எனது பிறந்த நாள் பரிசு

புதன்கிழமை, 13 மே 2015                

பெங்களூர், இந்தியா

ஒரு சந்தர்ப்பம் பல மக்களை சேவை செய்ய உற்சாகமூட்டுமானால், இத்தனை மகிழ்ச்சியை கொடுக்குமானால், ஒரு ஆண்டில் நான்கு முறைகள் கேக் கட் செய்வதற்கு எனக்கு ஆட்சேபனை இல்லை.

நான் பிப்ரவரி 29 ம் தேதி பிறக்காமலிருந்ததை பற்றி மகிழ்ச்சியடைகிறேன். அப்படியிருந்தால் நான்கு வருடத்துக்கு ஒரு முறை தான் பிறந்த நாள் வரும்.எந்த நிகழ்வானாலும், கொண்டாட ஒரு சாக்காக இருந்தாலும், வாழ்க்கையை கொண்டாடுவது நல்லது. சாரமே கொண்டாட்டம் தான். 

ஒரு பழமொழியுள்ளது. "ஆனந்தத் தை ஏவ கல்விமணி பூதானி ஜயந்தே”.இதன் பொருள்: படைப்பு முழுதுமே பரமானந்தத்தால் நிரம்பியிருக்கிறது. எல்லாமே பரமானந்தத்திலிருந்தே உருவாகின்றன. பரமானந்தத்தால் காக்கப்படுகின்றன.வாழ்க்கையின் இறுதி நோக்கமும் பரமானந்தத்தை அடைவதே. எனவே கொண்டாட எந்தச் சாக்காக இருந்தாலும் பரவாயில்லை. கொண்டாட்டம் மகிழ்ச்சியையும் பரமானந்தத்தையும் கொடுக்கும்.

நீ நினைவில் வைக்க வேண்டியது இது மட்டுமே. “மே தேராஹ்“ (நான் உன்னைச் சேர்ந்தவன்). நான் எல்லோருக்கும் இதை தான் சொல்கிறேன். “நான் உங்களைச் சேர்ந்தவன்“. யாரை சந்தித்தாலும் “நான் உங்களை சேர்ந்தவன்“ என்று சொல்லுங்கள். அப்படி செய்து வந்தால், இவ்வுலகிலுள்ள அனைவரும் உங்களை சேர்ந்தவர்கள் என்ற உணர்வு வரும். புன்னகையோடு இருங்கள். ஆனந்தத்தைப் பரப்புங்கள். அறிவுடையவர்களின் அடையாளம் இது தான். அறிவாளிகள் மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் பரப்புபவர்கள். இங்கிருக்கும் நாமனைவரும் அறிவாளிகள் தான். இல்லையா? பார்வையாளர்கள் “ஆம்” என்று சொல்கிறார்கள்.

குருதேவா! நான் உங்களை விரும்புகிறேன்.

தேர்வு செய்ய உனக்கு வேறு எதுவும் கிடையாது. நாமனைவரும் ஒன்றே. நம்மிடையே செயற்கையான வேலிகளை, நாமே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். இது ஒரு மாயை. ஆழ்ந்து சென்றால், நாமனைவரும் ஒன்றே என்பதை உணரலாம். சைதன்யம் (ஆத்மா) ஒன்று தான். நாமனைவருமே அந்த சைதன்யத்தால் ஆக்கப்பட்டிருக்கிறோம். எல்லாமே சைதன்யத்திலிருந்து வந்தவை தான். எல்லாமே சைதன்யத்தில் கரைந்து விடும். இது வாழ்வின் சாரமாகும். இந்த சந்தர்ப்பத்தில் (குருதேவரின் பிறந்த நாள்) பல சேவைகள் நிகழ்ந்திருக்கின்றன.இவை தொடரட்டும். நீங்களனைவரும் ஆனந்தமாக இருக்க வேண்டும். உங்கள் கவனம் உள்நோக்கி இருக்கட்டும்.
"அந்தர் முகி, சதா சுகி “ என்று சொல்வார்கள்.யார் ஆத்மாவை நோக்கி உள்முகமாக செல்கிறாரோ, அவர் எப்போதும் பரமானந்தத்தில் திளைப்பார். வெளி உலக ஆசைகளை தவிர்த்து, புலன்களை உள்முகமாக திருப்ப வேண்டும். இப்படி செய்பவர் ஆன்மீகப் பாதையில் முன்னேற்றமடைவார்.

குருதேவர்: இன்று எத்தனை பேர்களுக்குப் பிறந்த நாள்?

பார்வையாளர்களனைவரும் கைகளை உயர்த்துகிறார்கள். (சிரிப்பு)