குறைபாடுகளை ஏற்றுக்கொள்ளுதல்

மே 16, 2015

பெங்களுரு, இந்தியா



குருதேவ்! என்னை சுற்றி இருக்கும் குறைபாடுகளை எவ்வாறு  ஏற்றுக்கொள்ளுவது?

குறைபாடுகளுக்கு சிறிது இடத்தை விட்டு வைக்கவும்.மூன்று நிலைகளில் உள்ளன.ஸ்தூலமாக, மனமாக மற்றும் உணர்ச்சியாக. உடல், எண்ணம் மற்றும் உணர்வுகள்ரீதியாக. உடலளவில் வெளிப்படும் குறைபாடுகளை  ஏற்றுக் கொள்ளவில்லை என்றால்,  நீங்கள் மனதளவிலும் உணர்ச்சிகளின் அளவிலும் மேலும் குறைபாடுகள் உடையவராகி விடுவீர்கள். வெளிப்புறத்தில் தென்படும் இந்த சிறிய குறைபாடுகளை ஏற்றுக் கொள்ளுவது, உங்களை அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க செய்வதோடு,  உள்ளுக்குள் நீங்கள் பூரணமாக இருப்பதை உறுதி செய்கின்றது.

எனக்கு சில செயல்களை செய்வதில் ஆர்வம் உள்ளது.அதே சமயம் மற்றவர்களை பற்றிய உணர்வும் உள்ளது. நான் எதை பின்பற்றுவது? என்னுடைய ஆர்வத்தையா அல்லது மற்றவர்கள் குறித்த உணர்ச்சிகளையா?

உணர்ச்சி என்பது உங்கள் வாழ்வில் ஒரு மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கின்றது. ஆனால் அதை நீங்கள் சரியான இடத்தில் வைத்திருக்க வேண்டும். உங்களுடைய உணர்ச்சிகளும் பேரார்வங்களும்  உங்களுடைய புத்தி மற்றும் ஞானத்தினால் வடிகட்டப்பட்டால் அதன்பின் உங்களுக்கு அற்புதங்கள் ஏற்படும்.

குண்டலினி சக்தி என்பது என்ன? அதை எவ்வாறு உபயோகிப்பது?

நம்முடைய வாழ்க்கையே குண்டலினி சக்தி தான். குண்டம் என்றால் நம்முடைய உடல் அல்லது ஒரு குடம் ஆகும். அதற்குள்ளே இருக்கும் சக்தியே குண்டலினி சக்தி ஆகும். அந்த சக்தி அங்கே இல்லை என்றால் நம்மால் கிரியாவோ அல்லது வேறு எதுவுமோ செய்ய இயலாது. நம்முடைய   அனைத்து அனுபவங்களுமே நமக்குள் இருக்கும் குண்டலினி சக்தியினால் தான் ஏற்படுகின்றது.

13ல் - 18வயது வரையில் உறவுகள் ஏற்படுத்திக்கொள்வது தவறு என்று கூறுகிறார்கள். ஆனால் அறிவியலின் படி அந்த வயதில் தானே அது இயல்பாக ஏற்படுகின்றது?

அது இயல்பாக ஏற்படுவதில்லை,ஒரு தூண்டுதலால் தான் ஏற்படுகின்றது. நீங்கள் மும்முரமாக வேலையில் இருக்கும் போதும்,உந்துதலில் கவனத்தை செலுத்தாத போதும்  ஏற்படுவதில்லை. ஒரு மாமரத்தில் நிறைய மாங்காய்கள் இருக்கும். அவற்றை மரத்திலேயே ஓரளவு பழுக்க விட்டால் தான் அவைகளை நீங்கள் பறிக்க இயலும். ஒரு மாங்காய் சிறியதாக இருக்கும் போதே அதை நீங்கள் பறித்து பழுக்க வைக்க முயன்றால், அது ருசியாக இருக்காது. நன்றாக பருத்து பழுக்கும் நிலைக்கு வந்த பிறகு பறித்தால் தான்  நன்றாக இருக்கும். ஆகவே உங்களை பித்து பிடிக்குமாறும் கிளர்ச்சியுருமாறு செய்யும் சுரப்பிகள் சுரக்கும் அந்த நான்கு அல்லது ஐந்து வருடங்களை சகித்துக் கொள்ள வேண்டும். ஒருவர் அந்த காலகட்டத்தை கடந்து வரவேண்டும். 

குருதேவ்! நாம் மறுபடியும் மறுபடியும் பிறந்து வருகின்றோம் என்றால், எப்போது இந்த மறுபிறப்பு என்னும் சுழற்சி நிற்கும்? எப்படி அதை நாம் நிறுத்தச் செய்வது?

மனநிறைவின் மூலமாக. மனநிறைவுடன் ஆனந்தமாகவும்  இருக்கின்றோம் என்னும் ஆழமான உணர்வு மறுபிறப்பு என்னும் செயல்பாட்டினை நிறுத்தி விடும்.

குருதேவ்! என்னுடைய குடும்பம் கடவுளிடம் அர்ப்பணிக்கப்பட்டது. பின் எதனால் எனக்கு நிறைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நான் கல்லூரியில் இருந்து கைவிடப்பட்டவன், உடல் ஆரோக்கியமும் மிகவும் மோசமாக உள்ளது. நான் வெற்றி பெற இன்னும் எதை இழக்க வேண்டும்?

நீங்கள் இங்கே வந்து விட்டீர்கள். இது ஒரு நல்ல ஆரம்பம். முதலாவதாக  உங்கள்  பிரச்சினை உங்களுக்கு மிகவும் பெரியதாக தோன்றுகிறது, ஏனென்றால் நீங்கள் உங்களுடைய சொந்த பிரச்சினையை பற்றி மட்டுமே அக்கறை கொள்ளுகிறீர்கள். உங்கள கண்களை திறந்து பார்த்தால் மற்றவர்களிடம் அதை விட பெரிய பிரச்சினைகள் உள்ளன என்றும் உங்கள் பிரச்சினை அவைகளுக்கு முன் மிகவும் சிறியது என்றும் பார்க்கமுடியும். இரண்டாவதாக, விழிப்புடன் பார்த்தீர்கள் என்றால், உங்களால் தீர்வு காணக் கூடிய பிரச்சினைகள் மட்டும் தான் உங்களுக்கு ஏற்படுகின்றன என்று தெரியும்.  

உதாரணத்திற்கு ஒரு நாயின் வாலின் அளவு அது தூக்கிக்கொண்டு செல்லக்கூடிய அளவில் தான் இருக்கும். ஒரு நாய்க்கு யானையின் வாலை போல இருந்தால் அதனால் அதை தூக்கக் கூட முடியாது. அதைப் போலவே உங்குடைய பிரச்சினைகள் உங்களுடைய வாலை போன்றதே. உங்களால் அதை கொஞ்சம் ஆட்டமுடியும். உங்களுடைய அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் அங்கே உள்ளன மேலும் சில சவால்கள் உங்கள் மனநிலையை உயர்த்தும்.

குருதேவ்! நான் ஆசிரமத்தில் இருந்து திரும்பி வரும் போது என்னுள் மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று என் கணவர் கூறுகிறார். நான் அதற்காக என்ன செய்வது?

ஆமாம். உங்கள் புன்னகையை பெரிதாக்குங்கள். கண்டிப்பாக நீங்கள் ஆசிரமத்தில் இருந்து திரும்ப வரும் போது அனைவருமே அதை எதிர்பார்ப்பார்கள். இன்னும் சிறிது அன்பாக இருக்கவும். நானும் உங்களிடம் மாற்றத்தை காண விரும்புகிறேன், அதனால் நீங்களும் ஆசிரம் சென்று வாருங்கள் என்று சொல்லவும். 

என்னுடைய சிநேகிதி நான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று விரும்புகின்றாள், ஆனால் நான் தேர்ந்தெடுக்கக் கூடிய மாதிரி எந்த பையனும் கிடைக்கவில்லை. நான் அவர்களிடம் பேசி பார்க்கும் வரை என்னால் எந்த முடிவும் எடுக்க இயலாது என்று சொல்லுகின்றேன். என்னால் எந்த நல்ல பையனையும் காண முடியவில்லை.

இப்போது என்னிடம் பேசிவிட்டீர்கள். சென்று ஒரு நல்ல முடிவை எடுங்கள்! (சிரிக்கின்றார்).  நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால், அவர்களிடம் பேசி யார் உங்களுக்கு ஏற்றவர்  என்று முடிவு செய்யவும்.  நல்ல பையன்களையே பார்க்க முடியவில்லையா?  நீங்கள் மிகவும் நல்லவர் என்பது அதன் அர்த்தமா? அனைவரிடமும் நல்லவைகள் உள்ளன,அவைகளை தேடி பார்க்கவும். பையன்கள் சரியில்லை என்றால் நீங்கள் அவர்களை நல்லவர்களாக மாற்றுங்கள். எந்தவிதமான கெட்ட  பழக்கங்களும் இல்லாத வரையில் அவர்கள் நல்லவர்களே.

நான் ஒரு விவசாயி. எந்த பெண்ணும் என்னை மணக்க முன்வரவில்லை. எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள். அவளுக்கும் கூட விவசாயிகளாக இருக்கும் பையன்களை நாங்கள் மறுத்து விடுகிறோம்.  எப்போது விவசாயிகளுக்கு சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும்?

முதலில் நீங்கள் உங்களை மரியாதையுடன் பார்க்க துவங்குங்கள். நான் விவசாயியாக இருப்பதால் எனக்கு சரியான மரியாதை கிடைக்கவில்ல என்று நினைக்க வேண்டாம்.  மரியாதையை கேட்டு பெறுவதை நிறுத்தவும். நீங்கள் என்ன தொழில் செய்தாலும் உங்களை நீங்கள் மதிக்கவும். பிறகு பார்க்கவும்  மற்றவர்கள் உங்களை எப்படி பார்க்கின்றார்கள் என்று.

குருதேவ்! நான் எனக்குள்ளே இருக்கும் விரோதியை எப்படி கண்டு பிடிப்பது? வெற்றி கொள்ளுவது ?

உங்களுடைய விரோதி அல்லது எதிரியை அடையாளம் கண்டு பிடிப்பது மிகவும் முக்கியம்.  எது உங்களை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இல்லாமல் இருக்கச் செய்கிறதோ அதுவே  உங்களுடைய எதிரி. ஆனால் சில நேரங்களில் அந்த எதிரியை வெற்றி கொள்ள முயற்சி செய்யும் செயல்பாட்டில் நாம் அதற்குள்ளே ஆழமாக  மாட்டிக்கொள்ளுவோம். எனவே அந்த மாதிரியான நேரங்களில் பிரார்த்தனை செய்வதும் சரணாகதி அடைவதுமே சிறந்தது.