பிறரை மாற்றுதல்

புதன்கிழமை, 20 மே 2015,

பெங்களூரு, இந்தியா


 ஒருவரது குண இயல்பை மாற்றுவது எப்படி?

ஏன் ஒருவரது இயல்பை மாற்றவேண்டும்? யாருடைய இயல்பாவது தொந்தரவு செய்கிறது என்பதற்காக நீங்கள் மாற்ற விரும்பினால் ஒருநாளும் அது மாறப்போவதில்லை. ஆயினும், அவர்களது இயல்பு அவர்களுக்கே தீங்கு விளைவிக்கும் என்று நீங்கள் கருதினால் அதனால் அதை மாற்ற விரும்பினால் அப்போது நிச்சயம் மாறும் சாத்தியம் உள்ளது. ஏன் ஒருவரது நடத்தையில் மாற்றத்தை கொண்டு வர மக்களால் முடிவதில்லை?  ஏனெனில், தங்களுக்குள்ளேயே அவர்கள் சிக்கிக் கொண்டிருக்கின்றனர். நீங்கள், "எனக்காக மாறி விடு" என்று கூறினால் யாரும் மாறப் போவதில்லை.  ஏன் அல்லது எவ்வாறு குரு மட்டுமே ஒருவரிடம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்?  அது ஏனெனில், குரு தனக்கென்று எதுவும் ஒருபோதும் விரும்புவதில்லை. குரு கருணையுடன் மட்டுமே மக்களைக் காண்கின்றார், அதனால் தான் அவரிடம் வரும் மக்கள் மாறி விடுகின்றனர்.

கடவுள் முனிவர்களுக்குக் காட்சியளித்திருக்கின்றார். இதைப் பற்றி மேலும் கூற முடியுமா?

ஆம், மெய்யுணர்வில் அனைத்திற்குமே சாத்தியம் உள்ளது. மொத்த அளவில் ஏதேனும் நடக்கும் போது நுண்ணிய பரப்பில் ஏதோ நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. மெய்யுணர்வில் மூன்று நிலைகள் உள்ளன. மொத்த நிலை, நுண்ணிய நிலை, முறைமைப்படாத நிலை. முறைமைப்படாத நிலையில் ஒரே ஒரு உருவமில்லாத தெய்வம் மட்டும் தான்.  நுண்ணிய நிலையில், தேவதைகள், தேவியர், தேவர்கள், அசுரர்கள் உள்ளனர்.மொத்த நிலையில், நீங்கள் கண்களால் கண்டு, காதுகளால் கேட்கும் அனைத்தும் உள்ளன. மெய்யுணர்வு நிலை மாறுபடும் போது, ஒருவரால் பிரபஞ்சத்தின் நுண்ணிய நிலையினை அணுக முடியும். கேனோ உபநிஷதம் கதோ உபநிஷதம் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள இந்த மெய்யுணர்வு நிலைகளைப் பற்றி நான் ஏற்கனவே பேசியிருக்கின்றேன்.  காட்சி என்பது நுண்ணிய நிலையில் மட்டுமே நிகழுவது. முறைமைப்படாத நிலையில் இரண்டு என்பதே கிடையாது.

அன்புள்ள குருதேவ், பள்ளியில் தினமும் நாங்கள் தியானம் செய்ய வேண்டியதிருக்கின்றது. எனக்கு அதை செய்ய விருப்பம் இல்லை. தயவு செய்து என்னை ஊக்குவிக்க முடியுமா?

ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தியானம் உங்களுக்கு அதிக சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் தருகின்றது. சிறு குழந்தைகளை பார்த்த்திருக்கின்றீர்களா? சில சமயங்களில் உணவு கூட அவர்களுக்கு வேண்டியிருக்காது, அவ்வாறிருந்தால் குழந்தை பலவீனம் அடைந்து விடுமல்லவா? எனவே தாய் அவர்களை வற்புறுத்தி உண்ண வைக்கின்றாள். பல தேய்க்க விரும்ப மாட்டார்கள், ஆனால் அவர்களது  பல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்பதற்காக தாய் பல் தேய்த்து விடுவாள். அது பல் ஆரோக்கியம். தியானம் மன ஆரோக்கியம்.

தியானம் செய்யும் போது என்ன நிகழ்கின்றது? கூர்மையானவராகவும் மகிழ்ச்சியான வராகவும் உள்ளுணர்வுள்ளவராகவும் ஆகின்றீர்கள். சரியான எண்ணம் சரியான நேரத்தில் உங்களுக்கு வர வேண்டுமல்லவா? இப்போது சற்று சலிப்பாக இருந்தாலும் பரவாயில்லை. பின்னர் பழக்கமாகி விடும். கட்டாயம் தியானம் செய்ய வேண்டும் இல்லையெனில் ஆற்றல் உயர்ந்த உணர்வு நிலை கிடைக்காது என்பதனை உணர்ந்தறிவீர்கள். அதை மிகவும் சந்தோஷமாகவும் அனுபவித்துச் செய்வீர்கள்.

குருதேவ், படிப்பதற்கு எங்களை நாங்களே எவ்வாறு ஊக்குவித்துக் கொள்வது?

ஊக்குவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறும் போதே, ஊக்குவிக்கப்பட்டு விட்டீர்கள். வெளியிலிருந்து கூடுதலாக யாரும் உங்களை ஊக்குவிக்கத் தேவையில்லை. உங்களுக்கு ஊக்கம் இல்லையெனக் கருதினால் நீங்கள் சற்று அதிகமாக ஊக்குவிக்கப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள். நோயினை நீங்கள் சரியாக கண்டறிந்து விட்டீர்கள்.  சிறந்த கண்டறிதல் பாதி குணம் அடைந்ததற்கு சமம். உங்கள் ஊக்க அளவு குறைவு என்று நீங்கள் கண்டறிந்தால், குறைந்த பிராண சக்தியால் இருக்கக் கூடும்.  அதை அதிகரித்துக் கொள்ளுங்கள். நண்பர் யாரேனும் கூட சேர்ந்து படியுங்கள். அதில் ஒரு அனுகூலமற்ற நிலை என்னவென்றால், படிப்பின் நடுவில் கிரிகெட் திரைப்படம் போன்ற வேறெந்த விஷயங்களையாவது பற்றிப் பேசத் துவங்கிவிடுவீர்கள். கவனம் சிதறி பிற விஷயங்களில் சென்று விடும். இருப்பினும் நண்பர்களுடன் சேர்ந்து படிப்பது நல்லது.

பகவத்கீதையின் முதல் அத்தியாயம் ஏன் விஷாத்யோகா என்று அழைக்கப்படுகிறது? உண்மையான ஞானத்தை பெற விஷாத் (துன்பம்) அவசியமா? துன்பம் எதிர்மறை அல்லது நேர்மறை முன்னேற்றத்தை விளைவிக்குமா? 

ஒரு மனிதன் துன்பத்தை கடந்து செல்லும் போது அது அவனை விழிப்படைய செய்கிறது. பின்னர் ஞான அனுபவங்களை அடைய வழிகாட்டுகிறது. அதனால் தான் அது விஷாத் என்று அழைக்கப் படுகிறது. விஷாத்தில் ஒருவன் அனைத்தும் சரியில்லாமல்  இருப்பதை பார்த்துக் கொண்டே இருக்கின்றான். எதிர்மறையான ஒரு மேககூட்டம்  ஒருவனை சூழ்ந்து கொண்டு அலைக்கழிப்பது  போன்றதாகும். இத்தகைய எதிர்மறை எண்ணங்கள் வீட்டிலோ அல்லது பணியிடத்திலோ வரலாம்.  இந்த எதிர்மறை எண்ணப் பரப்பினை விட்டு வெளியேற உங்களுக்கு ஒரு ஆதரவான அடித்தளம் தேவை. அதுதான் ஞானம் என்பதன் மூலம் வருகின்றது.

நீங்கள் ஒவ்வொரு பக்தருக்கும் ஒவ்வொரு திட்டம் வைத்திருக்கின்றீர்களா எனக்கும் அத்தகைய திட்டம் வைத்திருக்கின்றீர்களா என்ன?


நிச்சயமாக!  இதே வழியில் தொடர்ந்திருங்கள். எப்போதும் புன்முறுவலுடனும் தொண்டு செய்து கொண்டும் இருங்கள். உங்களுக்கென்று விருப்பத் தேர்வுகள் இருக்கும். நீங்கள் பரந்த அளவில் நீண்ட கால பார்வையுடன் எதைத் தேர்ந்தெடுத்தாலும் உங்களுடனேயே நான் இருக்கின்றேன்.