மற்றவர்களை புரிந்து கொள்வது.

12 மார்ச் 2015, 

பெங்களூர், இந்தியா



கேள்வி & பதில்

இளம் வயதினரை எவ்வாறு கையாள்வது?

ஒரு பழமையான சமஸ்கிருத ஸ்லோகம் சொல்கிறது “ பிரப்தேது சொடசே வர்சீ, புத்ரம், மித்ர வதா சிரத்”. உங்களது மகளோ, மகனோ 16 வயதுக்கு மேல் ஆகிவிட்டால், நீங்கள் அவர்களுக்கு பெற்றோர்களாக இல்லாது, நண்பர்களாக இருக்கவேண்டும். நீங்கள் அவர்களது நண்பர்களாக இருந்து, அவர்களது மனதையும், அவர்களது கஷ்டத்தையும் புரிந்து கொள்ளவேண்டும். அவர்களை நன்கு புரிந்து கொள்வதால் தான் அவர்களிடம் நல்ல மாற்றங்களை காணலாம், கட்டாயப்படுத்தி திணிப்பதால் அல்ல. உங்களது சிந்தனைகளை இளைஞர்களிடம் திணிக்க முடியாது. உங்களது சிந்தனைகளை அவர்கள் முன் வைத்துவிடுங்கள்.

அவர்கள் தவறு செய்தால், நீங்கள் அதன் மோசமான விளைவுகளை தெரியப்படுத்தலாம். யாராவது போதை பொருளுக்கு பழக்கப்பட்டிருந்தால்,“போதை மறுவாழ்வு மையத்திற்கு” அழைத்து சென்று போதைக்கு அடிமையாகி உள்ளவர்களின் வேதனைகளை காட்டலாம்.போதைக்கு பழக்கபட்டவர்கள், எந்த நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள் என்றும், நீயும் இதை விரும்புகிறயா? என்றும் கேட்கலாம். இது தான் நம்மால் கேட்க வேண்டியது.

படிப்பினால் தான் நல்ல மாற்றங்கள் உருவாகும்.மக்களை ஏற்று கொள்வதாலும், அவர்களது நிலையை, சங்கடமான சூழ்நிலையை நன்கு புரிந்து கொள்வதாலும் தான் நல்ல படிப்பினை ஏற்படுகிறது, அவர்களது வளர்ச்சிக்கும் வழி செய்கிறது. உங்களது எண்ணங்களை அவர்கள் மேல் கட்டாயப்படுத்தாமல், அவர்களுக்கு அறிவுரை கூறுவதால் நீங்கள் அவர்களை வளர்ச்சி பாதையில் செல்ல வழி செய்கிறீர்கள்.

சற்று பின் நோக்கி, உங்களது இளமை பருவத்தை ஞாபகப்படுத்தி பாருங்கள். உங்கள் பெற்றோர்கள் அவர்களது கருத்தை உங்கள் மேல் திணிக்கும் பொழுது, விரும்பினீர்களா? இல்லை. சரிதானே! நீங்கள் விரும்புகிறீர்களோ, இல்லையோ தலைமுறை தலைமுறையாக மிகுந்த இடைவெளி இருந்து கொண்டு இருக்கிறது. தலைமுறை இடைவெளிக்கு பாலமாக இருப்பது தான் திறமையான செயல். இது தான் முதல் நிலை. இரண்டாவதாக, கலாச்சார நாகரீக இடைவெளிக்கு பாலமாக இருப்பது.

இந்தியாவில், ஒவ்வொரு 200 மைல் இடைவெளிக்கும் கலாச்சாரம் வேறு பட்டதாக இருக்கும். இதுபோல் தான் ஐரோப்பாவிலும். கலாச்சார வேறுபாட்டையும், மத வேறுபாட்டையும் எவ்வாறு ஒருக்கிணைப்பது என்று நாம் யோசிக்க வேண்டும். நான் சொல்கிறேன். இது மிகவும் சாதாரண காரியம். மனதில் தூய்மையும், ஒவ்வொருவரையும் சார்ந்திருக்கும் தன்மையும் தான் தேவை. இதில் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று பொருட்படுத்த தேவையில்லை. 

ஒருவர் எப்படியாக, யாராக இருந்தாலும் அவரை வேறுபடுத்தி பார்க்காமல், நம்மை சார்ந்தவர் என நினைப்பது தான் ஆன்மீக பாதை.

நீங்கள் இப்பொழுது கேட்கலாம். “ISIS “ சார்ந்தவரை எப்படி நம்மிடம் ஒரு பாகமாக எடுத்து கொள்வது என்று? நான் ஒன்று கேட்கிறேன். மக்கள் நோயாளியாக இருக்கும்போது, அவர் நம்மை சார்ந்தவர் என்று நினைக்கிறோம். சிலர் மன நோய்களுக்கு ஆளாகி, அவரை மருத்துவமனையில் சேர்த்தாலும் அவர் நம்மை சார்ந்தவர் என்று தான் கருதுகிறோம்.அதுபோல், இவர்களும் மிக கொடூரமான நோயாளிகள் தான்.அவர்களது மூளை பயங்கரவாதம் என்ற புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.அவர்கள் நோயாளிகள். அவர்களை இதிலிருந்து  எப்படி மாற்றங்களை ஏற்படுத்துவது என பார்க்கவேண்டும். பார்ப்பதற்கு முடியாததற்கு அடுத்ததாக தோன்றும். ஆனால், புவியில் கொஞ்சமாவது அவர்களுக்கு மனித தன்மை இருக்கும்.ஆனால், அவர்கள் மாறுவார்கள்.

“அங்குலி மாலா”(விரல் மாலை) கதை ஒன்று உள்ளது. மனிதர்களின் கட்டை விரலை எடுத்து அதை மாலையாக கட்டுவது பொழுதுபோக்காக இருந்தது. அவன் அவ்வாறு கொடூரங்கள் செய்துள்ளான். பல மனிதர்களை கொன்று 999 கட்டை விரல்களை சேகரித்துள்ளான். அவன் மாலைக்கு மீதம் ஒரு  பெரிய கட்டை விரல் தேவைப்பட்டது. தற்செயலாக அந்த மனிதன், பகவான் புத்தரை சந்திக்க நேர்ந்தது. பகவான் புத்தர் நல்ல உயரமாக, இளமையாக, திடகாத்திரமாக உட்கார்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். பகவான் புத்தரின் கட்டை விரலை அவன் 1000 ஆவது ஆக்க விரும்பினான். பகவான் புத்தரின் கட்டை விரலை எடுக்க சென்ற அவனுள் ஏதோ நிகழ்ந்தது. அவன் நிலை தடுமாறினான். அவனது வாழ்வில் மிக பெரிய மாற்றம் ஏற்பட்டது. பிற் காலத்தில் அவன் சந்நியாசியாக மாறினார். 

வால்மீகி ஒரு கொள்ளைகாரர். அதன் பின் அவருள் சில மாற்றங்கள் நடந்து, பிற்காலத்தில் மிக பெரிய முனிவராக இருந்தார். இது போல் நிறைய கதைகள் உள்ளன. மாற்றங்கள் வர நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆகையால், நாம் நிகழ்காலத்தில் விழிப்பாகவும், இந்த புவியில் யார் மீதும் தீய எண்ணங்கள் இல்லாமலும் இருக்க வேண்டும். நமது மனம் சுத்தமாக இருக்க வேண்டும் “இறை சக்தி நமது புத்திக்கு ஊக்கமளிக்கிறது” – இவ்வாறு காயத்ரி மந்திரம் சொல்கிறது. இந்த புத்திசாலித்தனம் நமது வாழ்க்கைக்கு நல்ல வழியை காட்டுகிறது. உங்கள் நியாயத்தை தூக்கி எறிவதல்ல ஆன்மீகம்.

ஆன்மிகம் என்பது புத்திசாலித்தனத்தை உபயோகிக்காமல் உணர்வுபூர்வமாக இருப்பது என்று பலர் கருதுகிறார்கள்.தவறு. பகுத்தறிவும், அதற்கும் மேற்பட்ட உள்ளுணர்வும் ஒருவரை ஒருக்கிணைத்த முன்னேற்றத்தை அடைய செய்கிறது. “தியோ யோ ந பிரச்சோ தயாத்” என்று சொல்கிறது – நமது புத்திசாலித்தனத்தை கூர்மையாகவும், பகுத்தறிவுள்ளதாகவும், மேன்மையான ஒரு குறிக்கோளை அடைய இறைசக்தி நமக்கு ஊக்கமளிக்கிறது.“புத்திசாலித்தனம் ஆன்மீகத்தில் திளைத்திருக்கவும், மனதில் மேன்மையான எண்ணங்கள் தோன்றவும்” என்ற இறை வணக்கத்தை மகாத்மா காந்தி அவர்கள் தினமும் பாடுவது வழக்கம். நீங்களும் இந்த  மாதிரியாக இறைவனை தொழலாம்.

உள்ளுணர்வு, இந்த வெளி உலகத்தை படைக்கிறது என்ற கட்டுரையை நீங்கள் இன்று “டுவீட் “ செய்துள்ளீர்கள். பல பிரபஞ்சங்களை உள்ளுணர்வுகளால் படைக்கப்படுகிறது என்று. எப்படி இது சாத்தியமாகும்?

ஆம். ஒன்றுக்குள் ஒன்றாக அதிக எண்ணிக்கையுள்ள பிரபஞ்சங்கள் உள்ளன. நமது மூளை ஒரு அதிர்வை அறியும் கருவி. நமது அறியும் சக்தி வானெலியில் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையை தேர்வு செய்வது போல் தான். நீங்கள் அலைவரிசையை மாற்றினால்(அறியும் சக்தியை மாற்றுவது போல்), பின் மற்றெரு உண்மை நிலையை காணலாம்.இது ஒரு வசீகரிக்கிற கட்டுரை, அதனால் தான் இதை “ டுவீட் “ செய்தேன்.

குருதேவ், நான் நினைப்பது அல்லது ஏதாவது ஒன்றை சொன்னால், அது உடனடியாக நடந்து விடுகிறது அல்லது பின்னர் நடந்து விடுகிறது.

நீங்கள் தியானம் செய்யும் பொழுது, இதுபோல் நடக்கும். எது நினைக்கிறீர்களோ, அது நடக்க ஆரம்பிக்கும் அல்லது என்ன நடக்க போகிறதோ அது எண்ணங்களாக உங்களுக்கு வரும். உங்களது தேவைக்கு முன்பே, அது உங்களுக்கு கிடைத்து விடும். அதுதான் முற்றுப்பெற்ற நிலை. ஆகவே, பெரிய விசயங்களை கேளுங்கள். சின்ன, சின்ன விசயங்களை கேட்காதீர்கள். உங்களது நல்ல நோக்கத்தில், முழு கவனம் இருக்கும் பொழுது பின் வெளிப்படையான தன்மை நிகழ்கிறது. நல்ல நோக்கத்தின் மூலமாக, நீங்கள் எது நினைத்தாலும் அது நடக்கும். இங்கு வருவதற்கு கூட, நீங்கள் ஆசிரமம் செல்லவேண்டும் என்று விரும்பிய நோக்கமே!.ஆகவே, உங்கள் நோக்கம் தான் உங்களை காரில் ஏற்றி, வாகன நெரிசலில் காரை ஓட்டி இங்கு வந்துள்ளீர்கள்.முதலில் நோக்கம், உங்களது கவனம், அதன் பின் வெளிப்படையான தன்மை தொடர்கிறது.

குருதேவ், அமைதி மற்றும் தெய்வீக தன்மையை எல்லா மதங்களிலும் போதிக்கிறார்கள் என நினைக்கிறேன். பின் ஏன் இந்து மதத்தில் மட்டும் விலங்குகளுக்கு ஆதரவாக உள்ளார்கள்?

ஒவ்வொரு மதத்திலும்,பரம்பரை பழக்க வழக்கத்திலும் அபூர்வமான தன்மைகளை காணலாம். எந்த மதத்திலும் உள்ள ஒப்பற்ற தன்மைகள் உலக பரம்பரை சொத்தாகிறது. ஜெயின் மதத்தவர்கள் முழுக்க சைவ உணவு சாப்பிடுபவர்கள் மற்றும் மிருகங்களை நேசிப்பவர்கள். பெரும்பாலும் மேற்கத்தியர்கள் சைவ உணவு சாப்பிடுபவர்கள் மற்றும் மிருகங்களை நேசிப்பவர்கள். இன்று உலகம் முழுவதும்“விலங்குகள் உரிமை சங்கங்கள்” உள்ளன. இந்தியாவிற்கு வெளியிலுள்ளவர்கள் தான் மாமிசம் சாப்பிடுபவர்கள் அல்லது விலங்குகளை கொடுமைபடுத்துகிறார்கள் என்று நாம் நினைக்கிறோம். அதுபோல் இல்லை.

உலகம் முழுவதும் சைவ உணவின் பயன்களை அறிந்து உள்ளார்கள். விலங்குகளை கொடுமை படுத்துவதை தடுக்க உலகம் முழுவதும் பல சங்கங்கள் செயல்படுகின்றன. உலகம் முழுவதும் இயற்கையை பாதுகாக்கவும் மற்றும் நேசிக்கவும் செய்கிறார்கள். இன்று மிக அதிகமான அளவில் மக்கள் விலங்குகளை பாதுகாக்கும் சட்டத்தை மதிக்கிறார்கள்.

மனதை நாம் எவ்வாறு கட்டுப்படுத்துவது?

மூச்சின் மூலமாக.உங்கள் மூச்சை கட்டுபாட்டிற்குள் வைத்திருத்தால், மனதை கட்டுப்படுத்தலாம். “பிராணயமா” செய்யுங்கள். பிராணயமா செய்ய ஆரம்பித்து விட்டீர்கள் என்றால், உங்கள் மனம் கட்டுப்பாட்டிற்குள் வர ஆரம்பித்து விடும். உங்கள் மனதை நேரிடையாக கட்டுபாட்டிற்குள் கொண்டு வர முடியாது.அது இயலாது. நீங்கள் ஒன்றை விரும்பும் போது, உங்கள் மனம் அதில் முழுமையாக இருக்கும். நீங்கள் ஒரு திரைப்படத்தை விரும்பினால் 2 -3 மணி நேரத்திற்கு அதிலேயே முழு கவனத்தையும் வைக்கிறீர்கள். நீங்கள் ஒன்றை விரும்பினால், உங்கள் முழு கவனத்தை தொலைகாட்சி அல்லது திரையிலோ உள்ளது. ஒரு விசயத்தை நீங்கள்  விரும்பும் போது உங்களது மனம் அதிலேயே கவனத்தை செலுத்துகிறது. மூச்சின் உதவியுடன், உங்களுக்கு பிடிக்காத விசயமாக இருந்தாலும், அதன் மேல் உங்கள் கவனத்தை செலுத்த முடியும். மூச்சின் உதவியுடன், உங்கள் மனதை ஒரு நிலையில் குவிக்க முடியும். நீங்கள் ஒன்றை விரும்பும் போது, நீங்கள் அதன் மேல் கவனத்தை செலுத்த வேண்டியதில்லை. கவனம் ஏற்கனவே உள்ளது. அன்பு ,பேராசை மற்றும் பயம் உங்களை ஒரு நிலைபடுத்த உதவுகிறது. இந்த மூன்றும் வேலை செய்யவில்லையென்றால், நான்கவதாக “அமைதியான மனநிலை” என்று சொல்வேன். ஒரு நிலையில் கவனத்தை குவிக்க, அமைதியான மனநிலை உதவும்.