விருப்பத்தின் இயல்பு

வியாழக்கிழமை,

21 மே - 2015


(உண்மையின் சகவாசம் என்னும் இடுகையின் தொடர்ச்சி)

அனைத்து ஞானிகளும் உங்கள் ஆத்மாவே கடவுள் என்று கூறியிருக்கின்றனர். தாங்களும் நமக்குள்ளேயே கடவுள் வசிக்கின்றார் என்று கூறியிருக்கின்றீர்கள். அப்படியானால் ஏன் உருவ சிலை வழிபாடு செய்ய வேண்டும்?

இந்த அமைப்பை இரண்டு விதங்களில் புரிந்துகொள்ள வேண்டும்.

1. ஆன்மீக வழியில் பார்த்தால்,கடவுள் அனைத்திலும் வியாபித்துள்ள நித்தியமான தெய்வீகம். ஆன்மீகத்தில் ஆன்மா மற்றும் ஒரே தெய்வத்தின் மீதே அனைத்து முக்கியத்துவத்தையும் வைக்கின்றோம், உருவசிலைகளை பற்றிய பேச்சே கிடையாது.

2. அதிதெய்விக் என்னும் மற்றொரு நிலையில், (பல்வேறு கடவுளர், பெண் தெய்வங்கள், வானுலக தேவதைகள்) பல தெய்வங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றோம். உதாரணமாக கணேச உத்சவம் நிகழும் போது நாம் அனைவரும் கணேச சிலையை நமது வீடுகளில் வைத்து வழிபடுகின்றோம். பின்னர் அதிபௌதிக் என்னும் வேறொரு நிலையில், (பொருளுலக படைப்பில்) நாம் உண்ணுதல், அருந்துதல்,சேவை புரிதல் ஆகிய பல்வேறு செயல்களை  புரிகின்றோம். அதிதெய்விக் என்னும் நிலை, பொருள் செல்வ செழிப்பு,வளமை ஆகியவற்றை பொறுத்த அதிபௌதிக் என்னும் நிலையை விட மிக நுண்ணியது ஆகும். ஆன்மீக எல்லைப்பரப்பினை ஒருவர் நிராகரித்து விட்டால், மற்ற இரண்டில் அவரால் முழுமையான நிறைவை அனுபவிக்க முடியாது.அதனால் தான் நாம் சமாதான மந்திரத்தினை ஜெபிக்கும் போது, மூன்று நிலைகளிலும் அமைதியும் நிறைவும் ஏற்படட்டும் என்று குறிப்பிட்டு, சாந்தி (அமைதி/சமாதானம்) என்று மூன்று முறை ஜபிக்கின்றோம்.

வாழ்வில் ஆன்மீக வழியில் முன்னேறிச் சென்றால், மற்ற இரண்டு நிலைகளும் முன்னேற்றம் ஏற்படும். அனைத்தும் ஒன்றினாலேயே ஆக்கப்பட்டுள்ளது என்று காண்பது ஒரு வழி. உதாரணமாக, அனைத்தும் மரத்தாலேயே செய்யப்பட்டுள்ளது, எதை எரித்தாலும் மரமே எரிகின்றது. மற்றொரு நிலையில், ஒவ்வொரு பொருளுக்கும் வேறுபாடு உள்ளது. அனைத்தும் மரத்தாலேயே செய்யப்பட்டிருந்தாலும் நாற்காலியை மேஜை என்று கருத முடியாது, மேஜையை ஒரு கதவாகவோ கதவை ஒரு கட்டிலாகவோ கருதமுடியாது. நான் கூறுவது புரிகிறதா?

குருதேவ், ருத்ராக்ஷம் அணிவதற்கு விதி முறைகள் யாவை? அதன் பயன்கள் யாவை?

விதிமுறைகள் என்று எதுவும் கிடையாது. அணியலாம், அணியாமலும் இருக்கலாம். அதன் அதிர்வலைகள் நேர்மரையானவை. எனவே அணிவது நல்லது. உங்களுக்கு நம்பிக்கையிருந்தால், நிச்சயமாக அணியலாம். உங்கள் ஆத்மா ருத்ராக்ஷத்தை விட அதிக சக்தியுடையது. அதில் நம்பிக்கை வையுங்கள். மந்திரம் மருந்து மற்றும் பரிகாரம் இவற்றை விட சங்கல்பம் மிக அதிக  சக்தியுள்ளது. காலம்காலமாக ருத்ராக்ஷத்தின் நன்மைகள் பேசப்பட்டிருக்கின்றன. ஆனால் அதை அணிவதன் மூலம் மட்டுமே நீங்கள் விரும்புவதை அடைய முடியும் என்று எண்ணாதீர்கள். இளைப்பாறி ஓம் நமசிவாய என்று பித்தாலும் போதும். உங்கள் மெய்யுணர்வு அத்தகைய வலிமையுள்ளது.

குருதேவ், எவ்வாறு ஒருவர் தன்னுடைய நோக்கம் மற்றும் விருப்பம் ஆகியவற்றின் சக்தியினை பலப்படுத்த முடியும்?

விருப்பம் எப்போதுமே சந்தோஷம் அல்லது ஞானத்தை தேடியே அமைகின்றது. விருப்பம் ஒரு நபர், பொருள், அல்லது நிலைமை இவற்றை பொறுத்ததானால் அதைவிட சிறந்த ஒன்றை காணும் போது அதை நோக்கியே ஓடுகின்றது.

குருதேவ், என் வாழ்வில் சில நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. தற்கு முன்னர் நிகழ்ந்ததில்லை. ஆனால் அவற்றை நான் கடந்தது போன்றே உணர்கின்றேன். இது எவ்வாறு சாத்தியம்?

அது பரவாயில்லை. இத்தகைய உணர்வுகள், நமது மெய்யுணர்வு மிகவும் பழமையானது; நாம் நினைப்பதை விட நீண்ட காலமாக இருந்து வருகின்றது என்பதையே குறிக்கின்றது. இன்று நான் என் கைபேசியில் ஒரு குறுஞ்செய்தியை அடைந்தேன். அதில், விஞ்ஞானிகள் நமது உடலின் ஒவ்வொரு அணுவும் துகளும் மில்லியன் கணக்கான ஆண்டுகளாக  உள்ளன" என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே அது உண்மை தான்.

வாழ்வில் சவால்களை எதிர்கொள்ளும் போது, எவ்வாறு நமது எண்ணங்களுக்கு சாட்சியாக இருப்பது?

நீங்கள் சவால்களை எதிர்கொள்ளும் போது, அது ஏற்படுத்தும் உணர்வினை கவனிக்க வேண்டும். மனம் ஒரு சுழலில் சிக்கிக் கொண்டிருக்கும் போது, மூன்று விஷயங்கள் உங்களுக்கு உதவும்.
1. யாரோ ஒருவர் உங்களை  ஆழ்ந்து விரும்பி,கவனித்து உதவுவதற்கு இருக்கிறார், ஒருநாளும் கைவிடமாட்டார் என்னும் அசைக்க முடியாத நம்பிக்கை.
2. சாதனா (ஆன்மீகப் பயிற்சிகள்)
3. நீங்கள் அடைந்துள்ள ஞானச் செய்திகள்

பயிற்சிகள், ஞானம், அசைக்க முடியாத நம்பிக்கை - இந்த மூன்றும் உங்களுக்கு அத்தகைய காலங்களில் பெரிதும் உதவும்.