தவறுகளிலிருந்து சரியானதை தேர்ந்தெடுங்கள்

திங்கட்கிழமை - 01/05/2015,

பேட் அண்டகொஸ்ட், ஜெர்மனி.


இறப்பே இல்லாத அன்பு” என்ற வெளியீட்டின் தொடர்ச்சி

கேள்வி - பதில்

குருதேவ், நான் செய்வது சரி என்று எப்படி அறிந்து கொள்வது?

இந்த கேள்வி கேட்டதினால், சரியான காரியம் செய்துள்ளீர்கள். கேள்வி கேட்க வேண்டும்.முழு திருப்தியுடன் இருக்கும் பொழுதோ அல்லது முட்டாள்தனமாக இருக்கும் பொழுதோ கேள்வி கேட்பதை நிறுத்தி விடுகிறாய். முழு திருப்தியுடன் இல்லாதிருக்கும் பொழுதும்,கேள்வி கேட்டு கொண்டிருப்பது நல்லது. இப்போது, “நீ எந்த காரியம் செய்தாலும் சரியாக செய்கிறேனா” என்று உனக்குள் மேலும் மேலும் கேள்.உங்களையே கேளுங்கள். மற்றவர்களிடம் கேட்க தேவையில்லை. உங்களையே கேட்கும் பொழுது பல நேரங்களில் நீங்கள் செய்தது சரியாகவே இருக்கும். பேராசை, பொறாமை மற்றும் கோபம் ஆகியவைகளால் தூண்டப்படாத செயல் எதுவாயினும், செய்தது சரியாகத் தான் இருக்கும். நல்ல செயலாக இருந்தாலும், பேராசை, பொறாமை மற்றும் கோபம் ஆகியவை அதன் பின்னனியில் இருந்தால், சரியல்ல! சமுத்திரத்தில், ஒரு படகு வெடிப் பொருள்களுடன் வெடித்தது என்ற செய்தி கிடைத்தது. 

தீவரவாதிகளின் மிகப்பெரிய தாக்குதல்( 26/11 தாக்குதல் போல்), இதனால் முறியடிக்கப்பட்டது. நான்கு தீவரவாதிகள் இதில் கொல்லப்பட்டனர். செய்தி இணையதளத்திலும், பத்திரிக்கைகளிலும் வந்துள்ளது. இது துரதிர்ஷ்டமானது. சரியான செயலல்ல. சில நாட்களுக்கு முன் “பெசாவரில்” நடந்த செயல் சரியானதல்ல. வெறுப்பு மற்றும் கோபத்தின் காரணமாகவும், மதத்தை தவறான முறையில் புரிந்து கொண்டதாலும், இந்த மக்கள் அங்கு சென்று சிறிய குழந்தைகளை கொன்று விட்டு நியாயப்படுத்துகிறார்கள். பாகிஸ்தான்,ஆஸ்திரேலியா,இத்தாலி மற்றும் பிரான்ஸ் போன்ற உலகத்தின் எல்லா நாடுகளிலும் தீவிரவாதம் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. மிகவும் கண்டிக்கதக்கது. இவர்களுக்கு மோசமான பயிற்சி அளித்து,தவறான பாதையில் செல்ல வழி நடத்துகிறார்கள். நல்ல படிப்பும், வாழ்க்கையின் விசாலமான எண்ணங்கள் இருந்தால், அவர்கள் இந்த மாதிரியான செயல்களை செய்யமாட்டார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்கள் அமைவதில்லை. துரதிர்ஷ்டமானது.

மக்கள் ஏன் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கிறார்கள்?

மக்கள் பைத்தியக்காரத்தனமாக இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைத்தால், அதில் நீங்களும் ஒருவர் தானே? அதில் ஒருவராக இல்லை என்று நீங்கள் கருதினால், மற்றவர்கள் உங்களை பைத்தியக்காரத்தனமாக இருக்கிறீர்கள் என கருதலாமே! உலகத்தில் பலதரப்பட்ட பைத்தியக்காரத்தனங்கள் உள்ளன. வேறு கிரகத்திலிருந்து, நம் கிரகத்திற்க்கு யாராவது வந்து கால்பந்தாட்டத்தை பார்த்தால்,அது அவர்களுக்கு பைத்தியக்காரத்தனமான இடமாக தோன்றும்.11 விளையாட்டு  வீரர்கள் ஏன் 1 பந்தை துரத்தி சென்று வளையில் போட முயற்சி செய்கிறார்கள். அடுத்த 11 பேர் அடுத்த பக்கத்தில் இருந்து தடுக்கிறார்கள்.அதுவும் ஒரு சிறிய பந்தை வைத்து கொண்டு என்பதை புரிந்து கொள்ள முடியாது.ஏன் இந்த பந்திற்காக சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்று நினைப்பார்.

22 பேருக்கும், 22 பந்தை கொடுத்து அவர், அவர்கள் பந்தை உதைத்து வளைக்குள் தள்ளலாமே என்று அண்டை கிரகத்திலிருந்து வந்தவர் சொல்வார்.பந்தை வளைக்குள் போடுவது தான், புள்ளிகள் சேர்க்கும் என்றால் நாம் எல்லோரும் சென்று எடுத்து, வளைக்குள் வைத்து விடலாமே! விளையாட்டாளர்கள் பந்தை உதைப்பது, ஒருவர் மேல் ஒருவர் மோதிக்கொள்வது மற்றும் அதை சுற்றிலிருந்து 50000 பேர் பார்த்து கைதட்டுவது,அழுவது மற்றும் உரக்க கத்துவது – இதை எதையும் புரிந்து கொள்ள தவறிவிடுகிறார்.(கூட்டத்திலுள்ளவர் சிரித்தனர்).இது மிக பைத்தியக்காரதனமானது.
இதுபோல், உலகத்தில் பல வகையான பைத்தியக்காரதனமான செயல்கள் உள்ளன. ஆங்கில மொழி பைத்தியக்காரதனமாக எனக்கு தோன்றும். நீங்கள் "KNOW” என்று எழுதி அதை “NO“ என்று உச்சரிக்கிறீர்கள். நான் “K” என்ற சப்தத்தையும் சேர்த்து உச்சரித்தால் எப்படி இருக்கும்? எழுதுவது, வாசிப்பது, பேசுவது போலவே இருக்க வேண்டும். “KNOWLEDGE” என்று எழுதுகிறீர்கள். நான் “ K ” சப்தத்துடன் உச்சரிக்கும் பொழுது, அது பைத்தியக்காரதனமாக இருக்கும்.

என்னுடைய தாய் மொழியில்,எப்படி எழுதுகிறோமோ,அதுபோல் தான் பேசுவதும், வாசிப்பதும். ஆங்கிலத்தில் பல எழுத்துக்கள், வாசிக்கும்பொழுது அமைதியாகி விடும்.எந்த எழுத்து அமைதியாக உச்சரிப்பது அல்லது சேர்த்து உச்சரிப்பது என்று தெரியாது.கொஞ்சம் கடினமானது. நான் ஆங்கிலம் எழுதும் போது, அதற்கு கீழே கன்னடத்தில் எழுதுவேன். இதை பார்த்த என் வகுப்பு ஆசிரியர் “நீ என்ன செய்கிறாய்? இது தவறு” என்று கூறினார். பேசுவதற்கும், எழுதுவதற்கும் சம்பந்தமில்லாமல் இருக்கும்,அதை வாசிப்பது வேறு விதமாக இருக்கும்.

இதுபோல், உலகத்தில் பல வகையான பைத்தியக்காரதனமான செயல்கள் உள்ளன.ஒவ்வொன்றும் பைத்தியக்காரதனமானது தான். மக்கள் வெவ்வேறு விதமான பைத்தியக்காரதனமாக இருப்பார்கள். சிலர் விளையாட்டு பைத்தியமாக, அரசியலில் பைத்தியமாக மற்றும் சிலர் பணத்தில். சீனாவில் என்ன நடந்தது என தெரியுமா ?  “செங்காயில்( SHANGHAI)”, புத்தாண்டு தினத்தன்று சிலர் கள்ள நோட்டு பணத்தை உயர்ந்த கட்டிடத்தில் இருந்து சாலையில் வீச, அதை எடுக்க முண்டியடித்ததால் 35 பேர் உயிரிழந்தனர். இது பைத்தியக்காரதனமாக இல்லை. கட்டிடத்தின் மேலிருந்து தெருவில் இலவசமாக விழும் பணத்திற்க்காக. எல்லையே இல்லாத பைத்தியக்காரதனம். நம்மிடையே இங்கு நல்ல விசயத்தில் பைத்தியக்காரதனம் உள்ளது.

சிலர் தியானம் செய்வதில், சிலர் பாடுவதில் பைத்தியமாக இருப்பார்கள். சரி தான். இங்கு “வாழும் கலை”யில் வித்தியாசமான பைத்தியக்காரதனம் உண்டு. (கூட்டத்திலுள்ளவர் சிரித்தனர்). நாம் எல்லாம் ஒரே மாதிரியான இயல்புடையவர்கள் இல்லை. உலகத்திலுள்ள எல்லா “மாதிரிகளும்” இங்கு உண்டு. பைத்தியக்காரதனமானவர்களை ஒரே இடத்தில் பார்க்க வேண்டுமென்றால், நீங்கள் சரியான இடத்தில் தான் உள்ளீர்கள். “மக்களை அவ்வாறே ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று நாம் எப்பொழுதும் சொல்கிறோம்.இந்த வாக்கியத்தை கூறுவதால் எங்காவது மாட்டிக் கொள்வேனோ, என்று சில நேரங்களில் தோன்றுவதுண்டு.என் வாழ்க்கையில் பழக்கப்படுத்தி கொள்ளாததை, ஒரு போதும் சொல்வதில்லை. ஆகையால், இதை சொல்லியிருப்பதால் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும், பழக்கப்படுத்திக் கொள்கிறேன். எல்லா விதமான பைத்தியக்காரதனத்தையும் ஏற்றுக் கொண்டும்,எடுத்துக் கொண்டும் செல்கிறேன்.நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறேன் என சொல்லிக் கொள்கிறேன்.

குருதேவ் நாம் இந்த பாதையில் வந்த பின், எல்லா வேலைகளையும் செய்து ஓய்வு எடுங்கள் என்று நீங்கள் ஒருமுறை கூறியுள்ளீர்கள். இதன் பொருள் என்ன?

நேரங்களில் சில விஷயங்களை சொல்லியிருப்பேன். அந்த சந்தர்ப்பத்தை விட்டு, வேறு விதமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. சொல்லியிருக்கும் விசயத்தை,அந்த சந்தர்ப்பத்திற்கு வைத்துகொள்.
ரயில் வண்டியை பிடிக்கும் வரை ஓடு, அதன் பின் சாமான்களை வைத்துவிட்டு ஓய்வெடு என்று கூறியுள்ளேன். சுமையை தலையில் வைத்தவாறு, ரயில் பெட்டியில் ஓடிக்கொண்டிருந்தால், ரயில் வண்டி வேகமாக செல்லப்போவதில்லை. ஆகையால் ஆன்மீக பாதையில் வந்துவிட்டால், கவலையை விட்டு விட்டு ஓய்வெடுத்தீர்களானால், நீங்கள் எங்கு சேர வேண்டுமோ அங்கு சேர்ந்து விடலாம்.ஆன்மீகத்தை கடையில் வாங்க செல்லாதீர்கள் என்று கூறியுள்ளேன். சிலர் ஆன்மீக பயிற்சியை இங்கு கொஞ்சம்,அங்கு கொஞ்சம் சென்று பயிற்சி எடுப்பார்கள். ஓய்வெடு. உங்களுக்கு மிக அருமையான ஞானம், அருமையான பாதை ஒரே இடத்தில் கிடைத்துள்ளது, ஓய்வெடுங்கள்.

குருதேவ் நாம் பெற்றோர்களாக இருக்கும் பொழுது, பொறுப்புகளுக்கும், பாசத்திற்கும் என்ன வித்தியாசம்?

குழந்தைகளுக்கு என்று பார்க்கும் பொழுது,அது ஒரு புனிதமான பொறுப்பு. உணவு, தங்க இடம் மற்றும் படிப்பை கொடுப்பது மட்டுமே நம் பொறுப்பு ஆகிவிடாது. அவர்களுடைய மனநிலை, உணர்ச்சிகள், புத்திசாலிதனம், எண்ணங்கள், நடத்தைகள் எல்லாம் சரியான பாதையில் இருக்கின்றனவா என்று பார்த்து கொள்வது மிக முக்கியம்.

நான் வேலைக்கு செல்லும் தாயாக இருப்பதால், குழந்தைகளுடன் என் நேரத்தை தரமானதாக செலவிட முடியவில்லை? வேலைக்கு செல்லும் தாய்மார்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?

எங்கு மனம் இருக்கிறதோ, அங்கு மார்க்கம் உண்டு! குழந்தைகள் ஒரு பிரச்சனை இல்லை. இங்கு “ இலான்கா” (Elonka) என்பவர் உள்ளார். அவருக்கு மூன்று குழந்தைகள் அவர்களையும் கவனித்துக் கொண்டு,பயிற்சிகளை நடத்தி வருகிறார். குழந்தைகளுக்கு உணவை கொடுத்து, மற்றவர்களிடம் பார்க்க சொல்லி விட்டு பயிற்சிகளை நடத்தி வருகிறார். சிலவைகளை செய்வதற்கு ஆர்வமாக இருந்தால், குழந்தைகள் தடையாக இருக்கமாட்டார்கள். பல தாய்மார்கள் குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்ப்தோடு, அவர்களுக்கு தரமான நேரத்தையும் கொடுத்து, அவர்கள் செய்ய வேண்டிய காரியங்களையும் செய்கிறார்கள். உங்களுக்கு தேவை “ஆர்வம்” தான். நீங்கள் ஒரு காரியம் செய்ய ஆர்வம் இருந்துவிட்டால், எங்கும், எதிலும் சாதித்து விடலாம்.

எல்லாம் மனசு தான் காரணம். செய்ய வேண்டும் என்ற குறிக்கோள் இருந்து விட்டால், நீங்கள் அதை செய்து விடுகிறீர்கள். உங்கள் குழந்தைகள் தான் முதல் முக்கியத்துவம், ஆனாலும், பிற காரியங்களையும் செய்யலாம். உங்கள் வேலை அம்மாவாக இருந்து, குழந்தையை மட்டும் கவனித்து கொள்ள வேண்டும் என்று நான் சொல்லவில்லை. குழந்தைகளுடன் இணக்கமற்ற தன்மையுடன் இருக்க, குழந்தைகளும் அவர்கள் தாயிடமிருந்து சில நேரங்களில் பிரிந்து இருக்க விரும்பும். மன உறுதியும், ஆர்வமும் இருந்தால் நீங்கள் கண்டிப்பாக அதற்கான வழிகளை கண்டுபிடித்து விடலாம்.

குருதேவ்: எனது இலச்சியத்தை அடையும் முன், எதாவது நடந்து, என் இலச்சியத்தை அடைய முடியாமல் ஆகிவிடுகிறது. இது ஒவ்வொறு முறையும் நடக்கிறது. என்ன செய்வது?

சொந்த வாழ்க்கையை திரும்பி பாருங்கள். அதில் எவ்வளவு முறை வெற்றி அடைந்துள்ளீர்கள். ஏதாவது பிரச்சனை நம்முள் வரும்பொழுது அதை நிரந்தரமாகவும், பொதுவாகவும் இருப்பதாக எடுத்துக் கொள்கிறோம். நாம் இதை நிறுத்த வேண்டும். பிரச்சனைகள் இருக்கும் போது, நீங்கள் “ ஓ, நான் இந்த பிரச்சினையை எதிர்கொள்வேன்” என்று கூறுவதை நான் விரும்புகிறேன். அதற்கு பதிலாக என்ன செய்கிறாய்? பிரச்சனைகள் இருக்கும் போது, அது நிரந்தரமாக இருப்பதாகவும், “ ஓ ,எல்லோரும் முட்டாள்கள், ஒருவரும் சரியில்லை, யாரும் என்னை விரும்புவதில்லை என்று பொதுவாக சொல்லி விடுவது எப்படி சாத்தியமாகும்? பிரச்சனைகளை நிரந்தரமானதாகவும், பொதுப்படையாகவும் இருப்பதாக நம் மனதில் ஊதி, அதை பெரிது படுத்துகிறோம். இதுபோல் உங்கள் ஆழ் மனதில் விதைக்கும் பொழுது, அந்த மாதிரியான விசயங்கள் அதிகப்படியாக நடந்து விடுகிறது.இப்பொழுது நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள்.பிரச்சனை பொதுவான அம்சமாகவும் அல்லது நிரந்தரமாகவும்  இல்லை என்று பொறுமையுடன், உறுதிமொழி எடுத்து முன்னேறி செல். உன்னுடைய இறந்த காலத்தை பார்த்தால், பலமுறை நீ வெற்றியடைதிருப்பாய். சில சமயங்களில், உங்கள் அளவுக்கு மேல் நீங்கள் செய்ய முயற்சிக்கலாம். இது எப்பொழுதும் நடக்காது. உங்கள் “உறுதிப்பாடு” பலவீனமாக இருந்தால், மறுபடியும் நீங்கள் சரியான இடத்தில் தான் உள்ளீர்கள். பிராணாயாமா, தியானம் போன்ற ஆன்மீக பயிற்சி, மேலும் முன்னேற்றி செல்வதில் உதவும்.