வாழ்க்கையை பரிபூரணமாக வாழுங்கள்

சனிக்கிழமை, மே 9, 2015

லாஸ் ஏஞ்செல்ஸ், அமெரிக்கா


(வாழும்கலை அமைப்பின் லாஸ் ஏஞ்செல்ஸ் மையத்தில் மே8-9, 2015ல் நடைபெற்ற " தியானம் 2.0- ஆழ்ந்து செல்லவும்" என்னும் நிகழ்ச்சியில் குருதேவுடன் நடந்த இசை, தியானம் மற்றும் ஞானம் ஆகியவற்றில் குருதேவ் ஆற்றிய உரையின் தமிழாக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது) 

வாழ்க்கை மூன்று பாகங்களை கொண்டது.
1. அறிவு
2. விழிப்புணர்வு
3. அன்பு

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பரிதாபகரமான நிலைக்கு சென்றீர்கள் என்றால் அதற்கு இந்த மூன்றில் ஏதாவது ஒன்றோ அல்லது அவைகளின் பற்றாக்குறையோ தான் காரணம். அன்பின் பற்றாக்குறை துயரை  உண்டாக்குகிறது.அன்பை இழந்து விடுவோமோ என்னும் பயம் துயரை  உண்டாக்குகிறது. மற்றும் அதற்காக ஏங்குவதும் துயரை உண்டாக்குகிறது.

விழிப்புணர்வில் பற்றாக்குறை ஏற்படும்போது தவறுகள் ஏற்படுகின்றன. நீங்கள் வண்டியை ஒட்டிக்கொண்டிருப்பீர்கள் ஆனால் வெளியேறும் வழியை தவற விட்டு விடுவீர்கள்.எப்படி நீங்கள் வெளியேறும் வழியை தவற விட்டீர்கள்? ஏனென்றால் நீங்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இல்லை. விழிப்புணர்வில் பற்றாக்குறை உங்களுக்கு துயரை ஏற்படுத்துகிறது.

மூன்றாவது, அறிவின் பற்றாக்குறை. இந்த மூன்று விஷயங்களுமே துயரை உண்டாகுகின்றன. மற்றும் நம்முடைய வாழ்க்கையில் யோகா மற்றும் தியானம் ஆகியவை தான் இந்த மூன்றையும் அதிகரிக்க செய்யும்.இவை அறிவை அதிகரிக்கும், விழிப்புணர்வை அதிகரிக்கும் மற்றும் அன்பை கொண்டு வருவதன் மூலம் உங்களை குடும்பப்பாங்காக இருக்க செய்கிறது. இந்த உலகத்தில் உங்கள்  தனிமையை போக்கக்கூடிய ஒன்று உண்டென்றால்...அது தியானம் மட்டுமே.

நம்மில் சிலர் அறிவு ஒன்றே குறியாக இருக்கின்றோம், அன்பே குறியாக இருக்கின்றனர்,சிலர் விழிப்புணர்வு அல்லது எச்சரிக்கை  மட்டுமே குறியாக இருக்கின்றனர். ஆனால் தியானம் இந்த அறிவு அன்பு விழிப்புணர்வு ஆகிய மூன்றையும் ஒருங்கிணைக்கின்றது. நாம் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை பிடித்துக்கொண்டு அதில் தேர்ச்சி அடைந்தால் மற்ற இரண்டும் தானாகவே அத்துடன் வந்து விடும். நீங்கள் யார் என்பதையும்  இந்த பிரபஞ்சம் என்பது என்ன என்பதையும் அறிந்து கொண்டால் மற்றவர்களால் நேசிக்கப்படுபவராக இல்லாமல் இருப்பது  சாத்தியமே அல்ல.  மிக பெரிய விஞ்ஞானிகள் மற்றவர்களை மிகவும் நேசிப்பவர்கள் என்பதை நீங்கள் காணலாம்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டின் தன்னுடைய மகளுக்கு எழுதிய ஒரு கடிதங்களில் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டனர். உங்களில் எவ்வளவு பேர் அந்த கடிதத்தை பார்த்திருக்கிறீர்கள்? 50 வருடங்களுக்கு முன்னதாக அந்த கடிதத்தை அவர்கள் வெளியிட முடியாது. இப்போது வெளியிட்டனர். இந்த பிபஞ்சத்திலே மிகப்பெரிய சக்தி அன்பு ஒன்றே என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த பிரபஞ்சத்தை பற்றிய ஞானம் உங்களை அன்பில் திளைக்க செய்யும் அல்லது படைப்பாற்றல் பிரபஞ்சத்தின் சக்தியுடன் அன்பில் வளர்வீர்கள் என்று நான் கூறுவேன்.

நீங்கள் விழிப்புணர்வோடு இருக்க பழகிக்கொள்ளுவதும் இதைப் போன்றதே.இது புத்தமத வழி. புத்த மத வழி அறிவு அல்ல விழிப்புணர்வே. மனதை காலியாக வைத்திருப்பதே போதும். உங்களுக்குள் தகவல்களை அடைக்காமல் மனதை காலியாக வைத்திருப்பதே. விழிப்போடும் எச்சரிக்கையாகவும் இரு. முழு விழிப்புணர்வுடன் இருக்க பயிற்சி செய்யவும். அது ஜென் என்று அழைக்கப்படும். ஜென் என்பது திரிக்கப்பட்ட தியானம், வேறு ஏதும் இல்லை. தியானம் கிழக்கு நாடுகளுக்கு பரவும் போது அது ஜென் ஆனது. அவை இரண்டும் ஒன்றே, வெவ்வேறு அல்ல.அந்த நாட்களில் அது குதிரையின் முதுகிலோ அல்லது நடந்தோ சென்றபோது அதன் பெயர் மாற்றம் ஏற்பட்டது.

(அங்கு வந்திருப்பவர்களுக்கு அமர இடம் கிடைக்க குருதேவ் அங்கிருந்த சிலரை இடம் மாறி அமரும்படி கேட்டுக் கொள்கிறார்.) 

உங்களுடைய நிலைப்பாட்டை இவ்வாறு மாற்றிக் கொண்டிருப்பது தான் வாழ்க்கை ஆகும். சிக்கிக் கொள்ளக் கூடாது. மற்றவர்களுக்கு இடமும் வசதியும் ஏற்படுத்துங்கள். இடத்தை உருவாக்குவதை பற்றியதே. மக்களுக்காகவும் நிகழ்வுகள் ஏற்படவும் இடத்தை ஒதுக்கவும். ஏனென்றால் உங்களுக்கு குறுக்கே வரும் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு நிகழ்வும் உங்களால் கற்பனை செய்ய இயலாத வகையில் உங்களுடைய வாழ்க்கையில் பங்களிக்கின்றன.

ஒரு கதை கேட்டது எனக்கு ஞாபகம் வருகின்றது. ஒரு திருடன் முனிவரிடம் சென்று " நீங்கள் மிகவும் நல்லவர் என்று எனக்கு தெரியும் ஆனால் திருடுவதை விட்டு விடும்படி என்னிடம் கூற வேண்டாம், ஏனென்றால் நான் ஒரு அனிச்சை திருடன். அதைத் தவிர நான் மற்ற அனைத்தையும் கடைப்பிடிப்பேன்" என்று கூறினான்.முனிவர் ஒரு புன்னகையுடன் " ஓ! அப்படியா? நான் உன்னிடம் திருடுவது எப்படி என்று சொல்ல விரும்பினேன்." பின்னர் முனிவர் "முழு விழிப்புணர்வுடன் திருட வேண்டும். உன்னுடைய கைகள் மற்றும் இயக்கத்தை பற்றி முழு உணர்வுடன் இருக்கவேண்டும். 100% விழிப்புணர்வுடன் திருடவும்.எனக்காக இதை நீ செய்வாயா?" என்று கேட்டார்.

திருடன் "மிக எளிது. எப்போதுமே நான் காவர்களோ அல்லது மற்ற யாரும் கவனிப்பதை குறித்து விழிப்புடனே இருப்பேன். "பத்து நாட்கள் கடந்த பின்பு அந்த திருடன் முனிவரிடம் வந்து" என்னுடைய தொழிலை நீங்கள் திருடி விட்டீர்கள். நான் என்ன செய்வது என்று சொல்லுங்கள்.நான் வேறு ஏதாவது செய்தாக வேண்டும். நான் முழு மனதுடன் திருட செல்லும் போது என்னால் செய்ய முடியவில்லை. என்னுடைய கையால் செய்ய இயலவில்லை. நான் வெறும் கையுடன் திரும்பிவிட்டேன். என்னுடைய தொழில் போய் விட்டது. எனக்கு வாழ்வாதாரம் இல்லை.“ என்று கூறினான்.விழிப்புணர்வும் அதன் பற்றாக்குறையும் நம்முடைய வாழ்க்கையில் தவறுகள் ஏற்பட காரணமாக இருக்கின்றன. அதைப்போலவே அன்பும் அதன் பற்றாக்குறையும் வாழ்வில் துயரை உண்டாக்கும். இந்த மூன்றுக்கும் பொதுவான அல்லது மூன்றும் சந்திக்கும் ஒரு நிலைப்பாடு உண்டு அதுவே தியானம்.