திருமணம் என்றால் தியாகம் என்று பொருள்…….

ஜூலை 15, 2014

மாண்ட்ரீல், கனடா

நீங்கள் மெய்யெழுத்துக்களை, உயிர் எழுத்துக்களை சேர்க்காமல் சொல்லவும்.'அ' இல்லாமல் உங்களால் 'க' வை சொல்ல முடியாது. 'அ' இல்லாமல் 'ச' வையும் சொல்லமுடியாது. மெய் யெழுத்துக்கள் எதையும் உயிர் எழுத்துக்களை சேர்க்காமல் உச்சரிக்க முடியாது. மெய் யெழுத்துக்களை, உயிர் எழுத்துக்கள் இன்றி உச்சரிக்க முயன்றால், மனம் நின்று விடும். முயற்சி செய்யவும். 'அ' இல்லாமல் உங்கள் மனதில் நீங்கள் 'க' வை உச்சரிக்க முயன்றால், உங்கள் மனம் நின்று போகும். மூச்சும் நின்று போகும்.ரகசியம் அங்கு தான் உள்ளது. வார்த்தைகள் தான் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. வார்த்தைகள், எழுத்துக்களால் ஆக்கப்பட்டவை, எழுத்துக்கள் அழிவில்லாதவை என்னும் பொருள் கொண்ட ‘அக்ஷரா’  என அழைக்கப்படும். அவை அழிவில்லாத உணர்வில் இருந்து வருகின்றன. அவை அழிவில்லாத விண்வெளியில் இருந்து வருகின்றன. அவை உங்களை அழிவற்ற நிலைக்கு கொண்டு செல்லும்.  'அ' இல்லாமல் 'ப' வை உச்சரிக்கவும். உங்களில் எவ்வளவு பேர் மனம் மற்றும் மூச்சு நின்று விடுவதை கவனிக்கிறீர்கள். இது சற்று புதிதானது.  



கேள்வி - பதில்கள்

கே: குருதேவ்! தயவு செய்து விவாகரத்து பற்றி பேசவும். அது எப்போது நல்ல விஷயமாகும்? அல்லது எப்போதுமே அதை தவிர்க்க வேண்டுமா?

ஸ்ரீ ஸ்ரீ: எனக்கு அது பற்றி எந்த அனுபவமும் கிடையாது. உங்களையே கேட்டுக் கொள்ளவும். நீங்கள் உங்கள் திருமண வாழ்க்கை நன்கு அமைய 100 சதவீதம் ஈடுபட்டீர்களா. நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையை மகிழ்விக்கவும் அவர்கள் சந்தோஷமாக இருக்கவும் தேர்வையான அனைத்தையும் செய்துவிட்டீர்களா? அது வேலை செய்யவில்லையா?

திருமணத்தின் பொருளே தியாகம் தான். உங்களுடைய விருப்பங்களை மற்றவருடைய நலனுக்காகவும் குடும்பத்தின் அனைத்து நலனுக்காகவும் தியாகம் செய்வது. திருமணம் ஒரு சமரசம். நீங்கள் உங்களுடைய விருப்பங்களை பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தால், திருமணம் சரிவராத ஒன்று. உங்கள் இருவருக்கும் என்ன தேவை என்று நீங்கள் பார்க்க வேண்டும். எப்படி நீங்கள் இருவரும் முன்னேற முடியும், குடும்பத்தில் மகிழ்ச்சியை கொண்டு வர முடியும் என்று பார்க்க வேண்டும். நீங்கள் அதில் உங்கள் கவனத்தை செலுத்தினால்  மட்டுமே திருமண வாழ்வு வெற்றி அடையும். அதனால், நீங்கள் 100% சதவீதத்தை செய்து பார்த்த பின்பும் சரி வரவில்லை என்றாலோ, நீங்கள் முற்றிலும் பொருந்தாதவர் என்று தெரிந்தாலோ, அதன் பின் நீங்கள் அந்த நரகத்தில் இருப்பதையும் இருவரும் துன்பப்படுவதையும் விட, நன்கு புரிந்து கொண்ட உணர்வுடன், உங்கள் வாழ்க்கைத் துணையிடம், "நாம் இருவரும் சேர்ந்து செல்ல இயலாது. அதனால் நீ உன்னுடைய வழியில் செல்லவும் நான் என்னுடைய வழியில் செல்லுகிறேன். நாம் இருவரும் நல்ல நண்பர்களாக மகிழ்ச்சியுடன் இருக்கலாம்" என்று கூறலாம். 

எனவே ஒருவர் இந்த புரிந்து கொண்ட உணர்வுடன் பிரியலாம். இரவும் பகலும் ஒரு உலையில் இருப்பதில் எந்த பயனும் இல்லை. ஆனால் இப்போது இங்கு ஒருவர் கூறியது போல திருமணமாகி 40 வருடங்களுக்கு பின் திடீரென்று அவர்கள் இருவருக்கும் எப்போதுமே பொருந்தாது என்று புரிந்து கொண்டோம் என்பது போல இருக்கக்கூடாது. அவருக்கு ஏற்கனவே 70 வயது ஆகி விட்டது. மற்றும் திருமணமாகி 40 வருடங்கள் ஆகி விட்டன. அவர்கள் இருவருக்கும் பொருத்தம் ஏற்படாது என்று இப்போது கூறுகிறார். கவலைவேண்டாம், இன்னும் ஒரு ஐந்து அல்லது பத்து வருடங்கள் தாங்கிக் கொள்ளவும். எப்படியும், திருமணங்கள்   சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்லுகிறார்கள், நீங்கள் அங்கே செல்லும்போது இவைகளை தீர்த்துக்கொள்ளலாம்.

நீங்கள் உங்கள் வாழ்வில் மோசமான காலங்களை கடந்து செல்லுகிறீர்கள்  என்றால், எல்லாமே இருள்யமானது எதுவுமே சரியில்லை என்று தோன்றும். அப்படி எதுவுமே சரியில்லை என்றால் எப்படி நீங்கள் 40 ஆண்டுகளை சகித்துக் கொண்டு இருந்திருக்க முடியும். ஏதாகிலும் சில சரியானவைகளே உங்கள் வாழ்க்கையை நகர்த்தி சென்றிருக்கக் கூடும்.     

கே: குருதேவ்! நானும் நீங்களும் ஒன்றே என்றால்? தயவு செய்து விளக்கவும்.

ஸ்ரீ ஸ்ரீ: நுட்பமானது இல்லையென்றால் ஒருவர் ஒற்றுமையைக் காணலாம். ஆனால் மொத்தத்தில் பார்க்கும் போது இந்த உடல் வேறு அந்த உடல் வேறு. இந்த உடலின் தேவைகள் வேறு. அந்த உடலின் தேவைகள் வேறு. உடல் அளவில் பார்க்கும் போது கூட நாம் ஒரே மாதிரி இல்லை. நீங்கள் நீளமான முடியுடன் இருக்கிறீர்கள். நான் சற்றே குறைந்த   நீளமுள்ள முடியுடன் இருக்கிறேன். உங்களுடைய போக்குகள் வேறு. என்னுடைய போக்குகள் வேறு. இம்மாதிரியாக உடல் அளவில் நாம் அனைவருமே தனிப்பட்டவர்கள். நாம் அனைவரும் ஒரே மாதிரியாக இல்லை. நாம் அனைவரும் ஒரே மாதிரி என்றால், நம் இருவருடைய கட்டை விரல் ரேகையும் ஒரு ஐ போனில் வேலை செய்ய வேண்டும், ஆனால் அவ்வாறு ஏற்படுவது இல்லை. என்னுடைய ஐ போனில் என்னுடைய கட்டை விரல் ரேகை மட்டுமே வேலை செய்யும். வேறு யாருடைய கட்டை விரல் ரேகையும் வேலை செய்யாது.

அதனால் உடல் அளவில் நாம் அனைவருமே வேறுபட்டவர்கள், ஒரே மாதிரி இருக்க முடியாது. ஒரே மாதிரியாக இருப்பது என்பது நடக்க முடியாதது. ஆனால் நீங்கள் மிகவும் ஆழ்ந்து நுட்பமாக உங்களையே அறியும் நிலைக்கு செல்லும்போது நாம் அனைவரும் ஒன்றே ஏனென்றால் இந்த பிரபஞ்சத்தில் ஒரே ஒரே பெரிய வாழ்க்கை சக்தி தான் உள்ளது. முழு பிரபஞ்சமும் ஒரு உயிர்.

அதைபற்றி சற்று சிந்திக்கவும். உங்கள் உடலில் லட்சக்கணக்கான உயிரணுக்கள் உள்ளன. அவை அனைத்தும் அவைகளுடைய வாழ்க்கை சுழற்சியை கொண்டுள்ளன. தினமும் உங்கள் உடலில் இருந்து இறந்த உயிரணுக்கள் வெளியேறுகின்றன, புதிய உயிரணுக்கள் பிறக்கின்றன. ஆனாலும் நீங்கள் ஒரே ஒரு ஆள் தான் இல்லையா? அது போலவே தான், இந்த முழு பிரபஞ்சமும் ஒரு உயிருள்ள உடல். அவைவரும் ஒரு உயிரணுவை போன்றவர்கள். தினமும் பலர் பிறக்கின்றனர். பலர் இறக்கின்றனர். எனவே இந்த முழு பிரபஞ்சமும் பெரு உயிருள்ள உடல் அல்லது பிராணியை போன்றதே. அந்த உயிர் பிராணி தான் பிரம்மன். பிரம்மன் என்பது உயிர் உள்ள வாழ்ந்து கொண்டிருக்கும் முழு பிரபஞ்சம். அதில் அவனோ அல்லது அவளோ அல்ல அல்லது அது இரண்டுமாகவும் இருக்கலாம். உயிர் சக்தியை போல, அது அவனா அல்லது அவளா? மின்சாரம் அவனா அவளா? அது இரண்டுமே, எதுவுமே இல்லை. 

ஒரு முளைக் கரு அல்லது கரு முட்டை, வெளிப்படுவதற்கு முன் அவனா அல்லது அவளா? அது ஒரு முளைக்கரு மட்டுமே. அதைப் போலவே இந்த முழு பிரபஞ்சமும் ஒரே உயிர் சக்தியே, மற்றும் அந்த அந்த ஞானத்தின் மூலம் நாம் அனைவரும் ஒன்றே எனத் தெரிந்து கொள்ளலாம்.

கே: சில வேளைகளில் மற்றவர்கள் என்னிடம் சிலவற்றை கேட்கிறார்கள். நான் தீர்மானமாக இல்லை என்று சொல்ல விழைகிறேன். ஒருவர் இல்லை என்பதை, ஏதாவது ஒரு வழியில்  மனமார்ந்து உண்டு என மாற்றி சொல்லமுடியுமா?

ஸ்ரீ ஸ்ரீ: இல்லை! நீங்கள் அவ்வாறு செய்யக் கூடாது. சில வேளைகளில் நீங்கள் இல்லை என்பதை சொல்ல வேண்டும். அதை மிகவும் கடினமான முறையில் கற்றுக்கொண்டேன். அவ்வாறு இல்லை என்று சொல்லுவதற்கு எனக்கு மிக நீண்ட காலம் ஆனது. சிலர் உங்களுடைய கருணையையும் இரக்கத்தையும் தவறாக பயன்படுத்திக் கொள்ளுவார்கள் ஆகையால் சில வேளைகளில் நீங்கள் இல்லை என்று சொல்ல வேண்டும். நீங்கள் எல்லா வேளைகளிலும் அவர்களுக்கு சரி அல்லது ஆமாம் என்று சொல்லிக்கொண்டிருந்தால், அவர்கள் வளர மாட்டார்கள். அவர்கள் படிப்பினை பெற மாட்டார்கள் உங்களை அனுகூலமாக ஆக்கிக் கொள்ளுவார்கள். அதனால் சில வேளைகளில் மிகவும் ஸ்திரமாக நின்று இல்லை என்று சொல்ல வேண்டும். அது அவசியமாகும். 

உதாரணத்திற்கு குழந்தைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் எபோதுமே மிட்டாய் சாப்பிடவே விரும்புவார்கள், நீங்கள் எப்போதுமே சரி என்றே சொல்லுவீர்களா? அப்படி என்றால் நீங்கள் ஒரு கெட்ட தாயாகி விடுவீர்கள். குழந்தை நாள் முழவதும் விளையாடிக் கொண்டு இருக்க வேண்டும் என விரும்பினால் நீங்கள் சரி என்று சொல்லுவீர்களா. எந்த குழந்தையும் பள்ளிக்கு செல்ல விரும்புவது இல்லை. அவர்கள் எப்போதுமே விளையாடிக் கொண்டிருக்கவே விரும்புவார்கள். நீங்கள் அதை அனுமதிப்பீர்களா? நீங்கள் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.  நீங்கள் உங்கள் வாழ்க்கையிலோ அல்லது மற்றொருவருடைய வாழ்க்கையிலோ ஒழுக்கத்தை கொண்டு வர வேண்டும் என்றால் நீங்கள் வேண்டாம் என்று சொல்ல வேண்டும். கண்டிப்பாக நாம் சொல்ல வேண்டும்.

இந்தியாவில் மும்பை மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் நிறைய பேர் பிச்சை எடுப்பதை காணலாம். ஆரம்ப நாட்களில் நான் அவர்களுக்கு இல்லை என்று சொன்னது கிடையாது. ஆனால் பிறகு  அது நல்லது அல்ல என்று நான் சிந்தித்து பார்த்தேன். நான் அவர்களை தவறான பாதையில் கால் வைக்க செய்கிறேன்.

சென்ற வாரம் நான் கலிபோர்னியாவில் வளைகுடா பகுதியில் இருந்தேன். என்னை பார்க்க அங்கு வந்த மக்கள் லாஸ் ஏன்ஜெல் பகுதியில் 50000 பேர் உறைவிடம் இல்லாமல் இருப்பதாகவும் அவர்களுக்கு வாரக் கடைசியில் உணவு அளிப்பதாகவும் கூறினார்கள். நான் அவர்களிடம் அவ்வாறு செய்யக்கூடாது என்று சொன்னேன்.வீடு இல்லாத அந்த மக்கள் வலிமை உடையவர்கள். அவர்கள் உடல் நலம் நன்றாக உள்ளது. நீங்கள் அவர்களை அவர்களுடைய சொந்தக்காலில் நிற்க செய்ய வேண்டும். அவர்களுக்கு வேலை கிடைக்க உதவ வேண்டும். சோம்பேறித்தனத்தில் இருந்தும் செயல் அற்ற தன்மையில் இருந்தும் அவர்களை வெளியே கொண்டு வந்து, சுய நம்பிக்கை உள்ளவர்களாக்க வேண்டும். அதை விடுத்து நீங்கள் அவர்களுக்கு உணவு அளிக்கிறீர்கள். ஒரு முறை செய்திருக்கிறீர்கள் பரவாயில்லை. நீங்கள் அவ்வாறு செய்வதை வழக்கமாக்கி கொள்ளக்கூடாது. அது கொடூரமாக தோன்றும், ஆனால் உண்மையில் அது அவர்களுக்கு நல்லது. நீங்கள் உணவை அளிப்பதன் மூலம் அவர்களை மற்றவர்களை சார்ந்து இருப்பவர்களாகவும் பலவீனமானவர்களாகவும் ஆக்குகின்றீர்கள்.

அவர்கள் குழந்தைகளாகவோ, வயதானவர்களாகவோ அல்லது நோயுற்றவர்களாகவோ இருப்பின் பரவாயில்லை. அவர்களுக்கு நீங்கள் உணவு அளிக்கலாம் கவனித்துக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் வேலையோ மற்றும் ஏதாவது செய்யவோ திறன் கொண்டவர்களாக இருப்பின், அவர்களை நாம் பிச்சைக்காரர்களாக ஆக்கக்கூடாது. அந்த சூழ்நிலைகளில் நீங்கள் இல்லை என்று சொல்ல வேண்டும். அதனால் தான் வேதங்களில் கூட இரக்கத்தன்மையுடன் மெய்யறிவும் இணைந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. நம்முடைய இரக்கத்தன்மை அவர்களுக்கு நன்மை அளிக்குமா இல்லையா என்று பார்க்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.  

அந்த நேரத்தில் நல்ல சொற்களின் மூலமாக அறிவுரைகள் கூறுவதும் அவர்களுக்கு ஒழுக்கத்தை கொண்டு வருவதுமே உங்களுடைய உண்மையான இரக்க குணமாகும், கருணை காண்பிப்பது மட்டும் அல்ல. சிலர் மற்றவர்களை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ளுகிறார்கள். அவர்கள் இங்கும் அங்குமாக பணத்தை பெற்றுக் கொள்ளுகிறார்கள் மற்றும் சிலர் மக்களை ஏமாற்றி வியாபாரமும் செய்கிறார்கள். அவர்கள் பல பேரை ஏமாற்றுகிறார்கள். நீங்கள் உண்மையிலேயே அவர்களுக்கு உதவ நினைத்தால் அந்த ஏமாற்று வேலைக்கு ஒரு பாகமாக இருக்கக் கூடாது.


ஆனால் யாராவது ஒருவர் உண்மையிலேயே உதவி தேவைப்படுபவராக இருந்தால், நீங்கள் அவருக்கு உதவ வேண்டும். ஆனால் மக்களுடைய சோம்பேறித் தனத்தையும் ஆசைகளையும் உபசரிக்க வேண்டாம். ஆகையால், இரக்க குணத்துடன் மெய்யறிவும் இணைந்து இருக்க வேண்டும்.