காலம் என்ற சமுத்திரத்தில் பயணம்.....


10 – ஏப்ரல் - 2013 – மாண்ட்ரியால் - கனடா   
              
இன்று இந்தியாவில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. 2070 ஆண்டு.

ஒரு ஒழுக்கமுள்ளவர் இருந்தார். அவர் ஒரு அரசனாக இருந்தார். அவர் பெயர் விக்கிரமாதித்யர். அவர் 2070 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார். ஆகவே இந்தியாவில் ஆண்டுகள் அவர் பெயரில் இருக்கிறது. அதை விக்ரம ஆண்டு என்று சொல்கிறார்கள். இந்த புத்தாண்டு விக்ரம 2070.
விக்ரமாதித்யருக்கு முன் ஆண்டுகள் பகவான் கிருஷ்ணரின் பெயரால் இருந்தது. அதன் படி இப்போது 5114 ஆண்டுகள் ஆகிவிட்டன.



புத்தாண்டு அண்ட வெளியில் கிரகங்களின் போக்கைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. அதை சூரியன் மேஷ ராசியில் நுழைவதைப் பொறுத்தோ, அல்லது சந்திரன் மேஷ ராசியில் நுழைவதைப் பொறுத்தோ நிர்ணயிக்கிறார்கள். இன்று சந்திரன் மேஷ ராசியில் பிரவேசிப்பதை புத்தாண்டு என்கிறோம். இரண்டு நாட்கள் கழித்து, ஏப்ரல் தேதி சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும். அதையும் வைசாகி என்ற புத்தாண்டாகக் கொண்டாடுகிறோம்.

இந்தியாவில் பாதி பேர் சந்திரன் மேஷ ராசியில் பிரவேசிப்பதை புது வருடமாகக் கொண்டாடுகிறார்கள். மீதியுள்ளோர் சூரியன் மேஷ ராசீயில் பிரவேசிப்பதை புது வருடமாகக் கொண்டாடுகிறார்கள். அதில் ஒரு கட்டாயமும் இல்லை. யாருக்கு எது விருப்பமோ அதைக் கொண்டாடலாம். பஞ்சாப், வங்காளம், ஒரிஸ்ஸா, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் இருப்பவர்கள் சூரிய காலண்டர் படி புத்தாண்டைக் (வைசாகி) கொண்டாடுகிறார்கள். கர்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் பல மாநிலங்களில் உள்ளவர்கள் சந்திர காலண்டர் படி இன்று புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள். வாழும் கலையில் நாம் ஒவ்வொரு தினத்தையும் கொண்டாடுகிறோம்.

புத்தாண்டில் மிகவும் கசப்பான வேப்பிலைக் கொழுந்தைச் சாப்பிடுவோம். மிகவும் இனிப்பான வெல்லத்தையும் சாப்பிடுவோம். இது வாழ்வில் துன்பத்தையும் இன்பத்தையும் அனுபவிப்போம் என்பதை நமக்கு உணர்த்துவதற்காக நம் முன்னோர்கள் .ஏற்படுத்திய வழக்கமாகும். நாம் கசப்பையும் இனிப்பையும் விழுங்க வேண்டும் என்பதை இவ்வழக்கம் நமக்கு நினைவூட்டுகிறது.
காலம் உனக்கு கசப்பான மற்றும் இனிப்பான அனுபவங்களைத் தருகிறது. நண்பர்கள் மட்டும் தான் உனக்கு இனிப்பான அனுபவத்தை அளிப்பார்கள் என்று நினைக்காதே. நண்பர்கள் கசப்பான அனுபவத்தையும் தர வாய்ப்பிருக்கிறது. அதேபோல் விரோதிகள் எப்போதும் கசப்பான அனுபவத்தைத் தருவார்கள் என்று நினைக்க வேண்டாம். விரோதிகள் உனக்கு இனிப்பான அனுபவம் வரக் காரணமாயிருக்கலாம்.

எல்லா இடங்களிலும் பனி விழுந்து மூடியிருந்தாலும் ஒரு சுகமான அனுபவம் ஏற்படுவது போல வாழ்க்கை என்பது எதிர்மறைத் தத்துவங்களின் ஒரு கலவை. இங்கே குளிரும் வெதுவெதுப்பும் கலந்திருக்கிறது. புத்தாண்டு பிறப்பது அப்படிப்பட்ட ஒரு அனுபவம்.

ஒரு சமயம் உலகம் முழுவதும் ஒரே காலண்டரைப் பின்பற்றினார்கள். அது சந்திர காலண்டர். இன்றும் துருக்கியிலும், ஈரானிலும் மக்கள் அதைப்  பின் பற்றுகிறார்கள். அவர்களுக்கு மார்ச் மாதத்தில் புத்தாண்டு துவங்குகிறது. லண்டனில் ஜார்ஜ் மன்னர் ஆண்ட போது, ஜனவரி மாதத்தை புத்தாண்டாக மாற்ற விரும்பினார். ஏனென்றால் அவர் ஜனவரி மாதத்தில் பிறந்தவர். அவரைப் பொறுத்த வரை அது அவருக்குப் புத்தாண்டாக இருக்கலாம். இருந்தாலும் அவர் அதை அவர் ஆட்சியில் இருந்த எல்லா நாடுகளும் ஜனவரி மாதத்தை புத்தாண்டாக பின்பற்றும்படி ஆணையிட்டார். இது 8 அல்லது 9 ம் நூற்றாண்டில் நடந்தது. இருந்தாலும் மக்கள் ஏப்ரல் மாதத்தில் புத்தாண்டு கொண்டாடுவதை இன்றும் நிறுத்தவில்லை. ஜார்ஜ் மன்னர் ஏப்ரல் மாதத் துவக்கத்தை முட்டாள்கள் தினமாக அறிவித்தார். அவர் ஏப்ரல் மாதத்தில் புத்தாண்டு கொண்டாடுபவர்களை முட்டாள்கள் என்று அழைத்தார். அதனால் தான் ஏப்ரல் 1 ம் தேதி முட்டாள்கள் தினம் என்று வழங்கப்படுகிறது.

மாதங்களின் பெயர்களும், நாட்களின் பெயர்களும் சமஸ்கிருத மொழியிலிருந்து வந்தன என்று உங்களுக்குத் தெரியுமா? வாரத்தில் ஏழு நாட்கள் கிரகங்களின் பெயரைக் கொண்டன. ஞாயிற்றுக் கிழமை சூரியனின் தினம். சந்திரனின் தினம் திங்கள் கிழமை. செவ்வாய் கிரகத்தின் (மார்ஸ்) தினம் செவ்வாய்க் கிழமை. புதன் கிரகத்தின் (மெர்க்குரி) தினம் புதன்கிழமை என்று அழைக்கப்படுகிறது. வியாழன் கிரகத்தின் (ஜூபிடர்) தினம் வியாழக் கிழமை. வெள்ளி கிரகத்தின் (வீனஸ்) தினம் வெள்ளிக் கிழமை. சனி கிரகத்தின் (சாடர்ன்) தினம் சனிக் கிழமை. இந்த ஏழு கிரகங்களை வைத்து வாரத்தின் ஏழு நாட்கள் அழைக்கப் படுகின்றன. இவையெல்லாம் சமஸ்கிருத மொழியிலிருந்து வந்தவை. இந்தியாவில் சமஸ்கிருத மொழியில் முதல் காலண்டர் வந்தது. இங்கிருந்து எகிப்து நாட்டுக்குச் சென்றது.

12 மாதங்கள் 12 ராசிகளின் பெயரை வைத்து வழங்கப் பட்டன. ராசிகளில் சூரியனின் இடத்தைப் பொறுத்து (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, …. இவற்றைப் பொறுத்து மாதங்களில் பெயரை வைத்தார்கள்.) மாதங்களின் பெயர்களும் சமஸ்கிருத மொழியிலிருந்து வந்தவை. தஷ் அம்பர் (டிசம்பர்) என்றால் பத்தாவது வானம். நவம்பர் என்றால் ஒன்பதாவது வானம். அக்டோபர் (அஷ்ட அம்பர்) எட்டாவது வானம். செப்டம்பர் ஏழாவது வானம். ஏதாவது ஒரு வார்த்தை மட்டும் என்றால் சம்பந்தமில்லாமல் வந்தது என்று சொல்லலாம். ஆனால் ஒவ்வொரு மாதத்தின் பெயரும் சமஸ்கிருத பெயருடன் இணைந்திருப்பதிலிருந்து மாதங்களின் பெயர்கள் சமஸ்கிருத மொழியிலிருந்து வந்தவை என்பதில் தவறு ஒன்றும் இல்லை என்று அறியலாம்.
ஸஷ்டி என்றால் ஆறு. ஆகஸ்ட் மாதம் எட்டாவது மாதம் அல்ல. மார்ச் மாதத்திலிருந்து துவங்கும் ஆண்டில் அது ஆறாவது மாதமாகிறது.

பிப்ரவரி மாதத்தை ஆண்டின் இறுதி என்று நாம் சொல்கிறோம். பிப்ரவரி தான் பன்னிரண்டாவது மாதமாகும். மார்ச் தான் ஆண்டின் முதல் மாதமாக இருந்தது. பொதுவாக சந்திர ஆண்டு மார்ச் 20  தேதி வரும். அதை புத்தாண்டு துவங்கும் தினமாகக் கொள்ளலாம். ஆனால் இவை அனைத்தும் ஆங்கிலேய அரசரால் மாற்றி அமைக்கப் பட்டது. உலகில் பாதிக்கும் மேல் அவர் ஆதிக்கத்துகு உட்பட்டதால் (அமெரிக்கா, கனடா உள்பட) பலர் இதை ஏற்றுக் கொள்ளும்படி ஆயிற்று. ஜார்ஜ் அரசர் தான் ஜனவரி மாதத்தை புத்தாண்டாக மாற்றினார். இது தான் கதை.

துரதிஷ்ட வசமாக இந்தியாவில் பலர் பழங்காலத்துப் பெயர்களையும் அதன் அர்த்தங்களையும் மறந்துவிட்டார்கள். உதாரணத்துக்கு சித்திரை என்று ஒரு நட்சத்திரம் இருக்கிறது. பௌர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் வரும் போது அது சந்திர காலண்டர் படி முதல் மாதமாகும். அந்த மாதமும் சித்திரை என்று அழைக்கப் படுகிறது. அடுத்த மாதம் வைஷாக் (வைகாசி).அது வைசாக நட்சத்திரத்தில் பௌர்ணமி வரும் மாதம். எந்த நட்சத்திரத்தில் பௌர்ணமி சந்திரன் இணையும் என்பதற்கான துல்லியமான கணக்கு வைத்து மாதங்கள் நிர்ணயிக்கப் பட்டன. 

சந்திர காலண்டர்படி மாதத்தில் 27நாட்கள் மட்டும் இருக்கின்றன. எனவே ஒவ்வொரு 4 வருடத்திலும் ஒரு லீப் மாதம் இருக்கிறது. அதாவது ஒரு மாதம் அதிகம். ஆங்கில ஆண்டில் ஒவ்வொரு 4 வருடத்தில் பிப்ரவரியில் ஒரு நாள் அதிகம் இருப்பது போல் சந்திர காலண்டரில் 1 மாதம் அதிகமாக இருக்கும். சூரிய காலண்டரின் படி (ஆங்கில காலண்டரைப் போல்) லீப் ஆண்டில் ஒரு நாள் மட்டும் அதிகமாக இருக்கும். சில சமயம் வைசாகி ஏப்ரல் 13ம் தேதியிலும் சிலசமயம் ஏப்ரல் 14ம் தேதியிலும் வரும். 4 வருடங்களுக்கு ஒரு முறை இந்த வித்தியாசத்தைக் காணலாம்.

கே: குருதேவா! புத்தாண்டைப் பற்றிச் சொல்லுங்கள். இது நல்ல ஆண்டா?

குருதேவர்: ஆம்! இது நல்ல ஆண்டு தான். இந்த ஆண்டுக்குப் பெயர் வெற்றி வருடம். தீய சக்திகளை நல்ல சக்தி அழிக்கும் ஆண்டு. அறிஞர்களின் நிலை வஞ்சகர்களை விட ஓங்கி இருக்கும். தவறு செய்பவர்களும், மக்களை ஏமாற்றுபவர்களும் அழிந்து விடுவார்கள். நல்லவர்கள் மேல் நிலைக்கு வர ஏதுவாக இருக்கும். எல்லாமே ஒரு கால சுழற்சியின் படி நடக்கிறது. வேறு வேறு சமயங்களில் வேறு வேறு நிகழ்ச்சிகள் அமைகின்றன. இந்த ஆண்டில் சாத்வீகம் மேன்மை அடையும்.

கே: குருதேவா! ஒரிஸ்ஸா பல்கலைக் கழகத்தில் பயில்விப்பதற்கு நாங்கள் வரலாமா?

குருதேவர்: ஆம் ! அங்குள்ள துணைவேந்தருக்கு நீங்கள் எழுதி அனுமதி கேட்கலாம்.அங்கு எலும்பு சம்பந்தமான வியாதிகளுக்கான மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப் போகிறோம் என்று உங்களுக்குத் தெரியுமா? பல்கலைக் கழகம் நன்கு வளர்ந்து வருகிறது. நம் ஆயுர்வேத சிகிச்சைக்கான மருத்துவக் கல்லூரியும் நன்றாக இயங்குகிறது. அங்கு படிக்கும் மாணவர்களில் 10 பேரில் 6 பேர் மிகச் சிறந்த மதிப்பெண்களுடன் (டிஸ்டிங்ஷன்) தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். நம் மருத்துவமனை ஒரு சிறந்த ஆயுர்வேத மருத்துவ மனைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. நரம்பு சம்பந்தமான நோய் உள்ளவர்களையும், அறுவை சிகிச்சையின்றி குணப் படுத்துகிறார்கள்.

கே: நம் ஆயுர்வேத மருத்துவ மனையில் புற்று நோயை குணப்படுத்தியதாக கேள்விப்பட்டோம்.

குருதேவர்: ஆம்! அவர்களுடைய மருந்தினால் புற்று நோயைக் குணப்படுத்த முடியும். நம் சக்தி சொட்டு மருந்தினாலும் மிகச் சிறந்த நன்மைகள் உண்டாகும். சக்தி சொட்டு மருந்தின் விளைவுகளை அறிய ஆராய்ச்சி நடந்து வருகிறது. அது பல விதமான நோய்களை, வீக்கம், வலி முதலியவற்றை குணமாக்குகிறது. ஆராய்ச்சி முடிவுகள் வெளிவர ஒரு ஆண்டு ஆகலாம்.

கே: குருதேவா ! என் பெண்ணுக்கு சில விதமான பழக் கொட்டைகள் ஒத்துக் கொள்ளாமல் அலர்ஜி வந்தது. நான் நவராத்திரியில் ஆசிரமத்துக்கு வந்த போது நம் மருத்துவமனையில் அவளுக்குச் சிகிச்சை அளித்ததில் 60 சதவிகிதம் குணமாகி விட்டாள். அவள் எக்ஸிமா (தோல் சம்பந்தமான வியாதி) குறைந்து வருகிறது.

குருதேவர்: அலர்ஜி, எக்ஸிமா முதலியவைகளை முற்றிலுமாக குணப்படுத்தலாம். ஆங்கில மருத்துவ முறைகளில் இவைகளுக்கு மருந்து இல்லை. ஆயுர்வேத மருத்துவர்கள் இந்நோய்களை குணப்படுத்துவார்கள். சக்தி சொட்டு மருந்தும் உதவும். பலர் சிறந்த மாற்றங்களை அனுபவத்தில் உணர்கிறார்கள்.