நீங்கள் எதையாவது பார்க்கும் பொழுது என்ன நடக்கிறது? ஏதோ ஒன்றை உங்களுக்குள் எடுத்துக் கொள்கிறீர்கள். நீங்கள் கேட்கும் பொழுது எதையாவது உள்வாங்கி கொள்கிறீர்கள். நீங்கள் சுவைக்கும் பொழுதோ மற்றும் தொடு உணர்ச்சிகளாலோ ஏதோ ஒன்றை உங்களுக்குள் கிரகித்து கொள்கிறீர்கள். நம்மிடம் உள்ள ஐந்து இந்திரியங்கள் உள்வாங்க பழக்கபடுத்தப்பட்டுள்ளது. இதெல்லாம் ஒரு செயல்பாடுகள் தான். எதிலேயும் ஆர்வம் இல்லாமல் இருக்கும் செயலே மௌனம் .அதற்காக சாப்பிடக்கூடாது என்று அர்த்தம் இல்லை. சாப்பாடு ருசியாக இருக்கிறது அல்லது ருசி இல்லாமல் இருக்கிறது என உணராமல் சாப்பாட்டை சாப்பிடுவதால் மனதை ஈடுபடுத்தாமல் உணவை சாப்பிடலாம்.

ஐந்து இந்திரியங்களில் ஏதாவது ஒன்றில் கூட மனது இடுபாடு இல்லாமல் இருந்தால், உன்னுள் சிறிதளவு அமைதியாக இருப்பதை உணரலாம். இது இரண்டாவது வகையான மௌனம். மனதின் உள் முகமாக நோக்கி பயணிப்பது,முழு திருப்தி மற்றும் முழுவதும் ஒன்றாகிய நிலை தான் மூன்றாவது வகையான மௌனம் இதற்கு எதுவும் தேவை இல்லை. அதாவது முழு மன திருப்தி உடன் இருப்பது. வெளியில் சிதறி கிடக்கும் நமது அனைத்து சக்திகளும், எண்ணங்களும், மனமும் எப்பொழுதும் அது பூர்வீகத்துக்கு வருவது மூன்றாம் நிலை மௌனம். நமது மனம் சில சணங்கள் நிலையாக இருப்பதை ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் பொழுது உணரலாம். 

நீங்கள் செயலில் ஈடுபடும் பொழுது மனதை நிலையாக வைத்திருக்க முடியும். தூக்கமே போதுமானதாக இருக்கும் பொழுது, ஏன் தியானத்தை செய்ய வேண்டும்? ஏனென்றால்,தூக்கத்தில் மனது செயல்படவில்லை என்றாலும் உடலில் வேறு செயல்பாடுகள் அதிகமாகவே நடக்கின்றன. தூக்கத்திலும் உடல் புத்துணர்ச்சி அடைகிறது, வளர்கிறது மற்றும் செயல்கள் பல மடங்குகள் வளர்கின்றன. இது போன்ற நிறைய செயல்பாடுகள் நடக்கின்றன. இந்த சரீர செயல்பாடுகள் விழித்திருக்கும் நேரத்தை விட தூங்கும் நேரங்களில் அதிகமாக நடக்கின்றன.

தியானத்தில் இதுவே மாறி நடக்கிறது. உடம்பில் சரீர செயல்பாடுகள் குறைவாக இருக்கும், வளர் சிதை மாற்றம் (metabolism) உறங்கும் பொழுது அதிகமாகவும், தியானத்தில் குறைவாகவும் இருக்கும். ஆகையால் தியானத்தில் உடம்பும், மனமும் அமைதி அடைகிறது. பின் என்ன நிகழ்கிறது? புத்திசாலித்தனம் விழித்தெழுகிறது. இதுதான் தியானத்தின் பலன். நீ மிக பிரகாசமாகவும், தெளிவாகவும் உடம்பையும் மனத்தையும் ஒரே நேரத்தில் புத்துணர்ச்சி அடைய வைப்பதால், நீ மிக்க சக்தி உள்ளவனாக உணர்கிறாய். “உண்மையிலேயே நீ யார்” என்று அறிய உனக்கு நிறைய சக்தி தேவை. சக்தி மிகவும் இன்றி அமையாதது.

அணு உலையிலிருந்து நிறைய மின்சக்தி உற்பத்தி செய்ய, சிறிது மின்சக்தி அதை இயக்குவதற்க்கு தேவைபடுகிறது இல்லையா? அது போலவே, சக்தியை அதன் பூர்வீகத்திலிருந்து பெற உனக்கு சக்தி தேவைப்படுகிறது.உபநிஷத்தில் “நாயம் ஆத்மா பலஹீனன லாப்யா” என்று சம்ஸ்க்ருதத்தில் சொல்லபட்டிருக்கிறது. அதாவது பலவீன அடைந்தவனால் “தன்னை” அடைய முடியாது.மிகவும் உறுதியான உடம்பு இருக்க வேண்டும் என்பது அர்த்தம் அல்ல. பலவீனமான இந்திரியங்களின் சக்தி. எதனால் நீ பலவீனமானவாக ஆகிவிடுகிறாய்? எல்லா நேரங்களிலும் ஐந்து இந்திரியங்களால் ஈடுபட்டிருப்பதால். அதிக நேரம் தூங்கினால் பலவீனவனாகவும், சோர்வு அடைந்தவனாகவும் ஆகி விடுகிறாய் அல்லவா? நிறைய சாப்பிட்டால் கூட நீ சோர்வாக உணர்கிறாய் அல்லவா?

நாள் முழுவதும் உட்கார்ந்து கால் பந்தாட்டத்தை பார்த்தால் அன்றைய நாள் முடிவில் எவ்வாறு உணர்கிறாய். முற்றிலும் சக்தி இழந்தவனாய் உணர்கிறாய்.ஒவ்வொரு நாளும் மக்கள் திரைப்படம், தொலைகாட்சியில் தொடர்நாடகம் மற்றும் உணர்ச்சியை தூண்ட கூடிய விஷயங்களை மேலும் தொடர்ந்து பார்க்கும் பொழுது நீ மிகவும் சோர்வடைத்தவனாக காணப்படுகிறாய். திரைப்படத்திற்கு செல்லும் முன்பும், திரைப்படம் பார்த்து திரும்பி வரும் பொழுதும் அவர்களை புகைப்படம் எடுத்து பார்த்தீர்களானால் சோர்ந்து, சலித்து போனவர்களாக இருக்கிறார்கள்.

நீங்கள் ஆலோசனை கூட்டத்திற்கு சென்றீர்களானால்,காலையில் இருந்து மாலை வரையும் பிறகு உணவு அருந்தும் இடங்களிலும் பேசி கொண்டே இருப்பார்கள். அவர்களும் மிகவும் சலித்து போனவர்களாக காணப்படுவார்கள். கூட்டத்தில் ஒருவர் மட்டும் பேசி கொண்டே இருப்பார், அங்கு யாரும் கேட்பது கூட இல்லை. அவர் பேச்சில் அவரே திருப்தி அடைந்தவராக இருப்பார். இது போல் தான் நடக்கிறது. அவர் புத்தியில் தோன்றிய அனைத்தையும் சொல்ல,சந்தர்பத்திற்கு காத்திருந்தவர் போல் பேசுவார். ஆனால், பேசிய விஷயங்களை எடுத்து கொள்வதற்கு மிக சிலரே இருப்பர். கேட்பவர்களும் மிகவும் களைப்படைந்தவர்களாக இருப்பார்கள். பெரும்பாலான ஆலோசனை கூட்டங்களில் இதுபோல் தான் நிகழ்கிறது. அவர்களுக்கு சிறிது நேரமாவது இடைவேளை விட்டு அல்லது சங்கீதம் கேட்டு ஓய்வு எடுக்க விடவில்லை என்றால் அவர்கள் சோர்வடைந்து விடுகிறார்கள்.

விரிவுரையாளர் அல்லது அறிவாளிகளை பார்க்கும் பொழுது அவர்கள் சிரிப்பதையோ,ஆற்றல் உள்ளவர்களாகவோ பார்க்க முடிகிறதா? மிக அரிதாக காணலாம். அவர்கள் மிக களைப்பாகவும் சோர்வு அடைந்தவராகவும் காணப்படுவர்.அதிக அளவில் கேட்பதாலும் சோர்வடைந்து விடுவார்கள்.
பொதுவாக பேச்சாளர்கள் பேச தயார் படுத்திக்கொள்ள 10-15 நிமிடங்கள் எடுத்து கொள்வார்கள். ஒன்றரை மணி நேரத்திற்கு குறையாமல் பேசுவார்கள். நான் 10-15 நிமிடம் பேசுவேன். சில நேரங்களில் அதிகபட்சமாக அரைமணி நேரம்.மக்கள் அதற்கு மேல் கேட்க முடியாது, ஆகையால்அதிக நேரம் கேட்பதாலும் பார்ப்பதாலும் மற்றும் அதிகமாக சாப்பிடுவதாலும் களைப்படைந்து விடுகிறார்கள். சிலருடன் கூடவே இருந்து, கை பிடித்து கொண்டு இருந்தாலும் அதுவும் உன்னை களைப்படைய செய்து விடும்.

தங்களுக்கு தேவையான இடங்களை எடுத்து கொள்ளுதலும் அல்லது அவர்கள் இடத்தை மற்றவர்களுக்கு விட்டு கொடுப்பதாலும், மக்கள் ஒன்று கூடுகிறார்கள் அதன் பின் நகர்ந்து விடுகிறார்கள். நாம் நமக்கு உண்டான ஸ்தானத்தையும் மற்றவர்களின் ஸ்தானத்தையும் மதிக்க வேண்டும். நீங்கள் நடுநிலையோடு இருக்கும் பொழுது அதன் சாராம்சத்தை எடுத்து கொள்ளும் பொழுதும் ஒன்றும் பாதிப்பதில்லை.ஆனாலும் எதையும் அதிகமாக செய்யாமல் இருப்பது மற்றும் முன் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். அதிகமான சக்தியை தாக்கு பிடிக்க கூடிய தேவையான பலம் உங்களுக்கு கிடைக்கும் வரை இந்த முறைகள் அல்லது நிபந்தனைகள் மிகவும் தேவையாக இருக்கிறது.

மௌனம் உங்களை, உங்கள் சொந்த வீட்டிற்கு அழைத்து செல்கிறது மற்றும் “நீ யார்” என்று உணர்வதற்கு தேவையான சக்தியை உனக்கு அளிக்கிறது. ” நீ ”தான் பேரானந்தம், அழகு, மகிழ்ச்சி என்பதை உணர வைக்கிறது. நிலை தடுமாறுதல், கோபம், உற்சாகமற்ற நிலை, வெறுப்பு அல்லது குறுகிய மனப்பான்மை இந்த மாதிரியான எதிர்மறை உணர்வுகளுக்கு காரணம் “பிராண சக்தியின் குறைபாடு” மற்றும் சம நிலையிலிருந்து விலகி இருப்பதால் தான். எதிர்மறை தன்மையுடன் இருந்தால் அதற்கு பிராண சக்தியின் குறைபாடு தான் காரணம். இது ஒரு சாதாரண சூத்ரம். அவ்வளவு தான்.

சக்தி இருக்கும் பொழுது எதிர்மறை தன்மை,உற்சாகமற்ற தன்மை என்ற கேள்விக்கே இடமில்லை. ஓ! எல்லாமே கெட்டதாக இருக்கிறது,உலகமே நம்பிக்கை அற்றதாக இருக்கிறது என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் சக்தியுடன் இருக்கும் பொழுது அது புத்துணர்ச்சியை அளிக்கிறது, பிறகு உலகம் நம்பிக்கையற்று இருப்பதாக நினைத்தால் ,உலகத்தை உயர்த்துவதற்கு உனக்கு ஒரு சந்தர்ப்பத்தையும் கொடுக்கிறது. அந்த சக்தி உனது “ஆத்மாவையும்”, மற்ற ஒவ்வொருவருடைய ஆத்மாவையும் மேல் நோக்கி உயர்த்துகிறது. அது மணல் வீடு கட்டுவது போன்று.10  முறை மணல் வீடு கட்டினாலும், அது களைந்து விடுகிறது. அடுத்த நிமிடமே மீண்டும் மணல் வீடு கட்ட தயாராகி விடுகிறோம். ஏற்கனவே, எது நடந்திருந்தாலும், அதில் கவனம் செலுத்தாமல் இருந்தால், அது “ பிராண சக்தியை” குறிக்கிறது.