அவமதிப்பு – பொய்த் தோற்றத்தில் ஆசீர்வாதம்!

17 ஏப்ரல் 2013, கால்காரி, கானடா



கே: மிகவும் பலமாக உள்ள என்னுடைய அகம்பாவத்தை நான் எவ்வாறு விடுவது?

குருதேவ்: ஓ, சுவர்கத்திற்காகக் கூட அம்மாதிரிச் செய்யாதீர்கள்! உங்களுடைய அகம்பாவத்தை விட்டுவிடாதீர்கள்! உங்களுடையடைய அகம்பாவம் தான்  உங்களுடைய மிகப் பெரிய பிரச்சினை என்றால் அதை உங்களுடைய சட்டைப் பையிலோ அல்லது பர்ஸிலோ வைத்திருங்கள். அது இருக்கட்டும். உங்களுடைய அகம்பாவம் உங்களைத் தொந்திரவு செய்துகொண்டிருந்தால், நீங்கள் அவமதிப்பைப் பெற முழுமையாக இடமளியுஙகள். நீங்கள் அதைச் செய்வீர்களா?அவ்வளவுதான்! மிகப் பெரிய பிரச்சினை என்னவென்றால் நீங்கள் அவமதிப்பை பெற உங்களுக்கு விருப்பம் கிடையாது. அவமதிப்பை அடைந்துவிடுங்கள், அகம்பாவம் மறைவதை நீங்கள் காண்பீர்கள்.

வாழ்க்கையில், எவரேனும் எங்கேயாவது உங்களை அவமத்திதால், அது உங்களைப் பணிவாக்கத் தான் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.அது ஒரு ஆசி; புன் சிரிப்புடன் நீங்கள் அந்த நிலைமையை கடக்க வேண்டும். ஆரம்பத்தில் நீங்கள் அசௌகரியமாக எண்ணலாம் ஆனால் நீங்களே ஆச்சரியப்படுமளவிற்கு உங்களுக்குள் ஒரு மாறுதல் இருக்கும். அப்போது, எவரும் எப்போதுமே உங்களுக்குள் உள்ள புன் சிரிப்பையும், அன்பையும் மற்றும் தயையையும் உங்களிடமிருந்து பறித்துவிட முடியாது. அவமதிப்பைப் பற்றியோ அல்லது விமரிசனம் செய்ய்யப்படுவதைப் பற்றியோ நாம் ஒருபோதும் கூச்சப்படக் கூடாது. விமரிசனப்படுத்தப் படும்போது அதைத் தாங்கிக் கொள்ளுங்கள். பல சமயங்களில் நாம் நமது கைகளை கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறோம்; இதுதான் நான், இது என்னுடையது, என்னுடையது, என்னுடையது! (என்று) எவரேனும் நம்மை விமரிசனம் செய்கையில் நாம் பின்வாங்குகிறோம். நாம் மற்றவர்களின் விமரிசனத்திற்கு அஞ்சுகிறோம். இவர்களெல்லாம் பலவீனமானவர்கள் என்று நான் சொல்கிறேன். எவரேனும் உன்னை விமரிசித்தால் அதை நீங்கள் வரவேற்க வேண்டும்! அதில் ஏதாவது எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது இருந்தால் அதை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய நட்பை இழக்குமளவிற்கு அவர்கள் உங்களுக்கு கருத்துரை அல்லது விமரிசனம் வழங்குகிறார்கள்.

உங்களுக்கு உதவ இவ்வுலகில் மக்கள் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மக்களை விரோதிகளாகப் பார்க்காதீர்கள்.முட்டாள்கள், உலகை விரோதிகளும்,எதிர்ப்புணர்சிகள் உடையவர்கள் நிறைந்ததாகப் பார்ப்பார்கள். அறிவுள்ளவர்கள், உலகை நண்பர்கள் நிறைந்ததாகப் பார்த்து, மக்கள் உதவவே இருக்கிறார்கள் என்று நினைப்பார்கள். உங்களை விமரிசிக்கும் எவரும் உங்களுக்கு ஒரு நன்மையை செய்கிறார் என்று அறிவுள்ளவர் கோணத்தில் பாருங்கள். அப்படி இல்லையென்றால் ஒரு சாதாரண மனிதர், “சரி, எதற்காக நான் இன்னாருடைய நட்பை இழக்க வேண்டும்? சும்மா நல்லவற்றை மட்டுமே சொல்லி விட்டுப் போய்விடலாம். உங்களுடைய குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமில்லை” என்று கூறலாம். ஆகையால், உங்களை ஒருவர் விமரிசிக்கும் போது, அதைக் கவனியுங்கள். அந்த விமரிசனத்தில் அர்த்தம் இருப்பின் அதை எடுத்துக்கொள்ளுங்கள். அது அசூயையின் விளைவாக இருந்தால் அவர்களிடம் தயைகாட்டுங்கள்.அது அவர்கள் பிரச்சினை; அவர்களின் அசூயையை தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எரிச்சலை உன்னிடம் காட்டுகிறார்கள். ஒரு விதத்தில், அவர்கள் மனதிலுள்ள எரிச்சலை தீர்க்க நீங்கள் அவர்களுக்கு உதவி செய்கிறீர்கள்.

அவர்கள், தயை காரணமாக, நட்பு மற்றும் அன்பினால் அவ்வாறு கூறினால், அதை அவ்வாறே எடுத்துக்கொள்ளுங்கள். ஆகவே, நீங்கள் பொருட்செரிந்த விமரிசனத்தை சந்தோஷமான அமைதியான மனதிலிருந்து வழங்கி, அதே மனதில் விமரிசனத்தையும் ற்றுக்கொள்ள வேண்டும். இது உங்கள் அகம்பாவத்தை மாற்றும்.

கே: குருதேவ், நீங்கள் அமைதியான மனநிலை பற்றி பேசமுடியுமா?

குருதேவ்: பாருங்கள், நம்முடைய புலன்கள், இயற்கையிலேயே வெளிச்செல்லும் நிலை உடையவைகள். நீங்கள் தூக்கத்திலிருந்து விழிக்கும்போது, புலன்களின் இயற்கை குணத்தின் படி, கண்கள் பார்க்க விழைகின்றன, செவிகள் கேட்க விரும்புகின்றன, நாசி நுகர விரும்புகிறது, தோல் தொட விரும்புகிறது மேலும் நாக்கு ருசி பார்க்க விரும்புகிறது. ஆதலால், புலன்களின் இயற்கைக் குணம் வெளிச் சென்று  முழு படைப்பையும் அனுபவிப்பதே. ஆனால் புலன்களின் அனுபவிக்கும் திறன் வரையறைக்குட்பட்டது.

இன்று நாம் பூங்காவிற்குச் சென்றோம், இயற்கைக் காட்சி அழகாக இருந்தது, ஆனால் எவ்வளவு நேரம் நீங்கள் அழகிய இயற்கைக் காட்சியை காண்பீர்கள்? புலன்கள் வழியாக அனுபவிக்கும் ஆசை முதலில் மனதில் எழுகிறது,ஆனால் புலன்களின் அனுபவிக்கும் திறமை அளவிற்கடங்கியது. உங்களுக்கு கூழ் பிடிக்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள் அல்லது ஆப்பிள் பணியாரம் என்று வைத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் எவ்வளவு உண்ண முடியும்? ஒரு துண்டம், இரு துண்டங்கள், மூன்று பரிமாறல்கள்? மூன்றாவது முறை பரிமாறப்படும்போது, உங்களுக்கு மகிழ்ச்சி அளித்துக் கொண்டிருந்த அதுவே வேதனையாகிறது. இது எதனானென்றால், நாம் அனுபவிக்கக் கூடிய ஆற்றல் நம் புலன்களுக்கு உட்பட்டது. அடிக்கடி ஒருவர் இந்த சமமின்மையைப் பார்க்கிறார் – மனதின் தேவையின் அளவிற்கு புலன்கள் திறமையற்று இருப்பது.

மூன்று சூழ்நிலைகள் இருக்கலாம்:
பொருட்கள் பெறக்கூடியதாக இல்லை; மனதிற்கு உணவு தேவை ஆனால் அது கிடைக்கவில்லை.
உணவு உள்ளது, ஆனால் மனதிற்கு அதை அனுபவிக்கும் ஆசையில்லை.
மனதில் ஆசை உள்ளது, உணவும் உள்ளது ஆனால் புலன்களுக்கு அனுபவிக்கும் திறமை இல்லை. இம்மூன்று சூழ்நிலைகளையும் நீங்கள் பார்க்க முடிகிறதா?

ஒரு நல்ல மனிதர் என்னிடம் வந்து கூறினார், “குருதேவ், எனக்கு 50 வயதாகிறது, நான் ஒரு உறவிற்காகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் ஆனால் சரியான நபரை என்னால் காணமுடியவில்.” என்று.“காத்திருங்கள், இன்னும் 20 வருஷங்களுக்குப் பாருங்கள்.” என்று நான் பதில் கூறினேன். நீங்கள் அது பற்றி விரும்பித் தேர்வு செய்வதாக இருந்து, ஒன்றிற்காக பார்த்துக்கொண்டிருந்தால், உங்களுக்கு அது கிடைத்தால் கூட, நீங்கள் அதை அனுபவிப்பதில்லை. ஏன்? இது, உங்கள் மனம் அதில் இல்லாததே காரணம். மனப்பாங்கு, புலன்களின் திறமை ஆகியவைகளிடையே சமநிலை இல்லை; இவைகளனைத்தும் ஒத்துப் போக வேண்டும். அப்போது மட்டும்தான் நீங்கள் இந்த கிரகத்திலுள்ள எதையும் அனுபவிக்க முடியும். மனதின் பதட்ட நிலை, பொருட்களின் இருப்பு நிலை மேலும் புலன்களின் பலம், இவைகளனைத்தும் அநேக சமயங்களில் ஒத்திருப்பதில்லை.

எல்லாமே இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுவோம். நீங்கள் பசியுடனிருக்கிறீர்கள், உங்களுக்கு உணவு வேண்டியுள்ளது, நீங்கள் அதை அனுபவிக்க முடியும்,ஆனால் அது கூட தாற்காலிகமானதே. அது சில கணங்கள் நீடிக்கிறது, மறுபடியும் நீங்கள் பழைய நிலைமைக்கு வருகிறீர்கள். இது இப்படித்தான்! அது எதை உண்டாக்குகிறது? விரக்தியை! பூர்த்தியான ஆசை விரக்தியை உண்டாக்குகிறது, நிறைவேறாத ஆசையும் விரக்தியை உண்டாக்குகிறது. நாம் என்ன செய்ய வேண்டும். பதில் என்ன?

பதில் உட்புறம் நோக்குவதே. ஆனந்தம் எங்கிருந்து வருகிறதோ அந்த ஆனந்தத்தின் மூலத்திற்குச் செல்லுங்கள். நீங்கள் ஆந்தத்தின் மூலத்திற்குச் செல்லும்போது புலன்கள் பலப்படுத்தப் படுகின்றன, மனதில் திருப்தி உண்டாகிறது, நீங்கள் விரும்பியவாறு பொருட்கள் கிடைக்கின்றன. புலன்கள் உள் நோக்கித் திருப்பப் படும்போது இவை மூன்றும் நிகழ்கின்றன, புலன்களின் அந்த உள் நோக்கிய திருப்புதலே அமைதியான மன நிலை. நமக்கு வாழ்வில் மூன்று விஷயங்கள் வேண்டும், அமைதியான மனநிலை, விருப்பு மற்றும் தயை.

நாம் அடிக்கடி நினைப்பது என்னவென்றால், அமைதியான மனநிலயானது, களையற்று, சுருசுறுப்பும் ஆர்வமற்றும் இருப்பதென்று; இம்மாதிரியானவர்கள் இப்படித்தான் அமைதியான மனநிலை உள்ளவர்கள், உயிரற்றதாக இருக்கிறார்கள் என்று. இல்லை, அதுவல்ல அமைதியான மனநிலை. என்னைப் பொருத்தவரை, அமைதியான மனநிலை உயிரும், ஆர்வமும் நிறைந்த ஒன்று. சம்ஸ்கிரதத்தில் பழய கூற்று ஒன்று உள்ளது, ‘அமைதியான மனநிலை உனக்குக் கொடுக்காத சந்தோஷமும், குதூகலமும் எது உள்ளது?’ என்று. இதன் பொருள், அமைதியான மனநிலை,  வாழ்வில் உங்களுக்கு எப்போதும் தேவையான அனைத்து ஆனந்தத்தையும் அளிக்கும் என்பதே. உங்களுக்கு விருப்பமென்று வேண்டும். நீங்கள் மூச்சை உள் இழுப்பது விருப்பம்,வெளிவரும் மூச்சு அமைதியான நிலை, இரண்டிற்குமிடையே உள்ளது தயை.

உங்களுக்கு விருப்பம் மட்டும் இருந்தால் அதைத் தீர்த்துவிட்டு வெறுப்படைவீர்கள். அதீத விருப்புள்ளவர்கள், செயல்களைச் செய்துவிட்டு சோர்வடைகிறார்கள். ஏனென்று உங்களுக்குத் தெரியுமா? அது, அவர்கள் அதில் விடாப்பிடியாக இருப்பதானால்தான். அவர்கள் தங்கள் இருதயத்தையும், உயிரையும் அதற்கு அர்ப்பணிக்கிறார்கள். அவர்கள் அவ்வளவு பிரயாசைப்பட்டும் பதிலுக்கு ஒன்றையும் பெறுவதில்லை. அது வருந்தத்தக்க விஷயம். இது அமைதியான மனநிலை காரணமாக மாறக்கூடும், ஆகவேதான் அமைதியான மனநிலை பெரிய வித்தியாசத்தை உண்டாக்கும். ஆகவே, திறவுகோல்: வேலை செய்கையில் விருப்பு, உள்நோக்கிப் பார்க்கையில் அமைதியான மனநிலை, சதா  தயை காட்டுவது.

கே: நீங்கள் விரும்பும் ஒருவர் வேறொருவரை விரும்பும்போது என்ன செய்கிறீர்கள்?

குருதேவ்: அது உங்களுடைய அன்பு நிபந்தனையற்று இருப்பதற்கான ஒரு சோதனை. நிபந்தனை யற்று நீங்கள் அன்பு காட்ட அவர்கள் உங்களுக்கு ஒரு வாய்ப்பைத் தருகிறார்கள். அதை நீங்கள் வலிமையடையவும், அன்பில் வளரவும் உங்கள் ஆதாயத்திற்குப் பயன்படுத்தலாம் அல்லது நீங்கள் வருத்தமோ, சினமோ, வெறுப்பும், அசூயையும் அடையலாம். நீங்கள் எதை விரும்புவீர்கள்? அசூயையில் வளர்ந்து, உங்களுக்குள் அனைத்து அசூயை உணர்ச்சிகளையும் பெறவா, மோசமான எண்ணத்துடன் வருத்தமடைந்து உங்கள் நல்லதிர்வுகளை கெடுக்கவா அல்லது மற்றொருவருக்காக சந்தோஷப்பட்டு, நீங்கள் விரும்புபவரை வாழ்த்தவா! 

இரண்டாவது விருப்பத் தேர்வு கடினமென்று எனக்குத் தெரியும் ஆனால் முதலாவதும் சுலபமல்ல. அசூயையை வைத்துக்கொண்டு அதனுடன் வளைய வருவது இன்னும் கடினம், இல்லையா? அது பற்றி சிந்தியுங்கள். எது எப்படியிருந்தாலும் வாழ்க்கை குறுகியது. அனைத்தும் ஒரு நாள் முடியப் போகிறது. அது பற்றி சிந்தியுங்கள்,உங்களுக்கு அதிக நிம்மதி கிடைக்கும். எப்போதெல்லாம் உங்களை ஏதாவது தொந்திரவு செய்யும்போது, நீங்கள் அநீதியையும், அசௌகரியத்தையும் உணர்கிறீர்கள் அல்லது நீங்கள் தூங்க முடியாதென்று நினைக்கிறீர்கள் அல்லது அந்நிலைமையை கையாள  முடியாதென்று நினைக்கிறீர்கள், அனைத்தும் முடிவடையும் என்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள்! அனைத்தும் முடிவடைந்து நீங்களும் இங்கிருந்து போய்விடுவீர்கள். உங்களால் நன்கு தூங்க முடியும். மறுமொழியாக, இதுவும் அமைதியான மனநிலை.

கே: ஐந்திலிருந்து பதிமூன்றாவது பரிமாணத்தையும், துளிம பௌதீகத்திற்கும் ஆன்மீகத்திற்குமுள்ள சம்பந்ததை விரிவுரை செய்யுங்கள்?

குருதேவ்: வேதாந்தமென்பது வெறும் துளிம பௌதீகம். வேதாந்தம் கூறுவது அல்லது வேதாந்த அறிவு சொல்வது என்னவென்றால் முழு படைப்பும் ஒன்றே ஒன்றால்தான் செய்யப்பட்டுள்ளது, இரண்டு என்று கிடையாது. துளிம பௌதீகமும் மிகச் சரியாக அதையே சொல்கிறது, அனைத்தும் அலை சார்புடையது. ஆக, வேறாகத் தோன்றுவது, வெறும் வேறான தோற்றமே, உண்மையில் அனைத்தும் ஒன்றே ஒன்றுதான். உலகின் மிக உயர்ந்த இயற்பியல் வல்லுநர்களில் ஒருவர் இன்று பெங்களூரு ஆஸ்ரமத்தில் பேசினார். அவர் கூறியது, “நான் பருப்பொருளைப்பற்றி 40 வருடங்கள் படித்தேன், - கடைசியில் அப்படி ஒன்று இல்லை என்று கண்டுபிடிக்கத்தான். அப்படி ஒன்று இல்லை!” என்று.

அவர் வழக்கமாகச் சொல்வது, “நான் பேசும்போது, மக்கள் நான் ஏதோ பண்டைய தத்துவத்தைப் பேசுகிறேனென்று – அது சரிதான், இவையெல்லாம் ஒன்றுமில்லை! ஆன்மீக அறிவு சொல்வதும் இதுவே, அதாவது, எதுவும் ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை என்பதே அனைத்தும்” என்பதையே. உன்னுடைய தியானம் ஒன்றுமில்லாததுடனான சந்திப்பு!

கே: குருதேவ், நீங்கள் எங்களுக்கு ரிஷி கபிலாவைப் பற்றி கூறமுடியுமா? அவரைப் பற்றி சொற்பமாகவே தெரிந்துள்ளது.

குருதேவ்: ரிஷி கபிலா காலிஃபோர்னியாவில் வசித்தார். அப்படித்தான் காலிஃபோர்னியா என்ற பெயர் வந்தது.கபிலரானியா என்பது காலிஃபோர்னியாவின் வேதப் பெயர். ஒரு சந்தர்பத்தில், வேத சம்பந்த அறிவு, தெற்கு மற்றும் மேற்கு அமெரிக்காவில் பரந்திருந்தது. உரை நூல்களில் சொல்லப்பட்டிருப்பதாவது, கபிலரேனியாவிற்கும்,இந்தியாவிற்கும் இடையே உள்ள நேர வித்தியாசம் 12 மணி நேரங்கள். அங்கு பகலாக இருக்கையில், இங்கு இரவாக இருக்கும் மறுதலையாயும்; கபிலரேனிய எனப்படும் காலிஃபோர்னியாவிற்கு இது சரியாகப் பொருந்தும்.

கபிலா, தேவஹுதி என்ற பெண்மணியின் புதல்வன். இன்றைய டெட்ராய்ட் தேவஹுதியுடன் ஒரு தொடர்பு கொண்டது, அங்குதான் தேவஹுதியிலிருந்து தன்னுடைய பெயரைப் பெற்றது டெட்ராய்ட். தேவஹுதியின் மகன் கபிலரேனியா காலிஃபோர்னியாவில் வசித்தான். அவன் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் முந்தைய அவதாரம். அவர் சாங்க்ய தர்ஷணா என்ற தத்துவத்தை தோற்றுவித்தவர். சாங்க்யாவின் பொருள், பிரபஞ்சத்தை உருவாக்கிய பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஈத்தர் (வாயு மண்டலத்திற்கு அப்பாற்பட்ட பரந்த வெளி) ஆகியவைகளின் பலதரப்பட்ட தனிமங்களையும், கொள்கைகளையும் எண்ணுவது என்பது. அது போன்று, அவருடைய தத்துவத்தில், 24 வெவ்வேறு தத்துவங்கள் அல்லது கொள்கைகள் உள்ளன, ஆகவேதான் அது சாங்க்ய யோகா எனப்படுகிறது. அவர், எவ்வாறு பிரஞையும், பொருளும் வெவ்வேறு என்பதைப் பற்றி கூறுகிறார்; பிரஞை மற்றும் பொருளுக்குமிடையே உள்ள தொடர்பு விரிவாக விமரிசிக்கப்படுகிறது. பகவத் கீதையின் இரண்டாவது அத்தியாயமும் சாங்க்ய யோகா என்று கூறப்படுகிறது- எங்கு பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ணர், மனமும்,உள் உயிரும் பொருளிடமிருந்து வேறுபட்டது, ஆத்மா இறவாதது என்று கூறுகிறாரோ. இந்த உள் உயிர் பற்றிய அறிவு வழங்கப்பட்டுள்ளது.

கே: ஏன் கலாச்சாரங்கள் மோதுகின்றன? ஏன் மனித வர்கம் மறைகிறது? இது பற்றி நீங்கள் அறிவு புகட்ட முடியுமா?
குருதேவ்: அது ஒரு நல்ல கேள்வி. இன்று பெங்களூரிலும், பாஸ்டனிலும் ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இது சகிப்பின்மை; அஹிம்சை எனும் கலாச்சாரம் மறைந்து விட்டது. ஆகவேதான் நாங்கள் எங்கள் வேலையைச் செய்ய வேண்டும். இவ்வாறு நீங்கள் நினைக்கிறீர்கள் இல்லையா? நாம் அனைவரும் சேர்ந்து சில வேலைகளைச் செய்யலாமா?
இந்தியாவிலும் கூட, துரதிர்ஷ்டவசமாக, அரசியல்வாதிகள் நிலைமையைப் பாழடித்துவிட்டார்கள். மக்களுக்கு பொதுக் கல்வி அளிப்பதற்குப் பதிலாக,  தீவிரவாதத்தைப் போற்றும்  மதம் சார்ந்த கல்விக் கூடங்களை அவர்கள் ஊக்குவிக்கிறார்கள், அது துரதிர்ஷ்டவசமானது. இது போன்ற மதம் சார்ந்த வன்முறை முடிவடைய வேண்டும், இல்லையென்றால் உலகம் பாதுகாப்பான இடமாக இருக்காது.
சத்தியம், நிதர்சனம் பற்றிய விசாலமான அறிவு அவசியம். ஒவ்வொரு மதத்தையும் போற்றுங்கள், ஒவ்வொருவரையும் கௌரவப்படுத்துங்கள். உங்களுடைய வழி மட்டுமே இறைவனை அடைய வழி, மற்றவர்கள் நரகத்திற்குப் போகிறார்கள், நீங்கள் மட்டுமே சுவர்கத்திற்குப் போகிறீர்கள் என்று நீங்கள் கூறத் தேவையில்லை.
இம்மாதிரி மக்கள் மற்ற அனைவருக்கும் நரகத்தை உண்டாக்குகிறார்கள். மத சார்பற்றவர்களைக் கழித்துக்கட்டுவதன் மூலம் அவர்கள் இறைவனுக்குச் சேவை செய்கின்றவர்கள் என்றுஅவர்களைப் பற்றி நினைக்கிறார்கள். இது மிகவும் துரதிர்ஷ்டமானது.
குழந்தைகளுக்குக் கல்வி புகட்டப்பட வேண்டும். இல்லையெனில், அவர்கள் இதுவே சத்தியம், மற்றவர்களெல்லாம் நம்பிக்கையற்றவர்கள்,  வாழ உரிமையற்றவர்கள்  என்று நினைத்து வளர்கிறார்கள். இது போன்ற மனப்பாங்கு ஆபத்தானது. இதுதான் பிரச்சினை என்று நீங்கள் எவ்வளவு பேர் நினைக்கிறீர்கள்? இந்த மனப்பாங்கை நாம் மாற்றவேண்டிய அவசியம் உள்ளது, விசாலமான ஒளிக்கற்றை போன்ற அறிவை ஊட்டி, நாம் அனைவரும் அதற்காக உழைக்க வேண்டும்.

நாம் இங்கே பேசிக்கொண்டிருக்கும்போது, ஈராக்கில் ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. சுகாதார மந்திரியும், விளையாட்டு மந்திரியும் வந்து இளைஞர்கள் ஏற்பாடு செய்த நம்முடைய ஈராக் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்கள். இன்று அவர்கள் இரண்டாவது சுதர்ஷன் க்ரியாவைச் செய்தார்கள், அவர்கள் புரிந்து கொள்வதில் முழு மாறுதலும் ஏற்பட்டுவிட்டது. இந்த இளைஞர்கள், பொது மக்களை அடைந்து, அவர்கள்,யோகா, தியானம் மற்றும் சுதர்ஷன் க்ரியா பற்றிய நடைமுறை கல்வி பெறுமாறு செய்ய வேண்டும். இது நல்ல செய்தி.இதை நாம் செய்ய வேண்டும்; அதிகமான மக்களை நாம் அடைய வேண்டும்.

கே: ஒரு பணி அல்லது உறவின் ஆரம்பம் எப்போதுமே அருமையானது; அதைத் தாக்குப் பிடிப்பது கடினம்.  ஒரு நபரிடமிருந்தோ அல்லது நிலைமையிலிருந்தோ, அதன் முடிவுத் தருவாயில் என்னை பிரித்துக்கொள்ளவே செய்கிறேன். நான் எவ்வாறு முதலிலிருந்து, கடைசி வரை என்னுடைய சக்தியை தக்க வைத்துக்கொள்கிறேன்?

குருதேவ்: கடந்த காலம் முழுவதையும் விட்டுவிட்டு, இப்போது விழித்துக்கொள்ளுங்கள்! உங்களுக்கு முத்திரை குத்திக்கொள்ளாதீர்கள், ‘ஓ, நான் சோர்வாக இருக்கிறேன், என்னால் இதைச் செய்ய முடியாது, நான் அதைச் செய்ய முடியவில்லை.’ என்று. அதெல்லாம் கடந்த காலம்! நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்றோ அல்லது யாரென்றோ உங்களுக்குத் தெரியாதென்பதை ஒப்புக் கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கும் சக்தி பற்றி உங்களுக்குத் தெரியாது; நீங்கள் என்ன செய்ய முடியுமென்று உங்களுக்குத் தெரியாது, அவ்வளவுதான்! புது வகையான சக்தி அலை உங்கள் மூலம் பாய்வதை நீங்கள் பார்ப்பீர்கள் மேலும் உங்கள் முழு மனப்பாங்கும்,நடத்தையும், பார்வையும், வெளிப்பாடும், அனைத்தும் மாறிவிடும். உங்களிடமுள்ள  தனக்குத் தானாகவே அல்லது தூண்டுதலிலோ அணிந்துள்ள அனைத்து அடையாள முத்திரைகளையும் சும்மா அகற்ற வேண்டும்,. புரிந்ததா?

கே: நான் கேள்விப்பட்டேன், குரு ஒருவரைப் பார்கும்போது, அவர் அம்மனிதரைப் பார்ப்பதில்லை, மாறாக அவர்களுடைய முன்னுணர்வைப் பார்க்கிறார் என்று, இது உண்மையா?


குருதேவ்: நீங்கள் ஊகம் செய்துகொண்டிருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.